Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஒளி குகநாதனின் மோசடியும் இந்தியாவிற்குள் கோவை நந்தன் மூலம் ஊடுருவ முற்படும் ஈ.பி.டி.பியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஒளி குகநாதனின் மோசடியும் இந்தியாவிற்குள் கோவை நந்தன் மூலம் ஊடுருவ முற்படும் ஈ.பி.டி.பியும்

ஓராண்டிற்கு முன்பு பிரான்சிலிருந்து ஒளிபரப்பான குகநாதனின் தமிழ் ஒளி என்கிற தொ(ல்)லைக்காட்சி ,இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. இந்தத் தொலைக்காட்சிக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது. இந்த நிலையில், தங்களிடம் பல லட்சக் கணக்கான ரூபாகளை வசு10லித்துக் கொண்டு, தங்களுக்கு குகநாதன் நாமம் போட்டு விட்டார் என்று இந்தியாவின் பல தமிழ்த் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள்.

படங்களும் பாடல் காட்சிகளும் உரிய அனுமதி பெறாமல் திருட்டு தனமாக குகநாதனால் ஒளிபரப்பப்பபடுவதைக் கண்ட சன் டிவி, ராஜ் டி.வி. போன்றவை சட்டரீதியாக குகநாதன் கும்பல்மீது நடவடிக்கை எடுக்கும் ஏற்பாடுகளில் இறங்கின. தாங்கள் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருக்கும் திரைப்படங்களை குகநாதன் கும்பல் தொடர்ந்து சட்ட விரோதமாகத் திரையிட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஜ் டி.வி. நிர்வாகம் சென்னை மாநகர போலீஸில் புகார் செய்தது. கொப்பிரைட் விதிமுறைகளை மீறி படங்களைத் திரையிட்டதாக தமிழக காவல்துறையினர் குகநாதன் கும்பல் மீது 2006_ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, குகநாதன் கும்பலின் பங்குதாரர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த குலாம் என்பவர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். தங்கள் மீது இப்படியரு நடவடிக்கை அதிரடியாகப் பாயும் என்று எதிர்பாராத குகநாதன் கும்பல் கதிகலங்கிப் போனது.

இது நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, 25.11.2006ல் வசூல்ராஜா குகநாதனின் பெயரால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்படடிருந்தது .அதில் வணிகப் போட்டியினை எதிர்கொள்ளும் உறுதியுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மீதான வழக்கு முடிந்து மறுபடியும் ஒளிபரப்பு தொடங்கும் வரை நீங்கள் எங்கள் விநியோகஸ்தர்களாகத் தொடர்ந்து இருந்து ஒத்துழைப்பைத் தரப் போகிறீர்களா? இல்லை, உங்களின் விநியோக உரிமையை ரத்து செய்துவிட்டு வெளியேறிவிட விரும்புகிறீர்களா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்! என்று குறிப்பிடப்பட்டிருந்தது

இந்தியாவில் உள்ள பல கோடி தமிழ்மக்களிடையே தனது வங்குரோத்து அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளாரும் சிறீலங்காவின் ஆஸ்தான அமைச்சருமான டக்களஸ் தேவானந்தா குகநாதன் ஊடாக முதலிட இருப்பதாகவும் இதற்கு முன்னேற்பாடாக பலகோடி ருhபாவை முற்பணமாக வளங்கியுள்ளதாகவும் அறியமுடிகிறது. இந்தியாவிற்கு செல்வதற்கு தடைவிதிகபட்டுள்ள குகநாதன் தற்போது இந்தியாவில் தங்கி இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு தனது பினாமியான கோவை நந்தனை அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது.

தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் கோவை நந்தன் யாழ் குடாநாட்டுக்கான உணவுப்பொருட்களை கொள்வனவு செய்து ஈ.பி.டி.பியினரின் கப்பலில் எற்றும் வேலைகளில் ஈடுபட்ட வருவதாக அறியமுடிகிறது. ஈ.பி.டி.பியினரின் வர்த்தகத்தையும் குகநாதன் ஊடாக தொலைக்காச்சியையும் மீள ஆரம்பது தொடர்பான வேலைகளையும் கோவை நந்தன் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் சுமூகசேவைகள் அமைச்சின் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்ற.

மேலும் லண்டனில் பிரித்தானிய அரசாங்கத்தால் அடித்து மூடப்பட்ட ரிபிசி வானொலியை இணைந்து நடாத்துவதற்கும் குகநாதன் பேச்சகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. கோவை நந்தன் ஆரம்பகாலத்தில் தமிழ் இழைஞர் பெரவையில் இருந்து செயற்பட்டு பின்னர் பிறானஸ்நாட்டுக்கு வந்து வானொலி ஒண்றில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சூரியன்

ம்ம்........ கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைதான்!!!!

எனக்கும் உந்த ததேஊக்களில் பூரண நம்பிக்கை இல்லை!!!! உதுக்குள் இருக்கிற பலதுகள் கதிரைக்கும், விளம்பரத்துக்கும் மட்டும் ஒட்டியிருக்கிறார்கள்!!!! உந்த ஒட்டுண்ணீகளின் முகத்திரை கிளிக்கப்பட வேண்டும்!! நன்றிகள் நவம், தொடரட்டும் ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நானும் ஆமோதிக்கின்றேன். இந்தப் புலித்தோல் போர்த்திய நரிகள் அடையாளம் காணப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DAN TVயின் மோசடி??!!

குமுதம்-ரிப்போர்டர் ஏட்டில் வெளிவந்த கட்டுரை)

ஓராண்டிற்கு முன்னால் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒளிபரப்பான ‘டான் தமிழ் ஒளி’ என்கிற சாட்டிலைட் சேனல், தமிழ்த்தொலைக்காட்சி உலகை ஒரு கலக்குக் கலக்கியது. இந்த சேனலுக்குக் கிடைத்த வரவேற்பால், டான் மியூசிக், டான் சினிமா என்ற புதிய சேனல்கள் அதிரடியாக முளைத்தன.

இப்படி ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல்கள், இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டன. இதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது.

இந்த நிலையில், ‘எங்களிடம் பல லட்ச ரூபாய்களை வசூலித்துக் கொண்டு, எங்களுக்கு நாமம் போட்டு விட்டது டான் டி.வி. நிர்வாகம்,’ என்று புலம்பிக் கொண்டு திரிகிறார்கள் தமிழ்த் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள்.

‘டிஷ்’ ஏசியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடட்’ என்ற விரிவாக்கம் கொண்ட டான் டி.வி., பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம். இது தமிழர்களுக்காக ‘டான் தமிழ் ஒளி’ என்ற சாட்டிலைட் சேனலை, 1997 முதல் தொடங்கி நடத்தி வருகிறது. அயல்நாட்டுத் தமிழர்கள் மத்தியில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருந்த டான் டி.வி.யின் கவனம், தமிழ்நாட்டின் மீது திரும்பியது. இந்தியாவிற்குள்ளிருந்து ஒளிபரப்பும் அனுமதியை இதனால் உடனடியாகப் பெற முடியாத காரணத்தால், பிரான்ஸிலிருந்தே இதன் ஒளிபரப்பு தொடங்கியது.

ராஜ் டி.வி.யில் மிக முக்கியப் பொறுப்பை வகித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கபிலன் என்பவர், இந்தியாவில் டான் டி.வி. குழுமத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பாண்டிச்சேரியில் நிர்வாக அலுவலகத்தையும், சென்னை அசோக் நகரில் செயல் அலுவலகத்தையும் கொண்டு, கடந்த 2005 நவம்பர் மாத இறுதியில் இந்தியாவில் டான் டி.வி.யின் தமிழ் ஒளி தன்னுடைய சோதனை ஒளிபரப்பைத் தொடங்கியது.

இலங்கைத் தமிழில் கதைத்து, தமிழ் சினிமாக்களின் பாடல்களையும், காட்சிகளையும் டான் டி.வி.’ ஒளிபரப்பிய விதம், தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது. செய்திகள் ஒளிபரப்பாகின. மேலும் தூர்தர்ஷன், ராஜ் டி.வி., ஜெயா டி.வி. போன்றவற்றில் ஒளிபரப்பாகி ஹிட்டான தொடர்களை மறு ஒளிபரப்பச் செய்ய, டான் டி.வி. ஏற்பாடு செய்தது. ‘பழைய தமிழ்ப்படங்கள் அனைத்தையும் விரைவில் நீங்கள் காணலாம்’ என்று அறிவிப்பையும் அது வெளியிட்டது.

இதனையடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முன்னணி கேபிள் ஆபரேட்டர்களும் டான் டி.வி.யின் தமிழ் சேனல்களை முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பினர்.

தமிழகத்தில் தமிழ் ஒளி சேனலுக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, டான் மியூசிக், டான் சினிமா என்ற இரு புதிய சேனல்களையும் டான் டி.வி. நிர்வாகம் தொடங்கியது.

இந்த நிலையில்தான், தன் மூன்று சேனல்களையும் கட்டண சேனல்களாக மாற்றியது டான். கேபிள் ஆபரேட்டர்கள் டான் டி.வி.யின் ஒளிபரப்பைக் காட்டுவதாக இருந்தால், அதற்கான சிக்னல் டி கோடர் கருவிகளை வாங்குவதோடு, ஒளிபரப்புக்கான சந்தாவையும் செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விநியோகஸ்தர்களை டான் டி.வி. நிறுவனம் நியமனம் செய்தது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ‘நான்’, ‘நீ’ என்று போட்டி போட்டுக் கொண்டு டான் டி.வி. ஒளிபரப்பு விநியோக உரிமையைப் பலரும் பெற்றனர். டெபாசிட் தொகையாக அவர்களிடமிருந்து ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து, ஐந்து லட்சம் வரையில் வசூலிக்கப்பட்டது.

தமிழக மக்கள் மத்தியில் டான் டி.வி. பிரபலமடைந்து தங்களுக்கு வணிக ரீதியான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிய பிறகுதான், பிற சாட்டிலைட் தமிழ் சேனல்கள் விழித்துக் கொண்டன. தமிழ்த் திரைப்படங்களை சின்னத்திரையில் வெளியிடும் உரிமையை சன் டி.வி.யும், ராஜ் டி.வி.யும் மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டிருந்தன.

அப்படிப்பட்ட படங்களின் காட்சிகளும் படங்களும் தமிழ் ஒளியில் ஒளிபரப்பாவதைக் கண்ட சன் டிவி, ராஜ் டி.வி. போன்றவை அதிர்ந்தன. சட்டரீதியாக டான் டி.வி. மீது நடவடிக்கை எடுக்கும் ஏற்பாடுகளில் இறங்கின.

தாங்கள் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றிருக்கும் திரைப்படங்களை டான் டி.வி. தொடர்ந்து சட்ட விரோதமாகத் திரையிட்டு வருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராஜ் டி.வி. நிர்வாகம் சென்னை மாநகர போலீஸில் புகார் செய்தது. காப்பிரைட் விதிமுறைகளை மீறி படங்களைத் திரையிட்டதாக போலீஸார் டான் டி.வி. மீது 2006_ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, டான் டி.வி.யின் பார்ட்னர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த குலாம் என்பவர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். தங்கள் மீது இப்படியரு நடவடிக்கை அதிரடியாகப் பாயும் என்று எதிர்பாராத டான் டி.வி. நிர்வாகம் கதிகலங்கிப் போனது.

டான் டி.வி.யை ஒளிபரப்பிய கேபிள் ஆபரேட்டர்களுக்கோ வேறு மாதிரியான நெருக்கடிகள் உண்டாகின. ‘டான் டி.வி.யை ஒளிபரப்பினால் இனி எங்களுடைய சேனல்களை ஒளிபரப்ப அனுமதி தரமாட்டோம்’ என்று பிற சாட்டிலைட் தமிழ் சேனல்கள் நெருக்கடி கொடுத்தன.

இதனால் வேறு வழியின்றி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் டான் டி.வி.யை ஒளிபரப்புவதை நிறுத்தினர். இந்தியாவில் அமர்க்களமாகத் தொடங்கிய டான் டி.வி.யின் ஒளிபரப்பு, 2006_ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் முடிவிற்கு வந்தது. தமிழகம், பாண்டியில் இயங்கிய டான் டி.வி.யின் அலுவலகங்களும் பூட்டப்பட்டு விட்டன. டான் டி.வி.யின் துணைத்தலைவரான கபிலன் உள்ளிட்ட அதன் நிர்வாகி கள் தலைமறைவாகி விட்டனர்.

இது நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, 25.11.2006_ல் டான் டி.வி.யின் தலைவரான குகநாதனின் பெயரால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ‘வணிகப் போட்டியினை எதிர்கொள்ளும் உறுதியுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மீதான வழக்கு முடிந்து மறுபடியும் ஒளிபரப்பு தொடங்கும் வரை நீங்கள் எங்கள் விநியோகஸ்தர்களாகத் தொடர்ந்து இருந்து ஒத்துழைப்பைத் தரப் போகிறீர்களா? இல்லை, உங்களின் விநியோக உரிமையை ரத்து செய்துவிட்டு வெளியேறிவிட விரும்புகிறீர்களா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், டான் டி.வி.யின் விநியோகஸ்தர்களாக நீடிக்க யாரும் விரும்பவில்லை. தங்களுடைய டெபாசிட் தொகையைத் திரும்பத் தரும்படி அவர்கள் பிரான்ஸிலிருக்கும் டான் டி.வி.யின் நிர்வாக அலுவலகத்திற்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தனர். ஆனால், இதுநாள் வரை எந்தப் பதிலும் இல்லை. பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் சிலரைச் சந்தித்தோம்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சுனில்குமார் என்ற விநியோகஸ்தர், ‘‘டான் டி.வி.யோட துணைத் தலைவர் கபிலனைத்தான் எங்களுக்குத் தெரியும். அவரிடம்தான் டெபாசிட் தொகையான ஐந்து லட்ச ரூபாயைக் கொடுத்தேன். டான் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட பிறகு, ஆறுமாதம் கழித்து டெபாசிட்டை திரும்பத் தருவதாகக் கடிதம் வந்தது. ஆனால், பணம் வரவில்லை. எங்களை ஏமாற்றி விட்டதாக உணர்கிறோம். இது குறித்து தமிழக முதல்வரிடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் புகார் கொடுக்க உள்ளோம். இந்தியா முழுவதும் நடந்த மிகப்பெரிய மோசடி இது!’’ என்று குமுறினார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமு, கோவையைச் சேர்ந்த ஜெய்லா ஆகியோரிடம் பேசினோம். அவர்களும் கபிலனையே குறை சொன்னார்கள். ‘‘எங்களிடம் தகவல் சொல்லாமல், நிறுவனத்தை மூடிவிட்டு ஓடியது மிகப்பெரிய ஏமாற்று வேலை. தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட பேர் இவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டிலிருக்கும் டான் டி.வி. நிறுவனத்திடமிருந்து எங்களின் பணத்தைப் பெற்றுத்தர தமிழக முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

‘‘வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் டான் டி.வி.யின் பெயரால் டிராப்ட்டாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. பணமாக அதை நாங்கள் வசூலிக்காததால் தப்பித்தோம். இல்லையென்றால், நாங்களும் இந்த மோசடிப் புகாரில் சிக்கியிருப்போம்!’’ என்றார் டான் டி.வி.யின் முன்னாள் ஊழியர் ஒருவர்.

http://webeelam.com/DANTV.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DAN TVயின் மோசடி??!!

என்னைப்பற்றிய அவதூறுகளுக்குப்பதில்:

எஸ்.எஸ்.குகநாதன்

.

கடந்த சில நாட்களாக என்னைப்பற்றியும் டான் தொலைக்காட்சி பற்றியும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை சில இணையத்தளங்கள் வெளியிட்டுவருகின்றன. தமிழகத்தில் எமது டான் தொலைக்காட்சி தமிழகத்திலுள்ள தொலைக்காட்சி விநியோகஸ்தர்களை மோசடி செய்துவிட்டது போலவும் அதற்காக எனது பெயரைக் குறிப்பிட்டு குகநாதனின் மோசடி என்றும் அந்த இணையத்தளங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

முதலில் டான் தொலைக்காட்சி எனக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என்பதும், குறிப்பாக இந்தியாவில் டான் தொலைக்காட்சியை ஒளிபரப்பிவரும் டான் ரெலிவிசன் நிறுவனத்தில் நான் 30 சதவீத பங்குகளை மாத்திரமே கொண்டிருக்கின்றேன் என்பதையும் மிகுதி 70 வீத பங்குகளுக்கு இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களே சொந்தக்காரர்கள் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மிக இலகுவாக மறந்துவிடுகின்றன.

தமிழகத்தில் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நடிகர் பாண்டியனைக் கைதுசெய்கின்ற பொலிசார் பல லட்சங்களை மோசடி செய்திருந்தால் அந்த இந்தியர்களை விட்டுவைப்பார்களா என்பதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

டான் தொலைக்காட்சியின் விநியோகஸ்தர்களாக அவர்களே விரும்பி அதற்காக முறைப்படி ஒப்பந்தம் செய்துகொண்டு விநியோகஸ்தர்களாகினார்கள். அதற்காக முற்பணமும் அந்த நிறுவனத்தின் பெயரில் அதன் வங்கிக் கணக்கிற்குத்தான் செலுத்தினார்கள். அவர்களை டான் நிறுவனம் ஏமாற்றியதென்றால் அந்த நிறுவனத்தின் மீதுதான் அவர்கள் புகார் கூறலாம். அந்தப் பணத்தை நான் தனிப்பட்ட முறையில் மோசடி செய்திருந்தால் அந்த நிறுவனத்தின் மற்றைய பங்குதாரர்கள் தான் என்மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தலாம்.அதுதவிர, மூன்று தொலைக்கட்சி சேவைகளை தமிழிலும் ஐரோப்பாவின் பிரபல தொலைக்காட்சிகளான ய+ரோ நிய+ஸ(நுரசழ நெறள);, ரேஸ்ரிவி (வுசயஉந வுஏ) என்ற மிய+சிக் செனல் ஆகியவற்றையும் இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது வருகின்றது டான் ரெலிவிசன் நிறுவனம். இந்த ஐந்து தொலைக்காட்சிகளையும் 2005 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒளிபரப்புவதற்கு அந்த நிறுவனம் எத்தனை கோடிகளை முதலிட்டிருக்கும் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மறந்துவிடுகின்றன.

டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி இன்றும் இந்தியாவில் ஒளிபரப்பாகி வருகின்றது என்பது மாத்திரமல்ல ஐரோப்பாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சியை இந்தியாவில் மறுஒளிபரப்புச் செய்துவருவதும் டான் ரெலிவிசன் நிறுவனம்தான் என்பதும் பலருக்குத் தெரியாவிட்டாலும் அந்த விநியோகஸ்தர்களுக்குத் தெரியும். டான் ரிவி தமிழகத்தில் ஒளிபரப்பைத் தொடங்கியபோது அதனை தமிழகத்தில் சன்ரிவிக்குச் சொந்தமான எஸ்.சி.வி. என்ற கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் தவிர்ந்த ஏனைய அனைத்து கேபிள் ரிவி ஆப்பரேட்டர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்பினார்கள் என்பதையும் சில அதிகாரத்திலுள்ளவர்களின் நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அந்த கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் ஒளிபரப்பியதையும் ஏன் இந்த இணையத்தளங்கள் குறிப்பிட மறந்துவிட்டன என்பதும் தெரியவில்லை.

ஒரு ஈழத்தமிழனின் தொலைக்காட்சியைக் கண்டு அந்த ஜாம்பவான்களே பயந்தார்கள் என்றால் அதைக்கண்டு உண்மையான ஈழத்தமிழன் மகிழ்ச்சியே அடைந்திருப்பான். ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டில் ஒளிபரப்பாகும் ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சியை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு ஒரு ஈழத்தமிழன் அனுமதியைப் பெற்றிருக்கின்றான். இது என்னைப்பொறுத்தவரை பெருமைக்குரியவையே எம்மை ஒழிப்பதற்காக என்றே சிலர் எடுத்த நடவடிக்கையின் விளைவாக நாம் எமது செயற்பாடுகளை சென்னையில் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கின்றோமே தவிர, எமது செயற்பாடுகளை முற்றாக நிறுத்திவிடவில்லை.ய+ரோ நிய+ஸ், ரேஸ்ரிவி என்பன இன்றும் இந்தியா எங்கும் ஒளிபரப்பாகிவருவதுடன், இந்தியாவின் முன்னணி டிரிஎச் சேவையான டிஷ் ரிவியிலும் இன்றும் ஒளிபரப்பாகிவருகின்றது. டான் ரெலிவிசன் நிறுவனம் பாண்டிச்சேரியில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம், அதன் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் இல்லத்திலேயே இயங்கிவருகின்றது. சென்னை கலையகம் மாத்திரமே தற்காலிகமாக மூடப்படிருக்கின்றது. நான் இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த இணையத்தளங்கள் குறிப்பிட்டுவருகின்றன. நான் கடந்த வாரமும் அங்குதான் இருந்தேன் என்பதை எமது நண்பர்கள் அறிவார்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சேர்ந்து தொலைக்காட்சியைத் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்காக கோவை நந்தனை அனுப்பி அந்த ஏற்பாடுகளைச் செய்கின்ற அளவிற்கு ஒன்றும் விபரம் தெரியாதவன் நானல்ல. தொலைக்காட்சி நடாத்துவது என்பது இணையத்தளங்களை நடாத்துவது போன்ற ஒன்று என்று கருதுபவர்கள் தான் கோவை நந்தனை அனுப்பி அந்த பணிகளை செய்ய முயலலாம்.என்னைத் தனிப்பட்ட வகையில் கேவலப்படுத்துவதற்காக சில இணையத்தளங்களும் சில தனிப்பட்டவர்களும் செய்துவருகின்ற விசமப்பிரச்சாரமே இது என்பதை எமது ஊடகப்பணியை நேசிக்கும் அன்பர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.அண்மையில் பாரிஸ் நகரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாரிஸ் வந்தபோது நானே கூட்டத்திற்கு இடம் ஏற்பாடுசெய்ததாகவும் புதிய கதை ஒன்று சோடிக்கப்பட்டிருந்தது.

ஒரு அமைச்சரின் வருகைக்காக கூட்டத்தை தமது அலுவலகத்திலேயே சிறிலங்கா தூதரகம் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்கு குகநாதனின் உதவி எதற்காக பயன்பட்டது என்பது தெரியவில்லை. அதுமாத்திரமல்ல, அவர் வருகையின்போது நான் இந்தியாவில் இருந்தேன்.ஓராண்டிற்கு முன்பு பிரான்சிலிருந்து ஒளிபரப்பான குகநாதனின் தமிழ்ஒளி என்கின்ற தொலைக்காட்சி இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது என்று மிகச் சாதாரணமாக இந்த இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டிற்கு முன்பு மாத்திரமல்ல, பத்து ஆண்டுகளாக தமிழ்ஒளி ஐரோப்பிய மண்ணில் வந்துகொண்டிருக்கின்றது என்பதும் சில வாரங்களாக மாத்திரம் காணாமல்போன அந்த தொலைக்காட்சி இவ்வாரம் முதல் மீண்டும் வந்திருக்கின்றது என்பதையும் இந்த இணையத்தளங்கள் வேண்டும்என்றே மறைத்துவிட்டன. தமிழ்ஒளி என்ற அந்த தொல்லைக்காட்சி தான் இன்று ரிரிஎன் என்ற பெயரில் தேசியத்தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது என்பதையும் இன்று புதிதாக இணையத்தளம் மூலம் ஊடகத்துறைக்கு வந்த இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இனியாவது தெரிந்துகொள்வது நல்லது.

நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் நண்பர்கள் சிலருடன் இணைந்து தொலைக்காட்சியை ஆரம்பித்தபோது என்னை நம்பி நிதி உதவி செய்துவிட்டு இன்றுவரை அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நண்பர்கள் - இன்று வரை என்னுடன் கைகோர்த்து நிற்கும் பணியாளர்கள் வேண்டுமானால் என்னை நோக்கி தங்கள் சுட்டுவிரல்களை நீட்டலாம். வேறு எவருக்கும் என்னை நோக்கி சுட்டுவிரல்களை மாத்திரமல்ல கண்பார்வையைக் கூடத் திருப்பும் தகுதியோ அருகதையோ இல்லை.

கதை வாசிக்க நல்லா இருக்கு இப்படியே படமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

ஆறுசனலான் இதே மாதிரியாக பலமுறை வசனங்கள் பேசியிருக்கிறார். இவருடைய இவ்வசனங்கள் ஒன்றும் எமக்குப் புதிதல்ல!!!

* நிதர்சனத்தில் செய்தி வந்தவுடன் ஐரோப்பாவில் வீர வசனங்களை அவிட்டு விடும் ஆறுசனலான், ஏன் குமுதம், தற்ஸ் தமிழ் போன்றன தமிழ்நாட்டில் நிதி மோசடிகள் தொடர்பாக செய்தி வெளியிட்டவுடன் வாய் திறக்கவில்லை?????

"பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடித்த கதைதான்" ஆறுசனலானுடையது!!!

:P :P :P

Edited by வடிவேலு

ஐயா பிழைப்பு மன்னனே பிரான்ஸ் உள்துறை அமைச்சக்கு விடுதலைப்புலிகள் என்னை சுடப்போகிறார்கள் அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து என்று எழுத்து மூலமாக முறைப்பாடு செய்தது எங்களுக்கு தெரியாது என்று நினைத்துவிட்டாயா? அல்லது ஊடகம் என்ற கவசத்தை வைத்துக்கொண்டு சிறீலங்கா அரசுக்கு நீ உளவு பார்த்த கதை எங்களுக்கு தெரியதென்று நினைத்தாயா? சும்மா புலூடா விடாதையும் ஐயா! உன்னை அறியாமலே ரிரிஎன் உன்ரை எண்டு உரிமை கொண்டாடுகிற எண்ணத்தை வெளிப்படத்திப்போட்டாய். அது நடக்கும் எண்டு கனவு காணாதே. நீயும் உன்ரை கூட்டமும் வெளியில் இருந்து இயக்கிற ஆக்கள் நீண்ட நாளைக்கு நிலைக்காயினம்.

அவர் ஒன்றும் இரகசியமாகச் செய்யவில்லையே. உள்துறை அமைச்சிடம் முறையிடப்போவதாக சொல்லிவிட்டுத்தானே செய்தார். அதை நீர் ஏதோ உளவுபார்த்து சொல்வது போல கதைவிடுகின்றீரே.

Kuhanathan told the media that he will file a complaint with the Police in Paris and also with the Interior Ministry seeking protection to safeguard his life as well as that of his family members against the heinous designs of the LTTE in Paris.

- Asian Tribune -

நக்குவது என்று முடிவு செய்து விட்டால் சொல்லிதான் நக்கனுமா?

* நிதர்சனத்தில் செய்தி வந்தவுடன் ஐரோப்பாவில் வீர வசனங்களை அவிட்டு விடும் ஆறுசனலான், ஏன் குமுதம், தற்ஸ் தமிழ் போன்றன தமிழ்நாட்டில் நிதி மோசடிகள் தொடர்பாக செய்தி வெளியிட்டவுடன் வாய் திறக்கவில்லை?????

அவர் பற்றி வந்த குமுதம் ரிப்போர்ட் இதழுக்கு அடுத்த அடுத்த இதழ்களையும் வாங்கிப் படித்துப்பாருங்கள். மறுப்பு வந்திருக்கிறதா இல்லையா என்று.

அடரா அட்ரா அட்ரா சும்மா சொல்ல கூடாது

அவர் ஒன்றும் இரகசியமாகச் செய்யவில்லையே. உள்துறை அமைச்சிடம் முறையிடப்போவதாக சொல்லிவிட்டுத்தானே செய்தார். அதை நீர் ஏதோ உளவுபார்த்து சொல்வது போல கதைவிடுகின்றீரே.

Kuhanathan told the media that he will file a complaint with the Police in Paris and also with the Interior Ministry seeking protection to safeguard his life as well as that of his family members against the heinous designs of the LTTE in Paris.

- Asian Tribune -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா பிழைப்பு மன்னனே பிரான்ஸ் உள்துறை அமைச்சக்கு விடுதலைப்புலிகள் என்னை சுடப்போகிறார்கள் அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து என்று எழுத்து மூலமாக முறைப்பாடு செய்தது எங்களுக்கு தெரியாது என்று நினைத்துவிட்டாயா? அல்லது ஊடகம் என்ற கவசத்தை வைத்துக்கொண்டு சிறீலங்கா அரசுக்கு நீ உளவு பார்த்த கதை எங்களுக்கு தெரியதென்று நினைத்தாயா? சும்மா புலூடா விடாதையும் ஐயா! உன்னை அறியாமலே ரிரிஎன் உன்ரை எண்டு உரிமை கொண்டாடுகிற எண்ணத்தை வெளிப்படத்திப்போட்டாய். அது நடக்கும் எண்டு கனவு காணாதே. நீயும் உன்ரை கூட்டமும் வெளியில் இருந்து இயக்கிற ஆக்கள் நீண்ட நாளைக்கு நிலைக்காயினம்.

அவர் ஒன்றும் இரகசியமாகச் செய்யவில்லையே. உள்துறை அமைச்சிடம் முறையிடப்போவதாக சொல்லிவிட்டுத்தானே செய்தார். அதை நீர் ஏதோ உளவுபார்த்து சொல்வது போல கதைவிடுகின்றீரே.

Kuhanathan told the media that he will file a complaint with the Police in Paris and also with the Interior Ministry seeking protection to safeguard his life as well as that of his family members against the heinous designs of the LTTE in Paris.

- Asian Tribune -

நீர் ஆர் ராச? குகனாதனா, இல்லை அவர் எடுபிடியா?

புலிக்கு எதிரி என்றால் அவர்கள் ஒட்டு மொத்த தமிழினத்தால் புளுப்போல் நோக்கப்படும் ஜந்துக்கள் என்று தெரியாமால் வீரவசனம் வேறு வேண்டிக் கிடக்கா பேச?

இனத்துரோகத்தில் வயிறு வளர்க்கும் உங்ளிடம் மனிதப் பண்பு எந்தக் கேட்டில் சீவிக்கும் என்பது தெரியாத எங்களுக்கு.

கூழுக்கு ஒலிக்கும் அரோகராக்கள் சபை மரியாதை பற்றி பேசுவது அருவருப்பாய் இல்லை.

நாய்வாழ்வாய் சேவகம் செய்யும் உங்கள் பிழைப்பிலும், பிச்சை எடுக்கும் பிழைப்பு மேல் அல்லவா?

காலம் உங்கள் சந்ததியையே காறி உமிழப் போகுதே என்ற கவலை கூட இல்லாமல், உங்கள் சாண் வயிற்றின் சுயநலத்துக்கு அடிமையாகி விட்டீர்களே!

அந்த ஊத்தைக்கு வக்கணையாய் வக்காளத்து வாங்கும் இந்த ஊத்தை யார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் லண்டனில் பிரித்தானிய அரசாங்கத்தால் அடித்து மூடப்பட்ட ரிபிசி

வானொலி அடித்துமூடப்பட்டதா? வெகுவிரைவில் நேற்று மகழ்ச்சியின் காரணமாக வீதிகளில் ஆடி மகிழ்ந்தார்கள் இனிப்பு பண்டங்களை வழங்கினார்கள் வானொலி சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் சிறு தாமதமே

அது என்ன வெளியே சொல்ல முடியாத தவிக்க முடியாத சிறு தாமதம்?

**********************

****** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

அது என்ன வெளியே சொல்ல முடியாத தவிக்க முடியாத சிறு தாமதம்?

**********************

****** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

குகநாதன் தியாகியா, துரோகியா, மோசடிக்காரனா, இல்லையா என்பதெல்லாம் இப்போது பிரச்னை அல்ல..

நமக்கென்று ஒரு பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் இருக்கின்றது. இன்று தமிழீழத்தில் நமக்கென்று ஒரு அரசே உருவாகிவிட்டது.

அந்த மண்ணை மீட்பதற்கான புனிதப் போர் இன்று இறுதிக்கட்டத்தை அடைந்து அதற்காக நாம் எல்லோரும் அணிதிரளவேண்டிய இந்த நேரத்தில், தனிப்பட்ட வகையில் தாக்குதல் நடாத்துவதும், குறிப்பாக சில திருமணமான பெண்களைப்பற்றி அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஒரு பண்பாடான குடும்பத்தில் பிறந்த- சமூகத்தில் வாழ்ந்த எவரும் எழுதமாட்டார்கள்.

இதுபோன்ற பண்பாடற்ற விமர்சனங்களை இணையத்தளத்தை வழிநடாத்திவருபவர் தவிர்க்கவேண்டும்.

தாயகத்தில் துரோகிகளாகக் கருதப்படுபவர்களைக் கூட அணைத்துச்செல்ல அங்கு தேசியத் தலைவர் முயன்றுவருவதாகவே தாயகத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் புலம்பெயர் மண்ணில் இதுபோன்ற கண்ணியமற்ற விமர்சனங்களை தேசியப் போராட்டத்திற்கு ஆதரவாக வரும்ஒரு இணையத்தளம் அனுமதிப்பது பல பின்விளைவுகளையே கொண்டுவரும்.

இணையத்தள நிர்வாகி இவற்றைக் கவனத்தில் எடுப்பது நல்லது.

தற்போது தமிழகத்தில் தங்கியிருக்கும் கோவை நந்தன் யாழ் குடாநாட்டுக்கான உணவுப்பொருட்களை கொள்வனவு செய்து ஈ.பி.டி.பியினரின் கப்பலில் எற்றும் வேலைகளில் ஈடுபட்ட வருவதாக அறியமுடிகிறது. - சூரியன்

பீபீடீபீ யாருக்கு உணவு வாங்குகிறது? இதற்கு தேவையான காசு எங்கிருந்து எப்படி வந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.