Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல வருடங்களின் பின்னர் முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர்

Featured Replies

பல வருடங்களின் பின்னர் முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர்

 


பல வருடங்களின் பின்னர் முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர்சாத்வீக அறவழிப் போராட்ட வெற்றிப்பூரிப்புடன் மன்னார் – முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர்.

முள்ளிக்குளம் மக்கள், பல வருடங்களின் பின்னர் இன்று (30) காலை தமது பூர்வீகக் கிராமத்திற்குள் நுழைந்தனர்.

விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள பரலோக மாதா ஆலயத்தில் இன்று காலை 9.30 மணியளவில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

முள்ளிக்குளம் பங்குத்தந்தையினால் இந்த கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், இதில், முள்ளிக்குளம் கிராம மக்கள், பிரதேச அரசியல்பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கடற்படை முகாம் காணப்படும் பகுதியிலுள்ள 27 வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு 08 மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே நேற்று (29) தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 220 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 700 பேர் பரலோக மாதா ஆலய வளாகத்திலும், முள்ளிக்குளம் பாடசாலையிலும் தங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யுத்த வடுக்களுடன் அகதிகளாக வாழ்ந்து, 11 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது பூர்வீகக் கிராமத்திற்கு சென்றுள்ள மக்கள் தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தினர்.

http://newsfirst.lk/tamil/2017/04/பல-வருடங்களின்-பின்னர்-ம/

  • தொடங்கியவர்

 

பல வருடங்களின் பின்னர் முள்ளிக்குளம் மக்கள் இன்று தமது பூர்வீக கிராமத்தில் கால்தடம் பதித்தனர்

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிளராத மக்களே சரித்திரத்தைப் படைப்பார்கள் என்பது உலகியலுண்மை. முள்ளிக்குளம் மக்களே தலைவணங்குகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nochchi said:

உறுதிளராத மக்களே சரித்திரத்தைப் படைப்பார்கள் என்பது உலகியலுண்மை. முள்ளிக்குளம் மக்களே தலைவணங்குகின்றேன்.

அகிம்சையின் வெற்றி....

மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தினையே அசைத்த அதே அகிம்சையின் வெற்றி.... 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அகிம்சையின் வெற்றி....

மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தினையே அசைத்த அதே அகிம்சையின் வெற்றி.... 

ஐயா! இவை இப்பவெளியேறி விட்டுகொடுப்பைச் செய்ய வேண்டியநிலை. அதற்குப்பல கரணியங்கள். அனைத்துலக அவதானிப்பு ஐநா திட்டவரைபு இப்படிப்பல விடயங்கள். அவற்றை அடையவே தமிழினம் போராடவேண்டியிருக்கு.  அதேவேளை கவனிக்கப்படாத அகம்சைப்போராட்டங்களும் தொடர்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.