Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின்வாங்கியது அமெரிக்க நிறுவனம்! - ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அதிர்ச்சி 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பின்வாங்கியது அமெரிக்க நிறுவனம்! - ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அதிர்ச்சி 
[Sunday 2017-05-07 08:00]
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் இருந்து விலகிக்கொண்டமையை அடுத்து, புதிய பங்கு கொள்வனவாளர் ஒருவரை தேடும் பணி ஆரம்பமாகியுள்ளது. 49 வீத பங்கு கொள்வனவுக்கு தயாராக இருந்த சான்பிரான்சிஸ்கோவின் டிபிஜி என்ற நிறுவனமே தமது முயற்சியில் இருந்து விலகியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இதனை அறிவித்துள்ள போதும் டிபிஜி நிறுவனம் இன்னும் அது தொடர்பில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே 2 பில்லியன் டொலர்கள் நட்டத்தில் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பில் எமிரேட்ஸ் நிறுவனம் இன்னும் தகவல் வெளியிடவில்லை.

ஏற்கனவே எமிரேட்ஸ் நிறுவனத்தின் கொள்வனவின் கீழ் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலாபமான நிறுவனமாக செயற்பட்டபோதும் 2008ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான தனிப்பட்ட குரோதம் காரணமாக அதனுடனான உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது.http://www.seithy.com/breifNews.php?newsID=181889&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்படட கோபத்தினால், ஒரு லாபத்தில் இயங்கிய அரச நிறுவனத்தினை சீரழித்த கதை தான் இது.

ராஜபக்சே மனைவி, சிராணி ராஜபக்சே துபாய் போக விரும்பிய போது, முதல் வகுப்பில் இடமில்லை என்று சொல்லப் பட்டது. யாரையாவது நிறுத்தி, அம்மணிக்கு சீட் கொடுக்க சொல்லப் பட்டது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து.

ஸ்ரீ லங்கான் விமான சேவையை நடாத்திக் கொண்டிருந்த எமிரேட் நிறுவன தலைமை அதிகாரி வரை போயும், முதல் வகுப்பு முழுவதும்  ஒரு மேல் நாட்டினது ராஜதந்திரிகள் பயணிப்பதால் எதுவுமே செய்ய முடியாது என்று கை விரித்து விட, வந்ததே கோபம் ராஜபக்சேக்களுக்கு.

உடனடியாக பிரிட்டனை சேர்ந்த அந்த எமிரேட் நிறுவன தலைமை அதிகாரியின் விசாவை ரத்து செய்து 48 மணி நேரத்தில் நாட்டினை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படடார்.

அத்துடன் எமிரேட்டுடனான உடன்படிக்கையும் ரத்து செய்யப் பட்டது. தனிப்படட காரணகளுக்காக மிகவும் லாபகரமாக இயங்கி வந்த நிறுவனத்தினை பிடுங்கி, அனுபவமே இல்லாத சிரானியின் சகோதரரிடம் கொடுக்கப்பட, அவரோ மாதம் ஒரு விமானப் பணிப்பெண்ணுடன் உலகெங்கும் சுத்தி திரிந்தார், ஸ்ரீ லங்கான் செலவில்.

முக்கியமாக தமது கொள்ளைகளை அடிக்க முடியாமல், நந்தி போல் எமிரேட்ஸ் தடுத்ததும் இன்னுமொரு காரணம்.

இன்று ஸ்ரீ லங்கான் $2பில்லியன் டொலர் நஷடத்தில்.... ரிம்மில் ஓடுகின்றது. 

புது முதலீட்டாளர்களை தேடுகிறது. மகிந்த மீண்டும் வர முயல்வதும், அவருக்கான, மே தின கூட்டம் கூடுதலாக இருந்ததாலும், ஆரவப் பட்டவர்களும் தலை தெறிக்க ஓடிவிட்டார்கள்.

கடைசியாக, எமிரேட்ஸ்சுக்கே கடதாசி போடுவோமா என்று யோசிக்கின்றனர். ஆனால் சூடு கண்ட பூனை. மிகவும் கவனமாக உடன்படிக்கை போடும்.

கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டார்கள் ராஜபக்சே குடும்பத்தினர். முக்கியமாக சிராணி நோனா...

மே 2014 பிரான்ஸ் இல் நடந்தா வெசாக் கொண்டாட்டங்களை, சிறப்பிக்கவென தனது மாமி 'டெய்சி ஆன்டி' உடன்  நான்கு நாட்கள் பயணத்தில் செலவழித்த பணம்,  137,396 யூரோ (Rs 25,000,000).

வெசாக் என வந்து, அவர்கள் செய்தது, கிங் ஹென்றி V ஹோட்டலின் 'presidental suite' ல் இருந்து வெசாக்கினை பார்த்தது மட்டுமே.

பாரிஸில் இருந்து மாமியாருடன், லிமோசின் காரில் லூர்ட்ஸ் தேவாலயத்துக்கு போய் வந்தது தான் கத்தோலிக்கரான அவரது வெசாக் கொண்டாட்டம். 

பில்லை அரசு தலையில் கட்டிவிட, செலவு விபரங்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள இப்போது வெளியியீட்டுள்ளார்.

41,650 யூரோ மட்டும் இந்த பிரான்சில் சுத்திய லிமோசின் கார் வாடகை மட்டும். ஊதாரிப் பெண்ணும் அப்பாவி  இலங்கையர் வரிப்பணமும். 

1973ம் ஆண்டு இலங்கை அழகுராணியாக தேர்வான அம்மணி அதே ஆண்டு, லண்டன் ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்த உலக அழகு ராணிப் போட்டியில் பங்கு கொண்டார். வெல்லவில்லை.

ஹோட்டல் ரூமில் இருந்த மினி பார் பல முறை நிரப்ப வேண்டி இருந்தது. தண்ணி பில் மட்டும் 845 யூரோ.... நான்கு நாட்களுக்கு.

'இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னர் இங்கு தங்கி இருந்ததால் இந்த பெயர் வந்தது. ஆனலும் இன்றையஎலிசபெத் மகாராணியார் தங்கவில்லை.... காரணம் கட்டணம் மிகமிக அதிகம்.... ஆனாலும் எமது ராணி அம்மாவுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை' என்றார் மங்கள. 

அவர்கள் மீண்டும் வர ஆசைப் படுகின்றனர்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/52786

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, nochchi said:

அமெரிக்கன் பின் வாங்கினால் என்ன முன் வாங்கினால் என்ன....:grin:
எங்களுக்கு மிண்டு குடுக்க இருக்கவே இருக்கு இந்தியா இல்லாட்டி சீனா....

அவையள் மிச்சத்தை பாத்துக்கொள்ளுவினம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

தனிப்படட கோபத்தினால், ஒரு லாபத்தில் இயங்கிய அரச நிறுவனத்தினை சீரழித்த கதை தான் இது.

ராஜபக்சே மனைவி, சிராணி ராஜபக்சே துபாய் போக விரும்பிய போது, முதல் வகுப்பில் இடமில்லை என்று சொல்லப் பட்டது. யாரையாவது நிறுத்தி, அம்மணிக்கு சீட் கொடுக்க சொல்லப் பட்டது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து.

ஸ்ரீ லங்கான் விமான சேவையை நடாத்திக் கொண்டிருந்த எமிரேட் நிறுவன தலைமை அதிகாரி வரை போயும், முதல் வகுப்பு முழுவதும்  ஒரு மேல் நாட்டினது ராஜதந்திரிகள் பயணிப்பதால் எதுவுமே செய்ய முடியாது என்று கை விரித்து விட, வந்ததே கோபம் ராஜபக்சேக்களுக்கு.

உடனடியாக பிரிட்டனை சேர்ந்த அந்த எமிரேட் நிறுவன தலைமை அதிகாரியின் விசாவை ரத்து செய்து 48 மணி நேரத்தில் நாட்டினை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படடார்.

அத்துடன் எமிரேட்டுடனான உடன்படிக்கையும் ரத்து செய்யப் பட்டது. தனிப்படட காரணகளுக்காக மிகவும் லாபகரமாக இயங்கி வந்த நிறுவனத்தினை பிடுங்கி, அனுபவமே இல்லாத சிரானியின் சகோதரரிடம் கொடுக்கப்பட, அவரோ மாதம் ஒரு விமானப் பணிப்பெண்ணுடன் உலகெங்கும் சுத்தி திரிந்தார், ஸ்ரீ லங்கான் செலவில்.

முக்கியமாக தமது கொள்ளைகளை அடிக்க முடியாமல், நந்தி போல் எமிரேட்ஸ் தடுத்ததும் இன்னுமொரு காரணம்.

இன்று ஸ்ரீ லங்கான் $2பில்லியன் டொலர் நஷடத்தில்.... ரிம்மில் ஓடுகின்றது. 

புது முதலீட்டாளர்களை தேடுகிறது. மகிந்த மீண்டும் வர முயல்வதும், அவருக்கான, மே தின கூட்டம் கூடுதலாக இருந்ததாலும், ஆரவப் பட்டவர்களும் தலை தெறிக்க ஓடிவிட்டார்கள்.

கடைசியாக, எமிரேட்ஸ்சுக்கே கடதாசி போடுவோமா என்று யோசிக்கின்றனர். ஆனால் சூடு கண்ட பூனை. மிகவும் கவனமாக உடன்படிக்கை போடும்.

கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டார்கள் ராஜபக்சே குடும்பத்தினர். முக்கியமாக சிராணி நோனா...

மே 2014 பிரான்ஸ் இல் நடந்தா வெசாக் கொண்டாட்டங்களை, சிறப்பிக்கவென தனது மாமி 'டெய்சி ஆன்டி' உடன்  நான்கு நாட்கள் பயணத்தில் செலவழித்த பணம்,  137,396 யூரோ (Rs 25,000,000).

வெசாக் என வந்து, அவர்கள் செய்தது, கிங் ஹென்றி V ஹோட்டலின் 'presidental suite' ல் இருந்து வெசாக்கினை பார்த்தது மட்டுமே.

பாரிஸில் இருந்து மாமியாருடன், லிமோசின் காரில் லூர்ட்ஸ் தேவாலயத்துக்கு போய் வந்தது தான் கத்தோலிக்கரான அவரது வெசாக் கொண்டாட்டம். 

பில்லை அரசு தலையில் கட்டிவிட, செலவு விபரங்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள இப்போது வெளியியீட்டுள்ளார்.

41,650 யூரோ மட்டும் இந்த பிரான்சில் சுத்திய லிமோசின் கார் வாடகை மட்டும். ஊதாரிப் பெண்ணும் அப்பாவி  இலங்கையர் வரிப்பணமும். 

1973ம் ஆண்டு இலங்கை அழகுராணியாக தேர்வான அம்மணி அதே ஆண்டு, லண்டன் ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்த உலக அழகு ராணிப் போட்டியில் பங்கு கொண்டார். வெல்லவில்லை.

ஹோட்டல் ரூமில் இருந்த மினி பார் பல முறை நிரப்ப வேண்டி இருந்தது. தண்ணி பில் மட்டும் 845 யூரோ.... நான்கு நாட்களுக்கு.

'இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னர் இங்கு தங்கி இருந்ததால் இந்த பெயர் வந்தது. ஆனலும் இன்றையஎலிசபெத் மகாராணியார் தங்கவில்லை.... காரணம் கட்டணம் மிகமிக அதிகம்.... ஆனாலும் எமது ராணி அம்மாவுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை' என்றார் மங்கள. 

அவர்கள் மீண்டும் வர ஆசைப் படுகின்றனர்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/52786

நீங்கள் சொல்ல வார விடயம் விளங்குது ................

ஆனால் .........
அகதியாக வந்த  சாதாரண சொறிலங்கா குடிகளே 
தண்ணி வார்ப்பு என்று மகள்களை 
கெலியில் ஏற்றி இறக்கும்போது ............
அந்த நாட்டின் அரச அதிபரின் மனைவி வந்து 
லீமோவில் என்றாலும் திரியாதுபோனால் 

சொந்த பிரஜைகளை அவமான படுத்தியதாக இருக்காதா ? 
ஏன் எனக்கு வில்லங்கம் என்றுதான் 
சிராணி ஆன்டி கொஞ்சம் தண்ணியையும் போட்டிருப்பா. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.