Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் சமத்துவத்தையே உருக்கமாக வேண்டி நிற்கிறது..! வெசாக் தின செய்தியில் ஜனாதிபதி மைத்திரி

Featured Replies

உலகம் சமத்­து­வத்­தையே உருக்­க­மாக வேண்­டி­ நிற்­கி­றது..! வெசாக் தின செய்தியில் ஜனாதிபதி மைத்திரி

 

 

“சமூக நீதி மற்றும் பேண்­தகு உலக சமா­தா­னத்­துக்­கான பௌத்த தர்­மத்தின் போத­னைகள்” என்­பதே இலங்­கையில் நடத்­தப்­படும் இந்த சர்­வ­தேச விசாக விழாவின் தொனிப்­பொ­ரு­ளாகும். சமத்­து­வமே சமூக நீதியின் அடித்­த­ள­மாகும். புத்­த­பி­ரானின் காலத்­திலும் அடிப்­படைக் கோட்­பா­டாக சமத்­துவம் எனும் உலக நீதியே இருந்­து­வந்­தது. இன்­றைய உலகம் மிக உருக்­க­மாக வேண்டி நிற்­பதும் அந்த சமத்­து­வத்­தை­யே­யாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள வெசாக் தின செய்­தியில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

vesak.jpg

அந்த செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது 

இலங்கை பௌத்த வர­லாற்றின் பொற்­கால அத்­தி­யா­யத்தின் ஆரம்ப அடை­யா­ள­மா­கவே இரண்­டா­யி­ரத்து ஐநூற்று அறு­பத்­தோ­ரா­வது ஸ்ரீ புத்த வருடம் உத­ய­மா­கி­றது. புத்­த­பி­ரானின் புனித பாதங்கள் மும்­முறை பதிந்த புனித பூமி­யா­கிய நமது தாய்­நாட்டில் ஐக்­கிய நாடுகள் அமைப்பு சர்­வ­தேச வெசாக விழாவை நடத்த தெரிவு செய்­துள்­ளமை நாம் பெற்ற அரிய பாக்­கி­ய­மெனக் கரு­து­கிறேன். அந்த வாய்ப்­பா­னது பௌத்த தர்­மத்தின் ஆசீர்­வா­தத்தை பெற்­றதன் பின்னர் எமது நாடு பெற்ற மிகச் சிறந்த சர்­வ­தேச வெற்­றி­யாகும். 

ஐக்­கிய நாடு­களின் பதி­னான்­கா­வது சர்­வ­தேச வெசாக் விழாவின் முதன்மை பொறுப்பு எமக்கு வழங்­கப்­பட்­ட­மைக்கு அண்­மைக்­கா­லத்தில் நாம் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­களும் களம் அமைத்­துக்­கொ­டுத்­துள்­ளன. அந்த வெற்­றிக்­காக  உழைத்த அனைத்து மக்­களும் தமது வாழ்­நாளில் ஒரு யுகத்தை மெரு­கூட்­டிய புண்­ணி­ய­வான்­க­ளாக வர­லாற்றில் இணைந்­து­கொள்­வார்கள். 

“சமூக நீதி மற்றும் பேண்­தகு உலக சமா­தா­னத்­துக்­கான பௌத்த தர்­மத்தின் போத­னைகள்” என்­பதே இலங்­கையில் நடத்­தப்­படும் இந்த சர்­வ­தேச விசாக விழாவின் தொனிப்­பொ­ரு­ளாகும். சமத்­து­வமே சமூக நீதியின் அடித்­த­ள­மாகும். புத்­த­பி­ரானின் காலத்­திலும் அடிப்­படைக் கோட்­பா­டாக சமத்­துவம் எனும் உலக நீதியே இருந்­து­வந்­தது. இன்­றைய உலகம் மிக உருக்­க­மாக வேண்டி நிற்­பதும் அந்த சமத்­து­வத்­தை­யே­யாகும். அந்த சமத்­து­வத்தை இரண்­டா­யி­ரத்து ஐநூற்று அறு­பத்­தொரு ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே புத்­த­பிரான் தாம் உயிர் வாழ்ந்த இந்த பூவு­ல­குக்கு போதித்­துள்ளார். மனுக்­குல இருப்­பினை உறுதி செய்யும் முக்­கிய கார­ணி­யான சமா­தானம், சமத்­துவம் ஆழ­மாக வேரூன்­றி­யுள்ள சமூ­கத்­தி­லேயே உரு­வாகும் எனவும் போதி­மா­தவன் போதித்­தி­ருக்­கின்றார். 

முப்­பெரும் மங்­கள நிகழ்­வு­களில் ஒன்­றா­கிய புத்­த­பெ­ரு­மானின் முக்­திப்­பேற்­றுடன் ஆரம்­ப­மாகும் எமது தேசத்தின் வர­லா­றா­னது இம்­முறை சர்­வ­தேச விசாக விழா இலங்­கையில் நடத்­தப்­ப­டு­வதன் மூலம் புதி­ய­தொரு அத்­தி­யா­யத்தில் அடி­யெ­டுத்து வைக்­கின்­றது. அந்த அபிமானத்துடன் எல்லா விதமான குறுகிய வரையறைகளையும் கடந்து ஒரு நாடு என்ற வகையில் உலக அளவில் மிக உன்னதமாக மிளிர்வதற்கான அர்ப்பணிப்பை எமது விசாகத் திருநாளின் பிரார்த்தனையாகக் கொள்வோமாக. உலகவாழ் பௌத்த பெருமக்களுக்கு மங்களகரமான விசாகத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 

http://www.virakesari.lk/article/19878

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நவீனன் said:

புத்­த­பி­ரானின் புனித பாதங்கள் மும்­முறை பதிந்த புனித பூமி­யா­கிய நமது தாய்­நாட்டில் ஐக்­கிய நாடுகள் அமைப்பு சர்­வ­தேச வெசாக விழாவை நடத்த தெரிவு செய்­துள்­ளமை நாம் பெற்ற அரிய பாக்­கி­ய­மெனக் கரு­து­கிறேன்.

புத்தர் எந்த பிளைட்டில் வந்திருப்பார்?எந்த ஏர்போர்ட்டில் இறங்கியிருப்பார்?:unsure: சிறிலன்காவில் சமத்துவத்தை உருவாக்கிய பின்பு  உலக சம்த்துவத்தைப்பற்றி யோசிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா மகிந்தவுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்தவர் புத்தர் பற்றி பேசுவது  வேடிக்கையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nunavilan said:

அடேயப்பா மகிந்தவுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்தவர் புத்தர் பற்றி பேசுவது  வேடிக்கையாக இருக்கிறது.

அவர்கள் இன அழிப்பை வாடிக்கையாய் கொண்டவர்கள்.

தங்களுக்குள் ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள்.

அவர்களின் ஆட்சிமாற்றம் , மைத்திரி ஆட்சி, நல்லாட்சி எல்லாம் வெறும் நாடகங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.