Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களப்போட்டியில் முதல் 4 இடத்தில் இருப்பவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றுள்ளார்கள். அடுத்த போட்டியான இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான போட்டிக்கும், அவுஸ்திரெலியா தென்னாபிரிக்காவுக்கு இடையிலான போட்டிக்கும் இந்த 4 போட்டியாளர்களின் பதில்கள் வித்தியாசமாக இருக்கிறது. இலங்கையும், அவுஸ்திரெலியாவும் வெற்றி பெற்றால் யாழ்வினோ தொடர்ந்து முதல் இடம் வகிப்பார். இலங்கையும் தென்னாபிரிக்காவும் வெற்றி பெற்றால் வானவில் முதல் இடம் பெறுவார். இந்தியாவும் அவுஸ்திரெலியாவும் வெற்றி பெற்றால் சிவராஜா முதல் இடம் பிடிப்பார். இந்தியாவும், தென்னாபிரிக்காவும் வெற்றி பெற்றால் வாசகன் முதலிடம் பிடிப்பார்.

  • Replies 1k
  • Views 70.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் துரோணர்கள்!

‘‘இந்த உலகக் கோப்பையை யார் ஜெயித்தாலும், அந்தப் பெருமையில் எங்களுக்கு நிச்சயம் பங்கு உண்டு!’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் ஆஸ்திரேலியர்கள். காரணம், உலகக் கோப்பை யில் ஆடும் 16 அணிகளில் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 7 அணிகளுக்குப் பயிற்சியளிப்பது ஆஸ்திரேலியர்களே!

களத்தில் நிற்கும் ஆஸ்திரேலிய துரோணாச்சாரியர்களை அறிமுகம் செய்துகொள்வோமா?

p73rt4.jpg

ஜான்புக்கானன் ஆஸ்திரேலியா

திறமையாக கிரிக்கெட் ஆடுவது வேறு, கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது வேறு என்பதைநிரூ பித்திருக்கிறார் ஜான். இவர் சாதாரண வீரராக இருந்தபோது, ஆஸ்தி ரேலிய அணி இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. வெறுப்பில், ஆஸ்தி ரேலியாவில் குட்டி டீம்களுக்குப் பயிற்சியளிக்கப் போய் விட்டார். இவரால் உருவாக்கப்பட்ட அணிகள் உள்ளூர் ஆட்டத்தில் பின்னியெடுக்க, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியாளராகஅமர்த்தப் பட்டார். 2003-ல் இவரால் மெரு கூட்டப்பட்ட ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வெல்ல, நம்பர் ஒன் பயிற்சியாளர் என்ற பெரு மைக்கு உரியவரானார்.

பாண்டிங், வாஹ், டெய்லர், ஆலன் பார்டர் எனப் புகழ்பெற்ற பல வீரர்களைக் கூர்தீட்டிய புக்கானன், இந்த உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணிக்கு குட்பை சொல்லத் தீர்மானித் திருக்கிறார். இதைக் கேள்விப்பட்டதிலிருந்து பல நாட்டு கிரிக்கெட் வாரியங் கள் பணமூட்டையுடன் இவர் வீட்டு வாசலில் காத்திருக்கின்றன. ஆஸ்திரேலிய வீரர்கள், தங்கள் குருவுக்குக் காணிக்கையாக இந்த உலகக் கோப்பையை வென்று தரத் துடிக்கிறார்கள். புக்கானனுக்கும் இப்போது இதுதான் குறி!

பலம்: அணியில் இருக்கும் நட்சத்திர வீரர்கள்.

பலவீனம்: வீரர்களின் ஒழுங்கீனத்தைக் கட்டுப்படுத்த முடியாதது.

கிரேக் சேப்பல் - இந்தியா

பிராட்மேனுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியர்கள் கொண்டாடும் கிரிக்கெட் கடவுள்! வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சுப் பிசாசுகள் உச்சத்தில் இருந்த காலத்தில் 7,000 ரன்களை அடித்து விளாசியவர். வெற்றிக்காக எதையும் செய்யத் தயங்காதவர். சேப்பலின் வெற்றி வெறி கங்குலியைக் கவர, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் போராடி அவரை இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆக்கினார். வந்தவுடன் முதல் வேலையாக கங்குலியை நீக்கியவர், ஒட்டுமொத்த அணியையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். ‘எல்லோரும் எல்லாமும் செய்ய வேண்டும்’ என்பது சேப்பலின் தாரக மந்திரம். பதான், முனாப், ஜாகிர்கான் என எல்லோரையும் இவர் பேட் பிடிக்க வைக்க, இன்று வலுவான பேட்டிங் வரிசை இந்தியாவுக்குச் சொந்தம். டக்-அவுட் ஆகிக்கொண்டு இருந்த கங்குலியை வெளியேற்றி, வெறுப்பேற்றி, வெறியேற்றி... இன்று சூப்பர் ஸ்டார் ஆக்கியது இவரது மற்றொரு சாதனை.

இந்த உலகக் கோப்பை இந்தியாவுக்குத்தான் என்று அடித்துச் சொல்கிறார் சேப்பல். இந்த நம்பிக் கையில்தான், கஞ்சத்தனமான நம் கிரிக்கெட் வாரியமும் இவருக்குக் கோடிகளில் கொட்டிக் கொடுத்திருக் கிறது!

பலம்: வீரர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.

பலவீனம்: வாய்.

p73aus4.jpg

பென்னட் கிங் வெஸ்ட் இண்டீஸ்

கடந்த உலகக் கோப்பையில், வெஸ்ட் இண்டீஸை யாரும் மதிக்கவே இல்லை. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் அது ‘வேஸ்ட்’ இண்டீஸாய் மாறிய நேரத்தில்தான், பென்னட் கிங் உதவிக்கு வந்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளராக இருந்த இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளராக ஆனதுமே, என்ன மாயம் செய்தாரோ... பூனையாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் புலியாகப் பாயத் தொடங்கியது. 2004&ல் சாம்பியன் கோப்பை, 2006&ல் சாம்பியன் கோப்பை ரன்னர், இந்தியாவைப் புரட்டியெடுத்தது என அந்த அணி தொடர்ந்து சாதனைகள் செய்ததற்கு பென்னட் கிங்தான் காரணம்.

அணியின் வெற்றிக்கு ஆல் ரவுண்டர்கள் கட்டாயம் தேவை என்பது இவரது கணிப்பு. விளைவு... டெய்லர், பிராட்ஷா, பிரேவோ, கிறிஸ்கெய்ல் எனப் பல ஆல் ரவுண்டர்கள் வெஸ்ட் இண்டீஸ§க்குக் கிடைத்தனர். பென்னட் கொடுத்த தெம்பில், இப்போது சொந்த ஊரில் தைரி யமாக உலகக் கோப்பையை எதிர் கொள்கிறது வெஸ்ட் இண்டீஸ்!

பலம்: வீரர்களுடன் நல்லுறவு.

பலவீனம்: ரசிகர்களின் அளவுக்கு மீறிய எதிர்ப்பார்ப்பு.

டேவ் வாட்மோர் வங்கதேசம்

நம் நாட்டில் தேர்தல் கமிஷன் என்று ஒன்று இருப்பதே சேஷன் வந்த பிறகுதான் நமக்குத் தெரியும். அதுபோல, கிரிக்கெட்டில் பயிற்சியாளர் என்பவர் எந்த அளவுக்கு முக்கியமானவைர் என்பதை உலகுக்கு உணர்த்தியவர்.

1996-ல் இவர் இலங்கையின் பயிற்சியாளராக இருந்தபோதுதான், முதல் 15 ஓவர்களில் அடித்து ஆடுவது, 30 ஒவர்களில் விக்கெட்டைக் காப்பது, கடைசி 10 ஓவர்களில் பாய்வது என கிரிக்கெட்டில் புது இலக்கணம் வகுக்கப்பட்டது. இந்த ஃபார்முலாப்படி இலங்கை அணி கோப்பையை ஜெயிக்க, எல்லோர் கவனமும் இவர் மீது திரும்பியது.

‘அம்பி’யா இருந்த இலங்கை அணியை ‘அந்நியனா’ மாற்றி மிரட்டியது போல, வங்கதேச அணியையும் இப்போது உரு வேற்றி வைத்திருப்பதாகச் சொல்கிறார் வாட்மோர்!

பலம்: அதிகமான எதிர்பார்ப்பு இல்லாதது.

பலவீனம்: அனுபவம் இல்லாத வீரர்கள்.

டாம் மூடி - இலங்கை

இந்திய பயிற்சியாளருக்கான தேர்வில், கடைசி நேரத்தில் சேப்பலால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர். இந்தியா ஒதுக்கிய இவரை இலங்கை சேர்த்துக்கொள்ள, அந்த அணியை மறுபடி உயிர்ப்பிக்கச் செய்துள்ளார்.

மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியாவுக்கு எப்போதுமே இவர் சிம்ம சொப்பனம்தான். 1992 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 3 ரன்னில் தோற்றதற்கு ‘மூடி’ வீசிய கடைசி ஓவரும் ஒரு காரணம். இந்திய அணியின் பலமும் பலவீனமும் இவருக்கு அத்துப்படி என்பதால், லீக் ஆட்டத்தில் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

பலம்: அணியில் உள்ள ஸ்பின்னர்கள்.

பலவீனம்: ஜெயசூர்யாவை மட்டுமே நம்பியிருப்பது.

பீட்டர் கான்ட்ரெல் நெதர்லாந்து

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத மற்றொரு கோச் இவர். ஆஸ்திரேயாவின் குவின்ஸ்லாந்து மாகாண அணிக்குத் தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர். 1990&91&ல் இங்கிலாந் துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12&வது ஆட்டக்காரராக இறங்கி, 2 கேட்ச்சுகள் பிடித்தது மட்டும்தான் இவரது சாதனை. இப்போது நெதர்லாந்து அணியின் பயிற்சியாளராக உள்ள இவரது கனவு, ஒரு போட்டியிலாவது அந்த அணியை ஜெயிக்கவைப்பதுதான்!

பீட்டர் டிரின்னன் ஸ்காட்லாந்து

பீட்டர் கான்ட்ரெல்லைப் போலத்தான் இவரும். குவின்ஸ்லாந்து அணிக்காக சில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய இவர், இப்போது இந்தக் கத்துக்குட்டிகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார். லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது அணி தைரியமாகப் போராடியதில் தெம்பாக இருக்கிறார்.

இலங்கை உஷார்!

உலகக் கோப்பையைக் கடைசியாக ஆடும் வீரர்கள் இந்தியா, இலங்கை இரண்டு அணிகளிலும் அதிகம் என்பதால், ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும். சமீபத்திய தொடரில் இலங்கையை இந்தியா வீழ்த்தியபோதிலும், அந்த ஆட்டங்களில் முரளிதரனும், சமிந்தா வாஸ§ம் ஆட வில்லை என்பதும், உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை அதிக முறை இலங்கை ஜெயித்துள்ளது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். அதனால், சர்வ ஜாக்கிரதையாக இலங்கையை எதிர்கொள்வது நல்லது! என்னதான் அனுபவம் மிக்க வீரராக இருந்தாலும், இம்ரான்கான் சொன்னதைப் போல முதலில் இறங் காமல், மூன்று விக்கெட் வீழ்ந்த பின் நிதானமாகக் களமிறங்கி, அதேநிதா னத்துடன் ஆடி, ஒரு ஓவருக்கு 8 ரன் எடுக்கவேண்டும் என்ற நிலைக்குப் பாகிஸ்தானைத் தள்ளிய இன்சமாம்தான் சென்ற வார ‘மிஸ்டர் சொதப்பல்’! சென்ற வாரத்தின் ‘மிஸ்டர் கலக்கல்’ பட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஸ்மித்துக்குத் தரலாம். லாரா, சந்தர்பால், கெய்ல்ஸ் என முன்னணி வீரர்கள் மிரண்டு நின்றபோது, மின் னல் வேகத்தில் 32 ரன் எடுத்ததுடன், இன்சமாம், யூசுப் உட்பட 3 விக்கெட்டுகளையும் எடுத்து, வெற்றி தேவதையை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திசை திருப்பியவர் ஸ்மித்!

சபாஷ் சரியான போட்டி!

‘உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும்தான் மோதும். அந்த இறுதிப் போட்டிக்கான ரிகர்சல் இது’ என்று 24&3&07 அன்றைய ஆட்டத்தை வர்ணிக்கிறார்கள். துடிப்பு மிக்க கேப்டன்களான கிரேம் ஸ்மித், பாண்டிங் இருவரும் பேட்டிங்கிலும் நல்ல ஃபார்மில் இருப்பதால், பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் ‘சபாஷ்... சரியான போட்டி!’ என்று சொல்லலாம்!

மிஸ்டர் சொதப்பல்!

உலகக் கோப்பையைக் கடைசியாக ஆடும் வீரர்கள் இந்தியா, இலங்கை இரண்டு அணிகளிலும் அதிகம் என்பதால், ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும். சமீபத்திய தொடரில் இலங்கையை இந்தியா வீழ்த்தியபோதிலும், அந்த ஆட்டங்களில் முரளிதர னும், சமிந்தா வாஸ§ம் ஆட வில்லை என்பதும், உலகக் கோப்பைப் போட்டியில் இந்தி யாவை அதிக முறை இலங்கை ஜெயித்துள்ளது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். அதனால், சர்வ ஜாக்கிரதையாக இலங்கையை எதிர்கொள்வது நல்லது!

என்னதான் அனுபவம் மிக்க வீரராக இருந்தாலும், இம்ரான்கான் சொன்னதைப் போல முதலில் இறங்காமல், மூன்று விக்கெட் வீழ்ந்த பின் நிதானமாகக் களமிறங்கி, அதேநிதா னத்துடன் ஆடி, ஒரு ஓவருக்கு 8 ரன் எடுக்கவேண்டும் என்ற நிலைக்குப் பாகிஸ்தானைத் தள்ளிய இன்சமாம்தான் சென்ற வார ‘மிஸ்டர் சொதப்பல்’!

‘மிஸ்டர் கலக்கல்’

சென்ற வாரத்தின் ‘மிஸ்டர் கலக்கல்’ பட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஸ்மித்துக்குத் தரலாம். லாரா, சந்தர்பால், கெய்ல்ஸ் என முன்னணி வீரர்கள் மிரண்டு நின்றபோது, மின்னல் வேகத்தில் 32 ரன் எடுத்ததுடன், இன்சமாம், யூசுப் உட்பட 3 விக்கெட்டுகளையும் எடுத்து, வெற்றி தேவதையை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திசை திருப்பியவர் ஸ்மித்!

vikatan.com

கிறிக்கெற்றில் சூதாட்டம் மலிந்திருப்பது பரகசியமான இரகசியம். அந்த வகையில் பாகிஸ்தானுக்கும் சூதாட்டக்கும்பலுக்கும் இடையிலான தொடர்பும் எல்லோரும் அறிந்ததே.

அயர்லாந்துப் பொட்டியிலும் சூதாட்டம் பெரும் பங்காற்றியிருக்கக் கூடும். இதனை வூல்மர் அறிந்து கொண்டதால் விசயம் வெளியெ வராமலிருப்பதற்காய் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கவும் கூடும்.

அடுத்த சில தினங்களில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரக்கூடும்.

(எப்படி என்ரை புலநாய்வு????) :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பிரபல தாதா தாவுத் இப்ராகிமிற்கு தொடர்புள்ளதாக சிறையில் இருக்கும் அவரது குழுவில் இருந்தவர் தெரிவித்துள்ளார். அயர்லாந்துடன் தோல்வி என்பது ஏற்கனவே தீர்மானித்திருந்தாகவும்ஆனா

இதில் பிரபல தாதா தாவுத் இப்ராகிமிற்கு தொடர்புள்ளதாக சிறையில் இருக்கும் அவரது குழுவில் இருந்தவர் தெரிவித்துள்ளார். அயர்லாந்துடன் தோல்வி என்பது ஏற்கனவே தீர்மானித்திருந்தாகவும்ஆனா

எது நடக்குதோ பிரச்சனை இல்லை சிங்களவன் தோற்று சிரிலங்கா கடைசிக்கு வந்து விட்டால் போதும்..........................................................

இது தமிழரின் சாபம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வேளை இலங்கை பயிற்சியாளரை போட்டு தள்ளாமல் விட்டாங்களே. அதுக்கு காரணம் புலிகள் என்டு அழாத குறையா சொல்லுவாங்கள்.

இலங்கை படுதொல்வியடைந்து நாடு திரும்ப வெண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமும்.

ஆனால் தற்போதைய நிலையில் ஒரு போட்டியை வெற்றிகொள்வதற்குத் தேவையான அத்தனை அம்சங்களுடனும் இலங்கை அணி இருக்கிறது.

சீரானதும் விக்கட்டுக்களை எடுக்கக் கூடியதுமான, வேகப்பந்து வீச்சாளர்கள். கண்ணாடியில கூடப் பந்தைச் சுழற்றக் கூடிய 'கறிவேப்பிலை'. அநுபவம் வாய்ந்த ஜயசூரியா , டில்சான், ஆர்னோல்ட் ஆகியோரின் சுழற் பந்து வீச்சு.

இலக்கம் 9 வரை சிறப்பாக ஆடக்கூடிய துடுப்பாட்டக் காரர்கள் என் சிறிலங்காவிற்குச் சாதகமாகவே இருக்கிறது.

ஆனால் கிறிக்கெற்றைப் பொறுத்த வரை அதிஸ்டம் மிகவும் முக்கியமானது.

அது சிறிலங்காவை விட்டு வெகு தொலைவில் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆட்டத்தில் இலங்கை வெல்ல வேண்டும். அப்பொழுது தான் இந்தியா வெளியேறி வாங்காளத்துப்புலிகள் அடுத்த சுற்றுக்குத்தெரிவு செய்யப்படுவார்கள். அதன் பின்னர் இலங்கை தோற்க வேண்டும் :-)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

For All Indian Team fans………..

Trivia - 1

Year 1981

1. Prince Charles got married

2. Liverpool crowned Champions of Europe

3. Australia lost the Ashes

4. Pope Died

2 years later India won the world Cup!!!

Year 2005

1. Prince Charles got married

2. Liverpool crowned Champions of Europe

3. Australia lost the Ashes

4. Pope Died

2 years later will India win the world Cup ?????

Trivia -2

1982 Football World Cup won by Italy

1983 Cricket World Cup won by India

2006 Football World Cup won by Italy

2007 Cricket World Cup: INDIA ???

Trivia -3

1983 Cricket World Cup India lost its first match by 5 wickets

2007 Cricket World Cup India lost its first match by 5 wickets

view the picture.

. Haiyo!!! Haiyo!!!

Ippadiyae usuppathi usuppathi udampa ranakalama akkittanungappa!!!!

Innumada engala nambigittirukinga?

..

post-3765-1174650031_thumb.jpg

Edited by raja.m

வாழ்வா, சாவா போராட்டத்தில் இந்தியா

`சுப்ப 8' சுற்றுக்கு இந்தியா தகுதி பெறுமா? என்பது இன்று வெள்ளிக்கிழமை இலங்கையுடன் நடைபெறவுள்ள முக்கிய போட்டியின் முடிவில் தெரியவரும்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் `பி' பிரிவில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பெர்முடா அணிகள் உள்ளன. இந்தியா அணி தொடக்க ஆட்டத்தில் பங்களாதேஷிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2 ஆவது ஆட்டத்தில் பெர்முடாவை 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்திய அணி கடைசி `லீக்' ஆட்டத்தில் இலங்கை அணியை இன்று சந்திக்கிறது.

இந்திய அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா, சாவா போராட்டம். இலங்கையை வென்றால் தான் `சுப்ப 8' சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். இன்று வெல்லும் பட்சத்தில் இந்தியா 4 புள்ளியைப் பெறும். கடைசி `லீக்' ஆட்டத்தில் பெர்முடா அணியை பங்களாதேஷ் தோற்கடிக்கலாம்.

அப்போது இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். ஓட்ட விகித அடிப்படையில் இரண்டு நாடுகள் `பி' பிரிவில் தகுதி பெறும். இலங்கை அணியின் ஓட்ட விகிதம் 4.59, இந்தியாவின் ஓட்ட விகிதம் 2.57, பங்களாதேஷின் ஓட்ட விகிதம் 2.002. இலங்கை அணியை வெல்லும் பட்சத்தில் ஓட்ட விதத்தின் அடிப்படையில் இந்தியா `சுப்ப 8' சுற்றில் நுழைய அதிக வாய்ப்பிருக்கிறது. பங்களாதேஷ் அணி பெர்முடாவை தோற்கடிப்பதில் சிரமமிருக்காது. ஆனால், மிகப் பெரிய ஓட்டத்தை எடுத்தோ அல்லது அதிக ஓட்ட வித்தியாசத்திலோ வெற்றி பெறுவது என்பது கடினம். இதனால், இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் `சுப்ப 8' சுற்றில் நுழைந்து விடும்.

இலங்கையை தோற்கடிக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். ஒரு வேளை இன்றைய ஆட்டத்தில் இந்தியா தோற்றால் `சுப்ப - 8' சுற்று வாய்ப்பை இழந்து விடும். அப்படி தோற்றால் பங்களாதேஷ் அணி பெர்முடாவிடம் தோற்க வேண்டும். அப்படி நிகழும் பட்சத்தில் இந்தியா, பங்களாதேஷ், பெர்முடா தலா 2 புள்ளிகளுடன் இருக்கும். ஓட்ட வித அடிப்படையில் ஒரு நாடு `சுப்ப - 8' சுற்றுக்கு தகுதி பெறும்.

எல்லாம் நடக்காமலிருக்க வேண்டுமானால், இன்றைய போட்டியில் இலங்கையை இந்திய அணி கண்டிப்பாக வென்றாக வேண்டும். ஜமேக்காவில் `டி' பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் அயர்லாந்து, மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் ஏற்கனவே, `சுப்ப 8' சுற்றுக்குள் நுழைந்து விட்டதால் இந்தப் போட்டி முக்கியமற்றதாயிருக்கும்.

http://www.thinakkural.com/news/2007/3/23/...s_page23800.htm

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் சனத்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் சனத் ஜெயசூரிய மொத்தம் 231 சிக்சர்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் பாகிஸ்தான் அதிரடி மன்னன் அப்ரிடியின் சாதனையை தகர்த்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் 2 ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் `பி' பிரிவில் இலங்கை அணி தனது 2 ஆவது ஆட்டத்தில் பங்களாதேஷை எதிர்கொண்டது. மற்றொரு ஆட்டத்தில் `டி' பிரிவில் பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் சிம்பாப்வேயை சந்தித்தது.

இரு ஆட்டங்களும் வெவ்வேறு இடங்களில் நடந்தாலும் அதிரடி வீரர்களான இலங்கை வீரர் ஜெயசூரியவா? அல்லது பாகிஸ்தான் வீரர் சயித் அப்ரிடியா? அதிக சிக்சர் அடித்து முதலிடத்தை பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

ஏனெனில், இருவரும் ஒருநாள் போட்டியில் தலா 224 சிக்சர்கள் அடித்து சமநிலையில் இருந்தனர். எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஜெயசூரிய அதிரடியாக சிக்சர் அடித்தார். காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறித் திரும்பி வந்த ஜெயசூரிய மீண்டும் சிக்சர்களை வெளுத்து வாங்கினார். அவர் ஒன்றல்ல, இரண்டல்ல 7 சிக்சர்களை பறக்க விட்டார்.

இதன் மூலம் ஜெயசூரிய 381 ஒருநாள் போட்டியில் விளையாடி மொத்தம் 231 சிக்சர்கள் அடித்து புதிய உலக சாதனையை படைத்தார். இன்னொரு போட்டியில் ஆடிக் கொண்டிருந்த அப்ரிடி, ஜெயசூரியவுக்கு போட்டியாக சிக்சர் அடித்து தனது சாதனையை தக்க வைத்து கொள்வது போல் களமிறங்கியதும் சிக்சர் தூக்கினார். ஆனால் அவரால் அதனை நீடிக்க முடியவில்லை. ஒரு சிக்சருடன் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் அப்ரிடி (238 போட்டியில் 225 சிக்சர்கள்) தனது சாதனையை தக்க வைக்க முடியாமல் போனது. ஜெயசூரிய அவரது சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார்.

இந்தப் போட்டியில் 7 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஜெயசூரிய உலகக் கிண்ணத்தில் மொத்தம் 20 சிக்சர்கள் அடித்து 5 ஆவது இடத்துக்கும் முன்னேறினார். உலகக் கிண்ணத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் கங்குலி, அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் ஆகியோர் தலா 25 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளனர். ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியா) 22 சிக்சர்களுடன் 3 ஆவது இடத்திலும் கிப்ஸ் (தென் ஆபிரிக்கா) 21 சிக்சர்களுடன் 4 ஆவது இடத்திலுமுள்ளனர்.

http://www.thinakkural.com/news/2007/3/23/...s_page23818.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது நடக்குதோ பிரச்சனை இல்லை சிங்களவன் தோற்று சிரிலங்கா கடைசிக்கு வந்து விட்டால் போதும்..........................................................

இது தமிழரின் சாபம்

<<<

இல்லை ஒருபோதும் அப்படிச் சொல்லாதீர்கள். இலங்கை எமக்கு எதிரி தான் ஆனால் இந்தியா துரோகி!. இந்திய அணியில் ஒரு தமிழராவது உண்டா?!

எங்கள் அண்ணை சொன்னது"

இலங்கை எமது அயல் நாடு"!....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<<<

இல்லை ஒருபோதும் அப்படிச் சொல்லாதீர்கள். இலங்கை எமக்கு எதிரி தான் ஆனால் இந்தியா துரோகி!. இந்திய அணியில் ஒரு தமிழராவது உண்டா?!

எங்கள் அண்ணை சொன்னது"

இலங்கை எமது அயல் நாடு"!....

அந்த அயல் நாடு ஒரு துரோகமும் செய்யவில்லையா? :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அயல் நாடு ஒரு துரோகமும் செய்யவில்லையா? :angry: :angry: :angry:

<<<,

நான் சிங்கள அரசுக்கு வக்காளத்து வாங்கவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும் போது சிங்களம் பரவாயில்லை!.

எமக்கு எதிரியானவனோடு எம் துரோகிக்கூட்டம் அல்லவா சேர்ந்து கொண்டது?!

அந்த அயல் நாடு ஒரு துரோகமும் செய்யவில்லையா? :angry: :angry: :angry:

என்னையா பேசுகிறீர் இந்திய அமைதிபடையின் அட்டூழியங்களை மறந்து விட்டீர்களா..........?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'திரு:வடிவேல் அவர்கள் சொன்னது போல் இந்திய அணியை இலங்கை அணி வெல்ல வேண்டும்! அவர்கள் உலகக்கோப்பை வெல்லவேண்டும் என்பதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<<<,

நான் சிங்கள அரசுக்கு வக்காளத்து வாங்கவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும் போது சிங்களம் பரவாயில்லை!.

எமக்கு எதிரியானவனோடு எம் துரோகிக்கூட்டம் அல்லவா சேர்ந்து கொண்டது?!

இந்திய ரானுவம் எத்தனை தமிழரை கொண்றது சிங்களராணுவம் எத்தனை தமிழரை கொலை செய்தன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ரானுவம் எத்தனை தமிழரை கொண்றது சிங்களராணுவம் எத்தனை தமிழரை கொலை செய்தன?

<<<<

யாரால்! என்று எண்ணிப்பாருங்கள் சித்தன் அவர்களே!..இந்திய அணி எத்தனை ஈழப்பெண்களின் வாழ்க்கையை சூறையாடியது! இந்தியனை விட சிங்களம் பரவாயில்லை என்ற அர்த்தத்தில் சொன்னேனே அன்றி அவர்களை விட இவர்கள் நல்லவர்கள் என்று சொல்லவில்லை அதையும் விட எமக்கும் அரசுக்குமான அதிகாரப்போரில்! சிங்களத்தை என்றுமே எம்மவர்கள் குறை சொன்னதில்லை.

சிங்கள மக்களை கொன்றழிக்க வேண்டுமென்பது எங்கள் குறிக்கோள் இல்லை!.

சிங்களவனிடமும் இந்தியனிடமும் பழகிப்பாருங்கள். இந்தியன் முதுகில் குத்தாமல் விட மாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா எமக்கு சிங்களமும் வேண்டாம் இந்தியாவும் வேண்டாம் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்,புலத்தில் வாழும் நாம் வாழும் நாட்டிற்கு விசுவாசமகவும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பராகவும் இருக்க வேண்டும்.

இவர்கள் இருவராலுல் எமக்கு தனிபட்ட(தனிமனித)ரீதியிலும் நன்மையில்லை,பொது நல ரிதியிலும் நன்மை இல்லை

வூல்மர் எழுதிய புத்தகமே அவரது உயிரைப் பறிக்கக் காரணமானதா?

[23 - March - 2007] [Font Size - A - A - A]

* பொலிஸார் விசாரணை

பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் எழுதிய புத்தகம், கிரிக்கெட் வீரர்கள்- சூதாட்டகாரர்களிடையேயான தொடர்பை அம்பலப்படுத்தும் முயற்சியாயிருந்ததால் அவர் கொல்லப்பட்டிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

பொப் வூல்மர் ஏற்கனவே தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பான ஒரு புத்தகம் எழுதி வந்தார். அதில் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் பயிற்சி தொடர்பான நுணுக்கங்கள் மற்றும் பல்வேறு தகவல்களையும் எழுதினார்.

கிரிக்கெட் சூதாட்டம் குறித்தும் அவர் அதில் எழுதி வந்தார். கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நடக்கிறது. இதில் வீரர்களின் பங்கு என்ன, ஆட்ட நிர்ணய சதி நடப்பதற்கு எப்படி வீரர்கள் உதவுகிறார்கள் என்று விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கும் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பிருந்தது. அதையும் அவர் புத்தகத்தில் எழுதத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அயர்லாந்திடம் பாகிஸ்தான் தோற்றதற்கும் சூதாட்டகாரர்களின் சூழ்ச்சிதான் காரணம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதையும் அவர் தனது புத்தகத்தில் எழுதுவதுடன் இந்த தொடர்பை வெளியே அம்பலப்படுத்தி விடுவார் என்பதால் சூதாட்டகாரர்களுடன் தொடர்புடைய வீரர்களே அவரை கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இல்லை என்றால் சூதாட்டகாரர்கள் யாரையோ ஏவி வூல்மரை கொலை செய்திருக்கலாம்.

இந்தக் கோணத்தில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை நடப்பதற்கு முன் பொப் வூல்மரிடம் யாராவது தொலைபேசியில் பேசினார்களா? இதே போல வீரர்களுக்கு எங்கிருந்தாவது போன் வந்ததா? பெப் வூல்மரை யார் யார் சந்தித்தார்கள்? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

http://www.thinakkural.com/news/2007/3/23/...s_page23819.htm

இந்தியப் படையினதும் சிறிலங்காப் படைகளினது அட்டகாசங்கள் மறக்கவோ அன்னிக்கவோ முடியாதவை.

ஆனால் விளையாட்டு என்று பார்க்கின்ற போது இந்திய அணிக்கு ஒரு சீக்கியனோ, ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு கர்நாடக மாநிலத்தைச் செர்ந்தவனோ தலைவனாக முடியும்.

ஆனால் சிறிலங்காவிற்கு ஒரு தமிழன் தலைவனாக குறைந்தது உதவித் தலைவனாகக் கூட ஆகமுடியாது. இது தான் நிஜம். இதற்கு 'கறிவேப்பிலையே' ஒரு நல்ல உதாரணம்.

வூல்மர் எழுதிய புத்தகமே அவரது உயிரைப் பறிக்கக் காரணமானதா?

[23 - March - 2007] [Font Size - A - A - A]

* பொலிஸார் விசாரணை

பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் எழுதிய புத்தகம், கிரிக்கெட் வீரர்கள்- சூதாட்டகாரர்களிடையேயான தொடர்பை அம்பலப்படுத்தும் முயற்சியாயிருந்ததால் அவர் கொல்லப்பட்டிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

பொப் வூல்மர் ஏற்கனவே தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பான ஒரு புத்தகம் எழுதி வந்தார். அதில் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் பயிற்சி தொடர்பான நுணுக்கங்கள் மற்றும் பல்வேறு தகவல்களையும் எழுதினார்.

கிரிக்கெட் சூதாட்டம் குறித்தும் அவர் அதில் எழுதி வந்தார். கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நடக்கிறது. இதில் வீரர்களின் பங்கு என்ன, ஆட்ட நிர்ணய சதி நடப்பதற்கு எப்படி வீரர்கள் உதவுகிறார்கள் என்று விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கும் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பிருந்தது. அதையும் அவர் புத்தகத்தில் எழுதத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அயர்லாந்திடம் பாகிஸ்தான் தோற்றதற்கும் சூதாட்டகாரர்களின் சூழ்ச்சிதான் காரணம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதையும் அவர் தனது புத்தகத்தில் எழுதுவதுடன் இந்த தொடர்பை வெளியே அம்பலப்படுத்தி விடுவார் என்பதால் சூதாட்டகாரர்களுடன் தொடர்புடைய வீரர்களே அவரை கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இல்லை என்றால் சூதாட்டகாரர்கள் யாரையோ ஏவி வூல்மரை கொலை செய்திருக்கலாம்.

இந்தக் கோணத்தில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை நடப்பதற்கு முன் பொப் வூல்மரிடம் யாராவது தொலைபேசியில் பேசினார்களா? இதே போல வீரர்களுக்கு எங்கிருந்தாவது போன் வந்ததா? பெப் வூல்மரை யார் யார் சந்தித்தார்கள்? என்றும் விசாரித்து வருகிறார்கள்.

http://www.thinakkural.com/news/2007/3/23/...s_page23819.htm

ஆனால் அந்தப் புத்தகத்தில் அவர் கிறிக்கெற் விளையாடும் முறை தொடர்பாகவும் பயிற்சியளிக்கும் முறை குறித்துமே எழுதிக் கொண்டிருந்ததாக ஒரு தகவல் வந்திருக்கிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசப் போகிறது. இது இந்திய அணிக்கு சாதகமான விடயம். இனி முன்னிலைப் பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்ய் வேண்டும்.

இந்திய அணி நாணயச்சுழற்ச்சியில் வெற்றி பெற்று இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.............. என்னும் 20 நிமிடத்தில் ஆட்டம் ஆரம்பமாகும்

இந்திய பந்துவீச்சளர்கள் சாதிப்பார்களா..........?

ஏதாவது இணையதளத்தில் பார்க்க முடியுமா இந்த போட்டியை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.