Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் அவுஸ்ரேலியா அணி வீரர்கள்.

1 Adam Gilchrist (wk), 2 Matthew Hayden, 3 Ricky Ponting (capt), 4 Michael Clarke, 5 Andrew Symonds, 6 Michael Hussey, 7 Shane Watson, 8 Brad Hogg, 9 Nathan Bracken, 10 Glenn McGrath, 11 Shaun Tait.

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் தென்னாபிரிக்கா அணி வீரர்கள்.

1 Graeme Smith (capt), 2 AB de Villiers, 3 Herschelle Gibbs, 4 Jacques Kallis, 5 Mark Boucher (wk), 6 Ashwell Prince, 7 Justin Kemp, 8 Shaun Pollock, 9 Andrew Hall, 10 Charl Langeveldt, 11 Makhaya Ntini.

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

சிறீலங்காவின் வெற்றிக்கு முரளி நல்ல பங்களிப்புச் செய்துள்ளார். 3 விக்கெட்டுக்களையும் 2 பிடிகளையும் எடுத்து இந்திய அணியின் மொத்தம் 5 விக்கெட்டுக்களை முரளி வீழ்த்தியுள்ளார்.

வெல்டன் சிறீலங்கா. (விளையாட்டு அரசியலுக்கு அப்பாலானது)

உண்மை நெடுக்ஸ்.. முரளி சிரித்துக்கொண்டே தன் கெட்டித்தனத்தைக் காட்டினார்.

விளையாட்டு அரசியலுக்கு அப்பாலானது.....

நீங்கள் சொன்னது சரி..நெடுக்ஸ்

:(

இந்நாள் அரசியல்வாதி அர்ஜுன ரணதுங்க சொன்னார்.. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லுமென்று.. தான் தலைவராக இல்லாவிட்டால் இலங்கை அணி வெல்ல முடியாது என்று நினைக்கிறாரோ..?

:(

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா கப்டன் சிமித் அவுஸ்ரேலியாவை துடுப்பாடும்படி கேட்டு கொண்டதற்கு இணங்க களத்தில் குதித்தா கங்காரு அணியினர்.

3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

1.கில்கிறிஸ்ட்- 15 ஓட்டங்கள்

2.கேயிடன் - 10 ஓட்டங்கள்

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெற் இழப்பின்றி 77 ஓட்டங்கள் அடி அகோரமாக விழுகின்றது :lol:

  • தொடங்கியவர்

இந்திய அணி வீரர்களின் கொடும்பாவிகளை எரிக்கும் துடுப்பாட்ட ரசிகர்கள்.

sevagpl1.gif

1111111il6.jpg

ராகுல் ராவிட்டின் வீட்டினை பாதுகாப்பதற்காக காவல் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார்.

rakj7.jpg

Edited by யாழ்வினோ

அடம் கில்க்ரிச்ட் அவுட் -42 - 106 -1

அவுஸ்திரேலியா இப்போது - 123 -1 -17.1 ஓவர்கள்

அவுஸ்திரேலியா இப்போது - 166-1 -23. ஓவர்கள்

Hayden - வேகமான 100 ஓட்டங்கள் - 66 பந்துகளில்

அவுஸ்திரேலியா இப்போது - 167-2 -23.3 ஓவர்கள்

Hayden - 101 ஓட்டங்கள் - அவுட்

  • தொடங்கியவர்

ஓட்ட விபரம் 35 ஓவர்கள் முடிவில் 2 விக்கெற் இழப்புக்கு 250 ஓட்டங்கள் பயங்கரமான அடி நடந்து கொண்டிருக்கின்றது.

அவுஸ்ரேலியாவின் ஆரம்ப துடுப்பாட் வீரர் மத்தியு கைடன் 66 பந்துகளில் சதம் அடித்து உலக கிண்ண போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை நிலை நாட்டியுள்ளார். :lol:

hyim0.jpg

ஓஸ்ரேலியா தென்னாபிரிக்கா

ஓஸ்ரேலியா 6 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 377 ஓட்டங்களப் பெற்றது. இதில்

Hayden 68 பந்துகளில் 101 ஓட்டங்களைக் குவித்தார். 14 - 4s உடன் 4-6s பெற்றிருந்தார்.

R Ponting 91 பந்துகளில் 91 ஓட்டங்களையும்

M Clarke 75 பந்துகளில் 92 ஒட்டங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ் வணி 40 - 4s 11 - 6s பெற்றது.

ஓஸ்ரேலியாவின் சராசரி ஓட்ட எண்ணிக்கை 7.54

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிகா

48 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

A de Villiers 70 பந்துகளில் 92 ஓட்டங்களையும்

G Smith 69 பந்துகளில் 74 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடப்பு சம்பியண்கள் 83 ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

பாக்., வீரர்கள் இரண்டு பேர் சொந்த நாடு செல்ல தடை உல்மர் கொலை வழக்கு விசாரணையில் அடுத்த திருப்பம்

கராச்சி: பாக்., கிரிக்கெட் அணி பயிற்சியாளர் உல்மர் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, பாகிஸ்தான் வீரர்களில் இரண்டு பேர் சொந்த நாடு செல்ல தடை விதித்து ஜமைக்கா போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த இரண்டு வீரர்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் தங்கள் நாடு செல்ல திரும்பலாம் என்றும் ஜமைக்கா போலீசார் அறிவித்துள்ளனர். உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், கடந்த ஞாயிறு அன்று அயர்லாந்து அணியுடன் பாக்., மோதியது. அதில், பாகிஸ்தான் படு தோல்வியைச் சந்தித்து, போட்டியிலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது. அன்றைய தினமே, இந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் அவர் தங்கியிருந்த ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது கொலையா, தற்கொலையா, இயற்கை மரணமா என்று ஜமைக்கா போலீசாரால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. கடும் பாதுகாப்பு கொண்ட அந்த ஓட்டலில், உல்மருக்குத் தெரியாமல் யாருமே அவர் அறைக்குள் நுழைந்து விட முடியாத அளவு கட்டுப்பாடு இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டும், உல்மர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அவரே கொடுத்த இமெயில் தகவல்கள் அடிப்படையிலும், மேலும் போலீசார் திரட்டிய தகவல்கள், தடய அறிவியல் பரிசோதனை, பிரேத பரிசோதனை ஆகியவற்றை வைத்து இறுதியில் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டள்ளார் என்ற முடிவுக்கு ஜமைக்கா போலீசார் வந்தனர். விசாரணையின் முதல் கட்டம் முடியும் வரை பாக்., அணி வீரர்கள் யாரும் ஜமைக்காவை விட்டு வெளியேறக் கூடாது என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

உல்மர் கொலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கண்ணோட்டத்தில் ஜமைக்கா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அனைவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது. ஜமைக்கா போலீஸ் துணை கமிஷனர் மார்க் ஷீல்ட்ஸ் கூறுகையில், "சந்தேகத்துக்குரிய குறிப்பிட்ட நபரை இதுவரை கண்டறியப்படவில்லை. ஓட்டலின் 12வது மாடியில் பாப் உல்மர் தங்கினார். அவரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கொலை செய்துள்ளனர்' என்றார்.

ஆனால், உல்மர் தங்கியிருந்த ஓட்டலின் தலைவர் ஜான் இஸ்ஸா, "உல்மரின் அறைக்குள் யாரும் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லை. ஏனெனில் அவரின் அறைக்கு எலக்ட்ரானிக் சாவி கொடுக்கப்பட்டது' என்றார். உல்மர் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர், "அவர் இறந்து கிடந்த போது அறை முழுவதும் ரத்தத்துடன் கூடிய வாந்தி பரவி கிடந்தது' என்றும், மற்றொருவர், "கழிவறையில் வாந்தி பரவி கிடந்தது' என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். உல்மர் கொலைக்கான "கிரைம் சீனை' வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். உல்மர் கொலைக்கு "மேட்ச் பிக்சிங்' காரணமாக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால

பாக்., வீரர்கள் இரண்டு பேர் சொந்த நாடு செல்ல தடை உல்மர் கொலை வழக்கு விசாரணையில் அடுத்த திருப்பம்

கராச்சி: பாக்., கிரிக்கெட் அணி பயிற்சியாளர் உல்மர் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, பாகிஸ்தான் வீரர்களில் இரண்டு பேர் சொந்த நாடு செல்ல தடை விதித்து ஜமைக்கா போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த இரண்டு வீரர்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் தங்கள் நாடு செல்ல திரும்பலாம் என்றும் ஜமைக்கா போலீசார் அறிவித்துள்ளனர். உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், கடந்த ஞாயிறு அன்று அயர்லாந்து அணியுடன் பாக்., மோதியது. அதில், பாகிஸ்தான் படு தோல்வியைச் சந்தித்து, போட்டியிலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது. அன்றைய தினமே, இந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் அவர் தங்கியிருந்த ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது கொலையா, தற்கொலையா, இயற்கை மரணமா என்று ஜமைக்கா போலீசாரால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. கடும் பாதுகாப்பு கொண்ட அந்த ஓட்டலில், உல்மருக்குத் தெரியாமல் யாருமே அவர் அறைக்குள் நுழைந்து விட முடியாத அளவு கட்டுப்பாடு இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டும், உல்மர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அவரே கொடுத்த இமெயில் தகவல்கள் அடிப்படையிலும், மேலும் போலீசார் திரட்டிய தகவல்கள், தடய அறிவியல் பரிசோதனை, பிரேத பரிசோதனை ஆகியவற்றை வைத்து இறுதியில் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டள்ளார் என்ற முடிவுக்கு ஜமைக்கா போலீசார் வந்தனர். விசாரணையின் முதல் கட்டம் முடியும் வரை பாக்., அணி வீரர்கள் யாரும் ஜமைக்காவை விட்டு வெளியேறக் கூடாது என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

உல்மர் கொலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கண்ணோட்டத்தில் ஜமைக்கா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அனைவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது. ஜமைக்கா போலீஸ் துணை கமிஷனர் மார்க் ஷீல்ட்ஸ் கூறுகையில், "சந்தேகத்துக்குரிய குறிப்பிட்ட நபரை இதுவரை கண்டறியப்படவில்லை. ஓட்டலின் 12வது மாடியில் பாப் உல்மர் தங்கினார். அவரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கொலை செய்துள்ளனர்' என்றார்.

ஆனால், உல்மர் தங்கியிருந்த ஓட்டலின் தலைவர் ஜான் இஸ்ஸா, "உல்மரின் அறைக்குள் யாரும் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லை. ஏனெனில் அவரின் அறைக்கு எலக்ட்ரானிக் சாவி கொடுக்கப்பட்டது' என்றார். உல்மர் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர், "அவர் இறந்து கிடந்த போது அறை முழுவதும் ரத்தத்துடன் கூடிய வாந்தி பரவி கிடந்தது' என்றும், மற்றொருவர், "கழிவறையில் வாந்தி பரவி கிடந்தது' என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். உல்மர் கொலைக்கான "கிரைம் சீனை' வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். உல்மர் கொலைக்கு "மேட்ச் பிக்சிங்' காரணமாக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால

ஜமேக்காவை விட்டு வெளியேற 2 பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பொப் வூல்மரின் கொலையில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் தொடர்பு பட்டிருப்பதாகக் கருதப் படுவதால் அவர்கள் இருவரும் ஜமேக்கா வைவிட்டு ஒரு வாரம் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொப் வூல்மரின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் தற்போது ஒவ்வொன்றாக அவிழ்ந்து வருகின்றது. அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்து கிடந்த ஹோட்டல் அறையில் சோதனை செய்ததில் கொலைக்கான பல்வேறு ஆதாரங்களும் சிக்கின. பாகிஸ்தான் - அயர்லாந்துப் போட்டி முடிந்து பாகிஸ்தான் வீர்கள் அனைவரும் ஹோட்டலுக்குத் திரும்பிய பின் ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்போது பொப் வூல்மரை யாரோ கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.

அவர்கள் யார்? என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஜமேக்கா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹோட்டலில் இவர்கள் தங்கியிருந்த அறையில் பொலிஸ் பாதுகாப்பு ஏற்கனவே இருந்தது. அடையாள அட்டைகள் உள்ளவர்கள் மட்டுமே அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்டனர். எனவே பொப் வூல்மருக்கு தெரிந்தவர்களே அவரைச் கொன்றிருக்க வேண்டும் என்று பொலிஸார் கருதுகிறார்கள்.

பொப் வூல்மரோடு பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். வேறு எவரும் அங்கு வந்ததாக இதுவரை தகவல் இல்லை. எனவே, பாகிஸ்தான் வீரர்கள் அல்லது நிர்வாகிகளில் யாரோதான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

கொலை நடந்த அறையில் மர்ம கைரேகைகள் பதிவாகியிருந்தன. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அறைக்கு வந்திருந்தற்கான அடையாளங்கள் அங்கு இருந்தன. எனவே, அவரை 2 அல்லது 3 பேர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வீரர்கள், நிர்வாகிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அறையில் இருந்த கைரேகை அவர்களுடையதாக இருக்கும் என்பதை கண்டு பிடிக்க அனைவருடைய கைரேகையும் சேகரிக்கப்பட்டு அவற்றை அறையில் பதிவாகி இருந்த கைரேகையோடு ஒப்பிட்டு பார்த்தனர். அதில் 2 வீர்களின் கைரேகை ஒத்து வந்துள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தான் வீர்களிடம் நேற்று முன்தினம் விசாரணை முடிந்ததும் அவர்களை ஜமேக்கா பொலிஸார் கிங்ஸ்டன் நகரை விட்டு வெளியேற அனுமதித்தனர். அவர்கள் அனைவரும் மொண்டிகோ நகருக்கு சென்றனர். அங்கிருந்து பாகிஸ்தான் புறப்படத் தயாரானார்கள்.

ஆனால், பொலிஸார் சந்தேகப்படும் அந்த இரு வீரர்களையும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து விட்டனர். அவர்கள் ஒரு வார காலம் ஜமேக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

எனவே, அந்த இருவரும்தான் கொலையாளிகளாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் உறுதியாகியிருக்கிறது. விசாரணைக்கு உதவியாக பாகிஸ்தான் வீரர்கள் அனைவரிடமும் மரபணு சோதனையும் (டி.என்.ஏ.) நடத்தப்படுகிறது. இதற்கான மாதிரிகளையும் பொலிஸார் சேகரித்துள்ளனர்.

பாகிஸ்தான் வீரர்களுக்கும் சூதாட்ட கும்பலுக்கும் உள்ள தொடர்பை பொப் வூல்மர் அம்பலப்படுத்த முயன்றதால்தான் கொலை நடந்துள்ளது என்பதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன. பொப்வூல்மர் தகவல்கள் சேகரித்து வைத்திருந்த `லப் டொப் கம்பியூட்டர்' மற்றும் முக்கிய தஸ்தாவேஜூகள் காணாமல் போயுள்ளன. சூதாட்டக் கும்பல் பற்றிய தகவல்களை அழிப்பதற்காகவே அவற்றை திருடிச் சென்று விட்டதாக தெரிகிறது.

http://www.thinakkural.com/news/2007/3/25/...s_page23982.htm

இலங்கை, மேற்கிந்திய தீவு அணிகளின் சிறப்பான ஆட்டங்கள்

இலங்கையின் சிறப்பான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத இந்திய அணி தூள்தூளானது. சச்சின், கங்குலி போன்றவர்கள் படு மோசமாக ஆட பெரும் கனவுகளுடன் காத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்கள் உடைந்து போயின.

69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியா வெளியேறியது. நேற்று முன்தினம் ரினிடாட்டில் நடந்த `பி' பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. `சுப்ப - 8' இற்கு முன்னேற இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய கப்டன் ராவிட் களத்தடுப்பை தேர்வு செய்தார். கும்ளேக்கு பதில் ஹர்பஜன் இடம்பெற்றார். இலங்கை அணியில் காயம் காரணமாக மக்ரூப் நீக்கப்பட்டு, டில்ஹாரா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டார்.

2003 உலக கிண்ண இறுதியாட்டம் போல் `வைட்' பந்துவீசி ஆட்டத்தை தொடக்கினார் சகிர்கான். இந்த ஓவரில் மட்டும் 10 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. அடுத்த ஓவரை அகர்கார் சிறப்பாக வீசினார். முதல் பந்திலேயே ஜெயசூரியவுக்கு எதிராக அருமையான எல்.பி.டபிள்யூ. வாய்ப்பு. ஆனால், நடுவர் ஹார்பர் மறுத்தார். தொடர்ந்த பல எல்.பி.டபிள்யூ. வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

இந்த நேரத்தில் சகிர்கானின் பந்தை தப்பு கணக்கு போட்ட ஜெயசூரியா தூக்கி அடிக்க, அதை அப்படியே `லபக்' செய்த அகர்கார் பந்தை முத்தமிட்டவாறு பறந்துவர, இலங்கைக்கு விழுந்தது முதல் அடி. அதிரடி ஜெயசூரிய வெறும் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அடுத்து வந்த கப்டன் ஜெயவர்த்தன (7) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. `லெக்' திசையில் சென்ற அகர்காரின் பந்தை தேவையில்லாமல் `பிளிக்' செய்ய, அந்தரத்தில் பறந்து தோனி கேச் பிடிக்க, கப்டன் வெளியேறினார். மிகவும் எதிர்பார்த்த சங்ககார (15), கங்குலி வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இப்படி முன்வரிசை சரிந்த நிலையில், பொறுப்பாக ஆடிய தரங்க, அரைச்சதம் (64) அடித்து நம்பிக்கையளித்தார். இவர் சச்சின் பந்தில் வீழ்ந்தார். இதற்கு பின் சாமர சில்வா, டில்ஷான் இணைந்து அதிரடியாக ஓட்டங்களை எடுத்தனர். இவர்கள் 5 ஆவது விக்கெட்டுக்கு 83 ஓட்டங்கள் எடுத்தனர். விவேகமாக ஆடிய சாமர சில்வா தொடர்ந்து நான்காவது அரைச் சதம் (59) அடித்து அசத்தினார். இது இந்த உலகக் கிண்ணத் தொடரில் இவரது மூன்றாவது அரைச்சதமாக அமைந்தது.

டில்ஷான் 38 ஓட்டங்களை எடுத்தார். கடைசி கட்டத்தில் வாஸ் (19), ஆர்னோல்ட் (19) இணைந்து இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்க, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. போப்பா.... உத்தப்பா (18) என்றார் வாஸ். படு நிதானமாக ஆடிய கங்குலி, ஒரு ஓட்டத்தை எடுத்தபோது உலகக் கிண்ணத்தில் ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த இவர் வாஸ் பந்தை தூக்கி அடிக்க, முரளிதரன் அண்ணாந்து பார்த்தவாறு மின்னலாக ஓடி அருமையான கேட்ச் பிடிக்க, கங்குலி (7) விக்கெட் காலி.

அடுத்து வந்தார் சச்சின். உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு. ஆனால், மணிக்கு 90 மைல் வேகத்தில் பெர்னாண்டோ வீசிய பந்தை சமாளிக்க முடியாமல், `டக்' அவுட்டானார். இதன் மூலம் முக்கிய போட்டிகளில் சச்சின் கை கொடுக்க மாட்டார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது.

இப்படி பொறுப்பற்ற ஆட்டத்தால் முன்வரிசை மடமடவென சரிந்தது. பின்னர் சேவக் அதிரடி தொடர, அவருக்கு பக்கபலமாக கப்டன் ராவிட் இருக்க, சாதிக்க வாய்ப்பிருந்தது. ஆனால், முரளியின் சுழல் வலையில் சேவக் (48) சிக்க, அத்தனை நம்பிக்கையும் தவிடு பொடியானது.

அடுத்து வந்த யுவராஜ் (6) தேவையில்லாமல் ஒரு ஒட்டத்துக்காக ஓட, மறுமுனையில் ராவிட் வேண்டாம்.... என்று அலற... திரும்பி கிரீசுக்கு வருவதற்குள் ரன்- அவுட்டானார். தற்கொலைக்கு சமமான இந்த ரன் அவுட்டில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு இடி. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி (0) முரளியின் அருமையான பந்தில் வெளியேற, இந்திய அணியில் தோல்வி உறுதியானது.

தனக்கு கை கொடுக்க யாரும் இல்லாமல் ராவிட் மட்டும் தனிநபராக போராடினார். இவர் 60 ஓட்டங்களை எடுத்தார். இந்திய அணி 43.3 ஓவரில் 185 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

பெர்முடா, பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை அணி `ஹட்ரிக்' வெற்றியுடன் `சுப்ப - 8' இற்குள் நுழைந்தது.

அயர்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் `டி' பிரிவு லீக் போட்டியில் அயர்லாந்து அணிகள் ஜமேக்காவில் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் ஆடிய அயர்லாந்து அணிக்கு தொடக்க வீரர் போட்டர் பீல்ட் (0) ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த மோர்கன் (18), நெயில் ஓபிரைன் (11) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். ஜெரிமி பிரே (41), போத்தா (28) ஆறுதல் அளித்தனர்.

இந்நிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. மீண்டும் தொடங்கிய ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட, அயர்லாந்து 8 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்தது. டக்வேர்த் - லூயிஸ் முறைப்படி, 190 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலகுவான இலக்குடன் களமிறங்கியது மேற்கிந்தியா. தொடக்க வீரர்களாக கெய்ல், சந்தர்போல் களமிறங்கினர். வழக்கம் போல அதிரடி காட்டிய கெய்ல் (18), ஸ்மித்தின் பந்து வீச்சில் விரைவில் வெளியேறினார். அடுத்து வந்த சர்வான், சந்தர்போலுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சர்வான்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் கலக்கிய சந்தர்போல், 10 பவுண்டரி 4 சிக்சருடன் ஒருநாள் போட்டியில் தனது 6 ஆவது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் 38.1 ஓவரில் மேற்கிந்தியா 190 ஓட்டங்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

சந்தர்போல் (102), சாமுவேல்ஸ் (27) ஆட்டமிழக்காதிருந்தனர். இவ்வெற்றியின் மூலம் `டி' பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியது.

http://www.thinakkural.com/news/2007/3/25/...s_page23946.htm

Front-1-l.jpg

இலங்கையிடம் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி கண்டதையடுத்து, ஆத்திரமடைந்த ரசிகர்கள் அலகாபாத் நகரில் வீரர்களின் படங்களை எரிப்பதை இங்கு காண்கிறீர்கள். ...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21109&hl=

ஈழவன் இந்திய அணியின் திருவளையடகலை இங்கே பாரும் :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21109&hl=

ஈழவன் இந்திய அணியின் திருவளையடகலை இங்கே பாரும் :unsure:

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் - பெர்மூடா இடையேயான இன்றைய ஆட்டம் மழை காரணமாக தாமதமாகின்றது.

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் - பெர்மூடா இடையேயான இன்றைய போட்டி 15 ஓவர்கள் பந்து வீசுவதற்கு இடையில் மழை காரணமாக போட்டி நான்கு தடவைகள் தடைப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டது. ஆட்டம் 30 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட போதும் தற்போது கடும் மழை காரணமாக மீண்டும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதய ஆட்ட நிலவரம் பெர்மூடா அணி 15 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெற்றுக்களை இழந்துள்ளது. இன்று இந்த ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டால் மீண்டும் நாளை இந்த ஆட்டம் இப்போது நிறுத்தப்பட்ட அதே நிலையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று நடுவர்களின் முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனாலும் நடுவர்களின் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

தற்போது போட்டி மீண்டும் ஓவர்கள் 21 ஆக குறைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

பெர்மூடா அணி 21 ஓவர்கள் முடிவில் 9 விக்கெற் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றுள்ளது. மழையினால் பங்களாதேஷ் அணியினருக்கு ரென்சன் கொஞ்சம் கூடியிருக்கின்றது என்று தான் சொல்ல வேணும்.

பங்களாதேஷு 17.3 ஓவரில் 3விக்கற் இழப்பிற்கு 96 ஓட்டங்களை எடுத்துவெற்றி பெற்றுள்ளது

இந்தியர்களும் அடுத்த சற்றிற்குச் செல்லாமல் நாடு திரும்புகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை செய்யும் இந்தியமலையாளப் பெண் ஒருவர் எப்பொழுதும் இந்தியா இலங்கையினை வென்றால் எப்படி உங்கட இலங்கை தோற்று விட்டது என்று நக்கல் செய்வார். அதற்கு நான் நாங்கள் இலங்கை அரசின் கொடுமைக்காக தமிழர்கள் இலங்கைக்கு எதிராக விளையாடும் நாடுகளுக்கு தான் ஆதரவு என்று சொல்லுவேன். அதற்கு அவ ' உங்கட நாடு தோற்றதினால் சொல்கிறீர்கள்' என்று சொல்லுவா. நான் அடிக்கடி சொல்லிப்பார்தேன். அவ கேட்க மாட்டார். இன்று வேலைக்கு சென்றபோது என்னைக்கண்டதும் தெரியாமல் போய் விட்டா. நான் இலங்கை வெல்லக்கூடாது என்று நினைத்திருந்தாலும் இந்த மலையாளப் பெண்மணியின் இம்சை தாங்காமல் இந்தியாவை மட்டும் இலங்கை வெல்ல வேண்டும் என நினைப்பேன்.

உலகக்கிண்ணப் போட்டி தொடங்கும் போது அர்ச்சுனா ரணதுங்கா, இந்தியா இம்முறை உலக்கிண்ணத்தினை வெல்லும் என்றார். அரை இறுதிக்கு அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை, இந்தியா செல்லும் என்றார். அவுஸ்திரெலியா சுழற் பந்து வீச்சாளர் செயின் வோர்ண், இம்முறை அவுஸ்திரெலியா வெல்லும் என்றார். ஆனால் இலங்கை, நியூசிலாந்து ஆகியவை அவுஸ்திரெலியாவுக்கு சவாலாக இருக்கும் என்றார். இங்கிலாந்தும் சிலவேளைகளில் வென்றாலும் வென்று விடும். கொலிங் வூட் இப்போட்டித்தொடரில் சிறந்த ஆட்டக்காராராகலாம் என்றார். கொலிவூட் இலங்கை இம்முறை உலகக்கிண்ணப்போட்டியில் வென்றாலும் ஆச்சர்யப்படவில்லை என்றும் நல்லாய் பலமாக இருக்கிறது என்றார். நியூசிலாந்து அணித்தலைவர் இம்முறை முக்கிய 8 நாடுகளுக்கும் வாய்ப்பு உள்ளது என்றார். மேற்கிந்தியா பயிற்சியாளர் மேற்கிந்தியா வெல்லும் என்றார். இந்தியா ஊடகங்கள்( தினத்தந்தி) இம்முறை இந்தியா, அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என்று ஊகம் தெரிவித்தது. இலங்கையும், மேற்கிந்தியாவும் இந்தியாவுடன் நடைபெற்ற இந்தியாவில் நடைபெற்ற தொடரில் தோல்வி உற்றதினால் வெற்றி பெற மாட்டினம் என்று தெரிவித்து இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.40 Bet

Sri Lanka 5.00 Bet

South Africa 5.50 Bet

New Zealand 6.50 Bet

West Indies 7.50 Bet

England 15.00 Bet

Bangladesh 67.00 Bet

Ireland 501.00 Bet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.