Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரம்பத்தில் பட பட என்று விக்கெற்றுக்கள் விழுந்தாலும், இப்பொழுது இலங்கை அணியினர் 18 வது ஒவரில்(தமிழ்ச்சொல் அல்ல) 67 ஒட்டங்களை 3 பேர் ஆட்டமிழந்தனிலையில் விளையாடிக்கொண்டு இருக்கிறது.

நான் நித்திரை முழிச்சு தொடர்ந்து பார்த்தால் , எனது வேலையில் நாளைக்கு கூய் கூய் கூய். கொஞ்சம் நித்திர கொண்டபின்பு அதிகாலை 6மணிக்கு மீண்டும் வருவேன்.

  • Replies 1k
  • Views 70.6k
  • Created
  • Last Reply

அரம்பத்தில் பட பட என்று விக்கெற்றுக்கள் விழுந்தாலும், இப்பொழுது இலங்கை அணியினர் 18 வது ஒவரில்(தமிழ்ச்சொல் அல்ல) 67 ஒட்டங்களை 3 பேர் ஆட்டமிழந்தனிலையில் விளையாடிக்கொண்டு இருக்கிறது.

நான் நித்திரை முழிச்சு தொடர்ந்து பார்த்தால் , எனது வேலையில் நாளைக்கு கூய் கூய் கூய். கொஞ்சம் நித்திர கொண்டபின்பு அதிகாலை 6மணிக்கு மீண்டும் வருவேன்.

தள்ளாத வயசில நித்திரை முழிச்சு பார்க்காதயும்,பிறகு உடம்புக்கு ஏதாவது ஆயிடும் போய் படும்

:o

சில்வா 64 ரன்களுடன் ஆட்டமிழந்துள்ளார்.

ஜயவர்த்தன 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்

தற்போது 40 ஓவர் முடிவில் இலங்கை 5 விக்கட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

Edited by Mathan

  • தொடங்கியவர்

அணித்தலைவர் ஜெயவர்தனா சற்று முன் கில்லியினால் ஸ்ரொம் செய்யப்பட்டு ஆட்டமிழந்துவிட்டார். தற்போது 174 - 5 விக்கெற். :o

ஆமாம் ஆனால் அவுஸ்ரேலிய கிரிக்கட் போட்டிகளை மட்டும் தான் பார்கலாம்

:o

அது பரவாயில்லையே இங்கு SKY இல்லாமல் பார்க்க முடியாது.

  • தொடங்கியவர்

178 - 6 விக்கெற். :o

  • கருத்துக்கள உறவுகள்

அணித்தலைவர் ஜெயவர்தனா சற்று முன் கில்லியினால் ஸ்ரொம் செய்யப்பட்டு ஆட்டமிழந்துவிட்டார். தற்போது 174 - 5 விக்கெற். :(

சிறீலங்கா 250 எடுத்து பந்து வீச்சையும் பீல்டிங்கையும் சரிவரச் செய்யும் என்றால் அவுஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும்..! :o

சிங்கள அணியினர் போட்டிகளில் தோல்வி அடையும் போது அந்த தோல்விக்காக தாம் சரியாக விளையாடவில்லை என்பதைத் தவிர வேறு ஏதாவது காரணங்களைத் தேடுவார்கள். (சிங்கள அணிக்கு சப்போர்ட் பண்ணும் ஆதரவாளர்களும் அப்படித்தான்)

"தேசபக்தன்" ரணதுங்க முன்னரெல்லாம்அனேகமாக நடுவர்களின் தலையில் தான் தோல்விகளைக் கட்டுவார்.

அப்டியில்லாவிட்டாலும் ஆடுகளம் சரியில்லை, பூவா தலையாவில் தோல்வி அதுவும் இல்லையென்றால் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை என்று ஏதாவது காரணம் தேடிப் பிடித்து விடுவார்கள்.

இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே அவர்கள் ஒரு காரணத்தைத் தயார் படுத்தி விட்டே போட்டியை ஆரம்பித்திருக்கிறார்கள்.

வாஸ் புரளி ஆகியோர் ஆடாதபடியால் தான் தோற்றோம் என்று தோற்றாலும் காரணம் சொல்லலாம் தானே.

ஆட்டம் அரம்பமாவதற்கு முன்னர் அவர்கள் இடம்பெறாததற்கு விளக்கம் சொன்ன போது வர்ணணையாளரின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார். (பொய் சொல்வதற்கான அங்க அடையாளம் அதுதானே)

மிக முக்கியமான ஆட்டங்கள் தொடர இருப்பதால் ஆடவில்லை. அயர்லாந்து போட்டியில் ஆடுவார்கள் என்ற அவரது காரணம் வர்ணனையாளர்களால் கிண்டலடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவுஸ்திரேலிய ஆட்டத்தை விட அயர்லாந்து ஆட்டம் முக்கியமானதா என்று அவர்கள் கூறிச் சிரிக்கிறார்கள்.

தற்போதை ரன் ரேட்டையும் ஆட்டத்தின் போக்கையும் பார்க்கும் போது இலங்கை 250 ரன்கள் எடுக்கும் சாத்தியமிருப்பதாக தெரியவில்லை. அது தவிர அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களும் இன்று விளையாடவில்லை. இதோ அடுத்த விக்கற்றும் போய்விட்டது :o

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவையும் அவுஸ்திரேலியாவையும் பொறுத்தவரை இந்தப் போட்டி உள்ளடங்க எனி வரும் போட்டிகள் பயிற்சி ஆட்டங்கள் போன்றதே. காரணம் இரு அணிகளும் அரை இறுதிக்குப் போவது உறுதியாகிவிட்டது..!

சிறீலங்கா வழமையான பந்து வீச்சாளர்களைப் பாவிக்காமல் அனுபவம் குறைந்த பந்து வீச்சாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு எதிராகப் பாவிப்பதில் சின்ன கிரிக்கெட் இராஜதந்திரம் இருக்கிறது..! இதில் குறை காண முடியாது..!

சிங்கள அணி என்ற கண்ணோட்டத்தில் கிரிக்கெட் அணியை அணுகின் இன்னும் பல குற்றங்கள் நம்ம கண்ணுக்குத் தெரியுமே தவிர.. யதார்த்தத்தை நோக்கக் கூட முனையாது..! :P :o

  • தொடங்கியவர்

சிறீலங்கா 250 எடுத்து பந்து வீச்சையும் பீல்டிங்கையும் சரிவரச் செய்யும் என்றால் அவுஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும்..! :o

இந்த இடம் ஒன்று தான் மிச்சம் இருந்தது இங்கயும் வந்துட்டீங்களோ?? :(

184 - 8 விக்கெற் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடம் ஒன்று தான் மிச்சம் இருந்தது இங்கயும் வந்துட்டீங்களோ?? :D

184 - 8 விக்கெற் :lol:

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாலும் எனி வரும் போட்டிகளில் சிறீலங்கா அவுஸ்திரேலியாவை திணறடிக்கக் கூடிய பலம் அணியிடம் இருக்கிறது..! அதைச் சொல்லத்தான் சில வீரர்களை இந்த கேமில இருந்து பின்வாங்கி வைச்சு அடிக்கிறது சிறீலங்கா..! இராஜதந்திரத்த புரிஞ்சுக்குங்க..! :P :o

ஏன் ஏன்.. நாங்க கிரிக்கெட் விளையாடக் கூடாதோ.. உங்களுக்கு கிரிக்கெட்டை ரீவிலதான் பார்க்க முடியும்.. நாங்க எல்லாம் ஆனந்தாவில கிரிக்கெட்டே விளையாடினவங்க.. தெரிஞ்சுக்கோங்க..! :D:(

  • தொடங்கியவர்

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாலும் எனி வரும் போட்டிகளில் சிறீலங்கா அவுஸ்திரேலியாவை திணறடிக்கக் கூடிய பலம் அணியிடம் இருக்கிறது..! அதைச் சொல்லத்தான் சில வீரர்களை இந்த கேமில இருந்து பின்வாங்கி வைச்சு அடிக்கிறது சிறீலங்கா..! இராஜதந்திரத்த புரிஞ்சுக்குங்க..! :P :o

ஏன் ஏன்.. நாங்க கிரிக்கெட் விளையாடக் கூடாதோ.. உங்களுக்கு கிரிக்கெட்டை ரீவிலதான் பார்க்க முடியும்.. நாங்க எல்லாம் ஆனந்தாவில கிரிக்கெட்டே விளையாடினவங்க.. தெரிஞ்சுக்கோங்க..! :lol::(

இலங்கை அணியின் மொத்த ஓட்டம் 250 ஓட்டங்களுக்கு உள்ளே இருப்பதனால் அவுஸ்ரேலியா அணியினரால் இலகுவாக வெற்றிபெற முடியும். :D

பண்டார ஆட்டமிழந்துள்ளார். இலங்கை 218-9

49.4 ஓவர்களில் அனைத்து விக்கற்களையும் இழந்து இலங்கை 226 ஓட்டங்களை பெற்றுள்ளது.

  • தொடங்கியவர்

Scorecard

slhj7.jpg

  • தொடங்கியவர்

Picture Of The Day

ssub9.jpg

(Photo:-Cricinfo)

Edited by யாழ்வினோ

அவுஸ்ரேலியா 7 விக்கற் வித்தியாசத்தில் இலங்கையை வென்றுள்ளது.

  • தொடங்கியவர்

227 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணியினர் 42.4 ஓவர்களில் 3 விக்கெற்றுக்களை மட்டும் இழந்து இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கில்கிறிஸ்ரும் கைடனும் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்த காரணத்தினால் அவர்களை தொடர்ந்து துடுப்பாடிய அணித்தலைவர் பொன்டிங் மற்றும் சைமன் ஆகியோருக்கு வெற்றி இலக்கை அடைவது இலகுவாக இருந்தது.

கந்தப்பு நித்திரையால எழும்புறதுக்கு இன்னும் 7 நிமிடங்கள் இருக்கின்றது ஆனால் ஆட்டம் முடிவடைந்து விட்டது. :)

Edited by யாழ்வினோ

சிறீ லங்கா தோல்வியை தோல்வி என்று ஒத்துக்கொள்ளவே வேண்டும்!

முரளி விளையாடவில்லை, வாஸ் விளையாடவில்லை, பரட்டை விளையாடாவில்லை எனவேதான் தோற்றோம், நாங்கள் செமி-பைனல், பைனல் விளையாடுவதற்கு பயிற்சி எடுத்தோம் என்று பசப்பு வார்த்தைகள் கூறி தமது இயலாமையை ஒப்பாரி வைக்கக்கூடாது.

உண்மையில் சிறீ லங்கா அவுஸ்திரேலியாவுடன் திரும்பவும் பைனலில் விளையாடினால், ஏதாவது குருட்டு லக் அடித்தால் ஒழிய மற்றும்படி சிறீ லங்கா மண்கவ்வுவது நிச்சயம்.

சிறீ லங்கா கீரிக்கெட்டு விளையாட்டில் அரசியலை கலந்து கீரிக்கெட்டு விளையாட்டில் புதிய பரிணாம வளர்ச்சியை தொடக்கிவைத்துள்ளது... வாழ்த்துக்கள்! :)

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா என்ன ஒரு வெற்றி என்ன ஒரு வெற்றி. அருமையான வெற்றீ அவுஸ்ரேலியாவுக்கு.... இப்படி சொல்லனும் எண்டு ஆசைப்பட்டு கிறிக்கட் மச்சை பார்த்தால் விழுந்தது தலையில் இடி. :)

தற்பொழுது விளையாடிக்கொண்டு இருக்கும் 3 (அவுஸ்ரேலியா, நியுசிலாந்த், இலங்கை,) அணிகளின் கனவு, குறிக்கோள் உலக கோப்பை இறுதியில் வெல்வதே அன்றி இன்றைய போட்டியில் வெல்வதோ தோற்பதோ அல்ல.

இன்றைய போட்டி அதிமுக்கியமான போட்டி இல்லை என்று அனைவருக்கும் தெரியும், காரணம் அடுத்த சுற்றுக்கு இரண்டு அணிகளும் தகுதி பெற்றுவிட்டன. ஆகையால் இன்றைய போட்டியில் வெல்வதாலோ அன்றி தோற்பதாலோ எந்த ஒரு தாக்கத்தையும் அதில் விளையாடிய அணிகளுக்கு ஏற்படுத்தப்போவதில்லை. இதை அறிந்த இலங்கை அணியினர் சாதுரியமான வகையில் தங்களின் முன்னனி வீரர்களான முரளி, வாஸ், மலிங்கா ஆகியோருக்கு ஓய்வு குடுத்துவிட்டு இந்த உலக போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு இந்த போட்டியில் விளையாட அனுமதித்தார்கள், அணியில் உள்ள வீரர்களை பார்த்த உடனெயே ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ அவுஸ்ரேலியா அணியினருக்கு கொண்டாட்டமே, ஏனெனில் தங்களை வாட்டி எடுக்கும் வீரர்கள் இல்லை என்பதனால்.

ஒரு போட்டியின் போது உண்மையில் துடுப்பாட்ட வீரர்களைவிட பந்து வீச்சாளர்களுக்குத்தான் வேலை பழு அதிகம், அத்துடன் பந்துவீச்சாளர்களுகளைத்தான் காயம், நோ என்ற வியாதிகள் ஆக்கிரமிக்கும். இன்றைய போட்டியில் இலங்கை அணி தனது முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு குடுத்து அவர்களை பாதுகாத்து கொண்டதுடன், விளையாடாத மற்றைய வீரர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கின்றது.

ஆனால் மறுபக்கம் அவுஸ்ரேலியாவினை நோக்கினால் " ஒட்டகம்" மக்ராத், "அலி" பிராக்கன், ஹொக், கிளார்க் உட்பட முக்கியமான வீரர்கள் இன்றைய போட்டியிலும் விளையாடினார்கள். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள், அடுத்த சுற்றிலும் இவர்களெ பந்துவீசப்போகிறார்கள், இறுதிப்போட்டிக்கு சென்றாலும் இவர்களே வீசுவார்கள். இதனால் தொடர்ந்து விளையாடிவரும் இவர்கள் இறுதி போட்டியில் தங்களின் வேகத்தை காண்பிப்பார்களா என்பது கேள்விக்குறியே, ஏனெனில் இன்றைய போட்டியில் இறுதியாக வந்த இலங்கை அணி வீரர்கள் மக்ராத், ரைட் ஆகிய அவுஸ்ரேலிய வீரர்களின் பந்துவீச்சை நாலா பக்கமும் அடித்து நொறுக்கினார்கள்.

சென்ற மாதம் அதாவது உலக கோப்பை ஆரம்பமாவதற்கு முன்னம் நடைபெற்ற பல போட்டிகளில் அவுஸ்ரேலியா, நியுசீலாந்த், மற்றும் இங்கிலாந்து அணியிடம் மிக மோசமாக தோற்றது யாவரும் அறிந்ததே. இந்த தோல்விக்கு அந்த அணி வீரர்களே தங்களின் நிர்வாகத்தை குற்றம் சுமத்தினார்கள். எவ்வாறெனில் தங்களுக்கு ஓய்வு தராமல் தொடர்ந்து விளையாடினமையாலேயே இந்த தோல்வி வந்தது என்றும் இதற்கு கண்டனத்தை வேறு தெரிவித்தும் இருந்தார்கள். இதனால்த்தான் அவுஸ்ரேலிய முதல் தர வேக பந்துவீச்சாளர் பிரட் லீயை உலகப்போட்டியில் இழக்க செய்தது.

இப்படி தொடர்ந்து விளையாடிவரும் அவுஸ்ரேலிய அணியினர் அடுத்த சுற்றில் நியுசிலாந்த், இலங்கையை மீண்டும் சந்திப்பார்கள், அப்பொழுது தெரியும் தங்கள் பந்துவீச்சாளர்களின் நிலமைமையை.

பந்துவீச்சாளர்கள் இப்படியே சோர்வடைந்து இறுதிப்போட்டியில் கோட்டைவிட்டுவிட்டால் பின்பு புலம்புவது அவுஸ்ரேலியாவிற்கு கை வந்த கலை. :P :)

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நித்திரையால எழும்புறதுக்கு இன்னும் 7 நிமிடங்கள் இருக்கின்றது ஆனால் ஆட்டம் முடிவடைந்து விட்டது. :)

நித்திரைவிட்டு எழும்பி தொலைக்காட்சியைப் பார்க்க, அதில் அமெரிக்கா வெயினியாவில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற படுகொலை பற்றிய செய்திகள் போய்கொண்டிருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

முரளி,வாசு, மளிங்க போன்றவர்கள் இலங்கை அணியில் விளையாடதமைக்கு இப்படியும் இருக்கலாம் என்று சில காரணங்களை கிறிக் இன்போ இணையத்தளத்தில் நேரடி வர்ணனையில் பதிந்த சில கருத்துக்கள்.

Sreeram Jaydev: "I think Jayawardene has rested Vaas and Murali because of two reasons: 1) He does'nt want his best bowlers to lose their confidence knowing Hayden,Gilchrist and Ponting & Co. will demoralize them ahead of crucial games. 2) If SL lose, they have a good excuse to bounce back to. Sounds ridiculous though but we have to admit our mentality had been such!"

RK says: "Jayawardene may not be too much worried about the result of this match. Sri Lanka might be happy settling with second or third place and can avoid Australia in the semi's. Graeme Smith never wanted to face Australia in the semis and most probably they might end up playing them."

Tito in Florida emails me: "Sri Lanka used the same maneuver against India. They dropped Murali and Vaas for the recent tour of India. Then hit them with the two in the WC and knocked them out. Here they have a chance to lull Oz into complacency against their B attack and then really come at them in the final."

மூன்று பந்துவீச்சாளர்கள் இன்று விளையாடவிட்டாலும், ஏன் இலங்கை அணி மார்வன் அத்தப்பத்துவை ஒரு துடுப்பாட்ட வீரருக்காகப் பயன்படுத்தவில்லை. எனென்றால் ஒரு துடுப்பாட்ட வீரர் காயம் காரணமாக அடுத்த சுற்றில் அல்லது இறுதிப்போட்டியில் விளையாடாத போது, அத்தப்பத்து பயிற்சி இல்லாததினால் இழகுவாக ஆட்டமிழக்க வாய்ப்பு உண்டு.

தற்பொழுது விளையாடிக்கொண்டு இருக்கும் 3 (அவுஸ்ரேலியா, நியுசிலாந்த், இலங்கை,) அணிகளின் கனவு, குறிக்கோள் உலக கோப்பை இறுதியில் வெல்வதே அன்றி இன்றைய போட்டியில் வெல்வதோ தோற்பதோ அல்ல.

இன்றைய போட்டி அதிமுக்கியமான போட்டி இல்லை என்று அனைவருக்கும் தெரியும், காரணம் அடுத்த சுற்றுக்கு இரண்டு அணிகளும் தகுதி பெற்றுவிட்டன. ஆகையால் இன்றைய போட்டியில் வெல்வதாலோ அன்றி தோற்பதாலோ எந்த ஒரு தாக்கத்தையும் அதில் விளையாடிய அணிகளுக்கு ஏற்படுத்தப்போவதில்லை. .

நான் கருத்துக்களத்தில் உலக கிரிக்கெற் கிண்ணம் சம்பந்தமான இந்த பகுதியில் சில காரணங்களினால் தொடர்ந்து பங்களிப்பதில்லை என்று ஒதுங்கியிருந்தவன். உங்கள் கருத்தை பார்த்தபின் மீண்டும் வந்திருக்கிறேன்.

விளையாட்டில் அரசியல் கலப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் விளையாட்டின் உண்மையான அர்த்தம் நேர்மையாக விளையாடுவதுதான். தோற்பதும், வெல்வதும் வேறு விஷயம். திறமையுடன் சற்று அதிஷ்டமும் இருந்துவிட்டால் வென்று விடலாம். ஆனால் ராஜதந்திரம் எல்லாம் விளையாட்டில் வரக்கூடாது என்று நினக்கிறேன்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி தனது முழுப்பலத்துடன் விளையாடியிருக்க வேண்டும். அப்படி விளையாடி தோற்றிருந்தாலும் அவமானமில்லை. காலையில் யார் விளையாடுகிறார்கள் என்று பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கத்தான் வெண்டும். அடுத்த போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். லசித் மாலிங்க முதல் போட்டியிலேயே விளையாடாதவர். அவர் கணுக்காலில் காயப்பட்டார் என்று சொன்னார்கள். அதை ஒத்துக்கொண்டாலும் அத்தனை போட்டிகளிலும் விளையாடிய வாஸ், முரளீதரன் இருவரையும் விட்டு விளையாட முனைந்தது Sportsmanship இல்லை. அவர்களும் விளையாடி பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருக்கலாம். சிலவேளை வென்றுகூட இருக்கலாம். விளையாடத்தானே வந்தோம். பிறகென்ன..மறைப்பு..ஒழிப்பு.

லசித் மாலிங்கவை திடீரென்று கொண்டு வந்து ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்களாம் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். எனக்கு சிரிப்பாக இருந்தது. அவர்கள் லசித் மாலிங்கவின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவில் மிகஆறுதலாக விட்டுப் பார்த்திருப்பார்கள். தங்களை தயார் செய்திருப்பார்கள். போதக்குறைக்கு அவர்களது பந்துவீச்சாளர் Tait இன் பந்துவீச்சும் ஏறக்குறைய மாலிங்கவின் பந்துவீச்சைப் போன்றதுதான். நடந்த போட்டியில் Tait இன் பந்துக்கு இவர்கள் அதிகமான ஓட்டங்கள் எடுக்கமுடிந்ததே மாலிங்கவின் பந்துவீச்சை பயிற்சியில் இலங்கை துடுப்பாட்டக்காரர்கள் எதிர்கொண்டு பழகியதினால்தான் என்று நம்புகிறேன். எனவே லசித் மாலிங்க ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியாது.

உலகின் முன்னணி அணியாக சொல்லப்பட்ட தென்னாபிரிக்க அணி பங்களாதேஷ் அணியிடமும், நியூசிலாந்து அணியிடமும் தோற்றது. முழுப்பலத்துடன் விளையாடினார்கள். தோற்றார்கள். அதில் அவமானமொன்றில்லை.

இலங்கை அணி சனத் ஜெயசூரியாவைச் சுற்றியே இருக்கிறது என்பது பல தடவைகளில் நிரூபணமாகி விட்டது. அவர் அடித்தால் அனேகமாக வெற்றி. அவர் ஆட்டமிழந்தால் மற்றவர்கள் வரிசையாக தொடர்வதும் சில விதிவிலக்குகள் தவிர தொடர்கதையாகி விட்டது. 195 - 5 என்று இருக்கும். திடீரென்று 209 க்கு சகலரும் ஆட்டமிழப்பார்கள்.

ஆஸ்திரேலிய அணி ஆட்டக்காரர்கள் திமிர் பிடித்தவர்கள் என்று பலமுறை எழுதினேன். இன்று அதை வாபஸ் (தமிழ்ச் சொல் அல்ல) வாங்கிக் கொள்கிறேன். ஒரு பலம் வாய்ந்த அணிக்கு எதிராக விளையாடும்போது தனது முன்னணி வீரர்களை "துண்டு" காவ வைத்த இலங்கை அணி செய்தது திமிர் மாத்திரமல்ல நேர்மையான விளையாட்டுமல்ல.

இதற்கு நீங்கள் யாரும் பதில் எழுதினாலும் நான் பார்வையாளனாக வந்து பார்ப்பேனே தவிர பதில் எழுத மாட்டேன். அத்தனை கசப்பாக இருக்கிறது. நன்றி.

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.