Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

அனுபவம் மிக்க தலைவர் பிளமிங் சிறப்பாக தனது அணியை வழி நடத்தி இலங்கை அணியை மண் கவ்வ வைப்பார் என்பது உறுதி. இலங்கை அணிக்கு "ரண்ணர் அப்" நிலை கூட கிடைக்காது நாளை மறு தினம் உங்கள் எல்லாருடைய நிலை கோவிந்தா தான். :lol:

யாழ் வினோ ஆசைக்கு பேசுறார் பேசட்டும் எதுக்கு அவரோட கணவ குழப்புவான் :unsure:

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

அனுபவம் மிக்க தலைவர் பிளமிங் சிறப்பாக தனது அணியை வழி நடத்தி இலங்கை அணியை மண் கவ்வ வைப்பார் என்பது உறுதி. இலங்கை அணிக்கு "ரண்ணர் அப்" நிலை கூட கிடைக்காது நாளை மறு தினம் உங்கள் எல்லாருடைய நிலை கோவிந்தா தான். :)

நீங்கள் நடுவராக இருந்தால் சிலவேளை அது நடந்திருக்கும்.. ஏன் அந்த வீண் கற்பனை.. பொறுத்திருங்கள் தலைவா.. கோவிந்தா யார் சொல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம்.. ஒருத்தர் சட்டையை பிய்ச்சுக்கொண்டு நடு றோட்டிலை நிற்கப்போறார். பாவம்..

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஒகெ எனி நான் சொல்ல தொடங்கலாமா??? :)

அரையிறுதியில் இலங்கை அணி வெல்லும்.

மற்றைய போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெல்லும்.

ஆகவே இறுதிப்போட்டியில் அவுஸ்ரேலியா - இலங்கை.

அவுஸ்ரேலிய அணி தற்போதைய அணிகள் பலம் வாய்ந்த அணி என்றாலும் இலங்கை இருந்து இருந்துவிட்டு அவுஸ்ரேலியாவுக்கு அல்வா குடுக்கும் அணியாக திகழ்கின்றதை யாராலும் மறுக்கமுடியாது.

லசிந்த மலிங்க, முரளி என்ற பந்துவீச்சாளர்கள் துணையுடன், ஜெயசூர்யா, சில்வா, சங்கக்காரா, ஜெயவர்த்தனே உதவியுடன் இந்த உலக கோப்பையை கைப்பற்றும். இது எனது ஆசையல்ல, நிகழப்போகும் நிகழ்வு. :(

ஆக மொத்தத்தில் டன் சரியாக சொல்லி இருக்கின்றார், அவருக்கு யாழ் சிறந்த கணிப்பாளர் விருதை வழங்குவார்கள் (என்று நினைக்கிறேன்). ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன், காரணம் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியமையால் மனவருத்தம் அடைந்து அதை தட்டிக்கழிப்பேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தோல்வி அடைந்தால் சந்தோஷம். நிச்சய்ம் நியூஸிலாந்து வெல்லும்.

இலங்கை தோல்வி அடைந்தால் சந்தோஷம். நிச்சய்ம் நியூஸிலாந்து வெல்லும்.

கல்கியின் "பொன்னியின் செல்வன்" தொடர்கதையில் பொன்னியின் செல்வனும் வந்தியதேவனும் ஆருயிர் நண்பர்கள். எனவே உங்களோடு முரண்பட எனக்கு விருப்பமில்லை வந்தியத்தேவரே!

இருந்தாலும் நீங்கள் சந்தோசம் பெறுவது சந்தேகம்தான்..நியூசிலாந்து வெல்லாது எனபதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன செய்வது விதி வலியது.

:o

சிங்கள தேசத்திற்காக குரல்கொடுக்கும் தமிழ் ரசிகர்களே!

உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து என் போன்றவர்களின் நியாயமற்ற சிங்கள எதிர்ப்புக் கருத்துக்களை தவிடுபொடியாக்குங்கள்

நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22716&hl=

யாழ்கள போட்டியில் முதன்மை வகிக்கும் நீங்கள் எந்த அணி வெல்லும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்,

:rolleyes:

  • தொடங்கியவர்

நாளை நியூசிலாந்து - இலங்கை அணிகளிடையே நடைபெறவுள்ள அரை இறுதி ஆட்டத்தில் கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டள்ள நடுவர்கள்.

Rudi Koertzen (South Africa)

Simon Taufel (Australia)

நாளை மறுதினம் அவுஸ்ரேலியா - தென்னாபிரிக்கா அணிகளிடையே நடைபெறவுள்ள அரை இறுதி ஆட்டத்தில் கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டள்ள நடுவர்கள்.

Steve Bucknor (West Indies)

Aleem Dar (Pakistan)

2007 உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டள்ள நடுவர்கள்.

Steve Bucknor (West Indies)

And

கீழுள்ள இருவரில் யாராவது ஒருவர் (உலக கிண்ண இறுதி போட்டியில் பங்குபற்றும் நாட்டை சேர்ந்த நடுவர் இறுதி போட்டியில் கடமையில் ஈடுபட முடியாது என்பது ஐசிசி யின் விதிகளில் ஒன்று)

Rudi Koertzen (South Africa) [அவுஸ்ரேலியா இறுதிப்போட்டியில் பங்குபற்றினால்]

Simon Taufel (Australia) [தென்னாபிரிக்கா இறுதிப்போட்டியில் பங்குபற்றினால்]

Edited by யாழ்வினோ

யாழ்கள போட்டியில் முதன்மை வகிக்கும் நீங்கள் எந்த அணி வெல்லும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்,

:rolleyes:

யாழ்கள போட்டியில் முதன்மை வகிக்கும் நீங்கள் எந்த அணி வெல்லும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்,

:rolleyes:

அதையேன் கேக்கிறியள். நான் இந்தியா எண்டு சொல்லி இரு;ககிறன்

ம்ம்ம் நான் இந்திய ஆதரவாளன் இல்லை. ஆனால் மே.தீவுகள் ஆடுகளங்களை வைச்சு சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்டதும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பாகத் துடுப்பாடக் கூடியதுமான அணிக்கு வாய்ப்பதிகம் எண்டு நினைச்சன்.

ஆக இலங்கையை விட்டு இந்தியா வரும் எண்ட நினைச்சன்.

SO அரவிந்தன் அண்ணாவின்ரை போட்டியிலை இனி எனக்கு இறங்குமுகம் தான். :angry:

என்ன இப்படி சொல்லிட்டீங்க.. உங்களுக்கு ஜே..ஜே..ஜே சோல்லி கொண்டிருக்கிறேன்.. கையை விட்டிட்டீங்களெ.

:lol:

யாழ்கள உறுப்பினர் மணிவாசகனுக்கு ஜே..ஜே..ஜே

:o

:huh::(

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் யாழ்களப் போட்டியில் போட்டியாளர்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படாது. ஆனால் இலங்கை அணி வெற்றி பெற்றால் யாழ்வினோ தொடர்ந்து முதலிடம் இருந்தாலும் அதிக புள்ளிகள் பெற்ற யாழ்வினோ, மணிவாசகனோடு வானவிலும் இணைவார்.

  • தொடங்கியவர்

இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் பங்குபற்றும் நியூசிலாந்து அணி வீரர்களின் விபரம் (Likely XI)

1 Stephen Fleming (capt), 2 Peter Fulton, 3 Ross Taylor, 4 Craig McMillan, 5 Scott Styris, 6 Jacob Oram, 7 Brendon McCullum (wk), 8 James Franklin, 9 Daniel Vettori, 10 Jeetan Patel, 11 Shane Bond.

இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் பங்குபற்றும்இலங்கை அணி வீரர்களின் விபரம் (Likely XI)

1 Sanath Jayasuriya, 2 Upul Tharanga, 3 Kumar Sangakkara (wk), 4 Mahela Jayawardene (capt), 5 Chamara Silva, 6 Tillakaratne Dilshan, 7 Russel Arnold, 8 Chaminda Vaas, 9 Muttiah Muralitharan, 10 Dilhara Fernando, 11 Lasith Malinga.

  • தொடங்கியவர்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜெயசூரியாவை தான் குறிவைத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் ஆரம்ப பந்து வீச்சாளர் சான் பொண்ட் கூறியுள்ளார். அத்துடன் இலங்கை அணி துடுப்பாடும் போது ஜெயசூரியாவை வேளைக்கு வழியனுப்பி வைப்பதன் முலம் இலங்கை அணியினை 200 ஓட்டங்களுக்குள் மடக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Shane Bond, New Zealand's fast bowler, has announced his intention to target Sanath Jayasuriya, the hard-hitting Sri Lankan opening batsman, in their semi-final clash in Jamaica.

"If we can get Sanath out early we can probably limit them to 200 runs so it's my job, especially in this game, to get him out and we've always identified him as a key wicket," Bond told the Jamaican Gleaner.

-Cricinfo-

சோ இன்றைக்கு பெரியவர் பாடு கோவிந்தா தான். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்கியின் "பொன்னியின் செல்வன்" தொடர்கதையில் பொன்னியின் செல்வனும் வந்தியதேவனும் ஆருயிர் நண்பர்கள். எனவே உங்களோடு முரண்பட எனக்கு விருப்பமில்லை வந்தியத்தேவரே!

பொன்னியின் செல்வரே நமக்குள் ஏன் வீண் பிரச்சனை இன்னும் சில மணி நேரம் தான் அதன் பின் யார் வெல்கிறார்கள் எனப்பார்ப்போம். அப்புறம் உங்கள் தேவியார் வானதி நலமாக இருக்கிறாரா? :icon_idea:

மேற்கிந்தியத்தீவுகளில் நடை பெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட்தொடரில் இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட் டம் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகின்றது.

உலகக் கிண்ண போட்டியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ள ஆட்டமாக இந்தப் போட்டி கருதப்படுகின்றது.

இந்தப் போட்டியில் நியூஸி லாந்து அணி தனது வழமையான வீரர்களுடன் களம் இறங்குகிறது.

இலங்கையணியில் வேகப்பந்து வீச்சாளரான லசிந்த மலிங்க காயங் காரணமாக இடம்பெறவில்லை யென்று கூறப்படுகின்றது. அவருக்கு பதிலாக முன்னாள் அணித்தலை வர் மார்வன் அத்தப்பத்து இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி யீட்டும் அணி இறுதி ஆட்டத் தில் பங்குகொள்வதற்குத் தகுதி

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையணியில் வேகப்பந்து வீச்சாளரான லசிந்த மலிங்க காயங் காரணமாக இடம்பெறவில்லை யென்று கூறப்படுகின்றது. அவருக்கு பதிலாக முன்னாள் அணித்தலை வர் மார்வன் அத்தப்பத்து இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலிங்கா வேகப்பந்து வீச்சாளார், அத்தபத்து துடுப்பாட்டக்காரர். எப்படி வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் விளையாட அனுமதிப்பார்கள்?. ஆனால் மலிங்க இன்றைய போட்டியில் விளையாட உள்ளார் என செய்திகள் அறிந்தேன்

மலிங்கா வேகப்பந்து வீச்சாளார், அத்தபத்து துடுப்பாட்டக்காரர். எப்படி வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் விளையாட அனுமதிப்பார்கள்?. ஆனால் மலிங்க இன்றைய போட்டியில் விளையாட உள்ளார் என செய்திகள் அறிந்தேன்

பொறுத்திருந்து பார்க்கலாம் கந்தப்பு என்னும் 5மணித்தியாலத்தில் தெரியும்

எனது கணிப்புபடி ஆர்னல்டை தூக்கிவிட்டு அத்தபத்துவை அணியில் இணைக்கலாம்

பொன்னியின் செல்வரே நமக்குள் ஏன் வீண் பிரச்சனை இன்னும் சில மணி நேரம் தான் அதன் பின் யார் வெல்கிறார்கள் எனப்பார்ப்போம். அப்புறம் உங்கள் தேவியார் வானதி நலமாக இருக்கிறாரா? :lol:

என் ஆருயிர் நண்பரே.. வானதி நலமாகவே இருக்கிறாள்.. ஆரம்பத்தில் அடிக்கடி மயக்கம் போட்டு விழுவாள் என்று என் சகோதரி குந்தவைதேவி சொல்வார்.. என்ன.. குந்தவை என்றவுடன் கடந்த காலம் ஞாபகம் வருகிறதா ?

[வந்தியத்தேவனும் உள்ளிருந்தவர்களைப் பார்த்தான். இல்லை; உள்ளேயிருந்தவர்களில் ஒருவரைத் தான் பார்த்தான். அதுகூட இல்லை; குந்தவை தேவியை அவன் முழுமையாகப் பார்க்கவில்லை.அவளுடைய பொன் முகத்தை மட்டுமே பார்த்தான். முகத்தையாவது முழுமையும் பார்த்தானோ என்றால், அதுவும் இல்லை! வியப்பினால் சிறிது விரிந்திருந்த அவளுடைய பவளச் செவ்வாயின் இதழ்களைப் பார்த்தான்; கம்பீரமும் வியப்பும் குறும்புச் சிரிப்பும் ததும்பியிருந்த அவளுடைய அகன்ற கண்களைப் பார்த்தான். கண்ணிமைகளையும் கரிய புருவங்களையும் பார்த்தான்; குங்குமச் சிவப்பான குழிந்த கன்னங்களைப் பார்த்தான். சங்கையொத்த வழுவழுப்பான கழுத்தைப் பார்த்தான். இவ்வளவையும் ஒரே சமயத்தில் தனி தனியாகப் பார்த்தான். தனித்தனியாக அவை அவன் மனத்தில் பதிந்தன. ]

:lol::lol:

மற்றது என்ன. கிரிக்கற் போட்டியா.. அது தன் பாட்டில் நடக்கட்டும்.. நாங்கள் எங்கள் கதையை கவனிப்போம்.. இப்படி கிரிக்கற்றைப்பற்றி ஒருவார்த்தையாவது எழுதாவிட்டால் இந்த பகுதியிலிருந்து எங்களை தூக்கி விடுவார்கள்..வேறென்ன நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

:rolleyes::rolleyes:

Edited by Ponniyinselvan

அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான வெற்றியால் நாம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை

அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிச் சாதனையால் தங்களுக்கு கவலையில்லை என்று தென் ஆபிரிக்காவின் துணை கப்டன் கலிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2 ஆவது அரை இறுதி ஆட்டத்தில் நாளை அவுஸ்திரேலிய - தென் ஆபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அவுஸ்திரேலிய அணி தோல்வியை சந்திக்காமல் அரை இறுதிக்கு முன்னேறியிருக்கிறது. தென் ஆபிரிக்க அணி, லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிடமும், `சுப்ப - 8' சுற்று ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷிடமும் தோல்வியுற்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்த நிலையில் தென் ஆபிரிக்க அணித் துணைக் கப்டன் கலிஸ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது;

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது. அத்தோடு, தோல்வியை சந்திக்காமல் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் சில தடுமாற்றங்களை சந்தித்து முன்னேறியிருக்கிறோம். லீக் போட்டிகளில் நடந்ததுக்கும் அரை இறுதிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

அவுஸ்திரேலிய அணியை பொறுத்த மட்டியில் நல்ல நம்பிக்கையுடன் களமிறங்கும். அதேநேரத்தில் நாங்களும் நம்பிக்கையுடன் தான் இருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அரையிறுதி ஆட்டம் முக்கியமானது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதில் பதற்றமில்லாமல் நம்பிக்கையுடன் ஆடினால் எங்களால் வெற்றி பெறமுடியும். முந்தைய ஆட்டங்களில் நாங்கள் நெருக்கடியை சந்தித்துத்தான் முன்னேறினோமென்றார்.

அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஹைடன் கூறுகையில், `கடந்த லீக் ஆட்டத்தில் நாங்கள் தென் ஆபிரிக்க அணியை தோற்கடித்தோம். எங்களை பார்த்தால் அவர்களுக்கு பயமிருக்கிறது. இதனை அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது' என்றார்.

தினக்குரல்

நியுசிலாந்தின் திறமைவாய்ந்த இளம்வீரர் றொஸ் ரெய்லர் உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை சோபிக்கவில்லை.

தனது முழுத்திறமையையும் காட்டும் நாளாக இன்றைய நாள் அமைய வேண்டும் என்று சிங்கள எதிர்ப்பாளர்களின் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் இலங்கை அணி முதலில் துடுப்பாடும் என அறிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

இலங்கை அணி 13 ஓட்டங்களுக்கு 1 விக்கெற் ஜெயசூரியா 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்துள்ளார். :lol:

Edited by யாழ்வினோ

ஜயசூரியா துலைஞ்சான்

சங்கக்காரா செத்தான்

தறங்க தாண்டான் (111 -3)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.