Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை

Featured Replies

புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை

 

புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

Vidya_case.jpg

இதன்படி குறித்த வழக்கினை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட ட்ரயலட்பார் முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

இதன்படி குறித்த வழக்கினை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக குறித்த ட்ரயலட்பார் நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20259

இதன் மூலம் இந்த மிக மோசமான செயலைப்புரிந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளை காப்பாற்றும் முயற்சி தற்போதைக்கு முறியடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கில் ஆக்கிரமித்திருக்கும் சிங்கள-பௌத்த போலீஸ்-முப்படைப் பயங்கரவாதிகள் தமிழ் மண்ணில் இயங்கும் சட்டவிரோத கும்பல்களின் நெருங்கிய நண்பனாகவும், சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கும் சக்திகளாகவும், சட்டவிரோத கும்பல்களை பாதுகாக்கும் மோசமான அரச பயங்கரவாத கும்பல்கள் என்பதை தமிழர்கள் அறிவார்கள்.

போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் வியாபாரம், கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, வாள் வெட்டு கும்பல்கள், சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் கடத்தல், சட்டவிரோத மண்கடத்தல், சட்டவிரோத கால்நடைகளை கடத்தல், சட்டவிரோத விபச்சாரம் போன்ற பல சட்டவிரோத செயற்பாடுகளின் பின்புலமாகவும் ஊக்குவிப்பு சக்திகளாகவும் இருப்பது சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் சம்பளத்தில் இயங்கும் சிங்கள-பௌத்த போலீஸ்-முப்படைப் பயங்கரவாதிகள் என்பதை தமிழர்கள் அறிவார்கள்.

இதில் இடைத்தரகர்களாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களும் தமிழர்களும் உள்ளனர் என்பதையும் தமிழர்கள் அறிவார்கள். இவர்களினூடாக பெருமளவு கப்பத்தை பலவழிகளில் சிங்கள-பௌத்த போலீஸ்-முப்படைப் பயங்கரவாதிகள் பெற்றுவருகின்றனர்!

அண்மையில் அக்கராயன்குளம் பகுதி போலீஸ் பொறுப்பதிகாரியாக இருந்து கொண்டு அப்பகுதியில் 3 வருடங்களாக சகல சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்குவித்துவரும் சிங்கள-பௌத்த பயங்கரவாதி லீசிங் முறையில் இரண்டு வாகனங்களை வாங்கி அவற்றின் தவணைப் பணங்களை மேற்படி சட்டவிரோத கும்பல்கள் செலுத்தி வரும் விடயம் வெளிச்சத்துக்கு வந்திருந்தது.
 
குறித்த சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதி பற்றி மைத்திரி வரை முறைப்பாடுகள் சென்றும் அந்த பயங்கரவாதி இன்றுவரை சுதந்திரமாக அந்தப் பகுதியில் தனது சட்டவிரோத பணியில் மும்மரமாக இருப்பது மைத்திரி-ரணிலின் நல்லாட்சிப் பயங்கரவாதத்துக்கு ஓர் உதாரணம்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவு 

இதில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வாய்மூடி மௌனியாக இருப்பதன் மூலம் அவரது இரட்டை வேடம் உறுதியாகிறது!

 

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை : மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் முன்பாக யாழில் வழக்கு விசாரணை

I
வித்தியா படுகொலை : மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் முன்பாக யாழில் வழக்கு விசாரணை
 

 

புங்குடு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்கை யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் மூன்று நீதி­ப­தி­கள் தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) முன்­னி­லை­யில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்­கான பரிந்­து­ரை­யைத் தலைமை நீதி­ய­ர­சர் பிரி­ய­சாத் டெப் வழங்­கி­னார்.

வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன், திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர் ஆகி­யோர் தீர்ப்­பா­யத்­தின் நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதனை அடுத்து மிக விரை­வில் வழக்கு விசா­ர­ணை­கள் இடம் பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாட­சா­லைக்­குச் சென்­ற­வேளை கடத்­தப்­பட்டு கூட்டு வன்­பு­ணர்­வின் பின்பு படு­கொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அரச சாட்சியாக ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் உறுதியுரை செய்தார். மேலும் இருவர் வழக்கோடு தொடர்புபட்டவர்கள் அல்லர் என்ற அடிப்படையில் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய 9 சந்தேகநபர்களும் கடந்த இரண்டு வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. வழக்கில் 23 பேர் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.

9 சந்தேகநபர்களுக்கும் எதிரான குற்றப்பத்திரிகை கடந்த 12ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தற்போது மேல் நீதிமன்றப் பதிவாளரின் பாதுகாப்பில் இருப்புப் பொட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தீர்ப்பாய முறையில் நடத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியிருந்தது. அதன்படி பெரும்பான்மை இன மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கொழும்பில் அதனை நடத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் யாழ்ப்பாணம் தீவக மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்து வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தமிழ் பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை யாழ்ப்பாணத்தில் நடத்த வலியுறுத்தி அடையாள உணவு ஒறுப்பு உள்ளிட்ட கவனவீர்ப்புப் போராட்டங்கள் புங்குடுதீவு மக்களாலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாலும் நடத்தப்பட்டிருந்தன.

http://uthayandaily.com/story/3916.html

On 5/23/2017 at 2:29 PM, நவீனன் said:

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக

இளஞ்செழியனிடம் இருந்து மற்றவர்கள் பலதையும் கற்றுக்கொள்ளும் நல்ல சந்தர்ப்பம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.