Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் இராஜதந்திர ரீதியில் தோற்றதாலேயே போராட்டம் தோல்வியடைந்தது – மாவை!

Featured Replies

விடுதலைப்புலிகள் இராஜதந்திர ரீதியில் தோற்றதாலேயே போராட்டம் தோல்வியடைந்தது - மாவை!

விடுதலைப்புலிகள் இராஜதந்திர ரீதியில் தோற்றதாலேயே போராட்டம் தோல்வியடைந்தது – மாவை!

இராஜதந்திர ரீதியாக ஜ.நா சபையில் உலகநாடுகளால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை நாம் ஏற்கவேண்டும் . இல்லாவிட்டால் நாம் தனிமைப் படுத்தப்பட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் போரியல் ரீதியில் பல வெற்றிகளை பெற்றாலும் இராஜதந்திர ரீதியில் வெற்றிபெறாததாலேயே இறுதியில் தோல்வியை சந்தித்தனர் என இலங்கை தமிழர் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

சுவிஸ் செந்தமிழ்ச் சோலை அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்குதல்,  ஊக்குவிப்பு தொகை வழங்கும்  நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வீரசிங்கம் மண்டப முதலாம் மாடியில்  இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடகால விடுதலைப் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து எதிர்காலத்தில் விடுதலை பெற்ற மக்களாக தங்களை தாங்களே ஆள்கின்றோம் என்ற  உனர்வோடு வாழ்வதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் பாடுபடுகின்றன. இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்கள்  வசதிவாய்போடு இல்லாவிட்டாலும் அங்கு  வியர்வை சிந்தி  உழைத்தே தாயகத்தில் உள்ள  உறவுகளுக்கு  உதவிகளை செய்கின்றார்கள். புலம்பெயர்  உறவுகளிடம் உதவிபெறும் சிறுவர்கள் கல்வியில் முன்னேறி குடும்பத்தையும் கடந்து சமூதாயத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

யுத்தத்தில்  90,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் அற்ற நிலையில் வாழ்வதை நாம்  அறிந்திருக்கின்றோம். மரணம்  நிச்சயம்  என்பதை  உணர்ந்தும் ஈழ விடுதலைப் போரில் தம்மை  அர்ப்பணித்த பல  உறவுகளை  இழந்து விட்டோம். மீதமுள்ள   போராளிகளின் வாழ்வியலை பாதுகாக்க அவர்களுக்கான வேலைவாய்புகளை உருவாக்க வேண்டும்.  உதவிகளை  வழங்க வேண்டும்  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினோம். எமது கோரிக்கைகளை பரீசிலீப்பதாக பிரதமர்  தெரிவித்திருக்கிறார்.

தென்னிலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு இங்கு  உள்ள பெண்களுக்கு  வேலைவாய்பு வழங்கப்போவதாக தெரிவித்தனர். நாங்கள்  அதை மறுத்து விட்டோம். யுத்த காலத்தில்  இராணுவ கட்டுபாட்டில் பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை நாம்  அறிந்திருக்கின்றோம். அதனால் தான்  அதனை தடுத்தோம். யாழ்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு   ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான தொழிற்சாலைகளை ஆரம்பிக்குமாறு அரசை கோரியுள்ளோம்.

ஒரு வேளை  உணவு கூட  முழுமையாக உண்ணாது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு  அனுப்பமுடியாத பொருளாதார சூழலில் எமது மக்கள்  இருப்பதை நாம்  அவதானித்து  இருக்கின்றோம். நீங்கள்  வாக்களித்து  கொண்டுவந்த நல்லாட்சி மக்களின் வாழ்வியலை  உயர்துவற்கு எதுவிதமான நடவடிக்கைகளையும்  எடுக்கவில்லை  என நாம் கவலை கொள்கின்றோம்.

இராஜதந்திர ரீதியாக ஜ.நா சபையில் உலகநாடுகளால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை நாம் ஏற்கவேண்டும் . இல்லாவிட்டால் நாம் தனிமைப் படுத்தப்பட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் போரியல் ரீதியில் பல வெற்றிகளை பெற்றாலும் இராஜதந்திர ரீதியில் வெற்றிபெறாததாலேயே இறுதியில் தோல்வியை சந்தித்தனர். இத்தனை  உயிர்களை நாம்  எதற்காக இழந்தோமோ அதை பெற  புலம்பெயர்  உறவுகள்  உதவ வேண்டும்.

ஐ.நாவின் ஆராய்ச்சிப்படி கடந்த  20 வருடங்களாக  இலங்கையில் பிறக்கும் குழந்தைகள் உள, உடல்  பாதிப்புகளுடன் பிறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான குழந்தைகளை வளமாக்கி முன்னுக்கு கொண்டுவர புலம்பெயர்  உறவுகள்  உதவ வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=69077

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலி மன்னன் ....
பண்டாரவன்னியனின் பழைய கதைகளை ஏன் இவர்கள் பேசிக்கொண்டு 
திரிகிறார்கள் ?

தேர்தல் வந்தால் வெட்டுறம் புடுன்கிராம் என்கிறது.
பின்பு அவர் தோற்றார் இவர் தோற்றார் என்கிறது.

உங்களின் ராஜ ராஜ ராஜ தந்திரம் என்ன கிழித்தது ?
என்று மட்டும் பேசினால் இப்போதைக்கு போதும். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு முந்தியும்.. பிந்தியும் அரசியலில் இருக்கும் இவரும்.. இவரது சகபாடிகளும் செய்த ராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தந்த ஒரு வெற்றியைச் சொல்லிட்டு.. இவர் இந்தக் குற்றச்சாட்டை.. புலிகள் மீது சுமத்தட்டும் பார்க்கலாம்.

இப்பவும் புலிகளின் ராஜதந்திரத்தால்.. உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பதுங்கி இருந்து கொண்டு தான்.. புலிகளைப் பற்றி அரசல் புரசலாக் கதை சொல்லி.. சிங்களவனை.. ஹிந்தியனை மகிழ்வித்தும்.. சிங்களவன் முன் கூனிக் குறுகியும் நின்று தன் சொந்த சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.  இதுதான் இவர்கள் சுய சுகபோக இராசதந்திரம்.

புலிகள் இதனைச் செய்ய முற்பட்டிருந்தால்.. இப்பவும் ராஜாக்கள் போல வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அவர்கள் மக்களின் உரிமைக்காக விடுதலைக்காக.. உண்மையாக இருந்ததால்.. தோற்க நேரிட்டது. அதுவும் சில சர்வதேச போக்கியல் மாற்றங்களால்.. நிகழ்ந்தது. புலிகளின் உள்ளூர் ராஜதந்திரம் தோற்கவில்லை.. ஆனால் சர்வதேச ராஜதந்திரத்தில்.. புலிகள் சிக்க வைச்சு சிதறடிக்கப்பட்டார். அவர்களின் தோல்விக்குப் பின்னால்.. சம்பந்தன்.. மற்றும் இவரின் சுய சுகபோக.. இராசதந்திரமும்... உதவி நின்றது. ஒட்டுக்குழுக்களுக்கு ஈடாக.. என்பதே உண்மை ஆகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் இராஜதந்திர ரீதியில் தோற்றதாலேயே போராட்டம் தோல்வியடைந்தது - மாவை!

கருமை மீசைக்காரன் போற போக்கை பாத்தால் பண்டாரவன்னியன் விட்ட இராஜதந்திர பிழையாலைதான் ஈழத்தமிழினம் இந்த நிலைக்கு வந்தது  எண்டு சொல்லுவார் போலை கிடக்கு....

உவையள் அப்பிடி சொல்லக்கூடிய ஆக்கள் :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.