Jump to content

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்


Recommended Posts

Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 
 

யுவகிருஷ்ணா - 25

“உங்களைச் சந்திக்க முஸெல்லா சம்மதித்து விட்டார்...” தொலைபேசியில் எமிலோவின் குரலைக் கேட்டதுமே, மோரா தன் வயதுக்கு மீறிய துள்ளலை வெளிப்படுத்தினார். “எப்போ, எங்கே அவரை போய் பார்க்கணும்?” “அதெல்லாம் நீங்க விருப்பப்பட்டபடி நடக்காது மோரா. எப்போ வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். முஸெல்லா காத்து மாதிரி. தயாரா இருங்க...” உடனடியாக கொலம்பியாவுக்கு தகவல் போனது.
10.jpg
ஒட்டுமொத்த கார்டெல்களின் சார்பாக பாப்லோ, மோராவுக்கு தங்கள் சார்பாக முஸெல்லாவிடம் பேசவேண்டிய விஷயங்களை விலாவரியாக விளக்கினார். “என்ன இருந்தாலும் அவன் அமெரிக்கன். பார்த்து பேசு. பொருளை மட்டும்தான் நாம் கொடுப்போம். அமெரிக்க எல்லையில் பெற்றுக் கொள்ள வேண்டியதும், சந்தைக்கு கொண்டு போக வேண்டியதும் முஸெல்லாவின் பொறுப்பு.

அதன் பிறகு சி.ஐ.ஏ.வோ, எஃப்.பி.ஐயோ... யாராக இருந்தாலும் அவர்களை எதிர்கொள்ள வேண்டியது அவன் தலையெழுத்து...” “சரி. அவனுக்கு கமிஷன் என்ன சதவிகிதம்?” “கமிஷனே கிடையாது...” “..?” “பார்ட்னர்னு சொல்லு. கொலம்பிய கார்டெல்கள் அத்தனை பேருக்கும் இனி அவன்தான் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க ஏஜெண்ட். மொத்த லாபத்தில் அவனும் நாமும் சரிபாதியாக பிரிச்சுக்கலாம்...” பொதுவாக கமிஷன் விஷயத்தில் கறாராக பேசும் பாப்லோவே லாபத்தை சமபங்காக பிரித்துக்கொள்ளச் சொல்லுகிறாரே என்று ஆச்சரியப்பட்டார் மோரா.
10a.jpg
“வேற வழியில்லை மோரா. நம்மோட பிசினஸ் அமெரிக்காவைத்தான் பிரதானமா நம்பியிருக்கு. நம்மோட லாபத்தை குறைச்சுதான் முஸெல்லா கிட்டே பிசினஸ் பண்ணப் போறோம். ஆனா, முன்பைவிட கூடுதலா சரக்கை அனுப்ப முடியும். எல்லாரும் நம்ம புரொடக் ஷனை டபுள் ஆக்கிக்க வேண்டியதுதான். அங்கே மார்க்கெட் பண்ணுற ரிஸ்க்கை ஃபுல்லா அவன் மட்டுமே ஏத்துக்கணும் என்பது மட்டும்தான் நம்ம கண்டிஷன்.

புரியுதா?” பாப்லோ, யதார்த்தத்தை உணர்ந்தவர். அவ்வளவு பெரிய அமெரிக்க அரசை போதை மாஃபியாக்கள் எதிர்கொள்ள முடியாது என்று அவருக்குத் தெரியும். பிசினஸ் விஷயத்தில் அவருக்கு எந்தவித ஈகோவும் கிடையாது. முடிந்தால் அமெரிக்க அரசாங்கத்தோடுகூட அவர் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளத் தயாராகத்தான் இருந்தார். அதென்ன கொலம்பிய அரசா, சொந்த மக்களிடமே போதையை விற்று அரசு நடத்துமளவுக்கு கையாலாகாமலா போய்விட்டது? இதெல்லாம் நடந்து மிகச்சரியாக ஒரு வாரம் ஆகியிருக்கும்.

மோரா, ஒரு கால்பந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். முஸெல்லாவிடமிருந்து அழைப்பு வரும் என்கிற நம்பிக்கையையே அவர் இழந்துவிட்டார். மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் கோகோ கோலா விற்றுக் கொண்டிருந்த ஒரு பையன் அவர் அருகில் வந்தான். அவர் காதில் மெதுவாக கிசுகிசுத்தான். “உங்களுக்காக நுழைவாயில் அருகே கருப்புநிற பென்ஸ் கார் காத்துக் கொண்டிருக்கிறது...” இவரது பதிலை எதிர்பார்க்காமல் அவன் பாட்டுக்கு விறுவிறுவென்று கிளம்பிவிட்டான்.

மோராவுக்கு முதலில் திகிலாக இருந்தது. ஏனெனில், அமெரிக்க எஃப்.பி.ஐ. ஏஜெண்டுகளும்கூட தங்களுடைய வேலைகளுக்கு கருப்புநிற கார்களையே அப்போது பயன்படுத்துவார்கள். இருந்தாலும், இது தனக்கான முஸெல்லாவின் அழைப்பாகத்தான் இருக்குமென்று நினைத்தார். பாதுகாவலர்களை அழைத்து தன்னை தூரமாக நின்று கண்காணித்துக் கொண்டே இருக்கும்படி கட்டளையிட்டார். மெதுவாக நுழைவாயிலுக்கு வந்தார்.

படகு மாதிரி அந்த பென்ஸ் நின்றிருந்தது. என்ஜின் உறுமிக் கொண்டிருந்தது. டிரைவர் இருக்கையில் இருந்தவன் சீனன். அவனைப் பார்த்ததும்தான் இவர் ஆசுவாசமானார். சீனர்கள், நிழல் வேலைகளுக்காக பயன்படுத்தப்படுபவர்கள். நிச்சயமாக அமெரிக்க போலீஸ் அல்ல என்று உணர்ந்து ரிலாக்ஸாக நடந்தார். காருக்கு அருகே சென்றார். கருப்பு ஃபிலிம் ஒட்டப்பட்டிருந்த காருக்குள் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மெதுவாகத் தட்டினார்.

சட்டென்று கதவு திறந்தது. இரண்டு கைகள் முரட்டுத்தனமாக அவரை இழுத்து காருக்குள் அடைத்தது. கதவு சாத்தப்பட, சட்டென்று கார் வேகம் எடுத்தது. தனக்கு என்ன ஆனது என்பதைக்கூட உணரமுடியாத நிலையில் மோராவின் கண்கள் இறுக்கமாகக் கட்டப்பட்டன. இடுப்பில் செருகியிருந்த அவருடைய ரிவால்வர் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. சாக்ஸில் ஒளித்து வைத்திருந்த கத்தியும் கைப்பற்றப்பட்டது. கைகளால் தடவி, அவரது உடல் முழுவதையும் சோதனையிட்டார்கள்.

“நீங்க யாரு?” “...” “நீங்க எத்தனை பேரு?” “...” “என்னை எங்கே கொண்டு போறீங்க?” “...” “ப்ளீஸ், யாராவது சொல்லுங்க...” மோராவின் கன்னத்தை ஒரு கை கண்டிப்போடு தட்டியது. “உஷ்...” கார் எங்கோ க்ரீச்சிட்டு திரும்பும் சப்தம். சில நிமிடங்கள் கழித்து கார் நின்றது. கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே மோரா நடத்திச் செல்லப்பட்டார். ஏதோ கட்டிடத்துக்குள் நுழைவதை மட்டும் அவரால் உணர முடிந்தது. அடுத்து லிஃப்ட் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. அவர் திணிக்கப்பட்டார். லிஃப்ட் மேலெழும்புவதை உணர்ந்தார்.

சில நொடிகளில் லிஃப்ட் நின்றது. கதவு திறக்கும்போது ஹெலிகாஃப்டர் சப்தம். ‘ஆஹா... முஸெல்லா உஷாரான ஆள்தான் போல. அவன் எங்கிருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சுத்தலில் விட்டு சந்திக்கிறான். அதிருக்கட்டும். தன்னை இப்படி வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வது முஸெல்லாவின் ஆட்கள்தானா?’ குழப்பத்தோடு அவர் இருந்தபோதே ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டார். வானத்தில் பறப்பதை உணர்ந்தார்.

தனக்கு அருகில் யாரோ அமர்ந்திருப்பதை தொட்டுத் தெரிந்து கொண்டவர், “நீங்கதான் முஸெல்லாவா?” என்று கேட்டார். “உஷ்...” இங்கும் அதே பதில்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இவரது கையைப் பிடித்து இறக்கினார்கள். உப்புவாடையோடு ஈரக்காத்து. அனேகமாக, தான் ஏதோ கப்பலில் இறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தார். அவரது கண்கட்டு அவிழ்க்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய நான்கு காவலர்கள் வந்தார்கள்.

மீண்டும் அவரது உடலை சோதித்தார்கள். ஆயுதம் எதுவும் இல்லை என்பதை அறிந்ததும் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அந்த அறையே ஓர் ஆடம்பரமான மதுவிடுதி போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. துள்ளலான இசை காதைக் கிழித்தது. அங்கே இளம்பெண்களோடு தாடிவைத்த ஒரு கோட்டு சூட்டு மனிதர் ஈடுகொடுத்து ஆடிக் கொண்டிருந்தார். இவரை அழைத்துச் சென்றவர்கள், ஒரு சோஃபாவில் அமர வைத்தார்கள்.

நடனம் ஆடிக் கொண்டிருந்தவர், சட்டென்று இவரை கவனித்தார். சைகையில் இவரையும் நடனம் ஆட அழைத்தார். இவர் மறுத்துவிட்டு நகம் கடிக்க ஆரம்பித்தார். ஒரு ஷாம்பெயின் பாட்டில் மோராவுக்கு முன்பாக வைக்கப்பட்டது. டூ பீஸ் உடையணிந்த அழகி ஒருத்தி வந்து கிளாஸில் ஊற்றிக் கொடுத்தாள். மதுக்கோப்பையை வாயருகே கொண்டுசென்றவருக்கு தயக்கம். விஷம் கலந்திருக்குமோ? சட்டென்று இசை நின்றது. ஆடிக் கொண்டிருந்தவர்கள் வேக வேகமாக அங்கிருந்து நகன்றார்கள். அந்த மனிதர் மட்டும் இவரையே உற்றுப் பார்த்துக் கொண்டு எதிரில் வந்து நின்றார்.

முழுமையாக ஒரு நிமிடம் மவுனத்திலேயே கரைந்தது. திடீரென்று பெருங்குரலெடுத்து அவர் ‘ஹா… ஹா...’வெனச் சிரிக்க, மோராவுக்கு ஏகத்துக்கும் கோபம் தலைக்கேறிக்கொண்டே போனது. “நீங்க யாரு? எதுக்கு என்னை இப்படி வலுக்கட்டாயமா இழுத்துக்கிட்டு வந்திருக்கீங்க?” “முஸெல்லாவைப் பார்க்கணும்னு விருப்பப்பட்டீங்களாமே?” “ஆமாம். உங்களுக்கு என்ன?” “நீங்க இப்போ முஸெல்லாவைத்தான் பார்த்துக்கிட்டிருக்கீங்க..!” அந்த நொடியிலிருந்து கொலம்பிய கார்டெல்களின் குடுமி முஸெல்லாவின் கரங்களில் மாட்டிக் கொண்டது.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

  • Replies 70
  • Created
  • Last Reply
Posted
 

காட் ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 26

ஒட்டுமொத்த கொலம்பிய கார்டெல்களின் காட்ஃபாதராக இந்த சூழலில்தான் முடிசூட்டிக் கொண்டார் பாப்லோ எஸ்கோபார். தொழிலில் போட்டியாக இருந்த கார்டெல்களும் இவரைச் சார்ந்தே இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள். யார் என்ன பிசினஸ் செய்யவேண்டும், எவ்வளவு லாபம் ஈட்ட வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கக்கூடிய மோனோபாலியாக போதை உலகின் பேரரசன் ஆனார் எஸ்கோபார். யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் எஸ்கோபாரின் ஆட்கள்தான் ஸ்பாட்டுக்கு வந்து நின்றார்கள். அமெரிக்காவில் ஓரளவுக்கு துவண்டு போயிருந்த பிசினஸ், மீண்டும் முஸெல்லா போன்றவர்களின் பார்ட்னர்ஷிப்பால் தழைத்தோங்கத் தொடங்கியது.
18.jpg
சந்தை விநியோகத்தில் ஆற்றலையும், காலத்தையும் செலவழிக்க வேண்டிய தேவை குறைந்ததால், தயாரிப்பில் ஜரூராக ஈடுபட்டனர் போதை தயாரிப்பாளர்கள். இதன் பலன் எஸ்கோபார் போன்றவர்களுக்கு மட்டுமின்றி, அத்தனை கார்டெல்களுக்கும் அவரவருக்கு உரிய பங்கு நியாயமான அளவில் கிடைத்தது. சரக்கை ஏற்றினோமா, அதற்கு கொடுக்கப்பட்ட காசை எண்ணினோமா என்று சும்மா இருந்துவிடவில்லை எஸ்கோபார். போதை ஏற்றுமதி டெக்னாலஜியை மேலும் நவீனகரமான முறையில் நடத்த நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஆராய்ச்சியில் கிடைத்த புதிய வழிமுறைகளை மற்ற கார்டெல்களுக்கும் பகிர்ந்து கொண்டார்.

அரசாங்கங்களின் கண்களில் எப்படியெல்லாம் மண்ணைத் தூவமுடியுமென்று அமெரிக்காவில் இருந்து அவருக்கு அட்வைஸ் இப்போது தாராளமாகக் கிடைத்தது. இந்த ஆலோசகர்களுக்கு லட்சக்கணக்கில் சன்மானம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் போதையின் வடிவமே மாறத் தொடங்கியது. கொலம்பிய காடுகளில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையங்களில் இரவும் பகலுமாக பல்லாயிரக்கணக்கான கெமிக்கல் என்ஜினியர்கள் இதற்காக பணியாற்றத் தொடங்கினார்கள். என்ஜினியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது, வேறு நாடுகளில் இருந்தவர்களுக்கு கொழுத்த சம்பளம் கொடுத்து ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் போடப்பட்டது.

இவ்வாறாக குடிசைத்தொழில் கணக்காக இருந்த போதை பிசினஸ், எஸ்கோபாரின் திறமையான நிர்வாகத்தால் பக்கா கார்ப்பரேட் பிசினஸாக மாறியது. அப்போது உலகமெங்கும் பிரபலமாக இருந்த கோலா பானத்தின் வடிவில் கோகெயினை மாற்றும் முயற்சியில் பாப்லோ வெற்றி பெற்றார். கப்பல்களிலும், விமானங்களிலும் அனுப்பப்படும் சரக்கு கோலாவாகத்தான் இருக்கும். அதை வெளிநாடுகளில் இறக்குமதி செய்பவர்கள், அங்கிருக்கும் லேப்களில் பவுடராக பண்பு மாற்றம் செய்து கொள்ள முடியும். இதற்கான தொழில்நுட்பம் உலகளாவிய போதை மாஃபியாக்களுக்கு பாப்லோவால் இலவசமாகவே வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் எலெக்ட்ரானிக்ஸ் புரட்சி ஏற்பட்டிருந்தது. எனவே, தங்களிடமிருந்த பழைய டிவி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை எடைக்கு போட்டுவிட்டு புதுசு புதுசாக ஜப்பானிய தயாரிப்புகளை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பழைய டிவி, ஃப்ரிட்ஜையெல்லாம் குத்துமதிப்பாக ஒரு தொகை போட்டு பனாமா நாட்டில் வைத்திருந்த ஒரு டம்மி கம்பெனி வாயிலாக பாப்லோ இறக்குமதி செய்து கொண்டிருந்தார். அவற்றுக்கு பாலிஷ் போட்டு புதுசு மாதிரி பிராண்ட் பெயர் ஒட்டி தயார் செய்துவிடுவார். டிவிக்குள் எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் ஒன்றுமே இருக்காது. அசலாக புது டிவி மாதிரியே இருக்கும்.
18a.jpg
அதற்குள்ளாக சுமார் 40 கிலோ கோகெயினை அடைத்து ஷிப்பிங் செய்து அனுப்பிவிடுவார். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் கஸ்டம்ஸுக்கு ‘சம்திங்’ கொடுத்து இதுமாதிரி டன் கணக்கில் சரக்குகளை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார். பாப்லோவின் கெமிக்கல் என்ஜினியர்கள் செய்த மகத்தான சாதனை என்பது பிளாஸ்டிக் ஷீட் வடிவில் கோகெயினை உருமாற்றம் செய்ததுதான். பார்ப்பதற்கு பிவிசி பைப் போலவோ, நீளமான பிளாஸ்டிக் அட்டை போலவோதான் இருக்கும். பிளாஸ்டிக் ஏற்றுமதியாக இதை அமெரிக்காவுக்கு அனுப்பி, அங்கிருக்கும் லேப்களில் காய்ச்சி உருக்கி வடிகட்டி பவுடராக மாற்றிக் கொள்ளலாம்.

இதைப் போலவே சிலைகளின் உருவிலும் போதையைக் கடத்தி எல்லா அரசாங்கங்களின் கண்களிலும் மண்ணைத் தூவினார் பாப்லோ. சோதனை செய்யும் அதிகாரிகளை ஏமாற்றினாலும் சில சமயங்களில் மோப்ப நாய்களிடம் சரக்குகள் மாட்டிக் கொண்டன. நாய்கள் மோப்பம் பிடிக்காதவாறு வாசனைத் திரவியங்களைக் கலந்து அந்தப் பிரச்னையையும் வெற்றிகரமாக முறியடித்தார்கள். இதற்காக சரக்குகளுக்கு தரப் பரிசோதனை செய்யும் ஓர் அதிகாரியை பாப்லோ ஸ்பெஷலாக நியமித்தார். மர்க்குவேஸா என்ற பெயர்கொண்ட அந்த அதிகாரியும் ஒரு நாய்தான். அமெரிக்க ராணுவத்தில் மோப்ப நாய்களுக்கு அதிகாரி அந்தஸ்து வழங்கப்படும் பாணியை இந்த விஷயத்தில் கடைப்பிடித்தார்.

சிலையாகவோ, பிவிசி பைப்பாகவோ உருமாற்றப்பட்ட போதை சரக்கை மர்க்குவேஸா மோப்பம் பிடிக்கும். அதனால் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால், அந்த யூனிட் சரக்கு ஷிப்பிங் செய்யப்படாமல் அப்படியே நிறுத்தப்படும். மர்க்குவேஸால் மோப்பம் பிடிக்க முடியாத சரக்குகள் மட்டும் ‘QC OK’ செய்யப்படும். இந்த டெக்னிக் பக்காவாக ஒர்க்கவுட் ஆக, மர்க்குவேஸாவுக்கு துணையாக ஏராளமான நாய்கள் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டன. எனினும், இந்த மாதிரி உருமாற்றும் டெக்னிக்குகளில் கணிசமான அளவு கோகெயின் சேதாரம் அடைந்தது. உதாரணத்துக்கு 100 கிராம் கோகெயினை ஒரு சிறிய சிலை வடிவில் அமெரிக்காவுக்கு அனுப்பினால், அங்கிருக்கும் லேப்களில் இதை மீண்டும் போதைப் பொருளாக மாற்றும்போது 70 கிராம்தான் மிஞ்சும்.

மேலும் ஒரு ஷிப்மென்டுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் கிலோ வரைதான் அனுப்ப முடிந்தது. கொலம்பிய கார்டெல்களுக்கு குவிந்த ஆர்டர்களில் நான்கில் ஒரு பங்கு தேவையை மட்டும்தான் இவர்களால் நிறைவு செய்ய முடிந்தது. பாப்லோவின் மெதிலின் கார்டெல்லைப் பொறுத்தவரை ஒரு மாதத்துக்கு 20 ஆயிரம் கிலோ வரை தயாரிக்க முடியும் என்கிற கட்டமைப்பு இருந்தது. இதை மேலும் விரிவாக்கம் செய்து தயாரிப்பு அளவை ஐந்து மடங்கு உயர்த்த திட்டமிட்டார் பாப்லோ. அவ்வாறு தயாரித்தாலும் அதை ஷிப்மென்ட் செய்வதில் பிரச்னை இருந்தது.

அப்போதுதான் ஓர் அட்டகாசமான கண்டுபிடிப்போடு பாப்லோவிடம் வந்தார் ஐரோப்பிய கெமிஸ்ட் ஒருவர். அதாவது மின்சார டிரான்ஸ் ஃபார்மருக்குள் மருந்தை வைத்து கடத்துவது. பெரிய இண்டஸ்ட்ரியல் டிரான்ஸ்ஃபார்மர்களை வாங்கி, அதற்குள் இருக்கும் எலெக்ட்ரிக்கல் சமாச்சாரங்களை அகற்றிவிட்டு அப்படியே கோகெயினை பவுடர் வடிவில் ஏற்றுவது. மோப்ப நாய்களிடமிருந்து தப்பிக்க கோகெயின் சிறப்பான பிளாஸ்டிக் பேக்கிங்கில் உள்ளே வைக்கப்படும். அமெரிக்காவில் இருக்கும் முஸெல்லா போன்றோரின் ஒப்புக்குச் சப்பாணி நிறுவனங்கள், கொலம்பியாவில் இருக்கும் பாப்லோவின் ஏதோ ஒரு லுலுவாயி ஃபேக்டரிக்கு இத்தனை எண்ணிக்கையில் எங்களுக்கு இவ்வளவு நாளைக்கு இண்டஸ்ட்ரியல் டிரான்ஸ்ஃபார்மர் வேண்டும் என்று சீரியஸாகவே ஆர்டர் கொடுக்கும்.
18b.jpg
இவர்களும் அனுப்புவார்கள். அங்கே சரக்கை மட்டும் எடுத்துக்கொண்டு, நீங்கள் அனுப்பிய டிரான்ஸ்ஃபார்மர் சரியில்லை என்று திருப்பி அனுப்புவார்கள். இவர்கள் மறுபடியும் சரக்கை ஏற்றி, டிரான்ஸ்ஃபார்மரைப் பழுது பார்த்துவிட்டோம் என்று சொல்லி அனுப்புவார்கள். ஒரு டிரான்ஸ்ஃபார்மருக்கு சுமார் நாலாயிரம் கிலோ கோகெயின் என்கிற அடிப்படையில் ஒரு கப்பலுக்கு பத்து டிரான்ஸ்ஃபார்மர் கணக்கில் முன்பைவிட அதிக சரக்கை இந்த முறையில் கடத்த முடிந்தது.  தங்களுடைய சொந்த சரக்கை மட்டுமின்றி, மற்ற கார்டெல்களுக்கும் பாப்லோ இந்த முறையில் கூரியர் சர்வீஸ் வசதி செய்து கொடுத்து கமிஷன் வாங்கிக் கொண்டார்.

எவ்வளவு பெரிய காட்ஃபாதராக உயர்ந்தாலும் கடைசிவரை சில்லறை கமிஷன் வேலைகளையும் அவர் செய்துகொண்டே இருந்தார் என்பதுதான் அவரது சிறப்பு. ஒரே ஒரு முறை ஏற்பட்ட பிரச்னையில் அற்புதமான இந்த லாஜிஸ்டிக்ஸ் முறையை எஸ்கோபார் கைவிட வேண்டி வந்தது. மொத்த சரக்கையும் ஏற்றிக் கொண்டு கடலில் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது வெனிசூலா அரசின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடுக்கடலில் வழக்கமான சோதனைக்கு அந்த கப்பலை நிறுத்தினார்கள்.

கப்பலில் இருந்த கேப்டன், மாலுமி உட்பட அத்தனை பேரும் ‘டைட் போதை’யில் இருந்து தொலைத்தார்கள். போதையில் முன்னுக்குப் பின்னாக அவர்கள் உளறிக் கொட்ட, இந்த டிரான்ஸ்ஃபார்மர் போதை கடத்தல் ஃப்ராடு வெளிச்சத்துக்கு வந்தது. அவர்கள் யதேச்சையாக நடந்த சோதனையில்தான் மாட்டினார்கள் என்று போதை உலகமே கருதினாலும்கூட, எஸ்கோபாருக்கு மட்டும் யாரோ உள்கை தம்மை போட்டுக் கொடுப்பதாக உள்ளுக்குள் பல்பு எரிந்தது.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 
 

யுவகிருஷ்ணா - 27

போதையும், பணமும் கொழித்துக் கொண்டிருந்த எஸ்கோபாரின் சாம்ராஜ்யத்தில் பெண்களே இல்லையா, கவர்ச்சி மருந்துக்கும் இந்தத் தொடரில் இல்லையே என்று பலரும் நினைக்கலாம். பணம் கொழிக்கும் இடங்களில் பெண்கள் இல்லாமலா? எஸ்கோபாரிடம் ஏழைகளுக்கு உதவும் கல்யாண குணம் ஏகத்துக்கும் இருந்தது என்பதை கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். அவருடைய நெகட்டிவ்வான முகம், பெண்கள் தொடர்பானது.

அதிலும், இளம் பெண்கள். பதினாலு முதல் பதினேழு வயதுக்குள் இருக்கும் டீன் ஏஜ் பெண்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய அந்த நாட்களை நினைவுகூர்ந்து சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார் மரியா (பெயர் மாற்றப்பட்டது) என்கிற பெண். அப்போது மரியா டீன் ஏஜில் இருந்தார். அவருடைய தோழி ஒருத்தி பாப்லோவின் மெதிலின் கார்டெல்லோடு தொடர்பில் இருந்தாள். அவள் ஒருமுறை மரியாவைக் கேட்டாள்.
27.jpg
“ஒரே ஓர் இரவு. ஒரு விஐபியோடு நீ கழித்துவிட்டால் போதும். வாழ்க்கை முழுமைக்குமான செல்வத்தை சேர்த்துவிடலாம்...” மரியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “அப்படியானால், நீ அதை செய்து வளம் பெறலாமே?” என்று கேட்டார். அதற்கு அவள் சொன்ன பதில் அதிர்ச்சிக்குரியதாக இருந்தது. கார்டெல்லில் பணிபுரியும் அவளது காதலனால் அவள் கன்னித்தன்மையை இழந்துவிட்டாளாம். ‘கன்னி’களுக்கு மட்டும்தான் அந்த ஆஃபர் வழங்கப்படுமாம்.

மரியா மறுத்துவிட்டார். தோழியும், அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது போலவே காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல மரியாவோடு பழகிக் கொண்டிருந்தாள். ஒருநாள் மரியாவும், தோழியும் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு திருப்பத்தில் மூன்று ஆண்கள் தோழிக்காக காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் அவளுடைய காதலன். அவர்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தார்கள். மரியா சற்று தூரத்தில் தன்னுடைய தோழிக்காக காத்து நின்றுகொண்டிருந்தார்.

அவர்கள் திடீரென மரியாவை நோக்கி வேகமாக வந்தார்கள். ஒருவன் வாயைப் பொத்தினான். மற்ற இருவரும் அவரைத் தூக்கிக்கொண்டு, அவர்கள் வந்த காருக்கு அருகே போனார்கள். இதையெல்லாம் தோழி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தாள். மரியா திமிற முயற்சிக்க, அவர்களில் ஒருவன் சொன்னான். “கத்தாதே. எங்களோடு ஒத்துழைக்க மறுத்தால், உன் குடும்பத்தில் ஒருவர்கூட உயிரோடு இருக்க முடியாது!” காருக்குள் திணிக்கப்பட்ட மரியா, அழுதுகொண்டே இருந்தார்.

புறநகரில் இருந்த சிறிய கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக கார் நின்றது. மரியாவை அவர்கள் இழுத்துச் சென்றார்கள். உள்ளே ஓர் வயதான பெண்மணி இருந்தார். அவர் மரியாவுக்கு ஆறுதல் சொன்னார். குளிக்க வைத்து புதிய துணிமணிகளை அணிந்து கொள்ளச் சொன்னார். மேக்கப் போட்டு விட்டார். மூவரில் ஒருவன் மரியாவை விதவிதமாக படமெடுத்தான். அவ்வளவுதான். காரிலேயே வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.
27a.jpg
படமெடுப்பதற்கா இவ்வளவு வன்முறை என்று மரியா நினைத்தார். அன்று படமெடுத்ததின் விளைவை ஆறு மாத காலம் கழித்துதான் சந்தித்தார். இந்த முறையும் மரியா, அதே போல காரில் கடத்தப்பட்டார். தனக்கு மேக்கப் போட்டுவிட்டு படமெடுத்து அனுப்பி விடுவார்கள் என்றுதான் நினைத்தார். அதுவேதான் நடந்தது. ஆனால் - இம்முறை படமெடுத்துவிட்டு, மரியாவை காரில் வேறு ஒரு பங்களாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே, மிகவும் வயதான ஜப்பானிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார்.

அவரது அறையில் மரியாவைத் தள்ளி... ஒத்துழைக்க மறுத்த மரியாவுக்கு வலுக்கட்டாயமாக போதை செலுத்தப்பட்டது. தன்னுடைய கன்னித்தன்மையை, யாரென்றே தெரியாத ஒரு காம மிருகத்திடம் இழந்தார் மரியா. இது ஒரே ஒரு மரியாவின் கதை அல்ல. ஆயிரக்கணக்கான இளம்பெண்கள், இம்மாதிரியாகச் சீரழிந்தார்கள். போதை பிசினஸ் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரும் அயல்நாட்டு டான்கள், ‘கன்னிப் பெண்களாக’ தங்களுக்கு வேண்டுமென்று விரும்புவார்களாம்.

ஆரம்பத்தில், அவர்கள் மனம் கோணக்கூடாது என்றுதான் எஸ்கோபார் போன்ற கார்டெல் உரிமையாளர்கள் இதுபோன்ற ‘மாமா வேலை’களைச் செய்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் இதுவே போதை கடத்தலைவிட அதிகம் லாபம் கொடுக்கும் தொழிலாக உருவெடுத்தது. முதன்முறை மரியா கடத்தப்பட்டு, மேக்கப் போடப்பட்டு படமெடுக்கப் பட்டார் இல்லையா? அவருடைய படங்கள் ஏகத்துக்கும் பிரிண்ட் போடப்பட்டு ஆல்பமாக்கப்பட்டு சந்தையில் உலவியது.
27b.jpg
அந்த ஆல்பத்தை பார்க்கும் பெரும் தொழிலதிபர்களும், போதை பிசினஸ் மகாராஜாக்களும் ஏலத்தில் கலந்து கொண்டார்கள். அதிகபட்சத் தொகை கேட்ட அந்த ஜப்பானிய கிழவருக்குத் தான் அடித்தது யோகம். டீன் ஏஜ் பெண்களின் கன்னித்தன்மைக்குத்தான் பெரிய தொகை விலையாகக் கிடைக்கும். அதற்குப் பிறகும் அவர்களிடம் கொஞ்சநஞ்சம் இளமை மிச்சமிருக்கும் வரை மொத்தமாக பாலியல் ரீதியாக சுரண்டப்படுவார்கள். பிரதிபலனாக மாதாமாதம் ஏதோ ஒரு தொகை சம்பளம் மாதிரி கொடுக்கப்படும்.

சில குறிப்பிட்ட பெண்களை எஸ்கோபாரே கூட பதம் பார்த்ததாக தகவல்கள் உண்டு. ஒரு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டால் அவளை நிரந்தரமாக தன்னுடைய ஆசைநாயகிகளில் ஒருவராக சேர்த்துக் கொள்வார். அவளுக்கு என்று தனியாக வீடு எடுத்துக் கொடுத்து, வேண்டிய வசதிகளைச் செய்து, அவ்வப்போது இளைப்பாற வருவார்.

போதை தொழில் கொடுக்கல் வாங்கலில் எவ்வளவோ ரிஸ்க்குகளை ரஸ்க் மாதிரி அனாயாசமாக சாப்பிட்ட எஸ்கோபார், ஒருமுறை இந்த கன்னி பிசினஸில் மாட்டி மயிரிழையில் போலீசாரிடமிருந்து தப்பினார். நன்கு பயிற்சியளிக்கப்பட்ட ஒரு பதினாறு வயதுப் பெண்ணை போலீசே செட்டப் செய்து, மெதிலின் கார்டெல்லுக்குள் அனுப்பி வைத்தது. அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் எஸ்கோபாரின் ஆட்கள் பலரும் சிக்கினார்கள்.

எஸ்கோபார் முக்கியஸ்தர்களுக்குக் கொடுத்த ஒரு பெரிய பார்ட்டியில் இதுபோல ஏராளமான பெண்களை அழைத்துப் போயிருந்தார்கள். போலீசின் உள் கையான அந்தப் பெண் கொடுத்த தகவலையடுத்து பார்ட்டி நடந்த இடம் கமாண்டோக்களால் சுற்றி வளைக்கப்பட்டது. மெதிலின் போதை விஐபிக்கள் பலரும் கைது செய்யப்பட்ட அந்த சம்பவத்தில், எஸ்கோபார் மட்டும் எப்படியோ தப்பித்து விட்டார். எஸ்கோபாருக்கு கிடைத்த தகவல்களின் படி இந்தப் பெண்களில் யாரோ ஒருவர்தான் தகவல் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தது. எனவே சந்தேகத்தின் பேரில் ஒவ்வொரு பெண்ணாக கொல்லப்பட்டார்கள்.

அந்த சம்பவத்தின்போது ஒரே நேரத்தில் மெதிலின் நகரின் வெவ்வேறு பகுதிகளில் சுமார் ஐம்பது இளம்பெண்களின் சடலங்களை போலீஸ் கைப்பற்றியது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மாணவிகள், டிவி நடிகைகள், மாடல்கள், அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் போன்ற வகைமைகளில் அடங்கியவர்கள் அவர்கள்.

எஸ்கோபார் கும்பலின் போதைத் தொழிலைக் கூட ஏதோ ஒருவகையில் சகித்துக் கொண்ட போலீஸ், இந்த கன்னி பிசினஸைக் கண்டு கொதித்தெழுந்தது. கார்டெல்களின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்களை பல்வேறு ஆபரேஷன்கள் நடத்தி மீட்டார்கள். அந்தப் பெண்களில் சிலர் கொடுத்த தகவல்களை வைத்தே எஸ்கோபாரின் நடவடிக்கைகள் குறித்த விஷயங்களை போலீஸ் அறிந்து கொள்ள முடிந்தது.

எஸ்கோபாருக்கு இரவில் தூங்கும் பழக்கமே கிடையாதாம். விடியற்காலையில்தான் தூங்குவார். முற்பகலில் முழித்துக் கொள்வார். தன்னுடைய சகாக்களோடு போனில் தொடர்பு கொண்டு சங்கேத மொழியில் கட்டளைகளை இடுவாராம். தாக்குதல், கடத்தல், சரக்கு கைமாற்றுதல் போன்றவற்றைப் பற்றியெல்லாம் தொலைபேசியில் பேச எஸ்கோபார் கும்பல் தங்களுக்குள்ளே ஒரு புதுமொழி தயாரித்து வைத்திருந்திருக்கிறார்கள். இந்த தகவல்கள் மொத்தமும் இந்தப் பெண்கள் மூலமாகத்தான் போலீசுக்கு கிடைத்தது.

இந்த கன்னிகளால் ஒருமுறை சூடுபட்டவுடனேயே எஸ்கோபார், பெண்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை அடைந்தார். எனினும் அவர் தொடங்கி வைத்த ‘கன்னி பிசினஸ்’, இன்றும்கூட கொலம்பியாவில் வெகுசிறப்பாக நடக்கிறது. பல உள்ளூர் பொறுக்கிகள் எஸ்கோபார் வைத்த புள்ளியில் பெரியளவில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் இன்டர்நெட்டில் கன்னித்தன்மைக்கு ஏலம் நடக்கிறதாம். செக்ஸ் டூரிஸம் என்கிற கேடுகெட்ட தொழில், இன்றும் கொலம்பியாவில் கொடிகட்டிப் பறக்கிறது. உலகெங்கும் இருந்து நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு கன்னிவேட்டையாட பெரும் பணக்காரர்கள் கொலம்பியாவுக்கு பறக்கிறார்கள். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர்களில் ஒருவர், நம் காட்ஃபாதர்.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Posted
 
 

காட்ஃபாதர்

போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 28

பாப்லோ கும்பலின் கப்பல் வழி சரக்கு போக்குவரத்து அடிக்கடி இன்னலுக்கு உள்ளானது. சொல்லி வைத்த மாதிரி ‘சரக்கு’ இருக்கும் கப்பல்கள்  நடுக்கடலில் சோதனைக்கு உள்ளாயின. கருங்காலிகள் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தாலும், யார் உள்கை என்பது புரியாமல் கார்டெல் உரிமையாளர்கள் முழி பிதுங்கிக் கொண்டிருந்தார்கள். விமான பைலட்டுகளை விலைக்கு வாங்கி, கடத்தப்படும் சரக்குகளின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. எனவேதான், சொந்தமாக விமானங்களை வாங்குவதற்கு முடிவெடுத்தார். அவருடைய போதை தீவில் நீண்ட ரன்வேயுடன் போயிங் விமானங்களே தரையிறங்கக்கூடிய வசதியோடு ஓர் ஏர்போர்ட்டே தயாராக இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

முதன்முதலாக பாப்லோ எஸ்கோபார் விலை கொடுத்து வாங்கியது ஒரு piper cub-type விமானம். யாரோ ஒரு அமெரிக்க தொழிலதிபர் பயன்படுத்திவிட்டு காயலான்கடைக்கு போடுவதற்கு வைத்திருந்ததை சல்லிசான விலைக்கு வாங்கியிருந்தார். அதை ரிப்பேர் செய்து ஓட்டிக் கொண்டிருந்தார். விமானத்தில் நிறைய மாறுதல்கள் செய்து, சரக்கு அதிகளவில் ஏற்றுவதற்கான இடவசதியை ஏற்படுத்தி இருந்தார்கள். வான்வெளியில் பறப்பதற்கான அனுமதி மாதிரி விஷயங்களை பனாமா அரசில் பணிபுரிந்து கொண்டிருந்த அவரது அல்லக்கைகள் பார்த்துக் கொண்டார்கள்.
11.jpg
இதில் ஆயிரக்கணக்கான கிலோ சரக்குகளை ஏற்றி மிகவும் விரைவாக அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்ப முடிந்தது. மினி பஸ் கணக்காக ஒரே நாளில் கொலம்பியா டூ பனாமாவுக்கு நிறைய ட்ரிப்புகளையும் அடிக்க முடிந்தது. ஒரு ட்ரிப்புக்கு 1200 கிலோ வரை சரக்கு ஏற்ற முடியும். இது பழைய விமானம் என்பதால் அடிக்கடி மக்கர் செய்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு டெலிவரி நடக்கவில்லை என்றால் பாப்லோ டென்ஷனாகி விடுவார். எனவே, புது விமானத்தை வாங்க வேண்டுமென்று அவரது சகாக்கள் அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். எனவே, புது விமானங்களை வாங்க ஆரம்பித்தார். இவ்வாறாக பாப்லோவின் போதை ஏர்லைன்ஸில் மொத்தம் பதினைந்து விமானங்கள் சேர்ந்தன.

முதன்முதலாக வாங்கிய விமானத்தை காயலான்கடைக்கு போட எஸ்கோபாருக்கு மனமில்லை. இரும்பு நெஞ்சம் கொண்டவர் என்றாலும், அவருக்கு சில சென்டிமென்ட்கள் உண்டு. எனவே ஹசீண்டா நேபோல்ஸ் பகுதியில் அவர் பிரும்மாண்டமாகக் கட்டிய மாளிகையின் அலங்கார நுழைவாயிலாக இந்த விமானத்தையே பயன்படுத்தினார். உலகின் பிரசித்தி பெற்ற போதை மாஃபியாக்கள் பலரையும் அந்த மாளிகையில்தான் அவர் சந்தித்திருக்கிறார். அடிக்கடி கொலம்பியா முக்கியஸ்தர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டியும் நடக்கும். இந்த மாளிகைக்குள் நுழையும்போது, தங்கள் தலைக்கு மேல் நுழைவாயிலாக விமானம் நிற்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே போவார்கள். இன்றும்கூட ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கானோர் பாப்லோவின் இந்த முதல் விமானத்தை வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

பாப்லோவின் ‘விமான சேவை’ எப்படி நடந்தது என்பதைப் பார்த்தால், கல்லில்கூட நார் உரித்துவிடும் தொழில்நேர்த்தியாளர் அவர் என்பதை உணரலாம். ஒரு விமானம் முழுக்க சரக்கு அனுப்பினால், அதை விற்று பணமாகக் கொண்டு வரும்போது பிரச்சினை ஏற்பட்டது. ஏனெனில் 1000 கிலோ சரக்கு எடுத்துச் சென்றால், அதை விற்று பெறும் டாலர் நோட்டுகள் மூவாயிரம் நாலாயிரம் கிலோவாக இருந்துதொலைத்தது. மொத்தப் பணத்தையும் கொலம்பியாவுக்கு கொண்டு வருவதற்கு மூன்று, நான்கு ட்ரிப் அடிக்க வேண்டும். அது வேலைக்கு ஆகாது. எனவே, இங்கிருந்து சரக்கு அனுப்பும்போதே பாதி சரக்கு, பாதி தங்கம் என்று அனுப்பத் தொடங்கினார்கள்.

பனாமாவில் தரையிறங்கி, அங்கிருக்கும் வணிகர்களிடம் நல்ல லாபத்துக்கு தங்கத்தை கைமாற்றி விட்டுவிடுவார்கள். அங்கிருந்து அமெரிக்காவுக்கு பாதி நிரம்பிய விமானம்தான் போகும். வரும்போது ஃபுல்லாக கரன்ஸி கட்டுகளை அள்ளிக்கொண்டு வரும். சாதாரணமாக ஒரு விமானத்தில் செல்லும் சரக்கின் அளவு (இன்றைய மதிப்பில்) அறுபது கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். திரும்ப வரும்போது 400, 500 கோடி ரூபாய் அளவு பணத்தை விமானம் கொண்டுவரும். இதை வாசிக்க மலைப்பாகத் தான் இருக்கும். எஸ்கோபார், அவர் வாழ்ந்த காலத்தில் உலகின் முதல் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்போதும் அவர் உயிரோடு இருந்திருந்தால் பில்கேட்ஸ் எல்லாம் அவருக்கு ஜுஜூபியாகத்தான் இருப்பார்.
11a.jpg
பதினைந்து விமானங்களும் இந்த மாதிரி ஃபுல் லோடில் போக, மேலும் மேலும் சரக்கு போக்குவரத்துக்கு வாகனங்கள் தேவைப்பட்டன. ஆறு ஹெலிகாஃப்டர்களை வாங்கி ரூட்டுக்கு விட்டார். ஆட்டோ வாங்கி விட்டார் என்பதைப் போல எளிமையாகச் சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஏனெனில், அவர் எஸ்கோபார். ஹெலிகாப்டர்தான் வாங்குவார். இதெல்லாம் கூட அவருக்கு போதவில்லைதான். குஸ்டாவோவை வெளிநாடுகளுக்கு அனுப்பி, சரக்கு போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு எதையாவது கண்டுவரச் சொன்னார். குஸ்டாவோவும் ஐரோப்பிய நாடுகளுக்கு விசிட் அடித்து, தங்களுக்கு ஏற்ற வகை விமானங்களை வாங்க காண்ட்ராக்ட் போட்டுவிட்டு வந்தார்.

அதன் அடிப்படையில் கொலம்பியாவுக்கு DC-3 ரக விமானங்கள் வந்து சேர்ந்தன. விமானப்படை கணக்காக ஃபிளைட்டுகளையும், ஹெலிகாப்டர்களையும் பாப்லோ எஸ்கோபார் வாங்கிக் குவிப்பதைக் கண்ட மற்ற கார்டெல்காரர்களும் அவரவர் சக்திக்கு ஏற்ப விமானங்களை வாங்கத் தொடங்கினார்கள். இவையெல்லாம் ஃபுல் லோடு போதையோடு அமெரிக்க விமான தளங்களில் இறங்கும்போது, அங்கிருக்கும் அதிகாரிகள் சும்மா விரல் சப்பிக் கொண்டா இருந்திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. லஞ்சமும், ஊழலும் உலகம் பிறந்தபோதே இணைந்து பிறந்துவிட்டன என்கிற பேருண்மையை நாம் எந்த வினாடியும் மறக்கவே கூடாது.

எஸ்கோபார், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாளாமல் இன்னொரு டெக்னிக்கை கண்டுபிடித்திருந்தார். அவர் வாங்கிய விமானங்களின் இறக்கைப் பகுதியை லக்கேஜ் கேரியர்களாக உருமாற்றினார். இவற்றில் சரக்கு ஏற்றப்படும். அந்தந்த விமான நிலையங்களில் இறங்கும்போது வழக்கமான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லாமல், அங்கிருந்த ஏர்போர்ட் ஊழியர்களின் உதவியோடு விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துச் சென்றார். நாம் மிகச் சுலபமாக இதையெல்லாம் இங்கே வாசித்துவிட்டோம். ஆனால் - நடைமுறைப்படுத்துவதற்குள் எஸ்கோபாரின் சகாக்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. விமானங்கள் பயணிக்க மொத்தம் எட்டு ரூட்டுகள் வைத்திருந்தார்கள்.

ஒரு ரூட்டில் ஏதேனும் தடங்கல் என்று தகவல் வந்தால், அடுத்தடுத்த ரூட்டுகளுக்கு மாறிவிடுவார்கள். இந்த பிராசஸில் ஈடுபட்டிருக்கும் பைலட்டுகளில் தொடங்கி மற்ற ஊழியர்கள் வரை எங்கே சரக்கு ஏற்றப்படப் போகிறது, எங்கே இறக்க வேண்டும் என்பதெல்லாம் கடைசி நிமிட உத்தரவாகத் தான் வரும். இன்னொரு வேடிக்கையான விஷயம். எஸ்கோபாரிடம் பைலட்டுகளாகப் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வியட்நாம் போரில் பங்கேற்று, அமெரிக்க வான்படையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். ஆரம்பத்தில் வாரத்துக்கு மூன்று, நான்கு ட்ரிப்புகள் ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக சர்வீஸ் விட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த விமான சேவைக்கும் ஒரு கட்டத்தில் ஆப்பு விழுந்தது.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

  • 2 weeks later...
Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 29

‘பாப்லோ தும்மினால் கொலம்பியாவில் பூகம்பம்’. எண்பதுகளில் விளையாட்டாக அமெரிக்க ஊடகவியலாளர்கள் இப்படி பேசிக்கொள்வார்களாம். அந்தளவுக்கு செல்வாக்காக இருந்த பாப்லோ, கருங்காலிகளால் அடிக்கடி இன்னலுக்கு உள்ளானார். ஐந்து அத்தியாயங்களுக்கு முன்பாக ராபர்ட் முஸெல்லா என்கிற அமெரிக்க போதை ஏஜெண்ட் ஒருவரை அறிமுகப்படுத்திவிட்டு, அப்படியே விட்டுவிட்டோமே நினைவிருக்கிறதா? அவர் வேறு யாருமல்ல. அமெரிக்காவின் ஏஜெண்ட்தான்.

சிஐஏ மற்றும் எஃப்.பி.ஐ அமைப்புகள் பயிற்சி பெற்ற தங்கள் உளவாளிகளை இந்த போதை நெட்வொர்க்குக்குள் ஊடுருவ வைத்தன. அவர்கள் ஏஜெண்டுகளாகவும், அடியாட்களாகவும், லேப்களில் பணிபுரியும் டெக்னீஷியன்களாகவும் பல்வேறு பிரிவுகளில் பணிக்கு அமர்ந்துவிட்டார்கள். சப்தமின்றி கார்டெல் ரகசியங்களை அவ்வப்போது அரசாங்கங்களுக்கு போட்டுக் கொடுக்கத் தொடங்கினார்கள்.
19.jpg
பாப்லோ மட்டுமின்றி மெதிலின் நகரின் போதை சாம்ராஜ்யம் ஒட்டுமொத்தமாக சரியத் தொடங்கியது, இந்தக் கருங்காலிகளால்தான். யார் உளவாளி, யார் விசுவாசி என்பது புரியாமல் தன் நிழலைக்கூட சந்தேகப்பட வேண்டிய நிலைமைக்கு உள்ளானார்கள் கார்டெல் முதலாளிகள். குறிப்பாக பாப்லோ, பெரும் அவதிக்கு உள்ளானார். பெரியளவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் பைலட்டேகூட அமெரிக்காவின் சிஐஏவாக இருப்பான். சரக்கு ஏற்றிக்கொண்டு நேராக எடுத்துப்போய், வேண்டுமென்றே மாட்டிக் கொள்வான்.

இவ்வாறாக அமெரிக்க அரசு தொடர்ந்த மறைமுகப்போரை எதிர்கொள்ள முடியாமல், தன்னுடைய நெருங்கிய சகாக்களையும், விசுவாசிகளையுமே கூட பொறுமையின்றி போட்டுத்தள்ளினார் பாப்லோ. நீண்டகால விசுவாசிகள்கூட, இதுபோன்ற உளவாளிகளின் ஊடுருவலால் பாப்லோவுக்கு துரோகிகளாக மாறிக் கொண்டிருந்தது தொடர்கதையானது. பாப்லோவின் நம்பிக்கைக்குரிய கார் மெக்கானிக் ஜோஸ். பாப்லோவின் ரேஸ்கார்களை அட்டகாசமாக ரீமாடல் செய்து, பந்தயங்களில் கலக்க வைத்தது அவனுடைய சாதனைதான்.

கார் பிரியரான பாப்லோவுக்கு ஜோஸ், மிக நெருங்கிய வட்டத்தில் இருந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. மெதிலின் நகர சரக்கு போக்குவரத்தில் ஜோஸின் கை ஓங்கியிருந்தது. பாப்லோ, செகண்ட் ஹேண்டில் வாங்கித் தரும் கார்களை ‘போதை லக்கேஜ்’ ஏற்றுவதற்கு வசதியாக ரீமாடல் செய்து தருவான். காரை சோதனையிடும் போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு ரீமாடல் செய்யும் தொழில்நேர்த்தி ஜோஸிடம் இருந்தது.

ஜோஸ் ரீமாடல் செய்யும் கார்களில் பணம், போதை மருந்து எதை கடத்தினாலும் சோதனைகளுக்கு அஞ்சவே வேண்டியதில்லை. அந்த அளவுக்கு நிபுணத்துவம் பெற்றவனாக இருந்தான். ஒரு கட்டத்தில் மெதிலினில் இருந்து கொலம்பியாவின் மற்ற நகரங்களுக்கு கார்களில் அனுப்பப்பட்ட சரக்குகள் எடை குறைவாக டெலிவரி ஆகத் தொடங்கின. அதுபோலவே பணப்போக்குவரத்திலும் இடையில் கையாடல் நடந்து கொண்டிருந்தது.
19a.jpg
ஆரம்பத்தில் இது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. போகப்போக நெல்லுக்கு பாய்வதைவிட புல்லுக்கு பாய்வது அதிகமாகிக் கொண்டே சென்றதால், விஷயம் பாப்லோவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுவாக பாப்லோ இதுபோன்ற ஊழல்களை பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால், தன்னுடைய குழுவுக்குள் அமெரிக்க உளவாளிகளின் ஊடுருவல் நிகழ்ந்திருக்கிறது என்பதை அறிந்தபிறகு, அவரால் சும்மா இருக்க முடியவில்லை.

எங்கே தவறு நடக்கிறது, யார் செய்கிறார்கள் என்பதை கண்டறிய ஒரு ரகசிய விசாரணைக் குழுவை தன்னுடைய உயிர் நண்பன் குஸ்டாவோ தலைமையில் அமைத்தார். இந்தக் குழு எவ்வளவு முக்கி முனகிப் பார்த்தும் க்ளூ எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை குஸ்டாவோவே கூட அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவையோ என்று பாப்லோ சந்தேகிக்குமளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. கடைசியாக அவரே களத்தில் இறங்கினார்.

அதுவரை அனுப்பப்பட்ட சரக்கு மற்றும் பணம், அதில் கையாடல் நடந்த சம்பவங்கள், அத்தனை புள்ளி விவரங்களையும் தொகுத்து புலனாய்ந்தார். அப்போதுதான் ஓர் உண்மையை அவர் அறியமுடிந்தது. ஜோஸ் ரீமாடல் செய்து கொடுத்த கார்கள் மூலமாக அனுப்பப்படும் சரக்கு மற்றும் பணம்தான் குறைகிறது. வேறு முறைகளில் அனுப்பப்படுவது சிந்தாமல் சிதறாமல் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு சரியாகச் சேர்ந்து விடுகிறது.

ஜோஸ் ரீமாடல் செய்யும் கார்களில் ரகசிய மறைவிடம் எங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஜோஸ், பாப்லோ மற்றும் மெதிலின் கார்டெல்லின் மிகவும் முக்கியமான ஒரு சில பிரமுகர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நீண்டகால சகாவான ஜோஸ் மீது மட்டும் அவருக்கு சந்தேகமே வரவில்லை. ஆனால், மீதியிருந்த அத்தனை பேரையும் சந்தேகப்பட்டார். வேலை மெனக்கெட்டு அவரே ஒவ்வொருவரையும் பின்தொடர்ந்து சென்று, தனக்கு எதிரான நிழல் காரியங்களில் ஈடுபடுகிறார்களா என்று ஆராய்ந்தார்.

ம்ஹூம். அவர்கள் எல்லோருமே சொக்கத் தங்கள்தான். அப்படியெனில், ஜோஸ்தான்… இதற்கிடையே மெதிலின் பார் ஒன்றில் பாப்லோவிடமிருந்து களவாடப்பட்ட சரக்கு, சல்லிசு ரேட்டுக்கு விற்கப்படுகிறது என்கிற தகவல் குஸ்டாவோவுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட ஆட்களை அப்படியே மொத்தமாக வாரிச் சுருட்டி வந்து பாப்லோவிடம் போட்டார்கள்.

பலவிதமான சித்திரவதைகளுக்குப் பிறகு அவர்கள் வாய் திறந்தார்கள். தங்களுக்கு சரக்கு கொடுப்பவர்கள், ஜோஸிடம் பணியாற்றும் மெக்கானிக்குகள்தான் என்று வாக்குமூலமே கொடுத்தார்கள். துரதிருஷ்டவசமாக அதுவே அவர்களது இறுதி வாக்குமூலமாகப் போனது. “அந்த மெக்கானிக்குகளை அப்படியே அள்ளிட்டு வந்துடட்டா?” ‘கட்டி வா என்றால் வெட்டி வரும்’ குஸ்டாவோ ஆத்திரத்துடன் கேட்டான்.
19b.jpg
“வேண்டாம். என்ன இருந்தாலும் அவங்க ஜோஸோட மெக்கானிக்குகள். அவனுங்களா இந்த திருட்டு வேலையை செய்யுறானுங்களா, இல்லைன்னா ஜோஸ் சொல்லி செய்யுறாங்களா, வேற கை ஏதாவது சம்பந்தப்பட்டு இருக்கான்னு தெரியலை… இந்த பிரச்னையை நான் பார்த்துக்கறேன்...” என்றார் பாப்லோ. ஜோஸ், தனக்கு மிகவும் நெருங்கியவன் என்பதாலோ என்னவோ வழக்கமான வன்முறை பாணியை கைவிட்டு விட்டு பிரச்னையை சுமுகமாக கையாள முயற்சித்தார்.

ஜோஸிடமே நேரில் விளக்கம் கேட்டார். மெதிலின் நகர மாதா மீது சத்தியம் செய்து, தனக்கும் இந்த திருட்டுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அடித்துப் பேசினான் ஜோஸ். “என் மீதே சந்தேகமா? அப்படி நீங்கள் சந்தேகப்படுவதாக இருந்தால் இப்போதே என் கழுத்தை இங்கேயே அறுத்துக் கொள்கிறேன்...” என்று சொல்லியவாறே சட்டென்று சிறிய கத்தி ஒன்றை எடுத்து தன் கழுத்தருகே வைத்தான். பதறிப்போன பாப்லோ, “அப்படியெல்லாம் இல்லை ஜோஸ்.

சில தகவல்கள் அதுமாதிரி வந்து சேர்ந்தது. நம்மைக் குழப்பி அமெரிக்கா மீன் பிடிக்க நினைக்குது. வேற ஒண்ணுமில்லை...” என்று சமாதானப்படுத்தி அனுப்பினார். பாப்லோ தன் மீது சந்தேகப்பட்டு விட்டதையடுத்து தன்னுடைய ஆதரவாளர்கள் கூட்டத்தை ஒரு மதுவிடுதியில் நடத்தினான் ஜோஸ். அப்போது அங்கே வந்த இன்னொரு கும்பல், வேண்டுமென்றே ஜோஸையும் அவனுடைய நண்பர்களையும் சண்டைக்கு இழுத்தார்கள்.

இரு தரப்பும் சூடாக துப்பாக்கிக் குண்டுகளைப் பரிமாறிக் கொண்டது. மது குடிக்க வந்த அப்பாவிக் குடிமகன்கள் பதறியடுத்து ஓட, சுமார் அரை மணி நேரத்துக்கு அந்த மதுவிடுதியில் தோட்டாக்கள் முழக்கம். எல்லாம் ஓய்ந்து முடிந்தபோது வழக்கம்போல போலீசார் உள்ளே நுழைந்தார்கள். ஜோஸ் மற்றும் அவரது நண்பர்கள் அத்தனை பேரும் குளோஸ். அவர்களை சுட்டதாக சொல்லி சரண்டர் ஆனவர்கள் அத்தனை பேருமே மெக்ஸிகோ போன்ற அண்டை அயல்நாடுகளைச் சார்ந்த ரவுடிகள்.

சாதாரண வாய்ச்சண்டை முற்றி கேங்வாராக மாறி ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொண்டார்கள் என்று அந்த கேஸ் இழுத்து மூடப்பட்டது. ஆனால் - மெதிலின் நகர கார்டெல் ஆட்கள் அனைவருமே அது பாப்லோ செய்த பச்சைப் படுகொலை என்பதை அறிந்திருந்தார்கள். ஜோஸ், ரத்தம் சிந்தியதோடு இந்த வெறியாட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை. சொல்லப் போனால், அது ஆரம்பம்தான். பாப்லோவின் ரத்தவெறி அடுத்தடுத்து அதிகரித்துக் கொண்டேதான் போனது. மெதிலின் நகர சாலைகள் ரத்தத்தால் பல முறை கழுவப்பட்டன.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co.

Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 30

துரோகிகளையும், எதிரிகளையும் போட்டுத்தள்ள பாப்லோ ஒரு பக்கம் போர்க்கோலம் பூண்டார் என்றால், அவரைக் கொல்லத் துடித்துக் கொண்டிருந்த எதிரிகளும் கொலை வெறியாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். யார், எவரை, எதற்காகக் கொல்கிறார்கள் என்பதே புரியாத அளவுக்கு மெதிலின் நகர் முழுக்க சாலைகளில் வெறித்த கண்களோடு பிணங்கள் வீழ்ந்து கிடக்கத் தொடங்கின. பாப்லோவின் மெக்கானிக் ஜோஸ், மர்மமான முறையில் ஒரு பார் சண்டையில் கொல்லப்பட்டதுதான் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி. போலீஸ், அந்த கேஸை பாப்லோவுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதது மாதிரி ஊத்தி மூடியதை மற்ற கார்டெல்காரர்கள் ரசிக்கவில்லை.
21.jpg
பாப்லோவுக்கு கொலை செய்யும் உரிமை இருக்கும் பட்சத்தில், அதே உரிமை தங்களுக்கும் வேண்டுமென்று உரிமைக்குரல் எழுப்பத் தொடங்கினர். சாதாரண குற்றங்களுக்கெல்லாம் கார்டெல்கள் மரண தண்டனை விதிக்கத் தொடங்கினார்கள். சட்டம் தட்டிக் கேட்டால், பாப்லோவைக் கேட்டீர்களா என்று லாஜிக்கலாக மடக்கினார்கள். இந்த சூழலுக்கு முன்பாக போதைத் தொழிலில் ஆங்காங்கே சில அடிதடிகள் நடக்குமே தவிர, கொலைத் தொழில் கொடிகட்டிப் பறந்ததில்லை. குறிப்பாக அப்பாவிகள் யாரும் வன்முறையால்
உயிரிழந்ததில்லை.

எனவே, கார்டெல்களை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. துப்பாக்கி எடுத்தவனுக்கு துப்பாக்கியால்தான் சாவு என்பதை மெய்ப்பிக்க அரசாங்கமும், ஆயுதம் தாங்கிய காவல்படையினரைக் களமிறக்கியது. கார்டெல்களுக்குள் சண்டை, கார்டெலுக்குள்ளேயே துரோகிகள் களையெடுப்பு, இவை தாண்டி வன்முறையில் ஈடுபடும் கார்டெல்காரர்களின் மீது போலீசின் ஆயுத நடவடிக்கையென மெதிலின் பற்றியெரிந்தது. இந்த அமளிதுமளியில் வழக்கமான பிசினஸ் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பணத்தை பதுக்கிவைப்பது, பரிமாற்றம் செய்வது போன்ற பணிகள் சாத்தியமில்லாததாக போய்க் கொண்டிருந்தது.

பாப்லோவின் பணம், மெதிலின் நகரில் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான அப்பார்ட்மென்டகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் சிலர் கொலைக்கு உள்ளாக, பணம் எங்கே பதுக்கப்பட்டது என்பது தெரியாமல் அப்படியே விடவேண்டியதாகியது. இம்மாதிரி அனாதரவாக விடப்படும் அப்பார்ட்மென்டுகளில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் போலீஸ் அதிகாரிகள் தனிப்பட்ட முறையிலான வேட்டையை தொடர்ந்தார்கள். வேட்டையில் பணம் சிக்கினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குள்ளாக பங்கிட்டுக் கொண்டார்கள். இதுபோன்ற ஊழல் அதிகாரிகளை களையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேறு பாப்லோவுக்கு ஏற்பட்டுத் தொலைத்தது.

அதுவரை போலீஸோடு முடிந்தவரை இணக்கமாக இருந்த கார்டெல்கள், அவர்களோடு போர்முழக்கம் செய்ய இந்த சூழலே காரணமானது. பாப்லோவின் சகோதரர் ராபர்ட்டோதான் பணத்தை பதுக்கிவைப்பது, தேவையான நேரத்தில் எடுத்துத் தருவது போன்ற பணிகளைத் திறம்படச் செய்துவந்தார். இதற்காக அவர் பத்து அக்கவுன்ட்ஸ் மேனேஜர்களை நியமித்திருந்தார். மெதிலின் நகரம் முழுக்க பத்து அலுவலகங்கள் இருக்கும். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் ஒரு மேனேஜர். அவை வெவ்வேறு தொழில் செய்வதாக ஆவணங்களில் கூறப்பட்டிருக்கும். இந்த பத்து மேனேஜர்களுமே ராபர்ட்டோவால் தனிப்பட்ட முறையில் பணிக்கு சேர்க்கப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள்.

சிலர் உறவினர்களும்கூட. எங்கெங்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்கிற தகவலை இவர்கள்தான் அறிந்திருப்பார்கள். இவர்களது உதவியில்லாமல் தொழில் செய்ய முடியாது என்கிற நிலையில்தான் பாப்லோ இருந்தார். அவர்களுக்கு கணிசமான சம்பளம் வழங்கப்பட்டது. இந்த அக்கவுன்ட்ஸ் மேனேஜர்கள் எல்லாருமே கொலம்பியாவின் மில்லியனர்களாகத் திகழ்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவராக திட்டமிட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அவர்களைக் கொன்றது போட்டி கார்டெல்களா அல்லது போலீஸா என்பது புரியாமல் பாப்லோ திக்குமுக்காடினார். கணக்கு வழக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கணக்கு முடிக்கப்பட்டு விட்டதால், எங்கே, எவ்வளவு பணம் பதுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாமல் அப்படி அப்படியே விட்டுவிட்டார்கள்.
21a.jpg
ராபர்ட்டோ, இந்த நிலைமையைச் சொல்லி பாப்லோவை எச்சரித்தார். “சில நேரங்களில் வெல்வோம், சில நேரங்களில் தோற்போம்...” என்று ராபர்ட்டோவை அமைதிப்படுத்தினார் பாப்லோ எஸ்கோபார். இத்தகைய நிலையிலும் மெதிலின் நகர ஏழை மக்கள் பாப்லோவுக்கு ஆதரவாகவே நின்றார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவரால் வாழ்வு பெற்றவர்கள் மட்டுமல்ல, அவர் குறித்த கதைகளை மற்றவர்கள் சொல்லக் கேட்டவர்களும் பாப்லோவை ஒரு காட்ஃபாதராகவே கொண்டாடினார்கள். பாப்லோ மீது எத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், அவருக்கு வக்கீலாக நின்று இந்த ஏழைமக்களே வாதாடினார்கள். பாப்லோ பொருட்டு அவர்கள் போலீஸிடம் பகை சம்பாதிக்கவும் தயங்கவில்லை.

வேறெந்த கார்டெல் ஓனரும் மக்களிடம் பெற முடியாத நம்பிக்கையை பாப்லோ பெற்றிருந்தார். அதுவே அவரது பலமாக இருந்தது. இந்த பலத்தை சிதைப்பதற்காக அரசாங்கமும், பாப்லோவின் போட்டி கார்டெல்களும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தார்கள். பாப்லோ பற்றி எதிர்மறையாக நிறைய கட்டுக்கதைகளை ஊடகங்கள் மூலமாகக் கட்டவிழ்த்தார்கள். எங்கு, என்ன நடந்தாலும், அது பாப்லோவின் மெதிலின் கார்டெல் செய்த அட்டூழியம் என்று போலீசால் சொல்லப்பட்டது. இத்தனையையும் மீறி பாப்லோ எஸ்கோபார், தன்னிகரற்ற தலைவனாகவே அந்த மக்களுக்கு விளங்கினார். இதையடுத்து அப்பாவி மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. மெதிலின் புறநகர் பகுதி சேரிகள் திடீர் திடீரென தீப்பற்றிக்கொள்ளத் தொடங்கின.

பலபேர் உயிர், உடமைகளை இழப்பது தொடர்கதையானது. அம்மாதிரி ஒரு சேரி பற்றியெரிந்து கொண்டிருந்த தகவல் பாப்லோவை எட்டியது. உடனடியாக தன்னுடைய பாதுகாவலர்களை அழைத்துக்கொண்டு அங்கே விரைந்தார். பாப்லோவின் ஜீப்பைத் தொடர்ந்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணப் பொருட்கள் லாரி லாரியாகக் கிளம்பின. பாப்லோ போய் சேர்ந்தபோது, வழக்கம்போல அங்கே அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்களிடையே துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். பாப்லோவோ நேரடியாகக் களமிறங்கி மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டார். அவரும், அவரது குழுவினரும் ஏழைக்குழந்தைகளைக் கையில் ஏந்திக்கொண்டு நடந்தார்கள்.

பாப்லோ ஒரு சிறு மேடை மீது ஏறி கூக்குரலிட்டார். “எங்கள் பின்னே வாருங்கள், ஏழ்மையால் இனி ஓர் உயிர்கூட போக இந்த பாப்லோ அனுமதிக்க மாட்டான். அரசாங்கம் செய்யத் தவறியதை பாப்லோ செய்வான். உங்களுக்கெல்லாம் தீப்பிடிக்காத பாதுகாப்பான கான்க்ரீட் வீடுகளை எங்கள் செலவில் கட்டித் தருகிறோம். குடிசைகளே இல்லாத மெதிலின்தான் என்னுடைய கனவு...” என்றார். வலது கையை மடக்கி உயர்த்தி சபதம் செய்வதைப் போல பாப்லோ ஆவேசமாகப் பேசியதைக் கேட்ட கூட்டம் ‘பாப்லோ எஸ்கோபார் வாழ்க’ என்று கோஷமிட்டது. அந்த கோஷத்துக்கு மத்தியில் ஒரு குரல் மட்டும் தனித்து ஒலித்தது. “தலைவா வா. கொலம்பியாவின் துயர்தீர்க்க தலைமை ஏற்க வா!”
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Posted
 

காட்ஃபாதர்

 
 

யுவகிருஷ்ணா - 31

மிக சாதாரணமான போக்கிரியாகத்தான் பாப்லோ, தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர் இவ்வளவு உயரத்துக்குச் செல்வார்; உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக அவரை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை மதிப்பிடும்; அவரை அரசியலுக்கு வருமாறு மக்கள் அழைப்பார்கள் என்றெல்லாம் அவருடைய இளமைப் பிராயத்தில் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.

பாப்லோவுக்கு மட்டும்தான்தான் பிறந்ததிலிருந்தே ‘காட்ஃபாதர்’ என்கிற நம்பிக்கை இருந்து கொண்டிருந்தது. பகையாளிகளால் ஓயாத வன்முறை. இருபத்து நான்கு மணி நேரமும் பிசினஸ் டென்ஷன். தன்னை நம்பி வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வு பாதுகாப்பை வேறு உறுதி செய்ய வேண்டும். பாப்லோ விரும்பிய காட்ஃபாதர் அந்தஸ்துக்கு உயர்ந்தபோது, அவரது மூளைக்குள் இதுபோல எப்போதும் காய்ச்சல் அடித்துக் கொண்டே இருக்குமென்று அவர்கூட எதிர்பார்க்கவில்லை.
11.jpg
உலகின் டாப் ஒன் மாஃபியாவாக விளங்கிய பாப்லோ எஸ்கோபார், தன்னுடைய பிரச்னைகளை எப்படி சமாளித்தார் என்பதை நாமும் தெரிந்து வைத்துக் கொண்டால் தப்பு ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட கந்தாயங்களில் இருந்தெல்லாம் ரிலாக்ஸ் ஆக என்னென்ன செய்ய முடியும் என்கிற வழிகளைக் கண்டுபிடிப்பதிலேயே பாதிநாள் போனது. அதிவேக கார் பந்தயங்களில் கலந்துகொள்வது, விமானத்தில் சாகஸம் புரிவது, கால்பந்து விளையாடுவது உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் தீவிரமாக ஈடுபட்டு தன்னுடைய உள்ளக் கொதிப்புகளை சமனப்படுத்திக் கொண்டிருந்தார்.

அவருடைய ஆருயிர்த் தோழன் குஸ்டாவோ, தன்னுடைய நண்பனுக்கு இதெல்லாம் போதாது என்பதை உணர்ந்தார். உலகிலேயே எவரும் வசிக்காத ஒரு சொர்க்கத்தை நண்பனுக்காக உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். மெதிலின் நகர நினைவே பாப்லோவுக்கு கொஞ்சம்கூட வராமல் ஓரிடத்தில் இருக்க முடிந்தால், அதுவே அவருக்கான ஆகப்பெரிய ஆசுவாசமாக இருக்குமென்று கருதினார்.

மெதிலின் மனிதர்கள், பிரச்னைகள் கொஞ்சமும் எட்டாத தூரத்தில் ஹசீண்டா நேப்போல்ஸ் என்கிற இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை இதற்காகத் தேர்ந்தெடுத்தார் குஸ்டாவோ. 1970களின் இறுதியில் அங்கே 7,500 ஏக்கர் நிலம் பாப்லோவுக்கான பிரத்யேக உபயோகத்துக்காக வாங்கப்பட்டது. நிலம் என்று சொல்லக்கூடாது. தனி தீவு. அதாகப்பட்டது, 18 கிரவுண்டு என்றால் ஒரு ஏக்கர் என்பது நமக்குத் தெரியும்.

7,500x18 என்பதை கால்குலேட்டரில் கணக்கு போட்டுப் பார்த்தால், சென்னைக்கு வெகு அருகில் செய்யாரிலோ, வந்தவாசியிலோ அரை கிரவுண்டு நிலம் வாங்கவே நாக்கு தள்ளிக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் வயிறு எரியத்தான் செய்யும். அதற்கு என்ன செய்வது. அவர் பாப்லோ ஆயிற்றே. எதையுமே பிரும்மாண்டமாக செய்வதுதானே அவரது ஸ்டைல்? மூன்று அத்தியாயங்களுக்கு முன்பு, பாப்லோ, தான் முதன்முதலாக வாங்கிய piper cub-type விமானத்தையே நுழைவாயிலாக தன்னுடைய மாளிகைக்கு முன்பாக நிறுவினார் என்று வாசித்தது நினைவிருக்கலாம்.

அந்த மாளிகை இருந்த இடத்தைப் பற்றித்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். பாப்லோவுடைய கனவுப் பிரதேசத்தில் ஓர் அழகிய ஆறு ஓடவேண்டும் என்று எதிர்பார்த்தார். அப்படியே அமைந்தது. இங்கே, போயிங் விமானங்களே வந்து செல்லக்கூடிய அளவுக்கு நீண்ட ரன்வே இருந்தது, சரக்கு போக்குவரத்துக்கு பதினைந்து விமானங்கள் இரவும் பகலுமாக வந்து சென்றன என்பதையெல்லாம் ஏற்கனவே வாசித்திருக்கிறோம்.

அந்த 7,500 ஏக்கரையும் அப்படியே இரு பாதியாகப் பிரித்திருந்தார். ஒரு பகுதி, தன்னுடைய சொகுசு மாளிகைக்கு. அடுத்த பகுதி, போதைத் தொழிற்சாலைகள் மற்றும் அதில் பணிபுரிபவர்களுக்கான குடியிருப்புகள். அடிப்படையில் பண்ணை வைத்து விவசாயம் செய்த பாப்லோவின் அப்பா, கால்நடைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தவர்.  எனவேதானோ என்னவோ நேப்போல்ஸ் முழுக்கவே பசுக்களும், காளைகளும் ஆங்காங்கே மேய்ந்துகொண்டிருக்கும்.
11a.jpg
நேப்போல்ஸ் தீவு முழுக்கவே எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து, மஞ்சள் நிற பழங்கள் காய்த்து காண்பதற்கு ரம்மியமாக இருக்கும். தவிர்த்து, வெப்ப மண்டல நாடுகளில் வளரக்கூடிய பழ மரங்கள் அத்தனையுமே, தன் தீவில் இருக்க வேண்டுமென்று பாப்லோ விரும்பினார். இதையெல்லாம் தவிர்த்து, இன்னொரு ஸ்பெஷலும் உண்டு.

தன்னுடைய வீட்டில் ஓர் விலங்குப் பண்ணை (zoo) இருக்க வேண்டுமென்று யாராவது விரும்புவார்களா? பாப்லோ விரும்பினார். அவருக்கு சின்ன வயதிலிருந்தே விலங்குகளின் மீது பிரியம் உண்டு. விலங்குப் பண்ணை என்றால் சும்மா கிளி, குரங்கு, மான் என்றில்லை. நம்மூர் வண்டலூர் விலங்குப் பண்ணை மாதிரியே பக்காவான பண்ணை. அங்கே காண்டாமிருகம், நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, நெருப்புக்கோழி, யானை, டால்பின், வரிக்குதிரை, குரங்கு என்று எல்லாவகை விலங்குகளுக்குமே இடஒதுக்கீடு உண்டு.

பாப்லோ, ஆசையாக ஆஸ்திரேலியாவிலிருந்து கங்காரு கூட வரவழைத்திருந்தார். அந்த கங்காருவோடு அவ்வப்போது ஃபுட்பால் விளையாடுவாராம். கொலம்பியாவில் எந்த சர்க்கஸ் குழு வந்தாலும், அவர்களிடமிருக்கும் விலங்குகளை பாப்லோவின் ஆட்கள் விலைக்கு கேட்பார்கள். கொடுக்க மறுப்பவர்கள், உருப்படியாக ஊர் போய் சேர்ந்ததாக வரலாறு இல்லை.

இது தவிர்த்து அமெரிக்காவில் இருந்த ஏஜெண்டுகள் மூலமாகவும் பல்வேறு விலங்குகளை உலகம் முழுக்கவும் இருந்து வாங்கி  தன்னுடைய பண்ணைக்கு கொண்டு வந்தார். தன்னிடம் எந்த விலங்கு இருந்தாலும் ஆண், பெண் இரு பாலினமும் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அவற்றுடைய பாலியல் தேவை, இனப்பெருக்கம் உள்ளிட்ட விஷயங்களில் எந்த குறைபாடும் இருந்துவிடக் கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.
11b.jpg
இந்த விலங்குப் பண்ணையை கவனித்துக் கொள்ள கொழுத்த சம்பளத்துக்கு ஏராளமான பணியாளர்களும் (விலங்குகளை இவரிடம் இழந்த சில சர்க்கஸ் முதலாளிகள்கூட இங்கே கூண்டு கழுவிக் கொண்டிருந்தார்கள்), விலங்கு மருத்துவர்களும் இருபத்து நான்கு மணி நேர சேவைக்கு தயாராக இருந்தார்கள். பறவைகள் மீது பாப்லோவுக்கு ஸ்பெஷல் அட்ராக்‌ஷன். குறிப்பாக ஒரு கிளி. அதற்கு சின்சோன் என்று செல்லமாகப் பெயரிட்டிருந்தார்.

விலங்குப் பண்ணையில் இருந்த அனைத்துக்குமே கொலம்பியாவின் பிரபலமான கால்பந்து வீரர்களின் பெயர்களை வைப்பது பாப்லோவின் வழக்கம். அந்த சின்சோன், பாப்லோ நேப்போல்ஸ் வரும்போது எப்போதும் கூடவே இருக்கும். அவர் தூங்கும்போதும்கூட தலைமாட்டிலேயே இருக்கும். பாப்லோ சரக்கு அடித்தால் சின்சோனும் லைட்டாக ஒரு ‘கட்டிங்’ போடும் வழக்கம் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு, பாப்லோ தூங்கிக் கொண்டிருந்தபோது சின்சோன் அந்த விபரீதத்தைச் சந்தித்தது. எப்படிப்பட்ட வீரனும் அஞ்ச நடுங்கும் பாப்லோவின் பெட்ரூமுக்கு காட்டுப்பூனை ஒன்று சந்தடியில்லாமல் வந்தது. சின்சோன் என்கிற அந்தக் கிளியின் வனப்பு, காட்டுப்பூனையின் நாக்கை நமநமக்க வைத்தது. காட்டுப்பூனையின் அன்றைய டின்னர், சின்சோன்தான்.

இந்த விபரீதத்துக்குப் பிறகு பூனை இனத்தையே பாப்லோ வெறுக்க ஆரம்பித்தார். நேப்போல்ஸ் முழுக்க பூனையே இருக்கக்கூடாது என்று ஆணையிட்டார். அங்கிருந்த நூற்றுக்கணக்கான பூனைகள், இரவோடு இரவாக பாப்லோவின் கொலைவெறிப் படையினரால் வேட்டையாடப்பட்டன. பூனை மட்டுமல்ல, பூனைகளின் மூதாதையர் என்று சொல்லப்படும் புலி, சிறுத்தைகளுக்குக் கூட நேப்போல்ஸ் விலங்குப் பண்ணையில் தடை விதித்து விட்டார் பாப்லோ. ஏன், சிங்கம் கூட அவருக்கு பூனையை நினைவுபடுத்தியது என்பதால், காட்டுராஜாவுக்கே நேப்போல்ஸ் காட்டில் நோ வேகன்ஸி.

ஒரு தனி மனிதர் இதுபோல பெரிய zoo ஒன்றை நம் நாட்டில் மட்டுமல்ல, வேறு எந்த நாட்டிலுமே வைத்திருக்க சட்டபூர்வமாக உரிமையில்லை. சட்டத்தை உடைப்பதுதானே பாப்லோ எஸ்கோபாரின் ஸ்பெஷாலிட்டியே. அவர் கொலம்பியாவின் சட்டங்களை இந்த விதத்திலும் சுக்குநூறாக உடைத்தார்.
 

(மிரட்டுவோம்)

kungumam.co

Posted
 

காட்ஃபாதர் 32

 
 

போதை உலகின் பேரரசன்

தன்னுடைய விலங்கியல் பண்ணைக்காக பாப்லோ, அமெரிக்காவிலிருந்துதான் பெரும்பாலும் விலங்குகளை கொள்முதல் செய்வார்.அமெரிக்காவில் விலங்குகளை வாங்குவது ஈஸி. அதை கொலம்பியாவுக்கு கொண்டுவருவதுதான் கஷ்டம். ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். பாப்லோவுக்கு சட்டமாவது, வட்டமாவது.
18.jpg
ஒருமுறை காண்டாமிருகம் ஒன்றை அப்படி, இப்படி, எப்படியோ கூண்டில் அடைத்து மெதிலினுக்கு கொண்டு வந்துவிட்டார். அதை நேப்போல்ஸ் கொண்டுவர வேண்டும். அந்த காண்டாமிருகத்துக்கு ஏதோ உடல் உபாதை போலிருக்கிறது. அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். மேலும், இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்க வேண்டுமென்று விலங்கு மருத்துவர் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

ஏதோ ஓர் ஆளை ஓரிரவு எங்காவது ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வைக்கலாம். காண்டாமிருகத்துக்கு அப்படியென்ன வசதி செய்து கொடுக்க முடியும்?பாப்லோவின் ஆட்கள் செய்து கொடுத்தார்கள். மெதிலின் நகரின் பெரிய வீடு ஒன்றை கண்டார்கள். அங்கிருந்த கார் கேரேஜில் தங்கள் காண்டாமிருகம் தங்கிக்கொள்ள இடம் ஒதுக்க வேண்டுமென்று வீட்டு ஓனருக்கு அன்புக்கட்டளை இட்டார்கள்.
18a.jpg
மிரண்டு போன அவர், வீட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறி ஓரிரவு முழுக்க நகரை காரில் சுற்றிக் கொண்டே இருந்தாராம். மறுநாள் காலை சொன்னபடியே, காண்டாமிருகம் கூண்டில் ஏற்றப்பட்டு நேப்போல்ஸுக்கு பயணமானது. கேரேஜில் அது போட்ட சாணத்தை கழுவித் தள்ளுவதற்கே வீட்டு ஓனருக்கு ஒருநாள் ஆனதாம்.

இது கதையா, உண்மையா என்று தெரியாது. ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்ததாக செய்தி வந்தபிறகு, ஏதோ ஒன்றை மறைக்க வேண்டுமென்று முடிவெடுத்தால், யானையைக்கூட கண்ணுக்கு முன்பாகவே மறைத்துவிடுவார் பாப்லோ என்று கொலம்பிய கார்டெல்கள் பெருமையாக பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோவுக்கு விலங்குகள் என்றால் லைட்டாக அலர்ஜி. குதிரை மட்டும் ஓட்டுவார். தம்பிக்கு போட்டியாக அவரும் விலையுயர்ந்த குதிரைகளை வாங்கி நேப்போல்ஸில் நிரப்ப ஆரம்பித்தார்.அடிக்கடி அண்ணனை கலாட்டா செய்வார் பாப்லோ. “போயும் போயும் குதிரைக் குட்டிகளை வாங்குவதற்கா இவ்வளவு செலவு செய்கிறாய்?”

ஒருமுறை ராபர்ட்டோ சூடாக பதிலடி கொடுத்தார். “தம்பி, நான் வாங்கும் குதிரைகளை நான் ஓட்ட முடியும். நீ வாங்கும் விலங்குகளை உன்னால் ஓட்ட முடியுமா? தில் இருந்தால் ஒரு காண்டாமிருகத்துக்கு மூக்கணாங்கயிறு போட்டு ஓட்டிக்கொண்டே போயேன் பார்ப்போம்!”
இதற்குப் பிறகே பாப்லோவுக்கு குதிரைகள் மீதும் ஆர்வம் பிறந்தது. அண்ணனுக்கு போட்டியாக அவரும் உயர் ரக அராபியக் குதிரைகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்தார்.

ஓர் அலங்கார ஊர்தியை தயார் செய்து, அதில் குதிரைகளைப் பூட்டி ஐரோப்பிய துரை கணக்காக தீவைச் சுற்றி வருவது பாப்லோவுக்கு பிடித்த பொழுது போக்கானது.தன்னுடைய நேப்போல்ஸ் விலங்கியல் பண்ணையை மக்களுக்காக அர்ப்பணிக்க திடீரென ஒருநாள் முடிவெடுத்தார். தானும், தன்னுடைய குடும்பமும் மட்டும் அனுபவித்து வரும் சொகுசை கொலம்பியா மக்களும் அனுபவிக்க வேண்டுமென்கிற பொதுவுடைமை சிந்தனை அவருக்கு ஏற்பட்டது.மெதிலின் செய்தித்தாள்களில் இதற்காக ஒரு விளம்பரம் கொடுத்தார்.

“நெபோல்ஸ் விலங்கியல் பண்ணை கொலம்பிய மக்களுக்கு சொந்தமானது. நம் குழந்தைகள் விளையாடி மகிழ, பெரியவர்கள் பொழுது போக்கு வதற்காகவே இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஏழை/பணக்காரன் பாகுபாடு இல்லை. அனைவரும் வாருங்கள். கட்டணமே கிடையாது!”

பாப்லோவின் விளம்பரத்தைக் கண்டதுமே கூட்டம் கும்மத் தொடங்கியது. கொலம்பியா முழுக்க இருந்து காரில் பெட்ரோல் போட்டுக்கொண்டு நேப்போல்ஸில் குழுமத் தொடங்கினார்கள். இவ்வளவு நாள் கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம், உடனே அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. பாப்லோ, இதுமாதிரி நோட்டீஸ்களை மதிப்பவரா என்ன?

ஓர் அரசு உயர் அதிகாரி நேரிடையாகவே தன்னுடைய டீமுடன் வந்து, விலங்கியல் பண்ணையை ரெய்டு அடித்தார். எண்பத்தைந்து விலங்குகளை, முறையான லைசென்ஸ் இல்லாமல் பண்ணையில் அவர் வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.பாப்லோ, வழக்கமான மந்தகாசச் சிரிப்போடு அந்த அதிகாரியை எதிர்கொண்டார்.“ஆமாம்.

 உங்கள் சட்டத்தின் வரையறைகளுக்குள் உட்படாத விலங்குப் பண்ணைதான் இது. ஆனால், இங்கிருக்கும் ஒவ்வொரு உயிரும் என்னுடைய உயிருக்கு நிகர். ஒன்றே ஒன்றை மட்டுமாவது முடிந்தால் பிடித்துப் போங்களேன் பார்ப்போம்…” மெதுவாக முகம் சிவக்கத் தொடங்கிய பாப்லோவைக் கண்டதுமே அதிகாரிக்கு வெடவெடத்து விட்டது.

“இல்லை பாப்லோ. நான் எனக்கு இடப்பட்டிருக்கும் பணியைத்தான் செய்ய வந்திருக்கிறேன். உங்களுக்கு எதிராக எனக்கு எந்த நினைப்புமில்லை...”“சரி. இப்போதே இந்தப் பண்ணைத் மொத்தத்தையும் நான் கொலம்பிய அரசுக்கு எழுதிக் கொடுத்து விடுகிறேன்.

பதிலுக்கு எனக்கொரு உறுதிமொழியை அரசு அதிகாரியாக நீங்கள் எழுதிக் கொடுங்கள். பசி, பட்டினியாலோ அல்லது தேவையான மருத்துவ வசதியின்மையாலோ இங்கிருக்கும் ஒரே ஓர் உயிர்கூட போகக்கூடாது. எழுதி கையெழுத்திட்டு தருகிறீர்களா?”

அதிகாரிக்கு தர்ம சங்கடமாகி விட்டது. இதற்குள்ளாக விலங்கியல் பண்ணை ரெய்டு பற்றி கேள்விப்பட்ட பொதுமக்கள் கூட்டமாகத் திரண்டு வந்து அரசுக்கு எதிராகவும், பாப்லோவுக்கு ஆதரவாகவும் கோஷமிட ஆரம்பித்தார்கள். பேருக்கு ஒரு ஃபைன் போட்டுவிட்டு அங்கிருந்து அவசரமாக விலகிச் சென்றார் அதிகாரி.

இந்த விலங்கியல் பண்ணை ரெய்டை கொலம்பிய ஊடகங்கள் பலவும் கண்டித்தன. மக்களுக்கு இதுமாதிரி ஒரு பொழுது போக்கு வசதியை சிறப்பாக நிர்மாணித்துத் தர துப்பில்லாத அரசாங்கம், செய்து தந்திருக்கும் பாப்லோ மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தது தவறு என்று அவர்கள் எழுதினார்கள்.

பொதுமக்களிடமிருந்தும், ஊடகங்களிலிருந்தும் திடீரென தனக்கு கிடைத்த இந்த ஆதரவு பாப்லோவை நெக்குருக வைத்தது. இதுநாள் வரை பணத்தாலும், ஆள் பலத்தாலும் மட்டுமே தனக்கான மரியாதையை உருவாக்கி வைக்க முடியுமென்கிற அவரது நம்பிக்கை தவிடு
பொடியானது.

நல்லது செய்தாலும் தலைவன் ஆகலாம் என்கிற நம்பிக்கை பாப்லோவுக்கு பிறந்தது. அரசியலில் குதித்து ஆட்சியைக் கைப்பற்றினால் என்னவென்று விபரீதமாக யோசிக்கத் தொடங்கினார். குஸ்டாவோவுக்கு இந்த ஐடியா பிடிக்கவில்லை.“பாப்லோ, நீ மிகப்பெரிய தவறைச் செய்ய முற்படுகிறாய்...” என்று நேரடியாகவே பேசினார் குஸ்டாவோ.

பொதுவாக பாப்லோ கட்டி வா என்றால் வெட்டி வரும் குணம் கொண்ட முரட்டுத்தனமான சகா அவர்.“இல்லை குஸ்டாவோ. நான் இந்த நாட்டின் அதிபர் நாற்காலியைக் கைப்பற்றுவதாக முடிவெடுத்து விட்டேன்!”“அதிபரை விட நீதான் நாட்டில் இப்போது பெரிய ஆள்...”“அப்படியென்று நீதான் சொல்ல வேண்டும். நான் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன். அதை நேர்வழியில் செய்வதே முறையானது.

நம்மை நாலு பேர் வாழ்த்தும்போது கிடைக்கும் போதை இருக்கிறதே, அது எத்தகைய உயர்ரக கோகெயினைவிடவும் போதையானது. அனுபவித்துப் பார்த்தால்தான் உனக்குத் தெரியும்!”

குஸ்டாவோவுக்கு பாப்லோவின் எண்ணம் புரிந்தது. கொலம்பியாவில் ஆட்சியாளர்கள் மாறிக் கொண்டிருந்தார்களே தவிர, ஏழைகளை அடக்கி ஒடுக்கும் கொள்கைகள் மட்டும் மாறியபாடில்லை. ஏழை மக்களின் வாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்களுக்காக பாடுபடக்கூடிய ஒரு தலைவன் அங்கே உருவாகவே இல்லை.

இயல்பிலேயே ஏழைகளின் மீது பரிவு கொண்ட பாப்லோ, தனக்காக அல்லாமல் மக்களுக்காகத்தான் அரசியலில் குதிக்க விரும்புகிறார்.அதே நேரம் தன்னுடைய தொழிலைப் பாதுகாத்துக் கொள்ளவும் அதிபர் பதவி உதவுமென்று கொஞ்சம் சுயநலமாகவும் பாப்லோ கணக்குப் போட்டிருப்பார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆட்சியில் அமர்ந்துவிட்டால் தன்னை அமெரிக்கா ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் நம்பியிருக்கலாம்.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Posted
 

காட்ஃபாதர்

 

போதை உலகின் பேரரசன் - 33

- யுவகிருஷ்ணா

அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் உச்சத்தில் இருந்த காலம் அது. கிரிமினல் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள், பணபலம் மூலமாக அதிகாரத்தை எட்டிவிடக் கூடாது என்கிற அக்கறையில் சட்டத்தில் நிறைய திருத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள். இதன் தாக்கம், உலகம் முழுக்கவே எதிரொலித்துக் கொண்டிருந்தது. அரசியலிலிருந்து கிரிமினல்களை முற்றிலும் ஒதுக்கி வைப்பதற்கான நடைமுறைகளைப் பற்றி எல்லா நாடுகளுமே யோசித்து வந்தன. கொலம்பியாவும்தான். இதெல்லாம் முழுக்க நடைமுறைக்கு வந்துவிடுவதற்குள், தான் நாட்டின் அதிபராகி விட வேண்டும் என்கிற அவசரம் பாப்லோ எஸ்கோபாருக்கு இருந்தது.
17.jpg
தன்னைப் போன்ற ஒரு காட்ஃபாதர், ஒரு நாட்டின் அதிபர் ஆவதின் மூலமாக இதுபோன்ற ‘தூய சட்டங்கள்’ ஏற்படுத்தப்படாதவாறு தடுக்க முடியும் என்று அவர் நம்பினார். ஒரு கிரிமினல், அதிகாரம் கிடைப்பதின் மூலமாக மட்டுமே திருந்துவான்; அவ்வாறு திருந்துபவன், தன்னுடைய பழைய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக மக்களுக்கு நல்லது மட்டுமே செய்வான் என்கிற வித்தியாசமான சித்தாந்தத்தை வெளிப்படையாகவே பேசினார் எஸ்கோபார். அதுவுமின்றி, நிழல் தொழில் செய்து ஓரளவுக்கு செட்டில் ஆனபிறகு, சட்டபூர்வமாக வாழ்க்கையை வாழ விரும்பும் தாதாக்களுக்கு அரசியல் மட்டுமே பாதுகாப்பான புகலிடமாக இருக்க முடியுமென்று அவர் உறுதியாக நினைத்தார்.

எனவேதான், தன்னுடைய சகோதரன் ராபர்ட்டோ மற்றும் சகா குஸ்டாவோ ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அரசியலில் குதிக்க முடிவெடுத்தார். “நான் நிச்சயம் கொலம்பியாவின் அதிபராகப் பொறுப்பேற்பேன். யாருமே எதிர்பாரா வகையில் அது சட்டென்று நடக்கும். அதிபராகப் பதவியேற்ற பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்துவேன். ஏழ்மையை விரட்ட இரவும், பகலுமாக பாடுபடுவேன். ஒரே வர்க்கம்தான் கொலம்பியாவை ஆளவேண்டுமென்று பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ன?” தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் எல்லாம் இப்படித்தான் பேச ஆரம்பித்தார் பாப்லோ.

ஆரம்பத்தில் இந்தப் பேச்சை எல்லாம் இகழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்த சக கார்டெல் தாதாக்கள், ஒரு கட்டத்தில் பாப்லோவின் அரசியல் பிரவேசத்தை சீரியஸாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். கிரிமினல்களின் பிரதிநிதியாக ஒருவர் அதிபராக உயர்வது தங்களுக்கும் பெருமைதானே என்று ‘இன’ரீதியாக சிந்திக்க ஆரம்பித்தார்கள். பாப்லோ அடிக்கடி சொல்வார். “அமெரிக்க சிறையில் உயிரோடு இருப்பதைவிட, கொலம்பிய மண்ணுக்கு உரமாக ஆறடிக்குள் உறங்குவதே பெருமை!” பாப்லோவின் அரசியல் பிரவேசத்தை அமெரிக்கா, கவலையோடு கவனிக்கத் தொடங்கியது.
17a.jpg
ஒருவேளை இவர் அதிகாரத்தை கைப்பற்றி விட்டால், சட்டவிரோதம் என்று சொல்லக்கூடிய போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட நிழல் தொழில்களுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கிவிடுவாரோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். பாப்லோ கும்பலின் அரசியல் நோக்கம் நிறைவேறிவிடக் கூடாது என்பதற்காக எதையும் செய்ய அமெரிக்கா தயாரானது. அப்போதெல்லாம் தென்அமெரிக்காவில் அமெரிக்க எதிர்ப்பு பேசுவது ஒரு ஃபேஷன். அமெரிக்காவை எதிர்ப்பவர்களெல்லாம் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகப் போராடும் போராளிகளாக பார்க்கப் பட்டார்கள். மக்களின் இந்த மனநிலையை நன்கு உணர்ந்திருந்தார் பாப்லோ.

அவருடைய போதைத் தொழிலுக்கு சாவு மணி அடிக்கும் அமெரிக்காவை சுயநலத்தோடுதான் எதிர்த்தார் என்றாலும், அதை பொதுநல செயல்பாடாக மக்கள் முன்பாக முன்வைத்தார். அரசியலில் அடிக்கடி, ‘குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது’ என்கிற உவமானத்தை சொல்வார்கள். பாப்லோவும் அதைத்தான் முயற்சித்தார். நேரடியாக நாட்டைக் கைப்பற்றும் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு முன்பாக, கொலம்பிய பாராளுமன்றத்தில் (அங்கே பாராளுமன்றத்தை காங்கிரஸ் என்பார்கள், அதற்கும் நம் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பு மில்லை) ஓர் உறுப்பினராக ஜனநாயகரீதியில், தான் தேர்ந்தெடுக்கப்பட வெண்டும் என்று முடிவெடுத்தார்.

அதுவுமின்றி ஒரு கொலம்பிய பாராளுமன்ற உறுப்பினர் மீது சட்டரீதியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கிற பாதுகாப்பும் அவருக்கு கிடைக்கும். கொலம்பிய காங்கிரசுக்கு, தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர் முதன்மை உறுப்பினர். அவருக்கு உடல்நலம் குன்றிவிட்டது அல்லது பல்வேறு காரணங்களால் செயல்பட முடியாமல் போய்விட்டது என்றால் மாற்று உறுப்பினர், அவர் சார்பாக பணிகளைச் செய்வார். தான், வளர்ந்த என்விகாதோ பகுதியின் சார்பாக காங்கிரசுக்கு மாற்று உறுப்பினராக போட்டியிட விரும்பினார் பாப்லோ.
17b.jpg
முதன்மை உறுப்பினராக தன்னுடைய ஆட்களிலேயே ஒருவரை பினாமியாக ஜெயிக்க வைக்கவும் திட்டமிட்டிருந்தார். தானே முதன்மை உறுப்பினராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டால், அது சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார். அதாவது நம்மூரில் உள்ளாட்சித் தேர்தல்களில் மனைவியை ஜெயிக்க வைத்து கணவனே ஆள்வது மாதிரி ஒரு செட்டப்பைத்தான் பாப்லோ மனதுக்குள் வைத்திருந்தார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கட்சி புதிய சுதந்திரக் கட்சி. கொலம்பியாவை தொடர்ச்சியாக ஆண்டு வந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த இந்தக்கட்சிக்கு ஏழை மக்கள் மத்தியில் அனுதாபம் இருந்தது. ஏழைக்கட்சியான இதை தன்னுடைய பணபலத்தின் மூலமாக விரைவில் கைப்பற்றி விடலாம் என்று பாப்லோ இக்கட்சியை தேர்வு செய்தார்.

பாப்லோவிடமிருந்து கணிசமாக தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்ட புதிய சுதந்திரக் கட்சி, அவருக்கும் அவர் கை நீட்டுபவர்களுக்கும் தேர்தலில் சீட்டு தருவதாக ஆரம்பத்தில் உறுதியளித்தது. ஆனால், திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது. அரசியலில் கிரிமினல்களுக்கு இடமில்லை என்றெல்லாம் அக்கட்சி ஆதரித்த அதிபர் வேட்பாளர் லூயிஸ் கார்லோஸ் அறமெல்லாம் பேச ஆரம்பித்தார். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் பாப்லோ, இவரையெல்லாம் போட்டுத் தள்ளிவிட்டு தலைமைப் பதவியைக் கைப்பற்றியிருப்பார்.

ஆனால் - தேர்தல் அரசியலில் குதித்துவிட்டால் எல்லாப் பிரச்னைகளையுமே நிதானமாகத்தான் கையாள வேண்டும் என்பதற்காக இந்த அவமானங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அவசர அவசரமாக, சுதந்திரக் கட்சி என்கிற ஒரு உப்புமா கட்சியைப் பிடித்து தனக்கும் தன்னுடைய ஆட்களுக்கும் போட்டியிட சீட்டு வாங்கினார். பாப்லோவின் அரசியல் பிரவேசம், கொலம்பிய தேர்தலையே வண்ணமயமாக மாற்றியது. நீண்ட பேரணிகளை, மிகவும் ஏழைகள் வாழ்ந்த பகுதிகளில் நடத்தினார். பேரணியில் திறந்த ஜீப்பில் கையை ஆட்டியபடியே வலம் வருவார். மிகச்சாதாரணமாக உடையணிந்திருப்பார்.

ஜீப்பை சுற்றி, பாப்லோவின் பாதுகாவலர்கள் துண்டு நோட்டீஸ் வழங்குவதைப்போல, ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு வழங்கியவாறே, ‘உங்க ஓட்டு பாப்லோவுக்கு’ என்று முழக்கமிட்டுக் கொண்டே வருவார்கள். அதிர்ஷ்டம் இருந்தால், ஒரு வாக்காளரே முட்டி மோதி நான்கைந்து நோட்டுகள்கூட வாங்க முடியும். ‘துட்டுக்கு ஓட்டு’ என்கிற இப்போதைய இந்திய இடைத்தேர்தல் ஃபார்முலாவை உலகத்துக்கே வெற்றிகரமாக வெளிப்படையாக நடத்திக் காட்டிய பெருமை, பாப்லோவையே சாரும். ஒவ்வொரு பேரணி முடியும்போதும் ஒரு பிரும்மாண்ட கூட்டம் நடக்கும்.

கூட்டத்தில் பாப்லோவின் பேச்சு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். “நான் மக்களின் மனிதன். செயல்பாடுகளின் நாயகன். வார்த்தை தவறாதவன்” என்று ஆரம்பிப்பார். இதையேதான் தேர்தல் கோஷமாக அவரது ஆதரவாளர்கள் மாற்றினார்கள். வானத்தை வளைத்து பாப்லோ வில்லாக்குவார் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வழங்க ஆரம்பித்தார்கள். பாப்லோவின் கூட்டங்களுக்கு மக்கள் அலைஅலையாக வந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் பாக்கெட் நிரம்ப கரன்ஸிகளோடு வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

பாப்லோவின் தேர்தல் கூட்டங்களில் பாட ‘பாப்லோ கீதம்’ ஒன்றை இயற்றினார் அவரது அம்மா ஹெர்மில்டா. அந்தப் பாடலின் குத்துமதிப்பான மொழிபெயர்ப்பு இதுதான். தமிழில் வாசிக்கும்போது கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும், ஸ்பானிய மொழியில் ரொம்பவும் இனிமையாக இருக்குமாம். பாப்லோ வீட்டுக் குழந்தைகள், இந்தப் பாடலை மைக்கில் பாடும்போது, கூட்டம் மொத்தமும் மெய்சிலிர்க்குமாம்.

‘ஒரு மனிதன் பிறந்திருக்கிறான் அவன் மாற்றங்களின் நாயகன் நல்ல குடிமக்களாகிய நாம்தான் அவனை ஆதரிக்க வேண்டும் அவனொரு புதிய தலைவன் அவனுக்கு வாக்களிக்க மக்கள் போட்டி போட்டு ஓடுகிறார்கள் ஒவ்வொரு ஓட்டமும் ஒவ்வொரு வாக்கு பாப்லோவுக்கு வாக்களிப்போம் நம் தலையெழுத்தை நாமே தீர்மானிப்போம்!’
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Posted
 

காட்பாதர் 34

போதை உலகின் பேரரசன்

‘பணமழை பொழிந்தது’ என்று சொல்வது ஒரு பேச்சுக்குத்தான். பாப்லோ, தேர்தல் அரசியலில் குதித்ததுமே நிஜமாகவே பணமழை கொலம்பியாவில் பொழிந்தது.போதைக் கடத்தலுக்காக அவர் வாங்கியிருந்த விமானங்கள், வானத்தில் வட்டமிடும். ‘பாப்லோவுக்கு உங்கள் ஓட்டு’ என்று அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் கரன்ஸி நோட்டை பின் செய்து அப்படியே வீசுவார்கள். தெருவெல்லாம் பணம் வந்து விழும்.
16.jpg
அவற்றை பொறுக்கியெடுக்க மக்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஓடும். விழுந்த பணத்தையெல்லாம் பொறுக்கியெடுத்ததும், அடுத்த விமானம் எப்போது வருமென்று வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள்.

தேர்தலில் ஜெயிப்பதற்கு முன்பாகவே பணத்தால் அடிக்கும் பாப்லோ, பதவிக்கு வந்துவிட்டால் கொலம்பியாவின் ஏழ்மை மொத்தமும் ஒழிந்துவிடும் என்று அசட்டுத்தனமாக ஏழை வாக்காளர்கள் நம்பியதில் ஏதும் ஆச்சரியமில்லை.

அரசியலில் அளவுக்கதிகமான பணத்தை பாப்லோ முதலீடு செய்வதை ரசிக்காத நடுத்தர வர்க்கமும் அங்கே இருந்தது. அவர்களை ஈர்க்கவும் பாப்லோவிடம் ஆயுதம் இருந்தது.தான், பேசும் ஒவ்வொரு கூட்டத்தையுமே அமெரிக்க எதிர்ப்புக் கூட்டமாக நடத்தத் தொடங்கினார்.

எண்பதுகளில் உலகம் முழுக்கவே அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை சராசரி மனிதர்களுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருந்தது. அதை விசிறி விடும் வேலையை பாப்லோவின் பேச்சு கச்சிதமாக செய்தது.
16a.jpg
“கொலம்பியா, நம்முடைய நாடு...” என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார்.“நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க அமெரிக்கா யார்? நம் அரசுடைய கொள்கைகள் என்னவென்று அமெரிக்கன் வரையறுப்பதா?” என்று ஆரம்பத்திலேயே சூட்டைக் கிளப்புவார்.

‘அமெரிக்கன் என்ன நம்மூரில் கஞ்சா பயிரிட்டானா, அதை அறுவடை செய்து பவுடராக்கினானா, உலகெங்கும் விமானத்தில் எடுத்துப் போய் விற்பனை செய்தானா?’ ரேஞ்சுக்கு மறைமுகமாக பாப்லோ பேச, அவருடைய போட்டி கார்டெல்கள்கூட பாப்லோவுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தர முன்வந்தார்கள்.
16b.jpg
1982ல் அமெரிக்காவில் அதிபர் ஆகியிருந்த ரொனால்டு ரீகன், தங்கள் நாட்டுக்குள் கொலம்பிய போதைப் பொருட்கள் ஊடுரு வுவதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த கொலம்பியாவையே தீவிரவாத நாடு என்பதைப் போன்று நடத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சாதாரண பிரச்னைகளில் சிக்கிய பல நூறு கொலம்பியர்கள், போதை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுக்க சிறைகளில் காலம் கழிக்க வேண்டிய அவலநிலையில் இருந்தார்கள்.

தன்னுடைய போதைத் தொழிலுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை, சராசரி கொலம்பியனுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதாக ஒரு பொதுக்கருத்தை பாப்லோ உருவாக்க, மற்ற கார்டெல்களும் ‘ஆமாம் சாமி’ போட்டார்கள். எல்லா நாடுகளில் வாழும் குடிமக்களும் அப்பாவிகள்தானே? யார் என்ன சொன்னாலும் தலையை ஆட்டிவிட்டு போய்விடுவார்கள்.

தேர்தல் அரசியலுக்கு வந்ததுமே, பாப்லோ செய்த நல்ல காரியம் ஒன்று உண்டு. வழக்கமாக, தான் எதை செய்தாலும் கூடவே வைத்துக் கொள்ளும் குஸ்டாவோ, ராபர்ட்டோ போன்றவர்களை விலக்கிவிட்டு தன்னுடைய அரசியல் ஆலோசகராக ஆல்பெர்ட்டோ என்பவரை நியமித்தார்.

கொலம்பிய அரசியலில் நீண்டகால அனுபவம் பெற்ற ஆல்பெர்ட்டோ, பாப்லோ எதையெல்லாம் பேசலாம், எதையெல்லாம் செய்யலாம் என்பது குறித்து உருப்படியான ஆலோசனைகளை வழங்கினார்.

ஆல்பெர்ட்டோ, செனட்டர், அமைச்சர் என்று பெரிய பதவிகளை வகித்தவர். அவருக்கு அந்நாட்டின் அதிபர் ஆகவேண்டும் என்கிற கனவு இருந்தது. நேர்மையான வழியில் அதிபர் சீட்டை எட்டுவது கடினம் என்கிற நிலையில் பெரும் பணபலமுள்ள பாப்லோ உள்ளிட்ட கிரிமினல்களின் உதவியால் தன்னுடைய லட்சியத்தை விரைவில் எட்ட முடியுமென்று நம்பினார்.

அவருக்கும் பாப்லோவுக்கும், ஒரு சுவாரஸ்யமான ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருந்தது. தான் அதிபர் ஆனதுமே, கார்டெல்கள் மீதிருக்கும் அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெற்று விடுவதாகவும், சட்டத்தையே போதைத்தொழிலுக்கு ஒத்துழைக்கும் வகையில் திருத்துவதாகவும் ஆல்பெர்ட்டோ சொன்னார். ஆதை ஆமோதித்த பாப்லோ எஸ்கோபார், பதிலுக்கு அதிரடியான ஒரு கோரிக்கையை வைத்தார்.

“ஆல்பெர்ட்டோ, அதிபர் ஆகாமல் உங்கள் உயிர் போகாது. இதற்கு நான் உத்தரவாதம். ஆனால், நீங்கள் ஒருமுறைதான் அதிபர் ஆகவேண்டும். அடுத்த முறை உங்கள் நாற்காலியில் நான்தான் அமர்வேன்.

அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்...”ஆல்பெர்ட்டோ அதிர்ந்துவிட்டார். இருந்தாலும், முதலில் தன் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டு, பிற்பாடு பாப்லோவை சமாளித்துக் கொள்ளலாம் என்கிற நரித்தந்திரத்தோடு கை கோர்த்திருந்தார்.

தேர்தலுக்கு வந்துவிட்டதால் பாப்லோ அதுவரை கண்டிராத சில புதிய எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. கார்டெல்களுக்கு எதிராக அதுவரை வாயே திறக்காதிருந்த மக்கள், இவர்கள் தங்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்க வந்ததால், கண்டமேனிக்கு பேச ஆரம்பித்தார்கள்.

அதுவரை ‘கார்டெல்’ என்கிற சொல் கவுரவமாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாழ்வுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, இவர்களையெல்லாம் கடத்தல்காரர்கள் என்று பச்சையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள் எல்லாம், “கடத்தல் முதலைகளின் கையில் அரசுப் பொறுப்பை கொடுப்பதைவிட கழுத்தை அறுத்துக் கொண்டு ஒவ்வொரு கொலம்பிய குடிமகனும் செத்துவிடலாம்...” என்று காட்டமாகப் பேச ஆரம்பித்தார்கள்.

‘இவனுங்களை எல்லாம் போட்டுத் தாளிக்கிறேன்...’ என்று வெகுண்டெழுந்த பாப்லோவை, ஆல்பெர்ட்டோதான் அமைதிப் படுத்தினார்.“போதை பிசினஸ் வேறு, அரசியல் வேறு. தேர்தல் களத்தில் பேசப்படும் பேச்சுக்கெல்லாம் எந்தப் பொருளும் கிடையாது.

இன்று உன்னை கேவலப்படுத்தி பேசுபவனுடைய உதவியே, நாளை உனக்கு தேவைப்படும். எதையும் கண்டுகொள்ளாதே. உன்னுடன் ஓட அவனையும் அனுமதி. ஆனால், அவனைவிட வேகமாக ஓடி இலக்கை அடைவதற்காக கடுமையாக முயற்சி செய்...” என்று அறிவுறுத்தினார்.

‘நீங்கள் கொஞ்சம் ஒதுங்கியே இருங்கள்...’ என்று பாப்லோ சொல்லியிருந்தாலும், அவரது சகாக்கள் அப்படி இருந்து விடவில்லை. எந்த வகையிலெல்லாம் பாப்லோவுக்கு ஆதரவைப் பெருக்க முடியுமோ, அத்தனை முயற்சிகளையும் அவரவர் பங்குக்கு செய்து கொண்டேதான் இருந்தார்கள்.

பாப்லோவை ஆதரித்து எழுதும்படி ஊடகங்களுக்கு ‘அன்பாக’ கோரிக்கை விடுத்தார்கள். ‘வெறும் அன்பு வேலைக்கு ஆகாது’ என்றவர்களின் அன்புக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. அன்புக்கும் அடங்கமாட்டோம், காசுக்கும் பணியமாட்டோம் என்றவர்கள் துப்பாக்கி முனையில் பாப்லோ எஸ்கோபார் புகழ் பாடவேண்டிய அவலநிலை இருந்தது. இதன் விளைவாக, ‘நவீன ராபின்ஹுட் பாப்லோ’ என்று தங்கள் மனசாட்சியை அடகுவைத்து தலையங்கம் எழுதின பத்திரிகைகள்.

மக்களுக்கு பாப்லோ கொடுத்த வாக்குறுதிகள் எளிமையானவை.“ஃபுட்பால் கிரவுண்டில் விளக்கு எரியும்...”“சர்ச்சுகளுக்கு பெயிண்ட் அடிக்கப்படும்...”“பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள்...”இதுபோல சப்பையான வாக்குறுதிகள்தான் பெரும்பாலும்.

‘கொலம்பியாவை கோபுரமாக்குவோம்...’ என்று பேசிக்கொண்டிருந்த அவரது போட்டியாளர்கள், இந்த சின்ன லெவல் வாக்குறுதிகளைக் கண்டு நகைத்தார்கள்.
ஆனால் -மக்கள், பாப்லோ கொடுக்கும் வாக்குறுதிகளைத்தான் நம்பினார்கள். அவர்களுடைய உடனடித்தேவை என்னவோ, அதை குறிவைத்துத்தான் பாப்லோ பேசினார்.

அப்போது கொலம்பியாவில் அரசியல்வாதி களாக இருந்தவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள். அரசியல் என்பதே பணக்காரர்களின் பொழுதுபோக்காக இருந்தது. மாறாக, சாதாரண குடும்பத்தில் பிறந்து, கடினப்பட்டு போதைத்தொழில் செய்து முன்னேறிய பாப்லோவை தங்களில் ஒருவனாக மக்கள் நினைத்தார்கள். தங்களில் ஒருவன், பரம்பரை பணக்காரர்களை எதிர்த்து அதிகாரத்தை கைப்பற்றினால்தான் அதிகாரம் ஒரே இடத்தில்
குவிந்துவிடாமல் பரவலாகுமென்று நம்பினார்கள்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Posted
 

காட்ஃபாதர்

 
 

போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 35

அந்த தேர்தலில் கொலம்பிய ஊடகங்கள் பாப்லோவை ஆதரித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆதரித்தால் லாபம். எதிர்த்தால் வம்பு. நமக்கென்ன போச்சு என்று, ‘கொலம்பியாவின் ராபின்ஹுட்’ என்று தலைப்பிட்டு எஸ்கோபாரின் அருமை பெருமைகளை பக்கம் பக்கமாக எழுதின.அதே நேரம் பழைய அரசியல் கட்சிகளான சுதந்திரக் கட்சியும், புதிய சுதந்திரக் கட்சியும் பாப்லோவின் அரசியல் நுழைவை மிகக்கடுமையாக எதிர்த்தன. அதுவரை நாகரிகமாக இவர்களை ‘கார்டெல்’ என்று சொல்லி அழைத்துக் கொண்டிருந்தவர்கள், நேரடியாக ‘போதை வியாபாரிகள்’ என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். எதிரும் புதிருமான அந்த இரு கட்சிகளும் இணைந்து ‘போதை வியாபாரிகளுக்கா உங்கள் ஓட்டு?’ என்று ஒருமித்த முழக்கத்தை எழுப்பின.
16.jpg
தேர்தல் நாளன்று பாப்லோவின் ஊழியர்கள் பம்பரமாகச் சுழன்றார்கள். நிறைய பேருந்துகளை அமர்த்தி வாக்காளர்களை (குறிப்பாக ஏழைபாழைகளை) வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்து வந்தார்கள். படுத்த படுக்கையாகக் கிடந்தவர்களைக் கூட ஸ்ட்ரெச்சர் வைத்து அழைத்து வந்து ஓட்டு போட வைத்தார்கள். பாப்லோதான் வென்றிருப்பார் என்பதை தனியாக உங்களுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. அமோக வெற்றி. கொலம்பியாவின் காங்கிரஸுக்குள் (நம்மூர் பாராளுமன்றம் மாதிரி) முதன்முறையாக ஒரு போதைக்கடத்தல் மன்னன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நுழைகிறார்.

காங்கிரஸ் உறுப்பினர் (அதாவது நம்ம எம்.பிக்கள் போல) என்றால் விலையுயர்ந்த கோட் சூட் உடுத்தி, அழகாக டை கட்டியிருக்க வேண்டும். பொதுவாக டை கட்டும் வழக்கம் பாப்லோவுக்கு இல்லை. அவர் முதன்முதலாக பகோடா நகரில் இருந்த காங்கிரஸுக்குள் நுழைந்த அன்று, டை கட்டவில்லை என்று காரணம் கூறி அவரை வெளியே நிறுத்தினார் பாதுகாவலர். காங்கிரஸுக்குள் பாப்லோவுக்கு அனுமதி இல்லையென்றதுமே, அச்செய்தி ஃப்ளாஷ் நியூஸாக ரேடியோவில் அலறியது. பத்திரிகையாளர்கள் குவிந்தார்கள். பாப்லோ அவர்கள் மத்தியில் முழங்க ஆரம்பித்தார்.

“ஆடம்பரமான கோட் சூட், விலையுயர்ந்த டை அணிவதுதான் ஒரு காங்கிரஸ் உறுப்பினரின் அடையாளமா? மக்கள் பணத்தைத் திருடுவதற்காக இப்படி நாகரிகமான தோற்றத்தில் வருகிறார்கள். நான் அப்படி அல்ல. மக்களில் ஒருவன். மக்களுக்காக இங்கே வந்திருக்கிறேன்...”பாப்லோவை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள் என்று கேள்விப்பட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் பேரணி மாதிரி காங்கிரஸ் கட்டடத்துக்கு முன்பாக அணி அணியாக வர ஆரம்பித்தார்கள். பாதுகாவலருக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது.
16a.jpg
“பாப்லோ சார். நீங்க பேசுவதெல்லாம் நியாயம்தான். ஆனால், நீங்கள் ‘டை’ அணியாத நிலையில் உங்களை உள்ளே அனுமதித்தால் என் வேலை போய்விடும். தயவுசெய்து என்னுடைய ‘டை’யையாவது அணிந்துகொண்டு முதலில் உள்ளே செல்லுங்கள். மற்ற விஷயத்தை அப்புறம் பேசிக்கொள்ளலாம்...” என்றார். பரிதாபகரமான அவரது நிலையைக் கண்ட பாப்லோ, அதுபோலவே செய்தார். உள்ளே சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். கழுத்தில் இருந்த ‘டை’யைக் கழற்றி வீசி எறிந்தார். எல்லோரும் அவரையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நான் பாப்லோ. மக்கள் பணி செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே வந்திருக்கிறேன். என் பணியைச் செய்ய இந்த ‘டை’ தேவையில்லை. என் கொலம்பிய சகோதரர்கள் ஒட்டு போட்ட உடை அணிந்து கொண்டு ஒருவேளை சாப்பாட்டுக்கு சாலையில் நிற்கிறார்கள். நானோ இங்கு அலங்காரமாக கோட் சூட் டை அணிந்து உங்கள் மத்தியில் பஜனை செய்து கொண்டிருக்க முடியாது. நான் என்ன உடையை உடுத்த வேண்டும் என்பது என் தேர்வு. புரிகிறதா?”பாப்லோவின் கர்ஜனை அந்த பழமையான காங்கிரஸ் கட்டடத்தின் மூளை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. பழம் பெருச்சாளிகள் அத்தனை பேரும் பாப்லோவைக் கண்டதுமே ஓடி ஒளியத் தொடங்கினார்கள்.

பெரிய படிப்போ, அரசியல் வரலாறோ அறிந்தவர் இல்லை பாப்லோ. ஆனால், ஏழை மக்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவர் யாரும் அவரளவுக்கு அப்போது காங்கிரஸில் இல்லை. காங்கிரஸில் விவாதிக்கக்கூடிய அளவுக்கு மதிப்பில்லாத சிறிய விஷயங்கள் என்று ஒதுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் பாப்லோதான் பேசினார். ஏழைகளின் குரலாக, ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக பாப்லோ ஒருவர்தான் காங்கிரஸில் இருந்தார். அவருடன் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சகா ஒர்டேகாதான் இவருக்கு முழு ஆதரவு. பாப்லோ என்ன பேசினாலும் ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டுவார்.
16b.jpg
ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கும், கொலம்பியாவுக்கும் பாரம்பரிய ரீதியான உறவு உண்டு. அப்போது ஸ்பெயினில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரை நேரில் சந்தித்து கொலம்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு ஒன்று வாழ்த்தி சிறப்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அராஜகம் செய்து அந்த குழுவில் இடம்பெற்றார் பாப்லோ எஸ்கோபார். அலுவல்ரீதியான அவரது முதல் பயணம் ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்துக்குத்தான். காங்கிரஸ் உறுப்பினர் என்கிற முறையில் ஐரோப்பாவுக்கு வந்திருந்தாலும், அதை தன்னுடைய ‘பிசினஸ் ட்ரிப்’ ஆகவும் பயன்படுத்திக் கொண்டார் பாப்லோ.

ஸ்பெயினில் இருந்த பல்வேறு தொழிலதிபர்களைச் சந்தித்து தன்னுடைய பிசினஸ் டீலிங்கையெல்லாம் முடித்துக் கொண்டார். மேலும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த காங்கிரஸ் குழு சென்றது. குறிப்பாக மொனாக்கோ நாடு பாப்லோவை மிகவும் கவர்ந்திருந்தது. தன்னுடைய கடைசிக் காலத்தை மொனாக்கோவில் அமைதியாகக் கழிக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆசை பிறந்தது. ஊர் திரும்பியதுமே மெதிலின் நகரில், தான் கட்டிக் கொண்டிருந்த ஆடம்பர பங்களாவுக்கே மொனாக்கோ என்று பெயர் வைக்கக்கூடிய அளவுக்கு அந்நாட்டின் மீது அவருக்கு பாசம் ஏற்பட்டிருந்தது. கொலம்பிய காங்கிரஸுக்குள் நுழைந்தபிறகு பாப்லோவின் மனதில் நிறைய மாற்றங்கள்.

அதுவரை தன்னை மெதிலின் கார்டெல் தலைவர் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டவர், போதைத் தொழிலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி காட்டிக்கொள்ள விரும்பினார். உண்மையைச் சொல்லப்போனால், இதுபோன்ற நிழல் காரியங்களில் இருந்து விலகி நேர்மையான அரசியல்வாதியாக உருவெடுக்கவே ஆசைப்பட்டார். ஆனால் - அவர் பிடித்திருந்தது புலிவால் ஆயிற்றே? அவ்வளவு சுலபத்தில் விட்டுவிட முடியுமா? பல்வேறு விவாதங்களின் போது பாப்லோ ஏதேனும் பேசினால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்துகொண்டு, பாப்லோவின் போதைத் தொழிலைக் குத்திக் காட்டி அவரை இழிவுபடுத்தத் தொடங்கினார்கள்.

பாப்லோவின் பழைய கதைகளையெல்லாம் தோண்டியெடுத்து மக்கள் மேடைகளிலும் கிண்டலாகப் பேசத் தொடங்கினார்கள். தர்மசங்கடப்பட்ட பாப்லோ, “நான் ஒரு தொழிலதிபர். ரியல் எஸ்டேட் செய்து நேர்மையாக (!) பணம் சம்பாதித்தவன். அவ்வாறு சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவழிக்கவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்...” என்று விளக்கம் அளித்தார். கைப்புண்ணை பார்க்க கண்ணாடி எதற்கு? ஊர், உலகத்துக்கே தெரியும், பாப்லோ, ஒரு போதை கார்டெல் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்று. கொலம்பியாவில் அப்போது நாகரிகமான ஓர் அரசியல் முறை இருந்தது. அமைச்சரவையில் எதிர்க்கட்சிக்கும் இடம் அளிப்பார்கள். அம்மாதிரி புதிய சுதந்திரக் கட்சியின் லாரா என்பவர், சட்டத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார்.

அவர்தான் பாப்லோ எஸ்கோபாருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். சட்ட அமைச்சர் என்பதால், பழைய ஃபைல்களைப் புரட்டிப் பார்த்து பாப்லோவை கிழிகிழியென்று கிழிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. ஒருமுறை காங்கிரஸில் குற்றம் சாட்டினார். “பாப்லோ, நீங்கள் ஒரு போதை வியாபாரி என்பதால்தான் அமெரிக்கா உங்களுக்கு விசா தர மறுக்கிறது...” பாப்லோ உடனே மறுத்தார். “இல்லை. எனக்கு அமெரிக்கா விசா தர மறுக்கவில்லை. அமைச்சர், உண்மைக்குப் புறம்பான தகவலை அவைக்குத் தருகிறார்...”சொல்லிவிட்டு வெளியே வந்த பாப்லோ, உடனடியாக சுற்றுலா என்று காரணம் கூறி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்தார்.

அமெரிக்காவுக்கும், அமைச்சருக்கும் என்ன அண்டர்கிரவுண்ட் டீலிங்கோ தெரியவில்லை. பாப்லோவின் விசா விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்பட்டு, அதுகுறித்த செய்திக் குறிப்பையும் அமெரிக்க தூதரகம் ஊடகங்களுக்கு கொடுத்தது. அமெரிக்காவில் நிகழ்ந்த பல்வேறு போதைக் குற்றங்களின் சூத்திரதாரி பாப்லோ என்றும் நேரடியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் விசாரணைக்கு ஏதுவாக பாப்லோவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸில் குரல் எழுந்தது. அரசியல் என்கிற தேன்கூட்டுக்குள் கை வைத்ததின் பலனை பாப்லோ அனுபவிக்கத் தொடங்கினார். எத்தகைய தொழில் சிக்கலையும், கண்மூடி கண் திறப்பதற்குள் தீர்த்துவிடும் பாப்லோ, அரசியல் களத்தில் அபிமன்யூவாக மனமுடைந்து நின்றார்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Posted
 

காட்ஃபாதர்

 

போதை உலகின் பேரரசன் - 36

- யுவகிருஷ்ணா

கொலம்பியா மக்களைப் பொறுத்தவரை போதைத்தொழிலை ஒரு பாவச்செயலாகப் பார்க்கவில்லை எனவேதான் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் வந்தபோதெல்லாம் பாப்லோ எஸ்கோபார் அவ்வளவாகக் கண்டுகொண்டதில்லை. ஏனெனில் சுமார் இரண்டு லட்சம் கொலம்பியர்களுக்கு அப்போது வேலைவாய்ப்பு இந்த தொழிலில்தான் கொட்டிக் கிடந்தது. மேலும், கொலம்பியாவில் தயாராகும் போதை மருந்து கொலம்பியர்களுக்கு விற்கப்படு வதில்லை. அவை அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளுக்குத்தான் ஏற்றுமதியானது. நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, நம் மீது விழுந்து பிடுங்காதவரை சரியென்று இந்தத் தொழிலை அரசாங்கம் கண்டும் காணாமலும்தான் இருந்தது.
23.jpg
அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் கணிசமாகக் கட்டிங் வேறு கிடைத்துக் கொண்டிருந்தது இல்லையா? ஆனால், பாப்லோ அரசியலுக்கு வந்ததுமே இந்த விஷயத்தை பூதாகரமான பிரச்னையாக மாற்றினார்கள். குறிப்பாக சட்ட அமைச்சர் லாரா. பாப்லோவை மட்டுமின்றி ஒட்டுமொத்த போதை கார்டெல்களையும் வேரோடு பிடுங்கி எறியவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். போதைத்தொழிலுக்கு ஆதரவாக இருந்துதான் ஓர் அரசாங்கம் நடைபெற வேண்டும் என்கிற நிலைமையை கடுமையாக வெறுத்தார். உலக அரங்கில் இதனால் கொலம்பியாவின் மானம் கப்பலேறுவது அவருக்கு தர்மசங்கடமாக இருந்தது.

கொலம்பிய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய முப்பது பேருக்கு போதைத் தொழிலோடு தொடர்பு இருப்பது குறித்த விவரங்களை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தினார். தொடர்ச்சியாக போதைத்தொழில் தொடர்பான எதிர்மறையான எண்ணங்களை மக்களிடம் ஏற்படுத்தி வந்தார். சட்டபூர்வமான முறையில் கார்டெல்களுக்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அத்தனையையும் கச்சிதமாகச் செய்தார். மெதிலின் நகர் கார்டெல்களுக்கு சுமார் 300 சிறுவிமானங்கள் இருந்து வந்தன. பெரும்பாலானவை பாப்லோவுக்கு சொந்தமானவை. இவை மூலமாகத்தான் சரக்குகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
23a.jpg
இந்த விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்ஸ் அதிரடியாக திரும்பப்பெறப்பட்டது. லைசென்ஸ் கொடுத்த அரசு அதிகாரிகள் பலரும் சிறையில் தள்ளப்பட்டார்கள். கொலம்பியாவின் முக்கியமான விளையாட்டு கால்பந்து. மொத்தம் ஒன்பது அணிகள் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தன. இதில் ஆறு அணிகள், போதை கார்டெல்களின் ஆதரவில் இயங்கிக் கொண்டிருந்ததை வெட்ட வெளிச்சமாக்கினார். போதைத்தொழில் என்பது வாழ்வுரிமை என்கிற கொலம்பியர்களின் இயல்பான எண்ணத்தை மாற்றுவதில் லாரா பெருமளவு வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.

 ‘உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழும் எவனோ ஒரு இளைஞனின் உயிரைக் குடித்து நாம் உயிர் வாழ வேண்டுமா?’ என்று உணர்ச்சி பூர்வமாக அவர் கேட்ட கேள்வி, சராசரி கொலம்பியன் ஒவ்வொருவனுக்கும் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. மெதிலின் நகர மக்களின் பெருவாரியான ஆதரவோடு தொழில் செய்துகொண்டிருந்த பாப்லோ எஸ்கோபார் சற்றும் எதிர்பாராத  ட்விஸ்ட் இது. அவர் அரசியலுக்கு வந்ததின் விளைவாகவே தங்கள் மீதெல்லாம் அரசு கோபம் கொண்டு நடவடிக்கை எடுக்கிறது என்று சக கார்டெல்காரர்களும் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்கள். யாருமே அசைக்க முடியாத போதை சாம்ராஜ்யத்தின் தலைமைப் பதவியில் வீற்றிருந்த பாப்லோவின் அஸ்திவாரத்தையே லாரா அசைத்துப் பார்த்தார்.

போதைத் தொழிலுக்கு எதிரான விழிப்புணர்வை அழுத்தமாக ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அத்தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். எங்கெல்லாம் கோகெயின் பயிரிடப்படுகிறதோ, எங்கெல்லாம் கோகெயின் பவுடர் தொழிற்சாலைகள் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் ரெய்டு நடந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஒரு பிரும்மாண்டமான ரெய்டு டிரான்குயிலேண்டியா என்கிற மிகப்பெரிய காட்டுக்குள் அமைந்திருந்த தொழில்ற்சாலைகளில் நடந்தது. மெதிலின் நகர் போதை கார்டெல்கள் அனைத்துக்குமே இங்கு தொழிற்சாலைகள் இருந்தன. காட்டுக்கு மத்தியில் அமைந்த பரந்து விரிந்த பெரிய தொழிற்சாலைகள்.
23b.jpg
சுமார் 200 பேர் அந்த காட்டுக்குள்ளேயே குடும்பம் சகிதமாக வசித்து இரவும், பகலுமாக போதை மருந்து தயாரித்து வந்தார்கள். அந்த இடத்தை வான் மார்க்கமாக மட்டுமே அணுக முடியும். ஏனெனில் தொழிற்சாலைகள் இருந்த பகுதிக்கு அருகாமை சாலையே 250 மைல் தொலைவில் இருந்தது. டிரான்குயிலேண்டியா, கொலம்பியாவில் இருந்தாலும் பெரு, பொலிவியா நாடுகளுக்கும் சரக்கு அனுப்ப வாகான புவியியல்தன்மை கொண்டது. மாதத்துக்கு சுமார் 20 டன் அளவில் கோகெயின் இங்கே தயாரானது. அது 1984ம் ஆண்டு, மார்ச் மாதம். வானத்தில் திடீரென ஹெலிகாப்டர் சப்தம்.

வழக்கமாக அங்கே சிறு விமானங்கள்தான் வருவதுண்டு. மிக அரிதாக பாப்லோ போன்ற டான்கள்தான் ஹெலிகாப்டரில் வருவார்கள். அடுத்தடுத்து இரண்டு ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிடுவதைக் கண்டதுமே தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பாக ஆயுதம் தாங்கி நின்றிருந்த காவலர்கள் பதட்டமடைந்தார்கள். அவை ராணுவ விமானங்கள் என்று அறிந்ததுமே வான்நோக்கி சுட ஆரம்பித்தார்கள். இவர்களது சுடும் எல்லைக்கு அப்பால் போன ஹெலிகாப்டர்களில் இருந்து கமாண்டோ வீரர்கள் பாராசூட் அணிந்து குதிக்க ஆரம்பித்தார்கள். மெஷின்கன் ஏந்திய அந்த வீரர்களுக்கு ஈவு, இரக்கம் சற்றுமில்லை. செடி கொடிகளில் சிறு அசைவு தென்பட்டாலும் சுட்டுக்கொண்டே முன்னேறினார்கள். தொழிற்சாலைகளை முற்றுகையிட்டு இலக்கின்றி சுட ஆரம்பித்தார்கள்.

ஈத்தர் என்கிற ரசாயனம்தான் கோகெயினை பவுடராக மாற்றுவதற்கு அடிப்படையான சமாசாரம். அப்போது ஈத்தருக்கு செம டிமாண்டு. ஆனால், போதைத் தொழிற்சாலைகளில் எப்படியோ ஈத்தரை இறக்குமதி செய்து ஸ்டாக் செய்து வைப்பார்கள். அந்த காட்டில் 12,000 டிரம்களில் நிரப்பப்பட்டிருந்த ஈத்தரை அப்படியே எரித்தனர் கமாண்டோக்கள். சுமார் பதினைந்து டன் கோகெயினும் எரிக்கப்பட்டது. கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், படுகாயமடைந்தவர்கள் ஏராளம். அத்தனை பேரையும் அப்படியே விட்டுவிட்டு தங்கள் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்த வழியே திரும்பினர். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த இடம் எப்படி அரசாங்கத்துக்குத் தெரிந்தது என்பதுதான் கார்டெல் உரிமையாளர்களின் கவலையாக இருந்தது.

தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்குத் தெரியும். இருபத்து மூன்றாவது அத்தியாயத்தின் இறுதியில் ஒரு ‘போக்கிரி’யை நாம் அறிமுகப்படுத்தியிருந்தோம் இல்லையா? அமெரிக்காவில் மெதிலின் கார்டெல்களின் போதைத் தயாரிப்புகளுக்கு ஏஜென்ஸி எடுத்து நடத்திக் கொண்டிருந்தாரே ராபர்ட் முஸெல்லா. அதற்குள் மறந்திருக்க மாட்டீர்கள். அவரேதான். அமெரிக்காவின் சிஐஏ, போதை மாஃபியாக்களைப் போட்டுத்தள்ள ஒப்புக்குச் சப்பாணியாக உருவாக்கிய போதை டான் அவர். ஒட்டுமொத்தமாக அனைத்தையும் இழந்த நிலையில்தான் முஸெல்லாவின் உண்மை சொரூபத்தை கொலம்பிய கார்டெல்கள் உணர்ந்தன.

அதற்குள் எல்லாமே கைமீறிப் போய்விட்டது. அரசியலுக்கு வந்துவிட்டதால் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த பாப்லோவின் சீற்றம், இந்த டிரான்குயிலேண்டியா ஆபரேஷன் காரணமாக எரிமலையாக வெடித்தது. எரிமலை மேலும் குமுறும் வகையில் மற்ற கார்டெல்காரர்கள் பாப்லோவை நெருக்க ஆரம்பித்தார்கள். “பாப்லோ, நீயாக இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு கட்டுகிறாயா அல்லது நாங்கள் பார்த்துக் கொள்ளட்டுமா?” கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதுமே பாதகத்தில்தான் முடியும். பாப்லோவுக்கும் இது தெரியும். இருந்தும் அந்த முடிவை எடுத்துவிட்டார்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Posted

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்


 

யுவகிருஷ்ணா - 37

அரசியலுக்கு வந்துவிட்டதால் பழைய மாதிரி அதிரடி நடவடிக்கைகள் எடுக்காமல் தூங்கும் எரிமலை ஆகியிருந்தார் பாப்லோ. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுமா? சட்டத்துறை அமைச்சர் லாராவின் போதைக்கு எதிரான போரில் நடந்த டிரான்குயிலேண்டியா ஆபரேஷன் மூலம் பல கோடி ரூபாய் சேதாரத்தை சந்தித்திருந்தார்கள் போதைத்தொழில் கார்டெல்கள். பாப்லோ எஸ்கோபார், தயக்கத்துடன்தான் அந்த முடிவை எடுத்தார். ஆனால் - தானோ தன்னுடைய கார்டெல்லோ அதில் நேரடியாக சம்பந்தப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.
13.jpg
அந்தகாலத்து தென்னமெரிக்க நாடுகள் மிகவும் வறுமையில் உழன்றன. சட்டத்துக்கு விரோதமாக தொழில் செய்பவர்கள், உலக உல்லாசங்கள் அத்தனையையும் பெற்றார்கள். பாவப்பட்ட ஏழைகளோ ஒருவேளை சோற்றுக்கும் வக்கில்லாமல் பசியில் செத்தார்கள். கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில் இம்மாதிரி வறுமையில் வாடும் குழந்தைகள் வன்முறையாளர்களாக உருவெடுப்பது சகஜமாக நிகழ்ந்துக்கொண்டிருந்தது. பத்து வயதிலேயே ஒருவனுக்கு  துப்பாக்கி கிடைத்துவிடும் என்கிற நிலைமையே இருந்தது.

அந்த துப்பாக்கியை முதலீடாக வைத்து அவன் இரண்டு வகையான தொழில் செய்யலாம். யாரோ ஒரு விஐபிக்கு பாடிகார்ட் ஆகலாம். அல்லது கூலி வாங்கிக் கொண்டு கொலை செய்யலாம். செக்யூரிட்டி வேலைக்கு போகின்றவனை சிகாரியோஸ் என்பார்கள். கொலைத்தொழிலுக்கு செல்பவனை அஸ்ஸாஸின்ஸ் என்பார்கள். இந்த வேலைகளை செய்பவர்கள் பெரும்பாலும் டீன் ஏஜர்கள்தான். இவர்களில் யாராவது முப்பது வயதை எட்டினால் அது சாதனையே. ஏனெனில், அதற்குள்ளாக போலிஸ் என்கவுண்டரிலோ அல்லது வேறேதேனும் மோதலிலோ கொல்லப்பட்டுவிடுவார்கள்.

இப்போது செக்யூரிட்டி ஏஜென்ஸிகள் முறையான அமைப்பாக செயல்படுவதை போலவே சிகாரியோஸ், அசாஸின்ஸ் தொழிலும் அப்போது நிறுவனமயமாக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவைபுரிந்து வந்தது. அரசின் பாதுகாப்பு அமைப்புகள் போதுமான செயல்திறன் அற்றதாக இருந்ததாலேயே இதுபோல தனியார் அமைப்புகள் தடியெடுத்து தண்டல்காரர்களாக வலம் வந்தன.

அவ்வப்போது கார்டெல் மாஃபியாக்களும் இந்த சிகாரியோஸையும், அசாஸின்ஸையும் ஒப்பந்தத்தில் பணிக்கு அமர்த்திக் கொள்வதுண்டு. பெரிய சட்டச் சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம் அல்லது வேறு மாதிரியான பஞ்சாயத்துகளை எதிர்கொள்வதை தவிர்க்கலாம் எனும்போது இந்த முறையைத்தான் கையாள்வார்கள். தங்களுக்காக கொலை ஒப்பந்தம் செய்திருக்கும் புரொஃபஷனல் கில்லரை ‘ஹிட்மேன்’ என்று செல்லமாக கார்டெல் வட்டாரங்களில் அழைப்பார்கள்.

சிகாரியோ, அசாஸின் நிறுவனங்களை கொலம்பிய போலிஸ் பொதுவாக கண்டுகொள்ளாது. ஏனெனில் தங்கள் பிசினஸ் செழிப்பாக நடக்க போலிஸுக்கு மாதாமாதம் செமத்தியாக படியளப்பார்கள். ஒரு போலிஸ்காரருக்கு அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்தைவிட இந்த தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் கிம்பளம் பத்து மடங்காவது இருக்கும். இவர்களை பற்றி இவ்வளவு விலாவரியாக சொல்லுவதற்கு காரணம் இருக்கிறது.
13a.jpg
ஏனெனில் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் அசாஸின்கள்தான் சட்டத்துறை அமைச்சர் லாராவை போட்டுத் தள்ளப் போகிறார்கள்! ஒவ்வொரு கார்டெலுமே தனிப்பட்ட முறையில் செலவு செய்து இதற்காக ஹிட்மேன்களை நியமித்திருந்தன. கொல்லப்படப் போகிறவர் நாட்டின் அமைச்சர் என்பதால், ஒரு ஹிட்மேன் வேலையை முடிக்க தவறி விட்டாலும் வேறொரு ஹிட்மேன் ஸ்கெட்சை கரெக்டாக போட்டு வேலையை கச்சிதமாக செய்துவிடுவார் என்பதால் இந்த ஏற்பாடு.

டிரான்குயிலேண்டியா ஆபரேஷனுக்கு பிறகாக பல நூறு மிரட்டல்களை சந்தித்திருந்தார் லாரா. அவரை கொல்லுவதற்காக கார்டெல்கள் ஹிட்மேன்களை நியமித்திருந்த விஷயத்தை சொல்லி உளவுத்துறை அவரை கடுமையாக எச்சரித்திருந்தது. ஆள்வோர் தரப்பு லாராவை காப்பாற்றுவதை தம்முடைய கவுரவமாகவே கருதினார்கள். ஏனெனில் தங்களுடைய அமைச்சரே, போதை கார்டெல்களால் கொல்லப்பட்டு விட்டார் என்கிற நிலைமை ஏற்பட்டால் அது சர்வதேச அளவில் கொலம்பியாவின் மானத்தை காற்றில் காற்றாடியாக பறக்கவிட்டு விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.

1984ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் அன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்கு லாரா சம்மதித்து விட்டார். அவரை செக்கஸ்லோவேக்கியா நாட்டுக்கு கொலம்பியாவின் தூதராக அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. அன்றிரவு தன்னுடைய பழுப்புநிற சொகுசு காரில் லாரா வீட்டுக்கு கிளம்பினார். காரில் ஏறியதுமே கொஞ்சம் புழுக்கமாக உணர்ந்தார். கார் கண்ணாடிகளை இறக்கிவிட்டார். தான், அணிந்திருந்த கோட்டை அவிழ்த்து மடியில் வைத்துக்கொண்டார்.

அதுதான் அவர் செய்த பெரிய தவறு. எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்கிற நிலையில் இருந்த லாராவை எப்போதுமே புல்லட் ஃப்ரூப் கோட் அணிந்திருக்குமாறு உளவுத்துறை அதிகாரிகள் கண்டிப்பாக எச்சரித்திருந்தனர். வெள்ளை சட்டை மற்றும் டை கட்டியிருந்தார். அவருடைய காருக்கு முன்பும் பின்புமாக செக்யூரிட்டி ஜீப்புகள் வந்து கொண்டிருந்தன. போக்குவரத்து சிக்னலில் அவருடைய காரின் வேகம் குறைந்தது.
எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் இரண்டு டூவீலர்கள் வந்தன.

இரண்டிலுமே தலா இரண்டு பேர் வீற்றிருந்தார்கள். நால்வருமே முகத்தை மூடிய ஹெல்மெட் அணிந்திருந்தார்கள். லாராவின் காருக்கு இருபுறமும் வந்து நின்றார்கள். பைக்குகளின் பின்புறம் அமர்ந்திருந்தவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து லாராவை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். கழுத்திலும், இதயத்திலும் குண்டுகள் பாய்ந்தன. கண்மூடி கண் திறப்பதற்குள் இந்த பச்சை படுகொலை நடந்ததை அறிந்து அதிர்ச்சியில் பாதுகாவலர்கள் உறைந்துவிட்டார்கள். அவர்கள் நிதானத்துக்கு வந்து பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில் ஒரு டூவீலரில் இருந்த ஒருவன் ஸ்தலத்திலேயே சுடப்பட்டான். இன்னொரு டூவீலர் பறந்துவிட்டது.
13b.jpg
பாதுகாவலர்கள் பதைபதைப்போடு சுடப்பட்டு கார் சீட்டில் வீழ்ந்து கிடந்த லாராவை தொட்டுப் பார்த்தார்கள். ம்ஹூம். நாடித்துடிப்பு துடிக்கும் ஓசையே இல்லை. கொலம்பியாவில் போதைத்தொழிலே இல்லை என்கிற நிலைக்காக போராடிய நேர்மையான கடைசி அரசியல்வாதியான லாராவும் கொல்லப்பட்டுவிட்டார்.‘இனிமேல் நம் போதைக்காட்டில் பணமழைதான்...’ என்று அந்த இரவை பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள் கார்டெல் உரிமையாளர்கள். ஆனால் - அந்த ஒரே ஒரு உயிர்தான் பல நூறு போதைக் கடத்தல் காரர்களின் உயிரிழப்புக்கு பின்னர் காரணமானது.

கொலம்பிய அமைச்சரையே போட்டுத் தள்ளிவிட்டார்கள் என்றதுமே அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியது. கார்டெல்காரர்களை கொலம்பியாவுக்குள் நுழைந்து உயிருடனோ, சுட்டோ அமெரிக்க அதிகாரிகள் பிடிப்பார்கள் என்கிற அடாவடி ஒப்பந்தத்தில் கொலம்பிய ஆட்சியாளர்கள் கையெழுத்து இடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஓப்பந்தத்தின் சாரம் இதுதான்: ‘நாங்கள் குறிப்பிடும் எந்த கொலம்பியரையும் கைது செய்து உடனடியாக அமெரிக்காவுக்கு விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.

இல்லையேல் நேரடியாக நாங்களே வருவோம்...’ இப்படி அமெரிக்காவுக்கு ‘அனுப்பப்படும்’ கொலம்பியர்கள், அமெரிக்க சட்டங்களின் அடிப்படையிலேயே விசாரிக்கப்பட்டு, அமெரிக்க நீதிமன்றங்களில் தண்டனை வழங்கப்பட்டு, அமெரிக்க சிறைகளில் காலத்தை கழிப்பார்கள்...தன் குடிமகனை வேறொரு நாடு கேட்கிறது என்பதற்காக அப்படியே பிடித்துக் கொடுக்க எந்த மானமுள்ள நாடும் இப்படியொரு ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொள்ளாது. கொலம்பியாவுக்கு இப்படியொரு அவமானம் ஏற்பட்டு விடக் கூடாது என்றுதான் லாரா கடைசி மூச்சு வரை போராடினார். லாரா இல்லாத கொலம்பியாவுக்கு தன்மானமில்லை. கையெழுத்திட்டது. விளைவு, Columbia, ‘Coldblood’ia ஆனது.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Posted

காட்ஃபாதர்

 

போதை உலகின் பேரரசன் - 38

தங்களுடைய சட்ட அமைச்சர் லாராவை கொன்றது பாப்லோ எஸ்கோபார்தான் என்று கொலம்பிய அரசு உறுதியாக நம்பியது. எனினும், பாப்லோவை நேரடியாக சம்பந்தப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு போதுவான ஆதாரங்கள் கிடைக்காமல் போலீஸ் அதிகாரிகள் திணறிக் கொண்டிருந்தனர். மே 4, 1984. லாரா மறைந்து நான்கு நாட்கள்தான் ஆகியிருந்தது. பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோ வீட்டுக்கு போலீஸ் படை வந்திருந்தது. வாசலில் நின்ற பாதுகாவலர் அவர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.“சோதனை போட வாரண்ட் வெச்சிருக்கீங்களா?”கேள்வியை எதிர்கொண்ட போலீஸ்காரர் பதில் ஏதும் சொல்லவில்லை. மாறாக பளாரென அறைந்தார். பாதுகாவலருக்கு காதில் ‘ங்ஙொய்’ என்கிற ரீங்காரம்.
16.jpg
அவர் சைகை காட்ட காவலர்கள் திமுதிமுவென்று வீட்டின் ஹாலுக்குள் நுழைந்தார்கள். அப்போது ராபர்ட்டோ வீட்டில் இல்லை. அவருடைய மனைவியும் சோதனை போடுவதற்கான வாரண்டை கேட்க, பெண் காவலர்கள் இருவர் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து, “நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்...” என்றார்கள். சோதனை என்கிற பெயரில் வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் போடத் தொடங்கினார்கள். ராபர்ட்டோவின் நான்கு வயது மகன், அச்சத்தில் அழத் தொடங்கினான். அவனுடைய அழுகைச் சத்தம் சோதனை போட்டவர்களுக்கு தொந்தரவாக இருந்ததோ என்னவோ, குழந்தையென்றும் பாராமல் அவனைக்கூட அடித்தார்கள்.

குழந்தையின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதைத் தடுக்க முனைந்த ராபர்ட்டோவின் பணியாள் ஒருவரும் காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டார். உண்மையில் அவர்கள் தேடிவந்தது ஆயுதங்களையும், போதை மருந்தையும். பாப்லோவின் அண்ணன் எப்போதுமே இதுமாதிரி அசைவ சமாச்சாரங்களில் ஈடுபாடு கொண்டவரல்ல. எஸ்கோபாரின் ஒட்டுமொத்த வரவு செலவையும் அவர்தான் கவனித்தார் என்றாலும், தன்னுடைய கரங்களை முடிந்தவரை தூய்மையாக வைத்துக் கொள்ளவே மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். தாங்கள் எதிர்பார்த்தது எதுவும் கிடைக்கவில்லை என்றதும் அங்கிருந்தே தலைமையகத்துக்கு போன் அடித்து விவரம் சொன்னார்கள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு போலீஸ் ஜீப் வந்தது. அதில் வந்தவர்கள் பழைய துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் கொண்டுவந்து தரையில் போட்டார்கள். போலீஸ் போட்டோகிராபர் அவற்றை படம் பிடித்தார். மறுநாள் செய்தித்தாள்களில், ‘அரசுக்கு எதிரான கொரில்லாக்களுக்கு ஆயுதம் சப்ளை செய்த பாப்லோ எஸ்கோபாரின் அண்ணன்!’ என்று தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட இதே நேரத்தில் எஸ்கோபாரின் நம்பிக்கைக்குரிய சகா குஸ்டாவோவின் வீட்டிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்தன. ராபர்ட்டோ மற்றும் குஸ்டாவோ இருவரின் மனைவிகளும் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
16a.jpg
விஷயம் கேள்விப்பட்டதுமே ராபர்ட்டோ, குஸ்டாவோ இருவரும் தப்பிவிட்டார்கள். நகருக்கு வெளியே இருந்த பண்ணை வீடு ஒன்றில் மறைந்திருந்தார்கள். அங்கும் போலீஸ் நடமாட்டம் தெருவில் தெரிந்தது. பண்ணை வீட்டின் நுழைவாயிலை இரண்டு போலீஸ்காரர்கள் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பண்ணை வீட்டுக்குப் பின்பாக ஆறு ஒன்று ஓடியது. தப்பிப்பதாக இருந்தால், ஆற்றின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால், நீரோட்டமோ நீந்துவதற்கு வாகாக இல்லாமல் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. பண்ணை வீட்டில் இருந்த பழைய லாரி டயர் இரண்டை எடுத்தார்கள். அதற்கு காற்று அடித்து இடுப்பில் மாட்டிக் கொண்டு ஆற்றில் குதித்தார்கள்.

இவர்கள் ஆற்றில் குதித்துத் தப்பிய அதே நிமிடத்தில்தான் பண்ணை வீட்டில் கதவை போலீஸ் இடித்துக் கொண்டிருந்தது. எப்படியோ சிரமப்பட்டு பாப்லோவிடம் சென்றார்கள்.“பாப்லோ, விஷயம் தெரியுமா? என் மனைவியை போலீஸ்…” ராபர்ட்டோ சொல்லி முடிப்பதற்குள்ளாகவே பாப்லோ பேச்சை நிறுத்த சைகை காண்பித்தார்.“உன்னுடைய மனைவி மட்டுமல்ல. எனக்கு அண்ணியும்கூட. இதற்குக் காரணமான ஒரு போலீஸ்காரன்கூட உயிரோடு இருக்க மாட்டான்...” ஆத்திரத்தோடு சொன்னபோது, அவருடைய கண்கள் சிவந்திருந்தன. அனுதாபத்தோடு குஸ்டாவோவைப் பார்த்தார்.“என்னால்தான் உனக்கும் தொல்லை குஸ்டாவோ...”

“அடச்சீ. மடையன் மாதிரி பேசாதே. என்னுடைய வாழ்க்கையே நீ கொடுத்ததுதான். இதுமாதிரி சின்னச் சின்ன பிரச்னைகள் வரும்போது, அதை நானும் சேர்ந்து அனுபவிப்பதுதான் நியாயம்...” குஸ்டாவோ பாப்லோவை சமாதானப்படுத்தினான்.“ஓகே. உடனடியாக நான் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன். அதுவரை நீங்கள் இருவரும் போலீஸிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது. நீங்களும் மாட்டிக் கொண்டால் பிரச்னை இடியாப்பச் சிக்கலாகி விடும்...”இருவரையும் பாதுகாப்பாக வேறொரு மறைவிடத்துக்கு அனுப்பினார் பாப்லோ.

அங்கே ஓரிருநாள் தங்கியிருந்தபோது, குஸ்டாவோவால் தன் மனைவி சிறையில் இருக்க, தான் இங்கே மறைந்திருக்கும் சூழலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. போனை எடுத்து தனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவரிடம் பேச முயற்சித்தான். “வேண்டாம் குஸ்டாவோ. பாப்லோ, நம் மனைவிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருப்பான். நீ வேறு தனியாக குழப்பத்தை ஏற்படுத்தாதே...” ராபர்ட்டோவின் எச்சரிக்கையை குஸ்டாவோ பொருட்படுத்தவில்லை. “வேறு வேறு வழிகளில் முயல்வோம். ஏதோ ஒரு பாதையில் தீர்வு கிடைக்கத்தானே செய்யும்?” என்றான்.

குஸ்டாவோ போனில், தன்னுடைய மனைவியை போலீஸ் போதிய ஆதாரங்களோ ஆவணங்களோ இல்லாமல் கைது செய்ததைச் சொல்லி, தன்னுடைய நிலையையும் வக்கீலிடம் அப்படியே எடுத்துச் சொன்னான். மேலும், தான் மறைந்திருக்கும் இடத்தையும் வக்கீல் மீதிருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் முட்டாள்தனமாக உளறித் தொலைத்து விட்டான். அன்று இரவு பாப்லோவிடமிருந்து போன் வந்தது.“யாரிடமாவது அங்கிருந்து போனில் பேசினீர்களா?” “நான் பேசவில்லை. குஸ்டாவோதான் அவனுடைய வக்கீல் நண்பன் ஒருவனிடம் பேசினான்...”“அவன் ஒரு முட்டாள். அந்த வக்கீல் ஒரு துரோகி...”“நாங்கள் என்ன செய்யட்டும்?”“கேட்டுக் கொண்டிருக்கிறாயே! ஓடு…”
16b.jpg
இருவரும் ஓடினார்கள். தெருவில் சைரன் வைத்த கார்களைக் கண்டதுமே ராபர்ட்டோவுக்கு மூச்சே நின்றுவிட்டது. குஸ்டாவோதான் சட்டென்று முடிவெடுத்தான். ராபர்ட்டோவை இழுத்துக்கொண்டு சாலையின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்த சாக்கடையில் குதித்தான். சாக்கடையில் வளர்ந்திருந்த புதர் மறைவுக்குள் இருவரும் பதுங்கிக் கொண்டார்கள். போலீஸ் வாகனங்கள் மறைந்தபிறகு தெருவுக்கு வந்தார்கள். இருவரின் மீதும் சேறு. சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் இவர்களை வினோதமாகப் பார்த்தார்கள். அருவருப்பாக முகம் சுளித்தார்கள். இவர்கள் யாரென்றே அடையாளம் தெரியாத அளவுக்கு முகமெல்லாம் கருப்பு நிறத்தில் சாக்கடை சேறு.

ராபர்ட்டோ நினைத்துப் பார்த்தார். ஒரு வாரத்துக்கு முன்பு வரை இதே ஊரில் விஐபிகளாக வலம் வந்தோம். இப்போது சாக்கடையில் பதுங்கி உயிர் தப்ப வேண்டிய அவலம். நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். அங்கிருந்து பாப்லோவைத் தொடர்பு கொண்டார்கள்.“நகரத்தில் நிலைமை ரொம்பவும் மோசம். நம்மை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கார்டெல்களையே ஒழித்துவிடும் நோக்கத்தில் அரசாங்கம் படையெடுத்து வருகிறது. நான் உடனடியாக பனாமாவுக்கு தப்பிச் செல்கிறேன். அண்ணியையும், குஸ்டாவோவின் மனைவியையும் மீட்ட பிறகு நீங்களும் எங்களோடு வந்து விடலாம்.

நீங்கள் வரும்போது என்னுடைய மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து வந்துவிடுங்கள். அதுவரை நீங்கள் தங்குவதற்கு பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறேன்...”ராபர்ட்டோ மனைவியும், குஸ்டாவோவின் மனைவியும் பதினைந்து நாட்கள் சிறையில் இருந்தார்கள். அங்கே மிகக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார்கள். அவர்களை மீட்க எந்த வக்கீலும் தயாராக இல்லை. மேலும் அவர்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்கிற நிலையில் போலீஸே அவர்களை விடுவிடுத்தது. கர்ப்பமாக இருந்த பாப்லோவின் மனைவி மரியா விக்டோரியாவையும், தன்னுடைய குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு பனாமாவுக்குச் செல்லத் தயாரானார் ராபர்ட்டோ.

அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டர் வந்தது. எந்த நிமிடத்திலும் போலீஸ் வரலாம் என்கிற பதைபதைப்புடன் அதில் ஏறினார்கள். ஹெலிகாப்டர் பறக்க ஆரம்பித்து ஐந்தே நிமிடங்களில் விதவிதமான சத்தங்கள் வந்தன. ஹெலிகாப்டரை ஓட்டிக் கொண்டிருந்தவர் பயந்து போனார்.“இறக்கைகளில் ஏதோ பிரச்னை. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை...” என்றார். ஹெலிகாப்டர் நடுவானத்தில் தள்ளாடத் தொடங்கியது. பாப்லோ குடும்பத்தார் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆண்டவனை வேண்டத் தொடங்கினார்கள்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 39

கொலம்பியாவில் இருந்து பனாமாவுக்கு பாப்லோ குடும்பத்தார் தப்பிச் சென்ற ஹெலிகாப்டர் நடுவானத்தில் முரண்டு பிடித்தது. கார் பிரேக் பிடிக்கவில்லையென்றால் பரவாயில்லை. ஏதாவது மரத்தில் மோதி உயிர் தப்பலாம். ஹெலிகாப்டரில் பிரச்னை என்றால் யார்தான் என்ன செய்ய முடியும்? உள்ளே இருந்தவர்கள் பரலோகத்தில் இருக்கும் பிதாவை வேண்டத் தொடங்கினார்கள். “எங்களை இவ்வளவு சீக்கிரமாக பரலோகத்துக்கு அழைத்துக் கொள்ளாதே. இன்னும் கொஞ்சநாள் இங்கேயே இருக்கிறோம். ஆமென்...”குறிப்பாக கர்ப்பவதியாக இருந்த பாப்லோவின் மனைவி மிகுந்த அச்சத்துக்கு உள்ளானாள். பயம் என்றால் என்னவென்றே அறியாத பாப்லோவுக்கு இப்படியொரு பயந்தாங்கொள்ளி மனைவி.
16.jpg
பைலட், கில்லாடி. என்னென்னவோ மாயம் செய்தான். அவனை தொல்லை செய்யாமல் ராபர்ட்டோவும், குஸ்டாவோவும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக பேயாய் சத்தமிட்டுக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் இறக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தமடையத் தொடங்கின. “சார்! ஹெலிகாப்டர் தற்காலிகமாகத்தான்சரியாகியிருக்கிறது. வழியில் மீண்டும்இதே பிரச்னை வரலாம். உடனடியாக நாம் தரையிறங்குவதுதான் நல்லது...” “நீயும் உன் குடும்பமும் நீடூழி வாழ்க. உடனே தரையிறக்கு...”அவர்கள் தரையிறங்கிய இடத்தின் பெயர் சாக்கோ.

கொலம்பியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் காடுகளுக்கு மத்தியில் இருந்த ஊர். மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால் அரசாங்கத்தின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டு இருந்த பகுதி. ஆனால் - கார்டெல்களுக்கு இங்கேயும் நெட்வொர்க் உண்டு. ஹெலிகாப்டரில் தரையிறங்கியவர்கள் பாப்லோ எஸ்கோபார் குடும்பத்தார் மற்றும் குஸ்டாவோ என்பதால் ராஜமரியாதை கிடைத்தது.

உடனடியாக பனாமாவில் இருந்த பாப்லோவுக்கும் தகவல்  போனது. தன்னுடைய குடும்பத்தார் இன்னமும் சொன்ன நேரத்துக்கு வந்து சேரவில்லையே என்கிற பதைபதைப்பில் இருந்தவர், நிம்மதிப் பெருமூச்சு விட்டார். உடனடியாக வேறொரு ஹெலிகாப்டரை மீட்பதற்காக அனுப்பி வைத்தார். அன்று மட்டும் நடுவானில் தன் குடும்பத்தை பாப்லோ இழந்திருந்தால், நிச்சயமாக கொலம்பியா மீது போரே தொடுத்திருப்பார்.

பாப்லோவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமல்ல, மற்ற கார்டெல் உரிமையாளர்களும்கூட கூண்டோடு இடம்பெயர்ந்து வேறு வேறு நாடுகளில் தஞ்சமடைந்திருந்தார்கள். அதுநாள் வரை தாய்நாட்டில் அவர்கள் வாழ்ந்து வந்த கவலையற்ற சொகுசு வாழ்க்கை ஒருவழி யாக முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவும் தன்னுடைய பங்குக்கு சிஐஏ உளவாளிகளை வைத்து போதை கார்டெல்களை வேட்டையாட வெறியோடு அலைந்து கொண்டிருந்தது. உலகம் முழுக்கவே ஆங்காங்கே திடீர் திடீரென கொலம்பியர்கள் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
16a.jpg
கொல்லப்பட்டவர்களின் ரிஷிமூலத்தை ஆராய்ந்தால், அவர்கள் ஏதேனும் ஒரு கார்டெல்லோடு சம்பந்தப்பட்டவர்களாகவே இருந்திருப்பார்கள். பல கார்டெல்கள் தொழிலை முற்றிலுமாக மறந்துவிட்டு, புதியதாகக் குடியேறிய இடங்களில் ஆட்டோவோ, காரோ ஓட்டி மாணிக்கமாக பிழைத்துக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய பழைய பாட்ஷா முகத்தைக் காட்டாமலேயே கடைசிவரை வாழ்ந்து உயிர் துறந்தவர்கள் ஏராளம். உலகம் முழுக்கவே ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக ஆனவர் பாப்லோதான்.

போதை சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன் என்று அவரைச் சுட்டிய ஊடகங்கள், தீர்க்க முடியாத பல சிக்கலான கிரிமினல் கேஸ்களையும் அவர் கணக்கிலேயே எழுதத் தொடங்கின. பிற்காலத்தில் சதாம் உசேன், ஒசாமா பின்லேடன் ஆகியவர்களை எப்படி உலகத்துக்கே வில்லனாக அமெரிக்கா கட்டமைத்ததோ, அதுபோலவே பாப்லோ எஸ்கோபாரையும் மனிதகுலத்தின் எதிரியாகத் தன்னுடைய பிரசார இயந்திரங்கள் மூலமாக தகவல்கள் பரப்பிக் கொண்டிருந்தது.

பாப்லோவும் அவரது குடும்பத்தாரும் பனாமாவில் தஞ்சமடைந்திருந்தது பரமரகசியமாக இருந்தது. உண்மையில், இவர்களை ஐரோப்பாவில் தேடிக் கொண்டிருந்தனர் அமெரிக்க உளவுத்துறையினர். ரிஸ்க் எடுத்து பக்கத்து நாட்டிலேயே தஞ்சமடைந்திருப்பார் என்று யார்தான் யூகித்திருக்க முடியும்? பாப்லோவுக்கு பனாமாவில் அடைக்கலம் கொடுத்திருந்தவர் அந்நாட்டை ஆண்டுகொண்டிருந்த சர்வாதிகாரி மேனுவல் நோரிகா. பணம் என்றால் பல்லை இளிப்பார். இவர் எஸ்கோபாருக்கு நண்பர்தான் என்றாலும் பெரியளவில் பணம் பெற்றுக்கொண்டே இவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.
16b.jpg
“முடிந்தால் பனாமாவில் இருந்தே பழைய மாதிரி போதைத் தொழில் செய். ஆனால், லாபம் சரிவிகிதமாக நம் இருவருக்கும் பிரியவேண்டும்...” என்று கேட்டிருந்தார். அதைக்கேட்டு பாப்லோ புன்னகைத்தார். ஏனெனில், பாப்லோதான் கொலம்பியாவில் இல்லையே தவிர, தொழில் வழக்கம் போல நடந்துகொண்டுதான் இருந்தது. பினாமிகளை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். மற்ற போக்குவரத்துகளை எல்லாம் போனிலேயே பேசி முடித்துக் கொண்டிருந்தார். என்ன, முன்பு போல அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மட்டும்தான் இல்லை.

அமெரிக்காவுக்கு அதுதான் காண்டு. ஸ்பாட்டில் ஆள் இல்லாமலேயே ஒருவனால் எப்படி எந்தவிதமான பிரச்னையுமின்றி தொழில் செய்ய முடிகிறது என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் கேள்விப்பட்டிருந்த அத்தனை போதைத் தொழிற்சாலைகளையும், கொலம்பியா ராணுவத்தினரை வைத்து முற்றிலுமாக அழித்து விட்டிருந்தார்கள். உண்மையில் பாப்லோ இதையெல்லாம் முன்பே எதிர்பார்த்திருந்தார். தன்னுடைய போதை கட்டமைப்புகளை அழித்துவிட்டுத்தான் தன்னை நெருங்குவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

எனவேதான் அவரிடம் பிளான் B இருந்தது. ஒரு தொழிற்சாலை அழிக்கப்பட்டால், ஓராயிரம் மினி தொழிற்சாலைகள் உடனடியாக இயங்கக்கூடிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கொலம்பியாவின் சேரி மக்களை ஏற்கனவே வளைத்துப் போட்டிருந்தார் இல்லையா? ஒவ்வொரு குடிசையும் ஸ்மால் ஸ்கேல் போதைத் தொழிற்சாலையாக இயங்கத் தொடங்கியது. கார்ப்பரேட் பாணியில் நடந்து கொண்டிருந்த வேலைகள், குடிசைத் தொழில் கணக்காக நடந்தாலும் தயாரிப்புப் பொருளின் அளவு மட்டும் குறையவே இல்லை.

இம்மாதிரி குடிசைகளை அவ்வப்போது அடையாளம் கண்டு போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருந்தது. எனினும் புற்றீசல் மாதிரி நாடு முழுக்கப் பரவியிருந்த தொழிற்சாலைகளை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்குரிய ஆற்றலோ, ஐடியாவோ கொலம்பிய அரசுக்கு இல்லை. தவிர, அரசாங்கம் போதைத் தொழிலை முடக்குவதற்கு முயற்சித்தாலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை. எங்கெல்லாம் ரெய்டு நடக்க வாய்ப்பிருக்கிறது என்கிற தகவலை முன்கூட்டியே பாப்லோவுக்குத் தெரிவித்து தங்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

பனாமாவில் பாப்லோவின் மெதிலின் கார்டெல் முக்கியஸ்தர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பின் வசதிகளை ஒப்பிட்டால் ஐந்து நட்சத்திர ஓட்டல்களே தோற்று விடும். அங்கே மிகப்பெரிய கோல்ஃப் கிரவுண்டு இருந்தது. உல்லாசமாக நீந்துவதற்கு கால்பந்து மைதானம் அளவுக்கு நீச்சல்குளம். மூக்கு முட்ட சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். கேட்ட உணவெல்லாம் கிடைத்தது. குஸ்டாவோவுக்கு டென்னிஸ் ஆடுவதில் பிரியம்.

எப்போதும் டென்னிஸ் கோர்ட்டில்தான் இருந்தார். பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோ சைக்கிள் வியாபாரி இல்லையா? எந்நேரமும் சைக்ளிங்தான். பெண்கள் ஷாப்பிங் செல்ல ஆசைப்பட்டால் அவர்களை ஏற்றிச்செல்ல 24 மணி நேரமும் நவீன சொகுசுக்கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அதுநாள் வரை பாப்லோ தன் குடும்பத்தோடு இவ்வளவு நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருந்ததே கிடையாது. இந்த மகிழ்ச்சியும் நெடுங்காலத்துக்கு நீடிக்கவில்லை. அதற்கும் அமெரிக்கா ஆப்பு வைத்தது.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 
 

யுவகிருஷ்ணா - 40

பனாமாவில் தங்களுக்கு கிடைத்த உல்லாச வாழ்க்கையில் மெய்மறந்து போயிருந்த பாப்லோ எஸ்கோபாரின் சகாக்கள், ‘நாம் ஏன் இங்கேயே தங்கி, தொழிலை நடத்தக்கூடாது? இனியும் கொலம்பியாவுக்குப் போய் உழைத்து கஷ்டப்பட வேண்டுமா?’ என்று நச்சரிக்கத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இதற்கு மென்புன்னகை ஒன்றையே பதிலாகக் கொடுத்துக் கொண்டிருந்த பாப்லோ, ஒரு கட்டத்தில் கோபமாக பதில் சொல்லத் தொடங்கினார்.
15.jpg
“அட மூடர்களே. ஆயிரம் இருந்தாலும் நாம் இங்கே அகதிகள். நம்மிடம் பணம் கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கிறது என்றுதான் இந்நாட்டின் சர்வாதிகாரி நம்மை இங்கே தங்க வைத்துக் கொண்டிருக்கிறான். நாம் தங்கும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு வாடகையாக எத்தனை கோடிகளைத் தருகிறேன் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? நம் தாய்நாடு கொலம்பியா. செத்தாலும் அங்குதான் சாகவேண்டும். அதுதான் மரியாதை.

இங்கே நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தற்காலிக இளைப்பாறுதல். ஒரு டூருக்கு வந்தது போல நினைத்துக் கொள்ளுங்கள்...” வில்லனாக இருந்தாலும் பாப்லோவுக்கு தாய்நாட்டுப் பற்று அதிகம். அவர் விரும்பியபடியே கொலம்பியாவின் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தால், ஒருவேளை அந்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்கக்கூடும். மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கியிருக்கவும் கூடும். துரதிருஷ்டவசமாக அது நடக்காமலேயே போய்விட்டது.
15a.jpg
தேவையே இல்லாமல் வேறு நாடுகளில் சொத்து வாங்கிப் போடுவதை ஆரம்பத்திலிருந்தே பாப்லோ தவிர்த்து வந்தார். முதலீடு என்றால் அது கொலம்பியாவில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் கொலம்பிய மக்களுக்கு பயன்படும் என்று கருதினார். ஒருவேளை தன்னுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் அது தன் தாய்நாட்டுக்குத்தான் போய்ச் சேரவேண்டுமே தவிர, வேறு நாடுகளுக்கு போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

பனாமாவில் தங்கியபடியே தன்னுடைய ஸ்லீப்பர்செல்கள் மூலமாக கொலம்பிய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் பாப்லோ. தங்கள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் விலக்கிக் கொள்வதாக இருந்தால் கொலம்பியாவுக்குத் திரும்பி கவுரவமான வாழ்க்கையை வாழத் தயாராக இருப்பதாக உறுதிமொழி கொடுத்தார். மேலும், கொலம்பிய அரசுக்கு அவர் முன்வைத்த ஆஃபர் ஒன்று அதிசயிக்கத்தக்கது.

அதாவது, அதுவரை கொலம்பியா, அமெரிக்கா மற்றும் உலகநாடுகளிடம் பட்டிருந்த அத்தனை கடன்களையும் தானே அடைத்துவிடுவதாகவும், கொலம்பிய மண்ணில் இனிமேல் போதைத்தொழில் நடக்காமல், கார்டெல்கள் அத்தனை பேரையும் விவசாயப் பண்ணை அமைக்கவும் செய்வேன் என்றார். அந்த வாக்குறுதியை நம்புவதே சிரமம். பாப்லோ மற்றும் மற்ற போதை கார்டெல்கள் திருந்தி வாழ்கிறோம் என்று சொல்லுவதைக்கூட ஒருவகையில் நம்பலாம். ஆனால், கொலம்பியாவின் ஒட்டுமொத்த கடன் சுமையைத் தீர்த்து வைக்கிறோம் என்று சொன்னது சாத்தியமற்றது என்று அரசுத் தரப்பில் கருதினார்கள்.

ஏனெனில் கொலம்பியாவுக்கு அப்போதிருந்த கடன் தொகை சுமார் பத்து பில்லியன் டாலராக இருந்தது. அதாவது இன்றைய இந்திய மதிப்பில் சுமார் அறுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய். ஒருவேளை பாப்லோ முயற்சியெடுத்து அவ்வளவு பணத்தைத் திரட்டி கடனை அடைத்தாலும் அது தேவையில்லை என்று நிராகரிக்குமாறு அமெரிக்கா அவசரம் காட்டியது. போதை கார்டெல்களுக்கும், கொலம்பிய அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு விடுமோ என்று அமெரிக்க அரசுக்கு அச்சம் அதிகரித்தது.

“அவர்கள் உங்கள் சட்ட அமைச்சரைக் கொன்றவர்கள். உலக அரங்கில் உங்கள் மானத்தை வாங்கியவர்கள். நினைவிருக்கட்டும்...” என்று அமெரிக்கா பகிரங்கமாகவே கொலம்பிய அரசை மிரட்டத் தொடங்கியது. ஆரம்பத்தில் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த கொலம்பிய அரசின் முக்கியப் புள்ளிகள் ஒவ்வொருவரும் அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகளால் அன்பாக விசாரிக்கப்பட்டனர். எனவே, சமரசத்துக்கே இடமில்லை என்று கொலம்பிய அரசு அறிவித்து விட்டது.

இதையடுத்து அமெரிக்கா, பாப்லோ மற்றும் இதர கார்டெல் குழுவினருக்கு அடைக்கலம் கொடுத்து வந்த பனாமா சர்வாதிகாரி மேனுவல் நோரிகா மீது பார்வையை பதித்தது. அமெரிக்காவின் போதைத்தடுப்பு பிரிவு அதிகாரிகள், நோரிகாவை நேரில் சந்தித்துப் பேசினார்கள். நோரிகா அலுவலகத்திலேயே இருந்த தன்னுடைய உளவாளிகள் மூலம் இந்த நடப்புகளை லைவ்வாகவே தெரிந்துகொண்டார் பாப்லோ. இதற்கிடையே தொழிலுக்காக பாப்லோவின் சகாக்கள் பனாமாவில் இறக்கியிருந்த ஈத்தர் மற்றும் கோகெயின் ஆங்காங்கே பறிமுதல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

‘ஸ்கெட்ச்’ போட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்தவுடனேயே ரகசியமாக தன்னுடைய சகாக்களை வேறு வேறு நாடுகளுக்கு பார்சல் செய்யத் தொடங்கினார் பாப்லோ. ஸ்பெயினுக்கு சிலரும், பிரேசிலுக்கு சிலரும் அனுப்பப்பட்டார்கள். பாப்லோவும் அவரது குடும்பத்தினரும் எப்போதும் தப்பிச் செல்வதற்கு இரண்டு விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் தயாராக இருந்தன. பனாமா அதிபரோடு அத்தனை டீலிங்குகளையும் முடித்துவிட்டு, பாப்லோவைப் பிடிக்க வந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

சத்தமே இல்லாமல் நிகரகுவா என்கிற சிறிய நாட்டுக்கு பறந்துவிட்டிருந்தார் பாப்லோ. கிளம்புகிற அவசரத்தில்கூட ஆயிரம் கிலோவுக்கு மேல் கோகெயினை அமெரிக்காவுக்கு வெற்றிகரமாகக் கடத்தி, அந்தப் பணத்தோடு தப்பிய அவரது சாமர்த்தியத்தை அமெரிக்க அதிகாரிகளே மெச்சிக் கொண்டனர். பாப்லோ தப்பிவிட்ட காண்டு, அமெரிக்காவை வெறிகொள்ளச் செய்தது. பாப்லோவின் ஸ்லீப்பர் செல்களாக கொலம்பியாவில் கவுரவமான தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டிருந்தவர்களை வேட்டையாடத் தொடங்கினர். கொலம்பிய அரசாங்கமோ, இந்தப் பிரச்னைக்கும் தனக்கும் சம்பந்தமேயில்லை என்பதைப்போல தேமேவென்று வேடிக்கை பார்த்தது.

இந்த நடவடிக்கையில் முதல் பலி, பாப்லோ குடும்பத்தினருக்கு நெருக்கமான தொழிலதிபரான ஹெர்னான் பொதெரோ மொரினோ. மெதிலின் நகரின் பாரம்பரியமான செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். அங்கே நட்சத்திர ஹோட்டல்களை நடத்திக் கொண்டிருந்தவர். தேசிய கால்பந்து அணியின் உரிமையாளர். போதை கடத்தல்காரர்களோடு முறைகேடான பண வர்த்தகம் வைத்திருந்ததாகக் கூறி, அமெரிக்கா இவரைக் கைது செய்தது. இத்தனைக்கும் இவர் கைது செய்யப்பட்டபோது போதை கடத்தல்காரர்கள் மீது அமெரிக்கா நேரடி நடவடிக்கை எடுப்பதற்கான ஒப்பந்தம்கூட கையெழுத்தாகியிருக்கவில்லை. கொலம்பிய சட்ட திட்டங்களுக்கு எதிராகவே மொரினோ மீதான நடவடிக்கை அமைந்தது.

பாப்லோ உள்ளிட்ட கார்டெல் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அப்ரூவர் ஆகிவிட்டால் விட்டுவிடுகிறோம் என்று மொரினோவுக்கு அமெரிக்க அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். “நீங்கள் என்னை சுதந்திரமாக விட்டுவிடுவீர்கள் என்பதை நம்புகிறேன். ஆனால், அப்ரூவர் ஆகிவிட்டால் பாப்லோ, உலகிலிருந்தே எனக்கு சுதந்திரத்தை பரிசளிப்பார்...” என்று கூறி மறுத்தார் மொரினோ. இதற்காக அவர் பிற்பாடு அமெரிக்காவில் இருபதாண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியதாயிற்று.

நிகரகுவாவில் இருந்துகொண்டே பிசினஸ் செய்யும் முடிவுக்கு வந்திருந்தார் பாப்லோ. பேரி சீல் என்கிற பைலட் ஒருவர் மூலமாக சுமார் அறுநூறு கிலோ போதை மருந்தை அமெரிக்காவின் மியாமி நகருக்கு கடத்தினார். ஆனால் - சொல்லி வைத்தாற்போல சரக்கு அங்கே, போதைத் தடுப்பு அதிகாரிகள் மூலமாக சீல் செய்யப்பட்டது. எல்லா அரசாங்கங்களின் மேல்மட்டத்திலும் ஸ்லீப்பர் செல்களை வைத்திருந்த தன்னுடைய கார்டெல்லிலேயே அமெரிக்கா ஸ்லீப்பர் செல்களை வைத்திருக்கிறது என்பதை சற்று தாமதமாகதான் உணர்ந்தார் பாப்லோ.

அவருடைய நம்பிக்கைக்குரிய சகாவாக இருந்த பைலட் பேரிசீல், அமெரிக்காவின் கையாள் என்பது தெரிந்ததும் இடிந்து போனார். இந்த பேரிசீலின் கதைதான் சமீபத்தில் ‘American made’ என்கிற ஹாலிவுட் திரைப்படமாக வந்திருந்தது. பேரிசீல்  பாத்திரத்தில் டாம்க்ரூஸ் நடித்திருந்தார். தங்களுடைய அமெரிக்க போதை டீலரான முஸெல்லாவும் சிஐஏ அமைப்பு போலியாக உருவாக்கிய டான் என்பதையெல்லாம் பாப்லோ உணருவதற்கு முன்பாக வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

Posted
 

காட் பாதர் - போதை உலகின் பேரரசன்

- யுவகிருஷ்ணா

அமெரிக்க அதிபர் ரீகன், முக்கியமான செய்தியாளர் சந்திப்பு என்று அறிவித்திருந்தார். சர்வதேச ஊடகங்கள் அவருக்கு முன்பாகக் குவிந்திருந்தன. ஃப்ளாஷ் மழைகளுக்கு நடுவே கதாநாயகனாக திடீரென்று என்ட்ரி கொடுத்த ரீகன், சட்டென்று விஷயத்துக்கு வந்தார். “தற்போதைய உலகத்தின் வில்லன் யாரென்பதை வெளிப்படுத்தவே இந்த செய்தியாளர் சந்திப்பு…”சொல்லிவிட்டு அதிபர் ஒரு பெரிய இடைவெளியை விட்டார். ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்குமென்று சொல்வார்களே? அத்தகைய அமைதி நிலவியது. தன்னுடைய ப்ரீஃப்கேசை திறந்தார் ரீகன். பெரிய சைஸுக்கு பிரிண்ட் போடப்பட்டிருந்த ஒரு கருப்பு வெள்ளை படத்தையெடுத்து தலைக்கு மேலாகக் காட்டினார்.
19.jpg
ஒரு மிகப்பெரிய சூட்கேஸை பாப்லோ எஸ்கோபார் சிலரிடம் கையளிப்பது படமாக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் பாப்லோவின் முகம் மிகவும் தெளிவாகவே தெரிந்தது.“அமெரிக்கா, கடந்த பத்தாண்டுகளாக கரடியாக கத்திக் கொண்டிருக்கிறது. பாப்லோ என்கிற அரக்கன்தான் உலகை போதைமயமாக்கிக் கொண்டிருக்கிறான். இவனால்தான் நம் தலைமுறை இளைஞர்கள் போதை என்கிற கொடிய பழக்கத்துக்கு இரையாகி உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரம் எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களே, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்.

பாப்லோ, நேரடியாக களமிறங்கி சரக்கு கடத்தியபோது எடுத்த படம் இது. இதைவிட வலுவான சான்று உங்களுக்கு வேண்டுமா?”போட்டோகிராஃபர்கள் சடசடவென்று படமெடுக்கத் தொடங்கினார்கள். செய்தியாளர்கள் பரபரப்பானார்கள்.“பாப்லோ தரும் சூட்கேஸில் இருப்பது போதை மருந்துதான் என்பதற்கு என்ன ஆதாரம்?” ஒரு செய்தியாளர் கேட்டதுமே, தன்னுடைய வசீகரமான புன்னகையை பதிலாகத் தந்தார் ரீகன். தன் முன்பாக நீட்டப்பட்டிருந்த மைக்கை ஒருமுறை  தட்டினார். “ஆதாரம்? கடந்த வாரம் இதே சூட்கேஸைத்தான் அமெரிக்க போதைத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் புளோரிடா நகரில் கைப்பற்றினார்கள்.

மேலும், உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்கிறேன். பாப்லோ கொடுத்த இந்த சூட்கேஸைப் பெற்றுக்கொண்டு பத்திரமாக அமெரிக்காவில் கொண்டு வந்து ஒப்படைத்தவர் வேறு யாருமல்ல…”சில வினாடிகளை மவுனத்துக்கு செலவழித்தார் அதிபர். முன்னாள் ஹாலிவுட் நடிகரல்லவா? எங்கே நிறுத்தி, எங்கே தொடரவேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.“முன்னாள் சிஐஏ அதிகாரியான பேரிசீல்தான். பாப்லோவின் கும்பலுக்குள் எங்களுடைய ஆட்களை ஸ்லீப்பர்செல்களாக உள்ளே நுழைத்திருக்கிறோம். அவர்கள் வாயிலாகவே துல்லியமான ஆதாரங்களை நாங்கள் திரட்டியிருக்கிறோம்.
19a.jpg
இந்தப் படத்தை எடுத்தவரே பாப்லோவின் சரக்குகளை அமெரிக்காவுக்கு பலமுறை கடத்தியிருக்கும் பேரி சீல்தான்...”“சரி. ஆதாரத்தைக் காட்டி விட்டீர்கள். அடுத்தகட்ட நடவடிக்கை?”“மத்திய அமெரிக்காவில் இருந்து உலகெங்கும் போதைப் பொருட்களைக் கடத்தி வருவது பாப்லோ எஸ்கோபார். அவருக்கு ஆதரவு தரும் நாடுகள் உலகத்துக்கே எதிரிகளாக கருதப்படுவார்கள் என்பதை எச்சரிக்கிறேன். அமெரிக்கா, இனியும் சும்மா இருக்காது...” சிங்கம் போல கர்ஜித்துவிட்டு, பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டார் ரீகன். உடனடியாக ஊடகங்கள் அலறத் தொடங்கின.

இதுநாள் வரை பாப்லோவை, நவீன ராபின்ஹூட்டாக கட்டமைத்துக் கொண்டிருந்த ஊடகங்கள்கூட அவரை இதுவரை உலகம் கண்டிராத கொடூர வில்லனாக தலைப்பிட்டு எழுதத்தொடங்கின. தொலைக்காட்சிகளில் பாப்லோவின் பெயருக்கு முன்பாக ‘போதை உலகின் பேரரசன்’ என்று அடைமொழி இடப்பட்டது. அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுகளை பாப்லோ கடுமையாக மறுத்தார். அந்தப் படத்தில் இருப்பது, தானே அல்ல என்றார். ஆனால் - செவி மடுக்கத்தான் ஆளில்லை. சம்பிரதாயமான கிறிஸ்தவரான பாப்லோவின் தாயாருக்குத்தான் இந்த சூழல் கடுமையான மனவேதனையை ஏற்படுத்தியது.

தன்னுடைய மகனை உலகமே தூற்றும் இந்த நிலையை எண்ணி அவர் கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்தார். எதையாவது செய்து ஊர் வாயை மூடலாம். தாயின் கண்ணீரை எப்படி நிறுத்துவது என்று பாப்லோவுக்குத் தெரியவில்லை. அம்மாவிடம் அமைதியாகச் சொன்னார். “அம்மா, உங்கள் மகனைப் பற்றி டிவியிலும், பேப்பரிலும் வரும் செய்திகளை தயவுசெய்து நம்பாதீர்கள். நான் புனிதன் அல்ல. அதே நேரம் சாத்தானும் அல்ல. நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இப்போது இருக்கிறேன். அதே நேரம் என் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு வட்டியும், முதலுமாக பதிலடி கொடுப்பேன்.

அம்மா, நான் மக்களுக்கு உதவும் பணிகளைச் செய்து வருகிறேன். அதற்கு பரிசாக என்னை மக்களுக்கு வில்லனாக போலியான ஒரு பிம்பத்தை அவர்கள் உருவாக்க முயற்சிக்கிறார்கள்...”அமெரிக்க அதிபரின் ஆதாரத்தைத் தொடர்ந்து பல நாடுகளும் தங்களுடைய ‘Most wanted’ பட்டியலில் பாப்லோவின் பெயரைச் சேர்த்தன. தன்னுடைய எதிரியென்று அமெரிக்கா ஒரு தனிநபரைச் சுட்டிக் காட்டினால், என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்கா தெரியாது? பாப்லோ எஸ்கோபாருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் எந்தவித விசாரணைக்கும் இடமின்றி கைது செய்யப்பட்டார்கள்.
19b.jpg
பாப்லோ இப்படி வெளிப்படையாகப் போட்டுக் கொடுக்கப்பட்டதில், அப்போது அவர் தஞ்சமடைந்திருந்த நிகரகுவா நாட்டின் அரசியல் உள்குத்துகளுக்கும் பிரதான இடமிருந்தது. நிகரகுவா நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்கள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள். அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்குமான பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. எனவே, இடதுசாரி மனப்பான்மை கொண்டிருந்த அரசாங்கங்கள் மீது சேறு பூசுவதற்கு ஏதேனும் காரணங்களை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருந்தது. பாப்லோவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நிகரகுவா நாட்டை உலக அரங்கில் அசிங்கப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

இதற்கான ஏற்பாடுகளை நிகரகுவா அரசுக்கு எதிராக கலகம் செய்து கொண்டிருந்த புரட்சிப்படையினர் கச்சிதமாக அமெரிக்க அரசுக்கு செய்து கொடுத்திருந்தார்கள். தனக்கு தஞ்சம் கொடுத்தவர்களுக்கு தன்னால் தர்மசங்கடம் என்பதை பாப்லோவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.“அமெரிக்காதானே? பார்த்துக்கலாம்!” என்று பெருந்தன்மையாக நிகரகுவாவின் அரசு சார்பாக அவருக்கு சொல்லப்பட்டாலும், அதை மறுத்தார் பாப்லோ. “நான் போரைத் தொடங்கி விட்டேன். என் தாய்நாட்டுக்குள் இருந்துகொண்டே என் எதிரிகளோடு போரிடுவேன்...” என்று கம்பீரமாக அறிவித்தார். 

தன்னை விரும்பும் கொலம்பியர்களுக்கு மத்தியில் இருப்பதுதான் தனக்கு பாதுகாப்பு என்று அவர் கருதியதில் நியாயம் இல்லாமல் இல்லை. தான் மட்டுமல்ல. தன்னுடைய சகாக்களும் கொலம்பியாவில் இருப்பதே நல்லது என்பதை உணர்ந்து, வெவ்வேறு நாடுகளில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்களை ஒருங்கிணைக்கும் ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினார். பாப்லோவைப் போட்டுக் கொடுத்த பேரி சீல் என்ன ஆனார்? துரோகிகளுக்கு வரலாறு விதிக்கும் பரிசினைத்தான் பேரி சீல் பெற்றார்.

பாப்லோ தொடர்பான வழக்கில் அமெரிக்க விசாரணையில் முக்கியமான சாட்சியே அவர்தான். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இருக்கும் Baton rogue நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் பழியும் பாப்லோ எஸ்கோபார் மீதுதான் விழுந்தது. காட்டிக் கொடுத்தவர்கள் யாரும் வாழ்வாங்கு வாழ்ந்த சரித்திரம் வரலாறு நெடுகவே இல்லை.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Posted
 
 

காட் ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 42

தனக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு, தன்னால் ஆபத்து என்பதை பாப்லோ எஸ்கோபாரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அமெரிக்காவின் எதிர்ப்பை பாப்லோவுக்காக சமாளிக்க தயார் என்று நிகரகுவா என்கிற குட்டி நாடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றது அவருக்கு நெகிழ்ச்சியான உணர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் - அமெரிக்கா என்கிற பேரசுரனுக்கு முன்பாக சுண்டைக்காய் சைஸு நிகரகுவா என்னதான் செய்திட இயலும்?யானையின் காதுக்குள் புகும் சிற்றெறும்பு உவமையெல்லாம் யதார்த்தத்துக்கு உதவாதே? பாப்லோ, தன் தாய்நாடான கொலம்பியாவுக்கு திரும்ப திட்டமிட்டார்.
17.jpg
கொலம்பியாவுக்குள் இருந்துகொண்டே கொலம்பிய அரசுடன் ஒரு சமரசத் திட்டத்துக்கு ஏற்பாடு செய்துவிட முடியுமென்று நம்பினார். தான் திரும்புவதோடு மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பிரிந்து சென்று வாழ்ந்துகொண்டிருந்த தன்னுடைய சகாக்களுக்கும், மற்ற கார்டெல் தோழர்களுக்கும் ‘தாய்நாட்டுக்கு வாருங்கள்’ என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதற்காக தன்னுடைய சகோதரர் ராபர்ட்டோவை பிரேஸில், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பினார். பாப்லோவின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலானோர் கொலம்பியாவுக்குத் திரும்ப திட்டமிட்டனர். அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது.

கொலம்பியாவில் எல்லோரும் ஓரிடத்தில் கூடி தங்களுடைய வருங்காலம் குறித்து பேசுவதற்கு தேதி குறிப்பிடப்பட்டது. நாடு முழுக்க பரவியிருந்த போதை வியாபாரிகள், மதிப்பிற்குரிய விஐபிகள், கால்பந்து அணி உரிமையாளர்கள், சில மதகுருமார்கள், அரசுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருந்த சில எதிர்க்கட்சி பிரபலங்கள் என்று கலவையாக மொத்தம் எழுபது பேருக்கு அழைப்பு. தானா சேர்ந்த கூட்டமான இந்த எழுபது பேரும்தான் கொலம்பியா என்பது கிட்டத்தட்ட அன்றைய நிலை. அமெரிக்கா வேட்டையாட விரும்பிய கொலம்பியர்களின் பட்டியலில் ‘டாப்-70’ இவர்கள்தான் என்றும்கூட சொல்லலாம்.

அன்று மட்டும் ஒரே ஒரு குண்டைப் போட்டு ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டிருந்தால், இன்று கொலம்பியாவில் ‘போதை’ என்கிற சொல்லே வழக்கத்தில் இருந்து காலாவதியாகி இருக்கும். ரகசிய மறைவிடத்தில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் நடந்த இடத்தைச் சுற்றி சுமார் இருநூற்றி ஐம்பது ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுடைய கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளில் தொடங்கி நவீன கொலைக்கருவிகள். யெஸ். பாப்லோ, இராணுவம் ஒன்றையே உருவாக்கத் தொடங்கியிருந்தார்.

அந்தக் கூட்டத்தில்தான் பாப்லோ எஸ்கோபாரின் பிரபலமான பிரகடனம், அவரது வாயாலேயே வெளியிடப்பட்டது.“அமெரிக்கச் சிறை ஒன்றில் அடைபட்டிருப்பதைக் காட்டினிலும், இந்த சொந்த மண்ணுக்குள் புதையுண்டிருப்பதே எனக்கு கவுரவம்...”கொலம்பிய - அமெரிக்க அரசுகளின் போதை உள்ளிட்ட சட்டத்துக்குப் புறம்பான தொழில்களைச் செய்து வந்தோர் மீதான வேட்டையாடுதலை எதிர்க்க தாய்நாட்டுப் பற்றினை ஆயுதமாக ஏந்துவதற்கு புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டார் பாப்லோ. கிரிமினல் என்றாலும், அவருக்குள்ளும் தாய்நாட்டுப் பாசம் இருப்பது இயல்புதானே?
17a.jpg
பல்வேறு பிரமுகர்கள் அப்போதைய கொலம்பிய அரசின் மீதான அதிருப்தியை வெளியிட்டுவிட்டு, பாப்லோவின் திட்டம் தங்களுக்கு ஒத்துவருவதாக இருந்தால் கைகோர்ப்பதாக சொல்லிப் பேசினார்கள். கடைசியாக, பலத்த கரகோஷங்களுக்கு நடுவே மைக்கைப் பிடித்தார் பாப்லோ. “என் அன்பார்ந்த கொலம்பிய உடன்பிறப்புகளே...” என்றதும், நடப்பது விஐபிக்களின் கூட்டம் என்றாலும், பலரும் விசில் அடித்தார்கள்.“அமெரிக்காவுக்காக வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கும் இப்போதைய அரசின் சட்டம் எனக்கு எதிரானது மட்டுமல்ல, எல்லா கொலம்பியர்களுக்கும் எதிரானதுதான்.

குறிப்பாக ‘நியாயமாக’ தொழில் செய்து, இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற தொழிலதிபர்களுக்கு எதிரானது. அமெரிக்கா நம்மை அவர்களுடைய எதிரிகளாகக் கருதலாம். ஆனால், கொலம்பியா அப்படிக் கருதலாமா. நாம் கொலம்பிய மண்ணின் மைந்தர்கள் அல்லவா. நம்மை அமெரிக்காவுக்கு காட்டிக் கொடுத்து, அந்த நாட்டில் சிறைப்படுத்த கொலம்பிய அரசே முன்வரலாமா?”பாப்லோவின் பேச்சில் அனல் தெறிக்க ஆரம்பித்தது.“இப்போதைக்கு இரண்டு திட்டம் என் வசமிருக்கிறது. கொலம்பிய அரசை ஆட்டம் காணவைக்கும் திட்டம் இது. இவற்றுக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமென தயவுகூர்ந்து கேட்கிறேன்...”

கூட்டம் அமைதியாக பாப்லோவின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தது. முதல் திட்டத்தை பாப்லோ அறிவித்தார். “நாட்டிலிருக்கும் முக்கியமான கால்பந்து கிளப்களின் உரிமையாளர்கள் அனைவரும் இங்கே கூட்டத்தில் இருக்கிறீர்கள். இன்றிலிருந்து ஒரே ஒரு கால்பந்து போட்டி கூட கொலம்பியாவில் நடக்கக் கூடாது. சராசரி கொலம்பியன் சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவான். கால்பந்து போட்டியைப் பார்க்காமல் அவனால் இருந்துவிட முடியாது.‘ஏன் போட்டிகள் நடக்கவில்லை?’ என்று கேட்பான். ‘கால்பந்து போட்டி நடத்துபவர்களை முறைகேடாக பண வர்த்தகம் செய்வதாக அவதூறாக குற்றம் சாட்டி அமெரிக்கர்கள் நம்மை கைது செய்து இழுத்துச் செல்லும் போக்குக்கு கொலம்பிய அரசு ஆதரவாக நிற்கிறது’ என்று நம் தரப்பை நேரிடையாக மக்களிடம் சொல்ல முடியும்.

இதன் மூலமாக அமெரிக்காவுக்கு உதவும் கொலம்பியாவுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும்...”கேட்பதற்கு சிம்பிளான பிளானாகத் தெரிந்தாலும், அன்றைய கொலம்பியாவில் நிச்சயம் வேலைக்கு ஆகும் திட்டமே இது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் டிவியில் ஒளிபரப்ப முடியாது என்று இந்திய அரசாங்கம் அறிவித்தால் என்னாகுமோ, அதற்கு இணையான விளைவை ஏற்படுத்தக்கூடிய புத்திசாலித்தனமான ஐடியாதான். யாருக்கும் பெரியதாக ஆபத்தில்லாத இந்தத் திட்டத்துக்கு கூட்டத்தில் நல்ல ஆதரவு இருந்தது. கொஞ்சம் நஷ்டம்தான் என்றாலும், எதிர்காலத்தை உத்தேசித்து கால்பந்து கிளப் உரிமையாளர்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
17b.jpg
அடுத்ததாக பாப்லோ அறிவித்த திட்டம்தான் சலசலப்பை ஏற்படுத்தியது.“நாமெல்லாம் இணைந்து ஓர் இராணுவத்தை உருவாக்குவோம். நான் ஏற்கனவே எங்களுடைய மெதிலின் கார்டெல் சார்பாக ஓர் இராணுவத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். நீங்களும் அவரவர் சார்பாக சிறியளவில் ஒவ்வொரு இராணுவத்தை உருவாக்கினால், ஒட்டுமொத்தமாக நாம் கொலம்பிய இராணுவத்துக்கு ஈடு கொடுக்க முடியும். நம் மீது கை வைத்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்படும்...”ஓரிருவர் உடனடியாக கைதட்டி இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் - மற்றவர்கள் பதறிப் போனார்கள். பாப்லோ, தங்களையெல்லாம் பயன்படுத்தி கொலம்பியாவில் இராணுவப் புரட்சியை நிகழ்த்துவதற்கு ரகசியமாக திட்டமிடுகிறாரோ என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களில் பலரும் பாப்லோ போல பொதுவில் இயங்கக்கூடியவர்கள் அல்ல. எனவே, பாப்லோ உள்ளிட்டோருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி அவர்களுக்கு இல்லை. அரசாங்கத்தோடு சமரசமாகப் போக ஏதேனும் திட்டத்தை சொல்லுவார் என்று எதிர்பார்த்து வந்தவர்களுக்கு, அரசாங்கத்தை நேருக்கு நேராக ஆயுதம் கொண்டு எதிர்ப்போம் என்று பாப்லோ சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை.

ஒவ்வொருவராக கூட்டத்தில் இருந்து கழன்றுகொள்ள ஆரம்பித்தார்கள். ‘ஊருக்குப் போய் கடிதாசி போடுகிறோம்’ என்கிற லெவலில் காரணம் சொல்லி தப்பிக்க ஆரம்பித்தார்கள். வெளியேறிச் செல்பவர்களைப் பார்த்து பாப்லோ உறுமினார். “நாட்டின் எதிர்காலமே நான்தான். என்னுடன் இருப்பவர்கள் மட்டும்தான் உயிரோடு இருக்க முடியும். பார்த்து நல்ல முடிவாக எடுங்கள்!”
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 43

பாப்லோ கூட்டிய கூட்டம் எவ்விதமான உறுதியான தீர்வையும் எட்டாமல் குழப்பத்தோடு கலைந்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். நடுநிசி தாண்டும் பொழுதில், அந்த பண்ணை வீட்டு வாசலில் கருப்புநிற பென்ஸ் கார் ஒன்று சரேலென்று வந்து நின்றது. யாரோ முக்கியஸ்தர் ஒருவர் பாப்லோவை பார்க்க வருகிறார் என்று செக்யூரிட்டிகள் பரபரப்படைந்தனர். ஓடிச்சென்று கார் கதவை திறக்க முற்பட்டனர். அவர்களுக்கு வாய்ப்பு தராமல் அந்த கதவே திறந்தது. தேவலோகத்தில் இருந்து நேராக விசா வாங்கி வந்தவள் போல நாகரிக உடை உடுத்திய மங்கை ஒருவள் மிடுக்காக இறங்கினாள்.
20.jpg
“இங்கே டாக்டர் ஹெர்ணாண்டஸைப் பார்க்க வேண்டும்...” என்றாள்.“அப்படி யாரும் இங்கில்லையே?”“இல்லை. அவர்தான் மலர்க்கொத்துகளை ஆர்டர் செய்திருக்கிறார். டெலிவரி செய்ய வந்திருக்கிறேன்!”‘‘...’’“மன்னிக்கவும். தவறான முகவரிக்கு வந்துவிட்டேன்...” தேவதை மீண்டும் காருக்குள் ஐக்கியமானாள். சர்ரென்று ரிவர்ஸ் எடுத்த கார், நாலு குதிரை பாய்ச்சலில் பாய்ந்து மறைந்தது. தூர நின்று இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பாப்லோ, திடீரென உஷாரானார். “ஏதோ பிரச்னை. எல்லாரும் தயாராகுங்கள்...” என்று கத்தினார்.

அருகில் நின்றிருந்த பாப்லோவின் சகா குஸ்டாவோ, “யாரோ ஒருவருக்கு மலர்கள் கொண்டு வந்திருக்கிறாள். தவறுதலாக இங்கே வந்திருக்கக்கூடும். ஏன் பதறுகிறாய்?” என்று நிதானமாகக் கேட்டார். “அட முட்டாளே! கொலம்பியாவில் பூக்காரி எவளாவது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்து டெலிவரி செய்து பார்த்திருக்கிறாயா, கேள்விப்பட்டாவது இருக்கிறாயா? அதுவுமில்லாமல் நடுநிசியில் பூக்களை ஆர்டர் செய்யும் மடத்தனமான காதலன் இங்குண்டா?” “ஒருவேளை அந்த கார், அந்த பூக்காரியின் முதலாளியுடையதாக இருக்கலாமே?”

“நாம் நகரத்தை விட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்திருக்கிறோம். அக்கம் பக்கத்தில் வேறு பண்ணைகளே இல்லை. அதுவுமின்றி டாக்டர் ஹெர்ணாண்டஸ் என்கிற பெயரை என் வாழ்நாளில் கேள்விப்பட்டதும் இல்லை...” என்று பதிலளித்த பாப்லோ, பாதுகாவலர்களை நோக்கிச் சொன்னார்.“உஷாராக இருங்கள். இங்கிருக்கும் விருந்தினர்கள் அத்தனை பேரும் கிளம்பிய பிறகும், நீங்கள் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்துக் கொண்டிருங்கள். ஏதேனும் வில்லங்கமாக தென்பட்டால் எச்சரிக்கை எழுப்பும் முகமாக வானத்தை நோக்கி சுடுங்கள்...” பாப்லோ சொல்லிவிட்டு, உறங்குவதற்காக மாடிக்குச் சென்றார்.
20a.jpg
குஸ்டாவோவும், மற்றவர்களும்கூட அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள். அதிகாலை இரண்டு மணி. ‘டுமீல்... டுமீல்... டுமீல்...’ துப்பாக்கிச் சத்தம் அந்த பிராந்தியத்தையே எழுப்பியது. அவசர அவசரமாக பண்ணை வீடு ஒளிபெற்றது. இரவு ஆடை அணிந்திருந்த பாப்லோ, தன்னுடைய வின்செஸ்டர் ரக துப்பாக்கியை கையில் ஏந்தியவாறே வேகவேகமாக படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார். “நான்தான் சொன்னேனே... ஏதோ வில்லங்கமென்று…”பண்ணை வீட்டின் பின்புறமாக இருந்த கம்பிவேலியைத் தகர்த்துவிட்டு பாப்லோவும், அவரது சகாக்களும் ஓடத் தொடங்கினார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக துப்பாக்கியை முழக்கியவாறே சில பாதுகாவலர்களும் பின் தொடர்ந்தார்கள்.

இருளிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் இவர்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தன. பாப்லோவின் சகோதரன் ராபர்ட்டோவின் முகத்தில் ரத்தம். காலிலும் குண்டு பாய்ந்து நொண்டிக்கொண்டே வந்தார். அவர்களை போலீசும், ராணுவமும் சுற்றி வளைத்திருப்பது புரிந்தது. “நாம மாட்டிக்கிட்டோம் பாப்லோ...” என்றார். “வாயை மூடு. இப்படி அபசகுனமாக நினைத்தாலே போதும். தப்பிக்கும் எண்ணம் வராது...” பாப்லோ முகத்தில் எந்த சலனமுமில்லாமல் சொன்னார். சகோதரனைத் தோளில் தாங்கிக் கொண்டு, நடக்கத் தொடங்கினார். ஒரு மேட்டினை சிரமப்பட்டு ஏறிய பிறகு, நெடுஞ்சாலை வந்தது.

அவர்களை நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. போலீசாக இருக்குமோவென்று காரை நோக்கி துப்பாக்கிகளை நீட்டினார்கள். அதிர்ஷ்டவசமாக பாப்லோவின் சகா ஒருவன்தான் அந்த அமளியிலும் சமயோசிதமாக காரைக் கிளப்பி வந்திருந்தான். பாப்லோ, குஸ்டாவோ, காயமடைந்த ராபர்ட்டோ மூவரும் அந்த காரில் ஏறினார்கள். மற்றவர்கள் இருளில் மறைந்தார்கள். அந்த தாக்குதலில் பாப்லோவின் ஆட்கள் சிலர் காயமடைந்து தப்பிக்க முடியாமல் மாட்டினார்கள். மிக ரகசியமாக நடத்தப்பட்ட இந்த சந்திப்பு பற்றிய விவரங்கள் எப்படி கொலம்பிய அரசுக்குத் தெரிந்தது? கருப்பு நிற பென்ஸ் காரில் வந்த பெண் வேவு பார்க்கத்தான் வந்திருக்கிறாள்.

சந்திப்புக்கு வந்திருந்த ஒவ்வொரு வரும் பாப்லோவின் விசாரணை வளையத்துக்குள் வந்தார்கள். அன்பாகவும், அதட்டலாகவும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் பாப்லோ நேரடியாகவே தொலைபேசியில் பேசினார். ஓர் ஆரம்பநிலை போதைக் கடத்தல் ஆள்தான் மாட்டினான். அவனுடைய கழுத்தில் கத்தியை வைத்ததுமே மொத்தத்தையும் கக்கினான். பாப்லோவை கொல்லும் பொறுப்பு கர்னல் காசடீகோ டொராதோ என்கிற போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அவர் மாதந்தோறும் கணிசமான தொகையைச் செலவழித்து, பாப்லோ குறித்த சிறிய துப்புகளைக் கூட விடாமல் சேகரித்து வந்திருக்கிறார்.

காசடீகோவின் ஏற்பாட்டின் பேரில்தான் அன்று பண்ணை வீட்டின் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. விஷயத்தை ஒப்பித்ததுமே காட்டிக் கொடுத்த கைக்கூலிக்கு என்ன பரிசோ, அதை உடனடியாகத் தந்துவிட்டார் பாப்லோ. அதாவது பாவத்தின் சம்பளம் மரணம். கர்னலுக்கு உடனடியாக தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். “அன்புள்ள கர்னல், உங்கள் ராஜ விசுவாசத்தை மெச்சுகிறான் இந்த பாப்லோ. நீங்கள் இப்போது என்னை கொல்லுவதற்காக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்னுடைய சார்பில் என்ன கொடுக்கப் போகிறேன் என்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்...”மிகவும் நாகரிகமான நடையில் எழுதப்பட்ட இந்த மிரட்டலை வாசித்ததுமே கர்னல் கலங்கிப் போனார்.

மேல்மட்டத்தில் இருந்தவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வேறு ஒரு தண்ணியில்லா காட்டுக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு தப்பித்தார். ஆனால் - பல வருடங்களுக்குப் பிறகு, பாப்லோவெல்லாம் காலமான பிறகு அந்த கர்னல் அடையாளம் தெரியாதவர்களால் சுடப்பட்டு மரணமடைந்தாராம்! அந்த பண்ணை வீடு தாக்குதல் நடந்த அதே நேரத்தில் கொலம்பியாவின் பெரிய கார்டெல் உரிமையாளர்களான ஓச்சோ, கில்பெர்ட்டோ ரோடிக்யூஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கைது ஆகியிருக்கிறார்கள். பாப்லோவின் உறுதிமொழியை ஏற்று கொலம்பியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே விமான நிலையங்களில் கைதானது போதை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

‘பாப்லோவெல்லாம் அவ்ளோதான். சப்பை ஆயிட்டாரு...’ என்று கீழ்மட்டத்தில் பேசிக்கொண்டார்கள். கைதானவர்கள் ஸ்பெயின் ஜெயிலில் தள்ளப்பட்டார்கள். அவர்கள் தங்கள் நாட்டின் குற்றவாளிகள்; தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்பெயின் அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. தங்கள் நாட்டு குடிமக்கள் என்பதால் தங்களிடம் ஒப்படைக்குமாறு கொலம்பியாவும் கேட்டுக் கொண்டிருந்தது. யாரிடம் ஒப்படைப்பது என்று ஸ்பெயின் குழம்பியிருந்த நேரத்தில் பாப்லோவின் பணம் விளையாட ஆரம்பித்தது.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

Posted

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா - 44

பாப்லோவின் நெருங்கிய நண்பரும், சக கார்டெல் உரிமையாளருமான ஜார்ஜ் ஓச்சோ உள்ளிட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்களைக் கைது செய்த ஸ்பெயினுக்கு அமெரிக்கா நெருக்குதல் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் தங்கள் மீதி வாழ்நாள் மொத்தத்தையுமே அமெரிக்க சிறையில்தான் கழிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்படும். மாறாக கொலம்பியாவுக்கு அனுப்பப்பட்டால் ஏதோ ஒரு தொகையை அபராதமாக செலுத்திவிட்டு பழையபடி தொழிலை நடத்தலாம். எனவேதான், கொலம்பிய அரசில் தனக்கிருந்த செல்வாக்கினைப் பயன்படுத்தி ஸ்பெயினில் கைது செய்யப்பட்டவர்கள் கொலம்பியாவுக்குத்தான் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்கிற நெருக்குதலை கொஞ்சம் உறுதியாகவே முன்வைத்தார் பாப்லோ.
15.jpg
கொலம்பியாவின் தலைசிறந்த வக்கீல்கள் ஸ்பெயினுக்கு பயணமாகி அங்கே இதற்கான வேலைகளை செய்து வந்தார்கள். ஸ்பெயினின் அரசு மட்டத்திலும் பாப்லோவின் பணமழை தாறுமாறாகப் பொழிந்தது. ஆனால் -எதுவுமே எளிதாக நடந்துவிடவில்லை. ஒருவேளை ஓச்சோ உள்ளிட்டவர்களை அமெரிக்கா வெற்றிகரமாகக் கைப்பற்றி விட்டால், அடுத்து தன்னையும் பிடித்து உள்ளே தள்ளுவது சுலபமாகி விடும் என்று பாப்லோ கருதினார். கொலம்பியாவின் உரிமையை(!) எக்காரணம் கொண்டும் இந்த விஷயத்தில் விட்டுவிடக் கூடாது என்று கர்ஜித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் ஸ்பெயினை இடமும் வலமுமாக அமெரிக்காவும், கொலம்பியாவும் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தன.

அப்போதைய ஸ்பெயின் பிரதமரை சரிக்கட்டும் முயற்சிகள் பாப்லோ தலைமையிலான போதை கார்டெல்களால் முன்னெடுக்கப்பட்டன. விளைவாக குற்றவாளிகள் அனைவரும் அமெரிக்காவின் விருப்பத்துக்கு மாறாக கொலம்பியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்கள். இங்கே ஒப்புக்குச் சப்பாணியாக அவர்கள் மீது விசாரணை நடந்து, ஏதோ ஒரு கணக்குக்கு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டது. கோர்ட் சொல்லும் தொகையைக் கட்டினால் அந்த தண்டனையும் இல்லை. இவர்களிடம் என்ன பணத்துக்கா பஞ்சம்? தொகையை கட்டிவிட்டு சுதந்திரமாக நடமாடத் தொடங்கினார்கள்.

எனினும், கார்டெல்காரர்கள் முன்புபோல அதிகாரம் செலுத்த முடியவில்லை. ஓரளவுக்கு கொலம்பிய அரசையும், அதிகாரிகளையும் அவர்கள் சரிக்கட்டி விட்டார்கள் என்றாலும் அவர்கள் நாட்டுக்குள் ஊடுருவிவிட்ட சிஐஏ உளவாளிகளுக்கு பயந்தார்கள். எந்த நிமிடம், எந்த திக்கிலிருந்து தங்களை நோக்கி தோட்டா பாயுமோ என்கிற அச்சத்திலேயே இரவும், பகலும் தூக்கமின்றி தவித்தார்கள். குறிப்பாக பாப்லோவின் மீது நடத்தப்பட்ட பண்ணை வீட்டுத் தாக்குதல் கொலம்பியாவின் ஒட்டுமொத்த போதையுலகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது.
15a.jpg
இதனால் ஆயுதத்தை நன்கு கையாளத் தெரிந்த பாதுகாவலர்களை பெரும் சம்பளத்துக்கு பணிக்கு வைத்துக் கொண்டார்கள். பாப்லோ, மெதிலின் நகரில் புழங்குவதற்காக மட்டுமே சுமார் இருபது கார்களை மாற்றி மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலமாக, தான் எந்த காரில் பயணிக்கிறோம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியாமல் எதிரிகள் குழம்பி, கொலைத்திட்டம் எதுவும் தீட்டிவிட முடியாது இல்லையா? அமெரிக்காவுக்கு எதிராக கொலம்பிய அரசு சுண்டு விரலைக் கூட நீட்டாது என்பது நன்றாகவே புரிந்தது. இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவின் ஏவல்நாயாக தங்கள் மீது பாய்வதற்கு கொலம்பியாவுக்கு எந்த தயக்கமும் கிடையாது. இதை எதிர்கொள்ள நமக்கு நாமே ஒரு ராணுவத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிரடியான ஐடியாவை பாப்லோ முன்வைத்தார்.

மற்ற போதை கார்டெல்கள் இந்த யோசனையைக் கேட்டதுமே நடுநடுங்கினர். ஏனெனில், முன்பு போதைத்தொழில் என்பது சகஜமாக இருந்தது. பாப்லோவின் மெதிலின் கார்டெல் உள்ளிட்ட முன்னணி கார்டெல்களில் பணியாற்றுவது கொலம்பியாவின் ஏழை இளைஞர்களுக்கு கவுரவமான தகுதியாக இருந்தது. சமீபமாக அப்படியல்ல. கார்டெல் தொடர்புடையவர்கள் என்று போலீஸாரால் சொல்லப்பட்டவர்கள், நடுத்தெருவில் நாய் மாதிரி சுட்டுக் கொல்லப்பட்டாலும் கேட்க நாதியில்லை. எனவே, கார்டெல்கள் நடத்தப் போகும் ராணுவத்தில் சேர யார் முன்வருவார்கள்? அதுவுமின்றி அமெரிக்காவை எதிர்த்து போர் புரிந்துவிடத்தான் முடியுமா?

“எத்தனை தலைகள் மண்ணில் வீழ்ந்தாலும் பரவாயில்லை. எவ்வளவு ரத்தம் ஆறாக ஓடினாலும் கவலையில்லை...” என்று கர்ஜித்தார் பாப்லோ எஸ்கோபார். உலகம் அதுவரை கண்டறியாத வன்முறை வெறியாட்டங்களுக்கு அதுவே பிள்ளையார் சுழி. பாப்லோ, கொலம்பிய அரசிடமிருந்து நிறையவெல்லாம் எதிர்பார்க்கவில்லை. போதை கடத்தல்காரர்களின் பெயரைச் சொல்லி அமெரிக்கா கேட்டால், விசாரணை எதுவுமின்றி அவர்களைக் கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் சட்டம் தேவையில்லை என்று மட்டும்தான் சொன்னார். அமெரிக்காவோ, இந்த சட்டத்தை கொலம்பியா ஏற்றே ஆகவேண்டும், இல்லையேல் எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருந்தது.
15b.jpg
“பாம்புக்கு வாலாக இருப்பதை விட எறும்புக்கு தலையாக இருந்து தொலைங்களேன். இல்லையேல், எங்களிடம் ஆட்சியைக் கொடுங்கள்; நாங்கள் நடத்திக் கொள்கிறோம்...” என்று எஸ்கோபார் விட்ட சவாலை கொலம்பிய அரசியல்வாதிகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. விளைவு? உள்நாட்டுப் போரை நோக்கி கொலம்பியா போய்க்கொண்டிருந்தது. 1986ல் போதைத்தொழில் செய்துவந்த இருபத்தெட்டு கொலம்பியர்களை அமெரிக்கா தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்று அமெரிக்க சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தது. “அமெரிக்க சிறையில் உயிரோடு இருப்பதைவிட, கொலம்பிய மண்ணில் புதைவதே கவுரவம்...” என்று முழங்கினார் பாப்லோ.

இந்த கோஷம், கொலம்பியாவின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. போதைக் கடத்தல்காரர்களாக இருந்தாலும் அவர்கள் கொலம்பியர்கள். அவர்கள் தவறு செய்திருந்தால், அவர்களுக்கு கொலம்பிய நீதிமன்றங்கள் தண்டனை வழங்கட்டும். அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது சரியல்ல என்று பொதுமக்களிடையேகூட ஒரு பொதுக்கருத்து உருவானது. இனியும் பொறுக்க முடியாது என்று கார்டெல்கள் பாப்லோவின் பின்னால் அணிதிரளத் தொடங்கினார்கள். வெளியேற்றத்துக்கு எதிரானவர்கள் (Los extraditables) என்கிற பெயரில் பாப்லோ தலைமையில் ஒரு ரகசியக் கூட்டமைப்பு உருவானது. கொலம்பிய அரசுக்கு எதிராக இந்த அமைப்பு ஒரு ராணுவத்தையே கட்டமைக்கத் தொடங்கியது.

அரசின் ராணுவத்தில் கொடுக்கப்படும் சம்பளத்தைவிட இரு மடங்கு சம்பளம் என்பதால், இதில் இணைவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டினார்கள். மேலும் -இந்த அமைப்பு போதைத் தொழிலை விட்டுவிட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றும் என்கிற நம்பிக்கையும் மக்களுக்கு உருவானது. தங்களுக்கு என்று வலிமையான ராணுவத்தை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல், ராஜதந்திர ரீதியிலான அரசியல் கூட்டணிகளை உருவாக்கவும் பாப்லோ முற்பட்டார். இந்த போதைத் தொழிலாளர் கூட்டமைப்போடு இணைந்து இயங்க M-19 கொரில்லாக்கள் முடிவெடுத்ததுமேதான் கொலம்பிய அரசு, தாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஆபத்தை உணர்ந்தது.ஏனெனில் - M-19 கொரில்லாக்கள் யாரென்றால்…
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 
 

யுவகிருஷ்ணா - 45

நவம்பர் 6, 1985. பொகோடா நகரில் அமைந்திருக்கும் Palace of Justice என்று சொல்லப்படும் கொலம்பியாவின் உச்சநீதிமன்றம் தன்னுடைய வழக்கமான அலுவல்களைத் தொடங்கியது. காலை பதினொன்றரை மணி இருக்கும். மூன்று கனரக வாகனங்கள் மின்னல் வேகத்தில் கோர்ட் வளாகத்தில் நுழைந்தன. ஆண்களும், பெண்களுமாக முப்பத்தைந்து பேர் ஆயுதங்களுடன் அவற்றில் இருந்து இறங்கினார்கள். சட்டென்று சுதாரித்த பாதுகாவலர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், தயவுதாட்சண்யமின்றி சுடப்பட்டார்கள். தரைத்தளத்துக்கு எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி உள்ளே நுழைந்தார்கள். ஏற்கனவே சிவில் உடையில் கோர்ட் நடைமுறைகளைப் பார்க்க வந்த அப்பாவிகள் மாதிரி அங்கே திரண்டிருந்த வன்முறையாளர்களும் இவர்களோடு கைகோர்த்துக் கொண்டார்கள்.
16.jpg
“எம்-19 வாழ்க. கொலம்பியா ஓங்குக...” என்று கோஷம் இட்டவாறே மொத்தக் கட்டிடத்தையும் ஆக்கிரமித்தார்கள். ஆங்காங்கே அரண்கள் போன்று அமைத்து துப்பாக்கிகளோடு காவல் நின்றார்கள். “மாட்சிமை தங்கிய கொலம்பிய உச்சநீதிமன்றம், எம்-19 போராளிகளின் ஆளுகைக்குள் வந்துவிட்டது...” என்று ‘Bloody takeover’ என பெயர் சூட்டப்பட்ட அந்த ஆபரேஷனுக்கு தலைமை தாங்கிய எம்-19 தளபதி லூயிஸ் ஒத்தெரோ அறிவித்தார். தளபதியின் துப்பாக்கி முனையில் திருதிருவென்று முழித்தவாறே கையறு நிலையில் நின்று கொண்டிருந்தார் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்போன்ஸோ ரேயஸ். பிற்பகல் இரண்டு மணிக்குள்ளாக ஐந்து மாடிகள் கொண்ட மொத்தக் கட்டிடமும் எம்-19 வசமானது.

எம்-19, கொலம்பியா மக்களுக்கு வானொலி செய்திக் குறிப்பு ஒன்றின் மூலமாக உச்சநீதிமன்றத்தை தாங்கள் கைப்பற்றிய செய்தியை பெருமையாக சொல்லிக் கொண்டது. “கொலம்பிய அரசாங்கம் அமைதிக்கும், சமூகநீதிக்கும் எதிராகப் போய்க் கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை எங்களுக்கு தவிர்க்க இயலாததாகி விட்டது...”சுமார் முன்னூறு பேர் பிணைக் கைதிகளாக கட்டிடத்துக்குள் அடைபட்டுக் கிடந்தார்கள். உச்சநீதிமன்றத்தின் 24 நீதிபதிகளும் அதில் அடக்கம். திடீரென்று நடந்த இந்த தாக்குதல் தந்த அதிர்ச்சியில் இருந்து உடனடியாக மீண்டுவிட முடியவில்லை கொலம்பிய அரசாங்கத்தால்.

அதிபர் பெலிசாரியோவோடு தாங்கள் போனில் பேசவேண்டும் என்று எம்-19 விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது. உண்மையில் அவர்களோடு பேசுவதற்கு அதிர்ச்சியின் காரணமாக அதிபர் தயாராகியிருக்கவில்லை என்பதே உண்மை. உடனடியாக அமைச்சரவை கேபினட் கூட்டப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது. தங்கள் உச்சநீதிமன்றத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்கிற கேவலத்தைவிட, அமெரிக்கா என்ன சொல்லுமோ என்கிற எண்ணம்தான் கொலம்பிய அரசியல்வாதிகளை வாட்டியது. எம்-19 யார்? 1970களில் தென்னமெரிக்காவில் புரட்சிகர சிந்தனைகள் மேலோங்கத் தொடங்கின. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
16a.jpg
மறைமுக அமெரிக்க காலனியாதிக்கத்தில் தென்னமெரிக்க நாடுகளின் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிகர சோஷலிஸ நடைமுறைகளால் மட்டுமே மக்களுக்கான ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியுமென்று பல சிறிய குழுக்கள் உருவாகி ஆயுதமேந்தத் துவங்கின. அமெரிக்காவை எதிர்த்து சுயமரியாதையோடு நின்ற கியூபா, அவர்களுக்கெல்லாம் முன்னோடி நாடாக அமைந்தது. இம்மாதிரி ஆயுதம் ஏந்த முன்வந்த குழுக்களை ரஷ்யா ஆதரித்தது. ஆயுதங்களை வினியோகித்தது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவிடமிருந்து கிடைத்த உதவியால் இந்தக் குழுக்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றத் தொடங்கின.

அமெரிக்க அடிமைகளாக ஆண்டு கொண்டிருந்த தத்தமது அரசாங்கங்களுக்கு எதிராக கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தி கணிசமான வெற்றிகளை இவர்கள் குவித்துக் கொண்டிருந்தார்கள். சில நாடுகளில் ஆட்சியையேகூட மாற்றியமைத்து சாதித்தார்கள். கொலம்பியாவில் அம்மாதிரி உருவான ஒரு கொரில்லா குழுதான் எம்-19 (19th April Movement). 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஏகத்துக்கும் தில்லுமுல்லு நடந்து, அமெரிக்க அடிமையான ஓர் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றவரான முன்னாள் ராணுவ ஜெனரல் குஸ்டாவோ ரோஜாஸ் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இடதுசாரிகளுக்கு தேர்தல் அரசியலில் ஏற்பட்ட இந்தப் பின்னடைவின் காரணமாகவே, அரசை அச்சுறுத்தும் தீவிரவாத கொரில்லா அமைப்பாக எம்-19 உருவானது. 1974ல் மியூசியத்தில் இருந்து சரித்திரப் பிரசித்தி பெற்ற சிமோன் பொலிவாரின் வாளைக் கைப்பற்றியதிலிருந்து எம்-19 புகழ் பெறலாயிற்று. 1979ன் புதுவருடம் அன்று கொலம்பியாவின் ராணுவக் கிடங்கு ஒன்றிலிருந்து கணிசமான ஆயுதங்களை எம்-19 கைப்பற்றியது. மண்ணுக்குள் குகை நோண்டி வந்து கிடங்குக்குள் நுழைந்து இந்த சாதனை சம்பவத்தை நிகழ்த்திக் காட்டினர் எம்-19 கொரில்லாக்கள். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நவீன  துப்பாக்கிகளைக் கொள்ளையடித்த பிறகே, அரசுக்கு எதிரான வலுவான ஆயுதக் குழுவாக எம்-19 அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது.

அதற்கு முன்பாக அமெரிக்க சிஐஏவின் அடிவருடிகள் என்றுகூறி சில அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அவ்வப்போது கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்து பணம் பிடுங்கியதே எம்-19ன் செயல்பாடுகளாக இருந்தன. 1980ல் கொலம்பியாவிலிருந்த டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டின் தூதரகத்தை எம்-19 கொரில்லாக்கள் கைப்பற்றினார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14 தூதர்கள் உட்பட சுமார் 60 பேரை பணயக்கைதிகளாக்கி, இரண்டு மாதங்களுக்கு கொலம்பியாவுக்கே தண்ணி காட்டினார்கள். அவர்களை விடுவிக்க நாடெங்கும் சிறையில் அடைபட்டிருந்த தங்கள் தோழர்கள் நூற்றுக்கணக்கானோரின் விடுதலையை விலையாக முன்வைத்திருந்தார்கள்.

மேலும், அனைவரையும் விடுவிக்க வேண்டுமானால் ‘சம்பவத்தில்’ ஈடுபட்டவர்கள், கியூபாவுக்கு பாதுகாப்பாகச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துதர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். எம்-19 கொரில்லாக்களை எப்படியோ தாஜா செய்து சர்வதேச அரங்கில் தங்கள் மானம் விமானம் ஏறாமல் பார்த்துக் கொண்டது கொலம்பிய அரசு. திரைமறைவில் ஏகத்துக்கும் பணம் விளையாடியதாகவும் தகவல். அந்த சம்பவத்துக்குப் பிறகு கொலம்பிய அரசுக்கும், எம்-19 கொரில்லாக்களுக்கும் பெரியளவிலான மோதல் எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் கூட  எம்-19 கொரில்லாக்கள் முன்வந்திருந்தனர்.

இந்நிலையில்தான் யாருமே எதிர்பாரா வண்ணம் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டை ஆக்கிரமிக்கும் ‘bloody takeover’ தாக்குதலை நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்கள் எம்-19 கொரில்லாக்கள். இந்த தாக்குதலின் மூளையாகவும், பொருளாதார ஆதாரமாகவும் இருந்தவர் மெதிலின் கார்டெல் காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபார் என்று அரசு கருதியது. அமெரிக்க அரசின் நெருக்குதல் காரணமாக போதைக் கடத்தல் கார்டெல்கள் மீது கொலம்பிய அரசு எடுத்த கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்க எஸ்கோபார் முடிவெடுத்து விட்டார் என்று பரவலாக பேசிக்கொள்ளப்பட்டது.
 

ஓவியம் : அரஸ்

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

Posted

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

 

 

யுவகிருஷ்ணா - 46

“கொலம்பிய மக்களை அமெரிக்காவுக்கு அடிமைப் பத்திரம் எழுதித் தரும் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்...” ரேடியோவில் எம்-19 கொரில்லாக்கள், சுப்ரீம் கோர்ட் கட்டிடத்தை ஆக்கிரமித்ததுமே விடுத்த அறைகூவல் இதுதான். “புனிதமான சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் ஒரே ஒரு துளிகூட ரத்தம் சிந்தக்கூடாது...” என்று அதிபர் ஆணையிட்டிருப்பதாக அரசாங்கம் அலறிக்கொண்டே இருந்தது. ஆனால் - பின்னணியில் இராணுவ நடவடிக்கைக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சட்டத்தின் ஆட்சியை கொலம்பியாவில் உறுதி செய்ய நீங்கள் ‘என்ன வேண்டுமானாலும்’ செய்துகொள்ளலாம் என்று அதிபரே நேரடியாக இராணுவத் தளபதிகளிடம் சொன்னதாகக் கேள்வி.
19.jpg
இதற்கிடையே பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, அதிபருடன் தொலைபேசியில் பேச முன்னெடுத்த முயற்சிகள் வீணானது. ஒருவேளை அந்த போன் அழைப்பை தான் எடுத்துவிட்டால், ஒருவகையில் கொரில்லாக்களோடு சமரசமாகப் போக வேண்டிய இக்கட்டு ஏற்பட்டு விடுமோ என்றுகூட அதிபர் அஞ்சியிருக்கலாம். ஐந்து மாடி பிரும்மாண்ட கட்டிடம். முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கொரில்லாக்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் பொதுமக்கள் மட்டுமின்றி வக்கீல்களும், நீதிபதிகளும்கூட கணிசமாக அடங்கியிருந்தார்கள். கட்டிடத்தில் ஆங்காங்கே குண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

கட்டிடத்தை இராணுவம் முற்றுகையிட்டு, உறுதியான நடவடிக்கைகளுக்கான ஆணையை எதிர்பார்த்து வில்லில் பூட்டப்பட்ட நாணை போல தயாராக இருக்கிறது.
இதற்கிடையே கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து திடீரென்று கரும்புகை சூழ சுற்றி வளைத்திருந்த இராணுவ அதிகாரிகள் பதைபதைத்துப் போனார்கள். ஆணை வருவதற்கு முன்பே அவசரப்பட்டு சில வீரர்கள் புகை வந்துகொண்டிருந்த தளத்தை நோக்கி சுடத்தொடங்கினார்கள். அவர்களை அடக்கிய அதிகாரி ஒருவர், மெகாபோனில் கொரில்லாக்களோடு பேசத்தொடங்கினார்.“அங்கே என்ன எழவுதான் நடக்கிறது? ஏன் இவ்வளவு புகை மூட்டம்? ஒரே ஒரு உயிர் பறிபோனால்கூட கொலம்பிய மக்களுக்கு பதில் சொல்ல நீங்கள் கடமைப்பட்டவர்கள் ஆவீர்கள்...”

பதிலுக்கு கொரில்லாக்களும் சத்தமாக கொக்கரித்தனர். “ஹலோ ஆபீஸர். உங்கள் இராணுவம் கொலம்பிய மக்களுக்கு விசுவாசம் காட்டுகிறதா, அமெரிக்காவுக்கு அடிவருடுகிறதா என்று மக்களுக்குத் தெரியும். உங்களைக் காட்டிலும் கொலம்பியர்கள் மீது உயிராய் இருப்பவர்கள் நாங்கள்தான். எங்களால் இங்கே ஒரே ஒரு உயிர்கூட போகாது...”“அப்புறம் ஏன் அங்கே தீ? குளிர் காய்ந்துகொண்டிருக்கிறீர்களா?”“இல்லை. தீபாவளி கொண்டாடுகிறோம்...” சொல்லிவிட்டு ‘ஆட்டம் ஆரம்பமாகட்டும்’ வீரப்பன் மாதிரி சிரிக்கத் தொடங்கினார்கள். கடுப்பான இராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டு, கொரில்லாக்களை வெறுப்பேற்றத் தொடங்கினார்கள்.
19a.jpg
கொரில்லாக்களோ இவர்களைப் போல துப்பாக்கிக் குண்டுகளை வீணடிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் கைப்பற்றப்பட்ட அன்று இரவு, இராணுவம் ஏதேனும் மீட்பு நடவடிக்கையை எடுக்குமென்று உள்ளே இருந்த பிணைக்கைதிகள் எதிர்பார்த்தார்கள். மாறாக இராணுவமோ கட்டிடத்தின் மின்சாரம், தண்ணீர் இணைப்பு போன்றவற்றை முடக்குவதிலேயே காலம் செலுத்திக் கொண்டிருந்தது. அன்றைய இரவு முழுக்கவே கொரில்லாக்களுக்கும், இராணுவத்துக்கும் ஆடுபுலி ஆட்டம்தான். இரு தரப்புமே ஒரு நொடி கூட கண்ணசரவில்லை. மறுநாள் விடிந்தது. தங்களுக்கு ஏதேனும் விடியல் பிறக்காதோ என்று பிணைக்கைதிகள் ஆவலாக ரேடியோவை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது...” என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, உருப்படியான நடவடிக்கையோ பேச்சுவார்த்தையோ நடப்பதற்கு அறிகுறியே இல்லை. எம்-19 கொரில்லாக்களும் கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தார்கள். உலகமே மூக்கின் மீது விரல் வைக்குமளவுக்கு ஒரு சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். இந்த சுண்டைக்காய் கொலம்பியா அரசாங்கம், எருமைத் தோலில் கொசு கடித்தது மாதிரி நடந்துகொள்கிறதே என்று நினைத்தார்கள். காலை 8.30 மணியளவில் கட்டிடத்தின் வாயிலில் ஒருவர் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தார்.

இராணுவத் துப்பாக்கிகள் குறிவைத்திருந்த நிலையில் அவர் கை இரண்டையும் தூக்கிக் கொண்டே வெளியே வந்தார். அவரிடம் கொரில்லாக்களின் செய்தி இருந்தது. கட்டிடத்துக்கு உள்ளே மருத்துவக் குழுவினரை அனுப்புவது தொடர்பான அனுமதி, பேச்சுவார்த்தையைத் தொடங்க யார் நேரில் வரவேண்டும் என்பதைப் போன்ற குறிப்புகளை கொரில்லாக்கள் கொடுத்திருந்தனர். இராணுவ அதிகாரிகள் அவரிடம் கட்டிடத்துக்குள் என்ன நிலைமை என்று பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தனர். முந்தைய நாள் மாலை திடீரென கரும்புகை கட்டிடத்தில் இருந்து வெளிவந்தது குறித்துதான் அவர்களது அக்கறை இருந்தது.

“கோர்ட் ஃபைலை எல்லாம் எடுத்துப் போட்டு எரிக்கறானுங்க. எனக்குத் தெரிஞ்சு எப்படியும் ஐயாயிரம், ஆறாயிரம் ஃபைல் எரிஞ்சிருக்கும். குறிப்பா எஸ்கோபார் சம்பந்தப்பட்ட ஃபைல் ஒண்ணுகூட இருக்கக்கூடாதுன்னு அவனுங்க பேசிக்கிட்டது என் காதுலே விழுந்துச்சி...” நிலைமை என்னவென்பது மேலிடத்துக்கு உடனுக்கு உடனடியாக எடுத்துச் சொல்லப்பட்டது. அதுவரை எம்-19 கொரில்லாக்களின் நடவடிக்கை மட்டுமே என்று கருதிக் கொண்டிருந்த அரசாங்கம், இதில் பாப்லோ எஸ்கோபாரின் கையும் பின்னணியில் இருக்கிறது என்று அறிந்ததுமே வெறியானது. “யாரு பிழைச்சாலும் சரி, யாரு செத்தாலும் சரி, போட்டுருங்க...” என்று அதிரடியாக ஆர்டர் வந்தது.
19b.jpg
கொலைவெறியோடு இராணுவம் பாய்ந்தது. கையெறி குண்டுகளை வீசியவாறே வீரர்கள் முன்னேறினர். அவர்களுக்கு பாதுகாப்பாக கவச வண்டிகளும் அந்த கம்பீரமான கட்டிடத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன் முன்னேறியது. இராணுவத்தின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத கொரில்லாக்கள், சுதாரிப்பதற்கு முன்பாகவே கட்டிடத்தின் கீழ்த்தளம் கண்ணிமைக்கும் நேரத்தில் இராணுவ வசமானது. கட்டிடத்தைச் சுற்றிலும் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி மேல் மாடிகளில் இருந்த கொரில்லாக்களை சின்னாபின்னப் படுத்தத் தொடங்கினர். எங்கும் உயிர் ஓலம். மாட்சிமை தங்கிய உச்சநீதிமன்றத்தின் சுவர்களும், தரையும் இரத்தமயமானது.

மரணிப்பவர்கள் கொரில்லாக்களா அல்லது பிணைக் கைதிகளா என்றெல்லாம் இராணுவம் பரிசீலிக்கவில்லை. ஒரே நாளில் அந்த கட்டிடத்தை மொத்தமாக தரைமட்டமாக்கி விடும் வெறிதான் அவர்களுக்கு இருந்தது. இராணுவப் புயல் ஓய்ந்தபிறகு சேதாரங்களை கணக்கிடும் பணி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் எம்-19 கொரில்லாக்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி பன்னிரெண்டு சுப்ரீம் கோர்ட் மாஜிஸ்திரேட்டுகளும் அடக்கம். எம்-19 ஆபரேஷனுக்கு தலைமை தாங்கியவர் மட்டுமின்றி, நான்கு தளபதிகளும் உயிரிழந்தனர் என்றாலும்,

ஒட்டுமொத்தமாக அப்போதிருந்த இருபத்தைந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் பன்னிரெண்டு பேர் இந்த தாக்குதலில் மட்டுமே கொல்லப்பட்டது கொலம்பிய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மேலும் ஒரு நீதிபதி குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். கொலம்பியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளுமே இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தன. எம்-19 கொரில்லாக்களின் ஆக்கிரமிப்பை கொலம்பியா கையாண்டவிதம் சரியல்ல என்று சுட்டிக் காட்டின.இந்தச் சம்பவம் டிரைலர்தான். அடுத்த ஒரு வாரத்தில் கொலம்பியா, அதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆபத்தை சந்தித்தது.ஆனால் - அதற்கு பாப்லோ எஸ்கோபார் காரணமல்ல.
 

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்

http://www.kungumam.co.in/

Posted

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா - 47

எம்-19 கொரில்லாக்களின் தாக்குதலால் சுப்ரீம் கோர்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிணங்களாக விழுந்தது, கொலம்பியாவை மட்டுமின்றி உலகத்தையே  அச்சத்துக்கு உள்ளாக்கியது. இந்தத் தாக்குதலில் பாப்லோ எஸ்கோபாரின் கை இருக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் அரசுத் தரப்பில் இருந்தன. பாப்லோவின் மெதிலின் கார்டெல்லில் இருந்த முக்கியஸ்தர்களேகூட இந்த தாக்குதலை ரசிக்கவில்லை. எஸ்கோபாரோ வழக்கம்போல தனக்கும், இதற்கும்  சம்பந்தமில்லை என்றே மழுப்பி வந்தார். ஆனால் - தாக்குதலின் போது நீதிமன்றக் கட்டடத்துக்குள் எரிக்கப்பட்ட ஆவணங்கள் பெரும்பாலும் பாப்லோ  சம்பந்தப்பட்டவைதான்.
22.jpg
மற்ற கார்டெல் உரிமையாளர்களும் பாப்லோ குறித்து தங்களது அவநம்பிக்கையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். ‘ஏதோ தொழில் செய்தோம், அதன் காரணமாக  அரசுடன் மோதல் என்றுதான் இதுவரை இருந்தோம். இந்த பாப்லோவோ நம்மை பயங்கரவாதத்தோடு தொடர்பு படுத்துகிறார்” என்று குமுறினார்கள். பாப்லோவுக்கும் அவரது சகாக்களுக்கும் ஏற்பட்டிருந்த இந்த மன விலகலைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் நினைத்தது. ஆனால் - இயற்கை, பாப்லோவை  தற்காலிகமாகக் காப்பாற்றியது; கொலம்பியாவை மிகவும் கடுமையாகத் தண்டித்தது.

சுப்ரீம் கோர்ட் சம்பவம் நடந்து மிகச்சரியாக ஒரு வாரம் ஆகியிருந்தது. கொலம்பியத் தலைநகர் பொகோடாவில் இருந்து சுமார் 130 கி.மீ.  தூரத்தில் ஹெர்வியோ  என்கிற மலைமுகடு புகைந்து கொண்டே இருந்தது. நாட்டில் நடக்கும் அட்டூழியங்களைப் பொறுக்க மாட்டாமலோ என்னவோ அது திடீரென வெடித்துக் குமுற  ஆரம்பித்து விட்டது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் படையெடுத்த மக்மா குழம்புடன் கூடிய நெருப்பாறு, அந்தப் பகுதியையே சாம்பலாக்கி விட்டது. ஆர்மெரோ  என்கிற நகரம் கருகி, சுமார் 22,000 பேர் உயிரிழந்தார்கள். கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த எரிமலை வெடிப்புகளிலேயே இரண்டாவது பெரிய சம்பவம் இது  என்கிறார்கள்.
22a.jpg
பிரச்னை என்னவென்றால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல காலமாகவே இந்த எரிமலை வெடிப்பு குறித்து அரசாங்கத்துக்கு அலாரம் அடித்துக்  கொண்டிருந்திருக்கிறார்கள். அரசாங்கமோ அமெரிக்காவை ‘கூல்’ செய்யும் விதமாக கார்டெல்களை வேட்டையாடி வந்ததில், மற்ற பணிகளை ஒழுங்காகச்  செய்யவில்லை. குறிப்பாக எம்-19 கொரில்லாக்களை சமாளிப்பதில் மும்முரமாக இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டவுடனேயே, மீட்புப் பணிகளுக்கு உடனே  தயாராக முடியவில்லை. கிட்டத்தட்ட நம்மூர் செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது அரசாங்கம் உடனே செயல்பட முடியாமல் இருந்த அதே  சூழல்தான்.

ஆர்மெரோ நகரத்தின் மேயர், இந்த எரிமலை பிரச்னையை பலமுறை அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஒருமுறை எங்கள் நகரத்தில்  வைக்கப்பட்டிருக்கும் ‘டைம் பாம்’ என்றுகூட அந்த எரிமலையைக் குறிப்பிட்டிருக்கிறார். அரசோ, ‘வர்றப்போ பார்த்துக்கலாம்’ என்று அசட்டையாக  இருந்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தாக்குதல் காரணமாக எம்-19 கொரில்லாக்கள் மீதும், அதற்கு காரணமான எஸ்கோபார் மீதும் கொலை வெறியில் இருந்த மக்கள்,  தங்கள் கோபத்தை அப்படியே அரசாங்கத்தின் மீது திருப்பினார்கள்.

போதுமான முன்னெச்சரிக்கை கிடைத்தும் பல்லாயிரக்கணக்கான மக்களை அப்புறப்படுத்த துப்பில்லாமல் பலி கொடுத்த அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள். ‘எரிமலை எங்களைக் கொல்லவில்லை; அரசாங்கம்தான் கொன்றது’ என்று கோஷமிட்டவாறே அரசு அலுவலகங்களை முற்றுகையிடத் தொடங்கினார்கள்.  சாலைகள் எங்கும் பேரணிகள் நடத்தினார்கள். ஆங்காங்கே கண்டனப் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்தச் சூழலை கார்டெல்கள் பயன்படுத்திக்  கொண்டன. பாப்லோ எஸ்கோபார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக பல கோடியை வாரி வழங்கினார்.
22b.jpg
மற்ற கார்டெல்களும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்-19 கொரில்லாக்கள் மூலமாக கார்டெல்களின் உதவி நேரடியாக மக்களைச் சென்று  சேர்ந்தது. மாறாக, அரசாங்கமோ அப்போதுதான் யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கணக்கு எடுத்துக் கொண்டிருந்தது.‘உங்களை அரசாங்கம் காப்பாற்றாது;  பாப்லோதான் காப்பாற்றுவார்’ என்று கூறிக்கொண்டேதான் கார்டெல்காரர்கள் உதவினார்கள். அந்த அரிபரியான அவசரத்திலும்கூட நிவாரணப் பொருட்களில்  எஸ்கோபாரின் ஸ்டிக்கர் மறக்காமல் ஒட்டப்பட்டது! கொலம்பியா அதுவரை சந்தித்திராத மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்.

உடனடியாக இயற்கையின் கோரத்தாண்டவம். எனவே, கொஞ்ச நாட்களுக்கு கார்டெல் வேட்டையை பல்லைக் கடித்துக்கொண்டு நிறுத்தி வைத்தது.  இதற்கிடையே, இந்தச் சூழலைப்பயன்படுத்தி அரசாங்கத்தோடு அணுசரணையாகப் போவதற்கு மீண்டும் முயற்சிகளை முன்னெடுத்தார் பாப்லோ எஸ்கோபார். ஆனால், அவர் நம்பிக்கை கொள்ளும் விதமாக எதிர்த்தரப்பில் சிக்னல் கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு கார்லோஸ் லேதருக்கு ஏற்பட்ட கதி. பாப்லோவைப்  போலவே கார்லோஸுக்கும் கொலம்பியாவின் அதிபர் ஆகும் கனவு ஒரு காலத்தில் இருந்தது. தேசிய லத்தீன் கட்சி என்று ஒரு கட்சியைக்கூட ஆரம்பித்து  வைத்திருந்தார்.

ஹிட்லரின் தீவிர ரசிகரான அவருக்கு பாப்லோவுக்கு கிடைத்தது மாதிரி பரவலான புகழ் கிடைக்கவில்லை. அரசியல்தான் அவரது விருப்பம் என்றாலும் பணம்  பார்த்தது முழுக்க கார்டெல்லில்தான். கொலம்பியாவில் இருக்கும்போது பெரும்பாலும் அவரை பாப்லோவுடனேயே பார்க்கலாம். பண்ணை வீடுகளில்  ஒன்றாகத்தான் ஓய்வெடுப்பார்கள். கால்பந்து மைதானங்களிலும் அருகருகே அமர்ந்து போட்டியை ரசிப்பார்கள். அடிக்கடி இணைந்து உல்லாசப் பயணங்களுக்குச்  செல்வார்கள். தொழில் உறவைத் தாண்டி பாப்லோவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக உருவெடுத்தார் கார்லோஸ்.

கார்லோஸுக்கும் பாப்லோவுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசமுண்டு. காரியங்களைச் சாதித்துக்கொள்ள தன் மீதான பயத்தைத்தான் பாப்லோ ஆயுதமாகப்  பயன்படுத்துவார். கார்லோஸோ எல்லாவற்றையும் பணத்தைக் கொண்டு சாதிப்பார். பணத்தைக் கண்டால் பிணம்கூட பல்லை இளிக்கும் என்கிற சித்தாந்தத்தில்  நம்பிக்கை கொண்டவர் கார்லோஸ். தம்மை காப்பாற்றிக் கொள்ள அரசாங்கத்தோடு யுத்தம் செய்ய வேண்டும் என்பது பாப்லோவின் திட்டமாக இருக்க, தம்மிடம்  இருக்கும் பணத்தை வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கார்லோஸ் நினைத்தார்.

அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க கொலம்பியா போதை முதலாளிகளை வேட்டையாடத் தொடங்கியபோது பாப்லோவைப் போல எதிர்த்து நிற்காமல்,  காடுகளுக்குள் ஓடிப் பதுங்கினார் கார்லோஸ். அவருடைய சகாக்கள் பலரும் அவருடைய முதுகில் குத்திவிட்டு கத்தை கத்தையாக பணத்தை அள்ளிக்கொண்டு  எஸ்கேப் ஆனார்கள். பாப்லோதான் ஹெலிகாப்டரை அனுப்பி கார்லோஸை மீட்டார். மறுபடியும் நாம் பழைய மாதிரி தொழில் செய்வோம் என்று நம்பிக்கை  ஊட்டினார். சில காலம் பாப்லோவின் ஊழியராகப் பணியாற்றினார்.

பாப்லோ கொடுத்த பணத்தைக் கொண்டு பெரிய பண்ணை அமைத்தார். போதை வம்பு தும்புகளுக்குப் போகாமல் நேர்மையாக வாழ நினைத்தார். ஊழ்வினை  அவரைச் சுட்டது. பாப்லோவைப் பிடிக்க முடியாத கடுப்பில் இருந்த காவல்துறை அவரைக் கைது செய்தது. ஒப்பந்தப்படி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அவர்  மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. 135 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அமெரிக்கச் சிறையொன்றில் அடைக்கப்பட்டார். ஒருவேளை, தான் பிடிபட்டாலும் கார்லோஸுக்கு நிகழ்ந்ததுதான் தனக்கும் நடக்கும் என்று கருதினார் பாப்லோ. எனவேதான், காவல்துறையிடம் மட்டும்  மாட்டிவிடக் கூடாது;

தலைமறைவாக இருந்தபடியே தொழிலையும் நடத்தவேண்டும், அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற முடிவில் உறுதியாக இருந்தார். மக்கள்தான் பாப்லோவைக் காத்தார்கள் என்று சொல்லலாம். மக்களுக்கு ஒரு தேவை எனும்போது அவர்கள் கேட்காமலேயே பாப்லோவின் ஆட்கள் அள்ளி  அள்ளிக் கொடுத்தார்கள். எனவே, பாப்லோவுக்கு விசுவாசமாக இருந்த அவர்கள் எந்தவொரு நிலையிலும் அவரை போலீசுக்கு காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் போலீசிலும், இராணுவத்திலும்கூட பாப்லோவின் விசுவாசிகள் ஏராளமாக இருந்தார்கள்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

Posted
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 
 
 
யுவகிருஷ்ணா - 48


என்னதான் மக்கள், நம்ம காட்ஃபாதருக்கு விசுவாசமாக இருந்தாலும்... போலீசிலும், இராணுவத்திலும் பாப்லோவின் உளவாளிகள் இருந்தாலும்... அவ்வப்போது  அவருடைய மெதிலின் கார்டெல் முக்கியஸ்தர்கள் தடாலடியாக கைது செய்யப்படுவது நடந்துகொண்டுதான் இருந்தது. பாப்லோவின் நெருங்கிய நண்பர்கள்  பலரும் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்கதை ஆகிக் கொண்டிருந்தது. அம்மாதிரி கைதானவர்களிடம் அமெரிக்க போலீஸ், டீலிங்  பேசும். “இதோ பார். உன்னை கோர்ட்டுக்கு கொண்டு போனா ஆயுசுக்கும் வெளியே வராத மாதிரி சிறைத்தண்டனை கொடுப்பாங்க.
18.jpg
ஆனா, எங்களுக்கு கொஞ்சம் ஒத்துழைச்சி பாப்லோவை சிறை பிடிக்க உதவுனேன்னு வெச்சுக்கோ, சுதந்திரப் பறவையா உலகத்துலே எங்கே வேணும்னாலும்  போகலாம். கணிசமா காசும் தருவோம்...”ஒருவர் கூட இந்த டீலிங்குக்கு ஒத்துவரவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தர ஒப்புக்கொண்டதாக தகவல் தெரிந்தால் போதும். உலகின் எந்த மூலையில் போய் பதுங்கி இருந்தாலும் தேடி வந்து சுடுவார்  பாப்லோ. மற்றொரு காரணம், பாப்லோவின் மீது இருந்த அளவுகடந்த பக்தி.
18a.jpg
கொலம்பியர்கள் பலருக்கும் பாப்லோ, அந்த காலக்கட்டத்தில் கடவுளுக்கு நிகராக இருந்தார். அதனால்தான் அவருடைய நண்பர்கள், பணியாளர்கள், அவரால் பயன் பெற்றவர்கள் அத்தனை பேருமே அவர் மீதான விசுவாசத்தில் நேர்மையாக இருந்தார்கள். அமெரிக்க அதிகாரிகளுக்கு ஆரம்பத்தில் இந்த விசுவாசம், ஆச்சரியமாக  இருந்தது. அமெரிக்க அதிகாரத் தரப்பைப் பொறுத்தவரை பணத்தைக் கொடுத்தால் உலகில் யாரையும் விலைக்கு வாங்கிவிடலாம். அல்லது உயிர் பயத்தைக்  காட்டினால் எதையும் சாதித்துவிடலாம். இவை இரண்டும்தான் அவர்களது ஏகாதிபத்தியத்தைத் தாங்கும் கோட்பாடுகள்.

இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் அடங்காத கொலம்பியர்கள், அவர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். கூடவே ஆத்திரமூட்டினார்கள். கொலம்பிய அரசுக்கு  தொடர்ச்சியாக அச்சுறுத்தல், கொலம்பிய போலீஸ் மற்றும் ராணுவத்தில் தங்கள் சிஐஏ ஆட்களை ஊடுருவச் செய்தது போன்ற நடவடிக்கைகளால் பாப்லோவை  மிகச் சுலபமாக முடித்துவிடலாம் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். அவர்களது வேட்டையில் அவ்வப்போது கெண்டை மீன்கள்தான் மாட்டினவே தவிர,  பாப்லோ போன்ற சுறாக்களும், திமிங்கலங்களும் தொடர்ந்து தப்பித்துக் கொண்டிருந்தன.
18b.jpg
கார்டெல் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து மடக்க போலீஸ் ஒரு புராதனமான வழிமுறையைக் கையாண்டு வந்தது. இப்படிப்பட்ட வழிமுறையை  போலீஸ் யோசிக்கும் என்றே கார்டெல் ஆட்களுக்கு யோசனை வராத அளவுக்கு மிகவும் பழமையான டெக்னிக் அது. அதாவது கார்டெல் விஐபிகள் யாராவது ஒரு  விழாவுக்கோ, பார்ட்டிக்கோ அல்லது சந்திப்புக்கோ செல்வதென்றால் அவர்களுடனேயே பத்து இருபது பாடிகார்டுகள் செல்வார்கள். ஒவ்வொரு விஐபியின்  வாகனத்துக்குமே இதுபோன்ற எஸ்கார்ட்டுகளின் பாதுகாப்பு உண்டு. சம்பந்தப்பட்ட விஐபி சந்திப்பில் இருக்கும் நேரத்தில், அந்த இடத்தைச் சுற்றி இந்த  பாதுகாவலர்கள் பரவலாக நின்று கொள்வார்கள்.

அந்தப் பக்கமாக போகிற வருகிறவர்களை அச்சுறுத்தலான பார்வையால் ஊடுருவுவார்கள். யார் மீதாவது சந்தேகம் எழுந்தால், சட்டென்று இழுத்துப் பிடித்து ஒரு  அறைவிட்டு விசாரிப்பார்கள். இம்மாதிரி அல்லக்கைகள் நடமாட்டம் நகரில் எங்கெங்கு நடக்கிறது என்பதைக் கண்காணிக்க போலீஸ் ஒரு குழு அமைத்திருந்தது.  இந்தக் குழுவைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் மஃப்டி உடையில் நகர் முழுக்க ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். எங்காவது திடீர் பரபரப்பு ஏற்பட்டால்  தலைமையகத்துக்கு தகவல் சொல்வார்கள். உடனே போலீஸின் ஒரு பெரும் படை கிளம்பி வந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைக்கும்.

குறிப்பிட்ட விஐபி, போதைக் கடத்தல் கார்டெல்லைச் சேர்ந்தவர் என்றால் உடனே கைது செய்யப்படுவார். அடுத்த விமானத்திலேயே அமெரிக்காவுக்கு  விசாரணைக்கு அனுப்பப்படுவார். இப்படித்தான் தன்னுடைய சகாக்கள் பலரையும் பாப்லோ இழந்திருந்தார். பொதுவாக பாப்லோ, இந்தக் காலக்கட்டத்தில் நிறைய  ரகசியச் சந்திப்புகளைத்தான் மேற்கொண்டு வந்தார். முடிந்தவரையில் பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாகத்தான் திக்விஜயம் செய்து கொண்டிருந்தார்.  எனவேதான் அதுநாள் வரையில் அவரை கொலம்பிய போலீஸால் நெருங்க முடியவில்லை.

இந்த அதிரடி கைதுகளை தவிர்க்க பாப்லோ  ஒரு ‘கவர்ச்சியான’ வழிமுறையை உருவாக்கினார். இன்றுவரை உலகளவில் பல டான்களும், தாதாக்களும் இந்தப் பாதுகாப்பு முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.அதாவது ஐரோப்பாவில் பாலியல் தொழில் செய்து வந்த அழகிகள், மாடலிங் தொழிலில் ஈடுபட்டு  அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் வறுமையில் வாடிக் கொண்டிருந்தவர்கள் போன்றோர் கொலம்பியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு  கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட சண்டைப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. நவீனரக துப்பாக்கிகளைக் கையாளுவதற்கும் கற்றுத் தந்தார்கள்.

ஒவ்வொரு அழகியும் தயாரான பின்பு விஐபிக்களின் பாதுகாவலர்களாக பணிக்கு அமர்த்தப்படுவார்கள். கவர்ச்சியான உடையில் முழு மேக்கப்போடு ஹோட்டல்  மற்றும் விழாக்களில் இதுபோன்ற அழகிகள் வலம் வந்ததை எந்த போலீஸ்காரனாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க இயலவில்லை. இவர்களின் பாதுகாப்போடு வந்த விஐபி, தான் வந்த சுவடு தெரியாமலேயே வந்த வேலையை முடித்துக் கொண்டு கமுக்கமாக திரும்ப முடிந்தது. இந்த புதிய செக்யூரிட்டி முறையை  பாப்லோ அறிமுகப்படுத்திய பிறகு, கொலம்பியாவில் மட்டுமின்றி தென்னமெரிக்கா முழுமைக்குமே அழகிகள் தேவை அதிகரித்தது.

ஐரோப்பாவில் மாடலிங் துறையில் ரிட்டையர்டு ஆன அழகிகள் பலரும் தென்னமெரிக்காவுக்கு படையெடுத்தார்கள். இவர்களுக்கு கணிசமான சம்பளம்  கிடைத்ததோடு, சமூகத்தில் நல்ல மரியாதையும் ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில்தான் கொலம்பிய போதை உலகம் அழகிகளால் நிரம்பத் தொடங்கியது.  சரக்குகளைக் கைமாற்றுவதற்கும் அழகிகள் உதவினார்கள். மேல்மட்ட அதிகாரிகள் பலருடனும் இந்த அழகிகள் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு கார்டெல்களின் பணிகளைச் சிக்கலின்றி செய்துக்கொள்ள உதவத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இந்த அழகிகளின் வருகை ஏற்பட்டபோது, பாப்லோ எஸ்கோபார் பலவிதமான  கட்டுப்பாடுகளைத் தன்னுடைய ஆட்களுக்கு விதித்திருந்தார்.

தம்முடைய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அழகிகளோடு கார்டெல் ஆட்கள் வேறு ‘எந்தவிதமான’ சில்மிஷமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில்  கண்டிப்பாக இருந்தார். ஏனெனில், போலீஸ் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக உருவான இந்த புதிய ‘அழகிகள் செக்யூரிட்டி சர்வீஸ்’ முறையே, ஒரு  கட்டத்தில் கார்டெல்களின் பலவீனமாக மாறிவிடக்கூடிய ஆபத்து இருந்ததையும் அவர் யூகித்திருந்தார். பாப்லோ எஸ்கோபார், முற்றிலும் உணர்ந்த ஞானி. அவர்  எதிர்பார்த்ததைப் போலவே அவரது காலத்துக்குப் பின்னர் போதை கார்டெல்களுக்குள் சிஐஏ அனுப்பிவைத்த அமெரிக்க மாடலிங் அழகிகள் பலரும் நுழைந்தார்கள்.  முக்கிய புள்ளிகள் பலரையும் தம் வசப்படுத்தி, முக்கியமான நேரத்தில் போட்டும் தள்ளினார்கள்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

Posted

காட்ஃபாதர்

 

 

பாப்லோ எஸ்கோபாருக்கும், கொலம்பிய அரசுக்குமான முரண் என்பது, அமெரிக்கா யாரைக் கேட்டாலும் பிடித்துக் கொடுத்துவிடும் வெளியேற்ற சட்டம்தான். அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நூற்றுக்கணக்கான கொலம்பியர்களை அமெரிக்கா அலேக்காக தூக்கிச் சென்றது. கொலம்பிய அரசு மீது பாப்லோ தொடுத்த போர் என்பதே, இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுதான். போதை கார்டெல்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு சமூக ஆர்வலர்களும் இந்த அடாவடி சட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அமெரிக்க அரசு, போதை கடத்தல்காரர்களை மட்டுமின்றி.. தம்முடைய அரசியலை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் எதிராக அந்த சட்டத்தை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டிருந்தது.
18.jpg
குறிப்பாக கம்யூனிஸ்டுகள் பலரும் அநியாயமாக பலியாகினர். அரசுக்கு எதிரான கம்யூனிஸ்டுகளை கொலம்பியாவே, போதை கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தி அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது. அங்கே பொய்வழக்கில் இந்த அப்பாவிகள் கணக்கு வழக்கின்றி சிறைகளில் வாடினர். எண்பதுகளின் மத்தியில் கொலம்பிய அரசு மீது தொடுக்கப்பட்ட பல்வேறு முனை போராட்டங்களின் அடிப்படையால் தற்காலிகமாக அந்த சட்டத்தை அரசு திரும்பப்பெற வேண்டியதானது. அப்போதைய அதிபர் பதவியிழந்து, தற்காலிகமாக வந்த அதிபர் இந்த வெளியேற்ற சட்டத்தை கொலம்பியர்கள் மீது பிரயோகிப்பதில்லை என்கிற கொள்கை முடிவுக்கு வந்திருந்தார்.

அமெரிக்காவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே போடப்பட்ட அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று வழக்கு ஒன்றில் கோர்ட்டும் தீர்ப்பு கொடுத்தது. இந்த வெற்றியை பாப்லோ எஸ்கோபாரும், அவரது சகாக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியவில்லை.ஏனெனில் இந்த வெற்றி பாப்லோவுக்கானது என்கிற உண்மை ஆளும் தரப்பையும், அமெரிக்காவையும் கடுமையாக வெறுப்பேற்றியது. முன்பைக் காட்டிலும் மூர்க்கமாக பாப்லோ மீது பாய்ந்தார்கள். இந்த அமளி துமளிகளுக்கு மத்தியில் போதை ஏற்றுமதி பிசினஸை வெற்றிகரமாகவே நடத்திக் கொண்டிருந்தார் பாப்லோ. நேரிடையாக அமெரிக்காவுக்கு கொலம்பியாவில் இருந்து சரக்கு கொண்டு செல்ல முடியவில்லை எனும்போது ஐரோப்பாவுக்கு அனுப்பி,

அங்கிருக்கும் போதை மாஃபியாக்கள் வாயிலாக வெவ்வேறு முறையில் தொடர்ச்சியாக சப்ளை செய்து கொண்டேதான் இருந்தார். உண்மையைச் சொல்லப் போனால், தனக்கு வந்த ஆர்டர்களைவிட கூடுதலாகவே சரக்குகளை அமெரிக்க கோடவுனில் ஸ்டாக் வைத்தார். இருப்பினும் பாப்லோவின் ஸ்டாக்கிஸ்டுகளாக இருந்த அமெரிக்கர்கள் பலருமேகூட சிஐஏ அனுப்பிய அண்டர்கவர் ஆபீஸர்களாக இருப்பார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் அவ்வப்போது போட்டுக் கொடுக்க, அமெரிக்காவில் தங்கியிருந்த மெதிலின் கார்டெல் ஆட்கள் கொத்து கொத்தாக அள்ளப்பட்டு, ‘முறையாக’ கவனிக்கப்பட்டார்கள்.
18a.jpg
எனினும் ஒருவர்கூட பாப்லோவைப் போட்டுக் கொடுக்க முன்வரவில்லை என்பதுதான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. கொலம்பியாவைப் பொறுத்தவரை பாப்லோவின் உளவுப்படை சிறப்பாகப் பணியாற்றியது. ஆயினும், அவர்களால்கூட பாப்லோவைத்தான் தொடர்ச்சியாக முன்கூட்டியே எச்சரித்து காப்பாற்ற முடிந்ததே தவிர, இரண்டாம் கட்ட தலைகளுக்கு போதுமான தகவல்களைச் சேகரித்து காப்பாற்ற முடியவில்லை. காவல்துறையிலும் பாப்லோவால் உள்நுழைக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருந்தார்கள் என்பதை ஏற்கனவே நாமறிவோம்.

இவர்கள் தவிர்த்து உயரதிகாரிகளாக இருந்தவர்கள் இருவேறு மனப்பான்மையோடு இருந்தார்கள். கார்டெல்களிடம் காசு வாங்கிய களவாணிக் கூட்டத்துக்கு, ஒருவேளை அவர்கள் பிடிபட்டு விட்டால் தங்கள் குட்டு அம்பலமாகி விடுமே என்கிற அச்சம் இருந்தது. இவர்கள்தான் போதை ஆட்களைக் கண்டதுமே கண்ட துண்டமாக வெட்டிவிடுவது என்று கொலைவெறியோடு வேட்டை நடத்தியவர்கள். இன்னொரு தரப்பு போலீஸோ கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள். இவர்களைப் பொறுத்தவரை சட்டத்தை நிலை நாட்ட வேண்டும். குற்றவாளிகள் தங்களிடம் மாட்டினால் அவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தி,

என்ன தண்டனையோ அதைத்தான் பெற்றுத்தர வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. கார்டெல்கள் இவர்களை நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்று பிரித்துப் பேசினார்கள். நல்ல போலீஸை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று பாப்லோ ஆணையிட்டிருந்தார். அதே நேரம் கெட்ட போலீஸைப் பொறுத்தவரை, அவர்கள் நம்மைத் தேடி வந்து பிடிப்பதற்கு முன்பாகவே நாம் அவர்களைப் போடவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். இதன் அடிப்படையில் கொலம்பியாவின் பல்வேறு நகரங்களிலும் ஊழல் போலீஸார், சாலைகளில் பிணமாகத் தொடங்கினார்கள்.

அவர்கள் அராஜக போலீஸ் என்பதால் மக்களும் இந்தக் கொலைகளை சந்தோஷமாகக் கொண்டாடவே தொடங்கினார்கள். பொதுவாக பாப்லோவை பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பலரும் நல்ல போலீஸாக இருந்தார்கள். அவர்கள் பல்வேறு இடங்களையும் சோதனை செய்யும்போது கையில் முறையான ஆவணங்களை வைத்திருந்தார்கள். எந்தவித சேதாரத்தையும் யாருக்கும் உண்டாக்காமல் அவர்கள் வேலையை அவர்கள் செய்தார்கள். எனவேதான் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள், அதேநேரம் முக்கியமான ஆவணங்களோ சரக்குகளோ அவர்களது கையில் சிக்காமல் பாதுகாப்பாக ஒளித்து வையுங்கள் என்று பாப்லோ ஆலோசனை கொடுத்திருந்தார்.

பாப்லோவுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர்களையும், பாப்லோவின் உறவினர்களையும் விசாரிக்கச் சென்ற போலீஸ் பெரும்பாலும் கெட்ட போலீ ஸாக இருந்து தொலைத்தனர். மடியில் கனத்தோடு போலீஸ் துறையில் இருந்தவர்கள், அந்த கனத்தை அறிந்தவர்கள் இல்லாமல் போய்விட வேண்டும் என்கிற வெறியோடு நடந்து கொண்டார்கள். இவர்கள் செல்லும் இடமெல்லாம் அநியாயம் கொடிகட்டிப் பறக்கும். திருடுவார்கள். அடிப்பார்கள். உதைப்பார்கள். உடைப்பார்கள். கார்டெல்காரர்கள் மட்டுமின்றி சாதாரண பொதுஜனங்களையும் பிடித்துப் பொய் கேஸ் போடுவார்கள். சம்பந்தமே இல்லாதவர்களிடமிருந்தெல்லாம் பாப்லோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எழுதி வாங்குவார்கள்.

போதைத்தொழில் மட்டுமின்றி, கால்பந்து, சமூகசேவைகள், அரசியல் என்று பல்வேறு தளங்களில் பரிணமித்தவர் பாப்லோ. விஐபி என்கிற அடிப்படையில் அவரோடு நிறைய பொதுஜனம் புகைப்படம் பிடித்துக் கொண்டதுண்டு. அம்மாதிரி படம் பிடித்தவர்களைக்கூட பிடித்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தனர். பாப்லோவின் உறவினரான ஹெர்னாண்டோவுக்கு நடந்த கொடுமை படுமோசமானது. விடுமுறையை அனுபவிக்க பண்ணை வீடு ஒன்றுக்கு தன்னுடைய குடும்பத்தோடு சென்றிருந்தார் அவர்.

கெட்ட போலீஸுக்கு எப்படியோ இந்தத் தகவல் தெரிந்திருந்தது. அவர்கள் பண்ணை வீட்டுக்குள் படையாக நுழைந்தார்கள்.“எஸ்கோபார் எங்கேடா?” என்கிற கேள்வியோடு நுழைந்தவர்கள் கண்ணுக்கு பட்ட பொருளையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். ஹெர்னாண்டோ மீது இடி மாதிரி அடி விழுந்து கொண்டே இருந்தது. ஹெர்னாண்டோ, பாப்லோவிடமிருந்து நிஜமாகவே விலகியிருந்தார். அவருக்கு பாப்லோ எங்கிருக்கிறார் என்பதெல்லாம் நிச்சயமாகவே தெரியாது. கெட்ட போலீஸுக்கும் இது தெரியுமென்றாலும்,

தன்னால் தன்னுடைய உறவினர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற செய்தி பாப்லோவுக்கு போய்ச் சேரவேண்டும் என்று நினைத்தார்கள். ஹெர்னாண்டோவை அவரது மனைவி, குழந்தைகளின் கணகளுக்கு முன்பாகவே தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தார்கள். அவரது விரல் நகங்கள், கட்டிங் பிளேயரால் பிடுங்கப்பட்டன. அவரது கண்களில் சோப்பு நீரை ஊற்றி சித்திரவதை செய்தார்கள். அவரது மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, அவர் வதைபட்டு அழுவதைக் கண்டு கொக்கரித்தார்கள். ஒருநாள் முழுக்க இதுபோல சித்திரவதை செய்யப்பட்ட அப்பாவியான ஹெர்னாண்டோ அநியாயமாக குடும்பத்தினர் கண் முன்பாகவே உயிரை விட்டார்.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.