Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை

Featured Replies

நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை

 
 
நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை
 

வடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யுமே பதவி நீக்கி, அமைச்­ச­ரவை மாற்­றத்தை மேற்­கொள்­வது தொடர்­பில், ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு நேர­டி­யாக அலை­பே­சி­யில் அழைப்­பெ­டுத்து அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிந்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

2016ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம், அப்­போ­தைய பிரதி அவைத் தலை­வர் ம.அன்­ர­னி­ஜெ­க­நா­தன் தலை­மை­யில், ஆளும் கட்­சி­யின் 16 உறுப்­பி­னர்­கள் அமைச்­ச­ர­வையை மாற்­றம் செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­யி­ருந்­த­னர். அவ்­வாறு கோரிய 16 உறுப்­பி­னர்­க­ளி­ட­மும், அதன் பின்­னர் மாகாண சபை உறுப்­பு­ரி­மை­யைப் பெற்­றுக் கொண்ட உறுப்­பி­னர்­க­ளி­ட­முமே, முத­ல­மைச்­சர் கருத்­துக்­களைக் கேட்­ட­றிந்தார்.

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரணை செய்த விசா­ர­ணைக் குழு­வி­னர், விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோர் பதவி நீக்­கம் செய்­யப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­த­னர். விசா­ரணை அறிக்­கையை கடந்த 7ஆம் திகதி சபை­யில் முத­ல­மைச்­சர் சமர்ப்பித்­தி­ருந்­தார்.

அமைச்சர்களின் தன்னிலை விளக்கம் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டுத் தானே இறுதி முடிவு செய்வேன் என்றும் முதலமைச்சர் சபையில் அறிவித்திருந்தார். இது தொடர்பான சிறப்பு அமர்வு நாளை மறுதினம் புதன் கிழமை, வடக்கு மாகாண சபையில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்துப் பேசினார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறு கையெழுத்திட்டு கடிதம் தந்திருந்தீர்கள். இது தொடர்பில் தற்போது உங்களின் நிலைப்பாடு என்ன என்று அவர் வினவியுள்ளார்.

அந்தக் காலப் பகுதியில் சபை உறுப்பினர்களாக இல்லாமல் அதன் பின்னர் பதவியேற்ற உறுப்பினர்களிடம், முதலமைச்சர் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார்.

இதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு இரு அமைச்சர்களைப் பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள நிலையில் முழு அமைச்சரவையையும் மாற்ற நினைப்பது அவரது விசாரணைக் குழு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்று அரசியல் அவதானிகளும், சிவில் சமூகத்தினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். குற்றவிசாரணை மீதான நம்பகத்தன்மையை இழிவாக்கும் செயல் இது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

http://uthayandaily.com/story/6111.html

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு இரு அமைச்சர்களைப் பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள நிலையில் முழு அமைச்சரவையையும் மாற்ற நினைப்பது அவரது விசாரணைக் குழு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்று அரசியல் அவதானிகளும் சிவில் சமூகத்தினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். குற்றவிசாரணை மீதான நம்பகத்தன்மையை இழிவாக்கும் செயல் இது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதமரால்இந்த விசாரணைக்குழு பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்டது குறைந்தபட்ச அமைச்சரவை மாற்றம் மட்டுமே தவிர அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் பிரதமருக்குக் கிடையாது.
பிரதமர் அமைச்சரவை மாற்றத்தை முழுவதுமோ பகுதியாகவோ செய்வதை விசாரரணைக்குழு ஆட்சேபிக்கமுடியாது.

யார் இந்த அரசியல் அவதானிகளும் சிவில் சமுகத்தினரும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஜங்கரநேசன்: அடிப்படையில் ஒரு தார்மீகமில்லா, நேர்மையற்ற 'வியாபாரி'.

யூனிவேர்சல் சயன்ஸ் சென்றர் நடாத்திய போது, O/L பரீட்சை வீனாத்தாள்களை கடத்தி, லவுட் ஸ்பீக்கர் வைத்து, வெளியில் இருந்து விடைகளை சொல்லும் வாடிக்கை வைத்திருந்து, பெற்றோர் முறைப்பாட்டால், புலிகளால் எச்சரிக்கப்பட்டு சென்றரை மூடியவர்.

இவர் வரும் போதே சொல்லியிருந்தேன். நம்ம நெடுக்கர், அவரை சேர் என்று விளித்து நன்றாக சொன்னார்.

எனினும், அவரது சென்ரரில் படித்த, ஒரு மாணவியை, (பொக்சரின் மகள்) மடக்கி, பின் வீட்டிலிருந்தே கிளப்பி கல்யாணம் செய்தார். இங்கே என்றால் இதற்கே கம்பி எண்ணியிருப்பார் என்று உள்வீட்டு தகவல் சொன்னவுடன், பின்வாங்கினார்.

அவரெல்லாம், நேர்மையாக நடந்தால் தான் செய்தி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.