Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுகாதார அமைச்சு முற்றுகை ; பொலிஸார் தடியடி , 80 மாணவர்கள் வைத்தியசாலையில்

Featured Replies

சுகாதார அமைச்சு முற்றுகை ; பொலிஸார் தடியடி , 80 மாணவர்கள் வைத்தியசாலையில்

Published by Gnanaprabu on 2017-06-21 19:14:29

 

சைட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸார் மேற்கொண்ட தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகத்தினால் 80 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

19275261_2013966338833354_96289444638301

குறித்த பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமையினை தடுக்க பொலிஸார் தடியடி, கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தாரை பிரயோகங்கள் மேற்கொண்டு மாணவர்களை விரட்டியடித்த போதே இவ்வனர்த்தம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

19248062_2013966008833387_89473893084458

19366399_2014076158822372_80504491318891

19397092_2014001152163206_96185818640060

19275137_2014076118822376_41879237851256

19399120_2014076088822379_65686025903747

19366516_2014000152163306_35792793653031

19248056_2014000965496558_36172806903029

19275000_2013966638833324_70733685099713

Screenshot__15_.png

Screenshot__14_.png

 

 

 

Tags

http://www.virakesari.lk/article/21118

  • தொடங்கியவர்
பல்கலை மாணவர்கள் 87 பேர் வைத்தியசாலையில் அனுமதி
 

 

மருத்துவத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான தெற்காசிய நிறுவகத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் 87பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட குண்டாந்தடித் தாக்குதல், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்களிலே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பல்கலை-மாணவர்கள்-87-பேர்-வைத்தியசாலையில்-அனுமதி/175-199128

9 minutes ago, நவீனன் said:

மருத்துவத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான தெற்காசிய நிறுவகத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்

தன்னம்பிக்கையற்ற பட்டதாரி மாணவர்களின் பிச்சைக்காரப் போராட்டங்களில் இதுவும் ஒன்று.

  • தொடங்கியவர்

 

சுகாதார அமைச்சிற்குள் பலவந்தமாக நுழைந்த மாணவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

  • தொடங்கியவர்

போர்க்களமானது சுகாதார அமைச்சு

p18-70778d3453484284af2e4ce7975e1d93ba0356d9.jpg

 

பொலிஸாரின் தாக்குதலில்

87 மாணவர்கள் காயம்

பொதுச் சொத்துக்களுக்கும் சேதம்

(ந.ஜெகதீஸ்)

மாலபே தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை தடை செய்­யு­மாறு கோரி அனைத்து பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் சுகா­தார அமைச்சை நேற்று முற்­று­கை­யிட்­ட­து டன் அமைச்­சுக்குள் பல­வந்­த­மாக உள் நுழைந்­த­மை­யினால் பெரும் பதற்ற நிலைமை ஏற்­பட்­டது. உள்­நு­ழைய முற்­பட்ட மாண­வர்கள் மீது பொலிஸார், விசேட அதி­ரடி படை­யினர் மேற்­கொண்ட நீர்த்­தாரை மற்றும் தடி­யடி பிர­யோ­கத்தால் சுகா­ தார அமைச்சு யுத்­தக்­க­ளம்போல் காட்­சி­ய­ளித்­தது.

மற்றும்  அதி­ர­டிப்­ப­டை­யினார் நிலை­மையைக் கட்­டு­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொண்ட தீவிர நட­வ­டிக்­கையின் கார­ண­மாக 87 பேர் காய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.  

மாண­வர்கள் அத்­து­மீறி அமைச்­சுக்குள் உட்­பு­குந்­த­மை­யினால் அமைச்சின் பிர­தான வாயில்­க­தவு சேத­ம­டைந்­த­துடன் அமைச்­சுக்­கட்­டி­டத்தின் கண்­ணா­டிகள் மற்றும் சில வாக­னங்­க­ளுக்கும் சேதங்கள் ஏற்­பட்­டன.

மாலபே தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை தடை செய்­யக்­கோரி அனைத்து பல்­க­லை­க­ழக மாண­வர்கள் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் நேற்று புதன்­கி­ழமை பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

நீதி­மன்­றத்தின் நிபந்­தனை அனு­மதி

முன்­ன­தாக பொதுச்­சொத்­து­க­ளுக்கு சேதம் விளை­விக்­கா­மலும் அமை­தி­யான முறை­யிலும் கொழும்பு கோட்டை பகு­தியில் ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு கோட்டை நீதிவான் நீதி­மன்றம் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு முன்­கூட்­டிய அனு­ம­தியை வழங்­கி­யி­ருந்­தது.

இரு பிரி­வு­க­ளாக பேரணி

இந்­நி­லையில் நேற்று பிற்­பகல் 2 மணி­ய­ளவில் கொழும்பு பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் ஒன்று கூடினர். பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் முத­லா­வது மாணவர் அணி பேர­ணி­யாக பல்­க­லை­க­ழக வளா­கத்­தி­லி­ருந்து புறப்­பட்டு விகா­ரமா தேவி பூங்கா வழி­யாக லிப்­படன் சுற்­று­வட்­டத்தை வந்­த­டைந்­தது.

இதே­நேரம் குறித்த நேரத்தில் மரு­தானை பகு­தியில் ஒன்­று­கூ­டிய ஆயி­ரக்­கண மாண­வர்கள் அடங்­கிய அணி­யினர் சுகா­தார அமைச்சை நோக்கி நகர ஆரம்­பித்­தனர்.

லிப்டன் சுற்­று­வட்­டத்­தி­லி­ருந்து நகர ஆரம்­பித்த மாணவர் அணியை தடுப்­ப­தற்­காக நகர மண்­ட­ப­கு­தியின் பிர­தான பாதைகள் மூடப்­பட்­டி­ருந்­த­துடன் வைத்­தி­ய­சாலை சதுக்கம், சேரம் வீதி என்­ப­வற்­றிலும் பொலி­ஸாரால் வீதித்­த­டைகள் இடப்­பட்­டி­ருந்­த­துடன் நீர்த்­தரை பவு­ஸர்­களும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் நகர மண்­டப பகுதி, மரு­தானை உள்­ளிட்ட பிர­தான பாதை­களில் கடும் வாகன நெரிசல் ஏற்­பட்­ட­துடன் வாகன சார­திகள் மற்றும் பொது மக்கள் பாரிய அசெ­க­ரி­யங்­களை எதிர் நோக்­கினர். வழ­மைக்கு மாறாக அதி­க­ள­வி­லான கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இதே­வேளை ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மாண­வர்­களில் மற்­று­மொரு குழு­வா­னது மரு­தா­னையில் அமைந்­துள்ள சுகா­தார அமைச்­சுக்குள் அத்­து­மீறி நுழைந்­த­யை­ய­டுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்­பட்­டது. ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மாண­வர்கள் சுகா­தார அமைச்­சிக்கு கல்­வீச்சு நடத்­தி­யதால் சுகா­தார அமைச்சின் வாக­னங்கள் மற்றும் பொதுச்­சொத்­துக்­க­ளுக்கும் அதி­க­ள­வி­லான சேதம் ஏற்­பட்­டது.

இந்­நி­லையில் நகர மண்­ட­பத்தை வந்­த­டைந்­தி­ருந்த முதலாம் ஆர்ப்­பாட்­டக்­கு­ழு­வி­னரும் சுகா­தார அமைச்சை முற்­று­கை­யிட்­ட­தை­ய­டுத்து நிலைமை மேலும் மோச­மா­கி­யது.

இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக சுகா­தார அமைச்­சுக்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மாண­வர்­களை தடுத்து நிறுத்த முயற்­சித்­த­துடன் சுகா­தர அமைச்­சிக்குள் பணி­பு­ரிந்த ஊழி­யர்­க­ளுக்­கான பாது­காப்பை வழங்­கு­வ­தற்கும் முயற்­சித்­தனர்.

அச்­சந்­தர்ப்­பத்தில் மாண­வர்­களின் தொடர் கல்­வீச்சில் சுகா­தார அமைச்சில் பொருத்­தப்­பட்­டி­ருந்த பெரு­ம­ள­வி­லான கண்­ணா­டிகள் கூரைகள் என்­பன சேத­மாக்­கப்­பட்­டன. பொலி­ஸாரால் விதிக்­கப்­பட்ட தடை­யி­னையும் மீறி சுகா­தார அமைச்சின் அலு­வ­ல­கத்­திற்குள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அத்­து­மீறி செல்ல முயற்­சித்த போது அவர்­களை கலைப்­ப­தற்கு பொலி­ஸாரின் உச்­ச­பட்ச அதி­கா­ரத்தை கொண்டு ஆரப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது நீர்த்­தாரை பிர­யோகம் மற்றும் தடி­யடி பிர­யோகம் மேற்­கொண்­டனர்.

அதன்­பின்னர் பொலி­ஸாரின் தாக்­கு­தல்­க­ளுக்கு பதில் தாக்­கு­தல்­களை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மேற்­கொண்­டி­ருந்த நிலையில் பொலி­ஸாரின் தடி­ய­டிப்­பி­ர­யோ­கத்தில் சிக்­கியும் மாண­வர்கள் சிதறி ஓடி­யதால் ஏற்­பட்ட நெரி­சலில் சிக்கி அகப்­பட்டும் 87 க்கும் மேற்­பட்­ட­வர்கள் காய­ம­டைந்­தனர். பின்னர் பொலி­ஸாரால் நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்த நிலையில் சுகா­தார அமைச்­சுக்கு முன்னாள் பிர­தான பாதையை மறித்து வீதியின் நடுவில் அமர்ந்து மாண­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்த மாண­வர்கள் மாலபே தனியார் வைத்­திய கல்­லூரி சிலரின் தேவைக்­கேட்­பவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அதனை முற்­றாக தடை செய்யும் வரை எமது போராட்­டத்தை நாம் கைவி­ட­மாட்டோம். மக்­களை அசௌ­க­ரி­யப்­ப­டுத்தும் வகையில் ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்தோம் என பொலி­ஸாரால் எம்­மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

எதிர்­கால சுகா­தர துறையால் மக்கள் அசௌ­க­ரி­யப்­ப­டு­வது இந்த அர­சாங்­கத்­துக்கு தெரி­ய­வில்லை. டெங்கு நோயினால் வைத்­தி­ய­சா­லை­களின் செயற்­பா­டுகள் ஸ்தம்­பிதம் அடைந்­துள்­ளன. வைத்­தி­ய­சா­லை­களில் நோயா­ளர்­களை அனு­ம­திக்க மறுக்கின்றனர். தரமற்ற சுகாதர சேவைகளாலும் மருந்து விலை அதிகரிப்பாலும் மக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை தடுத்து நிறுத்தவே சுகாதார அமைச்சு மற்றும் தேசிய வைத்திய வளாகத்தை மறித்தோம். சைட்டம் மருத்துவக்கல்லூரியை தடை செய்யும் வரை எமது போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த மாணவர்கள் கூட்டாக வலியுறுத்தியதுடன் மாலை 6.30 மணியளவில் கலைந்து சென்றனர்.

இதேவளை பொலிஸாரின் தடியடிப்பிரயோகத்தில் காயமடைந்த 87 மாணவர்களுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-22#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இதால தான் இன்னும் சொறீலங்கா 3ம் உலக நாடா இருக்குது. இப்படியாப்பட்ட சுய நல மாணவ சமூகத்தை உருவாக்கும்.. போட்டிப் பரீட்சைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு.. தரமான.. தேசிய கல்விக் கொள்கையும்.. அதற்கு அமைவான.. தேசிய.. தனியார் கல்வி வழங்கு நிலையங்களும் அமைவதே.. சொறீலங்கா.. முன்னேற உதவும்.

இதில் சண்டை பிடிக்கிற ஆக்கள்.. படிச்சி முடிச்சிட்டு.. சொந்த நாட்டுக்கு உழைக்கப் போறதில்ல.. வெளிநாட்டுக்குத் தான் அதிகம் சேவை செய்வினம். அந்த வகையில்.. சொறீலங்கா... எனியும் மாற்றி யோசிக்கல்லைன்னா.. அது 3ம் உலக நாடாக.. நீட்டிக் கொண்டே போக வேண்டியான். tw_blush::rolleyes:

4 hours ago, nedukkalapoovan said:

இதால தான் இன்னும் சொறீலங்கா 3ம் உலக நாடா இருக்குது. இப்படியாப்பட்ட சுய நல மாணவ சமூகத்தை உருவாக்கும்.. போட்டிப் பரீட்சைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு.. தரமான.. தேசிய கல்விக் கொள்கையும்.. அதற்கு அமைவான.. தேசிய.. தனியார் கல்வி வழங்கு நிலையங்களும் அமைவதே.. சொறீலங்கா.. முன்னேற உதவும்.

இதில் சண்டை பிடிக்கிற ஆக்கள்.. படிச்சி முடிச்சிட்டு.. சொந்த நாட்டுக்கு உழைக்கப் போறதில்ல.. வெளிநாட்டுக்குத் தான் அதிகம் சேவை செய்வினம். அந்த வகையில்.. சொறீலங்கா... எனியும் மாற்றி யோசிக்கல்லைன்னா.. அது 3ம் உலக நாடாக.. நீட்டிக் கொண்டே போக வேண்டியான். tw_blush::rolleyes:

இவர்களின் பிற்போக்குச் சிந்தனைகளை வளர்ப்பதில் ஜேவிபி கட்சி முன்னிலையில் இருந்து கடினமாக உழைக்கிறது. தென்பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உண்மை இலகுவில் விளங்கும்.

மதவெறியும் இனவெறியும் கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளும் சோதிட நம்பிக்கைகளும் நாடு முன்னேற உள்ள பிரதான தடைகளில் சில.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இதால தான் இன்னும் சொறீலங்கா 3ம் உலக நாடா இருக்குது. இப்படியாப்பட்ட சுய நல மாணவ சமூகத்தை உருவாக்கும்.. போட்டிப் பரீட்சைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு.. தரமான.. தேசிய கல்விக் கொள்கையும்.. அதற்கு அமைவான.. தேசிய.. தனியார் கல்வி வழங்கு நிலையங்களும் அமைவதே.. சொறீலங்கா.. முன்னேற உதவும்.

இதில் சண்டை பிடிக்கிற ஆக்கள்.. படிச்சி முடிச்சிட்டு.. சொந்த நாட்டுக்கு உழைக்கப் போறதில்ல.. வெளிநாட்டுக்குத் தான் அதிகம் சேவை செய்வினம். அந்த வகையில்.. சொறீலங்கா... எனியும் மாற்றி யோசிக்கல்லைன்னா.. அது 3ம் உலக நாடாக.. நீட்டிக் கொண்டே போக வேண்டியான். tw_blush::rolleyes:

உங்களை மாதிரி என சொல்கிறீர்கள்:cool:

  • தொடங்கியவர்

சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 

 

(எம்.சி.நஜிமுதீன்)

பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சுகாதரா அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு நெருக்கடிகைள ஏற்படுத்தியதுடன் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே அச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் சி.சி.டி.வி. கெமரா பதிவின் உதவியுடன் அவர்களுக்கு  எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 19399134_2013966458833342_80514320987406

மேலும் இராணுவத்தினர் சட்டத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற  நிலையிலும், அவர்கள் இராணுவத்தினர் என்பதால் தண்டனை வழங்க வேண்டாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். அவ்வாறில்லை, சீருடையில் உள்ளவர்களும் தமது வகிபாகத்திற்கு அப்பாற் சென்று செயற்பட்டால் அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/21152

  • தொடங்கியவர்

அத்துமீறியோரை கைது செய்ய தனிப்படை

 

(எம்.எப்.எம்.பஸீர்)

மாலபே சைட்டம் தனியார் மருத்­துவக் கல்­லூ­ரிக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­ றியம் உள்­ளிட்ட மூன்று மாணவர் ஒன்­றி­யங்கள் சுகா­தார அமைச்சை சுற்றி வளைத்து அதன் 'சுவ சிறி­பாய' கட்­ட ­டத்தை மூன்று மணி நேரம் வரை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தமை தொடர்  பில் விசா­ரிக்க  விஷேட பொலிஸ் விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் போது அமைச்­சுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட சேதங்கள் உள்­ளிட்ட அனைத்­து­வி­ட­யங்­க­ளையும் மையப்­ப­டுத்தி இந்த விசா­ர­ணைகள் நடாத்­தப்­ப­டு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். 

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­னா­யக்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் தனிப் படை­யொன்று இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

 நேற்று முதல் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள இந்த குழு­வா­னது, சுகா­தார அமைச்சில் உள்ள சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­களை மீளாய்வு செய்ய தனிக் குழு­வொன்று கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அதில் இருந்து கிடைக்கும் தக­வல்­க­ளுக்கு அமை­வாக சுகா­தார அமைச்­சுக்குள் அத்து மீறி­யமை, அங்கு அரச சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்­தமை தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கைது செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

 இத­னை­விட கைதுக்கு முன்­ப­தாக சுகா­தார அமைச்­சுக்கு ஏர்­ப­டுத்­தப்­பட்ட சேதத்தை மதிப்­பிடும் பணி­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அந்த மதிப்­பீட்டின் பின்னர் பொதுச்­சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க பொலிஸார் தயா­ராகி வரு­கின்­றனர்.

 கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­னா­யக்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் கொழும்பு மத்­திய பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சாலிய சில்­வாவின் வழி நடத்­தலில் மரு­தானை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் தனிப்­படை பொலிஸார் இந்த விசா­ர­ணை­களை நடாத்தி வரு­கின்­றனர்

 குறிப்­பாக மாண­வர்கள் மிகத் திட்­ட­மிட்டு, சுகா­தார அமைச்சின் பொது மக்கள் தினத்தில் யாரும் சுகா­தார அமைச்­சுக்குள் இரண்டு , மூன்று பேராக உள் நுழைந்­துள்­ள­தா­கவும் அவ்­வாறு சென்­ற­வர்­களே சுகா­தார அமைச்சின் கட்­டி­டத்தை ஆக்­கி­ர­மித்­துள்­ள­துடன் பேர­ணி­யாக வந்த மாண­வர்கள் குழு, அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைக்கும் வண்னம் சுகா­தார அமைச்சை சுற்றி வலைத்­துள்­ள­மையும் ஆரம்­ப­கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த திட்டத்தை வகுத்த, ஆர்ப்பாட்டத்தை நெறிப்படுத்தியவர்களுக்கும் எதிராக முன்னெடுக்கத்தக்க சட்ட நடவடிக்கை குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.