Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை

Featured Replies

முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை

 

சுமார் முந்நூறுக்கும்  மேற்ப்பட்ட  கிராமமக்கள், மதத் தலைவர்கள்  மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா  சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ்  நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை  முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

mulangavil.jpg

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற  சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த  கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோட்டிருந்தது  குறித்த விபத்தில் காயமடைந்த சிறுவன்  கோமா நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்று நான்குமணிளவில்  உயிரிழந்துள்ளார்.

 

குறித்த விபத்துத் தொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாட்டு செய்யப்பட்டிருந்ததுடன் தப்பி ஓடிய காரின் ஒரு இலக்கத்தகடு வீழ்ந்த நிலையில் அதன் இலக்கமும் பொலிஸாரிற்கு வழங்கப்பட்டிருந்தது  எனினும் பொலிசாரால்  நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி முந்நூறுக்கும்  மேற்ப்பட்ட  கிராமமக்கள், மதத் தலைவர்கள்  மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா  சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ்  நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை  முற்றுகை இட்டனர். 

 

 அதனை அடுத்து  அங்கு வருகைதந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  சந்தேக நபரை கைதுசெய்யும் வேலைத்திட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளதாகவும்  இன்று சந்தேகநபர் கட்டாயம் கைது செய்யப்பட உள்ளார். நாளை எமது பொலிஸ் நிலைய கூட்டினுள் அவரைக் காணமுடியும் என  அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக தற்போது முற்றுகை கைவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21146

  • கருத்துக்கள உறவுகள்

விபத்து என்றாலும் ஊர்வலம் நடத்தினால் தான் பொலிஸ் நட்வடிக்கை எடுக்குது,பாலியல் வல்லுறவு என்றாலும் ஊர்வலம் நடத்தினால் தான் பொலிஸ் நடவடிக்கை எடுக்குது.....

முதலமைச்சரை நீக்க வேண்டாம் என்றாலும் ஊர்வலம்....சிறிலங்காவில் அரசியல்வாதிகளும்,பொலிஸும் ஊர்வலத்தை நம்பியிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் உறங்கு நிலையில் தான் இருக்கிறது  தட்டி எழுப்ப வேண்டியது  தான் 

வன்னியில் மட்டுமல்ல வடமாகாணத்தில் உள்ள சிங்கள போலீஸ் காடையர்களின்  பிரதான தொழில் குற்றவாளிகளிடம் இலஞ்சம் வாங்குவது. கப்பம் கறப்பது. பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவதும் ஏமாற்றுவதும்.

வன்னியின் பல பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களின் பொறுப்பாளர்களாக உள்ள சிங்கள போலீஸ் காடையர்கள் லீசிங் இல் கார் போன்ற வாகனங்களை கொள்வனவு செய்து அதன் தவணைக் கட்டணங்களை செலுத்துவது இது போன்ற குற்றவாளிகளும், சட்டவிரோத மண் மற்றும்  மரக் கடத்தல்காரர்களும் தான்.

மேலும் மாதத்துக்கு 2, 3 களியாட்ட கேளிக்கை விருந்துகளை குறித்த  காவல் நிலையங்களின் பொறுப்பாளர்களாக உள்ள சிங்கள போலீஸ் காடையர்கள் ஏற்பாடு செய்வார்கள். அதற்கான செலவுகளை இது போன்ற குற்றவாளிகளும், சட்டவிரோத மண் மற்றும்  மரக் கடத்தல்காரர்களும் தான்.

வன்னியில் பயணம் செய்து அந்தப்பகுதி மக்களுடன் கதைத்தால் இந்த உண்மைகளை எவரும் அறிந்துகொள்ளலாம்.

அதனால் தான் மக்கள் இப்போது குழுக்களாக ஊர்வலம் போக வெளிக்கிட்டுள்ளார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.