Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த பாகிஸ்தானில் பல முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சு - படங்கள் இணைப்பு

Featured Replies

மஹிந்த பாகிஸ்தானில் பல முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சு - படங்கள் இணைப்பு

முன்னாள்  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் அரச தலைவர்கள் மற்றும் முக்கிய இராஜ தந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

mahinda_rajapaksa.jpg

இவ் விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

mahinda-rajapaksa1.jpg

பாகிஸ்தானுக்கு கடந்த 19 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துகொண்டுவிட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mahinda-rajapaksa2.jpg

இதேவேளை, மஹிந்த  ராஜபக்ஷவின் தொடர் வெளிநாட்டு விஜயங்கள் தேசிய அரசியலில் மாத்திரமல்லாது பன்னாட்டு இராஜதந்திர துறையினர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்திய  பிரதமர் நரேந்திர மோடி  தனது இலங்கை விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பால் மும்முரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் திடீரென அவர் பாகிஸ்தானுக்கு செய்துள்ளமை முக்கிய விடயமாக அனைவராலும் நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

mahinda-rajapaksa4.jpg

mahinda-rajapaksa9.jpg

mahinda-rajapaksa23.jpg

mahinda-rajapaksa29.jpg

mahinda-rajapaksa779.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/21151

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானா இந்தியாவா? பொருத்திருந்து பார்ப்போம்..

ஹிந்தியனுக்கு குலைநடுங்க போகுது!

கூட்டு தமிழினப்படுகொலை நடத்திய ஹிந்திய இராஜதந்திரிகள் தங்கள் சகா மகிந்தவின் காலில் விரைவில் விழுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்கப்பா....

ஜப்பான், பாகிஸ்தான் அரசுகள் கூப்பிடவயள் என்று சும்மா போய் பீலா விடுகுது அந்தாள்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு தொடர்பு கொண்டு கேட்டபோது, அவயளா ரூறிஸ்டா வருகினம்.... நாங்க கூப்பிடல்ல எண்டுகினமாம்.

எனினும், சம்பிரதாயமா, ஒரு முன்னாள் ஜனாதிபதி வரேக்க, அரசின் இடைநிலை அதிகாரி சந்திப்பார்.

  • தொடங்கியவர்

நாகம் தீண்டும் போதும் மனித உரிமைகளை பேசி பலனில்லை : பாகிஸ்தானில் மஹிந்த 

(லியோ நிரோஷ தர்ஷன்)

நாகம் தீண்டும் போதும் மனித உரிமைகளை மீறியேனும் உயிர்களை பாதுகாக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க போவதில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , ஜனநாயகத்தின் பரம எதிரி பயங்கரவாதம் என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

mahinda-rajapaksa23.jpg

பாகிஸ்தானின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ''சமாதானத்திற்கான இலங்கையின் போராட்டமும் கற்றுக்கொண்ட பாடங்களும் " என்ற தொனிப்பொருளிலான மாநாட்டின் சிறப்பு அதிதியாக முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டார். 

இங்கு அவர் உரையாற்றியதுடன் கேள்விகளுக்கும் பதிலளித்தார். 

போரின் பின்னர் 14 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தினோம். அதே போன்று போர் முடிவடைந்து ஓரு மாதத்திற்குள் 595 சிறுவர் போராளிகளை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தேன்.  இவை அச்சுறுத்தலான விடயங்கள் என்றாலும் கூட முக்கியமான விடயமென கருதி செய்தோம். 

 

ஆசியாவில் எம்மை போன்ற நாடுகளுக்கு மேற்குலக நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக கற்பிக்க வருகின்றனர். நாகம் தீண்டும் போதும் மனித உரிமைகளை மீறியேனும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பின்வாங்க போவதில்லை. ஆனால் நாட்டை பாதுகாத்த படையினருக்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் மற்றும் மேற்குலக சக்திகளின்  நோக்கங்களுக்கு அமைவாக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். 

பயங்கரவாதிகளுக்கு அவர்களின் மொழியிலேயே பதில் கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்தில் நல்லது கெட்டது என்று வேறுப்பாடில்லை. ஜனநாயகத்தின் பரம எதிரி பயங்கரவாதம் என்பதை மறந்து விட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/21153

  • கருத்துக்கள உறவுகள்

நாகம் தீண்டும் போது நாக உரிமைகளைப் பத்திப் பேசி பலனில்லை என்டெல்லே சொல்லியிருக்க வேண்டும்.

2 minutes ago, நவீனன் said:

பயங்கரவாதிகளுக்கு அவர்களின் மொழியிலேயே பதில் கொடுக்க வேண்டும்.

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளை குண்டு போட்டு அழிக்கவேண்டும் என்று மகிந்த உறுதிப்படுத்தியுள்ளார்!

  • தொடங்கியவர்
‘அரசாங்கம் இராணுவத்தை வதைக்கிறது’
 

image_141abd6695.jpgஅரசாங்கத்தின் சார்பான, உண்மையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளுக்கு, இராணுவத்தினர் இடைவிடாத ஆதரவு வழங்கி வந்ததாகவும் அது மிகவும் கடினமான பணியாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

இஸ்லாமாபாத் அசெரேனா ஹோட்டலில், பாகிஸ்தான் RSS நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சமாதானத்துக்காக இலங்கையின் போர் மற்றும் அதன் பாடம்” என்ற மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசாங்கம்-இராணுவத்தை-வதைக்கிறது/175-199203

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-6-22 at 4:55 PM, நவீனன் said:
‘அரசாங்கம் இராணுவத்தை வதைக்கிறது’
 

அரசாங்கத்தின் சார்பான, உண்மையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளுக்கு, இராணுவத்தினர் இடைவிடாத ஆதரவு வழங்கி வந்ததாகவும் அது மிகவும் கடினமான பணியாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

இஸ்லாமாபாத் அசெரேனா ஹோட்டலில், பாகிஸ்தான் RSS நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சமாதானத்துக்காக இலங்கையின் போர் மற்றும் அதன் பாடம்” என்ற மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசாங்கம்-இராணுவத்தை-வதைக்கிறது/175-199203

நோன்புக் கஞ்சி குடிக்க அங்க போயிருக்கிறார்.

ஆமியை ஏத்தி விட்டு, பாக்கிஸ்தான் மாதிரி ராணுவ புரட்சி வர அலுவல் பார்க்கிறார்.

அது மட்டும் நடந்தால், நமக்கு நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.