Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் நடைபெற்ற 'பொறுமையின் விளிம்பில் தமிழர்கள்" நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் நடைபெற்ற 'பொறுமையின் விளிம்பில் தமிழர்கள்" நிகழ்வு

- பண்டார வன்னியன் Sunday, 25 February 2007 10:51

'பொறுமையின் விளிம்பில் தமிழர்கள்" என்னும் தலைப்பில் சிங்கள சிறிலங்கா தேசத்துடன் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து செத்துப் போய்விட்டதையும், இக்காலப்பகுதியில் தமிழர் தரப்பில் உள்ள நியாயப்பாட்டையும் பொறுமையின் அர்ப்பணிப்பு பற்றியும் சர்வதேசத்திடமும்,

20070225france002mn7.jpg

நோர்வே நாட்டிடமும் தமிழர்களுக்கு சரியான தீர்வு வேண்டுமென அது தமிழீழ தனியரசே சர்வதேசமும், ஐரோப்பிய ஒன்றியமும் அதை அங்கீகரிக்க வேண்டும் எனக்கோரி பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தமது மன உணர்வுகளை எழுச்சிமிக்க ஒன்றுகூடலின் ஊடாக தெரியப்படுத்தினர்.

Pடயஉந னந டய சுநiநெ யுளவசனை என்னும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை (22.02.07) பிற்பகல் சரியாக 16.00 மணிக்கு ஈகைச்சுடரினை பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் இணைப்பாளர் பாலசுந்தரம் அவர்கள் ஏற்றி வைத்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

20070225france003ja4.jpg

புரிந்துணர்வு உடன்படிக்கை பற்றியும் அதன் இந்த 5 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய துன்ப துயரங்கள் படுகொலைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் பலத்த கோசங்கள் எழுப்பப்பட்டன.

விடுதலைப் பாடல்களுக்கு கைகளைதட்டி மக்கள் ஆடினர். எங்கள் தேசம் தமிழீழம், எங்கள் தலைவர் பிரபாகரன், உலகமே தமிழீழத் தனியரசை அங்கீகரி, என்ற கோசங்கள் முழங்கப்பட்டது.

20070225france004lc5.jpg

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ஐந்து வருட காலத்தில் சிங்கள பேரினவாத அரசின் தமிழ்மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையினை பற்றிய அறிக்கையும், சமாதான செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகள். மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்தாபன அறிக்கைகள் என்பனவும் நோர்வே தூதுவராலயத்திற்கு சென்று நோர்வே தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

பிற்பகல் 16.30 மணிக்கு தூதுவராலயத்திலிருந்து மனுக்கையளிக்கவிருக்கும் குழுவினரை அழைத்துச்செல்ல பொலிசார் வந்திருந்தனர்.

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அதன் ஒருங்கிணைப்பாளர், மற்றும் பொதுமக்கள் சார்பாக இருவரும், கூட்டமைப்பின் பிரெஞ்சு பரப்புரை சார்பாகவும் திருமதி. சுபா அவர்கள் சென்றிருந்தனர்.

அரை மணிநேரமாக எமது தரப்பின் உண்மைகளும், தமிழ்மக்களின் நிலைப்பாடும் பற்றி கதைக்கப்பட்ட போது அவர்களின் தரப்பில் தமக்கு இது பற்றி பெரியதாக எதுவும் தெரியாது என்றும், எமது கோரிக்கை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர்.

நோர்வே அரசு எமது இனப்பிரச்சனையில் தலையிட்டு சிங்கள தேசத்தால் பெரும் நெருக்கடிகளையும், அவமானங்களை சந்தித்தது என்றும், அதற்கு புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் இனியும் இவ்வாறு பேச்சுவார்ததை என்று தங்கள் நாடும், சர்வதேசமும் தொடர்ந்து செல்லுமாக இருந்தால் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை பலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பொறுமையின் எல்லைகடந்து தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வு கருதி எடுக்கும் நடிவடிக்கைக்கு உண்மை அறிந்த நோர்வே நாடு தனது பங்கைச்செலுத்த வேண்டும் இது தான் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்று எமது தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் சம்பந்தமாகவும் தமிழிலும், பிரெஞ்சு மொழியில் ஒன்றுகூடலில் கலந்து கொண்ட மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றியும், சிறிலங்கா அரசுகளின் 5 வருட ஏமாற்றுக்களையும் தொடர்ந்தும் தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் உள்ளதையும், சுனாமி பொருளாதார உதவி முடக்கம், தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கினை பிரித்தமையும், பச்சிளம் பாலகர் முதல் பெரியவர்கள், பெண்கள், வயோதிபர்கள், கல்விமான்கள், அரசசார்பற்ற அமைப்புக்களின் தொண்டர்கள் படுகொலைகள் செய்யப்பட்டதையும் பள்ளிச் சிறார்கள் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டதும் சிறிலங்கா இனவாதிகள், புத்தபிக்குகள் இன்று வரையுள்ள நிலைப்பாடுகள் பற்றியும் பிரெஞ்சு மொழியில் உரையாற்றப்பட்டது.

சர்வதேசத்திற்கு தமிழர் எமது நிலைப்பாடு என்ற தலைப்பில் கவிதை வாசிக்கப்பட்டது. மக்கள் எல்லாம் மக்களெல்லாம் என்ற பாடல் பாடி எழுச்சியூட்டப்பட்டது. மக்கள் யாவரையும் கைகளை உயர்த்தி மக்கள் ஓர் உறுதியெடுத்துக்கொண்டனர்.

தமிழீழம் எங்களின் முடிந்த முடிவு, தமிழீழம் வரும் வரை தேசத்திற்காக உழைப்போம், தேசியத்தலைவர் காலத்தில் தமிழீழம் பெறுவோம் என்ற உறுதிமொழிகளை உரக்ககக்கூறினர்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நளை பிறக்கும் பாடல் பாடப்பட்டது. பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் இரண்டாயிரம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மாலை 17.00 மணிக்கு தூறலாக ஆரம்பித்த மழை பின்னர் பொழியத் தொடங்கிய போதும் மக்கள் யாவரும் கலையாது மழைக்கு ஒதுங்காது தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

ஆயிரத்தி எண்னூறு வரையிலான மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் ஒன்று கூடல் நிறைவு கண்டது.

http://sankathi.org/news/index.php?option=...80&Itemid=1

நிகழ்வின் மேலதிக படங்களை யாழ் விம்பகத்தில் பார்வையிடலாம்

விம்பகத்துக்கு கீழ் வரும் இணைப்பை கிளிக் செய்து செல்லுங்கள்

http://www.yarl.com/vimpagam/categories.php?cat_id=32

விம்பகம்-http://www.yarl.com/vimpagam

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம். பிரான்சில் இருந்து கொண்டு எப்படி ஈழத்திற்காக போராடுவது. அங்குள்ள மக்களுக்கு விடிவைத் தேடித்தருவது..?! :(:unsure:

ஓ இந்தப் போராட்டங்கள் சர்வதேச அணுகுமுறையையே தலைகீழாக்கி விடுமோ..?!

புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களை விதைத்த பெப் 22 கனவுக்கான அறுவடைதான் இது போலத் தெரியுது..?! :(:rolleyes:

உணர்ச்சிப் பெருக்கில் ஓடி வந்து ஐரோப்பாவின் விளிம்பில் நிற்கும் புலம்பெயர்ந்த சிக்காரத் தமிழர்கள் இந்தப் போராட்டம் எந்த மாற்றங்களையும் தராவிடில் அந்திலாந்திக் சமுத்திரத்துள் பாயப்போகின்றனராம்..! அப்படியாவது உலகின் கண்களைத் திறக்க தியாகம் செய்ய உள்ளனராம். உண்மையா..??! கேட்கவே மயிர் சிலிர்க்குது..! :(:lol:

Edited by nedukkalapoovan

இங்கே உள்ள தமிழர்கள் பொறுமையின் விளிம்பில் நின்று என்ன செய்யப் போகிறார்களாம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம். பிரான்சில் இருந்து கொண்டு எப்படி ஈழத்திற்காக போராடுவது. அங்குள்ள மக்களுக்கு விடிவைத் தேடித்தருவது..?!

ஓ இந்தப் போராட்டங்கள் சர்வதேச அணுகுமுறையையே தலைகீழாக்கி விடுமோ..?!

புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களை விதைத்த பெப் 22 கனவுக்கான அறுவடைதான் இது போலத் தெரியுது..?!

உணர்ச்சிப் பெருக்கில் ஓடி வந்து ஐரோப்பாவின் விளிம்பில் நிற்கும் புலம்பெயர்ந்த சிக்காரத் தமிழர்கள் இந்தப் போராட்டம் எந்த மாற்றங்களையும் தராவிடில் அந்திலாந்திக் சமுத்திரத்துள் பாயப்போகின்றனராம்..! அப்படியாவது உலகின் கண்களைத் திறக்க தியாகம் செய்ய உள்ளனராம். உண்மையா..??! கேட்கவே மயிர் சிலிர்க்குது..!

இங்கே உள்ள தமிழர்கள் பொறுமையின் விளிம்பில் நின்று என்ன செய்யப் போகிறார்களாம்?

வெறுமனே யுத்தம் செய்து மட்டும் என்ன செய்யப் போகின்றோம். உண்மையில் புலம்பெயர் தமிழர்கள் உலகநாடுகளின் செயற்பாடின்மையையும், அவர்களை நம்பி வந்த எம்மை, ஏமாற்றியதையும் காட்ட வேண்டிய தருணம் இது.

உண்மையில் இவர்களின் பணி பாரட்டக் கூடியதே! தான் ஏமாற்றி என்று தங்களை நோக்கிச் சொல்லப்படுகின்ற, கருத்துக்களால் அவர்கள் சங்கடம் அடைவார்கள். அடைய வைக்க வேண்டும்.

'பொறுமையின் விளிம்பில் தமிழர்கள்" என்னும் தலைப்பில் சிங்கள சிறிலங்கா தேசத்துடன் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து செத்துப் போய்விட்டதையும், இக்காலப்பகுதியில் தமிழர் தரப்பில் உள்ள நியாயப்பாட்டையும் பொறுமையின் அர்ப்பணிப்பு பற்றியும் சர்வதேசத்திடமும்,

நிலப்பகுதிகளைப் பிடித்து பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அவற்றை உலகம் அங்கிகரிக்கின்ற வகையில், நடந்து கொள்ள வேண்டும். இப்புலத்தமிழர்களின் உணர்வுகளை வரவேற்பதை விட்டு விட்டு, அவர்களைக் கிண்டலடிப்பவர்கள், தாங்கள் என்ன தாயகத்துக்குச் செய்து கிளித்தார்கள் என்று சிந்திப்பது நல்லது.

சொல்லப் போனால், இப்படி கேலி செய்பவர்கள் எங்கு கண்டாலும், செருப்பைக் கழட்டி அடியுங்கள். தப்பில்லை.

இங்கே உள்ள தமிழர்கள் பொறுமையின் விளிம்பில் நின்று என்ன செய்யப் போகிறார்களாம்?

புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் செய்வது நல்லது. செய்யட்டும்

ஆனால் இந்து "பொறுமையின் விளிம்பில்" என்ற வார்த்தை இப்பொழுது பெரும் சலிப்பைக் கொடுக்கின்ற வார்த்தையாகி விட்டது.

நான்கு வருடங்களிற்கு முன்பு தமிழ்செல்வன் ஆரம்பித்து வைத்தது: இப்பொழுதும் பொறுமையின் விளிம்பில் நிற்கின்றோம் என்றால் என்ன அர்த்தம்?

பொறுமையின் விளிம்பில் தமிழர்கள் நான்கு வருடங்களாக நிற்பதைப் பார்த்து நான் பொறுமையின் விளிம்பிற்கு வந்து விட்டேன்.

அதுவும் பிரான்ஸில் தமிழர்கள் பொறுமையின் விளிம்பில் நிற்கிறார்கள் என்றால் என்ன சொல்வது?

புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் செய்வது நல்லது. செய்யட்டும்

ஆனால் இந்து "பொறுமையின் விளிம்பில்" என்ற வார்த்தை இப்பொழுது பெரும் சலிப்பைக் கொடுக்கின்ற வார்த்தையாகி விட்டது.

நான்கு வருடங்களிற்கு முன்பு தமிழ்செல்வன் ஆரம்பித்து வைத்தது: இப்பொழுதும் பொறுமையின் விளிம்பில் நிற்கின்றோம் என்றால் என்ன அர்த்தம்?

பொறுமையின் விளிம்பில் தமிழர்கள் நான்கு வருடங்களாக நிற்பதைப் பார்த்து நான் பொறுமையின் விளிம்பிற்கு வந்து விட்டேன்.

அதுவும் பிரான்ஸில் தமிழர்கள் பொறுமையின் விளிம்பில் நிற்கிறார்கள் என்றால் என்ன சொல்வது?

நீங்க நிக்கிற மாதிரி அவங்களும் அதே பொறுமையின் விளிம்பில் நிக்கிறாங்களோ என்னமோ

புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் செய்வது நல்லது. செய்யட்டும்

ஆனால் இந்து "பொறுமையின் விளிம்பில்" என்ற வார்த்தை இப்பொழுது பெரும் சலிப்பைக் கொடுக்கின்ற வார்த்தையாகி விட்டது.

நான்கு வருடங்களிற்கு முன்பு தமிழ்செல்வன் ஆரம்பித்து வைத்தது: இப்பொழுதும் பொறுமையின் விளிம்பில் நிற்கின்றோம் என்றால் என்ன அர்த்தம்?

பொறுமையின் விளிம்பில் தமிழர்கள் நான்கு வருடங்களாக நிற்பதைப் பார்த்து நான் பொறுமையின் விளிம்பிற்கு வந்து விட்டேன்.

அதுவும் பிரான்ஸில் தமிழர்கள் பொறுமையின் விளிம்பில் நிற்கிறார்கள் என்றால் என்ன சொல்வது?

[color="#FF0000"]பிரான்சிலே 80 ஆயிரத்தில் இருந்து 1இலட்சம் வரையிலான தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். இதிலே 1800பேர் வரையில் தான் இந்த நிகழ்விலே கலந்து கொண்டார்கள் என்றால் என்ன காரணம் என்று யாருக்காவது சிந்திக்கத் தோன்றியிருக்கிறதா?

நாங்கள் தலைவரின் படத்தை பிடித்தோம். எங்கள் தலைவர் பிரபாகரன் என்று கோசம் போட்டோம். பரிஸ் நகரத்திலே தேசியக் கொடியை உயாத்திப் பிடித்தோம் எவரும் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டாம்.

தமிழ் மக்களில் ஒரு சிறு பகுதியினர் மட்டும் தான் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள் என்றும் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லவென்றும் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகம் பிரான்ஸ் அரசாங்கத்துக்கும் இங்குள்ள ஊடகங்களுக்கும் தொடாச்சியாக கூறிவருகிறது.

அதற்கு ஆதாரமாக இங்குள்ள கோவில் ஒன்றின் தேர் திருவிழாவுக்கு திரழும் மக்கள் தொகையையும் எமது நிகழ்வுகளுக்கு வரும் மக்கள் தொகையையும் அது ஆதாரமாக காட்டி வருகிறது.

உண்மையில் இங்குள்ள அனைத்து மக்களையும் ஏன் எங்களால் ஓரணியில் திட்டுவதற்கு முடியவில்லை? ஏன்பது பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை. பிரச்சனை மக்களிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மக்களை அணி திரட்டும் முறையில்தான் பிரச்சனை இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன் போடப்பட்ட ஒரு வட்டம் தான் இன்னும் இங்கே செயற்படுகிறது. நாட்டில் எத்தனையோ மாற்ங்கள் வந்துவிட்டன.ஆனால் இங்கே அந்த மாற்றங்கள் வரவில்லை.அதை வருவிடாமல் தடுப்பதற்கு அவர் மாற்றியக்கம் இவர் துரோகி இவங்கள் உளவாளிகள் என்கின்ற சொற்பதங்களை எடுத்து வீசுகின்ற வேலையையும் ஒரு கூட்டம் செய்துகொண்டு இரக்கிறது.

இதை விட எமது தேசித் தலைவர் நாட்டில் எந்தச் சமூகச் சிரழிவுகளை எல்லாம் அழித்தொழிப்பதை தனது குறிக்கோளாக கொண்டிருக்கிறாரோ அவற்றுக்கும் அகதி அந்தஸ்த்து வாங்கிக் கொடுத்து காப்பாற்றும் கூட்மொன்று ஏதோ தேசியத் தலைவர் இவர்களை கேட்டுத்தான் போராட்டத்தையே நடத்தவதாக பாசாங்கு செய்வதே பிரான்சில் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டமுடியாமல் இருப்பதற்கான முக்கியமான காரணமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சந்தேகம். பிரான்சில் இருந்து கொண்டு எப்படி ஈழத்திற்காக போராடுவது. அங்குள்ள மக்களுக்கு விடிவைத் தேடித்தருவது..?! :unsure::lol:

ஓ இந்தப் போராட்டங்கள் சர்வதேச அணுகுமுறையையே தலைகீழாக்கி விடுமோ..?!

புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களை விதைத்த பெப் 22 கனவுக்கான அறுவடைதான் இது போலத் தெரியுது..?! :D:icon_idea:

உணர்ச்சிப் பெருக்கில் ஓடி வந்து ஐரோப்பாவின் விளிம்பில் நிற்கும் புலம்பெயர்ந்த சிக்காரத் தமிழர்கள் இந்தப் போராட்டம் எந்த மாற்றங்களையும் தராவிடில் அந்திலாந்திக் சமுத்திரத்துள் பாயப்போகின்றனராம்..! அப்படியாவது உலகின் கண்களைத் திறக்க தியாகம் செய்ய உள்ளனராம். உண்மையா..??! கேட்கவே மயிர் சிலிர்க்குது..! :D:lol:

<<<

நெடுக்காலபோவான் அவர்களே,

நீங்கள் என்ன கதைக்கின்றீர்கள் என்பதை புரிந்துதான் கதைக்கின்றீர்களா? இல்லை ஏதாவது கதைக்க வேண்டும் என்ற கோட்பாட்டோடு கதைக்கின்றீர்களா? புலம்பெயர்ந்த மக்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஏன் பாலா அண்ணை என்ன சொல்லிச் சென்றவர்? சர்வதேசத்துக்கு எம் உண்மையான நிலைப்பாட்டை புரிய வைக்க வேண்டும் என்று. சர்வதேசம் என்ன செய்யும் என்பது இரண்டாம் பட்சம் ஆனால் நாம் என்ன செய்கின்றோம் என்ன செய்ய வேண்டும் என்பது நாமாக எடுக்கின்ற முடிவல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

போராடி மரணிப்பது மகத்துவம் தான் ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் எத்தனை எத்தனை அநியாய உயிரிழப்புக்க்களை கொடுத்துவிட்டோம். ! யோசித்துப் பார்த்ததுண்டா தாங்கள்?!

எத்தனை படித்த தமிழர்கள்/ மாணவர்கள்/ தளபதிகள்...காட்டிக்கொடுக்கும

  • கருத்துக்கள உறவுகள்

பெப் 22 என்ற மாயை சர்வதேசத்திடம் இருக்கவில்லை. சர்வதேசம் புலம்பெயர்ந்த லூசுகளின் கதையைக் கேட்டுக் கொண்டு சிறீலங்கா தொடர்பான முடிவுகளை எடுத்த ஒரு சந்தர்ப்பத்தை உங்களால் காட்ட முடியுமா..?!

புலிகளின் பின்னால் அணிவகுத்து நிற்பவர்கள் பொறுமையில் விளிம்பில் நிற்பதாக உளறத் தேவையில்லை. புலிகளின் பின்னால் அணிவகுத்துள்ளதாக சொல்லிக் கொள்ளலாம். போராட்டங்கள் சர்வதேச கவனத்தை திருப்ப வேண்டின் அவற்றிற்கு சர்வதேச முக்கியத்துவம் இருக்க வேண்டும்.

தமிழர்கள் தாங்களே வளர்த்துக் கொண்ட மாயைகளுக்கு அடிமைப்பட்டு பொறுமையின் விளிம்பு என்று கிளர்ந்தெடுவதால் சர்வதேசத்துக்கு இம்மியளவு கவலையோ கரிசணையோ வரப்போவகில்லை. புலிகளின் 5 ஆண்டு நிறைவறிக்கையைக் கூட சர்வதேசம் முன்னிலைப்படுத்த முனையவில்லை. மாறாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் இரு தரப்பின் மீதான அதிருப்தி அறிக்கையும் நோர்வேயின் சமாதான முயற்சி தொடரும் என்ற அறிக்கையுமே வெளிவந்தன. அரசின் கடந்த இரண்டு வருடகால யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து ஒரு கவலை கூட வெளியிடப்படவில்லை சர்வதேச சமூகத்தால்.

இந்தக் கேட்டில் தமிழர்கள் பொறுமையின் விளிம்பில் நிற்பதாக பிராண்சிலும் கனடாவிலும் இருந்து உழறுவதன் உண்மைத் தன்மையை வடக்குக் கிழக்குக் செல்லும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் கண்டு கொள்வார்கள். எனவே இவை புலிகளின் தூண்டுதல்களால் நடக்கின்றன என்ற அரசின் பதில் பிரச்சாரத்துக்கு இரையாகி மடிந்தே போகின்றன. போராட்டம் என்பது பொங்குவதும் தணிவதும் அல்ல. தொடர்சியானதாக சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.

தமிழர்களை விளிப்புணர்வின் கீழ் வைக்க என்றால் மாயைகளை வளர்க்காத வகையில் போராட்டங்களை முன்னெடுங்கள். அதைவிடுத்து தமிழர்களை தமிழர்களே ஏமாற்றும் வகையில் போர் வெற்றிச் செய்திக்காக காத்திருந்து பொறுமையிழந்துள்ளத்தை..பொறுமை

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா,

புலம்பெயர்ந்தவர்கள் அப்படியொரு மாயையில் சிக்கிக்கொண்டிருந்தார்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.