Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம்

Featured Replies

ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம்

 

காட்டில் வாழும் பழங்குடியின நாயகன், ஒரு விபத்தில் மெட்ரோ சிட்டி நாயகியிடம் வந்து வசிப்பதால் நிகழும் சம்பவங்களே ‘வனமகன்’. 

வனமகன்

 

கார்ப்பரேட் நிறுவனத் தொழிற்சாலை ஒன்றை அந்தமான் காட்டுக்குள் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அதனால் அங்குள்ள பழங்குடியின மக்களை அப்புறப்படுத்த சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அந்தப் பழங்குடியின மக்களில் ஒருவர்தான் ஜாரா (ஜெயம்ரவி). சென்னையில் வசிக்கும் டாப் பணக்காரர்களில் ஒருவரான காவியா (சயிஷா) சுற்றுலாவாக அந்தமான் வருகிறார். இவரால் ஜெயம்ரவிக்கு விபத்து ஒன்று ஏற்படுகிறது. ஜெயம்ரவியைக் காப்பாற்ற சென்னை அழைத்துவருகிறார் நாயகி சயிஷா. நகரச் சுழலில் ஜெயம்ரவி படும் திண்டாட்டம், சதித்திட்டம் தீட்டும் அந்தக் கார்ப்பரேட் நிறுவனம் யாருடையது, ஜெயம்ரவியின் மீது சயிஷாவிற்கு ஏன் காதலும் புரிதலும் வந்தது, அந்தப் பழங்குயின மக்களின் நிலை என்னவானது என்பதுதான் கதை. 

ஜெயம்ரவி பக்கா ஃபிட். காட்டுமனிதனாக முரட்டு உருவத்துடன் மிரட்டுகிறார். மரங்களில் அசால்டாகத் தாவுவது, புரட்டிப் போட்டு எல்லோரையும் அடிப்பது, சயிஷாவிற்கு மட்டும் கட்டுப்படுவது என ஒரிஜினல் காட்டுத்தனம். ஜெயம்ரவிக்கு வசனம் குறைவு என்பதால் நடிப்பதற்கான ஸ்கோப் இல்லை. ஆனால், சின்னச் சின்ன மேனரிஸங்கள் மூலம் சுவாரஸ்யம் காட்டுகிறார். கூடவே ஆக்‌ஷன் காட்சிகளில் மெர்சல் காட்டுகிறார்.  

ஜெயம்ரவிக்கும் சேர்த்து, நிறையவே வசனங்கள் பேசுகிறார் நாயகி சயிஷா. டிஜிட்டல் தமிழச்சிக்கான கெத்தும், ‘எலைட்’ மனுஷிக்கான தோரணையும் என பளிச்சிடுகிறார். முதல்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடனமும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. ‘டேம் டேம்..’ பாடலில் இவரின் நடனத்திற்கு ஆயிரம் லைக்ஸ். காட்டுக்குள் உருண்டு புரண்டாலும் மேக்கப்புடன் ஃப்ரெஷாகவே இருப்பதற்கு டிஸ்லைக்ஸ். 

‘சிட்டிக்குள்ள கூகுள் மேப்னா, காட்டுக்குள்ள ஈகிள் மேப்’ என்று சில இடங்களில் மட்டுமே தம்பிராமையா காமெடி தெரிகிறது. நெகட்டிவ் கேரக்டரா, பாஸிடிவ் கேரக்டரா என்ற குழப்பத்தில் வரும் பிரகாஷ்ராஜ், அந்தக் கேரக்டருக்கு ஏற்ற உடலமைப்புடன் பொருந்தும் வேலராமமூர்த்தி என காஸ்டிங் குட்.

காட்டையும், காடுசார்ந்த இடங்களையும் அபகரிக்க நினைக்கும் கார்ப்பரேட், அதனால் பாதிக்கப்படும் மக்கள் என வழக்கமான கான்செப்ட்தான். வசனங்களில் வலு இல்லை. காட்டுமனிதன் சிட்டிக்குள் வந்தால் என்னாவாகும் என்ற முதல்பாதி காட்சிகள் சுவாரஸ்யம். இருப்பினும் ‘டார்சான்’, ‘ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்’  போன்ற ஹாலிவுட் படங்கள் மனதிற்குள் வந்துபோவதையும் தவிர்க்கமுடியவில்லை. 'TARZAN'-ன் நடுவில் உள்ள நான்கு எழுத்துகளை மாற்றிப்போட்டு ‘ஜாரா’ என்று ஜெயம்ரவிக்கு பெயர்வைத்தது ஹாலிவுட் படத்திற்கே ட்ரிப்யூட் செய்துவிட்டார் இயக்குநர். 

டிவியில் வரும் புலி காட்சிகளை பார்த்துவிட்டு, நிஜத்தில் புலி வந்துவிட்டதென அம்பினால் டிவியை உடப்பது, நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு துப்புவது, ஏசி ரூம் பிடிக்காமல் ஜன்னலைத் திறந்துவைப்பது என்று சில காட்சிகள் ஓகே. புலி வரும் சி.ஜி காட்சிகள் நேர்த்தி. ஆனால், சில 500 ரூபாய் நோட்டுகளைப் புரட்டும் காட்சியைக் கூட சி.ஜியில் உருவாக்கியிருப்பது ஆர்வக்கோளாறு. 

‘மனிதர்களுடைய குணங்கள் இல்லாத சில மனிதர்களின் கதை....’ என ஆரம்பத்தில் இடம்பெறும் நாசரின் வாய்ஸ் ஓவரும், கடைசியில் 'உலகெங்கும் வாழும் பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு சமர்ப்பணம்' என்ற டைட்டில் கார்டிலும் சொல்கிறார்கள். இந்த இரண்டும் நன்றாக இருக்கிறது. 'ஆதிவாசிகள்' என்ற பொருளடக்கத்தை 'கொஞ்சம் ஊறுகாய்' என்ற ரீதியிலேயே தொட்டிருக்கிறார்கள். முழுமையாக பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும், பிரச்னையும் காட்சிப்படுத்தத் தவறிவிட்டது.

வனமகன் 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் 50-வது படம் என்பது எண்ணிக்கையில் ஓகே. ஆனால் ஒரே ஒரு பிஜிஎம் தவிர மற்ற இடங்களில் ஹாரிஸ் தென்படவில்லை. காடு சார்ந்த உணர்வை வெளிப்படுத்துவதற்குப் பதில் எலைட் இசைதான் ஒலிக்கிறது. ‘டேம் டேம்..’ ,‘யம்மா ஏ அழகம்மா..’ பாடல்கள்  ரசிக்கும் ரகம். சயிஷாவுக்கும், தம்பி ராமையாவுக்கும் காட்டில் உணவு தேடி ஜெயம் ரவி ஓடும்போது ஒலிக்கும் தபேலா சற்று ஆறுதல். ஆனாலும் காட்டுக்குள் ஆப்பிள், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி எப்படி ஒரே இடத்தில் கிடைக்கிறது என்பது மட்டும் இயக்குநருக்கே தெரிந்த ரகசியம்.  

மனிதர்களுடைய வாடையே படாத காட்டில் இருந்து வரும் மனிதன், இந்தப் பரபரப்பான நகரத்திற்குள் நுழைகிறார் என்பது ஹைவோல்டேஜ் ஒன்லைன். ஆனால், அதைத் திரைக்கதை வடிவத்திற்குள் கொண்டுவர ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் இயக்குநர் விஜய். 

பட்டணம் ரஷீதின் ஒப்பனையில் அழகான ஜெயம் ரவி, அழுக்கு முகத்துடன் 'பளிச்'சென பதிகிறார். காவ்யாவின் இண்டஸ்டிரி, காடு என ஏரியல் வ்யூக்களில் திருநாவுக்கரசின் கேமரா க்ளியர்!  

சக ஆதிவாசிகள் குரங்குபோல நெஞ்சில் அடித்துக்கொள்வது, மரம் ஏறுவது, தாவுவது, குதிப்பது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, ஆதிவாசிகளின் அடிப்படை இயல்புகளைக்கூட இயக்குநர் ஆய்வு செய்யவில்லை என்பது தெரிகிறது. எமோஷனலாக மனதில் நச்செனப் பதியவேண்டிய படம். ஆனால், அண்ணன் மகளைக் காண அலைந்துகொண்டிருக்கும் சித்தப்பா, போலீஸ்காரரின் மகளைப் புலியிடம் இருந்து காப்பாற்றுவது, செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் கணவன் - மனைவியை நேரில் சந்திக்கவைத்து சேர்த்து வைப்பது, இதற்கு நடுவே இரண்டு பாடல்கள் வேறு, என பல காட்சிகள் வலிந்து திணித்த ரகம். போலீஸ், ஃபாரஸ்ட் ஆஃபீஸர்கள் என்று எல்லாரையுமே பணக்காரர்கள் ஏவலுக்கு வேலை செய்யும் ரகங்களாகக் காட்டியிருப்பது சினிமாத்தனம். 

 

புகழ், போட்டி, பொறாமை, வஞ்சம், வறுமை என்று எதுவும் இந்தக் காட்டுநாயகனான வனமகனுக்குத் தெரியாது என்கிறார்கள். அத்தோடு கதையும் தெரியாமல் போனதுதான் கொஞ்சம் நெருடல். ஆதிவாசிகள்... அவர்கள் இருப்பிடத்திற்கு வரும் ஆபத்து, இறுதியில் சுபம் என்ற வழக்கமான கதைதான் என்றாலும் இந்த ‘வனமகனுடன் காட்டுக்குள் ஒரு வலம் வரலாம்.

http://www.vikatan.com/cinema/movie-review/93245-vanamagan-movie-review.html

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: வனமகன்

 
திரைப்பட விமர்சனம் : வனமகன்
   
திரைப்படம் வனமகன்
 
நடிகர்கள் ஜெயம் ரவி, சயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ், வருண், சண்முகராஜா
 
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
 
இயக்கம் விஜய்

காடு சார்ந்த படம் என்றாலே, அங்கு அமைதியாக வாழும் மக்கள் vs காட்டில் பெரிய தொழிற்சாலையை ஆரம்பிக்க முயலும் பெரும் நிறுவனங்கள் என்ற ரீதியிலேயே படங்கள் வருவது பல சமயங்களில் வழக்கமாக இருக்கிறது. கும்கி போன்ற சில படங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

சில வாரங்களுக்கு முன்பாக வெளிவந்த கடம்பன் திரைப்படத்தில், நிம்மதியாக காடுகளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை தொழிற்சாலைக்காக வெளியேற்ற முயலும்போது, அந்த மக்களைச் சேர்ந்த ஒருவன், அந்த முயற்சியைத் தடுக்கிறான் என்பது கதையாக இருந்தது. இப்போது விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் வனமகனிலும் இதேபோல காட்டில் வாழும் மக்கள் vs பெரிய நிறுவனம் என்ற மோதல் இருப்பது அயர்ச்சியூட்டுகிறது.

திரைப்பட விமர்சனம் : வனமகன்

அந்தமானில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜாரா (ஜெயம் ரவி). அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார்கள்.

இதற்கிடையில் அங்கு சுற்றுலா வரும் தொழிலதிபரான காவ்யாவின் வாகனத்தில் ஜாரா மோதிவிட, அவரை சென்னைக்கு அழைத்துவந்து குணப்படுத்த முயற்சிக்கிறார் காவ்யா.

வனத்திலேயே வசித்த ஒருவர் நகரத்தை எதிர்கொள்ளும்போது வரும் பிரச்சனைகள் முதல் பாதி. அதன் பிறகு, அந்தமானுக்கு காவல்துறையால் கொண்டுவரப்படும் ஜாரா, தன் மக்களோடு சேர்ந்துகொண்டாரா, தொழிற்சாலை அமைக்கப்படும் முயற்சி கைவிடப்பட்டதா என்பது பிற்பாதி.

திரைப்பட விமர்சனம் : வனமகன்

படத்தின் முற்பாதி பரவாயில்லை என்றாலும் பிற்பகுதி தொய்வான திரைக்கதையால் பொறுமையை சோதிக்கிறது. சீக்கிரமே, படம் எப்போது முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜாரா நகரத்திற்கு வரும்போது, சற்று மிரட்சி இருக்கக்கூடும்தான். ஆனால், பிதாமகனில் வரும் சித்தனைப் போல பல இடங்களில் நடந்துகொள்ள வேண்டுமா? போதாக்குறைக்கு மரத்தின் மேலேயே தூங்குகிறார். அதேபோல, பல காட்சிகளில் பழங்குடியின மக்கள் குரங்குகளைப் போல நடந்துகொள்கிறார்கள்.

அந்தமானில் பழங்குயின மக்கள் வசிக்கும் பகுதிக்கு உள்ளே செல்லவே தடையிருக்கும்போது, அங்கே சென்று காற்றாலை அமைக்க அனுமதி எப்படி கிடைக்கிறது? அந்தமான் காவல்துறை, வனத்துறை எல்லாம் அந்த காற்றாலை நிறுவனத்திற்காக வேலை பார்ப்பவர்களைப் போல படம் முழுக்க வருகிறார்கள். துப்பாக்கியில் சுட்டபிறகும் நூற்றுக்கணக்கானவர்களை துவம்சம் செய்கிறார் நாயகன்.

திரைப்பட விமர்சனம் : வனமகன்

நாயகனாகவரும் ஜெயம் ரவிக்கு பெரிதாக வசனங்களே இல்லை என்பதால் முகபாவங்களிலேயே சமாளிக்கவேண்டிய நிலை. சிறப்பாகவே அதைச் செய்துவிடுகிறார். பிரகாஷ் ராஜ் ஒரு வழக்கமான வில்லன். தம்பி ராமையாவுக்கு நாயகியின் சமையல்காரன் பாத்திரம். வழக்கத்தைப்போல சில இடங்களில் மட்டும் சிரிப்பை ஏற்படுத்தும் வேலை.

ஆனால், படத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துபவர் அறிமுக நடிகையான சயிஷா. ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக வரும் இவர், எந்த இடத்திலும் உறுத்தலே ஏற்படுத்தாமல் இயல்பாக நடித்துச் செல்கிறார். பாடல் காட்சிகளில் இன்னும் அசரவைக்கிறார். உண்மையிலேயே ஒரு இனிய புதுவரவு.

ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு, இந்தப் படத்தின் மற்றுமொரு பிளஸ். நகரம், காடு என வெவ்வேறு விதமான நிலப்பரப்பை, ரசிக்கும்படி வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மனிதர். அதிலும் காடுகளின் மீதான ''ட்ரோன் ஷாட்கள்'' அட்டகாசம்.

திரைப்பட விமர்சனம் : வனமகன்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஐம்பதாவது படம். 'டம்.. டம்', 'யம்மா.. அழகம்மா' என்ற இரண்டு பாடல்களும் பின்னணி இசையும் ஓ.கே.

நடிகர்கள் தேர்விலும் காட்சிகளைப் படமாக்குவதிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் விஜய், கதையிலும் திரைக்கதையிலும் சொதப்பியிருப்பதால் பிற்பகுதியில் அலுப்பூட்டுகிறார் வனமகன்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-40391886

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.