Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

கலைஞன்: உங்களை நான் எங்கயோ பாத்திருக்கேனே

வெண்ணிலா: கட்டாயம் பாத்திருப்பீங்க, ஏன்னா நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் நர்ஸா வேலை பாக்குறேன்.

:lol:

:D:o:o ஐயோ நான் நெர்ஸ் வேலை பார்க்கல்லையுங்கோ.

நீங்க என்னமோ தப்பாக சொல்லுறீங்க. நான் வரல்லை இந்த விளையாட்டுக்கு

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply

:lol::D:o ஐயோ நான் நெர்ஸ் வேலை பார்க்கல்லையுங்கோ.

நீங்க என்னமோ தப்பாக சொல்லுறீங்க. நான் வரல்லை இந்த விளையாட்டுக்கு

நிலா அக்கா நீங்க நர்ஸ் வேலையும் பார்கீறனீங்களா சொல்லவே இல்லை....... :P

  • தொடங்கியவர்

ARASIYAL_JOKES06_101106.jpg

ARASIYAL_JOKES05_101106.jpg

ARASIYAL_JOKES04_101106.jpg

  • தொடங்கியவர்

சர்தார்ஜி வீரர் ஒருவர், `தற்கொலைப் படை'யில் இணைந்தார்.

சர்தார்ஜி வீரரின் துணிச்சலைக் கண்ட தற்கொலைப் படை தளபதி அவருக்கு எதிரி முகாமைத் தாக்கும் பொறுப்பைக் கொடுக்க முடிவெடுத்தார்.

சர்தார்ஜி வீரரின் உடல் முழுவதும் படுபயங்கர 'ஆர்.டி.எக்ஸ்.' குண்டுகள் கட்டப்பட்டன. தொடர்பு கொள்வதற்கு வசதியாக ஒரு செல்போனும் அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, சர்தார்ஜி வீரரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது.

"சார்... நான் எதிரி முகாமுக்குள் ஊடுருவிவிட்டேன். இங்கே 2 வீரர்கள் இருக்கிறார்கள். நான் தற்கொலை செய்து கொள்ளலாமா?''

"ரெண்டு பேருக்காகச் சாக வேண்டாம். கொஞ்சம் வெயிட் பண்ணு...''

சிறிது நேரம் கழித்து...

"சார்... இப்போ 25 பேர் இருக்காங்க... தற்கொலை பண்ணிக்கட்டுமா?''

"அவசரப்படாதே... இனëனும் பார்க்கலாம்...''

மேலும் சிறிது நேரம் கழிந்த பின்...

"சார்... நான் இப்போ 100 வீரர்கள் நடுவில் இருக்கிறேன்... தற்கொலை பண்ணிக்கட்டுமா?''

"செய்... நீ ஒரு மாபெரும் தியாகி. உன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாதே. அவர்களை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்...''

சர்தார்ஜி வீரர் தனது இடுப்பில் இருந்த கத்தியை வேகமாக உருவி எடுத்தார். தனது கழுத்தை அறுத்துக் கொண்டு கீழே சரிந்தார்.

:icon_idea::huh::huh:
  • தொடங்கியவர்

யார் யாரைத்தான் டிரான்ஸ்பர் செய்யறதுன்னு ஒரு வெவஸ்தை இல்லாம போயிடுச்சு!

ஏன்? என்னாச்சு?

நம்ம ஆபீஸ் வாசல்ல இருந்த பெட்டிக்கடைய வேற இடத்துக்கு மாத்திட்டாங்க

யார் யாரைத்தான் டிரான்ஸ்பர் செய்யறதுன்னு ஒரு வெவஸ்தை இல்லாம போயிடுச்சு!

ஏன்? என்னாச்சு?

நம்ம ஆபீஸ் வாசல்ல இருந்த பெட்டிக்கடைய வேற இடத்துக்கு மாத்திட்டாங்க

வான்வில் அண்ணா கனநாளைக்கு பிறகு வந்திருகிறீங்க.......... :P

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் மிருக டாக்டரிடம் கொண்டு சென்ற தனது நாய் இறந்து விட்டதாக தான் நினப்பதாக கூறினார்.

டாக்டர் நாயை மேசை மீது படுத்தி தனது பூனையை நாயின் மேல் நடக்க விட்டார். நாயில் எந்த அசைவும் இல்லாதால் டாக்டர் நாய் இறந்து விட்டது என பெண்ணிடம் கூறினார்.

பெண் : டாக்டர் எவ்வளவு பணம் நான் தர வேண்டும்

டாக்டர்:$345

பெண்:$345 டொலரா??

டாக்டர்:ஆம் $45 ஒவிஸ் விசிற்றுக்கு $300 பூனையின் ஸ்கானுக்கு???(cat scan)

  • தொடங்கியவர்

ஒரு மனைவி தன் தோற்றத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்தபின் கணவனிடம் அலுத்துக்கொண்டாள்..

டார்லிங்.. எனக்கு ரொம்ப வயசாகுது போல இருக்கு.. தலையில் லேசா நரைமுடி தெரியுது.. உடம்புல ஒரு தொய்வு தெரியுது.. தாடைக்கு கீழே சதை போட்டிருக்கு.. முகத்தில் கொஞ்சம் சுருக்கம் வேற தெரியுது.. ப்ளீஸ்.. என்கிட்டே நல்லபடியா இருக்கும் விஷயம் என்னன்னு சொல்லுங்களேன்..

கணவன் சொன்னான்...

உன் கண்பார்வை சரியா இருக்கு டியர்..!

----------

மிஸ்டர் மொக்கை கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருந்தார்.. திருப்பங்களில் சடாரென்று திரும்பவே, பயிற்றுநர் சொன்னார்..

மொக்கை.. நீ பாட்டுக்கு உன் விருப்பத்துக்கு திரும்பக்கூடாது..விபத்து நேர்ந்துவிடும்.. உனக்கு பின்னால் இருப்பவர்கள் உணரும்படியாக அறிவித்துவிட்டுத் திரும்பவேண்டும்..

புரிந்ததாக தலையாட்டிய மொக்கை, அடுத்துத் திரும்பும்போது, பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த, கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வந்திருந்த மற்ற இருவரிடமும் சொன்னார்..

நான் இடதுபக்கம் திரும்பப்போகிறேன்..!

  • தொடங்கியவர்

மனிதர்களை சாப்பிடும் படித்த நாலு வேதாளங்கள் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்திற்கு வேலைக்காக சென்று, தேர்வும் ஆகிட்டாங்க.

மென்பொருள் நிறுவனர் வேதாளங்களை பார்த்து, நீங்க கடுமையாக உழைக்கணும், மேலும் நீங்க சாப்பிட கேண்டீனில் எல்லாமே கிடைக்கும், அதை தவிர எதையும் நீங்க சாப்பிடக்கூடாது என்று கட்டளையிட்டார்.

அடுத்த வாரமே மென்பொருள் நிறுவனர் வேதாளங்களை அழைத்து, நீங்க அருமையாக வேலை செய்றீங்கன்னு பாராட்டினார்.

நான்கு வாரங்களுக்கு பின்னர் மென்பொருள் நிறுவனர் அழைத்து, வேதாளங்களை பார்த்து "உங்களுடைய கடுமையான உழைப்பை கண்டு வியக்கிறேன், இதுவரை யாரும் உங்களைப் போல் வேலை செய்து பார்த்ததில்லை, பாராட்டுகிறேன், அதே நேரம் நம் கம்பெனியில் ஒரு மென்பொருள் வல்லுநர் ஒருவரை காணவில்லையாம், நீங்கள் காரணமா? " என்றார்.

உடனே வேதாளங்களும் சத்தியமாக நாங்க இல்லைன்னு சொல்லவும் நிறுவனர் அங்கிருந்து சென்று விட்டார்.

வேதாளங்களின் தலைவன், யாருடா அந்த மென்பொருள் வல்லுநரை சாப்பிட்டது என்று கோபமாக கேட்க. ஒரு வேதாளம் நடுங்கியபடி கையை தூக்கியது.

உடனே வேதாளங்களின் தலைவன் "அடே முட்டாளே! கடந்த நாலு வாரத்தில் 40 மேனேஜர்கள், 20 மேற்பார்வையாளர்களை சாப்பிட்டு இருக்கிறோம், அப்போ எல்லாம் கண்டுபிடிக்காத இவர், இப்போ எப்படி கண்டுபிடித்தார், அதான் அன்னைக்கே சொன்னேன், வேலை செய்யும் எவரையும் சாப்பிடாதீங்க, இப்போ பாருங்க, அவர் இல்லாதது தனியாக தெரிந்து விட்டது, இனிமேல் ஜாக்கிரதையாக இருங்க" என்றதாம்.

சுட்டது :D

  • தொடங்கியவர்

DOCTOR_JOKES01_101106.jpg

ADD_DOCTOR_JOKES02-2211.jpg

வான்வில் அண்ணா,நுனாவிலன் அண்ணா ஆகியோரின்ட நகைசுவை எல்லாம் நல்லா இருக்கே........ :D

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

(வீரப்பன் உயிரோடு இருக்கும்போது)

ஷங்கர் மாதவனும் சந்தன கடத்தல் வீரப்பனும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் பார்க்க போறாங்க.

படத்தில் சந்தனத் தென்றலை.... பாட்டு பார்த்துட்டு வீரப்பன் ஒரே குஷியாயிட்டார்.

சங்கர் மாதவன் கிட்ட வீரப்பன் சொல்றாரு, நீ ஏன் இந்த பாட்டை என்ன வச்சி பாடக் கூடாதுன்னு?

உடனே சங்கர் மாதவன் இப்படி பாடுறாரு...

சந்தன தென்றலை வீரப்பன் கடத்துதல் நியாயமா? நியாயமா?

கவர்மென்ட் கேள்விக்கு வீரப்பன் பதில் என்ன மெளனமா? மெளனமா?

அன்பே உந்தன் மீசை முறுக்க நொடி ஒன்று போதுமே....

அதை நீயும் ஷேவ் பண்ணதானே ஒரு ஆயுள் வேண்டுமே....?

அவ்ளோதான்... பாட்ட கேட்ட வீரப்பன் ரொம்ப சந்தோஷமாகி சங்கர் மாதவனுக்கு ஒரு பெரிய சந்தன மரக்கட்டையை பரிசாக அளிக்கிறார்.

(ஏன்டா... செத்தவனக் கூட விட மாட்டீங்களான்னு கேட்கறீங்க தானே?!)

  • தொடங்கியவர்

கடைக் காரர்: ஒரு ரூபாய்க்கு பத்து வாழைப் பழம்.

வாங்குபவர்: கொஞ்சம் குறைக்கக் கூடாதா?

கடைக் காரர்: சரி ஐந்து வழைப்பழம் எடுத்துக்குங்க

  • தொடங்கியவர்

நம்ம ரௌடி சக்திய கிரிக்கெட் மேட்சுக்கு கூட்டிட்டு போனது தப்பாப் போச்சு.

ஏன்?

பேட்டுக்கும், பந்துக்கும் பதிலா அரிவாளையும் அம்பயர் தலையையும் வச்சு விளையாடணும்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான்.

:lol::lol::)
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பெண்களுக்குள் சிறு விவாதம் யாருடைய நாய் கெட்டிக்கார நாயென்று

முதலாமவர்:என்ரை நாய் விடிய பத்திரிக்கை போட்டதும் என்னிடம் எடுத்துக்கொண்டு வந்து தரும்

இரண்டாமவர்:எனக்கு தெரியும்

முதலாமவர்:எப்படி?

இரண்டாமவர்:அப்படித்தான் என்ரை நாய் எனக்கு சொன்னது!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

. "மோசடி தாத்தாவும் மோடி வித்தை பேரனும்' - ஜெ. சொன்ன கதை

ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறிய கதை:

இப்போது நடந்து வரும் வாரிசு சண்டையை பார்க்கும்போது எனக்கு கதை வடிவில்

உள்ள நாடகம் நனைவுக்கு வருகிறது. ஒரு பெரியவரை தேடி பேரன் வயதில் ஒருவர்

வந்தார். "தாத்தா என்னை ஞாபகம் இருக்கிறதா?' என்று கேட்டார். அவரை

உற்றுப்பார்த்த பெரியவர், "இல்லையே' என்றார். "பத்து வருடத்திற்கு முன்பு

நான் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டபோது நீங்கள் வேறொருவரிடம் இருந்து

பத்தாயிரம் ரூபாய் வாங்கி தந்தீர்கள். அதன் மூலம் என் வாழ்க்கைக்கு

விளக்கேற்றி வைத்தீர்கள்' என்றார் பேரன்."அப்படியா பேராண்டி. அது

வேறொருவருடைய பணம் தானே? அதற்காக இப்போது வந்து நன்றி சொல்ல வேண்டிய

அவசியம் இல்லையே' என்றார் தாத்தா. அதற்கு பேரனோ, "நான் அதற்காக வரவில்லை.

அதே போல் இன்னொரு தடவை என் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்க முடியுமா

என்று கேட்கத்தான் வந்தேன்' என்றார் பேரன். இவ்வாறு ஜெயலலிதா சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்தார்ஜி கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன் நிற்கிறார்.

மனைவி : என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

சர்தார் : நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என் மூஞ்சி எப்படி இருக்கும்னு பார்க்கிறேன்.

***

சர்தார் ஒரு ஓவியக்கண்காட்சியில் நுழைகிறார்.

சர்தார் : இதென்ன.. பார்க்கவே கோரமா இருக்கே. இதைத்தான் மாடர்ன் ஆர்ட் அப்படினு சொல்றீங்களா?

கண்காட்சி நடத்துபவர் : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கண்ணாடியை, ஓவியத்தை அல்ல.

***

சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக் கோரி மனு செய்கின்றனர்.

ஜட்ஜ் : உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களே..அவர்களை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள

  • கருத்துக்கள உறவுகள்

கணவன், மனைவி

மரணப் படுக்கையிலிருந்த கணவன், தன் மனைவியிடம் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

உனக்குத் தெரியுமா. என்னோட எல்லா கஷ்ட காலங்கள்லயும் நீ என் கூடவே இருந்திருக்கே. நான் ஒரு விபத்துல சிக்கினப்ப கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டே என்னோட பிஸினஸ் நொடிச்சுப் போனப்ப தைரியம் சொன்னது நீதான். உடம்பு மோசமாகி. ஏழெட்டு மாசமா கோமாவுல இருந்தப்பவும் கூடவே இருந்து பார்த்துக் கிட்டது நீதான். இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கறப்போ .. ..

எமோஷனலாகாதீங்க .. .. என் கடமையைத்தானே செஞ்சேன் கண்ணீர் உகுத்தாள் மனைவி.

பொருட்படுத்தாமல் கணவன் சொன்னான் - குறுக்கே பேசாதடி சனியனே. .. நீதான் எனக்கு எல்லா துரதிர்ஷ்டத்தையும்

கொண்டுவந்திருக்கே

---------------------------------------------------------------------------------------------------------------------------

மூணு லட்சம் ரூபாய்

வயசான மனிதர் ஒருத்தர் சாகும் நிலையில் இருந்தார் அவர் தன்னோட குடும்ப டாக்டர், வக்கீல், பாதிரியார் மூணு பேரையும் கூப்பிட்டார்.

என்னோட மொத்த சொத்து மூணு லட்சம் ரூபாய், இதை யாருக்கும் தர எனக்கு இஷ்டம் இல்லை. இந்தப் பணத்தை என்னோடவே கொண்டு போகணும்-னு ஆசைப்படறேன். இதை உங்க மூணு பேரிடமும் ஆளுக்கு ஒரு லட்சமா தர்றேன். நான் செத்ததும் என் சவப்பெட்டியில் இந்தப் பணத்தையும் போட்டுப் புதைச்சிடுங்கஞ-னு குடுத்துட்டு கொஞ்சநாள்ல அவர் செத்துப் போய்ட்டார்.

அவரது சவப்பெட்டியில் மூணு பேரும் ஆளுக்கொரு கவரைப் போட்டாங்க. கொஞ்ச நேரம் கழித்துப் பாதிரியார் அழுதுக்கிட்டே, நான் எழுபதாயிரம் ரூபாய்தான் போட்டேன். ஒரு அநாதை குழந்தையோட கல்விக்காக அதிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன்னு குற்றவுணர்வோடு சொன்னார்.

இதைக் கேட்டதும் டாக்டரும் நான் நாற்பதாயிரம் ரூபாய்தான் போட்டேன். மருத்துவமனையில் ஒரு மெஷின் வாங்கறதுக்காக அறுபதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன். நான் பாவி-னு ரொம்ப அழுதார்.

அதைக் கேட்டுட்டிருந்த வக்கீலுக்குக் கோபம் வந்தது. ச்சே நான் உங்களை மாதிரி ஏமாத்து ஆசாமி கிடையாது. சுளையா ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி அந்த சவப்பெட்டிக்குள்ள போட்டுட்டேன்னார்.

எல்லா நகைச்சுவையும் அருமை.

அட வக்கீலுக்கு நல்ல மூளை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிஸா கடையில் சர்தார்ஜி

சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.

கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?

சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.

-------------------------------------------------------------------------------------------------------

இராணுவத்தில் சர்தார்ஜி

இராணுவத்தில் சேருவோருக்கு இரயிலில் இலவச பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் இருப்பதை தெரிந்துக் கொண்ட சர்தார்ஜி, ஒரு நாள் இராணுவத்தில் சேர்ந்தான். இராணுவத்தில் பணிபுரிவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த பனிப் பிரதேசங்களில் இரவுக் காவல் புரியும் போதும், மற்ற கடினமான பயிற்சிகளின் போதுமே தான் உணர்ந்ததாக முகாமில் இருந்த மற்றொரு இராணுவ நண்பரிடம் புலம்பிக் கொண்டிருந்தாரன். அதோடு மட்டுமல்லாமல் தனக்கு பொருத்தமான அளவை விட குறைவான அளவுள்ள ஷூ கொடுக்கப் பட்டிருப்பதால், அதனை காலில் அணிந்து பணிபுரிவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் சொன்னான்.

உனக்கு பொருத்தமான ஷுவை மேலதிகாரியிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாமே என கேட்ட நண்பரிடம், சர்தார்ஜி சொன்னானாம். “இந்த இராணுவ முகாமில் சேர்ந்த பின்னர், நான் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் என்றால், அது தினமும் இந்த ஷூவை கழட்டி வைக்கும் நேரம் மட்டும்தான். சரியான அளவுள்ள ஷூவைப் பெற்று அந்த மகிழ்ச்சியையும் இழக்கச் சொல்கிறாயா?”

-------

பிரமிடுகளில் சர்தார்ஜி

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்”. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் “நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்” என்று.

-------------------------------------------------------------------------------------------------------------

சர்தார்ஜிகளும் நீதிபதியும்

ஊரில் உள்ள எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாள்கள் என்று கூறுவதைக் கண்டு கொதித்தெழுந்த சர்தார்ஜிகள் நீதிபதி முன் ஊர் மக்களைக் கூட்டி, நாங்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்கிறோம்.என்ன வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள், இவர் பதில் சொல்வார் என்று ஒரு அறிவாளியான சர்தார்ஜியை முன் நிறுத்தினார்கள். நீதிபதி முதல் கேள்வியை கேட்டார். “ 3ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”, சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். நீதிபதி, இது தவறான விடை என்று சொல்லி எழுந்து விட்டார்.

கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிகள், “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். எனவே நீதிபதி இரண்டாம் கேள்வியை கேட்டார். “ 2ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி நீண்ட யோசனைக்குப் பின் 8 என்று கூறினார். இதுவும் தவறான விடை என்று நீதிபதி சொல்லவே, “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். மூன்றாவது கேள்வியை நீதிபதி கேட்டார். “4ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிக்கள் “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட தொடங்கினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.