Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொருதிறமை இருக்கும். ஆனால்,பலரின் திறமைகள் வெளிப்படாமல் அப்படியே அமிழ்ந்துவிடும்.காரணம்,சந்தர

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply

காமெடி பக்கத்தில வந்து என்ன பீலிங் வேண்டி கிடக்கு பீலிங்???

காமெடியும்,பீலிங்கும் இருந்தா தான் நல்லா இருக்கும் 007

நன்றி 008

:icon_mrgreen:

  • தொடங்கியவர்

காமெடி பக்கத்தில வந்து என்ன பீலிங் வேண்டி கிடக்கு பீலிங்???

இருக்கு ஆனால் இல்லை.

கல்லூரி இருக்கு; ஆனா வகுப்பு இல்லை.

தேர்வு இருக்கு; ஆனா படிக்கிறது இல்லை.

செல் இருக்கு; ஆனா பாலன்ஸ் இல்லை.

நீ இருக்கே; ஆனா உன்கிட்டயிருந்து எஸ்எம்எஸ் இல்லை.

======================

இன்றைய தத்துவம்:

பின்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுற்றினாலும் முன் சக்கரத்தை முந்த முடியாது.

======================

நேசித்துப் பார் கவிதை வரும்...

பிரிந்து பார் சோகம் வரும்...

சேர்ந்து பார் மகிழ்ச்சி வரும்....

என்னை நினைத்துப் பார்

என் எஸ்எம்எஸ் வரும். செல்லம்..

======================

சர்தார் 1: ரெயிலைக் கண்டுபிடிச்சது ரொம்ப நல்லதாப் போச்சு.

சர்தார் 2: ஏன்?

சர்தார் 1: இல்லேன்னா தண்டவாளம் எல்லாம் வீணாப் போயிருக்கும்.

======================

சர்தார் 1: எவனோ பூட்டை உடைச்சு 1000 ரூபாயைத் திருடிட்டான்..!

சர்தார் 2: நீ எப்படி பூட்டுக்குள்ள 1000 ரூபாயை வச்ச?

======================

இனிய 24 மணி நேரங்கள் ஓர் இனிய நாளை உருவாக்குகின்றன!

இனிய 7 நாள்கள் ஓர் இனிய வாரத்தை உருவாக்குகின்றன!

இனிய 4 வாரங்கள் ஓர் இனிய மாதத்தை உருவாக்குகின்றன!

ஆனால்,

உன்னைப் போன்ற இனிய நண்பன் ஒருவன், வாழ்வையே இனிமையாக்குகின்றான்!

======================

ரோஜாப் பூ வாடிவிடும்

மல்ýகைப் பூ வாடிவிடும்

முல்லைப் பூ வாடிவிடும்

அல்ýப் பூ வாடிவிடும்

ஆனால், வாடாத பூ எது தெரியுமா? அது நம்ம நட்பூ.

======================

உயிரைக் கொடுக்கும் நண்பனை உறக்கத்தில்கூட மறக்காதே. காலை வாரும் நண்பனை கனவில்கூட நினைக்காதே.

======================

கடலில் ஒலிப்பது அலையோசை.

கோவிலில் ஒலிப்பது மணியோசை.

வானத்தில் ஒலிப்பது இடியோசை.

நம் நட்புக்கு ஒலிப்பது செல் ஓசை!

======================

டிங் டிங் டிங் டிங்

தத்துவம் சொல்ல நேரம் வந்தாச்சு:

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

ஹாஹாஹா

_________________

:icon_mrgreen::icon_mrgreen: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினம் ஒரு தத்(தூhhh)வம்:

எப்படி தான் வயித்தால போனாலும்சரி இல்ல வயித்தால அடிச்சாலும் சரி, வயித்த கழுவினா பிரியோசனம் இல்ல

  • தொடங்கியவர்

உங்களுக்கு தெரியுமா?

வருடம் 1926

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

ஜூலை 30

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

காலை

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

10 : 30 மணிக்கு

. .

. .

. .

. .

. .

. .

. .

. .

பெருசா ஒன்னும் நடக்கலை!

நீங்க போய் உங்க வேலைய பாருங்க!!! :icon_mrgreen:

  • தொடங்கியவர்

"ஐ லவ் யூ"

இந்த மெஸேஜை பத்து பெண்களுக்கு ஃபார்வர்ட் செய்யவும்.

அப்படி செய்தால் உங்கள் வீட்டின் முன் ஒரு வாரத்திற்குள் போலீஸ் ஜீப் வரும்.

அதிசயம்.

இது உண்மையிலேயே வொர்க் ஆகுது

ட்ரை பண்ணி பாரு.

----------------

.

என்ன ஒன்னுமே தெரியலயா?

"ஆப்பு"

கண்ணுக்கு தெரியாதுடியோய்

--------------------

பிகரை "சைட் அடி"

செட் ஆனா "கைய புடி"

வெட்கபடாம "கிஸ் அடி"

அழகா இருந்தா "கட்டி புடி"

இனிப்பா இருந்தா " காதை கடி"

செருப்படிவிழுந்தா ஓட்டம் புடி[

எப்படி

  • தொடங்கியவர்

காதலோட வலி எப்படி இருக்கும்னு

எனக்கு தெரியலை. ஆனா நான்

உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப

காதோட சேர்த்து ஒரு அப்பு

அப்புனியே...

யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு

நல்லா தெரிஞ்சிடுச்சு.

--------------

நோயாளி: நீ என்னோட இதயத்தைத் திருடீட்ட.

நர்ஸ்: போடா லூசு. நேத்து டாக்டர் உன் கிட்னியைத் திருடிட்டாரு!

_________________

"பெண்ணே.. என் இதயத்துக்குள் வருவாயா?"

"செருப்பைக் கழட்டவா?"

"வேண்டாம். என் இதயமென்ன கோவிலா. சும்மா அப்படியே வா!"

_________________

ரொம்ப ரொம்ப அவசரம்.

ராவணன் வந்து திரும்பவும் சீதையைக் கடத்திட்டு போயிட்டானாம். இலங்கைக்குப் போக ஆயிரம் குரங்கு உடனே வேணுமாம். இந்தத் தகவலைப் படிச்சதும் உடனே கிளம்புங்க. :icon_mrgreen:

_________________

டிங் டிங் டிங் டிங்

தத்துவம் சொல்ல நேரம் வந்தாச்சு:

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

ஹாஹாஹா

:lol::) அதுதானே...சூப்பர் ஜோக்ஸ் வானவில்.

தொடருங்கள்..

பி.கு: சில ஜோக்சை மறந்து போய் போல திருப்பி இணைக்குறிங்க...கவனியுங்க. :P

நீங்க இப்பிடி காசை பார்க்க நம்ம எல்லாருக்கும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் அனுப்புறது பெரிய விசயம் தான்.

அதுக்காக ஒரே ஜோக்சை திருப்பி திருப்பி வாசிக்க முடியாது பாருங்கோ..அதுதான் சொன்னான். :) ;)

:rolleyes::o அதுதானே...சூப்பர் ஜோக்ஸ் வானவில்.

தொடருங்கள்..

பி.கு: சில ஜோக்சை மறந்து போய் போல திருப்பி இணைக்குறிங்க...கவனியுங்க. :P

நீங்க இப்பிடி காசை பார்க்க நம்ம எல்லாருக்கும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் அனுப்புறது பெரிய விசயம் தான்.

அதுக்காக ஒரே ஜோக்சை திருப்பி திருப்பி வாசிக்க முடியாது பாருங்கோ..அதுதான் சொன்னான். :D ;)

தலை எஸ்.எம்.ஸ் அனுப்புறதே பெரிசு அதுகுள்ள லொள்ளு பாரு

:angry: :angry:

  • தொடங்கியவர்

இங்கே இருப்பதெல்லாம் சிரிப்பு வெடிகள், எல்லாம் சுட்டவை சுட்டதை தவிர வேறொன்றுமில்லை, எங்கே சுட்டேன் எப்படி சுட்டேன் என்டெல்லாம் குறுக்கு கேள்வி கேட்டு குழப்பக் கூடாது, அப்புறம் அடுப்பில தோச கல்லு வச்சு சுட்டேன் என்டு சொல்லிடுவன்

வேணும்னா நீங்களும் சுட்டுப் போடுங்க நோ மென்சன் :rolleyes:

  • தொடங்கியவர்

:rolleyes::o அதுதானே...சூப்பர் ஜோக்ஸ் வானவில்.

தொடருங்கள்..

பி.கு: சில ஜோக்சை மறந்து போய் போல திருப்பி இணைக்குறிங்க...கவனியுங்க. :P

நீங்க இப்பிடி காசை பார்க்க நம்ம எல்லாருக்கும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் அனுப்புறது பெரிய விசயம் தான்.

அதுக்காக ஒரே ஜோக்சை திருப்பி திருப்பி வாசிக்க முடியாது பாருங்கோ..அதுதான் சொன்னான். :( ;)

நன்றி சகி

படிச்ச ஜோக திருப்ப படிக்க இஸ்டமில்லாட்ட கண்ண மூடிட்டு அடுத்த ஜோக்குக்கு ஜம்ப் பண்ணுங்க :D

Edited by வானவில்

  • தொடங்கியவர்

ஒருவர்:யாரோ நம்ம தமிழாசிரியரைப் போட்டு அடிச்சுட்டாங்களாமே?

மற்றவர்:யாரோ வந்து "யார் இங்கே தமிழாசிரியர்?"ன்னு கேட்டதுக்கு "அடியேன்".."அடியேன்"ன்னு தூய தமிழில் சொன்னாராம்! :lol:

அப்புறம் அடுப்பில தோச கல்லு வச்சு சுட்டேன் என்டு சொல்லிடுவன்

அப்ப தோசையை எப்ப தருவீங்களா

:P

  • தொடங்கியவர்

அப்ப தோசையை எப்ப தருவீங்களா

:P

அது எனக்கு மட்டும்தான்

''உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தாலும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''

********************************************************************** *************

''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''

''எதை வெச்சு சொல்றே?''

''சமையலை வெச்சுதான்!''

********************************************************************** *************

''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத்தான் நிறுத்தறார்..!''

********************************************************************** *************

''என் பொண்ணுக்குச் சமையல் பண்ணிப் போடணும்... துணி தோய்ச்சுக் கொடுக்கணும்... யாராவது இருந்தா சொல்லுங்களேன்..!''

''எவ்வளவு வரதட்சணை கொடுப்பீங்க?

********************************************************************** *************

ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!''

********************************************************************** *************

''இதுக்குத்தாண்டா ஸ்கூல் வாத்தியாரா இருந்தவரை அம்பயர் ஆக்கக்கூடாதுங்கறது!''

''ஏண்டா? என்ன ஆச்சு?''

'' 'நோ பால்' போட்டதுக்காக பவுலர் தலைல ஓங்கிக் குட்றார்!''

********************************************************************** *************

''பேசிட்டு இருக்கும் போதே பஸ்ல எவனோ என் செல்போனை திருடிட்டான்...''

''ரொம்ப ஆச்சரியமா இருக்குதே... எப்படி...?''

''நான் பேசிட்டிருந்தது பஸ்ல பக்கத்து சீட்டுல இருந்த ஆளோடது.''

********************************************************************** *************

''மெகா சீரியலுக்கு டாக்டரை டைரக்டரா போட்டது தப்பாப் போச்சா, எப்படி?''

''சீக்கிரமா கதையை முடிச்சிட்டாரு!''

********************************************************************** *************

''என் மாமியார் வாழைப் பழத்தோல்ல சறுக்கி விழுந்துட்டாங்க...''

''நீ என்ன பண்ணிட்டிருந்த...''

''நான் வாழைப்பழம் சாப்பிட்டுட்டிருந்தேன்...' '

********************************************************************** *************

''நீங்க தும்மினாகூட உங்க மனைவி பதறுறாங்களே... அவ்ளோ அக்கறையா?

''அடபோப்பா... சவுரி முடி பறந்துடுமேன்னு தான் அவ கத்துவா!''

********************************************************************** *************

அது எனக்கு மட்டும்தான்

அப்ப எனக்கு றொட்டி அனுப்பிவிடும்

:lol:

"பெண்ணே.. என் இதயத்துக்குள் வருவாயா?"

"செருப்பைக் கழட்டவா?"

"வேண்டாம். என் இதயமென்ன கோவிலா. சும்மா அப்படியே வா!"

ஹா ஹா என்னமாதிரி ஜோக்ஸ் எல்லாம் கற்பனை பண்ணி எழுதுறாங்க..... ஹும்... வெடியோ வெடி தான். இணைத்தமைக்கு நன்றி வானவில் :lol:

  • தொடங்கியவர்

ஹா ஹா என்னமாதிரி ஜோக்ஸ் எல்லாம் கற்பனை பண்ணி எழுதுறாங்க..... ஹும்... வெடியோ வெடி தான். இணைத்தமைக்கு நன்றி வானவில் :o

அதெல்லாம் கற்பணையில்லை யாராவது ஒருவருடைய அனுபவமாக இருக்கும் :rolleyes:

  • தொடங்கியவர்

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; லொள்..லொள்..

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; வவ்..வவ்.. வவ்,,

நாய் 1 ; நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்கு இப்போ பேச்சை மாத்துறே..?

  • தொடங்கியவர்

ஏங்க.. இந்தப் படம் அரசியல்வாதி எடுத்ததா..?

ஏன் கேக்கறீங்க..?

படம் பார்க்க லாரியில ஆளுக வந்து இறங்கறாங்களே..!

_________________

பெரியவர் ; இன்ஸ்பெக்டர் அய்யா.. வர்ற வெள்ளிக்கிழமை என்னோட அறுபதாங் கல்யாணம்.. நீங்கதான் பாதுகாப்பு தரணும்..

இன்ஸ் ; அப்படியா..? ஆமா... யாரால ஆபத்து வரும்ன்னு நினக்கிறீங்க..?

பெரியவர் ; என்னோட 59 முன்னாள் மனைவிகளாலே...!

_________________

  • தொடங்கியவர்

அறிவியல் அதிசயமாக 68 வயதுப் பெண்மணிக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைக் காண உறவினர் கூட்டம் மொய்த்தது.ஒருநாள்..

பெரியம்மா.. கொழந்தையைப் பாக்கலாமா..?

கொஞ்ச நேரம் ஆகட்டும்..

சிறிது நேரம் கழித்து..

இப்போ பார்க்கலாமா..?

மொதல்ல எல்லாரும் காப்பி சாப்பிடுங்க..

பின்னர்...

இப்பவாவது புள்ளயைக் காட்டேன்..

இருங்கடி.. புள்ள அழட்டும்..

அழணுமா..? ஏன்..?

அப்பதானே குழந்தையை எங்கே வச்சுருக்கேன்னு ஞாபகம் வரும்..?!!!!

  • தொடங்கியவர்

அமைச்சர் ; அய்யகோ மன்னா.. நம் குல எதிரி குடோன் பாண்டி உங்கள் பட்டத்து அரசியைக் கடத்திச் சென்றுவிட்டான்..

புலிகேசி ; அப்படியா..? அமைச்சரே.. இனி நமக்கு எதிரியே இல்லை.. ஒழிந்தான் கிராதகன்...!

  • தொடங்கியவர்

அம்மா : ஏண்டா இப்படி கெட்ட பேர் வாங்கறே..? உன் அப்பா எவ்வளவு நல்லவர் .. அவர் வேலை செய்யற இடத்திலே அவர் நடந்துக்கற விதத்தைப் பாராட்டி சீக்கிரமாவே ஊருக்கு அனுப்பப் போறாங்களாம்..

மகன் : ஆனா அம்மா.. அப்பா ஆயுள் தண்டனை முடிஞ்சு வர்றதா ஊருல பேசிக்கிறாங்களே..?

_________________

நம்ம ஹீரோ ரெண்டு பேரு ஒரு துப்பறியும் நிறுவனத்துல வேலை பார்த்தாங்க. ஒரு முக்கியமான கேஸைப் பத்தி துப்பு துலக்கிக்கிட்டு இருக்கும் போது ஒரு வாகனத் தடத்தைப் பார்த்தாங்க..

"இது மாருதி கார் போன தடம்.."

"இல்லே இல்லே.. அம்பாசடர் கார்.."

இப்படி ரெண்டு பேரும் மாறி மாறி அடிச்சுக்கிட்டு இருக்கும் போது பின்னாடி வந்த ரயில் அவங்களை அடிச்சுப் போட்டுட்டு போயிடுச்சு..!

_________________

ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..

"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."

"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"

" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."

" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"

" மன்னிக்கவும் அய்யா.. இது...."

"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"

" தெரியாது அய்யா.."

" அவ்வளவு அவஸ்தைப் பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!"

_________________

  • தொடங்கியவர்

அதிபர் புஷ் வானுலகம் சென்றார்.. எமன் அவருக்கு தண்டனை விதித்து அதற்கான மூன்று தேர்வுகள் கொடுத்து எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொன்னான்..

முதல் அறையைத் திறந்து காட்ட, ஹிட்லரை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் தன்னால் அடி தாங்க முடியாது என்று சொல்ல அடுத்த கதவு திறக்கப் பட்டது.

அங்கு இடி-அமீனை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் அதுவும் முடியாதென்று மறுக்க.. அடுத்த கதவு திறந்துகாட்டும் போது எமன் சொன்னான்..

இதற்கு உமக்கு அருகதையே இல்லை.. இருந்தாலும் மூன்றாவது சாய்ஸ் இதுதான்..

அங்கு காந்தி அவர்களுக்கு எலிசபெத் டெய்லர் கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.. புஷ் மிகுந்த சந்தோஷத்துடன் இதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூற.. எமன் எலிசபெத் டைலரிடம் சொன்னான்..

" அம்மையாரே.. நீங்கள் கிளம்புங்கள்.. உங்கள் தண்டனைக் காலம் முடிந்து விட்டது.. இனி புஷ் பார்த்துக் கொள்வார்..!"

  • தொடங்கியவர்

பொருள்களைத் தொலைத்தவர்கள், பறிகொடுத்தவர்கள் ஆகியோருக்கு அவர்கள் உடைமைகளை கைப்பற்றி திரும்பத் தருவதை ஒரு விழாவாக காவல் துறை நடத்தியது. ஏற்கனவே புகார் கொடுத்திருந்தவர்கள் ஆனாலும், மீண்டும் ஒருமுறை அவர்கள் வாயால் தொலைந்த பொருட்களின் பட்டியலைக் கேட்டு சரிபார்த்த பின்னரே ஒப்படைத்தார்கள்.

பெறுவோர்க்கான வரிசையில் தன் கைப்பையை பறிகொடுத்த ஒரு பெண்மணியும் நின்றிருந்தாள்.. ஆனால் அவளுக்கு என்னென்ன பொருட்கள் உள்ளே இருந்தன என்று சரியாக நினைவுக்கு வரவில்லை. குழப்பத்துடன் இருந்த அவள் முறை வந்த போது சோதனையாக காவல் துறை தலைவர் முதல் அனைத்து அதிகாரிகளும் அங்கு வந்து விட்டனர்.

போதாததற்கு சன் தொ.கா. படப்பிடிப்பாளரும் வந்து விட்டார்.. அம்மணி இன்று நாம் அவமானப்படப் போவது உறுதி என்ற முடிவுடன் இருந்த போது அவள் கைப்பையும், பொருட்களும் தனியாகக் கொடுக்கப்பட்டன. வேறெந்த கேள்வியும் இல்லை.

எல்லாவற்றையும் உள்ளே எடுத்து வைத்துக் கொண்டு புறப்படும் போது ஆவல் மிகுதியில் கா.து. தலைவரைக் கேட்டாள்..

" அய்யா.. என்னை மட்டும் ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை..?"

" அம்மணி.. டி.வி. நிருபர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்களே எதற்காகத் தெரியுமா..? ஒரு சின்னக் கைப்பையில் அரை லாரி பொருட்களை எப்படி எடுத்து வந்தீர்கள் என்று பார்க்கத்தான்.. எப்போது அவ்வளவு பொருட்களையும் உள்ளே வைத்தீர்களோ அப்போதே தெரிந்து கொண்டோம்.. நீங்கள் தான் உண்மையாக தொலைத்தவர் என்று..!"

_________________

சுடச் சுட பிட்ஸாவை கொண்டு வந்து கொடுத்தான் அந்த இளைஞன்.

வீட்டுக்காரர் கேட்டார்..

"எவ்வளவு டிப்ஸ் வேண்டும்..?"

அய்யா.. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளேன்.. இங்கு வரும்போது பழைய ஆட்கள் உங்களிடம் பைசா பெயராது என்று சொல்லி அனுப்பினார்கள்..

" அப்படியா சொன்னார்கள்..? இந்தா 100 ரூபாய்.. வைத்துக்கொள்.."

"நன்றி அய்யா.. இது நான் எழுதிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவியாக இருக்கும்.."

"அப்படியா..? என்ன கட்டுரை எழுதுகிறாய்..?

" கஞ்சர்களிடம் காசைக் கைப்பற்றுவது எப்படி..!"

_________________

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; லொள்..லொள்..

நாய் 1 ; லொள்..லொள்..

நாய் 2 ; வவ்..வவ்.. வவ்,,

நாய் 1 ; நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. எதுக்கு இப்போ பேச்சை மாத்துறே..?

இதில என்ன ஜோக் என்று உண்மையா எனக்கு புரியலை.

இப்பிடிதான் நீங்களும் ஜம்முவும் கதைப்பீங்களோ... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.