Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வானவில் : 1869ல் என்ன நடந்தது?

டண் : எனக்கு தெரியாது சார்.

வானவில்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

டண் : காந்திஜிக்கு நாலு வயசு சார்

----------------

:o:(:D

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நண்பர்: என் மனைவிக்கு என் மேலே அன்புன்னா அன்பு, கொள்ளை அன்பு!

மற்றவர்: எப்படி?

நண்பர்: நான் சமைச்சு வைக்கவேண்டியதுதான். தன் கையாலேதான் பரிமாறுவேன்னு பிடிவாதம் பிடிப்பா.

மனைவி: தவணையில் வாங்கிய பீரோவைத் தூக்கிக் கொண்டு போக ஆள்கள் வந்திருக்கிறார்கள்.

கணவன்: நான்தான் இந்த மாதத் தவணை பணத்தைத் கொடுத்து விட்டேனே. ஏன் கட்டவில்லை?

மனைவி: சத்தம் போடாதீர்கள். பீரோவை மாடியிலிரூந்து கீழே இறக்கிக்கொண்டு போனதும் கொடுத்து விடுவேன்.

கீழே உள்ள அறைக்கு பீரோவை மாற்றவேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

"தெருவில் கிடந்த மணிபர்ஸில் ஐந்தாயிரம் ரூபாய் இருந்தது!"

"நீ என்ன செய்தே?"

"அடுத்தவன் பர்ஸ் நமக்கெதுக்குனு பணத்தை எடுத்துக்கிட்டு பர்ஸை அங்கேயே போட்டுட்டு வந்துட்டேன்!"

"தெருவில் கிடந்த மணிபர்ஸில் ஐந்தாயிரம் ரூபாய் இருந்தது!"

"நீ என்ன செய்தே?"

"அடுத்தவன் பர்ஸ் நமக்கெதுக்குனு பணத்தை எடுத்துக்கிட்டு பர்ஸை அங்கேயே போட்டுட்டு வந்துட்டேன்!"

யார் இந்த அறிவாளி

:o:(

  • தொடங்கியவர்

யார் இந்த அறிவாளி

:o:(

வேறு யார் சித்து தான் :P

வேறு யார் சித்து தான் :P

அப்பவே நினச்சனான் சித்தா தான் இருக்கும் என்று

:o

  • தொடங்கியவர்

யானைக்கு ஆங்கிலத்தில் எலிபோண்ட்..எலிக்கு ஆங்கிலத்தில் என்ன??

யானைபோண்ட்

யானைக்கு ஆங்கிலத்தில் எலிபோண்ட்..எலிக்கு ஆங்கிலத்தில் என்ன??

யானைபோண்ட்

எப்படி தலை இப்படியெல்லாம் முடியுது

:o:(

  • தொடங்கியவர்

பூக்காரர்:- சார் பூ ஒரு முழம் வாங்கீட்டு போங்க சார்..

நம்மவர்:- அல்வா வாங்க காசு இல்லப்பா...வேண்டாம்...

பூக்காரர்:- அல்வா மட்டும் வாங்கீட்டு போங்க சார்..

நம்மவர்:- அல்வா மட்டும் வாங்கிட்டு போனா பூவை யாருக்கு கொடுத்தன்னு என்னை பிச்சி எடுத்திடுவாபா..

பூக்காரர்: அப்போ பூ மட்டும் வாங்கீட்டு போங்களேன்...

நம்மவர்: அல்வா வாங்கவே வக்கில்லாத ஆளுக்கு பொண்டாட்டி ஒரு கேடான்னு கேப்பாள்...

பூக்காரர்: ஆனாலும் நீங்க ரொம்ப பாவம் சார்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா களத்துக்குள் வந்தாலே மனசு சுகமாகுது.

தொடருங்கள் வானவில் நன்றி. :o:(

  • தொடங்கியவர்

‘‘காமெடி படம் பார்க்க ஒரு ஸீட் தள்ளி உங்க மனவிய உட்கார வெச்சிருக்கீங்களே, ஏன்?’’

‘‘சொந்தப் பிரச்சனையத் தள்ளிவெச்சுட்டு,

கொஞ்ச நேரம் சிரிக்கலாமேன்னுதான்!’’

  • தொடங்கியவர்

சில சமயத்திலே ஆபிஸிலே காலங்காத்திலே ஓவரா ஆணி பிடுங்க விட்டு கடுப்பேத்துவானுக. அந்தமாதிரி சமயத்திலே இருக்கிற கடுப்புக்கு எவனாவது ஒருத்தனை பிடிச்சு வம்பிழுக்கமின்னு தோணும் அப்பிடியொரு நொந்து நூலாகி நூடுல்ஸாகி வெறுப்பான சூழ்நிலையிலே மாட்டினவர் தான் நம்ம கொண்டையா. அன்னிக்குன்னு பார்த்து தான் அவரு கொல்டி - சில திடுக்கிடும் உண்மைகள்'னு பதிவு போட்டுருந்தார். அது போதாது நமக்கு வம்பிழுக்க... ஹி ஹி...

நான்:- "வாப்பா கொண்டையா இன்னும் தூங்கலையா?"

வெட்டி:- "வாங்க.. இப்போலாம் எனக்கு சரியா தூக்கம் வரதில்லை?"

நான்:- "ஓ இப்போ கனவெல்லாம் சுமா தானா?"

வெட்டி:- "ஐயோ நீங்களுமா? அது சும்மா கதைக்காக வந்த கதாபாத்திரம் பேருங்க!"

நான்:- "திரும்ப திரும்ப பொய் பேசுனா அது உண்மை'ன்னு ஆகிறுமா?"

வெ:- "பார்த்தீங்களா? நீங்களே அதே பொய்'ன்னு ஒத்துக்கிறீங்க?"

நா:- "ஏலேய் நான் சொன்னது நீயி எங்ககிட்டே சொல்லுவியே? இல்லே! இல்லேன்னு சொல்லுற அந்த பொய்யை பத்தி மக்கா"

வெ:- "அண்ணே! ஒங்களுக்கு இன்னிக்கு வேலை எதுவும் இல்லியா?"

நா:- "ஆமாம்.. ஆனா இன்னிக்கு ஒன்க்கிட்டெயிருந்து உண்மை

வரவைக்கிறது இன்னிக்கு என்னோட பெரிய வேலையே!"

வெ:-" அப்போ சரி! அதை உண்மைன்னு வைச்சுக்கோங்க! இப்போ வேற டாபிக் பேசலாம்!"

மக்களே இந்தமாதிரி நாமெல்லாம் ஜாலியா பேசுவோமா? உங்க ஐடியா கொடுங்க.....

நன்றி வெட்டிகாரு செப்பண்டி........ வலைப்பூ

  • தொடங்கியவர்

வர வர எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்கறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு ?

ஏன் - என்ன ஆச்சு ?

குமாஸ்தா சீட்டை டைபிஸ்ட் பக்கத்திலே போடுறதுக்கு மந்திரிகிட்ட சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்காரு. .*

என் கணவருக்கு தூரப் பார்வை இருக்கு *

எப்படி கண்டுபிடிச்சீங்க ?

எப்பவும் பக்கத்திலே இருக்கிற நான் தெரிய மாட்டேங்கறேன் * ஆனா தூரத்திலே இருக்கிற பெண்ணெல்லாம் அவர் கண்ணுக்கு பளிச்சுன்னு தெரியுது *

இளவரசர் ஆல்பர்ட் இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் மன்னராக இருந்தார்.இவர் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர்.

கணநேரத்தில் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். ஒரு நாள் இளவரசர் ஆல்பர்ட் தனது தாத்தாவான ஏழாம் எட்வர்டு மன்னருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது இளவரசர் தனது தாத்தாவிட்ம ஏதோ கூற வாய் திறந்தார்.

அதற்குள் அவரது தாத்தா சாப்பிடும் போது பேசுவது நல்ல பழக்கமல்ல. எதுவாகயிருந்தாலும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாதே என்று கூறிவிட்டார். தாத்தா சாப்பிட்டப் பின் தனது பேரனை அழைத்து ஏதோ சொல்ல வந்தாயே அதை இப்போது சொல் என்றார்.

ஆல்பர்ட் முகத்தைக் கவலையுடன் வைத்துக்கொண்டுஇ ‘ தாத்தா அதற்கு இப்போது அவசியமில்லை'இ என்றான் அமைதியாக. 'ஏன் ?' என்றார்

தாத்தா. 'தாத்தா தாங்கள் சாப்பிடும் போது உங்கள் உணவில் ஒரு பூச்சி இருந்தது. அதைத்தான் அப்போது நான் சொல்ல வந்தேன்.ஆனால் நீங்கள் என்னைப் பேசக்கூடாது என்று தடுத்துவிட்டீர்கள்.இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? 'என்றார் ஆல்பர்ட்.

  • தொடங்கியவர்

ஒரு கிராமத்துப் பக்கமாக ஒரு வேன் நிறைய அரசியல்வாதிகள் போய்க்கொண்டிருந்தார்கள். திடீரென்று வேன் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து அதில் பயணம் செய்த அனைவரும் அடிபட்டார்கள்.

அப்போது அங்கே தோட்டவேலை செய்துகொண்டிருந்த ஒரு கிழவன் வந்தான். வந்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று முடிவு செய்து ஒரு பெரிய குழியாகத் தோண்டி அனைவரையும் புதைத்துவிட்டான்.

ஒரு வாரம் கழித்து ஒரு போலீஸ் அதிகாரி அங்கே வந்தார்.

அங்கே கவிழ்ந்து கிடந்த வாகனத்தைப் பார்த்தார். இதில் வந்தவர்கள் எல்லாம் எங்கே என்று அந்தக் கிழவனிடம் கேட்டார்.

அனைவருமே இறந்துவிட்டதால் அவன் புதைத்து விட்டதாகக் கூறினான். அனைவருமே இறந்து விட்டார்கள் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்...".ம்...ம்... ஒண்றிரண்டு பேர்கள் தாங்கள் சாகவில்லை என்று கூறினார்கள்.

ஆனால் அரசியல்வாதிகள் எப்போதும் உண்மை பேசமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று கிழவன் பதில் கூறினான்.

----------

எங்க ஆபீஸ்ல மானேஜர் இருக்காரு, ஸ்டெனோ இருக்காங்க...

இதை ஏன் என்கிட்டே வந்து சொல்றீங்க ?

நீங்கதானே படிச்சுட்டு யாராவது வேலை இல்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க

  • தொடங்கியவர்

டாக்டரிடம் சற்று கோபமாக கத்திக்கொண்டிருந்தான் ஒரு பெண்மணி.

என்னய்யா டாக்டர் நீங்க ?

என் புருஷனுக்கு என்னெ;னவோ மருந்து கொடுத்தீங்க இப்போ சாப்பிடணும் .. .. அப்போ சாப்பிடணும் .. .. இப்படிச் சாப்பிடணும் .. .. அப்படிச் சாப்பிட்ணும்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டீங்க. எப்படியும் என் புருஷனைக் காப்பாத்திடறதா வாக்குறுதி வேற கொடுத்தீங்க. இன்னிக்குக் காலை அவர் செத்துட்டார். இதுதான் நீங்க வைத்தியம் பாக்கற லட்சணமா ?

டாக்டர் ரொம்ப கூலா சொன்னார் ஸhரி மேடம் * என்னோட அறிவுரைகளை அவர் சரியா ஃபாலோ பண்ணியிருக்கமாட்டார் *

ஐயையோ * முழுசா ஒரு மாசம் நீங்க சொன்னபடிதானே அவர் மருந்து சாப்பிட்டு வந்தார் *

பார்த்தீங்களா .. .. இங்கேதான் தப்பு நடந்திருக்கு. நான் அவரை ரெண்டு மாசமில்லே தொடர்ந்து மருந்து சாப்பிடச்சொல்லி இருந்தேன் *

-------

எதுக்குடா போன வாரம் உன்னை ஸ்ட்ரெச்சர்ல வச்சுத் தள்ளிக்கிட்டுப் போனாங்க.. .?

எதிர் வீட்டுப் பெண்ணைப் பார்த்து ஸ்ட்ரக்சர் நல்ல இருக்குன்னு சொன்னதாலே பின்னிட்டாங்க

  • தொடங்கியவர்

டார்லிங் * என்னை ரெண்டு நிமிசம் அடியேன்.

மாட்டேன். அப்புறம் அடிக்கற கைதான் அணைக்குங்கற பழமொழியை நிரூபிக்கச் சொல்லுவீங்க .

__________________

ஆக்டிங் மானேஜரா இருந்தவருக்கு மானேஜர் போஸ்ட் கிடைச்ச உடனே எல்லோரையும் பயங்கரமா விரட்டி வேலை வாங்க ஆரம்பிச்சட்டாரு .. .. *

அப்ப ஓவர் ஆக்டிங் மானேஜரா ஆயிட்டார்னு சொல

__________________

  • தொடங்கியவர்

ஆபரேஷன் முடிஞ்சு வந்ததும் யானைக்கும் அடிசறுக்கும்-னு டாக்டர் சொல்லிட்டுப் போறாரே .. .. என்ன விஷயம் .. ?

அவர் ஆபரேஷன் செய்த பேஷண்ட் பிழைச்சுட்டாராம

__________________

உங்க அப்பாவோட பென்சன் நிதி வர்ற அன்னைக்கெல்லாம் உங்க அம்மா ஏன் கேவிக்கேவி அழறாங்க ?

அவுங்களுக்கு பயந்து நடந்து, மரியாதை கொடுத்திட்டிருந்த ஒரே ஆசாமி போயிட்டாரேங்கிற வருத்தம்தான் *

__________________

வானவில் சுட்ட எல்லா நகைசுவையும் நன்றாகவே இருக்கின்றன. தொடருங்கள்.

எனக்கும் வானவில்லுக்கும் ஒரு வாசகம் நன்றாகப் பொருந்தும். அது என்ன என்டா

"இன்றே சுடு, அதையும் நன்றே சுடு"

  • தொடங்கியவர்

வானவில் சுட்ட எல்லா நகைசுவையும் நன்றாகவே இருக்கின்றன. தொடருங்கள்.

எனக்கும் வானவில்லுக்கும் ஒரு வாசகம் நன்றாகப் பொருந்தும். அது என்ன என்டா

"இன்றே சுடு, அதையும் நன்றே சுடு"

சுட்டதை சுடச் சுடக் கொடுக்கணும் :P

ஆசிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.

வானவில்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...

வானவில்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்...

----------------------------------------------------------------------------------------------------------------------------------ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல வானவில்...

வானவில்: என் உங்களைச் சந்தோஷப் படுத்தனுமின்னுதான் பிட் வைத்து எழுதினேன் சார்...

Edited by சுட்டி

  • தொடங்கியவர்

டாக்டர் சர்தார் புது மருத்துவமனை திறந்தார்.. ஆனால் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த போது தச்சர், பெயிண்டர் எல்லோரையும் கடுமையாக திட்டவே.. தங்கள் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.

மூட்டு வைத்தியரின் அறைக்கதவு ஒரு கீல் இல்லாமல் இருந்தது.

காது டாக்டரின் அழைப்பு மணி வேலை செய்யவில்லை,,

சிறுநீரக மருத்துவர் அறையில் உள்ள டாய்லெட்டில் கதவே இல்லை..

கண் டாக்டர் அறைக்கதவில் கண்ணாடி இல்லை.. சாவித் துவாரமும் இல்லை..

முத்தாய்ப்பாக..டாக்டர் . சர்தார்.. psychotherapist என்பதை இவ்வாறு எழுதிச் சென்றுவிட்டனர்..

Dr. SARDAR...

Pscho The Rapist.

ஆசிரியர் : A=b , B=c அதனால் A=c இதே மாதிரி ஒரு உதாரணம் சொல்லுங்க

வானவில் : நான் டீச்சரை விரும்புறேன் டீச்சர் அவர் மகளை விரும்புறார் அதனால் நான் டீச்சர் மகளை விரும்புகிறேன்

  • தொடங்கியவர்

ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்.." ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?

ஃபாதர் சொன்னார்.." என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.

பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.

அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!

வேகமாக வாகனம் ஓட்டிய வழக்குக்காக ஒரு ஆசிரியர் நீதிமன்றம் வந்தார். மிகவும் தாமதமானதால் நடுவரை வேண்டினார்.

"அய்யா நான் ஒரு ஆசிரியன். பள்ளிக்கு மிகவும் தாமதமாவதால் தயவு செய்து என் வழக்கை முதலில் விசாரிக்க வேண்டுகிறேன்.."

மிகுந்த ஆர்வம் கொண்ட நடுவர், " நீங்கள் ஒரு ஆசிரியரா..!" எனக்கேட்டு, தன் நினைவுகளை பின்னோக்கி ஓடவிட்டார். பின் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக, "நல்லது ஆசிரியரே.. கூண்டில் ஏறி நின்று, 500 முறை 'நான் வேகமாக வாகனம் செலுத்த மாட்டேன்' என எழுதிக்கொடுத்துவிட்டு நீங்கள் போகலாம்...!!".

-----------

மாப்பி ; பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்..

1,2,3 கத்துத் தரப்போறேன்..

சுட்டி ; எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!

மாப்பி ; வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?

சுட்டி ; 4 சார்.

மாப்பி ; 8 க்கு முன் என்ன வரும்..?

சுட்டி ; 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!

சுட்டி ; எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சின்னா ; ஜாக், குயின், கிங், ஆஸ்.. எங்கப்பா சொல்லி குடுத்துருக்காங்க...!!!!

__________________

  • தொடங்கியவர்

ஒரு ஆசிரியை புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்தாள்..

முதன் முதலாக வகுப்பு எடுக்க ஒரு விவகாரமான் பிரிவுக்கு போக நேர்ந்தது. மாணவர்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள எண்ணி....

ஆசி ; மாணவ மணிகளே.. உங்கள் பெயரையும் பொழுது போக்கையும் ஒவ்வொருவராகச் சொல்லுங்கள் பார்க்கலாம்..

மா..1 ; நான் சுரேஷ்.. என் வீட்டுக்கு அருகில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. அதில் பந்து வைத்துக்கொண்டு விளையாடுவது என் பொழுதுபோக்கு//

ஆசி ; உடலுக்கு ஆரோக்கியம்... நல்ல பழக்கம்.. அடுத்து..

மா..2 ; நான் ரமேஷ்.. பந்துடன் நீரில் விளையாடுவேன்..

ஆசீ ; பரவாயில்லையே.. சுரேஷ் போலவே உனக்கும் பந்து விளையாட்டு தான் பிடிக்குமா..? அடுத்து..

மா...3 ; நான் மகேஷ்.. தண்ணீரில் பந்தோடு விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..!

ஆசி ; என்னதான் நண்பர்கள் என்றாலும் எல்லொரும் ஒரே மாதிரியா..? சரி.. மாணவிகளே.. நீங்கள் சொல்லுங்கள்...

மாணவி 1 ; நான் என் வீட்டருகே உள்ள நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் குளிப்பேன்.

ஆசி ; ( வெறுத்துப் போனவளாக..) முதலில் உன் பெயரைச் சொல்..

மாணவி 1 ; மங்காத்தா மார்க்க"பந்து"...!!!

__________________

புதிதாக மணமான் கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று.

30 ஆண்டுகள் உருண்டோடின..

ஒருநாள் மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன.

ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்..

" அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.."

" பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?"

" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!"

????????????????????????????

புஷ், மன் மோகன் சிங் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..

சிங் ; அடுத்த வருடம் சந்திரனுக்கு ஆள் அனுப்பப் போகிறோம்..

புஷ் ; நாங்கள் ஏற்கனவே அனுப்பி விட்டோம்..

சிங் ; நாங்கள் 100 பேரை அனுப்பப் போகிறோம்..

புஷ் ; அடேயப்பா.. அவ்வ்ளவு பேரா..? யார்..யார்..?

சிங் ; பிற்பட்டோர் 27 பேர்.

மிக பிற்பட்டோர்---17 பேர்

பெண்கள் ----------33 பேர்.

விளையாட்டு வீரர்-- 2 பேர்.

போர் விதவை------ 1 பேர்

சுனாமி பாதிப்பு------ 5 பேர்

பயங்கரவாத பாதிப்பு 5 பேர்

ஊனமுற்றோர்------- 5 பேர்.

அரசியல்வாதிகள்-----4 பேர்.. இடம் இருந்தால்..

விண்வெளி வீரர்-----1 பேர்.

--------

மஹான் சீடரிடம்..

மகனே... (?) எந்த தேவியின் பிரசாதம் மகிமை வாய்ந்தது தெரியுமா..?

தெரியும் குருவே... ராப்ரி "தேவியின்" லாலு "பிரசாதம்...!".

  • தொடங்கியவர்

புத்தாண்டு சிறப்பு விற்பனை..வாய்ப்பை நழுவ விடாதீர்.நாய்கள் சிறப்பு விற்பனை..

மிகக் குறைந்த விலையில் வீட்டு நாய்கள்... இரவில் குரைத்து உங்கள் தூக்கத்தை கெடுக்காது.. நீங்கள் காலையில் எழுப்பும் வரை தூங்கக் கூடியது..

எந்த உணவு கொடுத்தாலும் தின்னும்.. குழந்தைகள் என்றால் கொள்ளை விருப்பம்..

காட்டு ராணி வீட்டுப் பிராணி விற்பனை நிலையம்.

__________________________________________________ __

மாமியாரைக் கடிக்க பயிற்சி பெற்ற நாய்கள் விற்பனை முன்பதிவு முடிந்து விட்டது

கணவன் ; உங்க அப்பா பெரிய ஒலிம்பிக்ஸ் ரசிகரா இருக்கலாம்.. அதுக்காக உனக்கு தங்கத்துக்கு பதிலா பித்தளை நகை போட்டு அனுப்பியிருக்காரே.. இதுக்கு என்ன அர்த்தம்..?

மனைவி ; ம்ம்ம் .. நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்..!

************************************************** *****************

விஜய்காந்த் ரசிகர் ; அய்யோ தலைவா.. மோசம் போயிட்டோமே...

கேப்டன் ; என்னப்பா ஆச்சு..?

ரசிகர் ; நம்ம தர்மபுரி படத்தை "அனிமல் ப்ளானட்" சானல்ல ஒளிபரப்ப போறாங்களாம்...!

************************************************** ********************

ஒருவர் தன் மனைவியை பிரசவத்திற்க்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அலுவலகம் சென்றபின் மதியம் மருத்துவமனைக்கு தொடர்பு கொன்டார்.

ஆனால் தவறாக அந்த தொலைபேசி தொடர்பு கிரிக்கெட் ஸ்டேடியத்திற்க்கு சென்றுவிட்டது.

இது தெரியாமல் இவர்: "ஸார் அங்கே நிலைமை எப்படி?" என்றார்.

அவருக்கு ஆங்கிலத்தில் வந்த பதில் கேட்டு மயங்கியே விழுந்துவிட்டார்.

இதோ அவருக்கு வந்த பதில்:

"Fine!! Three are out, we hope to have the remaining seven out by lunch. And the last one out was a duck."

  • தொடங்கியவர்

ஒரு ஆள் முரட்டு நாய் ஒன்ன அழைச்சுக்கிட்டு வாக்கிங் போனான்.. நாய் அத்துக்கிட்டு போனதோட இல்லாம ஒரு பொம்பளய கடிச்சு வேற வச்சுடிச்சு.. அவ தன் புருஷனை இழுத்துக்கிட்டு வந்துட்டா.. ஓங்கு தாங்கா பெரிய மீசையோட அவனைப் பாத்ததும் நாய்காரனுக்கு பேதி புடுங்கிகிச்சு.. பணத்தைக் கொடுத்து அசமடக்கிடலாம்ன்னு மெதுவா மீசைக்காரனை தனியா அழைச்சுட்டுப் போனான்..

" 1000 ரூபாய்லே இந்த விசயத்தை சமாதானமா முடிச்சுக்கலாம்ன்னு பாக்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க..?"

மீசைக்காரன் நாய்க்காரனை ஏற இறங்க பார்த்துட்டு, பையில் இருந்து 1000 ரூபாயை எடுத்து கொடுத்துட்டு சொன்னான்..

" அடுத்த வாரமும் உன் நாயை அழைச்சுட்டு வா.. இன்னொரு 1000 ரூபாய் தரேன்.. என் மாமியார் வராங்க..!!!"

__________________

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கிடையே பெருந்தகராறு மூண்டது. கணவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் காவல்துறையும், அவர்களால் அமைதிப்படுத்த இயலாததால் துணைநிலை ராணுவமும் அழைக்கப்பட்டும் பலனில்லை. பின்னர் விவகாரம் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்து நீதிபதியே அங்கு நேரில் வருகை தந்தார்.. ஒவ்வொரு பெண்ணும் மற்றவர்களை குற்றம்சாட்டி கூச்சலிட்டுக்கொண்டிருக்க, நீதிபதி உரத்த குரலில் அறிவித்தார்...

அம்மணிகளே.. அமைதி.. உங்கள் வழக்கை விசாரிக்கவே நான் வந்திருக்கிறேன்.. ஒவ்வொருவராக உங்கள் தரப்பு நியாயத்தை கூறுங்கள்..! முதலில் இங்குள்ளவரில் யார் வயதில் மூத்தவரோ அவர் தன் தரப்பை கூறட்டும்...!!"

அவசரமாக அனைத்து குடியிருப்பு கதவுகளும் அடைக்கப்பட, போதிய ஆதாரம் இல்லாததால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது...!

__________________`

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.