Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெங்கு நுளம்புகளை வேட்டையாட வருகின்றன "டொக்ஸொரின் கைட்ஸ்" என்ற மிகப்பெரிய நுளம்புகள்

Featured Replies

டெங்கு நுளம்­பு­களை வேட்­டை­யாட வரு­கின்­றன "டொக்­ஸொரின் கைட்ஸ்" என்ற மிகப்­பெ­ரிய நுளம்­புகள்

 

 

mosquito.jpg

நாட்டில் தற்­போது டெங்கு நோயின் தாக்கம் கடு­மை­யாக அதி­க­ரித்­துள்ள நிலையில் அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும் டெங்கு  நோயா­ளர்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக உயர்ந்து கொண்டே  செல்­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் நாட­ளா­விய ரீதியில் 80 ஆயிரம் டெங்கு நோயா­ளர் கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் 230 பேர் டெங்கு நோய் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அத்­துடன் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் நிறைந்து காணப்­ப­டு­வ­துடன் இட நெருக்­க­டியும் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அரசாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை  எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டுக் கள் பர­வலாக எழுந்­துள்ள நிலையில் அர­சாங்கம் புது­வி­த­மான திட்­ட­மொன்றை தற்­போது நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக தகவல் கள் தெரி­விக்­கின்­றன.

அதா­வது டெங்கு நுளம்­பு­களை உண­வாக எடுத்துக் கொள்ளும் மற்­று­மொரு உருவத்தில் பெரிய அள­வி­லான நுளம்பு வகையை சூழலில் உலாவ  விடு­வதன் மூலம் டெங்கு நுளம்பின் பெருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இது தொடர்­பான பரி­சோ­த­னைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது குறித்து மருத்­துவ ஆய்வு நிறு­வ­னத்தின்  சார்பில் வைத்­திய நிபுணர் சாக­ரிக்கா சம­ர­சிங்க சர்­வ­தேச ஊட­க­மொன்­றுக்கு இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இந்தப் பரி­சோ­தனை மிகவும் பர­ப­ரப்­பின்றி மௌன­மான முறையில் முன்­னெ­டுக்கப்­ப­டு­கி­றது. இதில் நாங்கள் விளம்­ப­ரத்தை தேட­வில்லை. நாம் பரி­சோ­த­னையின் நிமித்தம் இந்த நுளம்­பு­களை பல்­வேறு பிர­தே­சங்களில் உலாவ விட்டோம். இரு­ளுக்கு சாபம்­வி­டாமல் மெழுகு திரி­யொன்­றை­யா­வது கொளுத்த வேண்டும் என்ற எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டை­யி­லேயே இதனை நாங்கள் முன்­னெ­டுக்­கின்றோம். நீண்­டகால ரீதியில் டெங்கு நுளம்­பு­களை அழிப்­ப­தற்கு இது ஒரு சிறந்த முறை­யாகும். இந்த மிகப்­பெ­ரிய நுளம்பின் பெயர் "டொக்­ஸொரின் கைட்ஸ்" ஆகும். இந்த நுளம்பு உரு­வாகி ஆரம்ப காலத்தில் மட்­டுமே டெங்கு நுளம்­பு­களை உண­வாக உட்கொள்ளும்.  

அதன் பின்­னரும் கூட மனி ­தனின் இரத்­தத்தை உறிஞ்­சாது.  மாறாக பூவி­லுள்ள தேனை உறிஞ்­சிக்­கு­டிக்கும். அத்­துடன் இலை போன்­ற­வற் றையே உட்­கொள்ளும். நுளம்­பு­களை கொல்லும் நுளம்பு என்றே இதனை ஒரு­சிலர் அறி­மு­கப்ப­டுத்­து­கின்­றனர். இதனால் ஒரு­போதும் மனி­தனை குத்தி இரத்­தத்தை குடிக்க முடி­யாது. காரணம் அதன் கொடுக்­கா­னது முன்­பக்­க­மாக வளர்ந்து பின் பக்கம் திரும்­பி­யி­ருக்கும்.  எனவே அதனால் மனி­தனைகுத்தி இரத்­தத்தை குடிக்க முடி­யாது என்று வைத்­திய நிபுணர்   பீ.பீ.சி. செய்திச் சேவைக்கு கூறி­யி­ருந்தார். 

தற்­போது இந்த நுளம்­புகள் பேரா­தனை தாவ­ர­வியல் பூங்கா, மீரி­கம குண்­ட­சாலை ஆகிய பிர­தேச சூழல்­களில் உலா­வ­வி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

""எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த நுளம்­பு­க­ளி­லி­ருந்து மட்டும் நாம் டெங்கு நுளம்­பு­களை அழித்து விட முடி­யாது. எமது சுற்றுச் சூழலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­பதன் மூலமும் டெங்கு நுளம்­புகள் பரவும் இடங்­களை அழிப்­பதன் மூல­முமே கட்­டுப்­ப­டுத்த முடியும். இதனை மக்கள் மனதில் கொள்ள வேண்­டி­யது அவ­சியம்"  என்றும்  மருத்­துவஆய்வு நிறு­வ­னத்தில் சார்பில் வைத் திய நிபுணர் சாக­ரிக்க சம­ர­சிங்க குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

இதே­வேளை இது தொடர்பில் சுகா­தார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேசரிக்கு தகவல் தரு­கையில்,

எமது மருத்­துவ ஆய்வு நிறு­வனம் இது தொடர்பில் பரி­சோ­தனை செய்து வருகி­றது. இந்த மிகப்­பெ­ரிய அள­விலான நுளம்­பா­னது இலைகளை உணவாக உட்கொள்­வ துடன் பூக்­களிலுள்ள தேனை உறிஞ்­சிக்­கு­டிக்கும். அதன்­ பின்னர் இந்த பெரிய நுளம்­புகள் மேலும் நுளம்­பு­களை உற்­பத்தி செய்யும் அவ் வாறு உற்­பத்தி செய்­யப்­படும் நுளம்­புகள் தமது வாழ்க்­கையின் ஆரம்ப கட்டத்தில்

டெங்கு நுளம்­பு­களை உண­வாக உட்­கொள்ளும். எனவே இதன் மூலம் டெங்கு நுளம்­பு­களை கட்­டுப்­ப­டுத்த முடி யும். 

கேள்வி : இந்த நுளம்­புகள் மனி­தனின் இரத்­தத்தை குடிக்­காதா?

பதில் : இல்லை. ஆய்­வு­களின் மூலம் இந்த நுளம்­புகள் மனி­தனை குத்தி இரத்­தத்தை உறிஞ்­சாது என்­பது   உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

கேள்வி : வேறு நாடு­களில் இந்த முறைமை பின்­பற்­றப்­ப­டு­கின்­றதா?

பதில் :    ஐரோப்­பிய நாடுகள் உள்­ளிட்ட  பல்வேறு நாடுகளில் இந்த முறைமை பின்பற்றப்பட்டு வருகிறது. இது  வெற்றியும் அளித்துள்ளது.

கேள்வி : தற்போது இந்த நுளம்புகளை அரசாங்கம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உலாவவிட்டுள்ளதா?

பதில் : உத்தியோகபூர்வமாக இதுவரை உலாவ விடவில்லை.  எனினும் பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

கேள்வி : இந்த நுளம்புகள் வெளிநாடுக ளிலிருந்தா கொண்டுவரப்படுகின்றன?

பதில் : அவ்வாறு தான் முதலில் எண்ணி னோம்.  ஆனால் சிங்கராஜ வனத்தில் தேவைக்கு அதிகமாகவே இந்த நுளம்புகள்  காணப்படுகின்றன என்றார்.

http://www.virakesari.lk/article/21704

  • கருத்துக்கள உறவுகள்

டெங்கு நுளம்­புகளை உண்பதால் இந்த  "டொக்­ஸொரின் கைட்ஸ்" நுளம்புகளுக்கு டெங்குநோய் வந்து அவை அழிந்துவிடாதா... ?? :shocked: :grin:

image022-192x300.jpg

Toxorhynchites (tox-o-rine-ky-tees)

Members of this species breed primarily in tree holes or artificial containers. Unlike all other mosquitoes, the female does not take a blood meal for egg production. The long, curved proboscis is for nectar feeding only. Therefore, they are not a nuisance or have any medical impacts on human populations; however, in the larval stage, they are known to be predacious on other mosquito and aquatic insect larvae.

http://www.celebrationcdd.org/services/mosquito-control/types-of-mosquitoes

Toxorhynchites

From Wikipedia, the free encyclopedia
 
 
Toxorhynchites
Toxorhynchites speciosus 01 L.D..jpg
Toxorhynchites speciosus
Toxorhynchites speciosus 03 L.D..jpg
 

Toxorhynchites, also called "elephant mosquito", or "mosquito eater" is a cosmopolitan genus of mosquitoes. The genus includes the largest known species of mosquito, and it is among the many kinds of mosquito that do not consume blood. The adults subsist on carbohydrate-rich materials, such as honeydew, or saps and juices from damaged plants, refuse, fruit, and nectar.[1]

The larvae of Toxorhynchites prey on the larvae of other mosquitoes and similar nektonic prey. In this respect, they contrast with blood-sucking species of mosquitoes. Toxorhynchites larvae live on a protein- and fat-rich diet of aquatic animals such as mosquito larvae. They have no need to risk their lives sucking blood in adulthood, having already accumulated the necessary materials for oogenesis and vitellogenesis.

Most species occur in forests. The larvae of one jungle variety, Toxorhynchites splendens, consume larvae of other mosquito species occurring in tree crevices, particularly Aedes aegypti. The adults of these mosquitoes are larger than Aedes and are harmless to humans.

Unlike Toxorhynchites mosquitoes, detritus feeder mosquitoe female larvae rely on blood meals to produce eggs more plentifully than a diet of nectar would permit. And even though blood sucking is a risky strategy that entails more casualties, and they could in principle subsist on nectar and the like as their males generally do, the risk is outweighed on average by the increase in the number and size of yolk-rich eggs that such protein-rich food permit.

Environmental scientists have suggested that Toxorhynchites mosquitoes be introduced to areas outside their natural range in order to fight dengue fever. This has been historically practiced, nevertheless errors have been made, when T. splendens was introduced to new areas, but actually was T. amboinensis.[2]

 

Aedes aegypti

From Wikipedia, the free encyclopedia
 
 
Yellow fever mosquito
Aedes aegypti.jpg
Adult
Aedes aegypti larva.jpg
Larva
 

Aedes aegypti, the yellow fever mosquito, is a mosquito that can spread dengue fever, chikungunya, Zika fever, Mayaro and yellow fever viruses, and other diseases. The mosquito can be recognized by white markings on its legs and a marking in the form of a lyre on the upper surface of its thorax. This mosquito originated in Africa,[2] but is now found in tropical and subtropical regions throughout the world.[3] The average wing length of female Ae. aegypti mosquitoes varies greatly (1.67–3.83 mm in a Peruvian habitat).[4]

https://en.wikipedia.org/wiki/Toxorhynchites

https://en.wikipedia.org/wiki/Aedes_aegypti

இந்த மிகப்பெரிய நுளம்புகளுக்கு இரத்தம் வழங்குவது யார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.