Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்குலக நாடுகளின் தலையீட்டுடனான அரசியலமைப்புக்கு அனுமதிக்க முடியாது...//அஸ்கிரிய பீடத்தின் பிரதம செயலாளர் தம்மாநந்த தேரர்

Featured Replies

மேற்­கு­லக நாடு­களின் தலை­யீட்­டு­டனான அர­சி­ய­ல­மைப்­புக்கு அனு­ம­திக்க முடி­யாது

 

நேர்காணல்: லியோ நிரோஷ தர்ஷன்
படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்

 

புதிய அர­சி­ய­ல­மைப்பை எமக்கு விரும்­பி­ய­வாறு செய்­து­கொண்டால் அதில் பிரச்­சினை இல்லை. மேற்­குலக நாடு­களின் தலை­யீ­டுகள் ஜெனீ­வாவில் பேசப்­ப­டு­கின்ற விட­யங்கள் மற்றும் ஜீ.எஸ்.பி. சலு­கைக்­காக விதிக்­கப்­ப­டு­கின்ற நிபந்­த­னைகள் இவற்றை மையப்­ப­டுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது. ஆகவே ஒற்­றை­யாட்சி மற்றும் பௌத்த முன்­னு­ரிமை இவற்­றுக்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது திருத்­தமோ கொண்­டு­வ­ரப்­பட்டால் அதற்கு அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என்­பதே அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து உள்­ளிட்ட மகா­சங்­கத்­தினர் நிலைப்­பா­டாகும் என அஸ்­கி­ரிய பீடத்தின் பிர­தம செய­லாளர் தம்­மா­நந்த தேரர் தெரி­வித்­தார்.

பேச்சுவார்த்­தைகள் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்டும் என்ற இரா. சம்­பந்­தனின் நிலைப்­பாட்டை வர­வேற்­கின்றோம். ஆனால் கூட்­ட­மைப்பின் ஏனைய உறுப்­பி­னர்கள் மீது நம்­பிக்கை வைக்க முடி­யாது. ஏனென்றால் ஒரு நீதி­ய­ர­ச­ராக இருந்த வடக்கு முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வரன் இன்று மிகவும் மோச­மான அடிப்­ப­டை­வா­தி­யாக செயற்­ப­டு­கின்றார். நாட்டின் மீது பற்­றுள்ள அனு­ப­வசார் தலை­வர்கள் தமிழ் -– சிங்­கள இரு சமூ­கத்­திலும் கிடை­யாது என்­பதே உண்­மை­யான தற்­போ­தைய நிலை­மை­யாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விஷேட செவ்­வி­யி­லேயே அஸ்­கி­ரிய பீடத்தின் பிர­தம செய­லாளர் தம்­மா­நந்த தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்,

கேள்வி: புதிய அர­சி­ய­லமைப்பு தொடர்பில் மகா சங்­கத்­தினர் என்ற வகையில் உங்­க­ளது நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ளது?

பதில்: புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான கருத்து எமது நாட்டில் நீண்­ட­கா­ல­மாக காணப்­ப­டு­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை கொண்டு வரு­வ­தற்கு இதே போன்று முயற்­சி­களை எடுத்த போது அதனை பாரா­ளு­மன்­றத்தில் கிழித்து எறிந்து கடும் எதிர்ப்பை ஐக்­கிய தேசிய கட்சி வெளியிட்­டது. அதன் பின்­னரும் பல முறை அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்பு கருத்­துக்கள் வெளிப்­பட்­டன. குறிப்­பாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜன­ப­தி­பதி முறை­மையை ஒழித்து புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை கொண்டு வரு­வ­தாக உறு­தி­மொ­ழி­களும் வழங்­கப்­பட்­டன. கட்­சி­களின் தலை­வர்­களும் ஆட்­சியில் இருந்த தலை­வர்­க­ளுமே இவ்­வா­றான உறு­தி­மொ­ழி­களை வழங்­கினர். எவ்­வா­றா­யினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தொடர்­பான கருத்­தா­டல்கள் பல தரப்­பினர் மத்­தி­யிலும் காணப்­பட்­டது உண்மை .

அதன் பின்­னரும் 2015 ஆம் ஆண்டில் தேர்­தலின் பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் கடு­மை­ யாக பேசப்­பட்­டது. இத­னடிப்படையில் தற்­போதைய அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை கொண்டு வந்து நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாக ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருந்தார். அதே போன்று ஐக்­கிய தேசிய கட்சி தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான அறி­விப்பை செய்­தி­ருந்­தது. ஆனால் வாக்­க­ளித்த மக்கள் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான நிலைப்­பாட்டிலி ருந்து வாக்­க­ளிக்­க­வில்லை என்­பதே உண்­மையாகும். மாறாக வாழ்­வா­தார பிரச்­சி­னை­க­ளுக்­கான உறு­தி ­மொ­ழிகள் மற்றும் சைக்கிள் கொடுப்­ப­தற்­கான வாக்­கு ­று­திகள் உள்­ளிட்ட புதிய எதிர்­பார்ப்­பு­க­ளுக்­கா­கவே மக்கள் வாக்­க­ளித்­தனர்.

தேர்­தலில் கிடைத்த அனைத்து வாக்­கு­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­காக வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வ­தாயின் அது தவ­றாகும். எவ்­வா­றா­யினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்டு வரு­வ­தாக ஆரம்­பத்தில் அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்த நிலையில் அதனை ஆரம்­பத்தில் நாங்கள் எதிர்க்­க­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­றாலும் சரி தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப் பில் திருத்தம் கொண்டு வரு­வ­தென்­றாலும் சரி கட்­ட­ாய­மாக இடம்­பெற வேண்­டிய விட­யங்கள் சில­வற்றை நாங்கள் தொடர்ந்தும் வலி­யு­றுத்தி இருந்தோம்.

ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் செயற்­படும் அனை­வ­ருக்கும் இந்த விட­யத்தை நாங்கள் வலி­யு­றுத்தி இருந்தோம். ஒற்­றை­யாட்­சிக்கு பாதிப்பு ஏற்­படக்கூடாது, பௌத்த மதம் தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பில் காணப்­படும் 9 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தில் எவ்­வி­த­மான மாற்­றத்­தையும் செய்யக்கூடாது, 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு ஊடாக வழங்­கு­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் போன்­றவை தொடர்பில் எமக்கு உடன்­பா­டுகள் இல்லை. குறிப்­பாக 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு இந்­தி­யாவின் தலை­யீட்டில் கொண்டு வரப்­பட்ட ஒன்­றாகும். இதில் இந்­தி­யாவின் உள்­நோக்­கங்கள் பல காணப்­பட்­டன. குறிப்­பாக இர­ணுவில் விமான ஓடு­பாதை மற்றும் திரு­கோ­ண­மலை எண்ணை குதங்கள் உள்­ளிட்ட இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு தொடர்­பான விட­யங்­களும் அந்த ஒப்­பந்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. எனவே தான் கடும் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் பல­வந்­த­மாக இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் அப்­போது கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இந்த வர­லாற்றை எம்மால் மறந்­து­விட முடி­யாது. ஆகவே இந்த மூன்று விட­யத்­திலும் எவ்­வி­த­மான மாற்­றத்­தையும் கொண்டு வரக்கூடாது என்­பதே மகா சங்­கத்­தினர் என்ற வகையில் அர­சாங்­கத்­திற்­கான எமது வலி­யு­றுத்­த­லாக அமைந்­தது.

அதே­போன்று தேர்தல் முறை­மை­யி­னாலும் பல்­வேறு மோதல்கள் காணப்­ப­டு­கின்­றன. விருப்­பு­ வாக்­கு­ மு­றை­யி­னா­லேயே இந்த பிரச்­சினை. எனவே தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்டு வரு­வ­தற்கு நாங்கள் முழு­மை­யான ஆத­ரவை வெளி­யிட்­டி­ருந்தோம். ஆனால் அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் முக்­கிய விட­யங்­களை மறந்­து­விட்டு வழி­த­வ­றிய பாதையில் செல்­வதை போலவே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டுகள் அமைந்­தது. எனவே தான் எமக்கு வெறுப்பும் எதிர்ப்பும் ஏற்­பட்­டது.

கேள்வி: இலங்­கையில் தேசிய பிரச்­சினை உள்­ளது. அது தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சினை என்­பதை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?

பதில்: தேசிய பிரச்­சி­னையில் ஆரம்ப காலத்­திற்கு செல்ல வேண்­டி­ய­தில்லை. பல்­லின சமூ­கங்கள் வாழ்­கின்ற நாட்டில் மோதல்கள், முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வது பொது­வான விட­ய­மாகும். இலங்­கை­யிலும் இவ்­வா­றான மோதல் நிலையே காணப்­ப­டு­கின்­றது. எனவே இவ்­வா­றான முரண்­பா­டுகள் காணப்­பட்­டாலும் ஒற்­று­மை­யாக சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் இலங்­கையில் வாழ்ந்­துள்­ளனர். ஆனால் பிரித்­தா­னியா உள்­ளிட்ட சில வெளி­நா­டுகள் தமது ஆட்சிக் கொள்­கையின் தேவை கருதி இலங்­கையில் இன மோதல்­களை அதி­க­ரிக்கச் செயற்­பட்­டனர். இதன் விளை­வாக 18 மற்றும் 19 ஆம் நூற்­றாண்­டு­களில் தமிழ், சிங்­கள மோதல்கள் தீவி­ர­மா­கி­யது. இரு தரப்பு அர­சியல் தலை­மைத்­து­வங்­களும் தமது அர­சியல் இருப்பை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­காக பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு பதி­லாக தூண்டி விடும் செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுத்­தனர்.

இறு­தியில் நாட்டில் பாரிய போர் ஏற்­ப­டவும் கார­ண­மா­கி­யது. நடந்­த­வற்றை சிந்­தித்தால் அழிந்­தது தமி­ழினம் மாத்­திரம் அல்ல சிங்­கள இனமும்தான். அதுமாத்­திரம் அல்ல இரு இனங்­களின் கலா­சாரம், பொரு­ளா­தாரம் மற்றும் எதிர்­காலம் உள்­ளிட்ட அனைத்தும் அழிந்­து­போ­யின. இதில் நன்மை அடைந்­த­வர்கள் மீண்டும் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றனர். எவ்­வா­றா­யினும் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக வழங்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­க­ளினால் எவ்­வி­த­மான பலனும் வடக்­கிற்கு கிடைக்கப் போவ­தில்லை. மாறாக தென்­னி­லங்கை மாகாண சபைகள் அந்த அதி­கா­ரங்­களை பெற்று மேலும் மோச­டி­களில் ஈடு­படும். இதனை நாங்கள் அறிந்­துள்ளோம். பொலி­ஸாரின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தலை­யி­டுதல், காணி­களை மோசடி செய்தல் என எத்­தனை முறைப்­பா­டுகள் ஒரு நாளைக்கு பதி­வா­கின்­றன. எனவே இவ்­வா­றான மோதல்கள் அநா­வ­சி­ய­மா­னவை. மேற்­கு­லக நாடு­களின் தேவைகள் மற்றும் நிபந்­­த­னை­க­ளுக்­காக நாம் செயற்­பட வேண்­டி­ய­தில்லை.

பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வது சர்­வ­தே­சத்தின் தேவை­யாக உள்­ளது. இந்­திரா காந்­தியின் காலப்­ப­கு­தி­யிலும் இவ்­வா­றான செயற்­பா­டுகள் காணப்­பட்­டன.

ஓர் இன­மாக முன்­னோக்கி செல்லும் பாதையை தடுக்கும் வகை­யி­லேயே பல்­வேறு நட­வ­டிக்­கைகள் நாட்டில் காணப்­ப­டு­கின்­றன. தற்­போது முஸ்லிம் மக்­க­ளுடன் மோதல்­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான செயற்­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றன. இன­வா­திகள், மத­வா­திகள், அடிப்­ப­டை­வா­திகள் என்று மகா சங்­கத்­தி­ன­ருக்கு கூச்­ச­லி­டு­கின்­றனர். நாட்டில் தமி­ழர்கள் வாழ்­கின்­றனர். பெரும்­பான்­மை­யாக சிங்­க­ள­வர்கள் வாழ்­கின்­றனர். அத்­துடன் முஸ்லிம் மக்­களும் வாழ்­கின்­றனர். என்­பதை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கின்றோம். தமிழ் மக்­களின் கலா­சாரம் சிங்­கள மக்­க­ளுடன் ஒத்­துப்­போ­கின்­றது. இந்த இரு இனமும் வர­லாற்றில் எவ்­வி­த­மான ஒற்­று­மை­யுடன் வாழ்ந்­தன என்­பது ஏடு­களில் காண­மு­டி­கின்­றது. கண்டி இராஜ்­ஜி­யத்தை எடுத்­துக்­கொண்டால் கீர்த்தி ஸ்ரீ இரா­ஜ­சிங்க மன்­ன­ரினால் தான் பௌத்த சாசனம் பாது­காக்­கப்­பட்­டது. எனவேதான் இன்றும் ஒவ்­வொரு நாளும் தலதா மாளி­கையில் மூன்று வேளை பூஜை வழி­பா­டு­களின் போது அந்த தமிழ் மன்­னனை நினை­வு­கூ­ரப்­ப­டு­கின்­றது. தங்­கப்­பாத்­தி­ரத்தில் அவ­ருக்கு சிறப்பு மரி­யாதை செய்­யப்­ப­டு­கின்­றது. மன்­னரின் கிரீடம் வைக்­கப்­பட்ட இடத்தை புனித இட­மாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

எனவே தமி­ழர்­க­ளுக்­கு­ரிய மரி­யா­தையை நாங்கள் தொடர்ந்தும் வழங்­கு­கின்றோம். பௌத்த பிக்­குகள் என்ற வகையில் மற்ற இனங்­க­ளுக்கு அநீதி ஏற்­படும் வகையில் செயற்­பட முடி­யாது. லக்ஷ்மன் கதிர்­கா­ம­ருக்கு பௌத்த பிக்கு ஒரு­வரின் சிறு­நீ­ரகம்தான் இறுதிக் கால­கட்­டத்தில் உயிர்வாழ கார­ண­மா­கி­யது. சர்­வ­தே­சத்­திற்கு பௌத்த மத சிறப்­பு­களை கொண்டு சென்­றதும் அவர் தான். எனவே இன­வாதம் என்ற பிரச்­சினை எமக்­கில்லை. மேற்­கு­ல­கத்தின் நோக்­கங்­களே இவை­யாகும். புதிய அர­சி­ய­ல­மைப்பும் எமக்கு விரும்­பி­ய­வாறு செய்து கொண்டால் அதில் பிரச்­சினை இல்லை. மேற்­குலக நாடு­களின் தலை­யீ­டுகள் ஜெனீ­வாவில் பேசப்­ப­டு­கின்ற விட­யங்கள் மற்றும் ஜீ.எஸ்.பி. சலு­கைக்­காக விதிக்­கப்­ப­டு­கின்ற நிபந்­த­னைகள் இவற்றை மையப்­ப­டுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது.

கடன் சுமையில் உள்ள சிறிய நாடு என்ற வகையில், அவர்­களை மீறி செயற்­பட முடி­யாது. இந்து சமுத்­தி­ரத்தில் உள்ள முக்­கி­ய­மான மையமே இலங்­கை­யாகும். ஆசி­யாவில் இந்து சமுத்­தி­ரத்தை யார் கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்­தி­ருக்­கின்­றார்­களோ அவர்­களே ஏழு மாச­முத்­தி­ரங்­க­ளையும் ஆழ்­வார்கள் என 200 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்க கடற்­ப­டையின் அதி­காரி ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார். எனவே ஏழு மாச­முத்­தி­ரத்தின் சாவி இந்து சமுத்­தி­ரத்தில் இலங்கை மையத்தில் உள்­ளது. இதனால் சீனா எம்மை நெருங்­கி­யது. இதனை மேற்­குலகம் ஏற்­றுக்­கொள்ளவில்லை. இந்­தி­யா­விற்கு பிரச்­சி­னை­யா­னது. இந்த பூகோள அர­சி­யலில் இருந்து எவ்­வாறு தப்­பிக்க முடியும் என்­பதை இலங்கை வாழ் அனைத்து இனங்­களும் ஒன்­றி­ணைந்து சிந்­திக்க வேண்டும்.

 

கூட்­ட­மைப்பை சந்­திக்கத் தயார்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எம்மை சந்­திக்க வரு­வ­தாக கூறி­யுள்­ளனர். மிகவும் மகிழ்ச்­சி­யான விட­ய­மாகும். பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான வழியே அது. மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் சார்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரை வர­வேற்போம்.எவ்­வா­றா­யினும் இரு தரப்பு நிலைப்­பா­டு­களும் ஒன்­றுக்கு ஒன்று வேறு­பட்­டது. ஆனால் பேச்சுவார்த்தை என்­பது முக்­கி­ய­மாகும். அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் நாம் வலி­யு­றுத்­திய விட­யங்களை கருத்தில் கொள்­ளாது வேறு திசையில் பய­ணித்­த­மை­யி­னா­லேயே எதிர்ப்பை வெளியிட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை நிறுத்­தினோம். சிங்­க­ளத்தில் ஒரு வாசகம் உள்­ளது. அதா­வது தெரி­யாத பேயை­விட தெரிந்த பிசாசு நல்­லது என்­ப­தாகும். எனவேதான் தெரி­யாத புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்று கூறினோம்.

கேள்வி: தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்­கான உங்­க­ளது தீர்வு யோசனை என்ன?

பதில்: தமிழ், சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு வாழ்­வா­தாரம் உள்­ளிட்ட பல பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றை கருத்தில் கொண்டு ஆராய்ந்து தீர்­வு­களை வழங்க வேண்டும். ஆனால் அர­சி­யல்­வா­திகள் தமது இருப்பை தக்கவைத்­துக் ­கொள்­வ­தற்­காக வேறு பிரச்­சி­னை­களை உரு­வாக்­கின்­றனர். உள்­நாட்டுப் போர் நிறை­வ­டைந்த பின்னர் என்ன நடந்­துள்­ளது என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்த விட­ய­மாகும். தமிழ் மக்கள் தொடர்ந்தும் கைதி­க­ளாக வைக்­கப்­பட்­டுள்­ளனர். அர­சாங்­கத்தின் உத­விகள் அந்த மக்­களை சென்­ற­டை­வதில் வடக்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தடை­யாக உள்ளார். இவ்­வா­றான நிலை­மையே வடக்கில் காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் இருப்பை தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்­கா­கவே இவர்கள் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றனர். சாதா­ரண பொதுமக்­க­ளுக்கு பிரச்­சினை இல்லை. போர் முடிந்த பின்னர் வடக்கு மக்­களை சந்­தித்­துள்ளோம். அவர்­களின் தேவைகள் வேறு. எம்­முடன் தமிழ் அமைப்­புகள், இந்து சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கின்­றனர். பிள­வு­களை ஏற்­ப­டுத்த பல திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. மத மாற்றம் இதில் முக்­கி­ய­மா­ன­தொன்­றாக காணப்­ப­டு­கின்­றது. தமி­ழின அழிப்பு வடக்கு மற்றும் கிழக்கில் மிகவும் மோச­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை நாம் அறிவோம். இவ்­வா­றான அச்­சு­றுத்தல் காணப்­ப­டு­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பேசு­கின்றோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முடியும். ஆனால் தமிழ், சிங்கள மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் தீர்வு யோச­னை­களில் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றதா? என்­பது கருத்தில் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். ஆனால் மேலும் பொலிஸ் மற்றும் காணி அதிகா­ரங்களை சிங்­கள அர­சி­யல்­வா­திகள் பெற்­றுக்­கொண்டு சிக்கல்­ களை உரு­வாக்­கவே முற்­ப­டு­கின்­றனர். கிழக்கை எடுத்­துக்­கொண்டால் தமிழ் மக்­க­ளுக்கு எந்­த­ளவு நெருக்­க­டி­களும் பிரச்­சி­னை­களும் உள்­ளது என்­பதை அறிய முடி­கின்­றது.

இவ்­வா­றான நிலை­மை­க­ளினால்தான் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்று கூறு­கின்­றன. இதனை அனை­வரும் புரிந்­து­கொள்ள வேண்டும். அர­சி­ய­ல­மைப்பில் இடம்­பெற வேண்­டிய விட­யங்­களை நாங்கள் ஏற்­க­னவே குறிப்­பிட்­டுள்ளோம். இலங்கை முதலில் ஒரு நாடாக இருக்க வேண்டும். வர­லாற்றில் பிரிந்­தி­ருந்­தி­ருக்­கலாம். ஆனால் தற்­போது அது சாத்­தி­யப்­ப­டாது. ஒற்­றை­யாட்சி என்­பது முக்­கி­ய­மா­ன­தாகும். லால் விஜே­நா­யக்க அர­சி­ய­ல­மைப்பு குழுவின் 6 அறிக்­கைகள் வந்­துள்­ளன. எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மற்­று­மொரு அறிக்கை வெளி­வ­ர­வுள்­ளது. இதில் ஒற்­றை­யாட்சி என்­ப­தற்கு ஆறு வரை­வி­லக்­க­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. பௌத்த மத விவ­கா­ரத்­திற்கு ஏழு வரை­வி­லக்­க­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன.   

ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு இன்னும் வரைபை கூட செய்யவில்லை என்றே கேட்டால் கூறு­வார்கள். ஆனால் அடிப்­ப­டை­யான விட­யங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. ஆகவே நோக்­கங்கள் வெளிப்­பட்­டுள்­ளன. நாம் கூறி­யவை இடம்­பெறவில்லை. எதிர்­கா­லத்தில் பாரிய மோதல்­க­ளுக்கு உத்­தேச புதிய அர­சி­ய­ல­மைப்பு கார­ண­மாக அமை­யலாம் என்ற அச்­சத்­துடன் அதனை எதிர்த்தோம். புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்று அறி­வித்தோம். நியா­ய­மான அடிப்­ப­டை­யான விட­யத்தில் இருந்து கொண்டுதான் புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை என்ற நிலைப்­பாட்­டிற்கும் வந்தோம்.  

 

கேள்வி: 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் முற்­றாக அர­சி­ய­ல­மைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா ?

பதில்: ஆம் அவ்­வா­றா­ன­தொரு நிலைப்­பாடு மகா சங்­கத்­தினர் என்ற வகையில் எமக்­குள்­ளது. மாகாண சபை முறைமை என்­பது வெறு­மை­யான ஒன்று என்­பதே அதற்கு கார­ண­மாகும். பணத்தை சீர­ழிக்கும் அர­சி­யல்­வா­தி­களின் பிள்­ளை­க­ளையும் உற­வி­னர்­க­ளையும் அதி­கா­ரங்­க­ளுடன் வைத்­தி­ருக்கும் இட­மா­கவே மாகாண சபைகள் தற்­போது காணப்­ப­டு­கின்­றன. இந்­தியா எமது அனு­ம­தி­யின்றி பல­வந்­த­மாக கொடுத்த ஒன்­றா­கவே இது காணப்­ப­டு­கின்­றது. பல வரு­ட ­கா­ல­மாக நாட்டில் 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நடை­மு­றையில் இருந்­தாலும் மக்கள் விடு­தலை முன்­னணி இதனை ஆரம்­பத்தில் கடு­மை­யாக எதிர்த்­தது. 

சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான அப்­ போ­தைய ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக இலங்கை -– இந்­திய ஒப்­பந்­தத்­திற்கு எதி­ராக போராட்டம் நடத்­தி­யது. ஆனால் மக்கள் விடு­தலை முன்­னணி உள்­ளிட்­ட­வர்கள் பல்­வேறு கார­ணங்­க­ளுக்கு அமை­வாக மாகாண சபைக்குள் உள்­ளனர். மாகாண சபை முறைமை என்­பது தோல்­வி­ய­டைந்த ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றா­யினும் மாகாண சபை முறைமை தேவையா என்­பது தொடர்பில் மீளாய்வு செய்­யப்­பட வேண்டும் என ஜனா­தி­ப­தியும் அண்­மையில் தெரி­வித்தார். ஆனால் 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பை எதிர்க்­கின்றோம். 

கேள்வி: பௌத்த மதத்­திற்கு அர­சி­ய­ல­மைப்பில் உள்ள சிறப்­பு­க­ளுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றுக்கு சென்றால் அதனை நீங்கள் ஆத­ரிப்­பீர்­களா?

பதில்: புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு செல்­வ­தாயின் அதில் மகா சங்­கத்­தி­ன­ருக்கு எவ்­வி­த­மான பிரச்­சி­னை யும் இல்லை. ஆனால் பௌத்த மத­த்திற்­கான சிறப்­பு கள் மற்றும் ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்­துக்கள் ஏற்­படக் கூடாது. அவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­பட்டால் எதிர்ப்பை வெளி­யி­டுவோம். பௌத்த மதத்­திற்கு சிறப்­புகள் வழங்­கு­வ­தாக கூறி மனித உரி­மைகள் ஊடாக ஏனைய மதங்­க­ளுடன் சம நிலைக்கு கொண்டு வரு­வ­தாயின் அது சிறப்­பு­களை குறைக்கும் செய­லாகும். இது­வ­ரையில் பிர­ஜைகள் என்ற அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட இடத்தில் நபர்கள் என புதிய அர­சி­ய­ல­மைப்பு யோச­னை­களில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. 

இத­னூ­டாக வெளி­நா­டு­களில் இருந்து வந்து கூட மத பிர­சார செயற்­பா­டு­களில் விரும்­பி­ய­வாறு செயற்­பட முடியும். கடந்த காலப்­ப­கு­தி­யிலும் தற்­போதும் நாட்டில் அடிப்­ப­டை­வா­தி­களின் பிரச்­சி­னைகள் பாரி­ய­ளவில் காணப்­ப­டு­கின்­றன. இந்து மதத் தலை­வர்­க­ளுக்கு பிக்­கு­க­ளுக்கு போன்று சிவில் அதி­கா­ரங்கள் கிடை­யாது. எனவே அடிப்­ப­டை­வா­தி­களின் பிரச்­சி­னை­களை எம்­மிடம் வந்து கூறு­கின்­றனர். மத ஸ்தலங்கள் தாக்­கப்­பட்­ட­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. அந்த அனைத்து இடங்­க­ளுமே அடிப்­ப­டை­வா­தி­களின் மத பிர­சார இடங்­க­ளாகும். மட்­ட­க­ளப்பு, மன்னார் என கிழக்­கிலும் வடக்­கிலும் இந்த பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் இந்தப் பிரச்­சி­னை­யில் பௌத்த பிக்­கு­களை சாடு­கின்­ற னர். 

மத நல்­லி­ணக்­கத்­திற்கு தடை­யாக இல்லை. ஆனால் அடிப்­ப­டை­வா­திகள் பல­வந்­த­மாக மத பிர­சா­ரங்­களை செய்யும் போது அதனை அனு­ம­திக்க முடி­யாது. நீர்­கொ­ழும்பில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது. வடக்கு, கிழக்கில் இந்­துக்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது. இதன் போது பௌத்த மதத்­திற்கு சிறப்பு என்­பது கவ­னத்தில் கொள்ள முடி­யாது. பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்­கு­வதில் தமி­ழர்­க­ளுக்கும் உடன்­பா­டில்லை. எம்மை சந்­திக்க வந்த பலரும் கூறு­கின்ற விடயம் இதுதான். ஏனென்றால் அந்த அதி­கா­ரங்கள் இல்­லா­ம­லேயே பாரிய நெருக்­க­டி­களை கிழக்கில் எதிர்கொள்­வ­தாக தமிழ் சமூக தலை­வர்கள் கூறு­கின்­றனர். கடந்த கால மோதல் கார­ணங்­க­ளால் கிழக்கில் சிங்­கள மக்கள் காணி­களை விட்டு வந்­தனர். தமி­ழர்கள் காணி­களை விட்டு வேறு இடங்­க­ளுக்கு சென்று ஒளிந்து கொண்­டனர். அந்த காணி­களில் தற்­போது புதிய உலகம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. 

கிழக்கில் தனிப் பிராந்­திய ஆட்­சியை உரு­வாக்கும் நட­வ­டிக்­கையில் முன்­னெ­டுப்­பு­களும் இடம்­பெறு­கின்­றது. இவ்­வா­றான விட­யங்­களை கருத்தில் கொண்டுதான் சமஷ்டி போன்ற முறைமை நாட்­டிற்கு வேண்டாம் என்ற கூறு­கின்றோம். சர்­வ­தேச ரீதியில் உள்நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட தூண்­டு­தல்­க­ளினால் தமிழ் – சிங்­கள இளை­ஞர்கள் ஏரா­ள­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர். 

அந்த அழி­வு­களை மறந்து விடக்கூடாது. வடக்கு மக்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது. அர­சி­யல்­வா­திகள் அந்த மக்­களை எழும்ப விடாது மிதித்துக் கொண்­டுள்­ளனர். கடந்த அர­சாங்கம் கூட முறை­யாக எத­னையும் செய்யவில்லை. இலக்­கு­களை மறந்து விட கூடாது. 

கேள்வி: வடக்கு, கிழக்கு இணைப்பில் சுய­நிர்­ணய உரிமை வேண்டும் என வலி­யு­றுத்­திய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தற்­போது ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வு வேண்டும் என நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொண்­டுள்ளார். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் ஊடாக தீர்வுத் திட்­டத்தை அடைவோம் என்றும் கூறு­கின்றார். ஆனால் அவர்­களின் விட்­டுக்­கொ­டுப்பை மகா சங்­கத்­தினர் புறக்­க­ணிப்­ப­தாக இல்­லையா?

பதில்: சுமந்­திரன் யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்று என்ன கூறினார். ஒற்­றை­யாட்சி என்­றாலும் எமக்கு தேவை­யா­னதை இந்த அர­சாங்­கத்தில் எம்மால் செய்துகொள்ள முடியும் என்று அங்கு மக்கள் மத்­தியில் கூறு­கின்றார். இந்­நி­லையில் இவர்கள் மீது எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடியும். இரா.சம்­பந்­தனை நாங்கள் மதிக்­கின்றோம். அனு­பவம் நிறைந்த முன்­னைய தலை­வர்­க­ளுடன் செயற்­பட்­டவர். அவ்­வா­றான அனு­ப­வசார் சமூகம் தற்­போ­தில்லை. சிங்கள இனத்­திலும் தமிழ் இனத்­திலும் இரு சமூ­கத்­தி­லுமே இரா.சம்­பந்தன் போன்ற அனு­ப­வசார் தலை­வர்கள் இல்லை. இந்த இடை­வெ­ளியை ஈடு­செய்ய முடி­யாது. பாரிய வெற்­றிடம் உள்­ளது. விக்­னேஸ்­வரன் வடக்கின் முத­ல­மைச்­ச­ரான போது நாங்கள் மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்தோம். அவர் ஒரு நீதி­ய­ரசர் சிங்­கள சமூ­கத்­துடன் சிறந்த நட்பை வளர்த்துக்கொண்­டுள்ளார். பல எதிர்ப்­பார்ப்­புகள் எமக்கு இருந்­தது. ஆனால் இன்று மிகவும் ஆபத்­தான அடிப்­ப­டை­வா­தி­யாக அவர் வடக்கில் செயற்­ப­டு­கின்றார். அர­சியல் இருப்­பிற்­கா­கவே அவர் இவ்­வாறு செயற்­ப­டு­கின்றார். இதனால் தான் மோதல்கள் ஏற்­ப­டு­கின்­றன. 

இன­வாதம், மத­வாதம் என தேரர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்கை எடுக்கின்­றது. அது பர­வா­யில்லை. நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எம்மால் ஒன்றும் கூறி­விட முடி­யாது. ஆனால் அதே சட்டம் விக்­னேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் போன்­ற­வர்­க­ளுக்கு எதி­ரா­க­வும்­முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். 

கேள்வி : போரின் பின்­னரும் வடக்கு மக்கள் மிகவும் மோச­மான நிலை­யி­லேயே உள்­ளனர். காணிகள் விடு­விக்­கப்­படவில்லை.கேப்­பா­பு­லவில் ஒரு கிரா­மமே இரா­ணுவ முகா­மிற்குள் சிக்­குண்­டுள்­ளது. இதனை ஏற்றுக்கொள்­கின்­றீர்­களா?

பதில் : போரின் பின்­னரும் வடக்கில் மக்கள் மிகவும் மோச­மான நிலை­மையில் உள்­ளனர் என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றேன். மக்­க­ளுக்கு காணிகள் வழங்­கப்­பட வேண்டும். ஆனால் தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு இரா­ணுவ முகாம்கள் நாட்டில் எங்கு வேண்­டு­மா­னாலும் இருக்­கலாம். இரா­ணுவ முகாமை அகற்றி விட்டு காணியை கேட்கும் போது தான் பிரச்­சினை வரும். மக்கள் குடி­யி­ருக்க காணிகள் வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக உள்ளோம். உதா­ர­ண­மாக மன்னார் கடற்­ப­ரப்பில் தமி­ழர்கள் வாழ்ந்­தனர். 

ஆனால் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் ஆட்கள் கடற்­க­ரையில் அமைக்­கப்பட்­டி­ருந்த தமி­ழர்­களின் குடி­யி­ருப்­பு­க­்களுக்கு தீவைத்து அவர்­களை விரட்­டி­னார்கள். பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதி­மன்றம் சென்­றனர். இதன்­போது தமிழ் மக்கள் அந்த பகு­தியில் வாழ்ந்­தார்கள் என தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. ஆனால் இவர் நீதி­மன்­றத்­திற்கு கல் எறிந்து நீதி­ப­தியை அச்­சு­றுத்­தினார். இதற்கு கார­ண­கர்த்­தா­வாக பஷில் ராஜ­ப­க் ஷவே இருந் தார். 

மக்­களை மீள்குடி­ய­மர்த்­து­வ­தாக கூறி காடு­களை அழித்தார். வில்­பத்து காட்டை அழித்து புதிய குடி­யி­ருப்­பு­களை உரு­வாக்­கினார். ஆனால் தமி­ழர்­களை விரட்­டினார்.அதே போன்று சிங்­கள மக்­களும் யாழ்ப்­பா­ணத்தில் வாழ்ந்­தனர். யாழ்.புகை­யி­ரத நிலை­யத்தில் தொடர் போராட்டம் நடத்­தியும் அவர்­க­ளுக்­கான மீள்­கு­டி­யேற்ற அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தனால் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் மேலும் அதி­க­ரிக்கும் .

கேள்வி : அர­சியல் தீர்வு ஒன்றை எதிர்­பார்த்­துள்ள தமி­ழர்­க­ளுக்கு மகா சங்­கத்­தினர் என்ற வகையில் உங்­க­ளது பதில் என்ன?

பதில் : சாதா­ரண தமிழ் மக்கள் தற்­போது அர­சியல் தீர்வைக் கோரு­கின்­ற­னரா? இதில் சிக்கல் உள்­ளது. அவர்­க­ளது தற்­போ­தைய பிரச்­சி­னைகள் வேறு .....1956 ஆம் ஆண்டில் மொழிப் பிரச்­சினை பூதா­க­ர­மாக வெடித்­தது. ஆனால் அந்த காலப்­ப­குதியில் ஆங்­கில மொழியே ஆட்சி மொழி­யாக காணப்­பட்­டது. இதன்போது சிங்­க­ள­வர்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்கும் ஒரு பிரச்­சி­னையே மொழி தொடர்பில் ஏற்­பட்­டது. எனவே அப்­போது மும்­மொழி சட்­டத்தை அமைச்சர் எம்.ஜி.பண்டா கொண்டு வந்தார். இதன் பின்னர் ஸ்ரீ ஒழிப்பு போராட்டம் வந்­தது. ஆனால் தற்­போது அனைத்து வாக­னங்­க­ளிலும் ஆங்­கில எழுத்­துக்­களே உள்­ளன. 

ஸ்ரீ ஒழிப்பு குரல் கொடுத்­த­வர்கள் இன்று மௌனித்­துள்­ளனர். ஆங்­கி­லத்தில் வந்தால் பரவாயில்லை சிங்களத்தில் வந்து விடக்கூடாது என்பது தானே நிலைப்பாடு. இது மனநிலை சார்ந்த விடயமாகிவிட்டுள்ளது.

கேள்வி: புதிய அரசியலமைப்பில் எங்கு தவறு இடம்பெற்றுள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: புதிய அரசியலமைப்பிற்கான கருத்துக்கள் பெற்றுக்கொண்ட விதம் என்பவற்றில் எவ்விதமான தவறுகளும் இல்லை. ஆனால் கருத்துக்கள் பெற்றுக்கொண்டு உள்ளடக்குவதில் பொதுத் தன்மை காணப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இதுவரையில் இடம்பெறவில்லை. குறிப்பிட்ட சில தரப்புகள் வழங்கிய யோசனைகள் மற்றும் தெரிவித்த கருத்துக்கள் அறிக்கைகளில் இல்லை. ஓரினச்சேர்க்கை தொடர்பான யோசனை என்பன எங்கிருந்து வந்தது. அவை நாம் கூறிய விடயங்கள் அல்ல. அதற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் பௌத்த தரப்புகளுக்கு வழங்கப்பட வில்லை. இதனை அரசியலமைப்பிற்குள் உள்ளடக்க வேண்டிய தேவை என்ன ?

 

நடுநிலையான கொள்கையுடன் புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. கருத்துக்கள் பெற்றுக்கொண்டாலும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி நகர்த்தப்படும் நிலையே புதிய அரசியலமைப்பில் காணப்படுகின்றது. புதியதா? திருத்தமா? என்பதில் எமக்கு பிரச்சினை இல்லை. நாம் வலியுறுத்திய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-9

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் தலையீடு வருவதை எந்த பீடமும் தடுக்க முடியாது. காரணம்.. பிரிட்டனின் கடந்த காலத் தவறே.. தமிழர்களின் அரசியல் உரிமைப் பறிப்பு இலங்கைத் தீவில் நடக்க முக்கிய காரணம். இந்தப் பீடங்கள் உருவாகவும்.. அவை மக்களிடையே பிளவுகளை உருவாக்கி உயிர் வாழவும் காரணம்.

ஆக மேற்குலகம்.. தான் தமிழ் மக்களுக்கு செய்த ஓரவஞ்சகத்துக்கும் உயிர் உரிமைப் பறிப்புக்கும் பதில் சொல்லி ஆகனும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

பிரிட்டனின் தலையீடு வருவதை எந்த பீடமும் தடுக்க முடியாது. காரணம்.. பிரிட்டனின் கடந்த காலத் தவறே.. தமிழர்களின் அரசியல் உரிமைப் பறிப்பு இலங்கைத் தீவில் நடக்க முக்கிய காரணம். இந்தப் பீடங்கள் உருவாகவும்.. அவை மக்களிடையே பிளவுகளை உருவாக்கி உயிர் வாழவும் காரணம்.

ஆக மேற்குலகம்.. தான் தமிழ் மக்களுக்கு செய்த ஓரவஞ்சகத்துக்கும் உயிர் உரிமைப் பறிப்புக்கும் பதில் சொல்லி ஆகனும். tw_angry:

கடைசீல சுஜ நிர்ணய உரிமை தேர்தலில் வந்து நின்றால் நன்று.

காலம் மாறி விட்டது. மொட்டைகள் இன்னும் அதே கந்தர்வ கோலம்.

ஐநா வேற, வாக்கு கொடுத்த ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்லுது. வாக்கு குடித்தது, மங்கள வாய், இப்ப ரவி வாய் என்று சொல்லலாம் என்று சிங்களம் நினைக்கும்.  :unsure:

பௌத்த பயங்கரவாதத்துக்கு முன்னுரிமை கொடுத்து இனப்படுகொலைகாரர்கள் கீழ் தமிழர்கள் வாழ முடியாது!
தனிநாடாக அமையும் தமிழீழமே தமிழர்களுக்கு பொருத்தமான தீர்வு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.