Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பு ஜூலையின் நினைவுகள்

Featured Replies

கறுப்பு ஜூலையின் நினைவுகள்

 

தமிழர்­க­ளுக்­கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான அர­சி­யல் மோதல் ஆயு­தப் போராட்­ட­மா­கப் பரி­ண­மித்­த­தன் 35ஆவது ஆண்­டுக்­குள் நுழை­யப் போகி­றோம். இந்த மூன்­றரை தசாப்­தங்­க­ளில் கிட்­டத்­தட்ட மூன்று தசாப்­தங்­க­ளைப் போரி­லேயே கழித்­தி­ருக்­கி­றோம்.

லட்­சக்­க­ணக்­கான உயி­ரி­ழப்­பு­கள், கணக்­கற்ற சொத்­த­ழி­வு­கள், பலப் பல மில்­லி­யன் நிதிச் செல­வு­கள் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்­திய போர் முடிந்து 8 ஆண்­டு­க­ளின் பின்­ன­ரும் போர் உரு­வா­கி­ய­தற்­கான கார­ணங்­கள் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன என்­பது பெரும் துன்­பி­யல்.

கறுப்பு ஜுலை என்று வர்­ணிக்­கப்­ப­டும் ஆடி இனக் கல­வ­ரம்­தான் இலங்­கை­யின் நவீன வர­லாற்­றைப் புரட்­டிப் போட்­டது. அர­சி­யல் செல்நெறி­யைத் திசை­மாற்­றி­யது. தமி­ழர்­க­ளும் சிங்­க­ள­வர்­க­ளும் சேர்ந்து ஒரே நாட்­டில் வாழ முடி­யாது என்­கிற நிலையை ஏற்­ப­டுத்­தி­யது. தனி நாட்­டுக்­கான ஆயு­த­ப் போராட்­டத்தை தமி­ழர்­க­ளின் பேரா­த­ர­வு­டன் முன்­ன­கர்த்­தி­யது.

1983ஆடி மாதம் 23ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் திரு­நெல்­வேலி தபால் கட்­டைச் சந்­தி­யில் இலங்­கைத் தரைப்­படை பய­ணித்த வாக­னத்­தின் மீது பதுங்­கித் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. இதில் 13 படை­யி­னர் உயி­ரி­ழந்­த­னர்.

அதற்கு முன்­னரே தமி­ழர்­களை அர­சி­யல் அதி­கார ரீதி­யில் ஒடுக்­கி­வி­டு­வ­தற்கு முயன்று வந்த சிங்­கள அர­சு­கள், தமி­ழர்­க­ளின் எதிர்ப்­புக் குர­லா­லும் போராட்­டங்­க­ளா­லும் பெரி­தும் ஆத்­தி­ரம் கொண்­டி­ருந்­தன. தமது முழு­மை­யான அதி­கா­ரத்­தைக் கேள்­விக்­குட்­ப­டுத்­திய தமி­ழர்­களை அடக்கி ஒடுக்கி ஒரு மூலை­யில் அமர்த்­தி­வி­ட­வேண்­டும் என்று சிங்­கள அதி­கார வர்க்­கத்­தி­டம் கனன்­று­கொண்­டி­ருந்த நெருப்பு ஆடி 23 சம்­ப­வத்­து­டன் பெரும் தீப்­பி­ழம்­பாகி கோரத் தாண்­ட­வம் ஆடி­யது.

விளைவு, வர­லாற்­றில் மிக மிகத் துய­ர­மான தமிழ் இன அழிப்பு அரங்­கே­றி­யது. தமி­ழர்­கள் என்ற ஒரே கார­ணத்­திற்­கா­கத் தேடித் தேடி அழிக்­கப்­பட்­டார்­கள். அவர்­க­ளின் கடை­கள், சொத்­துக்­கள் எரிக்­கப்­பட்­டன, சூறை­யா­டப்­பட்­டன, சேத­மாக்­ கப்­பட்­டன.

அரச காவ­லர்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்க, அவர்­க­ளின் அனு­ச­ர­ணை­யு­ட­னேயே எல்­லாக் கொடூ­ரங்­க­ளும் அரங்­ ­கேறின. ஆட்­சி­யா­ளர்­கள் ஆசீர்­வ­தித்து நின்­றார்­கள்.

அப்­போ­தைய அரச தலை­வர் ஜே.ஆர்.ஜெயவர்த்­தன, அதற்கு முன்­னரே தமி­ழர்­க­ளு­டன் ‘போர் என்­றால் போர் அமைதி என்­றால் அமைதி’ என்று நாடா­ளு­மன்­றத்­தி­லேயே முழங்­கி­ய­வர். எனவே அவ­ரது முழு­மை­யான நல்­லா­சி­யு­டன் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான காடைத்தனங்­கள் போரா­கக் கட்­ட­விழ்த்­து­ வி­டப்­பட்­டன.

அடித்து, நொருக்கி, கொளுத்தி, கொன்­றும் அடங்­காத ஆட்­சி­யா­ளர்­கள் இறு­தி­யில் செய்­த­து­தான் இலங்­கையை நிரந்­த­ர­மா­கத் துண்­டா­டி­யது. கல­வ­ரத்­தால் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­கள் அனை­வ­ரை­யும் இடைத் தங்­கல் முகாம்­க­ளில் தங்க வைத்த பின்­னர் கப்­ப­லில் ஏற்றி வடக்கு கிழக்­குக்கு அனுப்பி வைத்­தது கொழும்பு அரசு. அன்றே தமி­ழர்­க­ளின் தாய­கமும், நாடும் வடக்கு கிழக்­குத்­தான் என்­ப­தைப் பிரித்­துக் காட்­டி­யது.

அதன் பின்­னர் 26 வரு­டங்­கள் தொடர்ந்த குரு­திச் சக­தி­ப­டிந்த போர் முடி­யும் வரை­யும் போரைக் கார­ணம் காட்­டியே லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட தமி­ழர்­கள் கொன்­றொ­ழிக்­கப்­பட்­டு­விட்­டார்­கள். இறு­திப் போரி­லும் பல்­லா­யி­ரம் அப்­பா­வித் தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­ட­து­டன் ஆயு­தச் சண்­டை­கள் ஒரு முடி­வுக்கு வந்­தன.

போர் ஏற்­ப­டுத்­திய தாக்­கங்­கள், விளை­வு­க­ளின் படிப்­பினை வழி­யாக இனி­யா­வது பிரச்­சி­னைக்கு ஓர் தீர்வு காணப்­பட்­டு­வி­டும் என்ற நம்­பிக்­கை­யும் பொய்த்­துப் போயி­ருக்­கும் ஒரு சூழ­லில், கறுப்பு ஜூலை­யின் நினை­வு­கள் மீண்­டும் சூழ்­கின்­றன.

தமி­ழர்­க­ளின் அர­சி­ய­லில் பெரும் புய­லைக் கிளப்­பிய ஆடிக் கல­வ­ரங்­க­ளில் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளின் நினை­வா­கக்­கூட இது­வ­ரை­யில் எந்த நினை­வி­டங்­க­ளும் இல்லை. ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட நினை­வேந்­தல் நிகழ்­வு­க­ளும் இல்லை.

நினை­வு­க­ளின் வழி அர­சி­யலை ஊடு­க­டத்­தும் திற­னைத் தவ­ற­விட்­டி­ருக்­கும் ஒரு சமூ­க­மாக மாறி­யி­ருக்­கும் நாம், இனி­யா­வது விழித்­துக்­கொண்டு இது­போன்ற நினை­வு­களை பெரு நிகழ்­வு­க­ளாக ஏந்­து­வ­தன் ஊடாக அர­சி­யல் தீர்­வுக்­கான உந்து சக்­தியை, அழுத்­தத்­தைக் கொடுக்க வேண்­டும். செய்­வோமா?

http://uthayandaily.com/story/12976.html

  • தொடங்கியவர்

வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு ஜீலைக் கலவரம்!

 

புறக்­கோட்­டையில் 412 கடைகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சம்­ப­வத்­து­டனும் கொலை­களும் பிர­தம மந்­தி­ரியின் வலது கையான முத­லாளி அலோ­சி­யஸின் மகன் தள­ப­தி­யாகச் செயற்­பட்டான். களனிப் பகு­தியில் கைத்­தொழில் அமைச்சர் சிறில் மத்­தி­யூவும் அவ­ரது குண்­டர்­களும் வன்­மு­றை­களில் ஈடுபட்­டனர். தமி­ழர்கள் செறிந்து வாழ்ந்த வெள்­ள­வத்­தையில் கொலை முயற்­சி­ க­ளிலும் கொள்ளை அழிப்பு முயற்­சிக்கு தலைமை தாங்­கி­யவன் ஜாதிக சேவக சங்க பொதுச் செய­லாளர். 

இச் சம்­ப­வங்­களில் குண்­டர்கள், கொலை­ஞர்கள், சீருடை அணிந்த இரா­ணு­வத்­தினர், பொலிஸார் தலைமை தாங்­கி­யதைக் கண்டோம். கொலைகள், சாகும்­வரை தாக்­குதல், அகப்­பட்ட தமி­ழர்­களை உயி­ரோடு எரித்தல் முத­லிய கொடூ­ரங்­களை நேரில் கண்டோம்.

1983 ஆம் ஆண்டில் இடம்­பெற்ற ஜூலைக் கல­வ­ரத்தின் அட்­டூ­ழி­யங்­களை நேரில் கண்டும் பார்த்தும் அறிந்தும் அனு­ப­வித்துக் கொண்­ட­வர்­களால் வழங்­கப்­பட்ட தக­வல்­களை திரட்டித் தந்த நூல் ஒன்றின் மூலம் மேற்­படி தக­வல்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இலங்கை வர­லாற்றில் மிக மோச­மான துன்­பியல் பதி­வா­கவும் கறுப்பு ஜூலை­யெ­னவும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கிற ஜூலைக் கல­வரம் நடந்து 34 வரு­டங்கள் உருண்­டோடி விட்­டன. இன்னும் அதன் வடுக்­களும் வலி­களும் மறக்க முடி­யாத அழி­வு­களும் தமிழ் மக்கள் நெஞ்­சங்­களில் உறைந்து ஊறிக் கொண்­டே­யி­ருக்­கி­றது.

உலக வர­லாற்று ஏடு­க­ளில் எப்­பக்­கமும் இல்­லாத கொடூர அத்­தி­யா­ய­மாக பதி­யப்­பட்ட ஒரு காலக்­கொ­டு­மை­யாக இந்த ஜூலைக் கல­வரம் இன்னும் பேசப்­பட்டுக் கொண்­டே­யி­ருக்­கி­றது.

1983 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி சந்­திக்கு பலா­லி­யி­லி­ருந்து யாழ். கோட்­டையை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த இரா­ணுவ வாகனம் மீது விடு­தலைப் புலி இயக்­கத்­தினால் முத­லா­வது நிலக்­கண்­ணி­வெடி வைத்து வாகனம் தகர்த்­தெ­றி­யப்­பட்­டது. இத்­தாக்­குதல் கார­ண­மாக திரு­நெல்­வேலி தபால் கந்தோர் சந்­தியில் அதி­காரி ஒருவர் உட்­பட 13 இரா­ணுவ வீரர்கள் பலி­யா­கினர்.

இந்த கண்­ணி­வெடித் தாக்­குதல் ஈழ விடு­தலைப் போரில் பல பரி­மா­ணங்­களை உரு­வாக்­கி­யது என்­ப­தற்கு அப்பால் பல மோச­மான அழி­வு­களைக் கொண்டு வந்த சம்­ப­வ­மா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. சத்­தி­யாக்­கி­ரகம், உண்­ணா­வி­ரதம், கறுப்புக் கொடி, மறியல் போராட்டம் என்ற பாரம்­ப­ரிய போராட்ட முறைகள் உடைத்­தெ­றி­யப்­பட்டு ஆயுதப் பரி­கா­ரமே ஒரே வழி­யென்ற நிலைக்குத் தமிழ் இளை­ஞர்கள் தள்­ளப்­பட்­ட­துடன் ஆயுதம் ஏந்த வேண்­டு­மென்ற நம்­பிக்­கை­க­ளையும் ஊட்டப் பண்­ணிய கல­வ­ர­மாக ஜூலைக் கல­வரம் அடி­யெ­டுத்துக் கொடுத்­தது.

இயக்க தோற்­றங்கள், வேகங்கள் வீறு­கொள்ள வைத்­த­துடன் ஆயிரம் ஆயிரம் இளை­ஞர்­க­ளையும் யுவ­தி­க­ளையும் ஆயு­தத்­தின்பால் திரும்பிப் பார்க்க வைத்த சம்­ப­வ­மா­கவும் வர­லாற்று மாற்­ற­மா­கவும் இக்­க­ல­வரம் வித்­திட்­டது.

சம்­பவம் நடை­பெற்ற மறுநாள் 23 ஆம் திகதி திரு­நெல்­வேலி சம்­ப­வத்தின் பழி தீர்ப்­பாக யாழ்ப்­பா­ணத்தில் வீட்­டிலும் வீதி­யிலும் தெரு­விலும் திண்­ணை­யிலும் பஸ்­த­ரிப்பு நிலை­யத்­திலும் நின்ற 41 அப்­பாவிப் பொது­மக்கள் வெறி­யாட்ட இரா­ணு­வத்­தி­னரால் சுட்டுக் கொல்­லப்­பட்­டார்கள். மானிப்பாய், பலாலி வீதி­யென்ற பகு­தி­களில் இந்த நெருப்பு விழா நடத்­தப்­பட்­டது.

நிலக்­கண்­ணி­வெடி வைத்த சம்­ப­வத்தின் மூல­கர்த்­தாக்­க­ளாக வே.பிர­பா­கரன், மாத்­தையா, கிட்டு, அருணா, சாள்ஸ் அன்­ரனி போன்­ற­வர்கள் பங்­கு­பற்­றி­ய­தாகப் பேசப்­பட்ட போதும் பஸ்­தி­யாம்­பிள்­ளை­யிடம் அகப்­பட்டு சாது­ரி­ய­மாகத் தப்­பித்துக் கொண்ட மூத்த போரா­ளி­யான செல்­லக்­கிளி அம்மான் இச் சம்­ப­வத்தின் சூத்­தி­ர­தா­ரி­யென்றும் அவர் வீர­ம­ரணம் அடைந்தார் என்றும் வரி­யிட்டு எழு­தப்­பட்­டது.

தலை­நகர் கொழும்பு உட்­பட தென்­னி­லங்­கை­யெங்கும் விரவி, மலை­யகம் வடக்கு கிழக்­கென எங்கும் வியா­பித்த மேற்­படி கல­வ­ரத்தில் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் பதைக்க பதைக்க கொல்­லப்­பட்­டார்கள். தமி­ழர்­களின் வியா­பார நிலை­யங்கள் சூறை­யா­டப்­பட்­டன. வீடு வாசல், சொத்து என்­பன எரிக்­கப்­பட்­டன, அழிக்­கப்­பட்­டன, துவம்­சிக்­கப்­பட்­டன. ஒரு இனத்தின் மீது இன்­னொரு சகோ­தர இனம் நடத்­திய கோரத் தாண்­டவம் 1983 ஆம் ஆண்டின் ஜூலைக் கல­வரம். 13 இரா­ணுவ வீரர்­களின் சட­லங்­களும் கொழும்பு பொரளை கனத்தை மயா­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு இரா­ணுவ மரி­யா­தை­க­ளுடன் அடக்கம் செய்யும் ஏற்­பா­டு­களை அன்­றைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்­தன ஒழுங்கு செய்து கொண்டார். இறந்த இரா­ணுவ வீரர்­களின் சட­லங்­களை அவர்­களின் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­காமல் திட்­ட­மிட்ட வகையில் கனத்­தைக்கு கொண்டு வரு­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

பொரளை கனத்தை மயா­னத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பெரும்­பான்­மை­யினர் பௌத்த வாதிகள், அமைச்­சர்கள், படை­யினர், குண்­டர்கள் எனப் பெருந்­தொ­கை­யினர் ஒன்று கூடி­னார்கள். மரண அடக்­கத்தைத் தொடர்ந்து கிளர்ந்து கொண்ட இன­வாத சூறா­வளி பொர­ளையில் ஆரம்­பித்து ஜூலை 23, 24, 25 என வாரம் முழு­வதும் நாடு பூரா­கவும் பரவத் தொடங்­கி­யது.

பண்டா செல்வா ஒப்­பந்­தத்­துக்கு எதி­ராக கண்­டிக்குப் பாத யாத்­திரை மேற்­கொண்­ட­வரும் 1979 ஆம் ஆண்டு அவ­ச­ர­கால சட்டம் மற்றும் பயங்­க­ர­வாத சட்டம் ஆகி­ய­வற்றை அறி­முகம் செய்­த­வரும் 4 ஆம் மாடி, வெலிக்­க­டைச்­சிறை, பனா­கொடை முகாம், போகம்­பறைச் சிறைச்­சாலை, மகஸின் சிறைக்­கூடம், பூஸா முகாம் என்­ப­வற்றை உரு­வாக்கி தமிழ் இளை­ஞர்­க­ளையும் யுவ­தி­க­ளையும் எந்­தக்­கா­ர­ண­மு­மின்றி கைது செய்து தடுத்து சிறை கொண்ட ஜே.ஆர். மற்றும் தேசிய பாது­காப்பு அமைச்சர் லலித் அத்­துலத் முதலி, முன்னாள் ஜனா­தி­பதி ஆர். பிரே­ம­தாஸ, மகா­வலி அமைச்சர் காமினி திஸா­நா­யக்க, தொழில் அமைச்சர் சிறில் மத்­தியூ, வீர­சிங்க மல்­லி­மா­ரச்சி என்ற பெருந்­தலைப் பீடங்­களின் தூண்­டு­தல்­க­ளிலும் தலைமை தாங்­கு­தல்­க­ளிலும் தேச­மெங்கும் இனக்­க­ல­வரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது.

முடி­யு­மானால் எம்­முடன் மோதிப் பாருங்கள் போர் என்றால் போர் சமா­தா­ன­மென்றால் சமா­தா­ன­மென சிறு­பான்மை தமிழ் மக்­களைப் பார்த்து சூளு­ரைத்த ஜனா­தி­பதி ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த துவம்ச இனச் சங்­கா­ரத்தில் 3000 க்கும் மேற்­பட்ட தமி­ழர்கள் கொல்­லப்­பட்­டனர். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வர்த்­தக நிலை­யங்கள் தீ வைத்து கொளுத்­தப்­பட்­டன, சூறை­யா­டப்­பட்­டன. 80 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட தமிழ் மக்கள் இடம்­பெ­யர்ந்­தனர். ஆனால் அரச தக­வ­லின்­படி 287 பொது மக்கள் கொல்­லப்­பட்­ட­தா­கவும் 440 தீவைப்பு சம்­பவங்கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும் சுமார் 300 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சொத்­துக்கள் கொள்­ளை­யி­டப்­பட்­ட­தா­கவும் சில தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இக்­க­ல­வரம் நடை­பெற்ற காலத்தில் தமி­ழர்­க­ளுக்குச் சொந்­த­மான லக்மி மஹால், மஹா­ராஜா போன்ற பல நிறு­வ­னங்கள், கொள்­ளை­யி­டப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

தெஹி­வளை மாந­கர சபையின் ஐ.தே. கட்­சியைச் சேர்ந்த மாந­கர சபை உறுப்­பினர் ஒரு வர் கும்­பல்­க­ளுக்கு தலைமை தாங்­கி­யமை, நோர்வே நாட்­டி­லி­ருந்து இலங்­கைக்கு வந்­தி­ருந்த சுற்றுலாப் பய­ணிகள் சிலர் தாம் கண்ட காட்­சியை இவ்­வாறு விப­ரித்­தி­ருந்­தார்கள்.

கொழும்பு நகரில் வாக­னங்­க­ளிலும் நட­மா­டியும் திரிந்த நூற்­றுக்­க­ணக்­கான மக்கள், பொலிஸார் எது­வித எதிர்ப்பும் காட்­டாத நிலையில் எம் கண்­முன்னே கொலை செய்­யப்­பட்­டார்கள். தமி­ழர்கள் சாகும்­வரை அவர்கள் அடித்துக் கொல்­லப்­பட்­டார்கள். அகப்­பட்ட தமி­ழர்கள் உயி­ரோடு தீ வைத்து கொளுத்­தப்­பட்­டதை நேரில் கண்டோம்.

ஒரு மினி பஸ்ஸில் வந்த 20 பேரை கும்­ப­லொன்று வழி­ம­றித்து உயி­ருடன் தீமூட்டி எரித்­ததை நேரில் கண்­டோ­மென சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர். இவை­யெல்லாம் பொலிஸார், இரா­ணு­வத்­தி­னரின் நட­மாட்­டத்­துக்கு முன்னால் நடந்­தவை. எந்த வொரு படைத் தரப்­பி­னரும் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­களைக் காப்­பாற்ற முயற்­சிக்­க­வில்லை. மாறாக கண்டும் காணா­த­வர்­க­ளா­கவும் உடந்­தை­யா­ளர்­க­ளா­கவும் இருந்­துள்­ளனர் என அந்­நாட்­களில் வெளி­வந்த மனித உரிமை மற்றும் விசா­ரணை ஆணைக்­கு­ழுக்கள் மூலம் வெளி­வந்த தக­வல்­க­ளாகும்.

ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் இடம்­பெ­யர்ந்­தார்கள். அக­திகள் ஆக்­கப்­பட்­டார்கள். கொழு ம்பு மாந­கரில் மட்டும் 55க்கும் மேற்­பட்ட முகாம்கள் இடம்­பெ­யர்ந்த பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டன. இந்­தி­யாவின் அழுத்தம் கார­ண­மாக லங்­கா­ராணி கப்பல் மூலம் தமிழர்கள் வட கிழக்­குக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார்கள்.

கல­வர காலத்தில் நடந்த மகா கொடு­மை­யாக இன்­று­வரை பேசப்­ப­டு­வதும் கூறப்­ப­டு­வ­து­மான சம்­பவம் வெலிக்­கடைச் சிறையில் நடந்த கொடூரம். நாக­ரிக உலகில் மிக மோச­மாக வர்­ணிக்­கப்­ப­டு­கிற மனித உரிமை மீற­லா­கவும் படு­கொ­லை­யா­கவும் பார்க்­கப்­ப­டு­வதும் பதி­யப்­பட்­டி­ருப்­ப­து­மான அந்த சிறைச்­சாலைக் கொடூரம் முழு உல­கை­யுமே அதிர்ச்சி கொள்ள வைத்­தது.

ஜூலை 25 ஆம் திகதி வெலிக்­க­டை­யி­லி­ருந்த 35 போரா­ளிகள் அர­சியல் கைதி­க­ளாக இருந்­த­வர்கள் கொடூ­ர­மான முறையில் சிறைக்குள் வைத்துக் கொல்­லப்­பட்­டார்கள். மேலும் ஜூலை 27 ஆம் திகதி மூர்க்­கத்­த­ன­மாக 18 பேர் கொல்­லப்­பட்­டனர். இவர்கள் எல்­லோரும் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்­தனா அவர்­களால் கொண்­டு­வ­ரப்­பட்ட கொடு­மை­யான பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் வெலிக்­கடைச் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள்.

குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன், நடே­சு­தா சன், சிவ­பாதம் மாஸ்டர், அரபாத், காந்­திய இயக்கத் தலைவர் டாக்டர் ராஜ­சுந்­தரம் உட்­ பட 53 பேர் கொல்­லப்­பட்­டார்கள். ரெலோ அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரான வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த குட்­டி­ம­ணியின் கண்கள் கொடூ­ர­மான முறையில் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக தோண்­டி­யெ­டுக்­கப்­பட்டு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த வெறி­யாட்­டத்தை சிறைக்குள் நடத்­தி­யவன் 1982 ஆம் ஆண்டு தனது மனை­வி­யையும் குழந்­தை­யையும் தன்­னுடன் சேர்த்து வைக்­கு­மாறு கோரி இத்­தா­லிய விமான மொன்றை கடத்த முற்­பட்­ட­வே­ளையில் கைது செய்­யப்­பட்டு அதே சிறையில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சோம­பால ஏக்­க­நா­யக்க தலை­மை­யி­லேயே இடம்­பெற்­ற­தாக அப்­போ­தைய ஊடகச் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இச் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த ஈ.பி.டி.பி. யின் தலைவர் டக்ளஸ் தேவா­னந்தா இச் சம்­ப­வத்தில் உயிர் பிழைத்­ததும் மாத்­தி­ர­மல்ல, சிறை மாற்றம் கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு சிறையில் வைக்­கப்­பட்ட நிலையில் 27.09.1983 இல் இடம்­பெற்ற சிறை­யு­டைப்பில் தப்­பித்துக் கொண்ட சிலரில் இவ­ரு­மொ­ரு­வ­ராவார்.

ஏலவே குறிப்­பிட்­டது போல் ஜூலை இனக் கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் குண்­டர்­களும் மந்­தி­ரி­களும் அமைச்­சர்­களும் இன­வா­தி­களும் மத­வா­தி­களும் கல­கக்­கா­ரர்­களும் இருந்த போதிலும் இவற்­றுக்­கெல்லாம் தலை­மைப்­பீ­ட­மாக இயங்­கிய இன­வா­தி­களும் உயர் பீடத்­த­வர்­களும் இருந்­துள்­ளனர் என்­பது தெளி­வா­கவே தெரி­யப்­பட்ட ஒரு விடயம்.

இனக்­க­ல­வரம், மதக் கல­வரம், சமூகக் கல­வரம், குழுக்­க­ல­வரம் என்­ப­வற்றின் பின்­ன­ணியில் பொது­வா­கவே அர­சியல் கலப்பு இருந்து கொண்டே தான் வந்­தி­ருக்­கி­றது. இலங்­கையில் இடம்­பெற்ற அனைத்து கல­வ­ரங்­களும் உள்ளூர் யுத்­தங்­களும் சிங்­கள பௌத்­த­வா­தி­களால் தமிழ் முஸ்லிம் மக்கள் மீது தூண்­டி­வி­டப்­பட்­ட­வைதான்.

இலங்­கையில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக 1956 ஆம் ஆண்டு, 1958 ஆம் ஆண்டு, 1977 ஆம் ஆண்டு, 1981 ஆம் ஆண்டு, 1983 ஆம் ஆண்டு என ஐந்­துக்கு மேற்­பட்ட தட­வைகள் கல­வ­ரங்கள் தூண்­டி­வி­டப்­பட்­டுள்­ளன.

இதே­போன்றே முஸ்லிம் சமூ­கத்தின் மீது 1915 ஆம் ஆண்டு தொடக்­கி­வி­டப்­பட்ட இன த்­து­வம்சம் புத்­தளம், 1974, 1976, 2002 காலப் பகு­தி­க­ளிலும் அதேபோல் குரு­ணாகல், அளுத்­கம என ஏகப்­பட்ட இடங்­களில் உரு­வாக்­கப்­பட்டு இன்­று­வரை தொடர் நாட­க­மாக்­கப்­பட்டு வரு­வதை பார்த்துக் கொண்­டி­ருக்­கிறோம்.

1915 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய மேலா­திக்க வர்க்­கத்தின் காலத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக தூண்­டி­வி­டப்­பட்ட கம்­பளைக் கல­வ­ரத்­தினால் 102 வரு­டங்­க­ளுக்கு முன்­னமே 1315 முஸ்லிம் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். 205 பேர் காயப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். 85 பள்­ளி­வா­சல்கள், 4075 முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் நாச­மாக்­கப்­பட்­டன. இக் கொடூ­ரத்தில் முஸ்லிம் சமூகம் ஒன்­றி­வாழும் மத்­திய மாகா­ணத்­தி­லி­ருந்து வடமேல் மாகாணம் வரை தீ பரப்­பப்­பட்­டது.

1983 ஆம் ஆண்டு இடம்­பெற்ற இனக்­க­ல­வ­ரத்­துக்­கான காரணம் திரு­நெல்­வே­லியில் வைத்து 13 இரா­ணுவ வீரர்கள் பதுங்­கி­யி­ருந்து கொல்­லப்­பட்­ட­மையே கார­ண­மென முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். சாட்டுச் சொல்­லி­யி­ருந்தார். இவ்­வாறு அவரால் கூறப்­பட்­ட­போதும் அது ஒரு வச­தி­யான தொடக்கப் புள்­ளி­யாக கொள்ளக் கூடிய வகையில் முன் கூட்­டியே திட்­ட­மிட்ட முறையில் செயற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதை இனக்­க­ல­வ­ரத்தின் போக்கு உணர்த்­தி­யது.

1982 ஆம் ஆண்­டுக்குப் பின் இலங்கையில் மோசமடைந்துவரும் இன முறுகல் நிலை தொடர்பில் இந்தியா ராஜதந்திர ரீதியாக எடுத்துக் கூறிய போது இங்கிலாந்துப் பத்தி ரிகையொன்றுக்குப் பேட்டியளித்த ஜே.ஆர். அவர்கள் இப்பொழுது எனக்கு யாழ்ப்பாண மக்களின் கருத்துகள் பற்றிக் கவலையில்லை. நான் அது பற்றி சிந்திக் கவுமில்லை. அவர்கள் உயிர்கள் பற்றியோ, என்னைப் பற்றி அவர்கள் நினைக்கும் கருத்துப் பற்றியோ நான் சிந்திக்கவில்லை. என்று ஜே.ஆர். கூறிய கரு த்து ஒரு ஜனாதிபதியென்ற வகையிலும் ஜனநாயக மரபை பேண வேண்டியவர் என்ற பண்பிலும் எவ்வளவு மோசமான கருத்து என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. ஜே.ஆரின் இத்தகைய நிலைப்பாடுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்குவாதமுமே பின்னாளில் 1983 இல் மாபெரிய இனக்கல வரத்துக்கு தூபமிட்டுள்ளது என்பது மறைந்தி ருக்கும் உண்மையாகும்.

அதுவுமின்றி 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டு தமிழ் கட்சியைச் சேர்ந்த அ. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக வந்த நிலைமைகளை ஜீரணிக்க முடியாமல் போன ஜே.ஆர். இவர்களுடன் கொண்ட முரண்பாடு காரணமாக 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கலவரத்தின்போது தமிழ்த் தரப்பினருக்கும் தனக்கும் ஏற்பட்ட பிணக்கு காரணமாக தெருச்சண்டியன் போல் முடியுமானால் மோதிப் பாருங்கள் போர் என்றால் போர், சமாதானமென்றால் சமாதானமென சூளுரைத்தமையின் கூட்டு மொத்த விளைவே 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரமாகும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-2

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழகளின் வரலாறு, சமூக நிலை பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், 1983 ஜூலை கலவரத்திற்கு பின் தான் தமிழகத்தில் பலருக்கும் இலங்கையில் தமிழர்களின் நிலையை அறிய முற்பட்டனர். செய்தி தாள்களும் முக்கியத்துவமிட்டு வெளியிட்டன. பின்னர் ஏற்பட்ட தமிழக அரசியல் மாற்றங்களாலும், கிந்திய, இலங்கை ராசதந்திர(?) உறவுகளாலும் ஈழம் பற்றிய செய்திகள் இருட்டடிக்கப்பட்டன, புறந்தள்ளப்பட்டன. முக்கிய காரணம் தமிழகத்தின் முக்கிய தலைகள், தங்கள் சுய லாபத்திற்காக ஈழப் பிரச்சனையை கையாண்டு பின்னர் கைகழுவிவிட்டனர். 

வெள்ளைத்தோல் யோக்கிய சிகாமணியென மக்களிடம் வெள்ளையடிக்கபட்ட ராசீவ் மரணத்தால் தமிழக பொதுமக்களிடமும் சலிப்பேற்பட்டு முக்கிய கால கட்டத்தில் ஒதுங்கியது தமிழர்களின் துரதிஷ்ட்டம்!

மரணித்த உயிர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..!

 

2mzxob4.jpg

 

  • தொடங்கியவர்

தமிழின அழிப்பின் அடையாளமான ஜுலை கலவரம் ஏற்பட்டு 34 ஆண்டுகள் பூர்த்தி

 
 
 
 
தமிழின அழிப்பின் அடையாளமான ஜுலை கலவரம் ஏற்பட்டு 34 ஆண்டுகள் பூர்த்தி

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலை புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடும்போக்குவாத சிங்களவர்களால் தமிழர்களை இலக்குவைத்து நாடாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கலவரம் ஆரம்பித்து இன்றுடன் 34 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இராணுவத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் தமிழர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டதுடன், பாரிய சொத்து அழிவுகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வர்த்தக நிலையங்களும் அழிக்கப்பட்டதுடன், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகள் அற்றவர்களாக மாறியிருந்தனர்.

இந்த கலவரத்தின் பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புகலிடம் கோரி வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்த கலவரத்தின் ஒருங்கிணைப்பு முறையானது, ஒர் திட்டமிட்ட செயற்பாடு என்ற பல்வேறு தமிழ் தரப்பினர் தற்போதும் நம்புவதுடன், இலங்கையின் இனப் பிரச்சினை ஆயுதப் போராட்டமாக பரிணமிப்பதற்கும் இந்த சம்பவமே அடித்தளமிட்டிருந்தது.

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் இராணுவ ரீதியில் முடிவுக்கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/34-Years-Ago-Today-Sri-Lanka-s-Black-July

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த உயிர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.