Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானொலி சேவையென்பது வியாபார நோக்கமா? அல்லது பொது நோக்கமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

ஊடகத்துறையில் நான் அறிந்துகொண்ட சில கசப்பான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஊடகம் என்றால் என்ன? அவர்களின் கடமை என்ன?அவர்களுக்குரிய விதிமுறைகள் என்ன? இப்படி பல சந்தேகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்று உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது வானொலி சம்பந்தப்பட்டது. இன்று தாயகத்திற்கு வெளியே ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் கனடா தான் முதலிடத்தில் இருப்பதாக நான் அறிகிறேன். அதாவது கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கு மேல் நம்மவர்கள் வாழ்வதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகாமானோர் ரொரண்டோவில் தான் வசிக்கிறார்கள். அங்கே தான் அதிகமான தமிழ் வானொலிகளும் இயங்குகின்றன என்பதும் குறிப்பிடக்கூடியதாகும்.

இந்த வானொலிகளில் அனேகமானவை தமிழ்தேசியத்திற்கு முரணானவை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். இதில் ஒரு வானொலி வெளிப்படையாகவே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் எங்கள் விடுதலையிற்கு எதிராகவே பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

மற்றயவை மக்களின் ஆதரவு தேவையென்பதிற்காக வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை.

ஒரு சிலர் தங்களின் இந்த துரோகத்தனத்தை நியாயப்படுத்த முயலுவதுமுண்டு. அதாவது தாங்கள் இந்த அராசாங்கத்தின் சட்ட திருத்தங்களிற்கு கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும் என்று காரணம் வைக்கிறார்கள்.

அப்படியென்றால் ரொரண்டோவில் இருந்து இயங்கும் ஒரு வானொலி அதாவது இணையத்தளத்திலும் பிரபலமான அந்த வானொலியால் மட்டும் எப்படி கனடா சட்ட திருத்தங்களிற்கு கட்டுப்படாமல் தாயகத்திலிருந்து நேரடியாக தளபதிகளின் நேர்கானல்களையும், தொடர்ந்து விடுதலைகீதங்களையும் ஒலிபரப்ப முடிகிறது என்ற வினாவை இவர்கள் முன்பு வைக்கவிரும்புகிறேன்.

அடுத்ததாக இந்த வானொலி உரிமையாளர்களுக்கும் கலைஞர்களுக்குமிடையிலுள்ள

(அறிவிப்பாளர்கள்) முரண்பாடுகள். இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு நண்பர் ஒரு வானொலியில் செய்தித் தயாரிப்பாளராகவும், வாசிப்பவராகவும் கடமைபுரிந்த காலத்தில் ஏற்பட்ட தனது அனுபவத்தை கூறுகிறார் எப்படியென்றால் ஒரு நாள் தான் செய்தி வாசிக்கும்போது தமிழீழத்தேசியத்தலைவர் என்ற பதத்தை பாவித்ததால் தனக்கும் வானொலி அதிபருக்கும் எற்பட்ட கருத்து வேறுபாடு, தான் விலகுவதிற்கு காரணமாகவிருந்தது என்றார்.

மற்றொரு நண்பர் தனது அனுபவத்தை கூறும்போது , தனது அபிமான நேயர்கள் தன்னை அதிகமாக பாராட்டியது தான் தனக்கும் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை என்கிறார். இப்படி எத்தனையோ சம்பவங்களை கூறிக்கொண்டே போகலாம். முக்கியமாக என்னுமொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் அதாவது அநேகமான அறிவிப்பாளர்கள் தொண்டர்களாகவே அதாவது இலவசமாகவே கடமை புரிகிறார்கள் என்ற சோகமான உண்மையையும் நாம் அறிந்திருப்பது நல்லது.

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்லும் விடயம் மிகவும் கவலை தருகிறது. எந்தெந்த வானொலி என்று அடையாளங்காட்டினால் மக்கள் விழிப்படையவும் தமது அனுபவங்களை இங்கு பகிரவும் உதவுமே? யாருக்குப் பயப்பட வேண்டும்.

ஒன்று மட்டும் விளங்குகிறது

' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் " வைப்பார்களா எல்லாரும்? :huh: :huh: :huh::lol: :lol:

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு நண்பர் ஒரு வானொலியில் செய்தித் தயாரிப்பாளராகவும், வாசிப்பவராகவும் கடமைபுரிந்த காலத்தில் ஏற்பட்ட தனது அனுபவத்தை கூறுகிறார் எப்படியென்றால் ஒரு நாள் தான் செய்தி வாசிக்கும்போது தமிழீழத்தேசியத்தலைவர் என்ற பதத்தை பாவித்ததால் தனக்கும் வானொலி அதிபருக்கும் எற்பட்ட கருத்து வேறுபாடு, தான் விலகுவதிற்கு காரணமாகவிருந்தது என்றார்.

மற்றொரு நண்பர் தனது அனுபவத்தை கூறும்போது , தனது அபிமான நேயர்கள் தன்னை அதிகமாக பாராட்டியது தான் தனக்கும் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை என்கிறார். இப்படி எத்தனையோ சம்பவங்களை கூறிக்கொண்டே போகலாம். முக்கியமாக என்னுமொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் அதாவது அநேகமான அறிவிப்பாளர்கள் தொண்டர்களாகவே அதாவது இலவசமாகவே கடமை புரிகிறார்கள் என்ற சோகமான உண்மையையும் நாம் அறிந்திருப்பது நல்லது.

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

<<<<<<<<<<<<<<<

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. இதற்கு எதிராக மக்கள் தான் கிளர்ந்தெழ வேண்டுமே அன்றி தனியொருவர் எதையும் அதுவும் கனடாவைப்பொறுத்தவரை செய்து விட முடியாது. இது உங்கள் வானொலி இது மக்கள் வானொலி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் 'இங்குள்ள பொலிசாரிடம் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார

இன்று உலகில் உள்ள பெரும்பாலான சகல வானொலிகளும் ஒன்லைனுக்கு வந்துவிட்டனவே! இவை எல்லாவற்றுக்குமாக லிங்குகளை ஒன்றாக இணைத்து அங்கு போகும் நிகழ்ச்சிகளை கேட்டு அதன்பின் விமர்சனம் செய்தால் என்ன?

நான் கூகுலிள் சேர்ச் பண்ணி கீழ்வரும் வானொலி லிங்க்குகளை இணைத்துள்ளேன். உங்களிற்கு தெரிந்த வேறு வானொலி லிங்க்குகளையும் இணைத்தால் அந்தந்த வானொலியின் நேரடி நிகழ்ச்சிகளை கேட்டு விமர்சனம் செய்வதற்கு வசதியாக இருக்கும்!

Welcome to CTR24.COM

http://www.ctr24.com

CTBC - Canadian TAMIL BROADCASTING CORPORATION

http://www.ctbc.com

Thendral.com - First American Tamil Radio

http://www.thendral.com

Merina.com : 24 Hour Tamil Radio (Merina America Thamizhosai!)

http://www.merina.com

Shakthi FM :::...Live Tamil radio station.

http://www.shakthifm.com

::: Welcome to THAALAM.FM 24hrs International Tamil Radio

http://www.worldtamilarweb.com

WELCOME to IBC

http://www.ibctamil.co.uk

ATBC - Australia's Tamil Community RadioCommunity broadcasting

http://www.atbc.net.au

மாப்பிளை தந்திருக்கும் வானோலி லிங்குகனில் முதலாவதாக உள்ளதுதான் தமிழ் தேசியத்துக்காக அயராது பாடுபடுகின்றது

இரண்டாவதாக குறிப்பிட்டுள்ளாரே அதுதான்தமிழ்தேசியத்துக்கு எதிரான குருத்துக்களை பரப்புவது அந்த லிங்கை எடுத்துடுங்களன் மாப்

சீ.ரீ.ஆர் 24ல்கனடா நேரம் வெள்ளி இரவு 9 மணிக்கு அரசியல் களம்

புதன் பகல் 1 மணிக்கு திண்ணை இதில்கலந்து கொண்டு நீங்கள் எந்தரொப்பிக்சிலும் கதைக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.lankasriradio.com/

இதில் சில உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிப்பாளர்களுக்கு மட்டுமா பிரச்சனை அதை கேட்கும் நேயர்களுக்குந்தான். சும்மா வானொலியை மட்டும் கேட்டால் சரி அதில் கலந்துக்க வந்துட்டால் மாதா மாதம் பணம் எண்டும் கேக்கிறாங்களே.

கனடிய தமிழ் வானொலி CTR எப்படி?

அவர்களது அரசியல் களம் நல்ல விடையங்களை அவ்வப் போது தருகிறது.

http://www.tamilnaatham.com/arasiyal_kalam.html

மாப்பிளை தந்திருக்கும் வானோலி லிங்குகனில் முதலாவதாக உள்ளதுதான் தமிழ் தேசியத்துக்காக அயராது பாடுபடுகின்றது

இரண்டாவதாக குறிப்பிட்டுள்ளாரே அதுதான்தமிழ்தேசியத்துக்கு எதிரான குருத்துக்களை பரப்புவது அந்த லிங்கை எடுத்துடுங்களன் மாப்

சீ.ரீ.ஆர் 24ல்கனடா நேரம் வெள்ளி இரவு 9 மணிக்கு அரசியல் களம்

புதன் பகல் 1 மணிக்கு திண்ணை இதில்கலந்து கொண்டு நீங்கள் எந்தரொப்பிக்சிலும் கதைக்கலாம்

CTBC - Canadian TAMIL BROADCASTING CORPORATION

http://www.ctbc.com

கேட்கிறன் என்று குறைவிளங்கக்கூடாது. இந்த வானொலி தமிழீழத்திற்கெதிரானது என்று ஏன் கூறுகிறீர்கள்? நான் இந்த வானொலியை கேட்டதில்லை. இதில் போகும் ஏதாவது ஒரு தமிழீழத்திற்கெதிரான நிகழ்ச்சி போகும் நேரத்தை கூறினால் அதை கேட்டுவிட்டு விமர்சனம் கூறமுடியும்! :blink:

மாப்பு அடிக்க வேணும் ஆனா உடம்பில் தழும்பு தெரியக் கூடாது!

விளக்கமா உருக்கமாப் பேசவேணும் ஆனா விசத்தை வைக்கிற விதம் தெரியாம வைக்கவேணும்.

பேச்சில பேதத்தைக் கலக்க வேணும் ஆனா பிடி குடுக்கக் கூடாது.

மாப்பு அடிக்க வேணும் ஆனா உடம்பில் தழும்பு தெரியக் கூடாது!

விளக்கமா உருக்கமாப் பேசவேணும் ஆனா விசத்தை வைக்கிற விதம் தெரியாம வைக்கவேணும்.

பேச்சில பேதத்தைக் கலக்க வேணும் ஆனா பிடி குடுக்கக் கூடாது.

ஆதி, சுற்றி வளைக்காமல் விமர்சனத்தை நேராக வைக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு அடிக்க வேணும் ஆனா உடம்பில் தழும்பு தெரியக் கூடாது!

விளக்கமா உருக்கமாப் பேசவேணும் ஆனா விசத்தை வைக்கிற விதம் தெரியாம வைக்கவேணும்.

பேச்சில பேதத்தைக் கலக்க வேணும் ஆனா பிடி குடுக்கக் கூடாது.

அரசியல்வாதியா வர வாழ்த்துறன் ஆதிவாசி

quote name='kurukaalapoovan' date='Feb 28 2007, 02:11 PM' post='264271']

கனடிய தமிழ் வானொலி CTR எப்படி?

அவர்களது அரசியல் களம் நல்ல விடையங்களை அவ்வப் போது தருகிறது.

http://www.tamilnaatham.com/arasiyal_kalam.html

[/quote

நீங்கள் குறிப்பிட்டுள்ள சீ ரி ஆர் பற்றித்தான் நான் மேலேகுறிப்பிட்டுள்ளேன்

தமிழ் தேசியத்துக்காக அயராது பாடுபடுகின்றது

ஆதிகுறிப்பிட்டுள்ளதுபோல்தா

''கேட்கிறன் என்று குறைவிளங்கக்கூடாது. இந்த வானொலி தமிழீழத்திற்கெதிரானது என்று ஏன் கூறுகிறீர்கள்? நான் இந்த வானொலியை கேட்டதில்லை. இதில் போகும் ஏதாவது ஒரு தமிழீழத்திற்கெதிரான நிகழ்ச்சி போகும் நேரத்தை கூறினால் அதை கேட்டுவிட்டு விமர்சனம் கூறமுடியும்! ""

வல்வை மைந்தன் தழிழ்தங்கை ஆகியோர் குறிப்பிட்டுள்ளார்களே அதுஅந்தறேடியோபற்றிதான்

ஆதி சோட் அன் சுவீற்ரா சொல்லிஉள்ளாரே

அந்தறேடியோவின் போக்கு பிடிக்காமல் தற்போது அதனைநான் பேட்பதில்லை

quote name='கறுப்பி' date='Feb 28 2007, 12:04 PM' post='264235']

அறிவிப்பாளர்களுக்கு மட்டுமா பிரச்சனை அதை கேட்கும் நேயர்களுக்குந்தான். சும்மா வானொலியை மட்டும் கேட்டால் சரி அதில் கலந்துக்க வந்துட்டால் மாதா மாதம் பணம் எண்டும் கேக்கிறாங்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க அவசரம் என்ன என்று புரிகிறது...அதாவது தமிழ்தங்கை, வல்வை மைந்தன் போன்றவர்களினால் குறிப்பிடப்படும் அந்த துரோகி வானொலி எது? நண்பரே செய்தி ஒலிபரப்பை கவனித்தீங்க என்றால் போதுமே நீங்களாகவே கண்டுபிடித்துவிடலாமல்லவா?

அந்த வானொலிதான் சுனாமி நேரத்தில் காசை சேர்த்துப்போட்டு உரியவர்களிடம் ஒப்படைக்காமல் ஏப்பம் விட்டு விட்டு கள்ளக் கணக்கு நேயர்களுக்கு காட்டினவர்கள்.

''கேட்கிறன் என்று குறைவிளங்கக்கூடாது. இந்த வானொலி தமிழீழத்திற்கெதிரானது என்று ஏன் கூறுகிறீர்கள்? நான் இந்த வானொலியை கேட்டதில்லை. இதில் போகும் ஏதாவது ஒரு தமிழீழத்திற்கெதிரான நிகழ்ச்சி போகும் நேரத்தை கூறினால் அதை கேட்டுவிட்டு விமர்சனம் கூறமுடியும்! ""

வல்வை மைந்தன் தழிழ்தங்கை ஆகியோர் குறிப்பிட்டுள்ளார்களே அதுஅந்தறேடியோபற்றிதான்

ஆதி சோட் அன் சுவீற்ரா சொல்லிஉள்ளாரே

அந்தறேடியோவின் போக்கு பிடிக்காமல் தற்போது அதனைநான் பேட்பதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.