Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’அனைத்துத் தர மக்களிடம் கடன் தொல்லை காணப்படுகிறது’

Featured Replies

’அனைத்துத் தர மக்களிடம் கடன் தொல்லை காணப்படுகிறது’
 

image_4903c3bbd2.jpgவடபகுதியிலுள்ள அனைத்துத் தர மக்களிடமும் கடன் தொல்லை காணப்படுவதாகத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், நிதி நிறுவனங்கள் மீதும், தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

 

நாவாந்துறை கிளை நூலக திறப்பு விழா இன்று (30) காலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு பண்பட்ட எமது சமூகம், இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றது. சமூகப் பழக்கவழக்கங்கள் குன்றியவர்களாக போதைப் பொருள், கலாசார சீரழிவு ஆகியவை மலிந்த ஓர் இனமாக, நாங்கள்  மாறியிருப்பது எமக்கு மிகுந்த வேதனை அளிக்க வேண்டும்.

“கட்டுப்பாடுகள் மிகுந்த காலத்திலும், அடிப்படை வசதிகள், மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகிய வசதிகள் அற்ற நிலையிலும், வட பகுதியானது கல்வியில் மிகவும் சிறந்த நிலையில் நின்று முதலாவது இடத்தைப் பெற்றிருந்தமை, இச்சந்தரப்பத்தில் நினைவுகூரப்பட வேண்டும்.

“வடமாகாணத்துக்கு வெளியே உள்ள ஏனைய மாகாணங்களுடன் வர்த்தகத் தொடர்புகள் அற்ற நிலையிலும், எமது மக்களிடம் பணப்புழக்கம் அந்தக் காலகட்டத்தில் சீராக இருந்தது.

“இன்று, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வர்த்தகம், கொடி கட்டிப் பறக்கின்றது. தொடர் மின்சாரம் கிடைக்கின்றது. போக்குவரத்து ஒழுங்குகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளங்கை வரை வந்துவிட்டன. மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள், நிறுத்தி வைக்கக்கூட போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “அனைத்துத்தர மக்களிடமும், இன்று கடன் தொல்லை நிறைந்து காணப்படுகின்றது. பட்டி தொட்டி எங்கும் முளைத்துள்ள நிதி நிறுவனங்கள், எமது வர்த்தகர்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் ஆசை வார்த்தை காட்டி, உதவுவது போல் நடித்து, எமது வடபகுதியை விட்டு, அவர்களின் பணத்தை வெளியே எடுத்துச் செல்கின்றார்கள். நுகர்ச்சிப் பொருட்களில் எமது நாட்டங்கள் பதிந்துவிட்டதால், பணவிரயத்துக்கு முகம் கொடுத்து வருகின்றோம். 

“வளர்ச்சியடைந்த நாடுகள் மனித வலுவின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நவீனரக மின்னியல் சாதனங்களைக் கண்டுபிடித்தனர். எம்மைப் போன்ற வளர்முக நாடுகளில் வசிக்கின்ற மக்களோ தங்கள் முழுநேரத்தையும் மழுங்கடிக்கச் செய்துள்ளார்கள் இந்தச் சாதனங்கள் மூலம்.  அவர்களைக் கல்வி-கேள்வி அறிவுகளில் இருந்து தூரத் தள்ளிவிட்டுள்ளன இந்தச் சாதனங்கள். கலாசார சீரழிவுகள், தீய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தக்க வகையில் இச் சாதனங்கள் மாறிவிட்டன. அதன் விளைவு, கல்வி, கேள்வி அறிவுகளில் வடமாகாணம், 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

“எனவே, எமது இளைய தலைமுறை சரியான பாதையில் பயணிப்பதற்கான அனைத்து உதவி ஒத்தாசைகளையும் வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு, எம்மத்தியில் காணப்படுகின்றது” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அனைத்துத்-தர-மக்களிடம்-கடன்-தொல்லை-காணப்படுகிறது/71-201499

  • கருத்துக்கள உறவுகள்

Free market and Foreing Infrastructure 

 

இவை இரண்டின் தாக்கமும் இன்னமும் புரியாது 
நிறைய எழுதலாம் .........
அதுதான் மக்கள் நிம்மதியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது என்பார்கள்.

சொந்த அனுபவம் பெஸ்ட்.

தலைமை செயலகம் 
கிளிநொச்சி - தமிழ் ஈழம் 

என்று ஒரு முகவரி ஈழ தமிழனுக்கு இருந்தது என்பது 
30 வருடம் கடந்த பின்புதான் புரியும். 

சுயத்தை சுலபமாக இழப்பது 
சுகமாக இருக்கிற போது புரியாது.

6 minutes ago, Maruthankerny said:

Free market and Foreing Infrastructure 

 

இவை இரண்டின் தாக்கமும் இன்னமும் புரியாது 
நிறைய எழுதலாம் .........
அதுதான் மக்கள் நிம்மதியாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது என்பார்கள்.

சொந்த அனுபவம் பெஸ்ட்.

தலைமை செயலகம் 
கிளிநொச்சி - தமிழ் ஈழம் 

என்று ஒரு முகவரி ஈழ தமிழனுக்கு இருந்தது என்பது 
30 வருடம் கடந்த பின்புதான் புரியும். 

சுயத்தை சுலபமாக இழப்பது 
சுகமாக இருக்கிற போது புரியாது.

புலிகளுன் தடை நீக்கபட்டபடியால் அவர்களது சொத்துக்கள் யாருக்கு சொந்தம்?

சமயோசிதமாக செயற்பட்டால் அதை ஒரு அறக்கட்டளையாக்கி மக்களுக்கு பலதை செய்யலாம்.

Jane's Defence Journal படி புலிகளின் வருட வருமானம் $ 300 மில்லியன்.

  • தொடங்கியவர்

கல்­வி­யில் பின்­ன­டைவே சீர­ழி­வுக்குக் கார­ணம்

வடக்கு முத­ல­மைச்­சர் சுட்­டிக்­காட்டு

 
கல்­வி­யில் பின்­ன­டைவே சீர­ழி­வுக்குக் கார­ணம்
 

நாட்­டின்  ஏனைய மாகா­ணங்­க­ளு­டன் தொடர்­பில்­லாத கால­கட்­டத்­தில் சீராக இருந்த வடக்கு மாகா­ணத்­தில் இன்று  போதைப்­பொ­ருள், கலாச்­சார சீர­ழிவு, சமூக விரோ­தச் செயல்­கள் மலி­வ­டைந்­துள்­ளன.

அதற்கு என்ன கார­ணம் என்­பதை நாம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். இளம் தலை­மு­றை­யி­ன­ருக்­கான வசதி வாய்ப்­புக்­கள் அதி­க­ரித்து அவர்­க­ளி­டையே கல்வி அறிவு பின்­ன­டைந்து செல்­கின்­ற­மையே பிர­தான கார­ணம்.

இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

நாவந்­துறை கிளை நூல­கத் திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. அதில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­தா­வது;-

கல்­வி­யில் சிறந்து விளங்­கிய ஒரு பண்­பட்ட எமது சமூ­கம் இன்று கல்­வி­யில் மிக­வும் பின்­தங்­கிய நிலை­யில் நிற்­கின்­றது. சமூ­கப் பழக்க வழக்­கங்­கள் குன்­றி­ய­வர்­க­ளாக போதைப் பொருள், கலா­சார சீர­ழிவு ஆகி­யவை மலிந்த ஒரு இன­மாக நாங்­கள்  மாறி­யி­ருப்­பது வேதனை மிக்­கது.
கட்­டுப்­பா­டு­கள் மிகுந்த காலத்­தி­லும், வட பகு­தி­யா­னது அடிப்­படை வச­தி­கள், மின்­சா­ரம், போக்­கு­வ­ரத்து, தொலைத்­தொ­டர்பு ஆகிய வச­தி­கள் அற்ற நிலை­யி­லும் கல்­வி­யில் மிக­வும் சிறந்த நிலை­யில் இருந்­தது.

வட­மா­கா­ணத்­துக்கு வெளியே உள்ள ஏனைய மாகா­ணங்­க­ளு­டன் வர்த்­த­கத் தொடர்­பு­கள் அற்ற நிலை­யி­லும் எமது மக்­க­ளி­டம் பணப் புழக்­கம் அந்­தக் கால­கட்­டத்­தில் சீராக இருந்­தது.  ஆனால் இன்று கொழும்­புக்­கும்  யாழ்ப்­பா­ணத்­துக்­கும் இடை­யி­லான வர்த்­த­கம் கொடி கட்­டிப் பறக்­கின்­றது. தொடர் மின்­சா­ரம் கிடைக்­கின்­றது. போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­கள் மிகச் சிறப்­பாக இருக்­கின்­றன.

தொலைத்­தொ­டர்பு வச­தி­கள் உள்­ளங்கை வரை வந்­து­விட்­டது. மோட்­டார் சைக்­கிள்­கள், வாக­னங்­கள், நிறுத்தி வைக்­கக்­கூட போதிய இடம் இல்­லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் அனைத்­துத்­தர மக்­க­ளி­ட­மும் இன்று கடன் தொல்லை நிறைந்து காணப்­ப­டு­கின்­றது.நிதி நிறு­வ­னங்­கள் எமது வர்த்­த­கர்­கள் மற்­றும் மக்­க­ளி­ட­மி­ருந்து பணத்தை வெளியே எடுத்­துச் செல்­கின்­றார்­கள்.

இந்­தச் சூழ்­நி­லை­யில்­தான் எங்­கள் பிள்­ளை­கள் கல்வி கற்­கின்­றார்­கள். இவற்­றை­யும் மீறி ஒரு சில பிள்­ளை­கள் கல்­வி­யில் ஆர்­வ­மாக இருக்­கின்­றார்­கள் என்­றால் அவர்­க­ளை­யும் குழப்­பு­வ­தற்கு விதம் வித­மான அலை­பே­சி­கள்  அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. வீதி­யில் செல்­கின்ற பிள்­ளை­கள் சித்த சுவா­தீ­னம் அற்­ற­வர்­களோ என சந்­தே­கிக்­கப்­ப­டக் கூடிய வகை­யில் அவர்­கள் தனியே சிரிப்­பது போல­வும், தம்­மு­டன் தாமே கதைத்­துக் கொண்டு செல்­வது போல­வும், எமக்­குத் தோற்­ற­ம­ளிக்­கின்­றார்­கள்.

உற்­றுப் பார்த்­தால் காதுக்­குள் சிறிய ரக தொலை­பேசி. அது­வும் போதா­தென்று செல்பி எடுக்­கச் சென்று அரு­மந்த உயிர்­கள் பல தொட­ருந்­துத் தண்­ட­வா­ளங்­க­ளி­லும், கடற்­க­ரை­யி­லும் ஆற்­றி­லும் தொலைக்­கப்­ப­டு­கின்­றன. கலா­சார சீர­ழி­வு­கள், தீய பழக்க வழக்­கங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கத்­தக்க வகை­யில்  இந்­தச்  சாத­னங்­கள் மாறி­விட்­டன.

எமது இளைய தலை­மு­றை­யைச்  சரி­யான பாதை­யில் பய­ணிப்­ப­தற்­கான அனைத்து உதவி ஒத்­தா­சை­க­ளை­யும் வழங்க வேண்­டிய பொறுப்பு எம்­மத்­தி­யில் காணப்­ப­டு­கின்­றது. -என்­றார்.

http://uthayandaily.com/story/15183.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.