Jump to content

''காது கேளாத, வாய் பேசமுடியாத மகனை பிஹெச்.டி படிக்க வெச்சேன்!" 'சூப்பர் மாம்' விஜயலட்சுமி #CelebrateMotherhood #SuperMom


Recommended Posts

''காது கேளாத, வாய் பேசமுடியாத மகனை பிஹெச்.டி படிக்க வெச்சேன்!" 'சூப்பர் மாம்' விஜயலட்சுமி #CelebrateMotherhood #SuperMom

 
 

மகனுடன் விஜயலட்சுமி

‘'ங்களுக்குத் திருமணமாகி மூணு வருஷம் கழிச்சுதான் மனீஷ் பிறந்தான். வளர வளர செவித்திறனில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிச்சோம். பேச்சும் வரலை. எல்லோரும் ‘சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்துவிட்டால், பிரத்யேகப் பயிற்சி கொடுப்பாங்க’னு சொன்னாங்க. பள்ளியில் அவனோடு நானும் இருந்தால், இன்னும் சிறப்பா செயல்படுவான் என நினைச்சேன்'' என மெல்லியக் குரலில் ஆரம்பிக்கிறார் விஜயலட்சுமி. சென்னை, அடையாறைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர். 

''என் வாழ்க்கையில் எத்தனையோ குழந்தைகளுக்கு ட்ரீட்மென்ட் பார்த்திருக்கேன். ஒவ்வொரு குழந்தையையும் என் குழந்தையாக நினைச்சுதான் பார்ப்பேன். என் குழந்தைக்கே ஒரு குறை வந்தபோது, ஆரம்பத்தில் ஜீரணிக்க முடியாமல் தவிச்சோம். அப்புறம், எங்களை நாங்களே ஆசுவாசப்படுத்திக்கிட்டு, கடவுள் கொடுத்த குழந்தையாக வளர்க்க ஆரம்பிச்சோம். அவனுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்க நினைச்சேன். அதுக்காக, நான் நேசிச்ச எனக்குப் பிடிச்ச டாக்டர் தொழிலைக் கைவிட்டேன். என் குழந்தையை என்னால் மட்டும்தன் அதிகம் புரிஞ்சு பார்த்துக்க முடியும்னு நம்பினேன். அப்போ நாங்க கேரளாவில் இருந்தோம். என் கணவர் கணேஷிடம் இந்த முடிவைச் சொன்னதும் அவரும் ஏத்துக்கிட்டார். வங்கி ஊழியராக இருந்த அவர் மாற்றல் வாங்கினார். நாங்க சென்னைக்கு வந்தோம். 

இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மயிலாப்பூரில் இருக்கும் 'சில்ரன் கார்டன் ஸ்கூல்'ல மனீஷைச் சேர்த்தோம். அந்தப் பள்ளியில் பணிபுரிந்த சகுந்தலா ஷர்மா, சிறந்த ஆசிரியையாக அவனை அற்புதமாகப் பார்த்துக்கிட்டாங்க. பிறகு, சோழிங்கநல்லூரியில் இருக்கும் சில்ட்ரன் கார்டன் ஸ்கூலின் கிளையான, எலென் சர்மா பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கவெச்சோம். நான் அந்தப் பள்ளியிலேயே குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியையா பணிபுரிய ஆரம்பிச்சேன். சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியையா நான் எடுத்துக்கிட்ட பயிற்சிகளுக்குப் பின்னாடி, ஓர் அம்மாவின் தவிப்பும் இருந்ததால், முழு அர்ப்பணிப்போடு ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டேன். 

1997-ம் வருஷம், எலென் சர்மா பள்ளியின் சார்பாக நெதர்லாந்து மற்றும் லண்டனுக்குப் போனேன். காது, கண் குறைபாடு, ஆட்டிஸம் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது, அவங்க வளர்ந்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளப் பயிற்சி கொடுப்பது மற்றும் ஸ்பெஷல் டீச்சர்களுக்குப் பயிற்சி கொடுப்பது எனப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். சில ஆராய்ச்சிகளையும் செய்தேன். பாண்டிச்சேரி, குஜராத், போபால் என நாடு முழுக்க பயணம் செஞ்சு இந்தப் பணிக்காக செயல்பட்டிருக்கேன்'' என்கிறார் விஜயலட்சுமி. 

25 வருடங்களாக ஒவ்வொரு நொடியும் பிள்ளைக்காகவும் சிறப்புக் குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்துவரும் இந்தத் தாய், ''இப்போ எனக்கு 57 வயசு. எங்கள் மகன் மனீஷை பி.எஸ்ஸி, பயோடெக், எம்.எஸ்ஸி, பயோடெக் என முடித்திருக்கிறார். மனீஷுக்கு எதையுமே விஷுவலா சொல்லிக்கொடுத்தாதான் புரியும். அதனால், முடிந்தவரை எல்லாத்தையும் அவனுக்கு நேரடியா காட்டிதான் கற்பிச்சோம். உதாரணமா, நாடாளுமன்றத் தேர்தலை அவனுக்குப் புரியவைக்க, சிறப்பு அனுமதி வாங்கி, நாடாளுமன்றத்துக்கே அழைச்சுட்டுப் போய் சொல்லிக்கொடுத்தோம். ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன் எனப் பல இடங்களுக்கு அழைச்சுட்டுப் போயிருக்கோம். ஸ்கூல், காலேஜுக்காக இடம் மாறும்போதெல்லாம், அவனுக்காகக் கிட்டத்தட்ட 12 வீடுகள் மாறியிருப்போம். எந்தச் சூழலிலும் அவன் தனிமையாவோ, தாழ்வாவோ தன்னை நினைச்சுக்கக்கூடாதுனு நாங்க இன்னொரு குழந்தையைப் பெத்துக்கலை'' என்கிற விஜயலட்சுமி, சில நிமிட அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். 

‘‘சென்னை, படூர் 'ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்' கல்லூரியில் பி.எஸ்ஸி., பயோடெக்கும், மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி., பயோடெக்கும் முடிச்சுட்டு அங்கேயே ரிசர்ச் பண்ணிட்டிருந்தான். இப்போ அதையும் வெற்றிகரமாக முடிச்சுட்டான். மனீஷை இன்னிக்கு நார்மல் குழந்தைகளுக்கு இணையா வளர்த்ததுக்குப் பின்னாடி, ஒரு பெற்றோராக உழைப்பும் அன்பும் அர்ப்பணிப்பும் மிக அதிகம். படிப்பில் பிலோ ஆவரேஜா இருக்கும் பிள்ளைகளைப் பற்றி அவங்க பெற்றோர் கவலைப்படுறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகளை 'படி படி' எனக் கட்டாயப்படுத்தும், நச்சரிக்கும் பெற்றோர்களையும் கவனிச்சிருக்கேன். ஒரு சிறப்புக் குழந்தையைப் பெற்றோர் நினைச்சா முதுநிலை பட்டதாரி ஆக்க முடியும்போது, ஆவரேஜ் குழந்தையையும் அம்மா நினைச்சா சூப்பர் குழந்தையா ஆக்கலாம்தானே? 

 

மனீஷுக்கு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி கல்யாணம். நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிஞ்சிருக்கு. பொண்ணு பெயர் மானஸி. ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட். நல்லா ஓவியம் வரைவாங்க. அவங்களும் மனீஷ் மாதிரியே காது கேளாத, வாய் பேச முடியாதவங்க. மனீஷ் படிச்ச பள்ளியில்தான் மானஸியும் படிச்சிருக்காங்க. திருமணம் குறித்த பேச்சு வந்தது. மனீஷ், மானஸியிடம் பதினைந்து முறைக்கும் மேலே சைகை மொழியில் பேசினான். ரெண்டுப் பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சுப்போச்சு. கல்யாணத்தை முடிவு பண்ணிட்டோம். 27 வருஷமா மனீஷ்கூட தாயாக மட்டுமில்லாமல், ஒரு தோழியாக இருந்திருக்கேன். அவன் வாழ்க்கை முழுக்கவும் இருக்க ஒரு தேவதை எங்க வீட்டுக்கு வரப்போறாங்க. அதுதான் இப்போ எங்களின் மொத்த சந்தோஷம்'' என முகமும் குரலும் பூரிக்கச் சொல்கிறார் விஜயலட்சுமி.

http://www.vikatan.com/news/tamilnadu/97565-a-mother-drvijayalakshmis-success-story.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.