Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ் சேவையில் பெண்கள் இணைய வேண்டும்.- அனந்தி சசிதரன்

Featured Replies

பொலிஸ் சேவையில் பெண்கள் இணைய வேண்டும்.- அனந்தி சசிதரன்

 
பொலிஸ் சேவையில் பெண்கள் இணைய வேண்டும்.- அனந்தி சசிதரன்
 

வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு வடக்கு மாகாண மகளிர் விவகார புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றம் கூட்டுறவுத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற துணியிலான பைகளைப் பயன்படுத்துவதற்கான தையல் பயிற்சி நெறி அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது-

முன்னைய காலங்களில் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பணிகளில் பெண்கள் பணியாற்றியுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் பெண் அலுவலர்களுக்கு தனித்துவமான கௌரவம் வழங்கப்படுகிறது.

அலுவலகங்களில் கடமையாற்றுவது போல் பொலிஸ் திணைக்களத்திலும் பகல் நேரக் கடமைகள் பெண் அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. க.பொ.த.உயர்தரம் படித்தவர்களுக்கு உதவி ஆய்வாளர் பதவிகள் வழங்கப்படுகின்றன. அரச பணியை விரும்புபவர்கள் பொலிஸ் திணைக்களத்தையும் அரச திணைக்களமாகக் கருதி சேவையாற்ற வேண்டும்.

வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு கொடுக்கும் போது அங்கு கடமையாற்றும் ஆண் பொலிஸ் அலுவலர்களிடம் முழுமையான விடயங்களைச் சொல்லாமல் விடுகிறார்கள்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றுக்கு வரும் வேளைகளில் முறைப்பாட்டுக்கும் பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் சாட்சியத்துக்கும் பெரிதும் முரண்பாடுகள் காணப்படுவதைக் காணமுடிகிறது.

இந்த நிலை மாற வேண்டுமாயின் வட மாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணையவேண்டும். இவர்களது கடமைக் காலத்தில் வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களிலே கடமையாற்றவும் முடியும்.

வடமாகாணத்துக்கென ஒரு பொலிஸ் திணைக்களம் உருவாக்கப்பட்டால் நிச்சயம் அங்கு கடமையாற்றுபவர்கள் தமிழ் தெரிந்த பொலிஸாராக இருக்க வேண்டுமென்பது எமது ஆசை. பொலிஸ் சேவையில் தமிழ் மொழியிலான 500 பெண் பொலிஸ் அலுவலர்கள் தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைய முன்வரல் வேண்டும். – என்றார்.

http://uthayandaily.com/story/16116.html

’வட மாகாண மகளிர் விவகார அமைச்சில் நிதியில்லை’
 

வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களுக்கு நிதி, அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் துணியிலான பைகள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வட-மாகாண-மகளிர்-விவகார-அமைச்சில்-நிதியில்லை/71-201784

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யோசனை தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.