Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்த முருகேசனாரும் ஆறுமுகநாவலரும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பலோட்டிய தமிழன் தமிழ் எழுச்சி என்ற போராட்டத்தைக் கொண்டு சென்றபோது, சாதிப்பிரியர் பெரியாரால் எதிர்க்கப்பட்டவர் தானே! அப்போது, தனக்குப் போட்டியாக வ.உ.சி வரக்கூடாது என்ற வெறி தானே அந்த மனிதரிடம் இருந்தது. இப்போது என்னவோ, கதையை மாத்துகின்றீர்

தூயவன் ! பெரியர் மீது உமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் அதற்காக ஏன் பொய் பித்தலாட்டங்களைப் பரப்புகிறீர். உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு பக்குவமற்ற கோழை நீர்!

பெரியார் எங்கு வ.உ.சியை எதிர்த்தார்?????!!!!

வ.உ.சியும் பெரியாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் ராஜாஜியைத்தான் எதிர்த்தார். ஆனால் தனிப்பட்ட முறையில் பெரியார் ராஜாயிமேல் வைத்திருந்த நட்பு அளப் பெரியது.

தனது நாயக்கர் என்ற சாதிப் பெயரையே நீக்கயவர் பெரியார். அவரும் சரி நாங்களும் சரி தனிப்பட்ட முறையில் பார்பனர்களை வெறுத்ததில்லை. ஆதிக்க வெறியைத்தான் எதிர்க்கிறோம்.

நான் திராவிடத் தேசியத்தை ஏற்றுக் கொள்பவன் அல்ல. அதைத் தூக்கி குப்பையில் போடுவதுதான் சரி. அதற்காக பெரியரைக் குறை கூறுவது சரியல்ல.

வ.உ.சி.யை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் இந்தியத் தேசியவாதி. இன்று இருந்திருந்தால் நிச்சயம் தமிழ்த் தேரியவாதியாகத்தான் இருந்திருப்பார். அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒட்டு மொத்த உணர்வு இந்திய தேசியமாய் எதிரொலித்தது. தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருக்கும் இன்றைய காலத்தில் அது ஒரு ஏகாதிபத்திய அரசு. அதற்காக நான் வ.உ.சி.யை குறை கூற முடியாது.

இதே போன்றுதான் பெரியாரின் திராவிடமும். வட ஆரிய எரிர்ப்புக்கு ஒரு வலிமையான கருவியாக அவர் திராவிடத்தை பயன் படுத்தினார். பின்னர் 1955 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த போது அவர் திராவிடத்தைக் கைவிட்டு விட்டு தமிழ்த் தேசியத்தையே உயர்த்திப் பிடிக்கிறார். இறக்கும் வரை அவரது தமிழ்த் தேசியக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆரிய அடிவருடிகளான உங்களுக்கு அவர் இந்து மதத்தை எதிர்த்தார் என்பதுதான் கோபம்.

இந்தப் பட்டயலில் உள்ள அனைவரும் இந்து மத்தை மிகத் தீவிரமாக எதிர்தவர்கள் தாம்

வள்ளுவர்

புத்தர்

அம்பேத்கர்

மகாத்மா ஜோதிராவ் புலே

பாவாணர்

தமிழ் சித்தர்கள்

வள்ளலார்

சோம சுந்தரப் பாரதியார்....................................

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் ! பெரியர் மீது உமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் அதற்காக ஏன் பொய் பித்தலாட்டங்களைப் பரப்புகிறீர். உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு பக்குவமற்ற கோழை நீர்!

பக்குவமற்ற கோழை தாங்கள் தான் நண்பரே! இந்து மதத்தில் சீர்திருத்தவாதிகளை, மத வெறுப்பாளன் ஒருவனோடு தொடர்பு படுத்தி நியாயம் பேசி வார்த்தைச் சாடல் செய்கின்ற கோழை நீர். அதுவும், இந்து மதக் கோட்பாட்டினை ஆரியர் ஆக்கிரமித்தார்கள் என்ற உண்மையை மறைத்து, அது எங்களுக்கல்ல என்று மறைக்க முயல்கின்றீர்.

பெரியார் எங்கு வ.உ.சியை எதிர்த்தார்?????!!!!

வ.உ.சியும் பெரியாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் ராஜாஜியைத்தான் எதிர்த்தார். ஆனால் தனிப்பட்ட முறையில் பெரியார் ராஜாயிமேல் வைத்திருந்த நட்பு அளப் பெரியது.

தனது நாயக்கர் என்ற சாதிப் பெயரையே நீக்கயவர் பெரியார். அவரும் சரி நாங்களும் சரி தனிப்பட்ட முறையில் பார்பனர்களை வெறுத்ததில்லை. ஆதிக்க வெறியைத்தான் எதிர்க்கிறோம்.நான் திராவிடத் தேசியத்தை ஏற்றுக் கொள்பவன் அல்ல. அதைத் தூக்கி குப்பையில் போடுவதுதான் சரி. அதற்காக பெரியரைக் குறை கூறுவது சரியல்ல.

வ.உ.சி.யை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் இந்தியத் தேசியவாதி. இன்று இருந்திருந்தால் நிச்சயம் தமிழ்த் தேரியவாதியாகத்தான் இருந்திருப்பார். அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒட்டு மொத்த உணர்வு இந்திய தேசியமாய் எதிரொலித்தது. தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருக்கும் இன்றைய காலத்தில் அது ஒரு ஏகாதிபத்திய அரசு. அதற்காக நான் வ.உ.சி.யை குறை கூற முடியாது.

நாயக்கர் பெயரை நீக்கப் பெரியார் பாடுபட்டார் என்ற கதையிருக்கட்டும். பெரியார் புராணங்கள் எல்லாம், உயர் ஐாதி நாயக்கர் வம்சத்தில் பிறந்த ராமசாமி..... என்று தானே தொடங்குகின்றன. அதிருக்க, பாப்பானி என்று பிராமணர்களைத் திட்டியது மட்டும் ஐாதி பெயர் நீக்குதலோ!

என்றைக்குமே தமிழ் தேசியம் தான் உயர்ந்தது. அந்தத் தமிழ் தேசியத்தைக் கூறுபோடுவனை மட்டுமல்ல, அதைத் தாழ்த்திப் பேசுபவனையும் அனுமதித்தலாகது. அது பெரியாராக இருக்கட்டும். தமிழை நீசமொழி என்று திட்டிய காஞ்சிச் சங்கராச்சாரியராட்டும்.

ஆனால் இன்று திராவிடப் பாசறை தான், காஞ்சி சங்கராச்சரியரைக் காப்பாற்றி வைத்திருக்கின்றது

இதே போன்றுதான் பெரியாரின் திராவிடமும். வட ஆரிய எரிர்ப்புக்கு ஒரு வலிமையான கருவியாக அவர் திராவிடத்தை பயன் படுத்தினார். பின்னர் 1955 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த போது அவர் திராவிடத்தைக் கைவிட்டு விட்டு தமிழ்த் தேசியத்தையே உயர்த்திப் பிடிக்கிறார். இறக்கும் வரை அவரது தமிழ்த் தேசியக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆரிய அடிவருடிகளான உங்களுக்கு அவர் இந்து மதத்தை எதிர்த்தார் என்பதுதான் கோபம்.

தமிழர்களைக் காப்பாற்றும் போராட்டம் என்றால், அன்னிய நாட்டில் இருந்த வந்த, கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் பெரியார் எதிர்க்கவில்லை என்பது குறித்து கட்டுரை ஒன்றை இணைத்திருந்தேன். அதற்குப் பதிலளிக்கலாமே! அதை விட்டு விட்டு, கோடு விழுந்த சீடி மாதிரி பெரியார் ஆரிய எதிர்ப்பாளர் என்று புலம்பிக் கொண்டிருப்பதால் எவ்வித பலனுமில்லை.

ஈரோட்டில் இந்திப் பள்ளியை ஆரம்பித்து வைத்தவர் பெரியார் தான் என்ற குறிப்பும் கிடைத்துள்ளது. முடிந்தால் அதற்கும் பதிலளியும்.

அவர் திராவிடக் கொள்கையை விட்டு, தமிழ் தேசியமாக வருவதாக நீர் சொல்வது எல்லாம், வ.உ.சி ஏற்படுத்திய பாதிப்புக்களால் தான். நீர் சொன்னது போல, பெரியாரை வ.உ.சி பின்பற்றவில்லை. வ.உ.சிக்குப் பின்னால் தான் பெரியார் என்ற கன்னடர் பதுங்கிப்பதுங்கி வந்தார்.

இந்தப் பட்டயலில் உள்ள அனைவரும் இந்து மத்தை மிகத் தீவிரமாக எதிர்தவர்கள் தாம்
மதத்தை அவர்கள் எதிர்த்துக் கொண்டு, அம்மதத்தில் தான் அவர்கள் இருந்தார்கள் என்று கதை விடுவது உமக்கு ஒன்றும் குழப்பமாக இல்லையா?

வள்ளுவர்: வள்ளுவரையும் இந்தப்பட்டியலில் இணைக்கதீர். மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையோடு தான் வள்ளுவரின் குறள் அமைந்திருந்தன.

புத்தர்: புத்தர் பற்றிய பாலா அண்ணாவின் 2005ம் ஆண்டு மாவீர் தின உரை கேட்கவில்லை போலும். அவர் ஒரு இந்து மத சீர்திருத்த வாதி என்று பாலா அண்ணா விளக்கம் கெடுத்ததை முதலில் கேட்கவும். விலங்கு வதைக்கு எதிராகப் புறப்பட்டவர் தானே புத்தர். சீர்திருத்தவாதிகள் வரவேற்கப்பட வேண்டியவர்களே!

அம்பேத்கர்: இவர் பெளத்த மதத்தைச் சார்ந்தவரே! மேலும், மக்கள் மதம் மாறுவதை ஊக்குவிப்பதற்காக, இந்தியச் சட்டங்களில் பிற மதங்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர்.

கீழே சொன்னவர்கள் எல்லோரும், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக பாரதியார் ஆரியரின் வழிபாடான கண்ணன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர். உமது தேவைகளுக்காகப் பொய்யாக உரைக்க வேண்டாம்.

மதச் சீர்திருத்தவாதிகளுக்கும், மதத்தை எதிர்ப்பவர்களுக்கும் கோடு போட வேண்டாமே! இவர்கள் மதத்தை எதிர்த்தவர்கள் என்று சொல்லுகின்ற நீர், அவர்கள் அம் மதங்களில் மிகுந்த பற்றுள்ளவர்கள் என்பதை ஏன் மறைக்கின்றீர்.

இவர்கள் மதப்பற்றாளராக இருந்ததால், அவர்களையும் ஆரிய அடிவருடிகள் என்று திட்டலாமே!

மகாத்மா ஜோதிராவ் புலே

பாவாணர்

தமிழ் சித்தர்கள்

வள்ளலார்

சோம சுந்தரப் பாரதியார்....................................

63 நாயன்மார்கள் வெவ்வேறு பிரிவினராக இருந்தபோதும் அனைவரும் போற்றப்படுகிறார்கள்.
தூயவன் நீங்கள் சொல்வது மிகச்சரியான விடயங்கள். எப்படி உங்களால் இவ்வளவு விரிவாக எழுதமுடிகிறது.

என்றைக்குமே தமிழ் தேசியம் தான் உயர்ந்தது. அந்தத் தமிழ் தேசியத்தைக் கூறுபோடுவனை மட்டுமல்ல, அதைத் தாழ்த்திப் பேசுபவனையும் அனுமதித்தலாகாது. அது பெரியாராக இருக்கட்டும். தமிழை நீசமொழி என்று திட்டிய காஞ்சிச் சங்கராச்சாரியராட்டும்.

கருணா என்ன நோக்கத்துக்காக எரிந்துபோன பிரதேசவாதத்துக்கு உயிர்கொடுக்க முற்பட்டாரோ அதே போலவே சிலர் தங்களை அறியாமலே தூண்டப்படுகிறார்களோ என சந்தேகமாய் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி உங்களால் இவ்வளவு விரிவாக எழுதமுடிகிறது.

வேலைவெட்டி இல்லாததால் தான். :rolleyes: :P

  • 5 years later...

காலத்திற்கு ஒவ்வாத பதிவு.

புலிக்காச்சல் எப்படிச் சிலரை விடாது வாட்டிவருகிறதோ அப்படியே சாதிக்காச்சலும் சிலரை விடாது வாட்டிவருகிறது. சாதிப்பாகுபாடுகள் இல்லாத நாடுகள் உலகத்தில் எங்குமே இல்லை இன்றைய அறிவியல் உலகத்தில் சாதியைத் சேர்ந்துள்ள அதன் திமிர், கொடுமை, வக்கிரம் போன்ற தன்மைகள் குறைந்து அழிந்து வருவதையே அனுபவத்தில் காணலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலமையையும் இன்றைய நிலையையும் ஒப்பீடு செய்துபார்க்கும் பொழுது சாதியின் வக்கிரத் தாக்கத்தின் தன்மை தணிந்தே வருகிறது. . அது பொய்யெனில் தணிந்துபோகும் சாதித் திமிரை ஊதி எரியவிட்டு நொந்துபோயிருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்பிப் பிரித்து குளிர்காய முயல்வதாகவே கொள்ளமுடியும்.

 
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்ட காலத்தில் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டுதான் இருந்தது. முன்னைய வீரியம் இல்லையாயினும் சாதீயம் முற்றாக ஒழியவில்லை. பார்க்க செய்தி:

 

யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது : நிவேதா நேசன்
 
 
 

uduppiddi_inioru.com_-300x225.jpg

 

இன்று இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் அதிலும் குறிப்பாக வடக்கின் யாழ்ப்பாணம் சார்ந்த பிரதேசங்களில் சாதீ ஒடுக்குமுறை புதிய வடிவத்தைப் பெற்று வருகிறது. போரின் பின்னர் ஆங்காங்கே வெளித்தெரியும் அதிகார அமைப்புக்களைக் கையகப்படுத்திக் கொள்வதில் சாதி ஒடுக்குமுறையின் கோரம் வெளிப்படுகிறது. யாழ்ப்பாண உயர் சாதி வேளாள பிரிவினர் சமூகத்தின் எல்லைகளை கலாச்சாரம் என்ற பெயரில் இறுக்கப்படுத்திக்கொண்டு தம்மை அதிகார மையத்தின் உச்சியில் அமர்ந்துகொள்ள அலை மோதுகின்றனர்.

 

இந்த ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் புலம்பெயர் நாட்டு ஆதிக்க சாதியினர் தமது உபரிப் பணபலத்தால் தமிழ் சமூக எல்லைகளை இறுக்கப்படுத்துகின்றனர். கேட்டால் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாக்க முயலும் கலாச்சாரம் என்பது ஒடுக்குமுறையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அதிகார அமைப்பாகும்.

 

பழமைவாத நிலப்பிரபுத்துவ அமைப்பினை தேசியத்தின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் பாதுகாக்க முயலும் ஆதிக்க சாதியின் சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான குரல் இன்று முன்னெப்போதைக்கும் அதிகமாக அவசியமாகின்றது.

 

புலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதியினர் இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலாச்சாரக் கழிவுகளை விதைக்க முயல்தலை சமூகப்பற்று மிக்க ஒவ்வோரு மனிதனும் கண்டிக்க வேண்டும்.

 

இதன் மறுபுறத்தில் சாதி ஒடுக்குமுறையைக்கு எதிராகக் குரல்கொடுக்கிறோம் என்று இலங்கை அரச பாசிசத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் தலித் வியாபாரிகளையும், சாதிக் சங்கங்களையும் இனம்கண்டுகொள்ள வேண்டும். இனப்படுகொலை அரசின் செல்லப் பிள்ளையாகிப் போன சாதிச் சங்கங்கள் சாதீய முரண்பாடுகளை ஆழப்படுத்தி தமது அரசியல் வியாபார நிகழ்ச்சி நிரலில் இணைத்துகொள்கின்றன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த தலித்தியம் போன்ற சாதிச் சங்க தத்துவங்களோடு உலகம் முழுவதும் உலாவரும் இன்னொரு மேட்டுகுடிக் கும்பலுக்கு சாதி ஒடுக்குமுறை என்பதே பொன்முட்டையிடும் வாத்து. சாதி ஒடுக்குமுறைசாகடிக்கப்படாமல் இருந்தாலே இவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

 

இந்த நிலையில் வடமாகானத்தின் வடக்கு மூலையில் சாதி ஒடுக்குமுறைக்கு பெயர்பெற்ற அவமானகரமான பகுதிகளில் உடுப்பிட்டியும் ஒன்று. குட்டிமணி, தங்கத்துரை, பிரபாகரன் போன்றோரின் சொந்த இடமான வல்வெட்டித்துறையின் எல்லையில் ஆரம்பிக்கும் உடுப்பிட்டி கணசமான அளவு தாழ்த்தப்பட்ட சாதியினரையும் கொண்டுள்ள பகுதியாகும்.

 

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பது உயர்சாதி வேளார்கள்களின் பெரும்பான்மையாக குழந்தைகள் கல்விக்கற்கும் பாடசாலை. அந்தப் பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்கு திருமதி நவமணி சந்திரசேகரம் என்ற ஆசிரியை அதிபாராக நியமிக்கப்பட்டார். அதிபராவத்ற்குரிய முழுமையான தகுதியையும் கொண்ட இவர் இதே கல்லூரியின் பழைய மாணவி என்பது மட்டுமல்ல நிர்வாகத் திறனுள்ளவர்.

 

திருமதி நவமணி அதிபர் தரத்திற்கு தகுதியான ஆசிரியை என்பது மட்டுமல்ல 1995 ஆம் ஆண்டிலிருந்து உடுப்பிட்டிப் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாமகக் கற்கும் இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.

 

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் அதிபர் பதவிக்கு திருமதி.நவமணி சந்திரசேகரம் விண்ணப்பித்த போதும் வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் அவரை நியமிக்க மறுத்துள்ளனர்.

 

இவருக்கு நியமனம் மறுக்கப்பட்டது குறித்து அவர்களிடம் எந்தத் தெளிவான விளக்கமும் கிடையாது. ஒன்றை மட்டும் காதோடு காது வைத்தது போல சொல்லிவைக்கிறார்கள். நவமணி சந்திர சேகரம் உயர்சாதியைச் சார்ந்தவர் இல்லையாம்.


இவரது நியமனம் நிராகரிக்கப்பட்ட அதே வேளை அதிபர் பதவிக்கு தேவையான தகுதிகள் இல்லாத கௌரி சேதுராஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பதவிக்குரிய எந்த விளம்பரங்களும், நேர்முகப் பரீட்சைகளும் இன்றி கௌரி சேதுராசா குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டார்.

 

இவரது நியமனத்திற்கு எதிராகப் பெற்றோர் சிலர் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

பேரினவாத அரசுக்கும் சாதி வெறியர்களுக்கும் என்ன வேறுபாடு? இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் புறக்காணித்து முன்னெடுக்கப்பட்ட முடியாது.

 

 

http://inioru.com/?p=32008

யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது : நிவேதா நேசன்.

காலத்திற்கு ஒவ்வாத பதிவு.

புலிக்காச்சல் எப்படிச் சிலரை விடாது வாட்டிவருகிறதோ அப்படியே சாதிக்காச்சலும் சிலரை விடாது வாட்டிவருகிறது. சாதிப்பாகுபாடுகள் இல்லாத நாடுகள் உலகத்தில் எங்குமே இல்லை இன்றைய அறிவியல் உலகத்தில் சாதியைத் சேர்ந்துள்ள அதன் திமிர், கொடுமை, வக்கிரம் போன்ற தன்மைகள் குறைந்து அழிந்து வருவதையே அனுபவத்தில் காணலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலமையையும் இன்றைய நிலையையும் ஒப்பீடு செய்துபார்க்கும் பொழுது சாதியின் வக்கிரத் தாக்கத்தின் தன்மை தணிந்தே வருகிறது. பதவிப் போட்டிகளுக்குள் சாதியை மட்டும் நுழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. திருமதி.நவமணி சந்திரசேகரம் அவர்களுக்கும் கௌரி சேதுராஜா என்பவருக்கும் இடையே தகுதிக்கப்பால் எந்த அரசியல்வாதியின் செல்வாக்கு உள்ளது என்பதுதான் நோக்கப்படவேண்டும். வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் அத்தனைபேருமே உயர் சாதியைச் சேர்ந்தவர்களா?. அது பொய்யெனில் தணிந்துபோகும் சாதித் திமிரை ஊதி எரியவிட்டு நொந்துபோயிருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்பிப் பிரித்து குளிர்காய முயல்வதாகவே கொள்ளமுடியும்.

 

திரு நிவேதா நேசன்,

சாதி வெறியை தூண்டி விட்டு குளிர்காய முனைபவா்களில் நீங்களும் ஒருவா் ஆனால் உங்களை குற்றம் கூறமுடியாது ஏனெனில் உங்களுக்கு அது புரியாது. 

 

உண்மையில் திரு நிவேதா நேசன்அவர்களே, யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது என்ற தலைப்பை நீங்கள் இடவேண்டுமானால் பின்வரும் சூழல் நிலவி இருக்க வேண்டும் . உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பெற்றோர், ஆசிரியர், மாணாக்கர் சாதிய ரீதியில் திருமதி.நவமணி சந்திரசேகரத்தின் நியமனத்தை எதிர்க்கிறார்கள் என்பது. அவ்வாறு நிகழ்கின்றது என்பது பற்றி தங்களிடம் உண்மையான தகவல் எதேனும் உண்டா? அல்லது பதவிப் போட்டிகளால் அதிகாரிகளின் தனிமனித உரிமை மறுப்பா இச்செயல் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும்.

திரு நிவேதா நேசன் ஒருதடவை மகேந்திராவின் கேள்விகளுடன் கூடிய கருத்துக்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டுகிறேன் அவர் சொல்வது போன்று “திருமதி.நவமணி சந்திரசேகரம் அவர்களுக்கும் கௌரி சேதுராஜா என்பவருக்கும் இடையே தகுதிக்கப்பால் எந்த அரசியல்வாதியின் செல்வாக்கு உள்ளது? என்பதுதான் நோக்கப்படவேண்டும்”.,வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் அத்தனைபேருமே உயர் சாதியைச் சேர்ந்தவர்களா?. அது பொய்யெனில் தணிந்துபோகும் சாதித் திமிரை ஊதி எரியவிட்டு நொந்துபோயிருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்பிப் பிரித்து குளிர்காய முயல்வதாகவே கொள்ளமுடியும். எனும் கருத்தும் நோக்கப் படவேண்டும்.

ஊர் மக்களா அல்லது அதிகாரிகளா இந்த ஆசிரியையின் நியமனத்தை எதிர்க்கிறார்கள் ? என்ற மனிதனின் கேள்வியோடு “பதவிப் போட்டிகளுக்குள் சாதியை மட்டும் நுழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்ற மகேந்திராவின் கருத்தில் உள்ள ஜதார்த்த நிலைமையையும் புரிதலுக்குரியது இத்தகைய புரிதலை திரு நிவேதா நேசன் ஏலவே புரிந்து இருப்பாரானால் யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது என்ற தலைப்பை இட்டு அவரால் இவ் இடுகை வந்திருக்காது என நினைக்கிறேன்.

இமையாணன், உடுப்பிட்டி இரண்டு பாடசாலைகளிலும் ஒரு குறிப்பிட்ட சாதிய மக்களுக்குரியது போன்று எழுதப் படும் அல்லது புனையப் படும் கட்டுரைகளை நான் பார்த்து இருக்கிறேன் அது தவறு. சுமார் 1950 களில் இமையாணன் பாடசாலை அவ்வாறு இருந்து இருக்க கூடும் என நினைக்கிறேன்.

1980 களின் முன்னர் உடுப்பிட்டி சாதிய மோதல்களில் உச்சம் பெற்ற ஊர்களில் ஓன்று என்பது உண்மை. டெலோ அமைப்பைச்சார்ந்த மறைந்த தளபதி தாஸ் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர் அவர் டெலோ அமைப்பில் இணைந்த கதை சற்று சுவாரசியமானது அவரின் உறவினர் இலங்கை போலீஸ் அமைப்பில் பணியாற்றி போராளிகளை வேட்டையாடியவர்களில் ஒருவர் அவரை குட்டிமணி சுட்டுக் கொன்றார் இதனால் ஆத்திரமடைந்த அவர், வல்வெட்டி துறையான் உடுபிட்டியானை (அவர்களின் சாதிக்காரனை) சுடவோ? எனக் கூறி , குட்டிமணியை கொல்ல அந்த அமைப்பில் சேர்ந்தார் என்பது . இதனை அவர்களின் உறவினர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். இருப்பினும் தமிழ் தேசிய விடுதலை போராட்டம் சாதீய வன்கொடுமைகளை அதன் முனைப்பினை முனை மழுங்கச் செய்தது.

யாழ்பாணத்து தமிழ் தலைமைகளால் நிரம்பி வழிந்த டெலோ அமைப்பு தற்ற்போது அம்பாறை, மட்டக்களப்பு , மன்னார் மாவட்ட தலைமையை கொண்டு இயங்குவது போல யதார்த்தத்தில் பிரதேசவாதமும் சாதீயமும் அழிந்து போதல் வேண்டும். எந்த உருவத்திலும் சாதீயம் தலை காட்டுவதை அனுமதிக்க முடியாது. ஏன் வால் நூல் எது இருப்பினும் அது அறுக்கப் படவேண்டும்.

திரு நிவேதா நேசன் குறிப்பிடும், மறுபுறத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கிறோம் என்று இலங்கை அரச பாசிசத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் தலித் வியாபாரிகளையும், சாதி சங்கங்களையும் இனம்கண்டுகொள்ள வேண்டும். இனப்படுகொலை அரசின் செல்லப் பிள்ளையாகிப் போன சாதிச் சங்கங்கள் சாதீய முரண்பாடுகளை ஆழப்படுத்தி தமது அரசியல் வியாபார நிகழ்ச்சி நிரலில் இணைத்துகொள்கின்றன. என்னும் கட்டுரையாளரின் கனமான பார்வை குறித்தும் கவனம் செலுத்தும் அதே வேளை;

யாழ்பாணத்தின் ஆதிக்கச் சமர் அல்லது அரச அதிகார நியமனங்களில் சாதிய திமிர் அல்லது செல்வாக்கு எட்டிப் பார்பதுவும் இன்றுவரை தொடரக்கூடும் என்பது மறுப்பதற்கு இல்லை என்பதாலும் எழுந்தமானதாக நாம் அதனை மறுக்கவும் முடியாது என்பதாலும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் நிகழும் இந்த இழுபறியில் யாருக்கேனும் அநியாயம் நிகழ்ந்திருப்பின் அது சீர் செய்யப் படவேண்டும். தொடர்பூடகச் செய்திகளின் படி திருமதி.நவமணி சந்திரசேகரம் தகுதி இருந்தும் தகுதியான பதவியை பெறமுடியாமல் உள்ளார் என்பது மனித உரிமை மீறலாகும் இது கண்டிக்கப் படவும் வேண்டும். கட்டாயம் அவரின் ஓய்வு பெறும் காலத்தின் முன் அவர் அப்பதவியில் அமர்த்தப் படவேண்டும் என்பதுவே தனிமனித விழுமியங்களுக்கும் பொது பண்புக்கும் நியதிகளுக்கும் மதிப்பு கொடுக்கும் ஒவ்வொருவரினதும் விருப்பமாகவும் இருக்க வேண்டும்.

இதுவும் இனிஒருவில் வந்த கருத்துக்களே 

 

புலிக் காய்ச்சலும் ஜாதிக்  காய்ச்சலும் சிலரை பிடித்து ஆட்டுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வெளிக் காட்டுகிறார்கள். ஆனால் அதே ஜாதிக் காய்ச்சல் எங்களுக்கும் பிடிக்க வைக்க முயலாதீர்கள் நண்பர்களே 

  • கருத்துக்கள உறவுகள்

25]காலத்திற்கு ஒவ்வாத பதிவு.

25]புலிக்காச்சல் எப்படிச் சிலரை விடாது வாட்டிவருகிறதோ அப்படியே சாதிக்காச்சலும் சிலரை விடாது வாட்டிவருகிறது. சாதிப்பாகுபாடுகள் இல்லாத நாடுகள் உலகத்தில் எங்குமே இல்லை இன்றைய அறிவியல் உலகத்தில் சாதியைத் சேர்ந்துள்ள அதன் திமிர், கொடுமை, வக்கிரம் போன்ற தன்மைகள் குறைந்து அழிந்து வருவதையே அனுபவத்தில் காணலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலமையையும் இன்றைய நிலையையும் ஒப்பீடு செய்துபார்க்கும் பொழுது சாதியின் வக்கிரத் தாக்கத்தின் தன்மை தணிந்தே வருகிறது. . அது பொய்யெனில் தணிந்துபோகும் சாதித் திமிரை ஊதி எரியவிட்டு நொந்துபோயிருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்பிப் பிரித்து குளிர்காய முயல்வதாகவே கொள்ளமுடியும்.

உண்மை உண்மை சிலருக்கு தாழ்வு மனப்பான்னை அவ்ளவு தான்

வாழ்க நாவலர் புகழ்

 

பழமைவாத நிலப்பிரபுத்துவ அமைப்பினை தேசியத்தின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் பாதுகாக்க முயலும் ஆதிக்க சாதியின் சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான குரல் இன்று முன்னெப்போதைக்கும் அதிகமாக அவசியமாகின்றது.

 

புலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதியினர் இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலாச்சாரக் கழிவுகளை விதைக்க முயல்தலை சமூகப்பற்று மிக்க ஒவ்வோரு மனிதனும் கண்டிக்க வேண்டும்.

 

 

 

 

மற்ற சாதியினருக்கு வெள்ளைக் காரன் கால் கழுவி விடுறானோ?  எதுக்கப்பா 
 அருகி வரும் சாதி பாகு பாடுகளை காப்பாற்ற துடிக்கிறீர்கள்? வர வர ஜாதி துவேசத்தை எம்முள் விதைப்பதில் குறியா இருக்குறியல். உங்களைப் போல ஆக்கள் இருக்கு மட்டும் ஜாதி ஒழியாது. நாம் மாற நினைத்தாலும் நீங்க விட மாட்டீங்கள் வாழ்க உங்கள் ஜாதிய கொள்கை. தமிழ் நாட்டில் ஆதிக்க ஜாதியால் பிரச்சனை தமிழ் ஈழத்தில்?

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மற்ற சாதியினருக்கு வெள்ளைக் காரன் கால் கழுவி விடுறானோ?  எதுக்கப்பா 
 அருகி வரும் சாதி பாகு பாடுகளை காப்பாற்ற துடிக்கிறீர்கள்? வர வர ஜாதி துவேசத்தை எம்முள் விதைப்பதில் குறியா இருக்குறியல். உங்களைப் போல ஆக்கள் இருக்கு மட்டும் ஜாதி ஒழியாது. நாம் மாற நினைத்தாலும் நீங்க விட மாட்டீங்கள் வாழ்க உங்கள் ஜாதிய கொள்கை. தமிழ் நாட்டில் ஆதிக்க ஜாதியால் பிரச்சனை தமிழ் ஈழத்தில்?

 

 

இனியொருவில் வந்த கட்டுரையை இணைத்தனால் கூறக்கூடியது..

 

சாதிப்பாகுபாடு முன்னரைப் போன்று இல்லாவிடினும் அறவே இல்லையென்று கூறமுடியாது. அது மீண்டும் வீரியமாக வளர்வது புலம்பெயர் நாடுகளில் சாத்தியம் இல்லையென்றாலும், தாயகத்தில் நடக்கலாம் என்பதைத்தான் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் விடயம் காட்டுகின்றது.

 

இல்லை இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது. அதனை வாழ்வில் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

இனியொருவில் வந்த கட்டுரையை இணைத்தனால் கூறக்கூடியது..

 

சாதிப்பாகுபாடு முன்னரைப் போன்று இல்லாவிடினும் அறவே இல்லையென்று கூறமுடியாது. அது மீண்டும் வீரியமாக வளர்வது புலம்பெயர் நாடுகளில் சாத்தியம் இல்லையென்றாலும், தாயகத்தில் நடக்கலாம் என்பதைத்தான் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் விடயம் காட்டுகின்றது.

 

இல்லை இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது. அதனை வாழ்வில் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

மன்னிக்கவும் கிருபன் அண்ணா நான் இந்த கட்டுரைய எழுதியவருக்கே பதில் எழுதினேன் 

இனியொருவில் வந்த கட்டுரையை இணைத்தனால் கூறக்கூடியது..

 

சாதிப்பாகுபாடு முன்னரைப் போன்று இல்லாவிடினும் அறவே இல்லையென்று கூறமுடியாது. அது மீண்டும் வீரியமாக வளர்வது புலம்பெயர் நாடுகளில் சாத்தியம் இல்லையென்றாலும், தாயகத்தில் நடக்கலாம் என்பதைத்தான் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் விடயம் காட்டுகின்றது.

 

இல்லை இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது. அதனை வாழ்வில் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

 

 

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நியமனமானது ஒரு ஆதாரத்தையும் காட்டாத கற்பனை கதைக்கட்டுரை.  எதையோ காதோடு காது வைத்து தீமூட்டுகிறது.

 

இப்போதைய நியமனங்கள் சாதி அடிப்படையில் நடகின்றன என்றால் வடகின் அதிபர் தேவானந்தா அதற்கு தூபம் இடுகிறார். அங்கே சாதியம் ஒடுங்குகிறதாயின் அவர் அதை எதிர்க்கிறார். தலைமகன் விரும்பியிருந்தால் அந்த ஆசிரியை அதிபர் ஆகியிருப்பா. ஆசிரியரின் நியமனம் கல்வி அமைச்சில் நடைபெற்றிருக்க வேண்டியது. எப்படி உடுப்பிட்டி வெள்ளார்கள் அதை தீர்மானித்தார்கள்?

 

தகாத நேரத்தில் வைக்கும் இந்த விவாதம் பிரிவினையைத்தான் கூட்டும். 

 

ஆறுமுகநாவலரின் தமிழுக்கான சேவையை யாரும் மறுக்க முடியாது. நாவலர் வெள்ளைகார , பாதிரிமார்களுக்கு பைபிளில் என்ன சொல்லி இருக்கிறது என்று திருத்தம் சொல்லிக்கொடுக்கும் திறமை சாலி. நவலரை கோடுகளில் விசாரிக்கும் போது வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு விளங்காத படி ஆங்கிலம் கதைப்பாராம். இதனால் அவர்கள் நவலரிடம் விளக்கம் கேட்ப்பார்கள் என்று நான் சிறுவனாக இருந்த போது கேள்விப்படிருக்கிறேன்.

 

எனக்கு, பிற்கால சைவ சித்தாந்த கோட்பாடுகளிலும், சங்ககால நீதி நூல்களான திருக்குறள் போன்றவற்றிலும் சொல்லியிருக்கும் சமய முறைகள்தான் பிடிக்கும். 63 மூவர் கதை, வேத சம்பிரதாயங்களை எதிர்த்த பக்திமார்க்க காலத்தயது. எனவே எனக்கு வேதகால, பக்திமார்க்க கால சைவத்தை பிடிக்காது. சங்க காலத்தில் அழிந்த சைவம் தேவார-பக்திமார்க காலத்தில் திரும்ப உதமாகிய போதும், சைவ சித்தாந்த காலத்தில் வந்த அன்னியர் ஆட்சியால் அழிந்த பின்னர் ஆறுமுக நாலவர்  காலத்தில் திரும்ப ஆரம்பித்த சமயத்திலும் பற்றுக்கிடையாது. இந்த காலங்களில் போட்டி மனப்பான்மையால் மக்கள் எதிரியின் முறைகளை பின் பற்றி முதிர்ச்சி இன்மையைக் காட்டுகிறார்கள்.  இன்று அன்னியர் ஆட்சிக்கு பிறகு நமது மதம் இன்னமும் அதன் உச்ச காலங்களுக்கு சமனான நிலைக்கு போகவில்லை. காரணங்கள் ஈழத்தில் சிங்கள ஆட்சியும், தமிழ் நாட்டில் அமைதி அடையாத கிந்திய- ஆரிய- திராவிட குழப்பங்களுமாக இருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.