Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண அமைச்சு பதவிகளை தூக்கி எறிந்தது தமிழ் அரசுக் கட்சி

Featured Replies

வடக்கு மாகாண அமைச்சு பத­வி­களை தூக்கி எறிந்­தது தமிழ் அர­சுக் கட்சி

 
வடக்கு மாகாண அமைச்சு பத­வி­களை தூக்கி எறிந்­தது  தமிழ் அர­சுக் கட்சி
 

வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமிழ் அர­சுக் கட்­சி­யைப் பழி­வாங்­கும் வகை­யில் செயற்­ப­டு­கி­றார் என்­ப­த­னால் புதிய அமைச்­சர்­கள் நிய­ம­னம் செய்­யப்­ப­டும்­போது அதில் எந்­தப் பத­வி­யை­யும் பெறு­வ­தில்லை என்று முடிவு செய்­தி­ருக்­கி­றது தமிழ் அர­சுக் கட்சி.

அந்­தக் கட்­சி­யின் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் நேற்று யாழ். நக­ரில்­கூடி இந்த முடிவை எடுத்­த­னர். சுமார் ஒன்­றரை மணி நேர விவா­தத்துக்குப் பின்­னர் இந்த முடிவு எட்­டப்­பட்­டது. தற்­போ­தைய அமைச்­ச­ர­வை­யில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­ச­ரான ப.சத்­தி­ய­லிங்­கம் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வது என்­றும் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­களை நிய­மிப்­ப­தற்­கான முத­ல­மைச்­ச­ரின் முழு உரி­மை­யை­யும் அங்­கீ­க­ரிப்­பது என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் இணங்­கிக் கொண்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட 24 மணி நேரத்துக்குள் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தி­னம் இரவு நடை­பெற்ற கூட்­டத்­தைத் தொடர்ந்து உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் கருத்­துத் தெரி­வித்த கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளில் ஒரு­வர், இந்­தப் பிரச்­சினை இப்­போ­தைக்கு ஓயாது என்று ஆரு­டம் கூறி­யி­ருந்­தார். உத­யன் அதனை வெளி­யிட்­டி­ருந்­தது.

அதே­போன்று புதிய அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­ப­தில்லை என்ற முடிவை தமிழ் அர­சுக் கட்சி அறி­வித்­துள்­ளது.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர், பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் இடை­யே­யான சந்­திப்­பில் நேற்­று­முன்­தி­னம் எடுக்­கப்­பட்ட முடி­வு­க­ளில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி அதி­ருப்தி அடைந்­தி­ருந்­தது.

இதை­ய­டுத்து அந்­தக் கட்­சி­யின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள், கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா தலை­மை­யில், மார்ட்­டீன் வீதி­யில் உள்ள கட்­சித் தலை­மை­ய­கத்­தில் நேற்று மாலை 5 மணிக்கு ஒன்­று­கூ­டி­னர்.
கூட்­டத்­தின் ஆரம்­பத்­தில் மாவை.சோ.சேனா­தி­ராசா உரை­யாற்­றி­னார். முத­ல­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்­பில் என்ன நடந்­தது? என்­பது தொடர்­பில் தெரி­வித்­தார்.

“முத­ல­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்­புத் திருப்­தி­யாக அமை­ய­வில்லை. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் விடாப்­பி­டி­யாக நிற்­கின்­றார். கூட்­டத்­தின் முடி­வில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக் மேலா­கவே, கூட்­டத்­தில் முத­ல­மைச்­ச­ரின் செயற்­பாடு அமைந்­தி­ருந்­தது.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சியை ஓரங்­கட்­டு­வது போலவே அவ­ரது பேச்­சுக்­கள் இருந்­தன. அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் போது தமிழ் அர­சுக் கட்­சியை முற்­றாக ஓரம் கட்­டு­வதை எதிர்­வு­கூ­று­வ­தைப் போன்றே முத­ல­மைச்­சர் கதைத்­தார்.

அமைச்­ச­ர­வையை மாற்­றி­ய­மைக்க முத­ல­மைச்­ச­ருக்கு இருக்­கும் உரித்­துக்­களை தமிழ் அர­சுக் கட்சி மதிக்­கின்­றது. கூட்­ட­மைப்பு என்ற அடிப்­ப­டை­யில் அமைச்­ச­ரவை நிய­ம­னத்­தின் போது பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் யோச­னை­க­ளைக் கேட்க வேண்­டும்.

முத­ல­மைச்­சர் இப்­போது, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்­சி­க­ளி­ன­தும் யோச­னை­களை ஏற்­றுக் கொள்­கின்­றார். ஆனால் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் யோச­னையை மாத்­தி­ரம் அவர் ஏற்­றுக் கொள்­ளத் தயா­ராக இல்லை. இதை அவ­ரது பேச்­சில் நேர­டி­யாக அறிய முடிந்­தது.

ஏனைய மூன்று பங்­கா­ளிக் கட்­சி­க­ளும், தமது கட்­சிக்­கான அமைச்­சுப் பத­வி­க­ளைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கா­கத்­தான் முத­ல­மைச்­ச­ரு­டன் சேர்ந்து – அவ­ருக்கு ஆத­ரவு கொடுத்­துள்­ளன. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக்கு அவ்­வா­றான தேவை இல்லை. பத­வி­களை குறி­வைத்து நிலைப்­பா­டு­களை எடுப்­ப­வர்­கள் அல்ல நாங்­கள். அமைச்­சர் பதவி விட­யத்தை சர்­சைக்­கு­ரி­ய­தாக நாங்­கள் மாற்ற விரும்­ப­வில்லை.

அர­சி­யல் தீர்வு நோக்­கிய பய­ணத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஒற்­றுமை – அந்­தப் பலம் மிக முக்­கி­யம். அற்ப சொற்ப பத­விக்­காக அத­னைத் தவற விட­மு­டி­யாது. அமைச்­சுப் பதவி தமிழ் அர­சுக் கட்­சி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் பொருட்டே இல்லை.

வடக்கு மாகாண அமைச்­ச­ரவை மீள மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் சந்­தர்­பத்­தில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி உறுப்­பி­னர்­கள் எவ­ரும் அமைச்­சுப் பத­வியை ஏற்­ப­தில்லை என்று முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் குதர்க்­க­மான செயற்­பாட்­டி­னால், அமைச்­ச­ரவை விட­யத்தை சர்ச்­சைக்­குள்­ளாக்கி தீர்வு விட­யத்தை தவற விட விரும்­பா­மை­யி­னால் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது” என்று கூட்­டத்­தில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/17037.html

2 minutes ago, நவீனன் said:

தற்­போ­தைய அமைச்­ச­ர­வை­யில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­ச­ரான ப.சத்­தி­ய­லிங்­கம் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வது என்­றும் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

தமிழ் மக்களின் நல்ல எதிர்காலத்துக்கு ஊழல் பேர்வழிகள் விலகுவதே நல்லது!

3 minutes ago, நவீனன் said:

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சியை ஓரங்­கட்­டு­வது போலவே அவ­ரது பேச்­சுக்­கள் இருந்­தன. அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் போது தமிழ் அர­சுக் கட்­சியை முற்­றாக ஓரம் கட்­டு­வதை எதிர்­வு­கூ­று­வ­தைப் போன்றே முத­ல­மைச்­சர் கதைத்­தார்.

பலதசாப்தங்கள் அரசியலில் இருந்தும் ஜனநாயகம் என்றால் என்னவென்று அறவே தெரியாத இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சியை ஓரங்­கட்­டு­வதே தமிழர்களின் நல்ல எதிர்காலத்துக்கு முதற்படியாக அமையும்!

6 minutes ago, நவீனன் said:

முத­ல­மைச்­சர் இப்­போது, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்­சி­க­ளி­ன­தும் யோச­னை­களை ஏற்­றுக் கொள்­கின்­றார். ஆனால் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் யோச­னையை மாத்­தி­ரம் அவர் ஏற்­றுக் கொள்­ளத் தயா­ராக இல்லை. இதை அவ­ரது பேச்­சில் நேர­டி­யாக அறிய முடிந்­தது.

ஜனநாயகம் ஜனநாயகம் என்று ஒப்பாரி வைத்து உலகை ஏமாற்றி அலைபவர்களுக்கு இது நாலில் மூன்று பெரும்பான்மை என்று விளங்கவில்லையா?

உலகின் மாபெரும் போலி ஜனநாயகவாதிகளான ஹிந்தியனின் சகவாசம் உள்ளவர்களுக்கு இது விளங்கவே விளங்காது என்பதும் வரலாறு.

  • தொடங்கியவர்

பத­வி­ வி­ல­கு­வார் சத்­தி­ய­லிங்­கம்

 
பத­வி­ வி­ல­கு­வார்  சத்­தி­ய­லிங்­கம்
 

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ரவை நெருக்­க­டி­யால் சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் பதவி வில­கு­வார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழு, கட்­சி­யின் மாகாண உறுப்­பி­னர்­கள் குழு­வின் தீர்­மா­னத்தை ஏற்­றுக் கொண்­ட­தும் இந்­தப் பதவி வில­கல் அநே­க­மாக இடம்­பெ­றும் என்று தெரி­கின்­றது.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டை­யே­யான கலந்­து­ரை­யா­டல் நேற்று இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரால் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் அமைச்­ச­ர­வை­யில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி பங்­கேற்­ப­தில்லை என்ற முடிவு எடுக்­கப்­பட்­டது.

இந்த முடிவு கட்­சி­யின் மையச் செயற்­கு­ழு­வுக்­கும் உட­ன­டி­யா­கவே அனுப்பி வைக்­கப்­பட்­டது. கட்­சி­யின் மையச் செயற்­குழு, அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­ப­தில்லை என்ற முடிவை அங்­கீ­க­ரித்து உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­வித்­த­தும், அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தனது பத­வி­யி­லி­ருந்து வில­கு­வார்.

இதே­வேளை, வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­ப­தில்லை என்ற கட்­சி­யின் தீர்­மா­னத்­தை­யும் மீறி இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி உறுப்­பி­னர்­கள் யாரா­வது அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­றால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

http://newuthayan.com/story/17046.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.