Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன்–விக்கி–பங்காளி தலைவர்கள் சந்திப்பில் 3 முக்கிய தீர்மானங்கள் கடும் வாதப்பிரதிவாதங்களின் பின் முடிவு

Featured Replies

முட்­டிக்­கொண்ட மாவை – சுரேஸ்

 

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற சந்­திப்­பில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வும், ஈ.பி.ஆர்.எல். தலை­வர் சுரேஸ் பிரே­ம­ச்சந்­தி­ர­னும் கடும் வாய்த்­தர்க்­கத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி, புளொட், ரெலோ, ஈபி­ஆர்­எல்­எவ் ஆகி­ய­வற்­றின் தலை­வர்­கள் மற்­றும் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடை­யே­யான சந்­திப்பு முத­ல­மைச்­ச­ரின் இல்­லத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி மீது, ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தொடர்ச்­சி­யாக விமர்­ச­னங்­களை முன்­வைத்­துக் கொண்­டி­ருந்­தார். ஒரு கட்­டத்­தில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, “நானும் கதைக்க வெளிக்­கிட்­டால் உதை­வி­டக் கூடக் கதைப்­பேன். அதற்­கான இட­மும் இதில்லை. நீங்­கள் (சுரேஸ்) வரு­வீர்­கள் என்று தெரிந்­தி­ருந்­தால் நான் இந்­தக் கூட்­டத்­துக்கு வந்­தி­ருக்­க­மாட்­டேன்” என்று காட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

http://newuthayan.com/story/17040.html

Edited by நவீனன்

3 minutes ago, நவீனன் said:

நீங்­கள் (சுரேஸ்) வரு­வீர்­கள் என்று தெரிந்­தி­ருந்­தால் நான் இந்­தக் கூட்­டத்­துக்கு வந்­தி­ருக்­க­மாட்­டேன்

மாவை வாயிலிருந்து என்னதொரு பொய்!

  • தொடங்கியவர்

சம்பந்தன்–விக்கி–பங்காளி தலைவர்கள் சந்திப்பில் 3 முக்கிய தீர்மானங்கள்

 

கடும் வாதப்பிரதிவாதங்களின் பின் முடிவு
(ஆர்.ராம்)

வட­மா­கா­ண­சபை நிலை­மைகள் குறித்து எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன், வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் ஆகி­யோருக்­கி­டை­யி­லான சந்­திப்பில் மூன்று முக்­கிய தீர் ­மா­னங்கள் எடுக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்

­டாலும் கடு­மை­யான வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே அவை எடுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் முத­ல­மைச்சர் தனது உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருந்­த­தோடு தமி­ழ­ர­சுக்­கட்சி மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களும் முன்

­வைக்­கப்­பட்­ட­தா­கவும் அறி­யமு­டி­கின்­றது. அச்­சந்­திப்பு குறித்த முழு­மை­யான பார்வை வரு­மாறு,

எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கி­டை­யி­லான பிரத்­தி­யேக சந்­திப்பில்

 எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம் வட­மா­காண சபை நிலை­மைகள் குறித்து கட்­சித்­த­லை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை வட­மா­காண முத­ல­மைச்­சரின் இல்­லத்தில் மாலை 6.30முதல் சுமார் முன்­றரை மணித்­தி­யா­லங்கள் வரையில் நடை­பெற்­றி­ருந்­தது.

இச்­சந்­திப்பில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேன­தி­ராஜா எம்.பி, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன், புளொட் தலைவர் த.சித்­தார்த்தன் எம்.பி, ரெலோ தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இச்­சந்­திப்பு குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வட­மா­காண சபையின் அமைச்­ச­ரவை மாற்றம் குறித்து அடுத்த கட்­ட­மாக எவ்­வி­த­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பி­லேயே பேச்­சுக்கள் ஆரம்­மா­கி­யி­ருந்­தன.

தானும், வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனும் கொழும்பில் சந்­தித்து நடத்­திய பேச்­சு­வார்த்தின் பிர­காரம் எட்­டப்­பட்ட முடிவின் அடிப்­ப­டை­யி­லேயே இச்­சந்­திப்பு நடை­பெ­று­கின்­றது. ஆகவே கட்­சித்­த­லை­வர்கள் குறித்த விடயம் தொடர்பில் தமது கருத்­துக்­களை வௌிப்­ப­டுத்த வேண்டும் எனக் கூறினார்.

இத­னை­ய­டுத்து ஈ.பி.ஆர்.எல்.எபின் தலைவர் சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன், கருத்­துக்­களை முன்­வைக்­க­லானார். அவர், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் அமைச்­சர்கள் தொடர்பில் கிடைக்­கப்­பெற்ற குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டை­யி­லேயே விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக விசா­ர­ணைக்­கு­ழ­வொன்றை அமைத்தார். அந்த விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­காரம் தான் நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தார்.

தற்­போது ஏனைய இரு அமைச்­சர்கள் குறித்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­த­போதே சம்­பந்­த­னு­ட­னான சந்­திப்பு நடை­பெற்­றது. அதன் பின்னர் அந்த நட­வ­டிக்­கைகள் அப்­ப­டியே நிறுத்­தப்­பட்­டுள்­ளன. தற்­பொ­ழுது கூட இந்த சந்­திப்பு நடை­பெ­று­வ­தற்கு காரணம் சுகா­தார அமைச்­ச­ராக இருக்­கின்ற சத்­தி­ய­லிங்­கத்தின் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு விடக்­கூ­டாது என்­ப­தற்கே ஆகும்.

ஏற்­க­னவே டெனிஸ்­வரன் மற்றும் சத்­தி­ய­லிங்கம் ஆகியோர் விசா­ரணை குழு முன்­னி­லையில் முன்­னி­லை­யா­க­மாட்டோம் என்று அறி­வித்­தி­ருக்­கின்­றார்கள். அவ்­வா­றி­ருக்­கையில் தான் முத­ல­மைச்சர் தனது அதி­கார வரம்­பிற்கு உட்­பட்டு நட­வ­டிக்­கை­களை எடுக்க முனைந்­தி­ருந்தார்.

குறிப்­பாக தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது சுகா­தார அமைச்­சுப்­ப­த­வியை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்தே வைத்­தியர் சத்­தி­ய­லிங்­கத்­தினை வட­மா­காண தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆகவே தான் அவ­ருக்­கான அமைச்­சுப்­ப­த­வியை பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்றே கரு­த­வேண்­டி­யுள்­ளது.

மேலும் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரி­டத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களே அமைச்­சர்கள் குறித்து முறைப்­பா­டு­களை வழங்­கி­யுள்­ளனர். அதன் பின்­னரே விசா­ர­ணைக்­கு­ழுவை அமைத்து முத­ல­மைச்சர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்றார். அவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்த பின்னர் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யி­னரே அதனை எதிர்த்­தார்கள். முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ர­னையை முன்­வைத்­தார்கள்.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கைய­ளிக்கும் அனைத்துச் செயற்­பா­டு­களும் மார்ட்டீன் வீதியில் உள்ள தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­லத்­தி­லி­ருந்தே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே தமி­ழ­ரசுக் கட்­சிக்கு தெரி­யாமல் எதுவும் நடக்­க­வில்லை. அவ்­வா­றான நிலை­யி­லேயே பங்­கா­ளிக்­கட்­சி­யி­ன­ரா­கிய நாம் வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வினை வழங்­கினோம். இது பகி­ரங்­க­மான விடயம்.

தற்­போது கூட சுழற்சி முறை­யி­லான ஆசனம் புளொட் அமைப்­புக்கே வழங்­கப்­பட வேண்டும். ஆனால் அந்த ஆச­னத்­திற்கு தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பினர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். இந்த அவ­ச­ர­அ­வ­ச­ர­மான நிய­ம­னத்தில் பின்­ன­ணி­யிலும் காரணம் இருக்­கின்­றது. குறிப்­பாக வட­மா­காண சபையில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் 15பேரும் பங்­கா­ளிக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் 15பேர் என சம அளவில் இருக்­கின்­றனர்.

ஆகவே தான் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர் பெரும்­பன்­மையை பெறு­வ­தற்­காக மேல­திக ஆச­னத்­திற்­கான நிய­மனம் அக்­கட்­சியைச் சார்ந்­த­வ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வட­மா­காண சபையின் ஆயுட்­காலம் நிறை­வ­டை­வ­தற்கு ஒரு­வ­ரு­டங்­களே காணப்­ப­டு­கி்ன்ற நிலையில் இத்­த­கைய குழப்­பங்­களை தொடர்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும்.

வட­மா­காண சபையின் ஆரம்­பத்தில் அமைச்­ச­ரவை நிய­ம­னத்தின் போது ஏற்­பட்ட சில முர­ணப்­பா­டு­களை தீர்ப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களை செய்­த­போது முத­ல­மைச்­ச­ருக்கே மாகாண அமைச்­சர்­களை நிய­மிப்­ப­தற்­கான அதி­கா­ரங்கள் உள்­ளது. ஆகவே அவரின் முடி­வுக்கு ஏற்­பவே அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­பட்­ட­தாக எமக்கு கூறப்­பட்­டது. ஆகவே தற்­போதும் முத­ல­மைச்­சரே அமைச்­ச­ரவை மாற்­றத்­தினை மேற்­கொள்ள எத்­த­னிக்­கின்றார். அதற்கு நாம் எப்­படி முட்­டுக்­கட்­டை­களை போட­மு­டியும்.

மேலும் தற்­போது அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதற்கு மாகாண சபையின் ஆத­ரவு அவ­சி­யப்­ப­டு­மானல் பெரும்­பான்மை பலத்­துடன் நிரூ­பிக்­கப்­ப­ட­வேண்­டிய நிலைமை ஏற்­படும். அவ்­வாறு வரு­கின்­ற­போது தமி­ழ­ர­சுக்­கட்சி தனது பெரும்­பான்­மையைப் பயன்­ப­டுத்தி மத்­திக்கு ஆத­ரவை காட்­ட­டு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பா­கவே தற்­போது தமி­ழ­ர­சுக்­கட்­சிக்­கான பெரும்­பான்ையை அதி­க­ரிக்­கின்­ற­மைக்­கான கார­ண­மாக அமை­கின்­றது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன், விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­காரம் இரண்டு அமைச்­சர்கள் இரா­ஜி­னாமாச் செய்­துள்­ளனர். தற்­போது ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீது விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­ற­போது அவர்கள் விசா­ரணைக் குழுவில் முன்­னி­லை­யாக மாட்­டார்கள் என்று கூறு­கின்­றார்கள். எனினும் குற்­றச்­சாட்­டுகள் காணப்­ப­டு­கின்ற அமைச்­ச­ர­வையை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்­பதே எனது நிலைப்­பாடு.

அந்த வகையில் ஏனைய அமைச்­சர்கள் இரு­வரும் இரா­ஜி­னா­மச்­செய்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­ளுக்கு ஒத்­து­ழைப்­புக்­களை செய்­ய­வேண்டும் என்று எதிர்­பார்­கின்றேன். இது தொடர்­பாக அவ்­அ­மைச்­சர்­களின் கட்­சிகள் நிலைப்­பா­டு­களை தௌிவு­ப­டுத்த வேண்டும். ரெலோ இயக்கம் டெனிஸ்­வ­ர­னுக்கு பதி­லாக தமது அமைப்பின் பிர­தி­நி­தியின் பெயரை வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது என்றார்.

இச்­சந்­தர்ப்­பத்தில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி, தமது இயக்­கத்தின் தீர்­மா­னத்தில் எவ்­வி­த­மான மாற்­ற­மு­மில்லை. டெனிஸ்­வ­ர­னி­டத்தில் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ர­ணையில் கட்சி அனு­ம­தி­யின்றி எந்த அடிப்­ப­டையில் கையொப்பம் இட்டார் என்­ப­தற்­கான விளக்­கத்­தினை கோரி­யுள்ளோம். அந்த விளக்­கத்தின் அடிப்­ப­டையில் கட்சி தீர்­மா­னங்­களை எடுத்து உரிய நட­வ­டிக்­கை­களை முறை­யாக முன்­னெ­டுப்போம் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத­னை­ய­டுத்து இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா, அமைச்­சர்கள் இரா­ஜி­னா­மச்­செய்­வ­தென்­பது பெரி­ய­தொரு விட­ய­மல்ல. இரா­ஜி­னாமைப் பெற்று முத­ல­மைச்­ச­ருக்கு வழங்­குவதில் எமக்கு சிர­மங்கள் இல்லை. ஆனால் ஊழல் குற்­றச்­சாட்­டுகள் இல்­லாத நிலையில் அவர்கள் ஏன் இரா­ஜி­னா­மச்­செய்ய வேண்டும் என்­பதே இங்கு கேள்­வி­யா­க­வி­ருக்­கின்­றது.

அதே­நேரம் அமைச்­சர்கள் மாற்றம் இடம்­பெ­று­மாயின் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு அமைச்­சுப்­ப­த­வி­யினை வழங்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று குறிப்­பிட்டார்.

இச்­ச­ம­யத்தில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், எனக்கு நான்கு கட்­சி­க­ளுக்கும் அமைச்­சுப்­ப­த­வி­யினை பகிர்ந்­த­ளிக்க வேண்­டி­யுள்­ளது. வட­மா­காண சபையில் தற்­போது முத­ல­மைச்சர், தவி­சாளர், பிரதி தவி­சாளர், மற்றும் அமைச்சர் ஆகியோர் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினைச் சார்ந்­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர். ரெலோ அமைப்பு தனது பிர­தி­நி­தியை பரித்­து­ரைப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

புளொட் அமைப்­பிற்கு ஒரு அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. கடந்த காலத்தில் அந்த அமைப்­பிற்கு அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகவே இந்த விட­யங்­களை கருத்­திற்­கொண்டே எனது தெரி­வுகள் அமையும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இச்­ச­ம­யத்தில் எதிர்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு வட­மா­காண சபையில் எத்­தனை உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள் என மாவை.சோன­தி­ரா­ஜ­வி­டத்தில் வின­வி­ய­தோடு அமைச்­சுப்­ப­த­வி­யொன்று வழங்­கு­வதே பொருத்­த­மா­ன­தா­க­வி­ருக்கும் என்ற தொனிப்­படக் கருத்­து­ரைத்­துள்ளார்.

அத­னைத்­தொ­டர்ந்து மாவை.சேனா­தி­ராஜா, அனந்தி சசி­த­ர­னுக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவரை எமது கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்தம் செய்­தி­ருக்­கின்றோம். ஆகவே அவரின் அமைச்சு நிய­ம­னத்­தினை தமி­ழ­ர­சுக்­கட்­சிக்­கா­ன­தாக கொள்ள முடி­யாது. அவ­ருக்கு நிய­மனம் வழங்­கு­வ­தென்றால் எம்­முடன் ஆலோ­சித்­தி­ருக்க வேண்டும். அது­தொ­டர்பில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­களும் இடம்­பெ­ற­வில்லை என்று கூறினார்.

இதன்­போது ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன், வட­மா­காண சபையின் ஆரம்­பத்தில் அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­ப­டு­கின்ற போது இப்­ப­டி­யான ஒரு விட­யத்­தினை நாம் கூறினோம். அதன்­போது முத­ல­மைச்­சரே அமைச்­ச­ர­வையை தெரிவு செய்தார் என கூறப்­பட்­டது. அவ்­வா­றாயின் அச்­செ­யற்­பாடு தவ­றாகும் என்று சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து சித்­தார்த்தன் தனது கருத்­துக்­களை முன்­வைத்த போது விசா­ரணைக் குழு தொடர்பில் பல­ருக்கு நம்­பிக்கை இல்லை. அந்த விசா­ர­ணைக்­கு­ழவில் உள்ள அங்­கத்­த­வர்கள் இரு­வரின் பெயரின் பல­வி­மான விமர்­ச­னங்கள் உள்­ளன. அவற்றைக் கவ­னத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம்.

மேலும் ஒருவர் மீது ஊழல் குற்­றச்­சாட்டு முன்­வைப்­ப­தானால் அதற்கு முன்­ன­தாக கணக்­காய்வு செய்­யப்­பட்டு அறிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பது அவ­சி­ய­மாகும். ஆனால் அந்த செயற்­பாடு நடத்­தப்­ப­ட­வில்லை. அதே­நேரம் இரு அமைச்­சர்கள் இரா­ஜி­னாமாச் செய்­துள்ள நிலையில் மீண்டும் தெரி­வுக்­குழுவை அமைத்து விசா­ரணை செய்­வ­தென்­றாலும் நீண்­ட­காலம் தேவை­யா­க­வுள்­ளது. ஆகவே இதற்­கு­ரிய முடி­வொன்றை எடுக்­கப்­ப­ட­வேண்டும் அது அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தாக இருக்க வேண்டும்.

அனைத்து கருத்­துக்­க­ளையும் பொறு­மை­யாக அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்த சம்­பந்தன், அமைச்­சர்­களை நிய­மிப்­ப­தற்­கான உரித்­தினை முத­ல­மைச்சர் கொண்­டி­ருக்­கின்றார். இந்த விட­யத்தில் அவ­ரு­டைய கரி­ச­னை­க­ளையும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அத்­துடன் இந்த விட­யத்தில் அனை­வரும் கூட்­டி­ணைந்து செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம். ஆகவே முரண்­பா­டு­களை அதி­க­ரிக்­காது ஒற்­று­மை­யாக ஏக தீர்­ம­னத்­திற்கு அனை­வரும் வர­வேண்­டி­யது தற்­போ­தைய கால கட்­டத்தில் மிகவும் அவ­சி­ய­மா­ன­தொரு விட­ய­மாகும். அதனை கருத்திற் கொண்டே செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அத­னை­ய­டுத்து வடக்கு முதல்வர், எனக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரேணை முன்­வைக்­கப்­பட்­ட­போது 43கேள்­விகள் காணப்­பட்­டி­ருந்­த­தாக அறி­கின்றேன். அக்­கேள்­விகள் மட்­டு­மல்ல அதற்கும் அதி­க­மான கேள்­வி­க­ளுக்கு எனக்கு பதி­ல­ளிக்க முடியும். தற்­போது தெரி­வுக்­கு­ழு­வொன்று அமைத்து விசா­ரை­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் நான் வடக்கு மாகாண சபையில் நன்மை பயக்கும் விட­யங்­க­ளையே முன்­னெ­டுக்க எத்­த­னிக்­கின்றேன். ஆகவே என்னால் நிய­மிக்­கப்­பட்ட குழுவே விசா­ரணை முன்­னெ­டுப்­பதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் ஏற்­பட வாய்­புக்கள் இல்லை. அத­ன­டிப்­ப­டை­யிலே அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள் அமையும். ஏன்மீது மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டு வந்து பதவியிலிருந்து இறக்கினாலும் அதனை சந்திப்பதற்கும் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு சந்திப்பு குறித்து வௌியிடப்படும் அறிக்கை அனைவரின் இணக்கத்துடன் எழுதப்பட்டது. அதன் பிரகாரம் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதலாவது தீர்மானமாக, அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது என்றும் இரண்டாவது தீர்மானமாக, அமைச்சரவை நியமனங்களைப் பொறுத்த மட்டில் அங்கத்துவக்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மூன்றாவதாக முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிவு அதிகாரங்களைப் பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ, திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வௌிப்படுத்துகின்றன என்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இச்சமயத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன், சுழற்சி ஆசனம் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தார். இருப்பினும் அவ்விடயம் குறித்து தமிழரசுக்கட்சியின் தலைவர் விளக்க கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் தற்போது அல்லாது பிறிதொரு தருணத்தில் பேசுவோம் எனவும் சம்பந்தனால் கூறப்பட்டது.

எனினும் சித்தார்த்தன் எம்.பி அது தொடர்பில் தனது கருத்துக்களை தெரியப்படுத்துகின்றேன் எனக்கூறி ஏற்கனவே சுழற்சி ஆசனம் தொடர்பில் யாழில் உள்ள தனியார் விடுத்தியில் நடைபெற்ற சந்திப்பில் எடுத்த முடிவை குறிப்பிட்டார். அச்சமயத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்புக்கள் அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டதென கூறியபேதும் மாவை.சேனாதிராஜா அதனை நிராரித்தார். அதனையடுத்து குறித்த சந்திப்பு நிறைவுக்கு வந்ததிருந்தது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.