Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும்

Featured Replies

பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும்

 
 
பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும்
 

நான் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­க­மாட்­டேன். முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருந்­தால் அதைப் பயன்­ப­டுத்தி என்னை நீக்­கட்­டும். அவர் நீதி­ய­ர­சர் என்­றால் நான் சட்­டத்­த­ரணி. என்­னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­னால் என்ன செய்ய வேண்­டும் என்­பது எனக்­குத் தெரி­யும்.

இவ்­வாறு ஆணித்­த­ர­மா­கச் சவால் விட்­டி­ருக்­கி­றார் வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன்.
வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப் போவ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளு­ட­னான கூட்­டத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இது குறித்து அதி­ருப்தி அடைந்த தமிழ் அர­சுக் கட்சி, அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­ப­தில்லை என்ற முடிவை எடுத்­தது. அதை அடுத்து சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தனது பத­வி­யி­லி­ருந்து வில­கி­னார். எஞ்­சி­யி­ருக்­கும் ஒரே அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­ னின் நிலைப்­பாடு என்ன என்று உத­யன் பத்­தி­ரிகை அவ­ரி­டம் வின­வி­யது.

‘‘நான் எந்­தக் குற்­ற­மும் செய்­ய­வில்லை. விசா­ர­ணைக் குழு­வும் அத­னைச் சொல்­லி­யி­ருந்­தது. என் மீதான குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் தண்­ட­னையை ஏற்­கத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தேன்.

முத­ல­மைச்­சர் சுயா­தீ­ன­ மான சட்­ட­ரீ­தி­யான தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்­தால் அந்த விசா­ர­ணைக்­கு­ழு­வில் தோன்­று­வ­தற்கு இப்­போ­தும் தயா­ரா­கவே இருக்­கின்­றேன். நான் விசா­ர­ணை­யைக் கண்டு ஓடி ஒளி­ய­வில்லை.

நான் எனது பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்­டிய தேவை இல்லை. பதவி வில­கல் கடி­த­மும் கொடுக்­க­மாட்­டேன். முத­ல­மைச்­ச­ருக்கு அதி­காம் இருந்­தால் அதைப் பயன்­ப­டுத்தி என்னை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­க­லாம்.

அவர் அவ்­வாறு செய்­தால் அதற்­கு­ரிய சட்­ட­ரீ­தி­யான பதி­ல­டியை நான் கொடுப்­பேன். அவர் நீதி­ய­ர­சர் என்­றால் நான் சட்­டத்­த­ரணி என்­பதை நினை­வில் கொள்­ளட்­டும்’’ – என்­றார் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன்.

http://newuthayan.com/story/17592.html

சட்டத்தரணி என்று புலம்பும் இவர்கள் இதுவரை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எதற்கும் நீதியைப் பெற்றுக்கொள்ள வக்கற்ற பேர்வழிகள் என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட உண்மை!

குறிப்பாக இந்த டெனீஸ்வரன் தனது செயல்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்க காரணமான டெலோ கட்சியின் முடிவுகளையும், தமிழர் மதிக்கும் முதலமைச்சரின் கருத்துக்களையும் மதிக்காத ஒரு ************ அடையாளம் காட்டப்பட்டுள்ளார்!

இவர் தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் பெருமளவு பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உண்டு!

அது போலவே வீதியமைப்பதிலும் பெருமளவு பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உண்டு! இதனால் பெருமளவு வீதி அபிவிருத்திகள் குறிப்பிட்ட இலக்குகளை விட 30% குறைவாகவே ஒப்பந்தக்காரர்களால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி என்று புலம்பும் டெனீஸ்வரன் தனது சட்டத்திறமைகளை வெளிப்படுத்தி ஒப்பந்தக்காரர்கள் 100% ஒப்பந்த பணியை முடிக்க செய்திருக்கலாம். அதை டெனீஸ்வரன் என்கிற சனீஸ்வரன் செய்யவில்லை. இதன் அர்த்தம் 30% பணக் கையாடல் நடந்துள்ளது என்கிற குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வேண்டும்.

மேலும் டெனீஸ்வரனும் சத்தியலிங்கமும் சொந்த நலன்களுக்காக கள்ளக்காணி ************** ரிஷாட் இடமிருந்தும் இலஞ்சம் பெற்று தமிழர் நலன்களை விற்றதாக குற்றச்சாட்டுகள் நிறையவே உண்டு.

மூடப்பட்டிருக்கும் வவுனியா புதிய பேரூந்து நிலைய விவகாரத்திலும் டெனீஸ்வரன் விலைபோயுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

இலங்கையிலுள்ள 99% ஆன தமிழ் சட்டத்தரணிகள் கடைந்தெடுத்த *********** என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட உண்மை! தமது சட்டத்திறமைகளை வெளிப்படுத்தி தமிழர்களுக்கு எந்தவொரு நீதியையும் தமது அரசியல் வாழ்வில் பெற்றுக்கொடுக்க வக்கில்லாத **************  சட்டத்தரணிகள் அமிர்தலிங்கம், சம்பந்தன், மாவை, ஆனந்தசங்கரி,  சுமந்திரன் வரிசையில் ***********டெனீஸ்வரனும் இணைவதில் ஆச்சரியமில்லை.

  • தொடங்கியவர்

பதவிவிலக அமைச்சர் டெனீஸ்வரன் மறுப்பு

 

 

வடமாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து வடமாகாண அமைச்சர்களை மாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

deniswaran-minister.jpg

இதன் அடிப்படையில் முறைகேடுகள் தொடர்பில் விசாரண செய்த குழுவின் பரிந்துரைக்கு அமைவாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.கருகுலராஜா ஆகியோர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியிருந்தனர்.

 

சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீது மீள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர்களை கட்டாய விடுவிப்பில் இருக்புகுமாறு மதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் மாகாணசபைக்குள் தமிழரசுக் கட்சி மற்றும் எதிர்கட்சியால் முதலமைச்சருக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுனரிடம் வழங்கப்பட்டு கூட்டமைப்பு தலைவர் மற்றும் மத தலைவர்கள், பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் முயற்சியால் அந்த விவகாரம் முடிவுக்கு வந்த போதும் அமைச்சரவையை முழுமையாக மாற்ற முதலமைச்சர் முடிவு எடுத்திருந்தார்.

 

இதனை, கூட்டமைப்பு தலைவர் மற்றும் பங்காளிக் கட்சித் தலைவர்களின் சந்திப்பின் போது முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு முதலமைச்சரின் அமைச்சரவையில் அமைச்சு பதவி பெறுவதில்லை எனமுடிவெடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக வடமாகாண சுகாதார அமைச்சரான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ப.சத்தியலிங்கம் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

 

ஆனால், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோ சார்பாக போட்டியிட்டு அமைச்சுப் பதவியை பெற்றிருந்தார். தற்போது ரெலோ அமைப்பும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவரிடம் உள்ள அமைச்சுப் பதவியை மீளப்பெறுமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.

 

ஆனால், தான் பதவி விலகமாட்டேன் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்து வருவதாகவும், தன்னை பதவி விலக்க முற்பட்டால் அதனை எதிர்கொள்வது எப்படி என தனக்கு தெரியும் எனவும் அவர் கூறிவருவதாகவும் தெரியவருகிறது.

http://www.virakesari.lk/article/22932

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.