Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூவரும் சந்தித்துப் பேச்சு

Featured Replies

மூவரும் சந்தித்துப் பேச்சு
 

image_03510c74d5.jpgஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய மூவரும், சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. 

ஜனாதிபதி செயலகத்திலேயே இந்தச் சந்திப்பு நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றதாகவும் அச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்ததாகவும் அறியமுடிகிறது. அதாவது, அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னரே, இந்த மூவரும் சந்தித்து கலந்துரையாடியதாக தெரியவருகிறது. 

அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் ஒன்றாக சென்றே, ஜனாதிபதியைச் சந்தித்ததாக அறியமுடிகிறது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/மூவரும்-சந்தித்துப்-பேச்சு/175-202135

  • தொடங்கியவர்

ரவியை அவசரமாக சந்தித்த ஜனாதிபதி, பிரதமர்

Published by RasmilaD on 2017-08-10 09:48:00

 

வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டு­மென்ற  அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் நேற்று அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். 

 ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் பின்னர் சுமார் ஒரு ­ம­ணி­நேர இந்த முத்­த­ரப்பு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றுள்­ளது. அமைச்சர்  ரவி கரு­ணா­நா­யக்க பத­வி­வி­லக வேண்­டு­மென்ற கோரிக்­கைகள், அதி­க­ரித்து  வரு­கின்ற நிலையில் ஜனா­ தி­ப­தியும் பிர­த­மரும் அமைச்­சரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளமை  முக்­கி­ய­வி­ட ய­மாக கரு­தப்­ப­டு­கி­றது.  இதன் ­போது  அமைச்­ச­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும்  கட்­சி­க­ளுக்குள் ஏற்­பட்­டுள்ள நிலை­மைகள் அர­சாங்கம் தொடர்பான மக்­களின் விமர்­ச­னங்கள் குறித்தும் பேசப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 விசே­ட­மாக  ஏற்­க­னவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை பதவி வில­கு­மாறு கூறி­ய­தாக  தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லேயே இந்த சந்­திப்பு இடம்பெற்றுள்ளது. 

 நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும்  ரவி கருணாநாயக்க தொடர்பாக  கடும் வாதப் பிரதிவாதங்கள்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22954

  • தொடங்கியவர்

ரவி குறித்து அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள்

p9-ab664b677270691645aaae9e8a627a45738068e5.jpg

 

அமைச்­சர்­களின் கருத்­துக்­களை அமை­தி­யாக செவி­ம­டுத்தார் ஜனா­தி­பதி
(ரொபட் அன்­டனி)

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொண்­டுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க உட­ன­டி­யாக பதவி வில­க­வேண்­ டு­மென நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பெரும்­பா­லான அமைச்­சர்­க­ளி னால் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கு­வதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான நன்­ம­திப்பை அதி­க­ரிப்­ப­தாக இருக்கும் என இதன்­போது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஐக்­ கிய தேசி­யக்­கட்சி அமைச்­சர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில்

நடை­பெற்ற நேற்­றைய வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் விவ­கா­ரமே அதி­க­நேரம் பேசப்­பட்ட விட­ய­மாக அமைந்­தது. இதே­வேளை மிக முக்­கிய விட­ய­மாக நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை.

இந்த நிலை­யி­லேயே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க விவ­காரம் தொடர்பில் அமைச்­சர்­க­ளுக்­கி­டையில் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் கடு­மை­யாக இடம்­பெற்­றுள்­ளன. வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டு­மென

பல்­வேறு அமைச்­சர்­களும் தெரி­வித்த நிலையில் ஜனா­தி­பதி எந்­தக்­க­ருத்­தையும் வெளி­யி­டாமல் அமைச்­சர்­களின் கருத்­துக்­களை ஆழ­மாக செவி­ம­டுத்த வண்ணம் இருந்­துள்ளார்.

இதன்­போது கருத்து வெளி­யிட்­டி­ருந்த அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன பதவி விலகும் விவ­காரம் தொடர்பில் தான் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுடன் பேசி­ய­தா­கவும் அவர் மீண்டும் அமைச்­ச­ராக பத­வி­யேற்கும் நிபந்­த­னை­யுடன் தற்­போது பதவி விலக தயா­ராக இருப்­ப­தாக கூறி­ய­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அப்­ப­டி­யாயின் உட­ன­டி­யா­கவே இரா­ஜி­னாமா செய்­யு­மாறு தான் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விடம் கோரிக்கை விடுத்­த­தா­கவும் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

மேலும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ராஜித சேனா­ரட்ன கருத்து வெ ளியி­டு­கையில்

 ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வா­னது மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் தொடர்­பாக விசா­ரணை நடத்­து­வ­தற்கே நிய­மிக்­கப்­பட்­டது. ஆனால் அந்த ஆணைக்­குழு தற்­போது மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் குறித்து விசா­ரணை நடத்­து­வதை தவிர்த்து அமைச்­சர்­களின் விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்து கொண்­டி­ருக்­கி­றது. அமைச்­சர்­களின் விவ­கா­ரங்கள் தொடர்­பிலும் ஆரா­யத்தான் வேண்டும். ஆனால் முதலில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வா­னது மத்­திய வங்கி விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றார்.

இவ்­வாறு நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி­க­ரு­ணா­நா­யக்க தொடர்­பா­கவே அதி­க­ளவு விவா­திக்­கப்­பட்­ட­துடன் வாதப் பிர­தி­வா­தங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்த அனைத்து சர்ந்­தப்­பங்­க­ளின்­போதும் ஜனா­தி­பதி மிகவும் அமை­தி­யான முறையில் விட­யங்­களை செவி­ம­டுத்­த­தாக அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கேச­ரிக்குத் தெரி­வித்தார்.

இதே­வேளை நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்­ச­ரவைக் கூட்டம் முடி­வ­டை­வ­தற்கு முன்­பா­கவே வெளி­யே­றி­யி­ருந்தார். வழ­மை­யாக செவ்­வாய்க்­கி­ழமை காலை நடை­பெறும் அமைச்­ச­ரவைக் கூட்டம் இவ்­வாரம் நேற்று புதன்­கி­ழ­மையே நடை­பெற்­றுள்­ளது.

அதா­வது அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க விவ­காரம் தொடர்பில் மிகவும் பர­ப­ரப்­பாக பேசப்­படும் மற்றும் விவா­திக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு பாரி­ய­ளவில் நில­விய சூழ­லி­லேயே அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்­று­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அதற்­கி­டையில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி தனது பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­போ­திலும் இறுதி நேரத்தில் அக்­கூட்­டமும் கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

 இது இவ்­வாறு இருக்க வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டு­மென்ற அழுத்­தங்கள் தற்­போது அதி­க­ரித்து வரு­வதை காண­மு­டி­கி­றது. கூட்டு எதி­ரணி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எப்­போது விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வது என்­பது தொடர்­பாக இன்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

நேற்று முன்­தினம் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இன்­றைய தினம் அது­தொ­டர்பில் தீர்­மானம் எடுப்­ப­தற்கு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. மேலும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னதும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னதும் பல்வேறு அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அமைச்சர் தயாகமகே உள்ளிட்டோர் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமன்றி அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக தன்னை வாக்களிக்க கோரினால் தான் அரசாங்கத்தில் இருந்து விலகிவிடுவதாகவும் எச்சரித்திருக்கிறார். இந்த நிலையிலேயே நேற்றையதினம் அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-10#page-1

  • தொடங்கியவர்
ரவி கருணாநாயக்க ராஜினாமா செய்வார்
 


வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று (10) பிற்பகல் 1 மணிக்கு விசேட உரையொற்றை ஆற்றியதன் பின்னர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திறைசேரி முறிகள் மோசடி விவகாரத்தில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் தொடர்பு பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டி, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்காகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இவற்றை, அடிப்படையாக வைத்தே அவர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறியமுடிகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரவி-கருணாநாயக்க-ராஜினாமா-செய்வார்/175-202163

மூன்றும் அலிபாபாக்கள்!

சந்தித்து பேசி திருட்டை ஒழித்துவிடுவார்கள்

  • தொடங்கியவர்
பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் ரவி
 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருநாணாயக்க தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்றில் அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

"நான் வர்த்தகத் துறையில் ஈடுபடும் ஒருவன். அரசியலுக்காக என்னுடைய பணத்தை இழந்திருக்கிறேனே தவிர, அரசியல் ஊடாக ஒருபோதும் பணம் சம்பாதித்தது கிடையாது. சட்ட விரோதமாக வீடொன்றைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் எனக்குக் கிடையாது.

நாம் சட்டத்துக்கும் நீதிக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். அதனால்தான் புதிய அரசியல் கலாசாரத்தை வெளிப்படுத்தும் முகமாக பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தேன். கடந்த காலங்களில் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் விசாரணை என்ற பெயருக்கே இடமிருக்கவில்லை என்பதை நாம் அறிவோம்.

என் முன்னால் உள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய சக்தி எனக்கு உண்டு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப்படுகின்ற நல்லாட்சியை குழப்புவதற்கு பலர் முயற்சித்து வருகிறார்கள். அதற்கு இடமளிக்க முடியாது" என்றார்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியை இல்லாதொழிக்க பலர் முயற்சித்து வருவதாக தெரிவித்த ரவி கருணாநாயக்க, கட்சியின் தனித்துவத்தைக் காப்பதற்காகவும் நல்லாட்சியில் முன்னுதாரணமாக செயற்படும் வகையிலும் பதவியை இராஜினாமா செய்வதாக குறிப்பிட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினராக பின்வரிசையில் அமர்ந்தார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பதவியை-இராஜினாமா-செய்வதாக-அறிவித்தார்-ரவி/150-202173

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது செய்பவர்கள் முன்னுக்கு வருவார்கள். ரவி கருநாணாயக்க ஏன் பின்னுக்குப் போகிறார்.... ?? :(

  • தொடங்கியவர்

புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தினேன் – ரவி கருணாநாயக்க

 
 
புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தினேன்  – ரவி கருணாநாயக்க
 

நான் புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தினேன் என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க.

ரவி கருணாநாயக்க இன்று தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் பத்தரமுல்லை – ரஜமல்வத்தை வீதியில் இருக்கும் தனது வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவரது ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். ரவி கருணாநாயக்க தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

நீங்கள் பார்க்கும் எமது வீடு சீரமைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. நான் யார் என்பது உங்களுக்கு தெரியும். நான் புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தினேன்.

நாட்டில் உள்ள திருடர்களை அனைவரும் எங்கள் மீது திருட்டு குற்றத்தை சுமத்துகின்றனர். நாங்கள் தூய்மையானவர்கள். நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.

நாம் அனைவரும் இணைந்து நாட்டை உருவாக்குவோம். நான் பெருமையுடன் இந்த முடிவை எடுத்தேன். என்னால் முடிந்தது என்றால் ஏன் மற்றவர்களுக்கு முடியாது. நாங்கள் அரசில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருப்பது போல் உள்ளது.

நாம் அனைவரும் இணைத்து உண்மையான அரசை அமைத்து அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சருடன் ஐக்கிய தேசியக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://newuthayan.com/story/18184.html

 

 

பதவி விலகல் முடிவு துணிச்சலானது – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

 
பதவி விலகல் முடிவு துணிச்சலானது – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்
 

வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகியமையானது துணிச்சலான ஒரு விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது-

கருணாநாயக்க தவறு செய்ததாக தகுதி வாய்ந்த நீதிமன்றத்தினால் கண்டறியப்படவில்லை.

நாட்டினதும், கூட்டரசினதும் நலன் கருதி அவர் பதவியை விட்டு விலக தீர்மானித்திருக்கும் முடிவை தான் வரவேற்கிறேன்- என்றார்.

http://newuthayan.com/story/18182.html

 

 

ரவி விலகியது தொடர்பில் மகிழ்ச்சி – சுனில் ஹந்துன்நெத்தி

 
 
ரவி விலகியது தொடர்பில் மகிழ்ச்சி – சுனில் ஹந்துன்நெத்தி
 

ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகியது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். அதேபோல் பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமான சகல தகவல்களும் வெளியாகி, அதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்..

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது-

இது அரசின் வெற்றி அல்லது எதிர்க்கட்சியின் வெற்றி என எவரும் மகிழ்ச்சியடைய முடியாது.

ரவி கருணாநாயக்கவின் கருத்துக்கு அமைய முன்னுதாரணம் சிறந்தது. முன்னாள் நிதியமைச்சருக்கு குற்றச்சாட்டு தெரியும் என்பதால், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடைவது நிச்சயம் என்பதால், முன்கூட்டிய விலகியது சிறந்தது.

புதையலுக்கு அவர் சிக்கினாலும் அதற்கு என்ன நடந்தது, யார் கொள்ளையிட்டனர் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

பதவி விலகியது பெருமை என கருணாநாயக்க கூறினாலும் இது கொள்ளையடிப்பு என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும்.

அரச தலைவர் ஆணைக்குழுவில் வெளியாகிய சாட்சியங்களுக்கு அமைய முன்னாள் நிதியமைச்சருக்கு பின்வரிசைக்கு சென்று அமர நேரிட்டுள்ளது. அரசு எதிர்நோக்கிய நெருக்கடிக்கு தீர்வு கிடைத்துள்ளது.

எனினும் பிணை முறிப்பத்திர மோசடியினால் நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு மிகப் பெரியது – என்றார்.

http://newuthayan.com/story/18177.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.