Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குப் பிரச்சினைகளை ஐ.நா.விடம் எடுத்துரைத்தார் முதல்வர்

Featured Replies

வடக்குப் பிரச்சினைகளை ஐ.நா.விடம் எடுத்துரைத்தார் முதல்வர்
 

image_9e451d9f2e.jpgவடக்கில் இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் மக்களுடைய பயிர்நிலங்களையும் அலுவலக கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் அவர்கள் உபயோகித்து வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் ஊனா மெக்கோலேய் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்துகின்றனர். தெற்கிலிருந்து பிரசித்தமாகவே மீனவர்களை அழைத்து வருவதுடன் அந்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். வடக்கு மீனவ சமுதாயத்தினர் அச்சப்படுவதற்கு இது பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரண நடைமுறைகளை மீறிய விதத்தில், காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம்களுக்காக வீதிகளும் வீடுகளும் அமைக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடக்குப்-பிரச்சினைகளை-ஐ-நா-விடம்-எடுத்துரைத்தார்-முதல்வர்/175-202346

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் ஈழத் தமிழர் எதிர்கொள்ளும் சவால்களையும், பிரச்சினைகளையும், நல்லாட்சி அரச பயங்கரவாத இயந்திரத்தின் கொடுமைகளையும் ஆவணப்படுத்தி கொடுப்பதுவும், அவற்றை சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள் குழப்பியடித்து நல்லாட்சி சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம் தொடர முண்டு கொடுப்பதும் கடந்த சில வருடங்களாக நடைபெறும் நிகழ்வுகள்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.