Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கே இருந்து வடக்கு நோக்கி நகரும் சீனா; தமிழரின் வளங்கள் தாரைவார்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியமான முறையில்.. பூநகரியில் சீன நிறுவத்தின் ஆய்வின் கீழ் சீனாவின் முதலீட்டில்.. விமான நிலையம் ஒன்றும்.. அரியாலை கிழக்கில் நன்னீர் நண்டு வளர்ப்பு என்ற பெயரிலும்.. சூரிய சக்தி - மின் காற்றாலைகள்.. நிர்மானிப்பு என்ற பெயரிலும்.. சீன நிறுவனங்கள் வடக்கு நோக்கி ஆக்கிரமிப்பை மேற்கொள்ள ரணில் - மைத்திரி- சந்திரிக்கா.. சம் சும் கும்பல் கூட்டு நாசமறுப்பு அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு தெரியாமல் நகர்வுகளை மேற்கொண்டுள்ள அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

ஏலவே தமிழினப் படுகொலையாளன் மகிந்த காலத்தில் கச்சதீவையும் சீனா ஆக்கிரமித்து நின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பூநகரியில்.. ஜப்பான் நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கும் முன்னாய்வில் உள்ளது ஏலவே செய்தியாக வெளிவந்திருந்தது. 

அவசர அவசரமாக.. விடுதலைப்புலிகளை ஈழக்களத்தில் இருந்து வெளியேற்றியதற்கான காரணங்களும்.. ஆளையாள் போட்டி போட்டுக்கொண்டு வெளிநாடுகள்.. இணைத்தலைமை.. அதுஇதென்று கொண்டு.. சொறீலங்காவுக்கு இனப்படுகொலையை அரங்கேற்ற உதவியதன் பின்னணியும் இப்போ தெளிவாகவே புலப்பட ஆரம்பித்துள்ளது.

இதில். புலிகளைப் பலிவாங்கப் போய் எல்லாம் கெட்ட நிலைக்கு ஆளாகி இருப்பது ஹிந்தியாவே ஆகும்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38771

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தமிழர்களை நசுக்கி ஒடுக்கி தமிழையும் அழிக்க முனையும் கிந்தியா எந்த நிலைக்கு ஆனாலும் எமக்கென்ன..?

சீன நாட்டவர்கள்மேல் தமிழர்களுக்கு ஏன் வெறுப்பு வருகிறது...? வரக்காரணம் என்ன...? அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்களா... ? அவர்கள் வருகை எந்தவிதத்தில் தமிழர்களைப் பாதிக்கும்... ? ராச ராசசோழன் காலத்தில் சீனர்கள் தமிழர்களை மிகவும் நேசித்து விரும்பி வர்த்தகத் தொடர்புகளையும் மேற்கொண்டு சகோதரர்போல் பழகி, உதவிகளும் செய்து, மிகவும் நட்புடன் வாழ்ந்ததாக சரித்திரங்களும் தெரிவிக்கின்றனவே..... ?? :rolleyes: 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Paanch said:

தமிழர்களை நசுக்கி ஒடுக்கி தமிழையும் அழிக்க முனையும் கிந்தியா எந்த நிலைக்கு ஆனாலும் எமக்கென்ன..?

சீன நாட்டவர்கள்மேல் தமிழர்களுக்கு ஏன் வெறுப்பு வருகிறது...? வரக்காரணம் என்ன...? அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்களா... ? அவர்கள் வருகை எந்தவிதத்தில் தமிழர்களைப் பாதிக்கும்... ? ராச ராசசோழன் காலத்தில் சீனர்கள் தமிழர்களை மிகவும் நேசித்து விரும்பி வர்த்தகத் தொடர்புகளையும் மேற்கொண்டு சகோதரர்போல் பழகி, உதவிகளும் செய்து, மிகவும் நட்புடன் வாழ்ந்ததாக சரித்திரங்களும் தெரிவிக்கின்றனவே..... ?? :rolleyes: 
 
சீனாவின் தேவைகளோடு சார்ந்து.. அதனை பாவிக்கும்.. சரியான இராஜதந்திர அரசியல் எம்மிடம் இல்லாமை என்ற வெற்றிடத்தை சிங்களம் நிரப்பிக் கொண்டு.. சீனாவுக்கு தலையும் ஹிந்தியா மற்றும் மேற்குலகிற்கு வாலும் காட்டி.. தனது தேவைகளை நிறைவு செய்து கொண்டிருக்கிறது.

எம்மவர்களோ.. எந்த இராஜதந்திர மீளாய்வுகளும் இன்றி.. சேர் பொன் இராமநாதன் காலத்தில் இருந்து.. பதவிக்கும் பட்டங்களுக்கும் தனிப்பட்ட சுகபோகங்களுக்கும் ஆசைப்பட்டு.. எதிரிகளை புகழ்ந்து.. அவர்களை மகிழ்விக்க சொந்த மக்களை பலி கொடுத்து.. பழிவாங்கி.. வசைபாடி.. காட்டிக்கொடுத்து..  செய்யும் சரணாகதி அரசியலே தஞ்சம் என்றிருக்கும் நிலையில்...

சீனா..தமிழர்களை காட்டிலும் சிங்களவனைப் பலப்படுத்தி.. அவனூடாக தான் நினைச்சதை சாதிக்கவே முயலும்.

இந்த நிலையில்.. தமிழர்கள் எனி சீனச் சார்பு என்று போனால்.. மேற்குலகையும் பகைத்து.. ஹிந்தியாவையும் பகைத்து நகரும் நிலை ஏற்படும். சிங்களம் அதனை இன்னும் தனக்குச் சார்ப்பாகப் பாவிக்கும்.

இந்த நிலையில்.. தமிழர்கள் வகுக்கப் போகும் சர்வதேச இராஜதந்திர அரசியல் வியூகத்தில் தான் அவர்களின் வாழ்வும் வளமும் நில இருப்பும் இலங்கைத் தீவில் தீர்மானமாகும். சீனாவோடு பகையும் இல்லை.. நெருக்கமும் இல்லை என்ற நிலை ஹிந்தியாவை மகிழ்விக்கும் என்று தமிழர் சட்டாம்பி அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். தாங்கள் ஹிந்தியாவின் செல்லப்பிள்ளைகளாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால்.. ஹிந்தியாவுக்கு தமிழர்களை செல்லப் பிள்ளையாக வைத்திருப்பது மட்டுமல்ல நோக்கம்.. முழு இலங்கைத் தீவிலும்.. தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதே நோக்கம். அதனை நோக்கித்தான் ஹிந்தியா நகரும். சீனா.. ஹிந்தியாவின் வியூகத்தை உடைக்க நகரும். மேற்குலகம்.. ஹிந்தியாவின் வியூகத்தோடு நகரும்.

இந்த நிலையில்.. தமிழர்கள் எல்லா தரப்போடும் ஒரு சமநிலையை பேணிக் கொண்டு.. சிங்களவனுக்கு சமாந்திரமாகச் செல்லும் சம வலு அவசியம். அது களத்தில் இராணுவ ரீதியில்.. எமது காட்டிக்கொடுப்பால்.. இல்லாமல் போயுள்ள நிலையில்.. அரசியல் ராஜதந்திர ரீதியில் தீர்மானிக்கப்பட வேண்டும். அதற்கு சொறீலங்கா இழைத்த இனப்படுகொலைகள்.. போர்க்குற்றங்களை வலுப்படுத்தி அதனை கொண்டு இதர நாடுகள்.. சொறீலங்கா சிங்கள அரசை.. இராணுவத்தை..இலகுவாக அணுக்கக் கூடிய ஒன்றாக நோக்கும் நிலையை உருவாக்கி இருக்காவிட்டால்.... இன்று தமிழர்கள் தம் இலக்கில் பாதி வெற்றி கண்டிருக்கலாம். அதனையும் மேற்குலகம்.. ஹிந்தியா தீர்மானிக்க விட்டு.. அதை இப்ப சிங்களம் தன்னை ஆசுவாசப்படுத்தவும்.. அதில் இருந்து தப்பிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்.. தமிழர்களின் சர்வதேச இராஜதந்திர வியூகம் என்பது.. சிக்கலான ஒன்றாக உள்ள நிலையில்... அந்தச் சிக்கலை விடுவிக்கக் கூடிய பலமான நகர்வுகளே இன்று அவசியம்.. தமிழர்களுக்கு. அதற்கு ஒற்றுமை மிக அவசியம். 

நிச்சயம்.. இந்த வியூகத்தை சம் சும் மாவை.. மற்றும் ஒட்டுக்குழு கும்பல்கள் செய்ய முடியாது. இவை களத்தில் நாட்டில் இருக்கும் மக்களோடு... புத்திஜீவிகளோடு இணைந்து புலம்பெயர் மக்களும்.. தமிழக மக்களும் (ஒத்த கருத்துள்ள அரசியல் தலைவர்களும்.. புத்திஜீவிகளும்) இணைந்து வகுக்கும் வியூகத்தில் தான் தங்கியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தக் கூடிய வலுவான அரசியல் தலைமைகளை தாயக மக்கள் இணங்கண்டு.. தேர்வு செய்யத் தவறின்.. நிலைமை.. மிக மோசமாகவே இருக்கும். :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.