Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் வெகு சிறப்பாக நடைபெற்ற மடு அன்னையின் திருவிழா

Featured Replies

ஜேர்மனியில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த பெருவிழா ஜேர்மனி கேவலார் திருப்பதியில், நேற்று நடைபெற்றதுடன், இதில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் கலந்து கொண்டிருந்தார்.

இந்த திருயாத்திரையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பெருவிழாவில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மன்னார், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்களும் பங்கேற்று திருப்பலியை ஒப்புக்கொடுத்திருந்தனர்.

திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் கடந்த 11ஆம் திகதி மாலை செபமாலை பவனியோடு ஆரம்பமாகியிருந்தன.

இம்முறை செபமாலை பவனியோடு மாதாவின் திருச்சுரூபமும் கேவலார் புகையிரத நிலையத்திலிருந்து பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது.

செபமாலை பவனிக்கு பின்னர் அதே நாளில் நற்கருணை ஆராதனையும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/religion/01/155209?ref=home-latest

  • தொடங்கியவர்

கடும் மழை, வெள்ளம் காரணமாக தாய் மண்ணில் இன்று (14-08-2017) மாலை நடைபெற இருந்த மடுமாதா தேவாலயத் திருவிழா சற்று முன்னர் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு திரண்ட மக்கள் ஏமாற்றமும், கவலையும் அடைந்துள்ளனர்.  

நாளைய நிகழ்வுகள் வழமை போல நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • தொடங்கியவர்

மடு. பிரதேசத்தில் கடும் மழை: திருவிழாவிற்கு சென்ற பக்தர்கள் பாதிப்பு

மடு பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகின்றமையினால் நாளை இடம்பெறவுள்ள மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு சென்று விடுதிகளிலும், தற்காலிக கூடாரங்களையும் அமைத்து தங்கியுள்ளனர்.

அத்துடன், இன்று மதியம் முதல் பெய்த கடும் மழையின் காரணமாக மடுத் திருத்தலம் சார்ந்த பகுதி நீரினால் மூழ்கியுள்ளது.

இதனால் பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/155212?ref=home-feed

மடு மாதாவின் திருச்சொரூப பவனி இரத்து : வெள்ளமே காரணம்

p14-aa6101a511d5de2c6d4d8d386c522a1078f46bcd.jpg

 

(தலை­மன்னார் நிருபர்)

மன்னார் மடு­மாதா ஆலயப் பகு­தி யில் அடை­மழை பெய்து வெள்ளம் ஏற்பட்­டுள்­ள­மையின் கார­ண­மாக இன்று செவ்­வாய்­க்கி­ழமை நடை­பெ­ற­வி­ருந்த மடு திருப்­பதி பெரு­விழாவுக்கான திருச்  

சொரூப பவனி

 இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது.

மன்னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் ஆயர் கிங்ஸ்லி சுவாம்­பிள்ளை ஆண்­டகை தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தைத் தொடர்ந்தே இந்தத் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன் கால­நி­லையை பொறுத்து இன்று விழாத் திருப்­பலி தொடர்­பாக உரிய நேரத்­துக்கு அறி­விக்­கப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வரு­டந்­தோறும் ஆவணி 15 ஆம் திகதி கொண்­டா­டப்­படும் மடுத்­தி­ருப்­பதி பெரு­வி­ழா­வுக்கு இலங்­கையின் நாலா பக்­கங்­க­ளி­லி­ருந்தும் சுமார் ஐந்து இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கலந்­து­கொள்­வது வழ­மை­யாகும்.

இவ் வரு­டமும் நேற்று வரைக்கும் நான்கு இலட்­சத்­துக்கு மேற்­பட்ட பக்­தர்கள் மடுத்­தி­ருப்­ப­திக்கு வருகை தந்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதுவும் இம்­முறை அதி­க­மான பக்­தர்கள் கொடி­யேற்ற நாளி­லேயே இங்கு வந்து மரங்­களின் கீழ் கூடாரம் அமைத்து தங்­கி­யி­ருந்­த­தாக மடு திருத்­தல வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

-கடந்த பல மாதங்­க­ளாக மன்னார் மாவட்­டத்தில் வரட்சி நிலவி வந்­தது. கடந்த ஓரிரு தினங்­க­ளாக மடுப்­ப­கு­தியில் பெய்த கடும் மழையால் மடு ஆலய பிர­தேசம் வெள்­ளத்தால் சூழ்ந்­துள்­ளது. இருந்­த­போதும் இங்கு தங்­கி­யி­ருந்த அதி­க­மான பக்­தர்கள் விழாவில் கலந்து செல்லத் திட்­ட­மிட்டு இருந்­த­போதும் மடுத்­தி­ருப்­ப­தியில் விழா நடை­பெறும் பகு­திகள் வெள்­ளத்தில் சூழ்ந்­துள்­ளதால் மக்கள் வெ ளியேறும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்தே திருச்சொரூப பவனி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 -இது தொடர்­பாக மன்னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் ஆயர் கிங்ஸ்லி சுவாம்­பிள்ளை ஆண்­டகை தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் ஊட­கங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. இதன்­படி,

கடந்த சில நாட்­க­ளா­கவும் குறிப்­பாக இன்று (நேற்று) மடுத்­தி­ருப்­ப­தியில் வர­லாறு காணாத வகையில் பெய்யும் கடும் மழை­யினால் ஏற்­பட்ட வெள்ளப் பெருக்கு மடு அன்­னையின் 2017 ஆவணி 15 விண்­ணேற்பு விழாவை வழக்­க­மான முறையில் கொண்­டாட முடி­யா­த­வாறு செய்­துள்­ளது.

ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தொடர்ந்தும் மடுத்­தி­ருப்­ப­தியில் தங்­கி­யி­ருப்­ப­தற்கு இன்­றுள்ள நிலை ஏது­வாக இல்லை. ஆதலால் மன்னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் தலை­மையில் கூடிய குருக்கள் குழு பின்­வரும் தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளது என்­பதை அறியத் தரு­கின்றோம்.

வழி­பாட்டு நேரங்­களில் மக்கள் தங்­கி­யி­ருக்­கின்ற போட்­டிக்கோ பகு­தி­களும் அதனைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களும் தண்­ணீரில் மூழ்­கி­யுள்­ளன. எனவே வழக்­க­மான வழி­பா­டுகள் நடை­பெ­று­வது சாத்­தி­ய­மற்­றது. இன்று (நேற்று) வழக்­க­மாக நடை­பெறும் மாலை வழி­பாடு நிறுத்­தப்­பட்டு அதற்கு பதி­லாக இன்று (நேற்று) மாலை 4.30 மணிக்கு பிர­தான ஆல­யத்­துக்குள் திருச்­செ­ப­மா­லையின் இரண்டு கார­ணிக்­கங்கள் ஒன்று தமி­ழிலும் மற்­றை­யது சிங்­க­ளத்­திலும் செபிக்­கப்­பட்டு மடு அன்­னைக்கு யாத்­தி­ரி­கர்­களால் பிரி­யா­விடை செபம் சொல்­லப்­பட்டு ஈற்றில் மரி­யன்­னையின் திருச்­சு­ரூப ஆசீர்­வா­தத்­துடன் இன்றே (நேற்று) இவ் வழி­பாடு நிறைவு பெற்­றது.

தொடர்ந்து பெரும் மழை நீடிப்­ப­தற்­கான சாத்­தியக் கூறு காணப்­ப­டு­வதால் வானிலை மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு நாளைய (இன்றைய) திருநாள் திருப்பலிப்பற்றிய விபரங்கள் உரிய நேரத்துக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நேற்று ஆலயத்துக்குள் நடைபெற்ற சிறு வழிபாட்டைத் தொடர்ந்து ஆலயத்துக்குள் நிரம்பி வழிந்த பக்தர்களுக்கு காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை மடு அன்னையின் திருச்சுரூப ஆசீரை வழங்கினார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.