Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழம்பிப்போய்க் கிடக்கும் இலங்கைத் திருநாடு

Featured Replies

குழம்பிப்போய்க் கிடக்கும் இலங்கைத் திருநாடு

 
குழம்பிப்போய்க் கிடக்கும் இலங்கைத் திருநாடு
 

நாடு என்­று­மில்­லாத அள­வுக்­குக் குழம்­பிப் போய்க் கிடக்­கின்­றது. அரசு பல திசை­க­ளில் இருந்­தும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­வ­தால் எந்த வேளை­யி­லும் எது­வும் நடக்­க­லாம் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. இரு தரப்­பு­க­ளுக்கு இடை­யே­யான பகை­மைக்கு உதா­ர­ண­மா­கக் கீரி­யை­யும் பாம்­பை­யும் குறிப்­பி­டு­வார்­கள்.

இவை­யி­ரண்­டும் ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சுமு­க­மான உறவு பேணி­ய­தில்லை. அதே போன்று ஒன்­றை­யொன்று கடு­மை­யாக விமர்­சிப்­ப­தை­யும் ஒரு தரப்­பின் கருத்து வெளிப்­பாட்டை மற்­றைய தரப்பு எள்ளி நகை­யா­டு­வ­தும் இந்த நாட்­டின் முக்கிய கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்­றின் வழக்­க­மாக ஆகி­யுள்­ளன.

நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­தன் பின்­னர் இந்த இரண்டு கட்­சி­க­ளும் மாறி மாறி ஆட்­சியை அமைத்து வரு­கின்­றன. ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்­டில் எவ­ருமே எதிர்­பார்க்­காத வகை­யில் பெரும் அர­சி­யல் மாற்­ற­மொன்று இங்கு ஏற்­பட்­டது. பரம எதி­ரி­க­ளான இந்த இரண்டு கட்­சி­க­ளும் இணைந்து அரசை அமைத்­துக் கொண்­டன.

ஏற்­க­னவே ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆத­ர­வு­டன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன அரச தலை­வ­ரா­னார். பின்­னர் ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­மை­சிங்க தலைமை அமைச்­ச­ரா­னார்.

கூட்டு அரசைக் கவிழ்த்­து­வி­ட
துடிக்கிறார் மகிந்த

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, மகிந்த அணி, மைத்­தி­ரி­பால சிறி­சேன அணி­யென இரண்­டா­கப் பிள­வு­பட்­டுக் காணப்­ப­டு­கின்­றது. மீண்­டும் பத­வி­யில் அமர்ந்­து­விட வேண்டும் என்ற ஆசை மகிந்­த­வி­டம் துளிர்­விட்­டுக் காணப்­ப­டு­கின்­றது. சிங்­கள மக்­க­ளின் ஆத­ரவு தனக்கு இன்­ன­மும் உள்­ளது என்று அவர் நம்­பு­கின்­றார்.

அர­சின் செயற்­பா­டு­க­ளில் மக்­கள் அதி­ருப்தி அடை­வார்­க­ளா­யின், அவர்­க­ளின் ஆத­ர­வும் தனக்கே கிடைக்­கு­மென அவர் நம்­பு­கின்­றார். அர­சுக்கு எதிரான வேலை நிறுத்­தப் போராட்­டங்­களை மகிந்த தரப்­பி­னரே தூண்டி வரு­கின்­ற­னர்.
இத­னால் மக்­கள் மேலும் மேலும் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். அர­சின் மீது அவர்­க­ளுக்கு வெறுப்பு ஏற்­ப­டவே செய்­கின்­றது.

இது ஆட்­சிக் கவிழ்ப்­புக்கு வழி கோலி­வி­டு­மென மகிந்த தரப்­பி­னர் எண்ணுகின்றனர். இதே வேளை எவ­ரா­லும் இந்த அர­சைக் கவிழ்க்க முடி­யா­தென அரச தலை­வர் திரும்­பத் திரும்­பக் கூறி வரு­கின்­றார். அமைச்­சர்­க­ளும் இதையே கூறி வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் எளி­தில் நிறை­வேறி விடு­மென ஆரம்­பத்­தில் எதிர்­பார்க்­கப்­பட்­டது. சிறு­பான்மை இனத்­த­வ­ரின் பிரச்­சி­னை­ க­ளுக்கு இதன் மூல­மா­கவே தீர்வு கிடைக்­கு­மெ­ன­வும் நம்­பப்­பட்­டது.

இத­னால் அர­ச­மைப்­புத் தொடர்­பில் தமிழ் மக்­கள் எதிர்­பார்ப்­புக்­க­ளு­டன் காத்­தி­ருந்­த­னர். தமிழ்த் தலை­வர்­க­ளும் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்டி வந்­த­னர்.ஆனால் இன்று நிலைமை முற்­றி­லும் தலை­கீ­ழாக மாறி­விட்­டது.

புதிய அர­ச­மைப்பு
உரு­வாக்க முயற்­சியை
எதிர்க்­கும் இன­வா­தத் தரப்­புக்­கள்

கடும்­போக்கு இன­வா­தி­கள் புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு தமது கடும் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­ற­னர். புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம், தனி­நாட்­டுக் கோரிக்கைக்கு வழி­வ­குத்து விடு­மெ­னத் தவ­றான பரப்­பு­ரை­க­ளி­லும் அவர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

பௌத்த அமைப்­புக்­கள் இதற்கு ஒரு­படி மேலே­போய், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கும், தற்­போ­தைய அர­ச­மைப்­பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கும் எதி­ரா­கப் போர்க்­கொடி தூக்­கி­யுள்­ள­னர். இதற்கு அரசு அடி­ப­ணிய வேண்­டிய நிலை­தான் உரு­வா­கப் போகின்­றது. இத­னால் பாதிக்­கப்­ப­டப் போவது சிறு­பான்மை இனத்­த­வர்­தான்.

இந்த நிலை­யில் யாழ் குடா­நாட்­டில் இடம்­பெற்ற சில மோச­மான சம்­ப­வங்­கள்­இங்­குள்ள மக்­கள் மத்­தி­யில் பெரும் அச்­ச நி­லை­மை­யைத் தோற்­று­வித்­துள்­ளது. நீதி­பதி இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூடு, வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வர் தாக்­கப்­பட்­டமை, கொக்­கு­வி­லில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் இரு­வர் கும்­பல் ஒன்­றி­னால் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­னமை ஆகி­யவை தென்­ப­கு­தி­யில் உணர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­து­டன், அர­சுக்கு நெருக்­க­டி­யை­யும் கொடுத்­துள்­ளது.

இந்த நிலை­யில் வட பகுதி சிங்­கள மக்­கள் மத்­தி­யில் மீண்­டு­மொரு போர்ச் சூழ­லுக்கு வித்­தி­டப்­பட்டு வரு­கின்­றது. தேடு­தல் நட­வ­டிக்­கை­க­ளில் படை­யி­னரை ஈடு­ப­டுத்­து­கின்ற திட்­டம் நடை­மு­றைக்கு வரு­மா­யின், மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­டு­வி­டும். இதனால் அர­சின் மீதான மக்­க­ளின் வெறுப்­பும் அதி­க­ரித்­து­வி­டும்.

தயக்­கத்­தோ­டும் அச்­சத்­தோ­டும்
செயற்­ப­டும் அர­சின் போக்கு

இன்று இந்த நாட்­டில் வலு­வா­ன­தொரு ஆட்­சிக்­கான தேவை எழுந்­துள்­ளது. தற்­போ­தைய அரசு எதற்­கும் அஞ்­சு­கின்­றது. சக­ல­ருக்­கும் பயப்­ப­டு­கின்­றது. எதிர்ப்­புக்­க­ளைத் துணி­வு­டன் சமா­ளிக்­கின்ற ஆற்­ற­லும் இன்­றைய அர­சி­டம் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இதை­விட அர­சுக்­குள்­ளேயே குழப்­ப­நிலை காணப்­ப­டு­கின்­றது.

இங்கு கூட்டு அர சு நிர்வாகமொன்று இடம்­பெற்­றா­லும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி ­யும், ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யும் உண்­மை­யான ஐக்­கி­யத்­து­டன் செயற்­ப­டு­வ­தா­கத் தோன்­ற­வில்லை. அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க மீதான விசா­ரணை இடம்­பெற்­று­வ­ரும் நிலை­யில் அமைச்­சர்­கள் சிலர் அவ­ருக்கு எதி­ரா­கக் குரல் கொடுத்து வரு­கின்­றமை வேடிக்­கை­யா­க­வுள்­ளது.

உண்­மை­யைச் சொல்­லப் போனால், ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எந்த வகை­யி­லா­வது இவர்­கள் உதவ வேண்­டி­யது தலை­யாாய கட­மை­யா­கும். விசா­ர­ணை­யின் போது அவர் குற்­ற­வா­ளி­யெ­னத் தீர்­மா­னிக்­கப்­பட்­டால் அதற்கு அமைச்­ச­ரவை எது­வுமே செய்­ய­மு­டி­யாது.

ஆனால் விசா­ரணை குறித்த முடிவு எது­வும் வெளி­வ­ராத நிலை­யில் அவ­ருக்கு எதி­ரா­கக் குரல் கொடுப்­பது அநா­க­ரி­க­மான செய­லா­கும். இவர்­களே இவ்­வாறு நடந்து கொள்­ளும்­போது எதி­ர­ணி­யி­னர் எவ்­வாறு நடந்து கொள்­வார்­கள் என்­பதை எம்­மால் ஊகிக்க முடி­யும்.

இந்த நிலை­யில் ஒட்­டு­மொத்­த­மா­கக் கூட்­டிக் கழித்­துப் பார்க்­கும் போது நாட்­டின் தற்­போ­தைய நிலை திருப்­தி­த­ரு­வ­தாக இல்­லை­யென்றே கூற வேண்­டும். இதன் பாத­க­மான விளை­வு­களை மக்­கள் தான் அனு­ப­விக்­கப் போகின்­றார்­கள்.

http://newuthayan.com/story/20424.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தீவு குழம்பாதிருக்க ஒரேவழி தேசிய இனப்பிரச்சினைக்குத் துணிவோடு தீர்வை முன்வைக்கக்கூடிய தலைமையே. வெறுமனே இறைமை ஒரே இலங்கை என்று அழிவதைவிட  ஆரோக்கியமாகச் சிந்திக்க வேண்டியது  சிங்கள ஆளும் ஆக்கிரமிப்பாளரின் கடமையாகும். குழப்பம் தீர ஒரேவழி தமிழரைத் தமது வழியிலே தமது பாரம்பரியநிலத்திலே வாழவிடுதல்.  அப்படி ஒன்றாகப் பாசப்பிணைப்போடுதான் சிங்களம் இருக்கவேண்டின் " இலங்கைக் கூட்டாட்சி ஒன்றியங்களின் சமத்துவக் குடியரசு"  மாற்றிவிடவேண்டியதுதான். இல்லையேல் இந்த பிக்குகளும் ஐ.தே.க  சி.சு.க. ம.வி.க இப்படியான இனத்துவேசிகள்  இலங்கையை குட்டிச்சுவராக்குவது தொடரும்.

Edited by nochchi
பிழைதிருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nochchi said:

இலங்கைத்தீவு குழம்பாதிருக்க ஒரேவழி தேசிய இனப்பிரச்சினைக்குத் துணிவோடு தீர்வை முன்வைக்கக்கூடிய தலைமையே. வெறுமனே இறைமை ஒரே இலங்கை என்று அழிவதைவிட  ஆரோக்கியமாகச் சிந்திக்க வேண்டியது  சிங்கள ஆளும் ஆக்கிரமிப்பாளரின் கடமையாகும். குழப்பம் தீர ஒரேவழி தமிழரைத் தமது வழியிலே தமது பாரம்பரியநிலத்திலே வாழவிடுதல்.  அப்படி ஒன்றாகப் பாசப்பிணைப்போடுதான் சிங்களம் இருக்கவேண்டின் " இலங்கைக் கூட்டாட்சி ஒன்றியங்களின் சமத்துவக் குடியரசு"  மாற்றிவிடவேண்டியதுதான். இல்லையேல் இந்த பிக்குகளும் ஐ.தே.க  சி.சு.க. ம.வி.க இப்படியான இனத்துவேசிகள்  இலங்கையை குட்டிச்சுவராக்குவது தொடரும்.

மெல்லமாய் கதையுங்கோ......
சிங்களவன் எல்லாத்துக்கும் ஓகே பண்ணீட்டான் எண்டால்...பிறகு சம்பந்தன் சுமந்திரன் எல்லாம் என்னத்தை சொல்லி பறையடிச்சு மடிப்பிச்சையெடுக்கிறது? :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.