Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து தனது அனுபவங்களை அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Featured Replies

சரணடைந்த புலிகளை இராணுவம் ஏன் கொன்றது? சொல்கெய்மின் சந்தேகம்! (காணொளி)

 
சரணடைந்த புலிகளை இராணுவம் ஏன் கொன்றது? சொல்கெய்மின் சந்தேகம்! (காணொளி)

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதானியுமான எரிக் சொல்கெய்ம் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் இறுதிப் போர் தொடர்பாகவும் தற்பொழுது சில முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து தனது அனுபவங்களை அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். சமாதான காலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீலங்காவின் சனாதிபதியாக இருந்த சந்திரிகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பு தொடர்பாகவும் தான் சந்தித்த முக்கியமான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளதோடு வெள்ளைக்கொடி விவகாரம் குறித்தும் பேசியுள்ளார்.

இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்த போது, தாம் நேரடியாக பேசவில்லை என்றும், வேறொரு நோர்வேஜிய சகாவே அவருடன் பேசியதாகவும் இதன்போது அவர் கூறியுள்ளார்.

”விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த உறுப்பினர்களில் புலித்தேவனும் ஒருவர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்தார். போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகவும், அதற்கு எம்மால் உதவ முடியுமா என்றும் அவர் எம்மிடம் கேட்டார்.

ஆனால் நாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளித்தோம். அன்று மே 17ஆம் நாள் அது நோர்வேயின் தேசிய நாள். அதனால் அந்தச் சந்தர்ப்பத்தை நினைவில் வைத்திருக்கிறேன். ஒஸ்லோவில் அணிவகுப்புக்காக நான் சென்று கொண்டிருந்தேன். புலித்தேவனிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் அவருடன் நேரடியாகப் பேசவில்லை. ஆனால், போர் குறித்து நாங்கள் தலையீடு செய்வதற்கு மிகவும் தாமதமாகி விட்டது என்று எனது சகா ஒருவர் அவருக்கு கூறினார். 

ஆனாலும் பெரியதொரு வெள்ளைக்கொடியை ஏந்திச் சென்று ஒலிபெருக்கிகள் மூலமோ வேறெந்த வழியிலோ உங்களின் நிலைப்பாட்டை சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியப்படுத்துங்கள். எமது பக்கத்தில் இருந்து சிறிலங்கா தலைவர்களுக்கு சரணடைய விரும்பும் உங்களின் விருப்பம் தெரியப்படுத்தப்படும். இதுதான் எம்மால் கூறமுடியும் என்று அவரிடம் நாம் கூறினோம்.

புலித்தேவனுக்கு நாம் கூறியபடியே, அவர்களின் எண்ணத்தினை நாங்கள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரான பசில் ராஜபக்சவுக்குத் தெரியப்படுத்தினோம். நாங்கள் மட்டுமல்ல, முக்கியமான சில தமிழர்கள் மூலமும் புலிகள் அதனைச் செய்தனர். சில இந்திய இடைத்தரகர்களும் சிறிலங்கா தலைமைக்கு தகவல் அனுப்பினார்கள் என்று நான் நினைக்கிறேன்.

பின்னர் நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டு விட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்களின் மரணம் நடந்த சரியான சூழ்நிலைகள் தொடர்பாக இன்னமும் தெரியவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் பிரபாகரனுடன் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும், சரியாக எனக்குத் தெரியவில்லை. பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்றும் எனக்குத் தெரியவில்லை.

ஆனால், பிரபாகரனின் 12 வயது மகன், இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகவும் வலுவாக சந்தேகிக்கிறோம். இது முற்றிலும், மிக மோசமான, தீய செயல், பொறுப்பற்ற செயல். இந்த விடயத்தில் சிறிலங்கா படையினர் மிகமிக நன்றாகச் செயற்படாதது துரதிஸ்டம்.

இறுதிப் போரில் புலிகளின் சரணடைதலை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? நீதிமன்றத்தில் நிறுத்தாமல், அவர்களை அதற்காகக் கொன்றார்கள்? என்றும் இதன்போது சொல்கெய்ம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் தற்பொழுது இறுதிப்போர் சார்ந்த கவனத்தினை ஈர்த்துள்ளது.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Why-did-the-army-kill-the-surrendered-tigers

மத்தியஸ்தம் வகிக்கும் திறமைகள் அற்று தனது பொறுப்புக்களில் படுதோல்வியடைந்த எரிக் சொல்ஹெய்ம் அவ்வப்போது தனது இருப்பை தக்க வைக்க இதுபோன்ற ஏதாவது ஒன்றை உளறி அரசியல் செய்வது வாடிக்கை ஆகிவிட்டது..

  • தொடங்கியவர்

பிரபாகரன் எப்படியானவர்? மனம் திறந்து புகழ்ந்தார் சொல்ஹெய்ம்!

 

பிரபாகரன் எப்படியானவர்? மனம் திறந்து புகழ்ந்தார் சொல்ஹெய்ம்! (காணொளி)

இலங்கையில் நடந்த உள் நாட்டு யுத்தம் குறித்தும் இறுதிப்போரின் சம்பவங்கள் குறித்தும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிவரும் நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள், அண்மையில் இந்தியாவில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகளின் அனுபவம் குறித்து செவ்வியளித்திருந்தார்.

இதில் சமாதான காலத்தில் தனக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் உண்டான சந்திப்புக்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் போன்ற பல விடயங்களினையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக அவர் அந்தச் செவ்வியில் முன்வைத்த கருத்தும் இங்கே குறிப்பிடக்கூடியதாகும்.

குறித்த செவ்வியில், ”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் கொண்டிருந்த உறவானது நட்பு ரீதியானதா அல்லது அதனை விடவும் அதிகமானதா?” என்று குறித்த செவ்விகாண்பவர் கேட்டிருந்தார்.

“நான் வேறெந்த வெளிநாட்டவரையும் விட, பிரபாகரனைத்தான் அதிகமாகச் சந்தித்திருக்கிறேன்; அடிக்கடி சந்தித்திருக்கிறேன். அவர் சிறிலங்காவின் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவை ஒருமுறை சந்தித்திருந்ததோடு சில சிங்களவர்களையும் சந்தித்திருக்கிறார். தமிழ் மக்களை அவர் எப்போதும் சந்தித்து வந்தார். அது அவரது பொதுவான வழக்கமாகும்.

நாங்கள் மேலும் அதிகமான நேரத்தை அவருடன் செலவிட்டிருந்தால் அவரோடு இன்னும் ஊடாடியிருக்க முடியும். உள் நாட்டுப் பிரச்சினைகள் பற்றி பேசுவதனூடாக அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்த நாங்கள் முயன்றோம். உண்மையாகவே அவர் அதுகுறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். மேலும் அவருக்கு திரைப்படங்களில் மிகுந்த ஆர்வம் இருந்தது. இயற்கை மீது அவருக்கு இருந்த ஆர்வம் அளப்பரியது. அவர் ஒரு நல்ல சமையற்காரராக உணவு விடயத்தில் அறியப்பட்டார்.

இருப்பினும் அவருடன் தனிப்பட்ட உறவை வளர்ப்பது மிகவும் கடினமாகத்தான் இருந்தது. எல்லைப்படுத்தப்பட்ட நேரம் மிகவும் பிரச்சினையாக இருந்தது. அதைவிட வடக்கிற்குச் செல்வதற்கும் சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படவில்லை. மேலும் மொழிகூட மிகப்பெரிய தடையாக இருந்தது. அவர் தமிழில் பேசுவதை புரிந்து கொள்ள எமக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார்.

அவர் திறந்த மனம் கொண்ட பாத்திரமாக இருக்கவில்லை. மிகுந்த எச்சரிக்கையுடன் மூடிய மன நிலை அவரிடம் இருந்தது. ஆனால் அவர் இந்த விடயங்களில் கவர்ச்சிகரமானவராக இருந்துள்ளார்.” என்று நோர்வேயின் முன்னால் அமைச்சராகவும், இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதான தூதுவராகவுமிருந்த எரிக் சொல்கெய்ம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Mentally-Opened-and-Shouting-about-prabakaran

  • தொடங்கியவர்

"புலிகள் தலைவர் பிர­பா­க­ர­னுடன் அதிக நேரத்தை செல­வி­ட­மு­டி­யாது போனமை குறித்து வருந்­து­கிறேன்" : அவ­ரது மகனைக் படை­யி­னரே கொன்­றி­ருப்பர்

Published by RasmilaD on 2017-08-20 10:19:07

 

prabhakaran.jpg

"பிர­பா­க­ரனை தமிழ் மக்கள் ஏன் மகத்­தான ஒரு தலை­வ­ராக  விரும்­பி­னார்கள் என்று என்னால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை.  பிர­பா­க­ரனை முதல்­த­டை­வை­யாக சந்­திப்­ப­தற்கு நான் சென்­றி­ருந்­த­போது இலங்­கையில் யாருமே அதனை அறிந்­தி­ருக்­க­வில்லை. புலி­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் செல்ல இலங்­கையின் அப்­போ­தைய ஜனா­தி­பதி அனு­மதி அளித்­தி­ருந்தார். இது பிர­த­ம­ருக்குக் கூடத் தெரி­யாது.

 நாங்கள் விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பிர­தே­சத்தில் பிர­பா­க­ரனை சந்­தித்தோம்.அதற்­காக நாங்கள் உலங்கு வானூர்­தியில் சென்­றி­ருந்தோம்.   தாழ்­வா­கவும் மேலு­யர்ந்தும் பறந்து சென்­றது அது. மலை­க­ளாக இருந்­தி­ருந்தால் பயங்­க­ர­மாக இருந்­தி­ருக்கும். நாங்கள் செல்­வதை இரா­ணு­வத்­தி­னரோ விடு­தலைப் புலி­களோ அறிந்­தி­ருக்­க­வில்லை. 

அங்கு நாங்கள் பிர­பா­க­ரனை சந்­தித்தோம்.அது ஒரு நல்ல சந்­திப்பு. அமைதி முயற்­சி­களில் அவர்கள் ஆர்வம் கொண்­டி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­தினர். ஆனால் தமி­ழர்கள் மத்­தியில் பிர­பா­கரன் மகத்­தான நிலையில் இருக்­கிறார் என்­பதைப் புரிந்து கொள்­வது கடி­ன­மாக இருந்­தது.

அந்த நேரத்தில் அவர் கட­வு­ளாக மீட்­ப­ராக போற்­றப்­பட்டார்.தமிழ் மக்கள் ஏன் அவரை அப்­படி போற்­றி­னார்கள் என்று எம்மால் உண்­மையில் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை"

இவ்­வாறு இலங்­கைக்­கான நோர்­வேயின் முன்னாள் சமா­தான தூது­வரும் ஐ.நா.சுற்­றுச்­சூழல் திட்டப் பணிப்­பா­ள­ரு­மான  எரிக் சொல்ஹெய்ம் சர்­வ­தேச தொலைக்­காட்சி சேவை ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில், 

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் அதிக நேரத்தை செல­வி­ட­மு­டி­யாமல் போன­தற்­காக வருந்­து­கின்றேன் என்றார்.

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னுடன் கொண்­டி­ருந்த உறவு நட்பு ரீதி­யா­னதா அல்­லது அத­னை­வி­டவும் அதி­க­மா­னதா என்று எழுப்­பிய கேள்­விக்குப் பதில் அளித்­துள்ள எரிக் சொல்ஹெய்ம்

“உல­கி­லுள்ள வேறெந்த வெளி­நாட்­ட­வ­ரையும் விட பிர­பா­க­ரனை நான் அதி­க­மாக அடிக்­கடி சந்­தித்­தி­ருக்­கிறேன். அவர் தமிழ் மக்­களை  பொது­வாக சந்­திப்­பது வழக்கம். இலங்­கையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் குழுவை ஒரு­முறை சந்­தித்­தி­ருக்­கிறார். சில சிங்­க­ள­வர்­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கிறார். ஆனால் அவர் தமிழ் மக்­களை எப்­போதும் சந்­தித்து வந்தார். அவ­ருடன் இன்னும் கூடு­த­லான நேரத்தை செல­விட்­டி­ருந்தால் நாம் பெரும்­பாலும் அவர் மீது இன்னும் செல்­வாக்கு செலுத்­தி­யி­ருக்க முடியும். 

பிரச்­சி­னைகள் பற்றி பேசு­வதன் மூலம் அவ­ருடன் தனிப்­பட்ட உறவை ஏற்­ப­டுத்த நாங்கள் முயன்றோம்.  அவர் உண்­மையில் அது­பற்றி அக்­கறை கொண்­டி­ருந்தார்.

அவர் நிச்­சயம் திரைப்­ப­டங்­களில் ஆர்வம் கொண்­டி­ருந்தார்.உணவு விட­யத்தில் அவர் ஒரு நல்ல சமை­யல்­கா­ர­ராக அறி­யப்­பட்டார்.இயற்கை மீது ஆர்வம் கொண்­டி­ருந்தார்.

ஆனாலும் தனிப்­பட்ட உறவை வளர்ப்­பது கடி­ன­மாக இருந்­தது.ஏனென்றால் எமக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நேரமே இருந்­தது.மேலும் இலங்கை அர­சாங்­கத்­தினால் வடக்­கிற்குச் செல்­வ­தற்கும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

அதை­விட மொழித் தடையும் இருந்­தது.அவர் தமிழில் பேசு­வதை புரிந்­து­கொள்ள எமக்கு மொழி­பெ­யர்ப்­பாளர் தேவைப்­பட்டார். இறு­தி­யாக அவர் வெளிப்­ப­டை­யாக திறந்­த­நி­லையில் இல்­லாத பாத்­தி­ர­வ­கை­யா­கவே இருந்தார்.

கவர்ச்­சி­க­ர­மா­ன­வ­ராக ஆனால் இன்னும் அதிகம் மூடிய எச்­ச­ரிக்­கை­யுடன் அவர் இருந்தார் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் மகன் பாலச்­சந்­திரன் படை­யி­னரால் கைது­செய்­யப்­பட்ட நிலையில் படு­கொலை செய்­யப்­பட்டார் என தான் வலு­வாக சந்­தே­கிப்­ப­தாக தெரி­வித்த எரிக் சொல்ஹெய்ம்  பிர­பா­கரன் எவ்­வாறு கொலை செய்­யப்­பட்டார்  என்­பது எனக்கு தெரி­யாது.  பிர­பா­க­ரனின் 12வயது மகன் இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பின்னர் அவர்­களால் படு­கொலை செய்­யப்­பட்டார் என்றே நாங்கள் மிக­மிக வலு­வாக சந்­தே­கிக்­கிறோம்.

இது முற்­றிலும் மிக மோச­மான பொறுப்­பற்ற தீய செயல். இந்த விட­யத்தில் இலங்கைப் படை­யினர் மிக­மிக நன்­றாக செயற்­ப­டா­தமை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது எனவும் அவர் கூறினார்.

வெள்ளைக் கொடி விவ­காரம் குறித்து அவ­ரிடம் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு எரிக் சொல்ஹெய்ம் பதி­ல­ளிக்­கையில்

போரின் இறு­திக்­கட்­டத்தில் 2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி விடு­த­லை­பு­லி­களின் சமா­தான செய­லக பணிப்­பாளர் புலித்­தே­வ­னிடம் இருந்து எனக்கு தொலை­பேசி அழைப்பு வந்­தது. ஆனால் நான் அவ­ருடன் நேர­டி­யாகப் பேச­வில்லை வேறு­ஒ­ரு­வரே அவ­ருடன் பேசினார்

அத்­துடன் இந்த உரை­யா­ட­லின்­போது தாம் வழங்­கிய வாய்ப்­புக்­களை உத­றி­விட்டு காலம் கடந்து உதவி கோரு­வ­தாக புலித்­தே­வ­னுக்கு பதி­ல­ளித்­த­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அது மே 17ஆம் திகதி. அது நோர்­வேயின் தேசிய நாளும் கூட.அதனால் நினைவில் வைத்­தி­ருக்­கிறேன். ஒஸ்­லோவில் அணி­வ­குப்­புக்­காக நான் சென்று கொண்­டி­ருந்தேன்.அப்­போது புலித்­தே­வ­னிடம் இருந்து அழைப்பு வந்­தது.

அவர் விடு­தலைப் புலி­களின் மிகச் சிறந்த உறுப்­பி­னர்­களில் ஒருவர். விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரிவின் தலை­வ­ராக இருந்தார்.

இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் தாங்கள் சர­ண­டைய விரும்­பு­வ­தா­கவும் அதற்கு எம்மால் உதவ முடி­யுமா என்றும் அவர் எம்­மிடம் கேட்டார்.

நான் அவ­ருடன் நேர­டி­யாக பேச­வில்லை. ஆனால் நாங்கள் தலை­யீடு செய்­வ­தற்கு மிகவும் தாம­த­மா­கி­விட்­டது என்று நோர்­வே­ஜிய சகா ஒருவர் அவ­ருக்கு கூறினார்.ஏனென்றால் போர் முடிவுக் கட்­டத்தை நெருங்கி விட்­டது.

நாம் தலை­யீடு செய்­வ­தற்கு சாத்­தி­யங்கள் இருந்­த­போது போராட்­டத்தைக் கைவி­டு­வ­தற்கு முன்னர் நாங்கள் அவர்­க­ளுக்கு வாய்ப்­புக்­களை வழங்­கி­யி­ருந்தோம் என்­பதை நாம் அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டினோம். ஆனால் இப்­போது அது மிகவும் தாம­த­மாகி விட்­டது என்று கூறினோம்.

அத்­துடன் பெரி­ய­தொரு வெள்ைளக் ­கொ­டியை ஏந்திச் செல்­லுங்கள் ஒலி­பெ­ருக்­கிகள் மூலமோ வேறெந்த வழி­யிலோ உங்­களின் எண்­ணத்தை இலங்கை ஆயுதப் படை­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­துங்கள் என்­பதைத் தான் எம்மால் உங்­க­ளுக்கு கூற­மு­டியும்.

எமது பக்­கத்­தி­லி­ருந்து இலங்கைத் தலை­வர்­க­ளுக்கு சர­ண­டைய விரும்பும் உங்­களின் விருப்பம் தெரி­யப்­ப­டுத்­தப்­படும் என்று அவ­ரிடம் நாம் கூறினோம்.

அதன்­ப­டியே நிச்­ச­ய­மாக அதனை இலங்கைத் தலை­வர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தினோம். நாங்கள் அதனை ராஜபக் ஷவின் ஆலோ­ச­க­ரான பசில் ராஜபக் ஷவுக்குத் தெரி­யப்­ப­டுத்­தினோம்.

நாங்கள் மட்­டு­மல்ல முக்­கி­ய­மான சில தமி­ழர்கள் மூலமும் புலிகள் அதனைச் செய்­தனர். சில இந்­திய இடைத்­த­ர­கர்­களும் கூட இலங்கை தலை­மைக்கு தகவல் அனுப்­பி­னார்கள்  என்று நான் நினைக்­கிறேன்.

ஒருநாள் கழித்து நடே­சனும் புலித்­தே­வனும் கொல்­லப்­பட்­டு­விட்­ட­தாக எங்­க­ளுக்கு தகவல் கிடைத்­தது. அவர்­களின் மரணம் நடந்த சரியான சூழ்நிலைகள் தொடர்பாக இன்னமும் தெரியவில்லை.

அந்த நேரத்தில் அவர்கள் பிரபாகரனுடன் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் சரியாக எனக்கு தெரியவில்லை. பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்று. 

எனினும் பிரபாகரனின் 12வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கிறோம். இது முற்றிலும் மிக மோசமான பொறுப்பற்ற தீயசெயல்.

இந்தக் கொலைகள் தொடர்பாக பெரியதொரு கேள்விக்குறி உள்ளது.ஏன் அவர்கள் சரணடைதலை ஏற்றுக் கொள்ளவில்லை.  நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அவர்களை ஏன் கொன்றார்கள் என்று தெரியவில்லை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/23357

'முடிச்சை' அவிழ்க்க சொல்யஹய்மால் முடியும்; அனந்தி

நோர்வேயின்  முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் பல உண்மைகள் மறைந்து  கிடப்பதாகவும் காணாமல்  போனோர் குறித்த முடிச்சையும் அவரால்  அவிழ்க்க முடியுமென  தான் நம்புவதாகவும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;


 அண்மையில் நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம்  வெளிநாட்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்  படையினரால்  பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும் இது ஒரு மோசமான குற்றச் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களின் பின்னர் அவரது வாயிலிருந்து இந்த விடயம் வெளிவந்துள்ளது.  அவரிடம் யுத்தம் தொடர்பிலான பல உண்மைகள் புதைந்து கிடக்கின்றன. சரணடைந்த விடயம் குறித்தும் ஒரு சில விடயங்களை உதிர்த்துள்ளார்.

எனவே  அவருக்கு பல உண்மைகள் தெரியும். காணாமல் போனோர் குறித்த விடயத்தில் முடிச்சை அவிழ்க்க  அவரால் முடியுமென நான் நம்புகிறேன் என்றார்.

http://www.thinakkural.lk/article.php?local/uehhv1xvtt82359f9a2e9ab329532rhsjzdc74b58ef7c5b974807751pfftu

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18.8.2017 at 8:37 PM, நவீனன் said:

”விடுதலைப் புலிகளின் மிகச் சிறந்த உறுப்பினர்களில் புலித்தேவனும் ஒருவர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்தார். போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் தாங்கள் சரணடைய விரும்புவதாகவும், அதற்கு எம்மால் உதவ முடியுமா என்றும் அவர் எம்மிடம் கேட்டார்.

தாங்கள் சரணடைந்தாவது பொதுமக்களை காப்பாற்ற நினைத்தவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.