Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவியுங்கள்

Featured Replies

தமிழ் அர­சியல் கைதி­களை நிபந்­த­னை­யின்றி விடு­வி­யுங்கள்

p14-0ebefab19b84f2b8e8b99e965dd9314c133e0925.jpg

 

மதி­ய­ரசன் சுலக் ஷன், கணேஷன் தர்­ச­னவின் வழக்கை வேறு நீதி­மன்­றத்­துக்கு மாற்­று­வது அநீதி   

(ந.ஜெகதீஸ்)

தமிழ் அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்தில் நீதி­ய­மைச்சர் விஜேதாஸ ராஜ­பக் ஷ பார­பட்­ச­மாக செயற்­ப­டு­கின்றார். சிறையில் வாடும் அனை த்து அர­சியல் கைதி­களும் எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு தெரி­வித்­துள்­ளது.  

அத்­துடன் சிறையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் மதி­ய­ரசன் சுலக்ஷன், கணேஷன் தர்­சன ஆகி­யோரின் வழக்கு விசா­ரணை வேறொரு நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­ப­டு­மாயின் மேலும் கால தாம­தத்­தி­னையே ஏற்­ப­டுத்தும் எனவும் அவ்­வ­மைப்பின் தலைவர் அருட்­தந்தை மா.சக்­திவேல் தெரி­வித்தார்.

கொழும்பில் அமைந்­துள்ள இலங்கை ஆசி­ரியர் சேவை கேட்போர் கூடத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார.;

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அர­சியல் கைதி­க­ளான மதி­ய­ரசன் சுலக்ஷன், கணேஷன் தர்சன், ஆர் திரு­வருள் ஆகியோர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் தொடர் உண்­ணா­வி­ரத போராட்­டத்தை முன்­டுத்து வரு­கின்­றனர். 

இவர்­க­ளுக்கு எதி­ராக வவு­னியா நீதி­மன்­றத்தில் தொடுக்­கப்­பட்­டி­ருக்கும் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட வேண்­டிய நிலையில் குறித்த வழக்கை வேறொரு நீதி­மன்­றத்­துக்கு மாற்றும் தீர்­மா­னத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்தே அவர்ள் உண்­ணா­வி­ரத போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.கடந்த 2013 ஆம் ஆண்டில் மதி­ய­ரசன் சுலக்ஷன், கணேஷன் தர்­சன ஆகியோர் மீதே வழக்கு தொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறை­வுப்­பெற்­றதை தொடர்ந்து அவர்­க­ளுக்கு ஒரு­வ­ரு­ட­காலம் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. பின்னர் ஒன்­றரை வரு­ட­காலம் அவர்கள் பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­ட­துடன் மேலும் ஒன்­றரை வருட காலம் சிறை­யிலும் அடைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு 4 வரு­டங்கள் காலந்­தாழ்த்­தப்­பட்­டதன் பின்னர் கடந்த 2013 ஆண்டு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுக்­கப்­பட்டு 3 மாதக்­கா­லத்­திற்கு பின்னர் குற்­றப்­பத்­தி­ரிக்­கையில் திருத்தம் மேற்­கொள்­ள­வேண்டும் எனக்­கூறி சட்­ட­மா­திபர் திணைக்­களம் வழக்கு கோவையை மீளப்­பெற்­றுக்­கொண்­டுள்­ளது. அவ்­வாறு மீளப்­பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட கோவையில் திருத்தம் செய்­வ­தற்கு மேலும் இரண்­டரை வரு­ட­காலம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. குறித்த காலப்­ப­கு­தியில் இந்த வழக்­கா­னது 36 தட­வைகள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

குற்­றப்­பத்­தி­ரிக்கை திருத்­தத்தில் எடுத்­துக்­கொண்ட கால­தா­ம­தத்­தினை சுட்­டிக்­காட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி குறித்த சந்­தே­க­பர்கள் சிறையில் உண்­ணா­வி­ர­தத்­தினை மேற்­கொண்­டி­ருந்­தனர். அத­னை­ய­டுத்து இரு­வா­ரங்­க­ளுக்குள் குற்­றப்­பத்­தி­ரிக்கை தாக்கல் செய்­யப்­படும் என சட்­ட­மா­திபர் திணைக்­களம் வாக்­கு­று­தி­ய­தி­ளித்­தது. இதனால் குறித்த இரு­வரும் உண்­ணா­வி­ர­தத்­தினை கைவிட்­டி­ருந்­தனர்.

எனினும் குறித்த குற்­றப்­பத்­தி­ரிக்­கை­யா­னது சட்­ட­மா­திபர் திணைக்­க­ளத்­தினால் 4 வரு­ட­கா­ல­தா­மத்­திற்கு பின்னர் இவ்­வ­ரு­டத்தில் கடந்த ஜூன் மாதமே சமர்ப்­பித்­தி­ருந்­த­துடன் மேலும் ஒரு சந்­தே­க­ந­ப­ரையும் இந்த வழக்கில் உட்­பு­குத்­தி­யி­ருந்­தது. தொடர்ந்தும் அந்த வழக்கை தொட­ராது அதனை வேறொரு நீதி­மன்­றத்­திற்கு மாற்­று­வ­தற்கு தீர்­மா­னத்தை எடுத்­துள்­ள­மை­யா­னது அவர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அடிப்­படை மனித உரிமை மீற­லாகும். இதன்­மூலம் மேலும் கால­தா­ம­தமே ஏற்­படும்.

அத்­துடன் குறித்த வழக்கு வேறொரு இடத்­திற்கு மாற்­றப்­ப­டு­மாயின் அங்கு குறித்த சந்­தேக நபர்கள் சாட்­சி­ய­ம­ளிக்கும் மொழி உள்­ளிட்ட அடிப்­படை பிரச்­சி­னை­களும் எழக்­கூடும். ஆகவே இதற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும். இவர்கள் மட்­டு­மல்­லாது அர­சியல் கைதி­க­ளாக எவ்­வித விசா­ர­ணை­களும் இன்றி பல வரு­டங்­க­ளாக தண்­டனை பெற்றும் பலர் வரு­கின்­றனர்.

கடந்த காலத்தில் புனர்­வாழ்­ளிக்­கப்­பட்­ட­தனை சட்­ட­மா­திபர் திணைக்­களம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அவ்­வா­றாயின் புனர்­வாழ்­வ­ளிப்­பதன் பயன் என்ன? சமூ­கத்தில் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்கள் சமூ­கத்­துடன் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள் என அர­சாங்கம் கூறு­கி­றது. அவர்கள் மீண்டும் கைது செய்­யப்­ப­ட­மாட்­டார்கள் என்­ப­தற்­கான உத்­த­ர­வாதம் என்­ன­வென்­பதை தெளி­வுப்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்­தி­னது மிகப்­பெ­ரிய பொறுப்­பாகும்.

இவ்­வ­ர­சியல் கைதிகள் விவ­கா­ரத்தில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஸ பார­பட்­ச­மா­கவே செயற்­ப­டு­கின்றார். கடந்த காலத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தினார். அதற்கு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் பாரிய குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அவர்­களை விடு­தலை செய்­ய­மு­டி­யாது என நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ பதி­ல­ளித்­தி­ருந்தார். நீதி­மன்­றத்தில் விசாரணையும் தொடராமல் அவர்கள் குறித்த எவ்வித அராயாமல் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டது சட்டத்தை அவமதிப்பது போன்றதாகும்.

ஆகவே இனியும் காலம் தாமதிக்காது மதியரசன் சுலக்ஷன், கணேஷன் தர்சன், ஆர் திருவருள் ஆகியோரை விடுதலை செய்யவேண்டும். அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 132 அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு எமது அமைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-22#page-1

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கும்,  தமிழ் அரசியல் வாதிகளுக்கும் அரசியல் துருப்புச் சீட்டே இந்த அரசியல் கைதிகளே. விடுதலையானவர்களும்  நிம்மதியாக, சுதந்திரமாக வாழ முடியாமல் தவிக்கிறார்கள். இனி அடுத்த தேர்தல் வரும்போது தான் நம் அரசியல் வாதிகளுக்கு இவர்களின் நினைவு வரும்.  இந்தியன், சிங்களவன் தங்கள் இராணுவத்துக்கு எங்கள் மண்ணில் மரியாதை செலுத்துகிறான். எங்கள்மண்ணின் விடுதலைக்காய்ப் போராடிய   வீரர்கள் இங்கே தங்கள்  விடுதலைக்காய் ஏங்குகிறார்கள். நாட்டின் நல்ல நியாயம், நல்லாட்சி கொடிகட்டிப் பறக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் போன்ற அரசியல்வாதிகளை  சிறிலங்காவின் பிரதமாகக் கூட
சிங்கள அரசு நியமிக்கும்.
ஆனால் தமிழ் அரசியற்கைதிகளை விடுவிப்பது என்பது அவர்களுக்கு கசப்பாகவே இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.