Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் பாடல்கள் வரிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே .....

Image may contain: 1 person

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2)
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2)

பாசத்தில் எங்களின் தாயானான்..
கவி பாடிடும் மாபெரும் பேரானான்(2)
தேசத்தில் எங்கணும் நிலையானான்(2)
நிலை தேடியே வந்திடும் தலையானான்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே-மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே.

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்-பல
இளைஞரைச் சேர்த்துமே களம் குதித்தான்(2)
தன்னின மானத்தை தான் மதித்தான் (2)
பகை தாவியே வந்திட கால் மிதித்தான்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ்ஈழமே எங்களின் பேச்சென்றான்(2)
வந்திடும் படைகளை வீசென்றான்-(2)
புலிவாழ்ந்திடும் வரையினில் தூசென்றான்..

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

விடுதலைப் புலிகளின் பலமானான் தமிழ்
வீடுகள் யாவிலும் மலரானான் (2)
படுகளம் மீதிலொரு புலியானான் (2)
பிரபாகரன் எங்களின் உயிரானான்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே! மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே

என்றுமே எங்களின் தளபதியே நீ
எங்களின் வானத்து வளர்மதியே(2)
இன்றுனக்கு  ஆயிரம் சோதனைகள்-(2)
தமிழ் ஈழத்தை வாங்கும் உன் போதனைகள்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை
பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2)

மங்களம் தங்கிடும் நேரத்திலே எம்
மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2)

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை ......

cemetry2004a.jpg

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை
கல்லறை அல்ல
உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்)

தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை
தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்)

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்
நின்று போர்களம் பார்த்தவன்
உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்
நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் (குண்டுமழை) (காலத்தால்)

இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்
இள்வேனில் நாளில் உதிர்ந்தார்
தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து
மாவிரராய் நிமிர்ந்தார் (இலையுதிர்) (காலத்தால்)

மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை
மண்ணாய் நிலைக்குமையா
ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில்
அனலே முளைக்குமையா (மாற்றார்) (காலத்தால்)

தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்
நடந்த கால் தடமிருக்கும்
தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்
அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும் (தமிழீழ) (காலத்தால்)

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீயினில் எரியாத தீபங்களே!

Maveerar%2520007.jpg

காற்றும் ஒருகணம் வீச மறந்தது
கடலும் ஒருநொடி அமைதியாய் கிடந்தது
தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது
தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே
மண்ணினில் விதையான முத்துக்களே -நாம்
மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்

கடலினில் கடல்புறா பயணங்கள் போனது
சிறிலங்கா இராணுவம் பொறிவைக்க லானது
குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்
கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்
இளமையில் சருகாகிக் போனவரே -எம்
இதயத்தில் உருவான கோவில்களே

அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ்
அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார்
ஆகிய வேங்கைள் அனலிடை போயினர்
காவிய நாயகர் களப்பலி ஆகினர்
மக்களுக்காக கடல் சென்றீரே -மண
மாலைகள் வாட முன்னர் போனீரே

எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது
எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது
இந்திய அரசது ஏன்துணை போனது
இடியுடன் பெருமழை ஏன் உருவானது
கண்களில் நீர் சுமந்து நிற்கின்றோம் -நீர்
காட்டிய பாதையிலே செல்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவைக்கேற்ற  அருமையான... தலைப்பு.  தமிழரசு.
நாம் ஆசைப் பட்ட,  ஈழ விடுதலை தான்....  கயவர்களால்,  தள்ளிப் போனாலும், 
அதற்கு ஊக்கமும்,  முயற்சியும் எடுத்த...
பாடல் ஆசிரியர்களை... நாம் மறக்கவே கூடாது.

கூடுமானவரை... அந்தப் பாடலை எழுதியவர்கள் பெயர்களையும் குறிப்பிட முடியுமென்றால்.... நல்லது.

பாடலை.... நேரடியாக இணைத்தால்,  அந்தப் பாடலை எழுதியவரின் பெயர்...
பெரிதாக வெளியே தெரிய வாய்ப்பில்லை என்பது, எனது அபிப்பிராயம்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்
பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்
போரில் வெற்றி முரசு முழங்கும்
புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்

கூண்டுபறவை சிறகு விரி்க்கும்
குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்
மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்

வானம் நமது கொடியை அழைக்கும்
மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும்
மானம் நமக்கோர் மகுடம் வழங்கும்
மண்ணில் நமது பெயரும் விளங்கும்

 – காசி ஆனந்தன்

16 hours ago, தமிழ் சிறி said:

காலத்தின் தேவைக்கேற்ற  அருமையான... தலைப்பு.  தமிழரசு.
நாம் ஆசைப் பட்ட,  ஈழ விடுதலை தான்....  கயவர்களால்,  தள்ளிப் போனாலும், 
அதற்கு ஊக்கமும்,  முயற்சியும் எடுத்த...
பாடல் ஆசிரியர்களை... நாம் மறக்கவே கூடாது.

கூடுமானவரை... அந்தப் பாடலை எழுதியவர்கள் பெயர்களையும் குறிப்பிட முடியுமென்றால்.... நல்லது.

பாடலை.... நேரடியாக இணைத்தால்,  அந்தப் பாடலை எழுதியவரின் பெயர்...
பெரிதாக வெளியே தெரிய வாய்ப்பில்லை என்பது, எனது அபிப்பிராயம்.

தங்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களுக்கு நன்றி தமிழ் சிறி. உங்களின் கருத்துக்களை மனதில் கொள்கின்றேன் இந்த திரியில் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த விடுதலைப் பாடல்கள் வரிகளை இணைத்து உதவவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

Maveerar1.jpg

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!
தாய் மானம் காக்க என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!
ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!
ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி
வதம் செய்யும் ஆட்சி தன்னை..
உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால்
சினந்திடும் வீரவான்கள்..
உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால்
சினந்திடும் வீரவான்கள்….
சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்!
துணிந்தெழும் ஞானவான்கள்!

(மாவீரர்….)

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்
வீசிய இளம் தென்றல்கள்!
விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்
விடுதலை ஆண்பெண் பொன்கள்!
தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள்
வீசிய இளம் தென்றல்கள்!
விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும்
விடுதலை ஆண்பெண் பொன்கள்!
பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்!
பலமாகி நிற்கும் தூண்கள்!

(மாவீரர்….)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தோழர்களின் புதைகுழியில்

maaveerarnall_20090916.jpg

எங்கள் தோழர்களின் புதைகுழியில்
மண்போட்டுச் செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி -தமிழ்
ஈழம் மீட்பது உறுதி!

இளமைநாளின் கனவையெல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின்
கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்

வாழும்நாளில் எங்கள் தோழர்
வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் – எம்
தோழர் நினைவில் மீண்டும் தோளில்
துப்பாக்கிகளை அணைக்கின்றோம்

தாவிப்பாயும் புலிகள்நாங்கள்
சாவைக்கண்டு பறப்போமா?
பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள்
போனவழியை மறப்போமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இனமே...! என் சனமே...!

என் இனமே...! என் சனமே...!
என்னை உனக்குத் தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா?

என் இனமே...! என் சனமே...!

மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா

என் இனமே...! என் சனமே...!

அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவும் உண்டு
என்னை நம்பி உயிர்கள் உண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...!

பாசறை நான் புகுந்த இடம்
பதுங்கு குழி உறங்குமிடம்
தேசநலன் எனது கடன்
தேன்தமிழே எனது திடல்

மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...!

என் முடிவில் விடிவிருக்கும்
எதிரிகளின் அழிவிருக்கும்
சந்ததிகள் சிரித்து நிற்க
சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்

என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

என் இனமே...! என் சனமே...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.