Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டிப்பாக வெளியிடுவேன்!! திருட்டு விசிடி கிடைத்தவுடன் நான் வெளியிடுவேன். உவன் ரயனி போன்ற கள்ளங்களுக்கு இப்டி தான் செய்யனும்.

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவரிண்ட உடுப்பும் ஆளும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Don't worry guys,

சிவாஜி பட பாடல்கள் சில வந்துவிட்டன. (full video ) :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கயப்பா அந்த லிங் தந்தீங்கள் என்டால் நாங்களும் கொஞ்சம் சமூக சேவை செய்யலாம் தானே.

போய் http://www.tamilcinema.dk/ ல் பாருங்க.

நன்றி தாத்தா லிங்குக்கு

அதாவது, வெறும் பால் மட்டும்தான் குடித்தாராம்..! <_<

:P

நினைத்தாலே இனிக்கும் ..... புதுப்புது அர்த்தங்கள் ... "கீதா" தலைவரின் குழந்தையுடன் ......!!!!!!!!! நான் சொல்லவில்லை!! இந்தியாவில் கேள்விப்பட்டது!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P

நினைத்தாலே இனிக்கும் ..... புதுப்புது அர்த்தங்கள் ... "கீதா" தலைவரின் குழந்தையுடன் ......!!!!!!!!! நான் சொல்லவில்லை!! இந்தியாவில் கேள்விப்பட்டது!!

ஐயோ பழசையெல்லாம் கிளறாதேங்கோ????அவருப்ப மதிப்பும் மரியாதையுமாயிருக்கிறார்!!!! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரிண்ட உடுப்பும் ஆளும்

அதே தான் கறுப்பி அக்கா எனக்கும் ரஜினியை கண்ணிலையும் காட்ட கூடாது. சும்மா கடவுள் கடவுள் என்டு சொல்லி கொண்டு தன்ர மகளையும் விட குறைந்த வயதுள்ள பெண்களோட டூயட் பாடுவாராம் :angry: :angry:

அதே தான் கறுப்பி அக்கா எனக்கும் ரஜினியை கண்ணிலையும் காட்ட கூடாது. சும்மா கடவுள் கடவுள் என்டு சொல்லி கொண்டு தன்ர மகளையும் விட குறைந்த வயதுள்ள பெண்களோட டூயட் பாடுவாராம் :angry: :angry:

தங்கா வேண்டாம் சொல்லிபோட்டன்

:angry:

quote name='இன்னிசை' date='May 27 2007, 12:48 AM' post='307774']

அதே தான் கறுப்பி அக்கா எனக்கும் ரஜினியை கண்ணிலையும் காட்ட கூடாது. சும்மா கடவுள் கடவுள் என்டு சொல்லி கொண்டு தன்ர மகளையும் விட குறைந்த வயதுள்ள பெண்களோட டூயட் பாடுவாராம் :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருப்தியான சிவாஜி .. சந்தோஷ ஷங்கர்

சிவாஜி படத்தில் ரஜினி போட்டுள்ள ஒரு கெட்டப்புக்கு எம்.ஜி.ஆர். என்று பெயர் வைத்துள்ளார்களாம். ரஜினிக்கு சிவாஜி, மிகப் பெரிய இமயப் படமாக இருக்கும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

இதோ, இதோ என கூறப்பட்டு வந்த சிவாஜி ஒரு வழியாக ஜூன் 15ம் தேதி திரைக்கு தெறித்தோடி வருகிறது. ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் கூட ஆர்வத்தோடு இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் முதல் முறையாக சிவாஜி படம் பற்றிய நிறைய செய்திகளோடு வாய் திறந்துள்ளார் மெகா இயக்குநர் ஷங்கர்.

சிவாஜி படம் குறித்து நமக்காக அவர் கொஞ்சம் போல வாய் திறந்து பேசுகையில்,

இது ஒரு அசல் பொழுது போக்குப் படம், பக்கா என்டர்டெய்னராக இருக்கும். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமாவை விரும்பும், ரசிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும், ரசிக்க வைக்கும்.

ரஜினி படங்களுக்கு ஒரு இமயம் போல சிவாஜி அமையும். சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வேலை பார்ப்பது சாதாரண காரியமல்ல. ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அது நல்ல அனுபவமாக அமைந்தது. ரஜினி சாரின் ஒத்துழைப்புதான் அதற்குக் காரணம்.

ரஜினியுடன் ஷூட்டிங்கில் பங்கேற்ற ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து செய்தேன்.

ரஜினியின் கெட்டப், ஸ்டைல் குறித்து பலரும் கேட்கிறார்கள். இன்னும் 20 நாள்தானே, அதுவரை பொருத்திருங்களேன். படம் வந்த பிறகு உங்களுக்கே தெரியப் போகிறது.

சென்சார் போர்டின் கருத்துக்கள், கட்கள் குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ஷங்கர்.

சிவாஜியில், ரஜினி சில வித்தியாசமான கெட்டப்களிலும் வருகிறாராம். அதாவது எம்.ஜி.ஆர்., சிவாஜி போல கெட்டப்களில் வருகிறார். தெலுங்குப் பதிப்பில், என்.டி.ஆர்., சிரஞ்சீவி போல கெட்டப் போட்டுள்ளாராம்.

தெலுங்குப் படத்தை டப்பிங் படம் போன்ற உணர்வு வந்து விடக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறாராம் ஷங்கர். சில காட்சிகளைக ஒரிஜினலாகவே தெலுங்குக்காக எடுத்தாராம்.

சிவாஜி குறித்து திருப்தியாக இருக்கிறீர்களா என்று கேட்டபோது, எனது படத்தில் எந்த ஒரு சீனும் வீணாக இருக்காது, எனக்குத் திருப்தி இல்லாமல் திரைக்கு வராது. அதில் சிவாஜியும் விதிவிலக்கில்லை, இப்படம் எனக்கு பரிபூரண திருப்தியைத் தந்துள்ளது என்றார் ஷங்கர்.

  • தொடங்கியவர்

ஏனப்பா அங்கே கிறடிட் காட் எல்லாம் கேக்குதே அதொன்றுய்ம் இல்லாம பாக்க முடியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி பட உரிமையை வாங்கியது 'கலைஞர் டிவி'

ரஜினிகாந்த்தின் பிரமாண்டப் படமான சிவாஜியின் டிவி உரிமையை, புதிதாக தொடங்கப்படவுள்ள 'கலைஞர் டிவி'வாங்கியுள்ளது. இதன் மூலம் சன் டிவி முற்றிலும் ஓரம் கட்டப்பட்டு விட்டது.

ஏவிஎம் தயாரிப்பில் உருவான சிவாஜி படம் வெளியாக இன்னும் 21 நாட்களை உள்ள நிலையில் ரஜினி ரசிகர்களிடையே சிவாஜி படம் குறித்து எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் சன் டிவியுடனான உறவை திமுக முறித்துக் கொண்டு விட்ட நிலையில், புதிதாக 'கலைஞர் டிவி'யைத் தொடங்குகிறது திமுக. திமுகவும், ராஜ் டிவியும் இணைந்து இந்த டிவியை தொடங்கவுள்ளனர்.

இதற்கான அறிவிப்பு முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 'கலைஞர் டிவி' தொடங்கப்படுகிறது.

'கலைஞர் டிவி'க்கு நிகழ்ச்சி தாயரிப்புக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சி தயாரித்து தர 'ராடன் டிவி' அதிபர் நடிகை ராதிகாவும் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக சமீபத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்தும் பேசினார் ராதிகா.

இந்நிலையில் புதுப்படங்களின் உரிமைகளை வாங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி ஏவிஎம்மின் பிரம்மாண்ட தயாரிப்பான சிவாஜி படத்தின் உரிமையை 'கலைஞர் டிவி' வாங்கியுள்ளது.

படத்தை வாங்குவற்காக பல கோடி பணத்தை ஒரே செக்கில் கொடுத்து கலைஞர் டிவி வாங்கியுள்ளதாம். கலைஞர் டிவி படத்தை வாங்க களம் இறங்கியதை அறிந்த சன் டிவி, போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விட்டதாம்.

ஏவிஎம் சகோதர்களுடன் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான நட்பு உண்டு. இதன் அடிப்படையிலும் ரஜினியும் ஓ.கே. சொன்னதாலும் இந்த உரிமை கலைஞர் டிவிக்கு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம் முதல் முறையாக சன் டிவிக்கு பெரிய ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தனியார் தொலைக்காட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சன் டிவியைத் தாண்டி ஒரு டிவிக்கு, ரஜினி நடித்த மிகப் பெரிய படம் ஒன்று விற்பனையாகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி ஜூன் 15ம் தேதி தியேட்டர்களுக்கு வருகிறது. தமிழகத்தில் 350 தியேட்டர்களில் படம் ரிலீஸாகவுள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மிகப் பெரிய சாதனை.

350 தியேட்டர்களிலும் டிஜிட்டல் ஆடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவாம். மேலும் படத்தை தரத்துடன் பார்க்கவும், வசனங்களை கேட்கவும் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஆந்திராவில் 150 தியேட்டர்களிள் தெலுங்கு சிவாஜி ரிலீஸ் ஆகிறது. கேரளாவில் தமிழிலேயே சிவாஜி திரையிடப்படுகிறது. அங்கு 75 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறதாம்.

கர்நாடகத்தில் 100 தியேட்டர்களில் படத்தைத் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கலின்றி திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு 45 தியேட்டர்களில் படத்தைத் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளன.

பெங்களூர் நகரில் மட்டும் 17 தியேட்டர்களில் சிவாஜியைத் திரையிட ஏவி.எம். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29_05_2007_001_009.jpg

படம் ரிலீஸாகும் முன்பே 'சிவாஜி' யின் தொலைக்காட்சி உரிமை படா தொகைக்கு விலை போயுள்ளது. இன்னும் தொடங்கப்படாத தொலைக்காட்சியொன்று 'சிவாஜி' உரிமையை வாங்கியிருப்பதுதான் ஆச்சரியம்.

சன் டி.வி., தி.மு. கழகம் லடாயை தொடர்ந்து ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. எனும் புதிய சேனலை திராவிட முன்னேற்ற கழகம் தொடங்குகிறது. இதற்கான நிகழ்ச்சி தயாரிப்பு, டெக்னிஷியன்கள் தேர்வு ஜரூராக நடந்து வருகிறது. ஜுலை மூன்றாம் தேதி தனது பிறந்த நாளில் கலைஞர் டி.வி. குறித்து முறைப்படி அறிவிக்கவுள்ளார் முதல்வர் கருணாநிதி. ஆகஸ்ட் 15 முதல் தனது ஒளிபரப்பை கலைஞர் தொலைக்காட்சி தொடங்குகிறது.

இதன் ஒரு பகுதியாக புதிய படங்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்க கலைஞர் தொலைக்காட்சி ஆர்வம் காட்டுகிறது. தமிழகமே எதிர்பார்க்கும் 'சிவாஜி' படத்தின் உரிமையை வாங்கி அனைவரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது இன்னும் ஒளிபரப்பை தொடங்காத கலைஞர் டி.வி.

ஆகஸ்ட் 15 கலைஞர் டி.வி. தொடங்கப்படும் நாள் 'சிவாஜி' ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டது. 'சிவாஜி' ஜுன் 15 திரைக்கு வருகிறது. ஆகஸ்ட் 15 என்றால் சரியாக இரண்டு மாதங்கள். படம் ரிலீஸான அறுபதாவது நாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது சாத்தியமா?

"இல்லை" என்றார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன். "தயாரிப்பாளர்கள் சங்க விதிப்படி ஒரு படம் ரிலீஸான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படும். 'சிவாஜி' யின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டி.வி.க்கு கொடுத்தது உண்மைதான். ஆனால், படம் ரிலீஸாகி மூன்று வருடங்களுக்குப் பிறகே 'சிவாஜி' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்."

வீண் வதந்தியை தனது விளக்கத்தால் விலக்கியிருக்கிறார் சரவணன்.

:rolleyes::unsure::huh: iiiiiiiiiiiiiiiiiiiii

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன் தொலைகாட்சியை அழிப்பதற்கு கங்கணம் கட்டியவர்களுக்கு தற்போது எல்லாம் வசதியாகவே வருகின்றது.காகம் இருக்க பனம்பழம் விழுந்தமாதிரி.................. B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி டிரைலர் வருதப்போய்!

சிவாஜி பட டிரைலர் மே 31ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்களிலும், டிவி சானல்களிலும் ஆர்ப்பரிக்க வருகிறது.

ஜூன் 15ம் தேதி சிவாஜி ரிலீஸாகும் என ஏவி.எம். நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் மாற்றம் இருக்கும், படம் திரையிடுவது தள்ளிப் போகும் என்று இடையில் பேச்சு கிளம்பியது. ஆனால் அதை புறம் தள்ளிய தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், திட்டமிட்டபடி படம் ஜூன் 15ம் தேதிக்கு படம் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார்.

சிவாஜி பட விற்பனை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். அனைத்து ஏரியாக்கும் விற்று விட்டனவாம். விரைவில் எந்தெதந்த தியேட்டர்களில் படம் வெளியாகிறது என்பதை தெரிவிக்கவுள்ளனராம்.

இப்போது படத்தின் டிரைலர் ரெடியாகி விட்டதாம். மே 31ம் தேதி முதல் தியேட்டர்களிலும் டிவி சானல்களிலும் டிரைலர் திரையிடப்படவுள்ளதாம்.

இதற்கிடையே கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்த இயக்குநர் ஷங்கர் சென்னை திரும்பி விட்டார். வந்ததும், வராததமுமாக ஏவி.எம். நிறுவனத்துக்குச் சென்ற அவர் கேன்ஸிலிருந்து சொன்ன சில மாற்றங்களை தனது உதவியாளர்கள் சரியாகச் செய்திருக்கிறார்களா என்பதை செக் செய்தாராம். தற்போது படம் பக்காவாக ரிலீஸுக்குத் தயாராக உள்ளதாம்.

சிவாஜி கவுண்ட் டவுண் 31ம் தேதி முதல் ஸ்டார்ட் ஆகப் போகிறது, 'பாஸை ஃபேஸ்' பண்ண ரெடியாகிக்கோங்கோ!

thatstamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ibnlive.com/videos/41628/exclus...-in-sivaji.html

இது தான் அந்த ஆங்கில இணையத்தளம்!

அதற்கு எமது நன்றிகள்!

Edited by வடிவேல் 007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sivaji First trailer

sivaji1.jpg

http://www.tubetamil.com/view_video.php?vi...1b9e505593e3db9

Edited by ravi_dk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே நான் இங்கே http://www.yarl.com/forum3/index.php?showtopic=24073 இணைத்துவிட்டேன்.

சிவாஜி படத்தையும் போடுவிங்களா ?

Edited by Minor Kunju

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் பொறுங்க எங்கட பொடியள் தியேட்டரில வெளியிட்டு முதல் சோ பாத்திட்டு வெளியில வரேக்க படத்தோட தான் வருவாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் பொறுங்க எங்கட பொடியள் தியேட்டரில வெளியிட்டு முதல் சோ பாத்திட்டு வெளியில வரேக்க படத்தோட தான் வருவாங்கள்.

:lol::lol::lol::lol::lol::lol:

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.