Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னைப் பதவி நீக்கியதை எதிர்த்து டெனீஸ் வழக்கு

Featured Replies

தன்னைப் பதவி நீக்கியதை எதிர்த்து டெனீஸ் வழக்கு

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அல்லது 4ஆம் திகதி விசாரிக்கப்படலாம்

 
 
தன்னைப் பதவி நீக்கியதை  எதிர்த்து டெனீஸ் வழக்கு
 

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரிட் மனுத் தாக்கல் செய்தார்.

எனவே தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும் குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்கும்படியும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், மாகாண ஆளுநர் ரெஜினோல்கட் குரே, முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கமும் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மூத்த சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோவின் நெறிப்படுத்தலில், சட்டத்தரணி நிலந்தி டீ சில்வா வழக்கைத் தாக்கல் செய்தார். வழக்கு இன்று அல்லது எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

முதலமைச்சர் தன்னைப் பதவி நீக்கியது செல்லாது என்றும் தான் இன்னமும் அமைச்சராக இருக்கிறார் என்றும் வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துறை முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறிவந்தார். விக்னேஸ்வரனின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றில் வடக்குத் தாக்கல் செய்யப்போகிறார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் அவர் தனது மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
வடமாகாண அமைச்சரவையில் அங்கம் வகித்த ஓர் அமைச்சருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு எவ்வாறு அனைத்து அமைச்சர்களுக்கும் எதிரான ஊழல், மோசடி விசாரணைக் குழுவாகப் பரிணமித்தது என்பது முதற்கொண்டு இந்த விடயத்தில் நடந்தவைகள் அனைத்தையும் அவர் தனது மனுவில் விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது எந்தக் குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையிலும் சட்டத்துக்குப் புறம்பாகப் பதவி நீக்கியிருப்பது தனது சட்டபூர்வமான எதிர்பார்ப்பை தகர்த்தெறிந்துள்ளது என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், தான் அமைச்சராகப் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலையீடு, தடுத்தல் மேற்கொள்ளக்கூடாது என்று தடை விதிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் தன்னுடைய அமைச்சின் சார்பில் எந்தவொரு அமைச்சரும் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும் அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள ஜி.குணசீலன், க.சிவநேசன் இருவரையும் அமைச்சுப் பொறுப்புக்கள் பணியாற்ற தடை விதிக்கும்படியும் – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, கிராம அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகிய அமைச்சுப் பொறுப்புக்களைச் செயற்படுத்த தடை விதிக்கும் படியும் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், வர்த்தக வாணிப அமைச்சராகச் செயற்படுவதற்குத் தடை விதிக்கும்படியும்
அமைச்சர் க.சிவநேசன், மீன்பிடி அமைச்சராகச் செயற்படுவதற்குத் தடை விதிக்கும்படியும் டெனீஸ்வரன் தனது மனுவில் மேலும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று அல்லது 4ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

http://newuthayan.com/story/24241.html

  • தொடங்கியவர்

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மனுத்தாக்கல்; டெனீஸ்வரன் அதிரடி!

 

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மனுத்தாக்கல்; டெனீஸ்வரன் அதிரடி!

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சருக்கு எதிராக, மாகாணத்தின் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் எழுத்தாணை மனு ஒன்றினை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சர், தம்மை வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய முறை தவறு எனத் தெரிவித்தே பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்திருக்கின்றார்.

சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவின் வழிகாட்டலின்படி இந்த மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தம்மிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து இப்போது பதவி வகிக்கும் அமைச்சர்களான அனந்தி சசிதரன், க.சிவநேசன் ஆகியோருக்கு வழங்கியுள்ளார். ஆகவே அவர்கள் அந்த துறைகளுக்குரிய அமைச்சர்களாகச் செயற்படுகின்றமைக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படியும் அவர் இந்த மனுவில் கோரியுள்ளார்.

இதன்படி தம்மை அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றியமைக்கு எதிராக உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கும்படியும், உரிய விசாரணையின் பின்னர் அவ்வாறு வெளியேற்ற விடுத்த உத்தரவு முறைமை தவறானவை என்று பிரகடனப்படுத்தும் படியும் பா.டெனீஸ்வரன் இந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

பா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான க.சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், க.சிவநேசன், க.குணசீலன், முன்னாள் அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோர் எதிர் மனுதாரர்களாகக் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Chief-Minister-Vigneswaran

எடுப்பார் கைப்பிள்ளைகளின் பதவி மோகம் பாதாளம் வரை பாய்கிறது!


சொந்தக் கட்சியே பதவிவிலகக் கோரிய பின்னர், மானம் ரோஷமாற்று நடக்கும் டெனிஸ்வரன் என்ற ஒரு பிறவியும் தமிழினத்தின் சாபக்கேடு!

  • தொடங்கியவர்
இடைக்கால தடை உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும்?
 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“வடமாகாண முதலமைச்சரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்” என, வடமாகாண முன்னாள் மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வடமாகாண முதலமைச்சர், ஏனைய அமைச்சர்கள், முன்னை நாள் சுகாதார அமைச்சர், வடமாகாண ஆளநர் ஆகியோருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 30ஆம் திகதி வளக்குத்தாக்கல் செய்துள்ளேன்.

“குறிப்பாக, கடந்த காலங்களில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பாக இருக்கின்றது. ஒரு விடையத்தை கூற முடியும். வடமாகாண ஆளுநர், கடந்த மாதம் 23ஆம் திகதி புதிய அமைச்சர்கள் இருவரை நியமிக்கின்ற அதே சந்தர்ப்பம் கடந்த 20ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் என்னை அமைச்சில் இருந்து நீக்கியதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

“13ஆவது திருத்தச் சட்டத்திலோ அல்லது மாகாண சபைகள் சட்டத்திலோ எந்த ஓர் இடத்திலும் முதலமைச்சர் நியமிக்கப்பட்ட எந்த ஓர் அமைச்சரையும் தானாக நீக்குவதற்கு எந்த ஒரு சட்ட ஏற்பாடுகளும் இல்லை.

“ஆனால், வடமாகாண ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருக்கின்றது. முதலமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்களை அவர் சரியான முறையில் பயன் படுத்தவில்லை.

“கடந்த 20ஆம் திகதி முதலமைச்சர் என்னை தானாக பதவி நீக்கியதே, நான் நீதிமன்றத்தை நாடியமைக்கான காரணமாக உள்ளது.

“சம்மந்தப்பட்டவர்கள் எனது அமைச்சு சார்ந்த வேலைத்திட்டங்களில் தலையிடக்கூடாது என்றும் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளேன்.

“எதிர்வரும் 4ஆம் திகதி அல்லது 7ஆம் திகதி விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினமே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அல்லது மிக விரைவாக இரண்டு வாரத்துக்குள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், தங்களுக்கு எதிராக நான் கூறிய விடயங்களுக்கு பதில் கூற வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றம் சரியான முடிவுக்கு வரும்.

“எது எவ்வாறு இருப்பினும், விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்துக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

“ஆரம்பத்தில் இருந்து இன்று வரை நான் போராடிக்கொண்டிருப்பது மீண்டும் அமைச்சுப் பொறுப்பை எடுத்து பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

“எல்லோரும் சட்டத்துக்கு முன் சமன். 13ஆவது திருத்தச் சட்டமும், மாகாண சபைகள் திருத்தச் சட்டமும் மிக சிறிய பக்கங்களைக் கொண்டது. இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே மாகாண சபைகள் இயங்க வேண்டும். இதற்கு புறம்பாக எவறும் செயற்பட முடியாது.

“முதலமைச்சருக்கும், எனக்கும் எந்த விதத்திலும் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை. மாகாண சபையை ஏனையவர்கள் கேலியாக சித்தரிக்கின்ற வகையில் மாகாண சபையின் நிர்வாகம் இருக்கின்றது. அவர் ஒரு நீதியரசர். நீதியாக செயற்பட்டிருக்க வேண்டும்.

“ஒரு மாத கட்டாய விடுமுறை விதிக்கப்பட்டமையே, இத்தனை பிரச்சினைக்கும் காரணமாக உள்ளது. நீதியை நிலை நாட்டுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.மேலும், சில முக்கிய நபர்களுக்கு எதிராக சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்” என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இடைக்கால-தடை-உத்தரவு-அடுத்த-வாரம்-பிறப்பிக்கப்படும்/150-203149

  • தொடங்கியவர்

பக்­கச்­சார்­பா­கச் செயற்­ப­டு­கி­றார்வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

முன்­னாள் அமைச்சர் டெனீஸ்­வ­ரன் குற்­றச்­சாட்டு

 
 
பக்­கச்­சார்­பா­கச் செயற்­ப­டு­கி­றார்வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்
 

விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­ட­தில் இருந்து இன்று வரை வடக்கு மாகாண  முத­ல­மைச்­சர் பக்­கச்­சார்­பா­க­வும், சட்­டத்­துக்கு எதி­ரா­க­வும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றார். இவ்­வாறு வடக்கு மாகாண முன்­னாள் மீன்­பிடிப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
மன்­னா­ரில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கத்­தில்  நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.-அவர் தெரி­வித்­த­தா­வது;

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர், ஏனைய அமைச்­சர்­கள், முன்­னாள் சுகா­தார அமைச்­சர், வடக்கு மாகாண ஆளு­நர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்­தில் கடந்த 30 ஆம் திகதி வழக்­குத்­தாக்­கல் செய்­துள்­ளேன்.
குறிப்­பா­கக் கடந்த காலங்­க­ளில் முத­ல­மைச்­ச­ரால்  மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் முற்­றி­லும் சட்­டத்­துக்­குப் புறம்­பாக இருக்­கின்­றன.

வடக்கு மாகாண ஆளு­நர் கடந்த மாதம் 23 ஆம் திகதி புதிய அமைச்­சர்­கள் இரு­வரை நிய­மிக்­கின்ற அதே சந்­தர்ப்­பம், கடந்த 20 ஆம் திகதி வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் என்னை அமைச்­சில் இருந்து நீக்­கி­ய­தா­கக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

13 ஆவது திருத்­தச்­சட்­டத்­திலோ அல்­லது மாகாண சபை­கள் சட்­டத்­திலோ எந்த ஒரு இடத்­தி­லும் முத­ல­மைச்சரால் நிய­மிக்­கப்­பட்ட எந்த ஒரு அமைச்­ச­ரை­யும் தானாக நீக்­கு­வ­தற்கு எந்த ஒரு சட்ட ஏற்­பா­டு­க­ளும் இல்லை. ஆனால் வடக்கு மாகாண ஆளு­நருக்கு அந்த அதி­கா­ரம் இருக்­கின்­றது. முத­ல­மைச்­ச­ருக்கு இருக்­கின்ற அதி­கா­ரங்­களை அவர் சரி­யான முறை­யில் பயன் படுத்­த­வில்லை.

கடந்த 20 ஆம் திகதி முத­ல­மைச்­சர் என்­னைத் தானா­கப் பதவி நீக்­கி­ய­மையே  நான் நீதி­மன்­றத்தை நாடி­ய­மைக்­கான கார­ண­மாக உள்­ளது.
சம்பந்­தப்­பட்­ட­வர்­கள் எனது அமைச்­சுச் சார்ந்த வேலைத்­திட்­டங்­க­ளில் தலை­யி­டக்­கூ­டாது என்­றும் மேன் முறை­யிட்டு நீதி­மன்­றத்­தில் மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­துள்­ளேன். எதிர்­வ­ரும் 4 ஆம் திகதி அல்­லது 7 ஆம் திகதி விளக்­கத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அன்­றைய தினமே இடைக்­கா­லத் தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­ட­லாம்.

அல்­லது மிக விரை­வாக இரண்டு வாரத்­துக்­குள் வடக்கு  மா­காண முத­ல­மைச்­சர் மற்­றும் பிரதி வாதி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள அனை­வ­ரும், தங்­க­ளுக்கு எதி­ராக நான் கூறிய விட­யங்­க­ளுக்­குப் பதில் கூற வேண்­டும். அதன் பின்­னர் நீதி­மன்­றம் சரி­யான முடி­வுக்கு வரும்.

எது எவ்­வாறு இருப்­பி­னும் விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­ட­தில் இருந்து இன்று வரை முத­ல­மைச்­சர் பக்­கச்­சார்­பா­க­வும், சட்­டத்­துக்கு எதி­ரா­க­வும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்.

ஆரம்­பத்­தில் இருந்து இன்று வரை நான் போரா­டிக்­கொண்­டி­ருப்­பது மீண்­டும் அமைச்­சுப்­பொ­றுப்பை எடுத்து பத­வி­யில் இருக்க வேண்­டும் என்­ப­தற்­காக அல்ல. எல்­லோ­ரும் சட்­டத்­துக்கு  முன் சமன். 13 ஆவது திருத்­தச்­சட்­ட­ மும்,மாகாண சபை­கள் திருத்­தச்­சட்­ட­ மும் மிகச் சிறிய பக்­கங்­க­ளைக் கொண்­டது. இந்த இரண்­டை­யும் அடிப்­ப­டை­யாக வைத்தே மாகாண சபை­கள் இயங்க வேண்­டும். இதற்­குப் புறம்­பாக எவ­ரும் செயற்­பட முடி­யாது.

முத­ல­மைச்­ச­ருக்­கும், எனக்­கும் எந்த விதத்­தி­லும் தனிப்­பட்ட பிரச்­சி­னை­கள் இல்லை. மாகாண சபையை ஏனை­ய­வர்­கள் கேலி­யாக சித்தி­ரிக்­கின்ற வகை­யில் மாகாண சபை­யின் நிர்­வா­கம் இருக்­கின்­றது. அவர் ஒரு நீதி­ய­ர­சர் நீதி­யாகச் செயற்­பட்­டி­ருக்க வேண்­டும்.-ஒரு மாத கட்­டாய விடு­முறை விதிக்­கப்­பட்­ட­மையே அனைத்துப் பிரச்­சி­னைக்­கும் கார­ண­மாக உள்­ளது.

நீதியை நிலை நாட்­டு­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கின்­றேன். மேலும் சில முக்­கிய நபர்­க­ளுக்கு எதி­ராக சில சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்­ளேன் – என்­றாா்.

http://newuthayan.com/story/25240.html

  • தொடங்கியவர்

 

வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் தனது நிலைப்பாடு தொடர்பில்...

  • கருத்துக்கள உறவுகள்
On ‎31‎.‎08‎.‎2017 at 2:30 PM, நவீனன் said:

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக மனுத்தாக்கல்; டெனீஸ்வரன் அதிரடி!

சட்டத்தரணி லிலாந்தி டி சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவின் வழிகாட்டலின்படி இந்த மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

இவருக்கு ஒரு தமிழ் சட்டத்தரணியும் கிடைக்கவில்லையா.....? என்னிடம் சொல்லியிருந்தால் நான் குறைந்தது எங்கள் அப்புக்காத்து புத்தனை என்றாலும் சிபாரிசு செய்திருப்பேனே.! :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.