Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை

Featured Replies

இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை

 


இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை
 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட பூர்த்தி விழா கொழும்பில் இன்று (03) நடைபெற்றது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விழாவிற்கு தலைமை தாங்கினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிக்குகள் அமைப்பு, கிளை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ,தொகுதி அமைப்பாளர்கள் உட்பட கட்சியின் அனைத்துத் தொகுதிகளினதும் உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

மக்கள் அதிகாரம் சரியான திசையில் எனும் தொனிப்பொருளில் இம்முறை 66 ஆவது வருட பூர்த்தி நிகழ்வுகள் நடைபெற்றன.

வருட பூர்த்தி நிகழ்வின் போது ஜனாதிபதி உரையாற்றும் போது….

”இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளியேன்” 

 

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இதுவரையான பயணம் தொடர்பான தொகுப்பு…

1951ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

ஒரு வருட காலத்திற்குள் பிரதான எதிர்க்கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலுப்பெற்றது.

1956 ஆம் ஆண்டு மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவை பிரதமர் கதிரையில் அமரச் செய்தது.

பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதையடுத்து கட்சி சவாலை எதிர்கொண்டது.

எனினும், அந்த சவாலை பொறுப்பேற்ற அன்னாரின் மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதலாவது பெண் பிரதமராக சாதனை படைத்தார்.

தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றிகளைப் பதிவு செய்த சுதந்திரக் கட்சி 1977ஆம் ஆண்டிற்கு பின்னர் இக்கட்டான நிலையை எதிர்நோக்கியது.

எவ்வாறாயினும், கட்சிக்குப் புதிய பலத்தை ஏற்படுத்தும் வகையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் பிரவேசித்தார்.

இரண்டு பிரதமர்களின் புதல்வியான சந்திரிக்கா பண்டாரநாயக்க, 1994ஆம் ஆண்டு கட்சியை சரியான பாதையில் இட்டுச் சென்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஸ, கட்சியின் அடுத்த தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், இவரது பதவிக்காலத்தில் மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

2015 ஜனவரி 9 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றதன் பின்னர், நாட்டின் அரசியலிலும் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட மறுநாளில் பிறந்த மைத்திரிபால சிறிசேன நிலையான அரசியல் கொள்கையுடன் இன்றுவரை மக்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

13 வருடங்களாக கட்சியின் பொதுச் செயலாளாராக பதவி வகித்த அவர் தற்போது கட்சிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார்.

நாட்டிற்கும் உலகிற்கும் சிறந்த எடுத்துக் காட்டாக நல்லாட்சிக் கொள்கையைப் பின்பற்றி, அரசியல் அதிகாரத்தை தம்வசப்படுத்திய அவர் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கட்சியின் தலைமைத்துவத்தையும் சரிவர நிறைவேற்றுகின்றார்.

இலங்கை வரலாற்றில், மூன்று ஜனாதிபதிகளையும் நான்கு பிரதமர்களையும் உருவாக்கி மக்களின் பலத்தை நிரூபித்த முற்போக்கு சின்னமான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது 66ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இதுவரையான பயணம் தொடர்பான தொகுப்பு

http://newsfirst.lk/tamil/2017/09/இராணுவ-வீரர்களுக்கு-எதிர/

  • தொடங்கியவர்

நாட்டின் இராணுவத்தினர் மீது கைவைக்க இடமளிக்கப்போவதில்லை : ஜனாதிபதி உறுதி

 

 

ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதி ஒருவரின் மீதோ அல்லது நாட்டின் இராணுவத்தினரின் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

ஷஷ தூய்மையான பயணத்திற்கான மக்கள் சக்தி - சரியான பாதையில்|| எனும் தொனிப்பொருளில் பெருந்திரளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஜனநாயக கட்சியாக பலப்படுத்துவதுடன், பௌத்த மதகுருமார், மருத்துவர், ஆசிரியர், விவசாயி, தொழிலாளர், மீனவர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து சமூக சக்திகளும் ஒன்றிணைந்த விரிவான அரசியல் இயக்கமாக கட்டியெழுப்ப வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

கல்விமான்களையும், புத்திஜீவிகளையும் கொண்ட, சமயத் தலைவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் மதித்து நடக்கும், அமரர் பண்டாரநாயக்க அவர்களினதும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினதும் செயற்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசபிமானம் மிக்க, மக்கள் மயப்படுத்தப்பட்ட, ஜனநாயக கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதை சிலர் குற்றஞ்சாட்டியபோதும், அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியை அமைத்திராவிடில், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை எமது நாட்டினால் எதிர்நோக்கியிருக்க முடியாது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியானது, நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரையே தேர்ந்தெடுத்தமையினால் கூட்டாட்சியினை ஒத்துழைப்புடன் கொண்டுசெல்ல முடியுமானதாக அமைந்ததாக ஜனாதிபதி ; தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கும் வரை கட்சியுடன் இணையப்போவதில்லை என வெளியிடப்பட்டிருந்த செய்தியினை நினைவூட்டிய ஜனாதிபதி, நாடு சவால்களை எதிர்நோக்கியிருந்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அரசியல், இன, மத, மொழி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்ட பல உலக வரலாறுகள் காணப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

ஊழல், மோசடிகள் மற்றும் குடும்ப அதிகாரம் என்பவற்றை அரசியலிலிருந்து நீக்க வேண்டும் என்பதுடன், அதிகாரத்தினை தனது நன்மைக்காக உபயோகிக்காது நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டுமென்றும், அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதும் அதிகாரத்திலிருந்து நீக்கப்படுவதும் மக்களின் அபிலாஷைகளுக்கேற்பவே நடைபெற வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் அதிகாரத்தை உடையவர்கள் அல்ல, மக்களே உண்மையான அதிகாரத்தை உடையவர்கள் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடினமான பாதை ஒன்றையே கடந்து வந்துள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, அதனை எதிர்கால வெற்றியை நோக்கி தயார்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அனைத்து ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

மகா சங்கத்தினரும் ஏனைய சமய தலைவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பெருமளவான கட்சி ஆதரவாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/23958

 
 
 
நிறைவாண்டு நிகழ்வு
 

image_421d38a9a0.jpg

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவையொட்டி, கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று (03) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம். ( படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)   

image_909172d1af.jpgimage_fd366c2d9c.jpgimage_25eeee595b.jpgimage_fc5284d065.jpgimage_fca63b473f.jpgimage_ebded6df7e.jpg

  •  

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நிறைவாண்டு-நிகழ்வு/46-203188

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நவீனன் said:

நாட்டின் இராணுவத்தினர் மீது கைவைக்க இடமளிக்கப்போவதில்லை : ஜனாதிபதி உறுதி

ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதி ஒருவரின் மீதோ அல்லது நாட்டின் இராணுவத்தினரின் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அப்போ இராணுவ நீதிமன்றம் என்று ஒன்றை வைத்திருப்பது எதற்கு..? தேங்காய், மாங்காய் புடுங்குவதற்கா...?? :shocked:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Paanch said:

அப்போ இராணுவ நீதிமன்றம் என்று ஒன்றை வைத்திருப்பது எதற்கு..? தேங்காய், மாங்காய் புடுங்குவதற்கா...?? :shocked:

அவையள் சும்மா ஒரு இதுக்கு கதைச்சதை நீங்கள் சீரியசாய் எடுக்கிறியள். :cool:

மகிந்த பக்கமெண்டாலும் சரி....மைத்திரி பக்கமெண்டாலும் சரி ஒரே நீலமயமாய்த்தான் கிடக்கு........
எதையெண்டாலும் எங்கடைசனம் சரியாய் விளங்கிக்கொண்டால் சந்தோசம்...:mellow:

  • தொடங்கியவர்

புலி­க­ளின் நிழல் அமைப்­பு­க­ளின் தாளத்­துக்கு ஆட­வே­மாட்­டேன்

 
புலி­க­ளின் நிழல் அமைப்­பு­க­ளின் தாளத்­துக்கு ஆட­வே­மாட்­டேன்
 

“போர்க்­குற்­றச்­சாட்டு என்ற போர்­வை­யில் இலங்­கைப் படை­யி­னர் மீது கைவைப்­ப­தற்கு எந்­த­வொரு வெளி­நாட்­டுக்கோ, நப­ருக்கோ, அமைப்­புக்கோ இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

புலிச் சார்பு அமைப்­பு­க­ளி­டம் பணம் வாங்­கிக்­கொண்டு அவற்­றின் நிழ­லா­கச் செயற்­ப­டும் அரச சார்­பற்ற அமைப்­பு­க­ளின் தாளத்துக் கேற்ப நான் ஆட­மாட்­டேன்” இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.

பொரளை கெம்­பல் மைதா­னத்­தில் நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­ வது:
முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜெகத் ஜய­சூ­ரிய மீது போர்க்­குற்ற வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளமை பற்றிப் பேசப்­ப­டு­கின்­றது. இது கடல்­தாண்­டிய பிரச்­சி­னை­யா­கும். ஜெகத் ஜய­சூ­ரிய மீதோ படைத்­த­ள­ப­தி­கள் மீதோ அல்­லது எந்­த­வொரு இரா­ணு­வச் சிப்­பாய் மீதோ கை வைப்­ப­தற்கு எந்­த­வொரு வெளி­நாட்­டுக்­கும், நப­ருக்­கும், அமைப்­புக்­கும் இட­ம­ளிக்­க­மாட்­டேன் என்­பதை திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­வைக்க விரும்­பு­கின்­றேன்.

புலி­க­ளி­டம் சம்­ப­ளம் வாங்­கிக் கொண்டு அதன் கைக் கூலி­யா­கச் செயற்­ப­டும் சில அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களே இத்­த­கைய செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­கின்­றன. அவற்­றின் தாளத்­திற்­கேற்ப ஆடு­வ­தற்கு நான் ஒரு­போ­தும் தயா­ரில்லை.

எதற்­காக கூட்டு அரசு?

கூட்டு அர­சில் சுதந்­தி­ரக் கட்சி அங்­கம் வகிக்­கும் வரை­யில் கட்சி மாநாட்­டில் கலந்து கொள்­ளப்­போ­வ­தில்லை என்று சில தரப்­பி­னர் அறிக்கை விடுத்­துள்­ள­னர். ஊஞ்­ச­லா­டு­வ­தற்­கா­கவோ அல்­லது சங்­கீத கதிரை விளை­யாட்டு விளை­யா­டு­வ­தற்­கா­கவோ சுதந்­தி­ரக் கட்சி கூட்டு அர­சில் இணை­ய­வில்லை.

பன்­னாட்டு நெருக்­கடி, பொரு­ளா­தா­ரப் பிரச்­சினை ஆகி­ய­வற்­றி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்­கா­கவே கூட்டு அரசு அமைக்­கப்­பட்­டது.

முன்­கூட்­டியே அரச தலை­வர் தேர்­தலை நடத்­த­வேண்­டா­மென அப்­போ­தைய எனது தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் என்ற வகை­யில் அறிக்­கை­யொன்றை கைய­ளித்­தி­ருந்­தேன்.

6 விட­யங்­களை அதில் சுட்­டிக்­காட்­டி­ய­து­டன், நாட்­டில் அர­சி­யல் மறு­சீ­ர­மைப்பு, நல்­லி­ணக்­கம் ஆகி­ய­வற்றை ஏற்­ப­டுத்­த­வேண்­டும் என­வும் எடுத்­து­ரைத்­தேன்.

பன்­னாட்டு நெருக்­கடி, கடன்­சுமை, பொரு­ளா­தார நெருக்­கடி உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் அவர் எவ­ரி­ன­தும் கருத்­துக்கு செவி­ம­டுக்­கா­மல் முன்­கூட்­டியே தேர்­தலை நடத்தி அதில் தோல்­வி­ய­டைந்­தார்.

அந்­தச் சுமை­கள் எமது தோள்­க­ளுக்கு வந்­தன. அவற்றை எதிர்­கொள்­வ­தற்­கா­கவே இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளும் இணைந்­தன.

வழங்­கப்­பட்ட சன­நா­ய­கம், சுதந்­தி­ரம்
தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது

கடந்த ஆட்­சி­யின்­போது நாட்­டி­லும், கட்­சிக்­குள்­ளும் சன­நா­ய­கம் இருக்­க­வில்லை. ஆட்­சி­மாற்­றத்­தின் பின்­னர் நாட்­டி­லும், கட்­சிக்­குள்­ளும் சன­நா­ய­கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இருந்­தும் வழங்­கப்­பட்­டுள்ள சன­நா­ய­கத்தை சுதந்­தி­ரத்தை சிலர் சரி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை. அதை­மீ­றும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர்.

எதற்­கெ­டுத்­தா­லும் ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­ப­டு­கின்­றது. முக­நூல் இணை­யத்­தில் விமர்­ச­னங்­கள் என்று அது தவ­றான முறை­யில் பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றது. கட்­சிக்­குள்­ளும் வழங்­கப்­பட்­டுள்ள சுதந்­தி­ரத்தை விமர்­சிப்­ப­தற்­கா­கவே பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இந்த நிலைமை மாற­வேண்­டும் – என்­றார்.

01.jpg

http://newuthayan.com/story/25479.html

  • தொடங்கியவர்

ஜகத் ஜயசூரியவை நான் பாதுகாப்பேன்

Sp20-d59f7aa5316c4cccaeb196c91a94b7d2f2037acf.jpg

 

தேசிய அரசாங்கம் தொடரும் என்கிறார் ஜனாதிபதி
(க.கம­ல­நாதன்)

விடு­தலைப் புலிகள் அமைப்­பி­ட­மி­ருந்து பணம் பெற்­றுக்­கொண்டு அவர் ­க­ளுக்கு சார்­பாக செயற்­ப­டு­கின்ற அரச சார்­பற்ற அமைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வாக நான் செயற்­படப் போவ­தில்லை. எனவே முன்னாள் இரா­ணுவ தள­பதி ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய மாத்­தி­ர­மன்றி வேறு எந்த ஒரு இரா­ணுவ தள­பதி மீதும் கைவைப்­ப­தற்கு வெளி­நாட்­டவர் எவ­ருக்கும் இடம் தர­மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சூளு­ரைத்தார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 66ஆவது வரு­டாந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்­புரையாற்­று­ கை­யி­லே­யே ஜனா­தி­பதி மைத்­தி­ரி ­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

 சுதந்­திர கட்­சியின் 66 வருட மாநாடு நடை­பெ­று­கின்ற வேளையில் இக்­கட்­சியின் 50 வருட நிகழ்­வு­களில் நான் தொடர்ச்­ச­யாக கலந்து கொண்­டுள்ளேன். இந்­நி­லையில் இக்­கட்­சியின் முத­லா­வது தலை­மைத்­து­வ­மான பண்­டா­ரா­நா­யக்க காலத்தில் கட்சி உரு­வாக்­கப்­பட்ட குறு­கிய காலத்தில் நாட்டின் ஆட்­சியை கைப்­பற்ற முடிந்­தது. நாட்டு மக்கள் மன­தி­லி­ருந்து பெயர் மறை­யாத ஒரு தலை­மைத்­து­வ­மாக அவர் இருந்தார் என்­ப­தையும் கூற வேண்டும்.

இவ்­வா­றான தரு­ணத்தில் நாம் அர­சியல் கலா­சாரம் குறித்து இன்று அதிகம் பேசு­கின்றோம். சுதந்­திர கட்சி உரு­வா­கிய ஆரம்ப காலத்தில் ஒழுக்கம், தூர­நோக்கம் உள்­ளிட்ட பல சிறப்­பங்­சங்­களை கொண்­டி­ருந்­தது. அவற்­றுக்கு உட்­பட்­ட­தா­கவே மூன்­றறை வருட பண்­டா­ர­நா­யக்க ஆட்சி இடம்­பெற்­றது. அவர் குறித்த ஆட்­சி­கா­லத்தில் பெரும் நெருக்­க­டி­க­ளுக்கு முகம்­கொ­டுத்தார். அதனால் அதிக சேறு­பூ­சப்­பட்ட ஒரு தலைவர் என்றும் அவ­ரையே கூற முடியும்.

அவர் போன்­றுதான் உலக அகிம்­சா­வா­தி­யாக கரு­தப்­படும் மகாத்மா காந்­தியின் காலத்­திலும் அவரின் எதிர்­த­ரப்­புக்கள் அவரை பைத்­தியம் என்று கூறி­னார்கள். கிழவர் முடி­யாத செயற்­பாட்­டிற்கு முனை­கின்றார் என்று தூற்­றி­னார்கள். ஆனால் அவர் அவ­ம­திப்­புக்­களை பொருட்­ப­டுத்­த­வில்லை. அதனால் உல­கிற்கும் எடுத்­து­காட்­டாகும் வகையில் பாரத தேசத்­திற்கு சுதந்­திரம் பெற்­று­கொ­டுத்தார்.

இவ்­வா­றுதான் ஒரு­கா­லத்தில் கட்­சியின் உரு­வாக்கத் தந்­தையும் முதற் தலை­வ­ரு­மான பண்­டா­ர­நா­யக்க தனது வீட்­டினை அட­கு­வைத்து தேர்தல் செல­வு­களை மேற்­கொண்­டி­ருந்தார். அதனால் அவர் மறைந்த பின்னர் அவரின் மனை­வியும் பிள்­ளை­களும் வீட்டை விட்டு வெளி­யேற வேண்டும் என வீட்­டினை அட­குக்கு பெற்ற நபர் கூறி­யி­ருந்தார். பின்னர் குறித்த அட­கு­தா­ர­ரி­டத்தில் முன்னாள் பிர­தமர் ‍ஜோன் கொத்­த­லா­வல பேசி குறித்த வீட்­டினை அவர்­க­ளுக்கே பெற்­றுக்­கொ­டுத்தார். இதனால் பண்­டா­ர­நா­யக்க என்­பவர் ஒரு­போதும் தவ­றான முறையில் பணம் தேட­வில்லை என்­பதும், அவரின் பேரில் ரக­சிய வெளி­நாட்டு கணக்குள் இருக்­க­வில்லை என்­ப­துமே தெரி­ய­வ­ரு­கின்­றது. இவ்­வா­றான முன்­னு­தா­ர­னங்­க­ளையே அப்­போ­தைய தலை­வர்கள் எமக்கு வழங்­கி­னார்கள்.

தேசிய அர­சாங்கம்

ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியும் ஒன்­றி­ணைந்து ஆட்சி அமைத்­த­மைக்கு பலர் கடும் எதிர்ப்­புக்­களை வெளிப்­ப­டுத்­து­கின்­றார்கள். நாம் கட்­சியின் 66 ஆவது மாநாட்­டிற்கு அழைப்பு விடுத்­தி­ருந்த போதும் அவர்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து ஆட்சி செய்யும் வரையில் சுதந்­திர கட்­சியின் மேடை­களில் ஏறோம் என்று பதில் கடிதம் அனுப்­பி­யுள்­ளார்கள்.

இரண்டாம் உலக யுத்­தத்தின் போதும் கூட உலக நாடுகள் அனைத்தும் பேதங்­களை மறந்து ஒன்­றி­ணைந்தே செயற்­பட்­டன. அதன் பின்னர் பிரித்­தா­னியா,ஜப்பான், தென் கொரியா போன்ற நாடு­களின் ஒற்­று­மையும் கூட எமக்கு போதிய எடுத்­தக்­காட்­டுக்­க­ளா­கவே அமைந்­துள்­ளன. அதனால் நாம் வினோத செயற்­பா­டு­க­ளுக்­காக ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து அட்சி செய்­ய­வில்லை. மாறாக நாட்டின் அர­சியல் நல­னுக்­கா­கவே இணைந்­து­கொண்டோம்.

2014 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் முன்னாள் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு செல்ல போவ­தாக அறி­விக்க முற்­பட்ட போது தற்­போது தேர்­த­லுக்கு செல்ல வேண்டாம் என்று நானே கூறினேன். நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் மற்றும் யுத்­தத்தின் பின்­ன­ரான பல செயற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்­தி­யா­னதன் பின்னர் தேர்­த­லுக்கு செல்வோம் என்று கூறினேன். அதற்­கான 6 பரிந்­து­ரைகள் அடங்­கிய பத்­திரம் ஒன்­றையும் கூட சக­ல­ருக்கும் வழங்­கி­யி­ருந்தேன். தேசிய ஒற்­றுமை உரு­வாக்­கப்­பட்ட பின்­ன­ரா­வது ‍தேர்­தலை நடத்­துங்கள் என்றும் கூறி­யி­ருந்தேன் ஆனால் அவை கருத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால் கட்­சியின் பய­ணப்­பாதை தவ­றா­னது என்­பதை அறிந்து கொண்டு கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறிச் சென்றேன்.

முன்­பு­போன்று இந்த அர­சாங்­கத்­திலும் பல குறை­பா­டுகள் இருக்­கின்­றன என்­ப­தயும் நாள் மறுக்­க­வில்லை. ஆனால் இன்று நான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கா­விடின் அன்­றைய பிரச்­சி­னைகள் இன்று எவ்­வா­றாக மாறி­யி­ருக்கும் என்­பதை சக­லரும் சிந்­தித்து பார்க்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை கிடைத்­தி­ருக்­காது. யுத்தம் முடிந்த பின்னர் எமது நாட்டின் மீது சுமத்­தப்­பட்ட மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுகள் எம்மை தலை நிமிர முடி­யாத அள­விற்கு வைத்­தி­ருந்­தன.

ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையும் கூட இலங்கை விவ­கா­ரத்­தினால் பிள­வு­பட்­டது. அதனால் இலங்கை முழு உலக நாடு­க­ளி­டமும் தோற்­று­போ­னது. அத­னால்தான் எனது நண்­பரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக்­ச­விடம் தேர்­த­லுக்கு அவ­சி­ய­மில்லை என்று கூறினேன். ஆனால் ஐ.நா. விவ­கா­ரத்­தினை வெற்­றி­கொள்ளும் நோக்கில் தேர்­தலை நடத்­தினார். அந்த தேர்­தலில் நான் ‍ வெற்­றி­பெற்று ஜனா­தி­ப­தி­யாக தெரி­வானேன்.

அதன் பின்னர் நான் ஜனா­தி­ப­தி­யாக வெளி­நா­டு­க­ளுக்கு சென்ற போதெல்லாம் ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி என்ற இரு கட்­சி­க­ளையும் கையில் ஏந்­திக்­கொண்­டுதான் சென்றேன். அதனால் எமது ஒற்­று­மையை உல­கிற்கு காண்­பித்து இலங்­கையின் மீது இடப்­ப­ட­வி­ருந்த தொடர் பொரு­ளா­தார தடை­யி­னையும் வர­வி­டாமல் தடுத்தோம். அதனால் உலக நாடு­களின் தவைர்கள் எமது நாட்டில் மனித உரிமை மீறல் செயற்­பா­டுகள் நிறுத்­தப்­பட வேண்டும் என்­றார்கள். இன்று ஜன­நா­ய­க­மான சூழ­லையும் நாம் உரு­வாக்கி காண்­பித்­துள்ளோம். அந்த சுதந்­தி­ரத்தை தவ­றான வழியில் நுகரும் சிலரும் இருக்­கதான் செய்­கின்­றார்கள்.

சுதந்­திரம் இல்­லாதன் விளைவு

‍மேற்­கு­றிப்­பிட்­ட­வர்கள் சுதந்­தி­ரத்தின் பெறு­ம­தியை அறி­ய­வில்லை. சுதந்­திரம் இல்­லாத கார­ணத்­தி­னால்தான் 30 வருட யுத்­திற்கு முகம்­கொ­டுக்க நேரிட்­டது. பண்­ட­நா­யக்க - செல்­வ­நாயம் ஒப்­பந்தம் அல்­லது டட்லி சேனா­நா­யக்க - செல்­வ­நா­யகம் ஒப்­பந்­தத்­திற்கு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தாலே நாம் யுத்­தத்­திற்கு சென்­றி­ருக்க வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­காது. எந்த உலக நாடு­க­ளுகம் எம்மை போல பிள­வு­பட்­ட­தில்லை. யுத்தம் ஒன்று இடம்­பெற்ற போது கூட எமது நாட்டில் கட்சி பேதங்கள் காணப்­பட்­டன. அதனால் தான் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாம் ஒற்­று­மை­யினை வலி­யு­றுத்­து­கின்றோம்.

இரு­கட்சி ஒற்­று­மை­யினால் ஐ.நா.பிரச்­சி­னையைும் தீர்த்­துள்ளோம். அதனால் ஒற்­று­மை­யான பய­ணிக்க அனை­வ­ரையும் எனது இரு கரங்­க­ளையும் நீட்டி அழைக்­கின்றேன். சக்­தி­மிக்க கட்­சி­யாக சுதந்­திர கட்­சியை நாம் மற்­றி­ய­மைப்போம். அதி­கா­ரத்­திற்­காக மாத்­திரம் மக்கள் பிர­தி­நி­திகள் செயற்­ப­டக்­கூ­டாது. காரணம் உண்­மை­யான அதி­காரம் மக்­களின் ஆத­ர­வாகும். அதனால் குடும்ப ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்துச் செல்ல நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும்.

எவ்­வா­றா­யினும் நாம் சர்­வ­தேச மட்­டத்தில் பெற‍­வேண்­டிய பல வெற்­றிகள் உள்­ளன. அதனால் நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்கவும் இந்த தேசிய அரசாங்கம் மிக முக்கியமானது. அதனால் தேர்தலின் ஒரு முன்னணியாக செயற்பட்டு வெற்றிபெற சகல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

ஜகத் ஜயசூரிய விவகாரம்

‍ஜெனரால் ஜகத் ஜயசூரிய விவகாரம் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. அது கடல் கடந்த பிரச்சினையாகும். ஜகத் ஜயசூரிய மாத்திரமன்றி வேறு எந்த ஒரு இராணுவ தளபதி மீதும் கைவைப்பதற்கு வெளிநாட்டவர் எவருக்கும் இடம் தரமாட்டேன்.

விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சார்பாக செயற்படுகின்ற அரச சார்பற்ற அமைப்புகளுக்கு ஆதரவான நான் செயற்பட போவதில்லை. மாறாக உண்மையாக நாட்டு பற்றுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் இருக்குமாயின் அவற்றுடன் இணைந்து பயணிக்க நாங்கள் தயாரர் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.