Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு வேலை­யில்­லை­யென நினைத்­து­ விட்­டீர்­களா? - மஹிந்த ஆவேசம்

Featured Replies

எனக்கு வேலை­யில்­லை­யென நினைத்­து­ விட்­டீர்­களா? - மஹிந்த ஆவேசம்

 

எனது தலை­மைப்­பொ­றுப்பின் கீழான காலப்­ப­கு­தியே ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சிக்­கான பொற்­கா­ல­மாகும். அதனை தற்­போ­துள்­ள­வர்கள் மறந்து விட்­டார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குற்றம் சாட்­டினார். 

mahinda-rajapaksa.jpg

 3 ஆம் திகதி நடை­பெறும் மாநாட்டில் கலந்­து­கொள்ள  31ஆம் திகதி இரவு அறி­வித்­த­வுடன் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு நான் வேலைப்­ப­ளு­வற்­றவன் கிடை­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார். 

காலி ரத்­கமை மஹா­மண்­ட­ல­ரா­மய விகா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன் றில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்சி செப்­டெம்பர் இரண்டாம் திக­தியே உரு­வாக்­கப்­பட்­டது. பின்னர் அவர் வழி­வந்த தலை­வர்­களால் கட்சி மென்­மேலும் மேம்­ப­டுத்­தப்­பட்­டது.  

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் 66 ஆவது பூர்த்­திக்­கொண்­டாட்ட நிகழ்­வுகள்   3 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ள­தாக கடந்த 31 ஆம் திகதி இரவே எனக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். எமது ஆட்­சிக்­கா­லத்தில் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு முன்­கூட்­டி­ய­தா­கவே அறி­வித்­து­வி­டுவோம்.  ஆனால் குறு­கிய காலத்தில் இவ்­வாறு அறி­வித்தல் விடுத்­த­வுடன் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு நான்  வேலைப்­ப­ளு­வற்­றவன் கிடை­யாது. இதுவே நான் குறித்த சம்­மே­ள­னத்தை தவிர்ப்­ப­தற்கும் கார­ண­மாக அமைந்­தது. இவ்­வாறே தற்­போ­தைய கட்­சியின் செயற்­பா­டுகள் இருக்­கின்­றன.

இது­வ­ரை ­கா­லமும் கட்­சியின் செயற்­பா­டு­களை பொறுத்­த­வ­ரையில் என்­னு­டைய தலை­மையின் கீழான ஆட்சிக் காலத்­தி­லேயே ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி மறு­ம­லர்ச்சி பெற்­றது என்­பதை பெரு­மை­யுடன் கூறிக்­கொள்­கின்றேன்.

நான் இவ்­வாறு குறிப்­பி­டு­வ­தற்­கான கார­ண­முள்­ளது. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க என்­னிடம் தலை­மைப்­பொ­றுப்பை கைய­ளிக்கும் போது ஸ்ரீ­லங்கா சுதந்­திர கட்­சியில் 56 உறுப்­பி­னர்­களே அங்கம் வகித்­தனர். அதன்­பின்னர் நான் தலைமைப் பொறுப்­பேற்று முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்­க­ளுக்­க­மைய 56 பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்த தொகை­யா­னது 128 பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளாக  உயர்ந்­தது.  

அது­மட்­டு­மல்­லாமல் சகல மாகாண சபை­களும், நூற்­றுக்கு 90 சத­வீத பிர­தேச சபை­களும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்­சியின் கட்­டுப்­பாட்­டி­லேயே இயங்­கின. ஆகவே என்­னு­டைய தலை­மையில் கீழான ஆட்­சிக்­கா­லமே ஸ்ரீ­லங்கா சுதந்திரக்கட்சிக்கான பொற்காலமாகும். அதுவே சிறந்த கட்சிக் கான பலம்மிக்க நாட்களாகும். 

அதனை தற்போது மறந்து விட்டனர். தற்போது கட்சியின் பலம் நலிவற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்படும் வரை இந்நிலை தொடரும் என்றார்.

http://www.virakesari.lk/article/23967

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...

தமிழ் பழமொழி நினைவுக்கு வருகின்றது.

நாய்க்கு வேலையுமில்லை, நடக்க நேரமுமில்லை....

அதிஸ்டம், புலிகளின் பகிஷ்கரிப்பு கோரிக்கை மூலம் கதவு தட்டியது.  மீண்டும் அதேபோல் வரும் என்று.....இரு முறை வென்ற பின்னும்... திருப்பியும் சிம்மாசனம் ஏறலாம் எண்ட கனவோடு...

உந்த ஆள் விகாரை, விகாரையா திரியுது.... குடும்பமா செய்த பாவம் வேற.... தலைமுறைக்கு.... சேர்ந்திருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஆ...

தமிழ் பழமொழி நினைவுக்கு வருகின்றது.

நாய்க்கு வேலையுமில்லை, நடக்க நேரமுமில்லை....

நாய், மிருகம் என்றாலும் அதற்கு உணவளித்தவர்களிடம் அது நன்றியுடன் இருக்கும். சனாதிபதியாக வருவதற்கு உதவி செய்தவர்களையே மிருகத்தனமாகக் கொன்றறொழித்தது மட்டுமன்றி, நன்றி மறந்து அதனைக் கொண்டாடும் மிருகத்தைவிடவும் கேவலமானவர்களை நாயுடன் ஒப்பிடக் கூடாது. :100_pray:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.