Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவச விமான பயண சீட்டுக்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழங்குகிறதா?! எச்சரிக்கை

Featured Replies

இலவச விமான பயண சீட்டுக்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழங்குகிறதா?! எச்சரிக்கை

கடந்த சில தினங்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலவச பயண சீட்டுக்களை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் இது போலி பிரச்சாரம் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் எந்தவொரு பயணியும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என அறிக்கையின் ஊடாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டுள்ளது.

அண்மைக்காலமாக சமூக வலைத்தள apps ஊடாக பகிரப்படும் தகவல் ஒன்று தொடர்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலில் ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இலவசமாக விமான டிக்கட்கள் இரண்டு வழங்கப்படுவதாகவும், அதற்காக வழங்கப்பட்டுள்ள இணைப்பு அழுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விடுத்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை, இவ்வாறான ஒரு வேலைத்திட்டம் ஒன்று விமான சேவையினால் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

தங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயற்பாடாக மேற்கொள்ளப்படுவதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவை இணையத்தள பக்கத்திற்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/business/01/157422?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை வ்ஹட்சப்ப் உபயோகிக்கக் தெரியாதவங்கள் கூட எனக்கு அனுப்பியதுதான் கொடுமையின் உச்சம் அவங்களே பறக்கிற பிளைட்டுக்கு திரும்பிபோகும் போது பெற்றோலுக்கு காசு இல்லாமல் இருகிறாங்கள் இதுக்குள்ள இலவச ரிக்கட் அப்படியே இலவசமாய் பரலோகம் காட்டுவாங்கள் .:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த செய்தியை வ்ஹட்சப்ப் உபயோகிக்கக் தெரியாதவங்கள் கூட எனக்கு அனுப்பியதுதான் கொடுமையின் உச்சம் அவங்களே பறக்கிற பிளைட்டுக்கு திரும்பிபோகும் போது பெற்றோலுக்கு காசு இல்லாமல் இருகிறாங்கள் இதுக்குள்ள இலவச ரிக்கட் அப்படியே இலவசமாய் பரலோகம் காட்டுவாங்கள் .:10_wink:

இதன் சூட்சுமமே வேறு பெருமாளே....! இது சிறீலங்கன் விமான சேவை பயனிகளைக் கவர்ந்து தங்கள்பக்கம் திருப்புவதற்கு அவர்களாலேயே வெளியிடப்பட்ட, ஒரு செலவில்லாத விளம்பரமாகவும் இருக்கலாம்.....:shocked:  யாழ் களத்திலேயே சிறீலங்கன் விமானசேவை பற்றிய விபரம் நூறுபேர்வரை சென்றடைந்துவிட்டது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

இதன் சூட்சுமமே வேறு பெருமாளே....! இது சிறீலங்கன் விமான சேவை பயனிகளைக் கவர்ந்து தங்கள்பக்கம் திருப்புவதற்கு அவர்களாலேயே வெளியிடப்பட்ட, ஒரு செலவில்லாத விளம்பரமாகவும் இருக்கலாம்.....:shocked:  யாழ் களத்திலேயே சிறீலங்கன் விமானசேவை பற்றிய விபரம் நூறுபேர்வரை சென்றடைந்துவிட்டது.:grin:

நீங்கள் சொல்வது உண்மைதான் airindiaவுக்கும் அதே போல் வருது இலவசம் இலவசம் என்று .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.