Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Kannada journalist Gauri Lankesh shot dead in Bengaluru

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை.

லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தில் எழுதிய கௌரி லங்கேஷ், மும்பையை விட, டெல்லியை விட பெங்களூரு முற்போக்கான நகரமாக இருந்தது. அதேவேளையில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. ஆனால், இப்போது இந்த நகரத்தில்தான் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் நடைபெறுகிறது. ஆனால், அதனைப் பெண்கள் மௌனத்துடன் கடந்து செல்கிறார்கள். அதுதான் அச்சம் தருவதாக உள்ளது என்று எழுதியிருந்தார்.

செவ்வாய்கிழமை இரவு 8.30 மணியளவில் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது கௌரி லங்கேஷை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். கொலையாளிகள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்ஸ்  தமிழ்.

 

Gowri Lankesh was a left thinker

ஆர்.எஸ்.எஸ்ஸை மிகக் கடுமையாக எதிர்த்த இடதுசாரி சிந்தனையாளர் கெளரி லங்கேஷ்!

பெங்களூரில் இன்று மிகக் கோழைத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷ், தீவிர இடது சாரி சிந்தனையாளர். ஆர்.எஸ்.எஸ்ஸை மிகக் கடுமையாக, பகிரங்கமாக, துணிச்சலாக எதிர்த்து வந்தவர்.

பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார் கெளரி. தனது தந்தையின் லங்கேஷ் பத்திரிகையை நடத்தி வந்தார்.

தீவிர இடது சாரி சிந்தனையாளராக திகழ்ந்தவர் கெளரி. ஆர்.எஸ்.எஸ். மற்றும் வலதுசாரி கொள்கைகளை மிகக் கடுமையாக, தீவிரமாக எதிர்த்து வந்தவர். நக்சலிசம் குறித்து மிக விரிவாக பல கட்டுரைகளை எழுதியவர். இதனால் நக்சலைட் ஆதரவாளர் என்றும் முத்திரை குத்தப்பட்டவர்.

இந்த கோரக் கொலை குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மிக நெருக்கத்தில் வைத்து அவரை சுட்டுள்ளனர். ஒரு நிமிடத்துள்ளாக கெளரி உயிரிழந்து விட்டார்.

அவர் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று ஒருபோதும் கேட்டதில்லை. இதனால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தற்ஸ்  தமிழ்.

Edited by தமிழ் சிறி

பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

 

பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்


தீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர். லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகையை நடத்தி வரும் கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜேஷ்வரி நகரில் உள்ள கௌரி லங்கேஷ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர், அவரை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதவாதத்தை தீவிரமாக எதிர்த்து வந்த கௌரியின் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளர் கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டது போன்றே, கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கௌரி லங்கேஷுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் இரண்டு பேர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்குகளில், அவர் குற்றவாளி என்று கர்நாடக நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் தீர்ப்பளித்தது. அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையுடன், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

http://www.vikatan.com/news/india/101416-journalist-gauri-lankesh-shot-dead-in-bengaluru.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்துத்துவத்திற்கு எதிராக பேசிய பத்திரிகையாளர் சுட்டுக்கொலை..!

 

இந்துத்துவ அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த பெங்களூரை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்  கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பெங்களூருவின் ராஜேஸ்வரி நகரில் இருக்கும் தனது வீட்டிற்கு காரில் வந்த இவரை, மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய காவல்துறையினர், “ இன்று மாலை 6.30 மணிக்கு காரில் இருந்து இறங்கி வீட்டுக்கதவை  திறக்கும் போது கௌரி லங்கேஷை மர்மநபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கௌரி லங்கேஷின் நெஞ்சில் துப்பாகி குண்டுகள் துளைத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்” என தெரிவித்தனர்.

sub_2.jpg

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்துத்துவ அரசியலை தொடர்ந்து விமர்த்து வருபவர். பாஜகவினரை கடுமையாக விமர்சித்ததற்காக கடந்த ஆண்டு அவதூறு வழக்கில் தண்டனை பெற்றவர். இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு இந்திய குடிமகளாக பாஜகவின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து அமைப்பில் உள்ள சாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நம் அரசியல் அமைப்பு சட்டம் எனக்கு மதசார்ப்பின்மையைத்தான் கற்றுக்கொடுத்தது. எனவே மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுப்பது என்னுடைய அடிப்படை உரிமையாகும்” என தெரிவித்திருந்தார்.

மதவாத அரசியலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த வந்த கல்புர்கியும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் தான் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், கௌரி லங்கேஷின் இந்த படுகொலை இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

News 7 Tamil.

 

  • கருத்துக்கள உறவுகள்

தனது கடைசி டிவிட்டர் பதிவில் கௌரி லிங்கேஷ் கூறியது என்ன?

தனது கடைசி டிவிட்டரில் கௌரி லிங்கேஷ் கூறியது என்ன?படத்தின் காப்புரிமைTWITTER

வலதுசாரிகள் மற்றும் வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் செவ்வாய்க்கிழமையன்றுசுட்டுக்கொல்லப்பட்டார்.

கௌரி லங்கேஷின் மரணத்துக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவர் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. டிவிட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கிவந்த கௌரி லங்கேஷ், கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு வெளியிட்டிருந்தார்.

தனது கடைசி டிவிட்டரில் கௌரி லிங்கேஷ் கூறியது என்ன?படத்தின் காப்புரிமைFACEBOOK
Image captionதனது கடைசி டிவிட்டரில் கௌரி லிங்கேஷ் கூறியது என்ன?

தனது டிவிட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்ட போலி செய்தி ட்வீட்கள் உள்ளிட்ட பலவற்றை கௌரி மீண்டும் ட்வீட் செய்துள்ளார். போலி செய்திகள் சில சயங்களில் தவறுதலாக பகிரப்பட்டு வருவது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு 9 மணி நேரம் முன்னதாக, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் குறித்த செய்தி இணைப்பு ஒன்றை கௌரி ட்வீட் செய்தார்.

இந்நிலையில் கௌரி இறந்தபிறகு அவரது ட்வீட்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதங்கள் நடந்துவருகின்றன.

கடைசி டிவிட்டரில் கௌரி சொன்னது என்ன?

தான் இறப்பதற்கு முன்பு கௌரி வெளியிட்டிருந்த ட்வீட்களில் போலி செய்திகள் பகிரப்படுவது குறித்து கௌரி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

டிவிட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER
Image captionடிவிட்டர் பதிவு

தனது டிவிட்டரில், ''போலியான செய்திகள் தொடர்பான பதிவுகளை பகிர்ந்துவிடும் தவறினை நாம் செய்துவிடுகிறோம். இது குறித்து நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம்; மற்றவர்களின் தவறுகளை படம்போட்டுக்காட்ட முயற்சிக்க வேண்டாம்'' என்று கௌரி தெரிவித்திருந்தார்.

இதற்கு அடுத்து அவர் வெளியிட்ட ட்வீட்டில் , ''நாம் நமக்குள் சண்டை போட்டு வருவதாக ஏன் எனக்கு தோன்றுகிறது? நமது பெரிய எதிராளி யார் என்று நமக்கு தெரியும். அது குறித்து நாம் கவனம் செலுத்தலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய 'லங்கேஷ் பத்திரிகே' என்ற பத்திரிகையை நடத்திவந்த அவர், தமது வீட்டுக்கு எதிரிலேயே செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க மன்றம் (Communal Harmony Forum) என்ற அமைப்பை தீவிரமாக முன்னெடுத்துவந்தார் கௌரி.

கௌரியின் தந்தை பி.லங்கேஷ், ஒரு கவிஞர், எழுத்தாளர், விருது பெற்ற திரைப்பட இயக்குநர்.

தமது தாய், தமது சகோதரியும் விருது பெற்ற திரைப்பட இயக்குநருமான கவிதா லங்கேஷ், சகோதரன் இந்திரேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார் கௌரி.

http://www.bbc.com/tamil/india-41171245

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமானது அல்ல

ஒரு மாதமாக, கவுரி லங்கேஷை.... பின் தொடர்ந்த கொலையாளிகள்!

பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ய கொலையாளிகள் அவரை ஒரு மாதமாக பின்தொடர்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவரும் கூட.

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு அவரது வீட்டின் கதவை திறந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரது கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் அவரை கடந்த 15 நாள்களாக பின்தொடர்ந்து வந்திருக்கக் கூடும் என்று முதல் கட்ட விசாரணை கூறுகிறது. இதுகுறித்து ஒன்இந்தியாவுக்கு புலனாய்வு துறை அதிகாரிகள் கூறுகையில், அவரை யாரோ பின்தொடர்வதை தெரிந்த பிறகுதான் அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அவரை மர்மநபர்கள் பெங்களூரில் காந்தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீடு வரை அவரை மர்மநபர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து தனது தாயிடம் கவுரி தெரிவித்துள்ளார். எனினும் போலீஸாரிடம் சொல்லவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு, தனது வீட்டில் சிசிடிவி கேமராவை அவர் நிறுவியுள்ளார்.

இந்நிலையில் அவர் மாநிலத்தின் உள்துறை அமைச்சரை கடந்த திங்கள்கிழமை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் சந்திக்கவில்லை. ஒரு வேளை அவரை சந்தித்திருந்தால் தன்னை பின்தொடரும் மர்மநபர்கள் குறித்து தகவல் தெரிவித்திருப்பார்.அவரது வீட்டில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மிகவும் சிறியதாக உள்ளன. அவற்றை பெரிதாக்கித்தான் ஆய்வு செய்ய வேண்டும். எனவே இது திட்டமிட்ட கொலைதான் என்று தெரிவித்தனர்.

கவுரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடல் வழக்கமான துப்பாக்கிளால் துளைக்கப்பட்டது அல்ல என்று தெரிவித்துள்ளது. கவுரியின் உடலை துளைத்த துப்பாக்கி 7.65 எம்எம் கொண்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கவுரியின் வீட்டு கேட்டுக்கும் அவரது வீட்டுக்கும் இடையே நடந்துள்ளது. சுமார் 10 அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளார். கவுரியின் செல்போனையும், அவரது வீட்டை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

- தற்ஸ்  தமிழ். -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.