Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாறு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயார்: சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு கூறியதாவது:

"முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதி மீதான பாரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சிறிலங்கா படைத்தரப்பு தயாராகி வருகின்றது. பெருமளவில் படையினர் குவிக்கப்பட்டு ஆயுதத் தளபாடங்கள் நகர்த்தப்பட்டு இந்த ஏற்பாடுகள் படைத்தரப்பால் மேற்கொள்ளப்படுகின்றன.

களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகளின் படையணிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. மற்றும் உளவுத்தகவல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இதனை முறியடிப்பதற்கு விடுதலைப் புலிகளின் படையணிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இது ஒரு பெரும் போராக வெடிக்கும் என்பதை நாம் நோர்வே தூதுக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

source:www.puthinam.com

  • Replies 66
  • Views 9.3k
  • Created
  • Last Reply

இராணுவ தளபதி தொப்பிகலவை கைப்பற்ற போகிறோம் எண்று சொல்லி கொண்டு இருக்கிறார். ஆனால் எங்களின் அரசியல் பொறுப்பாளர் மணலாறு தாக்குதல் திட்ட அமைப்பு பற்றி சொல்கிறார். தமிழர் தரப்பை தொப்பிகலவுக்கு திசைதிருப்பிவிட்டு மணலாற்றில் தாக்கும் திட்டம் இருந்தால் இராணுவத்துக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்....!

நோர்வே தரப்புக்கும் இந்த செய்தி போய் இருக்கும்... வழமைபோல செவிடன் காதில் ஊதிய சங்குதானோ...???

மணலாறில் போர் தயார்படுத்தலுக்கும் நோர்வே தூதுக்குழுவுக்கும் என்ன சம்பந்தம் ?

மணலாறில் போர் தயார்படுத்தலுக்கும் நோர்வே தூதுக்குழுவுக்கும் என்ன சம்பந்தம் ?

சத்தியமாய் விளங்காமல்தான் கேக்கிறீங்களோ...??????

இப்போ போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கிறது... அதுக்கு அனுசரனையாளர்களாய் நோர்வே இருக்கிறது....! இப்படியான போர் ஆயத்தங்களை இலங்கை படைகள் செய்கின்றன என்பதை முன்னரே தெரிவிப்பது புலிகள் வந்தார்கள் அதுதான் அவர்களை துரத்திக்கொண்டு வந்தோம் எண்டு இலங்கைபடைகள் காரணம் சொல்வதை மறுக்க முடியும்....!

இது அப்பட்டமான போர் நிறுத்த மீறல் எண்று சொல்லப்படுகிறது....

தள போர்நிறுத உடன்படிக்கை என்று ஒன்று இன்னமும் உள்ளதா.....? :lol::D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதும் இராணுவ மேலான்மை என தன்னால் கட்டியெழுப்பப்பட்ட மணல் வீட்டை தகர்க்கும் புலிகளின் பாய்ச்சல் யாழிலா? மன்னாரிலா? மணலாற்றிலா? வவுனியாவிலா? என நாடிபிடித்து பார்க்க முடியாத அரசு தனது படைகளையும் ஆயுதங்களையும் ஒவ்வெரு முனைக்கும் நகர்த்தியும், எறிகணை வீச்சுக்களை நிகழ்த்தியும் தான் உசார் நிலையில் உள்ளது போல காட்டிக்கொள்கின்றது.

திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

தள போர்நிறுத உடன்படிக்கை என்று ஒன்று இன்னமும் உள்ளதா.....? :lol::D:D

அப்படி இருப்பதானாலும் அதை தமிழர் தரப்பு மதிப்பதினாலும்தான், நாங்கள் பொறுமையாக இருக்கிண்றோம்... இதைத்தான் தமிழர் தலைமை சொல்கிறது.... அதனால் போர் நிறுத்தம் சம்பந்தமாக சந்தேகம் வேண்டாம்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

தற்போதும் இராணுவ மேலான்மை என தன்னால் கட்டியெழுப்பப்பட்ட மணல் வீட்டை தகர்க்கும் புலிகளின் பாய்ச்சல் யாழிலா? மன்னாரிலா? மணலாற்றிலா? வவுனியாவிலா? என நாடிபிடித்து பார்க்க முடியாத அரசு தனது படைகளையும் ஆயுதங்களையும் ஒவ்வெரு முனைக்கும் நகர்த்தியும், எறிகணை வீச்சுக்களை நிகழ்த்தியும் தான் உசார் நிலையில் உள்ளது போல காட்டிக்கொள்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சுதர்சன் எழுதியது

தற்போதும் இராணுவ மேலான்மை என தன்னால் கட்டியெழுப்பப்பட்ட மணல் வீட்டை தகர்க்கும் புலிகளின் பாய்ச்சல் யாழிலா? மன்னாரிலா? மணலாற்றிலா? வவுனியாவிலா? என நாடிபிடித்து பார்க்க முடியாத அரசு தனது படைகளையும் ஆயுதங்களையும் ஒவ்வெரு முனைக்கும் நகர்த்தியும், எறிகணை வீச்சுக்களை நிகழ்த்தியும் தான் உசார் நிலையில் உள்ளது போல காட்டிக்கொள்கின்றது

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதைத்தானா?

அண்ண ஓவ்வொரு முறையும் உப்படித்தான் கதைவிர்றியள் கேட்க வாசிக்க உணர்ச்சி வசமாக கிடக்குது

பிறகு ஆமி இடத்தை பிடிச்சாப்பிறகு " இந்த இடம் இராணுவ முக்கியத்தும் இல்லாத இடம் "

என்று சொல்லுவியள் இதைச் சொன்னா என்னை ஓட்டுக்குழு என்டு சொல்வியள் நீங்கள் சொல்லுறியளோ இல்லையோ யாழ் களத்தில் உள்ளவை சொல்லுவினம்

ஆனாலும் நான் ஓண்டு சொல்லவே

நான் ஓண்டும் இயற்றி சொல்லவில்லை.

நீங்கள் உப்பிடித்தான் சம்புருக்கும் ஏன் வாகரைக்கும் சொன்னியள் அப்ப எங்கட ஊடகங்கள் அதைத்தான் பெரிசாச் சொல்லிச்சினம் " வாகரைக்கு ஆமி போனா சண்டை தான் அது மட்டுமே இனி சண்டை கொழும்பில தான் " உப்பிடி எத்தனை கதை ஆனால் நடந்ததெல்லாம் மாறித்தான் சம்புரையும் வாகரையையும் ஆமி பிடித்த பிறகு நீங்கள் தந்திரபாய பின்நகர்வு என்று சொல்லுவதற்கு முன்பே எங்கடயாக்கள் எல்லாரும் அப்பித்தான் சொல்லிச்pனம்

என்ன எதுவோ எனக்கு ஒண்டு தெரியும் அண்ணையின்ர வாயில இருந்து அடிக்கடி வாற வசனம் " செயலுக்கு பின்பு தான் பேச்சு "

உண்மையைச் சொல்லுறன் நான் ஓட்டுக்குழு இல்ல நான் ஓட்டாத குழு

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத உடன்படிக்கை என்று ஒன்று இன்னமும் உள்ளதா.....?

இலலையா என்பது அல்ல பிரச்சினை

இருதரப்பும்அதிலிருந்து இன்னும்விலகியதாக நோர்வேக்கு அறிவிக்கவில்லை

யாராவது ஒருத்தர் அறிவிக்கும்வரை இப்படியான சில நடைமுறைகள்??? பின்பற்றப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண ஓவ்வொரு முறையும் உப்படித்தான் கதைவிர்றியள் கேட்க வாசிக்க உணர்ச்சி வசமாக கிடக்குது

பிறகு ஆமி இடத்தை பிடிச்சாப்பிறகு " இந்த இடம் இராணுவ முக்கியத்தும் இல்லாத இடம் "

என்று சொல்லுவியள் இதைச் சொன்னா என்னை ஓட்டுக்குழு என்டு சொல்வியள் நீங்கள் சொல்லுறியளோ இல்லையோ யாழ் களத்தில் உள்ளவை சொல்லுவினம்

ஆனாலும் நான் ஓண்டு சொல்லவே

நான் ஓண்டும் இயற்றி சொல்லவில்லை.

நீங்கள் உப்பிடித்தான் சம்புருக்கும் ஏன் வாகரைக்கும் சொன்னியள் அப்ப எங்கட ஊடகங்கள் அதைத்தான் பெரிசாச் சொல்லிச்சினம் " வாகரைக்கு ஆமி போனா சண்டை தான் அது மட்டுமே இனி சண்டை கொழும்பில தான் " உப்பிடி எத்தனை கதை ஆனால் நடந்ததெல்லாம் மாறித்தான் சம்புரையும் வாகரையையும் ஆமி பிடித்த பிறகு நீங்கள் தந்திரபாய பின்நகர்வு என்று சொல்லுவதற்கு முன்பே எங்கடயாக்கள் எல்லாரும் அப்பித்தான் சொல்லிச்pனம்

என்ன எதுவோ எனக்கு ஒண்டு தெரியும் அண்ணையின்ர வாயில இருந்து அடிக்கடி வாற வசனம் " செயலுக்கு பின்பு தான் பேச்சு "

உண்மையைச் சொல்லுறன் நான் ஓட்டுக்குழு இல்ல நான் ஓட்டாத குழு

நீங்கள் இப்படிச்சொல்வதனால் ஒட்டுக்குழுக்கள் செயவதெல்லாம் சொல்வதெல்லாம் சரி என்கின்றீரா?

அல்லது எங்கயாது அடியுங்கோ எத்தனை போராளிகள் அழிந்தாலும் பரவாயில்லை என்கிறீரா?

மறந்து விடவேண்டாம் நாம் ஒரு சிறுபான்மை இனம்

ஆட்படை வலு எம்மிடம் எப்பொழுதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும்.

அண்ண குகதாசன் நீங்கள் சொல்லுவது போல் ஓட்டுக்குழுக்கள் செய்வதை சரியென்று சொல்லுவதற்கு நான் ஓன்று விடுபேயனோ அல்லது விடுதலைப்போரட்டததினால் ஏற்படும் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக தமிழிழத்தை விட்டு ஓடியவனோ அல்ல

நீர் குறிப்பிட்டது போல தமிழர் சிறுபான்மை இனம் தான் அது நீர் சொல்லித் தான் தெரியவேணும் எண்டில்லை உப்பிடிப்பார்த்தா தமிழிழ விடுதலைப்போராட்டமே தொடங்கியிருக்கக்குடாது தமிழர் போராட்டத்தால சாகினம் எண்டு

யுத்த நிறுத்தம் வந்தாப்பிறகு தான் உமக்கு தமிழர் சிறுபான்மை இனம் எண்டு தெரியுதோ?

தினமும் தமிழிழத்தில் நடைபெறும் கொலைகளின் பொழுது என்ன சிங்களவனே சாகிறான் ????

நீர் சொல்லுற சிறு பான்மை இனம் தான் சாகுது .

நான் குறிப்பட்டது எமது மக்களுக்கு " பொறுமையாக இருக்கிறம் உறுதியாய் இருக்கிறம்

சம்புரைபிடிச்சா அடிப்பம் வாகரையை பிடிச்சா அடிப்பம் " இப்பிடியான கதைகளை கேட்டு வேண்டாம் எண்டு போச்சுது இதை நான் நேர நிண்டு அநுபவிச்சு தான் சொல்லுறன்

உம்மப்போல குளிருக்க இருந்து கொண்டு விடுதலைப் போராட்டம நடத்லோதெண்டு எனக்கும் தெரியும்

பரவாயில்லை நீராவது பிரான்சில இனத்தைப் பரப்பும்

" அண்ண டென்சனாகதையுங்கோ "

புதியவன் நீர் கொழும்பில் இருப்பதும் சரிதான் நாங்கள் வெளிநாட்டில் இருப்பதும் சரிதான். ஏனென்றால் போர்ச்சத்தம் ஒருவருக்கும் கேளாது. என்ன தான் புலம் பெயர் நாட்டில் இருந்து பண உதவி, அரசியல் பிரச்சாரம் செய்தாலும் மண்ணில் வாழ்கின்ற மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்களது விருப்பத்தின் பேரில் தான் இங்கு அவர்களுக்கான ஆதரவை எல்லாரும் செய்கிறார்கள்.

எல்லாம் நிறுத்துங்கள் சிங்களவரோடு சேர்ந்து சிறுபான்மையாகதான் வாழப் போகிறோம் என்றால் இங்கேயும் அனைத்தையும் மூடிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்போரட்டததினால் ஏற்படும் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக தமிழிழத்தை விட்டு ஓடியவனோ அல்ல.

சம்புரைபிடிச்சா அடிப்பம் வாகரையை பிடிச்சா அடிப்பம் " இப்பிடியான கதைகளை கேட்டு வேண்டாம் எண்டு போச்சுது இதை நான் நேர நிண்டு அநுபவிச்சு தான் சொல்லுறன் உம்மப்போல குளிருக்க இருந்து கொண்டு விடுதலைப் போராட்டம நடத்லோதெண்டு எனக்கும் தெரியும்

பரவாயில்லை நீராவது பிரான்சில இனத்தைப் பரப்பும்

" அண்ண டென்சனாகதையுங்கோ "

அப்பன் இந்த மாதிரி அறிவு கெட்ட கருத்துக்களை இங்க முன்வைக்காதையும்.

வெளிநாட்டில இருக்கிற என்டா என்ன உமக்கு லேசான விசயமே??

நீர் உங்க இருந்து கொண்டு உம்மட வீட்டுக்கு வாடகை குடுக்கிறீரோ?

காப்புறுதியளுக்கு காசு கட்டுறீரோ?

பாவனை நீருக்கு காசு கட்டுறீரோ?

தீ அணைப்பு நிலையத்துக்கு காசு கட்டுறீரோ?

குப்பை போடுறதுக்கு காசு காட்டுறீரோ?

இல்லை தமிழீழத்துக்கு வரி கட்டுறீரோ?

உம்மட சம்பளத்தில வேலையில்லாமல் இருக்கிறவங்களுக்கு சம்பளம் குடுக்க காசு களிக்கிறாங்களோ??

இப்டி எண்ணிக்கொண்டே போகலாம். நீர் உங்க 1 ருபாய் உழைத்தாலும் அது முழுமையாக உமக்கு தான். இங்க எல்லாம் கழிச்சு எங்களுக்கு முக்காவாசி தான் வரும். இதுவளுக்கெல்லாம் காசு குடுத்திட்டு மிஞ்சி இருக்கிற கொஞ்சத்தில தான் நாட்டுக்கு குடுக்கினம் இங்க இருக்கிற ஒரு சிலர். உங்க இருக்கிற சொந்தக்காரருக்கும் காசு அனுப்ப வேணும்.

சும்மா உங்க இருந்து கொண்டு நாங்கள் நேரில அனுபவிச்சனாங்கள் புடுங்கினாங்கள் என்டு கொண்டு சொல்லாதேம். உம்மைப்போல ஒருத்தர் எழுதினதுக்காக நான் அங்கை இருக்கிற எல்லாரையும் குறை சொல்லேலை. தலைவரே அகதித்தமிழர்கள் மேல நல்ல அபிப்ப்ராயம் வச்சிருக்கிறார். தயவு செய்து இப்படியான விசக்கிருமிக் கருத்துக்களை தவிர்க்கவும். ஒருவர் இருவர் எழுதும் கருத்துக்களை வைத்து வெளிநாட்டில் உள்ள எல்லோரும் அப்படி என்று நினைக்க வேண்டாம்.

வேலு சார் கோவத்தில சொன்னாலும் அது 99% உண்மைதான், புத்து ஜீவன் பெயரில் மட்டும் இருந்தால் போதது, கதைக்கும் போது அறிந்து கதையும் நீர் நீர்கொழும்பில் இருந்து கொன்டு, உம்மால் என்னதான் பண்ணமூடியும்.....? அங்கிருந்து என்ன போர செய்கிறீர் :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு, இவளத்தையும் கழித்தாலும் நீர் எந்த வகையிலும் குறைந்தவரில்லை அங்கிருப்பவர்கலுடன் ஒப்பிடும்போது.

அண்ண அது சரி வெளி நாட்டில நீர் அவன்ர நாட்டில இருந்து கொண்டு அவன் அபிவிருத்தி செய்த நாட்டில இருக்கிறதுக்கு அவன் வரி கேட்டா குடுக்கிறீர் அது நான் என்ன செய்ய ஓப்பாரியா வைக்கமுடியும் நீர் வரிகேட்ப்பான் எண்டு தெரிஞ்சிருந்தால் போகம விட்டிருக்லாமே ?ஃஃ

அது உம்மட பிரச்சனை

ஆனால் பல வருடக்கணக்காக வெளிநாட்டில் இருந்து போர்நிறுத்த காலத்தின் பொழுது

யாழ் குடாநாட்டிற்கு வந்த பலரிடம் புலிகள் வெளிநாட்டில் இருந்த ஓவ்வொரு நாளுக்கும் பணம் கேட்கின்றார்கள் என்று சொன்னதும் வெளிநாட்டில இருந்து வருபவர்கள் தான்

அது தெரியுமோ ? அது தெரிஞ்சிருக்க வாய்பில்லைத் தானே ?????

அண்ண இஞ்ச நான் தனிய அனுபவிக்கவில்லை அனைத்து தமிழ் மக்களும் தான் அனுபவிகின்றார்கள் சரியோ அது உமக்கு சுட்டதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.

" தலைவரே அகதித்தமிழர் " எண்டு பாவிக்கறதெண்டு ஓரு வசனம் உம்மட வாயால தான் கேட்கிறன் என்ன

தமிழ் தமிழிழம் தலைவர் என்றியள் தலைவர் ஓருகாலமும் அகதித் தமிழர் அகதியில்லாத் தமிழர் என்டு சொல்லுறது இல்லை எண்டு தெரியாதோ ?????

இனியாவது தெரிஞ்சு கொள்ளும் .

நேசன் தமிழிழத்துPலு; இவ்வளவு அழிவுகளும் அரங்கேறினாப்பறிகும் இனியும் மோட்டு சிங்களவனோட சேர்ந்து வாழுவம் எண்டு யோசிக்றதெண்டால் அது உம்மப்போல ஆட்களே தவிர வேற எவரும் இல்லை.

தம்பி பிரசன்னா நாங்கள் கொழும்பில இருந்து கொண்டு போர் செய்யலத்தான் ஆனால் எப்பவும் சிங்களவன்ர நச்சரிப்புக்குள்ள தான் வாழவேணும் தெரியுமோ

அதெப்பிடித் தம்பி சரியா 99 வ{தம் கனிச்சீர்

என்கொருக்கா தமிழிழத்தில் எவ்வளவு பகுதி ஆக்கிரமிப்பில இருந்து விடுவிக்கப்பட்டிருக்கெண்டு கணிச்சு சொல்லும் ஏன்னெண்டா உமக்கு அங்கயாவது ஓரு இடம் கிடைக்குதோ எண்டு பாப்பம் பாவம் நீரம் முன்ல எல்ல இருக்கிறிர்

உமக்கென்ன காயாக முன்ல இரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='puthijavan' date='Mar 6 2007, 01:13 PM' post='266730']

ஆனால் பல வருடக்கணக்காக வெளிநாட்டில் இருந்து போர்நிறுத்த காலத்தின் பொழுது

யாழ் குடாநாட்டிற்கு வந்த பலரிடம் புலிகள் வெளிநாட்டில் இருந்த ஓவ்வொரு நாளுக்கும் பணம் கேட்கின்றார்கள் என்று சொன்னதும் வெளிநாட்டில இருந்து வருபவர்கள் தான்

அது தெரியுமோ ? அது தெரிஞ்சிருக்க வாய்பில்லைத் தானே ?????

அண்ண இஞ்ச நான் தனிய அனுபவிக்கவில்லை அனைத்து தமிழ் மக்களும் தான் அனுபவிகின்றார்கள் சரியோ அது உமக்கு சுட்டதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.

" தலைவரே அகதித்தமிழர் " எண்டு பாவிக்கறதெண்டு ஓரு வசனம் உம்மட வாயால தான் கேட்கிறன் என்ன

தமிழ் தமிழிழம் தலைவர் என்றியள் தலைவர் ஓருகாலமும் அகதித் தமிழர் அகதியில்லாத் தமிழர் என்டு சொல்லுறது இல்லை எண்டு தெரியாதோ ?????

இனியாவது தெரிஞ்சு கொள்ளும் .

நேசன் தமிழிழத்துPலு; இவ்வளவு அழிவுகளும் அரங்கேறினாப்பறிகும் இனியும் மோட்டு சிங்களவனோட சேர்ந்து வாழுவம் எண்டு யோசிக்றதெண்டால் அது உம்மப்போல ஆட்களே தவிர வேற எவரும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டுத் தமிழன், உள் நாட்டுத்தமிழன், கொழும்புத்தமிழன், யாழ்ப்பாணத்தமிழன், மலைநாட்டுத் தமிழன், மட்டக்களப்புத்தமிழன்

என்கின்ற பிரிவினை வாதத்தை எப்பவிடுறமோ அன்றைக்குத் தமிழீழம் கிடைக்கும்!.

எப்ப்பப் பார்த்தாலும் எங்களூக்குள்ளேயே அடிபட்டுக் கிடப்பதால் தான் ஒட்டுக்குழுவுக்கும் அரக்கர்குழுவுக்கும் எங்களையே மோதவிட்டு எங்கள் அழிவைப் பார்த்து இரசிக்கினம்.

இதை உணர்ந்து கொள்ளூங்கோ முதலில்.

பேச்சில் ஒன்றும் குறைச்சல் இல்லை

புதியவன்

சம்பூர் வாகரை இழப்பு என்பது விடுதலைப் புலிகளிற்கு இழப்பு அல்ல. இவற்றின் மீது சிங்களப் படைகள் படையெடுக்க முதலில் இந்த நடவடிக்கைகள் முழு அளவிலான போரிற்கே வழி வகுக்குமென விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பேச்சாளர், படைத்துறைப் பேச்சாளர் ஆகியொர் தெரிவித்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புக்களானது தமிழீழ விடுதலைப் புலிகளும் படை நடவடிக்கைகளில் இறங்குவதற்கான, தமிழீழ விடியலை நோக்கிய பயணத்தை அதாவது முழுமையான போரை ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கி விட்டது.

தமிழ்ச்செல்வனோ அல்லது இளந்திரையனோ சம்பூரை, வாகரையை விட்டுக்கொடுக்க மாட்டோமென எந்தச் சந்தர்ப்பதிலும் தெரிவிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளும்.

இவை இழக்கப்பட்ட பின்னர் இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற பகுதிகளாக சொல்லப்பட்டன. இது இழப்பை மூடி மறைப்பதற்காககச் சொல்லப்பட்டதல்ல. தென் தமிழீழத்தில் பெருமெடுப்பில் படையினர் நகர்வினை மேற்கொள்ளும் பொழுது புலிகள் மூர்க்கமாக மோதுவது குறைவு(விடுதலைப் போராட்டம் வரலாறு தெரிந்தவர்களிற்கு இது தெரியும்). ஆனாலும் வாகரை ஆக்கிரமிப்பு ஆரம்பித்த போது புலிகள் கடுமையான பதில்தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இது தென் தமிழீழத்தில் சிங்களப் படைகளின் படை நகர்வு ஒன்றிற்கு எதிராக புலிகள் நடத்திய பெரிய பதில் தாக்குதல் என்றால் மிகையல்ல.

ஆனால் மணலாறு மற்றும் முல்லை மீதான படையெடுப்பு என்பது விடுதலைப் புலிகளின் அடித்தளத்தை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே நோக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தலைமை, முதன்மைக் கட்டளைப் பீடங்கள், விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் பெரும்பாலானவை விடுதலைப் போரின் மையமாக உள்ள முல்லை மாவட்டத்திலேயே இருக்கிறது.

எனவே இப்பகுதிகள் கட்டாயமாகப் பாதுகாக்கப் படவேண்டியவை. இவற்றின் மீதான அச்சுறுத்தல்கள் முற்றாக முறியடிக்கப்பட வேண்டியவை. இவற்றின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிரி ஆரம்பித்து தமது முன்னரங்கிலிருந்து சிறிது தூரம் முன்னேறலாம் ஆனால் அவனின் ஒட்டு மொத்த முயற்சிகளும் முறியடிக்கப்படும்.

அத்துடன் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிட்டதுபோல அது பெரும்போரை ஏற்படுத்தும். அதாவது சம்பூர் நோக்கிய நகர்வின் போதும் புலிகள் எச்சரித்தனர், பின்னர் வாகரை நோக்கிய நகர்வின் போது எச்சரித்தனர். ஆனால் பெருந்தாக்குதல்களை அவர்கள் தொடுக்கவில்லை.

இது பன்னாட்டு சமூகத்திற்கு புலிகள் சொன்ன செய்தி, சம்பூரை ஆக்கிரமித்தனர் நாம் பொறுமை காத்தோம், வாகரையை ஆக்கிரமித்தனர் பொறுத்தோம். இப்போது எமது பிரதான தளத்திற்குள்ளேயே வர முயற்சிக்கிறார்கள். நாமும் பதிலடியில் இறங்குவதைத்தவிர வேறு வழியில்லை என்பதைத் சர்வதேசமும் புரிந்து கொள்ளமும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சில் ஒன்றும் குறைச்சல் இல்லை

என்ன இத்தோட முடிச்சிட்டிங்க... வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லையா????? வில்லையா?????

வில்லையா????? வில்லையா?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சில் ஒன்றும் குறைச்சல் இல்லை

இந்த ஒட்டுக்குழுக்களை/புழுக்களை முதலில் ஒழிக்க வேணும்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.