Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுத்தறிவு என்றால் என்ன?

Featured Replies

பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்வி இந்தத் தளத்தில் சில இடங்களில் கேட்கப்படுகிறது.

பதில் மிகவும் சுலபமானது

பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. இது நல்லது, இது கெட்டது என்று சொந்தப் புத்தியில் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.

இது கல், இதற்கு பாலை ஊற்றினால், எமக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று பகுத்து அறிய வேண்டும்.

கடவுள் அனைத்தும் அறிந்தவர் என்றால், அவர் தமிழையும் அறிந்திருப்பார் என்பதை பகுத்து அறிய வேண்டும்.

பிறப்பின் மூலம் மனிதருக்கு பிரிவை உருவாக்குகின்ற எவையுமே நல்லவைகள் அல்ல என்பதை அறிய வேண்டும்.

தந்தை பெரியாரோ, கிருஸ்ணரோ சொன்னால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாது, ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி மிக இலகுவாக யாருக்குமே இருக்கக்கூடியதுதான் பகுத்தறிவு.

ஆனால் எத்தனை பேர் பகுத்தறிவோடு இருக்கிறோம்?

உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம்.

தந்தை பெரியார் தமிழையும், தமிழரையும் தூற்றினார் என்ற ஒரு கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்.

இந்த இடத்தில் பகுத்தறிவு உள்ளவன் எப்படி சிந்திப்பான் என்று பார்ப்போம்.

இன்றைக்கு தமிழ்நாட்டிலே பெரியார் தொண்டர்கள் அனைவரும் தமிழ் மீதும், தமிழினம் மீது பற்றுக் கொண்டிருப்பது எப்படி நடந்தது என்று சிந்திப்பான்

எந்த அரசியல் மாற்றம் வந்தாலும், அதற்கு அஞ்சாமல் பெரியார் தொண்டர்கள் தமிழினத்திற்கு குரல் கொடுக்கின்ற தமிழுணர்வு எப்படி வந்தது என்று சிந்திப்பான்

ஒரு நேரத்தில் ஈழத் தமிழர் விடயத்தில் அனைவரும் வாய் மூடி இருந்த பொழுது, பெரியார் தொண்டர்கள் மட்டும் எப்படி துணிந்து குரல் கொடுத்தார்கள் என்று சிந்திப்பான்.

இன்றைக்கு தமிழுக்கும், தமிழினத்திற்கும் உரத்துக் குரல் கொடுக்கும் அனைவரும் பெரியார் மீது பற்றுக் கொண்டிருப்பது ஏன் என்று சிந்திப்பான்.

இப்படி பகுத்தறிவோடு சிந்தித்து தமக்குப் பெரியார் பற்றி சொல்லப்பட்ட கருத்து தவறானது அல்லது முழுமையற்றது என்ற முடிவுக்கு வருவான். அத்துடன் சரியான அல்லது முழுமையான கருத்தை அறிந்து கொள்ள முயல்வான்.

ஆனால் எத்தனை பேர் இப்படி கேள்விகள் மூலம் சிந்திக்கிறார்கள்?

இன்னும் ஒன்றையும் பார்ப்போம்.

இந்தத் தளத்திலே "தென்னாட்டிலே ஹிந்திக்கு வித்திட்ட பெரியார்" என்ற ஒரு கட்டுரை இணைக்கப்பட்டது.

ஒரு பகுத்தறிவு மிக்கவன் இந்தக் கட்டுரை கொஞ்சம் கூட அர்த்தமற்றது என்பதை உடனடியாக புரிந்து கொள்வான்.

இதே மாதிரி "யாழ்ப்பாணத்திலே கிறிஸ்தவத்தை வளர்த்த நாவலர்" என்றும் கட்டுரை எழுத முடியும். தமிழல் பைபிள் எழுதி கிறிஸதவத்திற்கு வித்திட்ட நாவலர் பின்பு யாரோ ஒரு பாதிரியாருடன் ஏற்பட்ட பகையின் காரணமாக பின்பு கிறிஸ்தவத்தை எதிர்த்தார் என்று கட்டுரையை நம்பும்படி எழுத முடியும்.

ஆனால் இந்த இரண்டு கட்டுரையையும் மோசடியானவை என்று பகுத்தறிவுள்ளவன் புரிந்து கொள்வான்.

ஆனால் இந்தத் தளத்தில் எத்தனை பேர் அப்படி இருக்கிறீர்கள்?

உதாரணமாக இன்னும் ஒன்றையும் சொல்கிறேன்.

என்னிடம் விடுதலைப்புலிகளின் அவசர ஆட்சேர்ப்புப் பற்றி ஒரு மாற்றுக்கருத்தாளர் வினாவினால், நான் அதற்கு நேரடியாக என்னுடைய கருத்தை சொல்வேன். அதை விடுத்து "கருணா குழுவும் ஆட்களை பிடிக்கிறதே" என்று சொன்னால், என்னிடம் சிந்தினை வறுமை உள்ளது என்றுதான் அர்த்தம்.

நான் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் உண்டு என்று சொன்னால், பதிலுக்கு பெரியார் இளவயதுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்பவன் பகுத்தறிவு உள்ளவனா?

ஆனால் இப்படி நடப்பவர்கள்தானே இங்கு அதிகமாக இருக்கிறீர்கள்.

அதனால்தான் பகுத்து அறியக் கூடிய நான் என்னிடம் பகுத்தறிவு இருக்கிறது என்று பிரகடனப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

என்னங்க யாரையும் காணம் ?

என்னங்க யாரையும் காணம் ?

ஏன் நீங்க இல்லையா???????????????

இந்த மாதிரி நல்ல சமாச்சாரங்கள எழுதினா நீங்க யாருமே வரமாட்டேள்!

கண்ட சமச்சராம்ன விழுந்தடித்துண்டு ஓடியாந்துடுவேள்

சபேசன் சொல்றது சரி

ஒருவேளை தங்களை பகுத்தறிவாளர் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள

  • தொடங்கியவர்

லீசா! பகுத்தறிவே இல்லாதவர்கள் எப்படி அறிவாளிகளாக இருக்க முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லீசா! பகுத்தறிவே இல்லாதவர்கள் எப்படி அறிவாளிகளாக இருக்க முடியும்?

எனக்குத் தெரிந்த பலர் பெரிய பெரிய படிப்புப் படித்து தங்கள் துறையில் திறமையானவர்களாகவும் அறிவாளிகளாகவும் இருக்கிறார்கள்.

கோயிலுக்குப் போய் நேர்த்திக்கடன் வேலைகளை முடிப்பதற்காக தங்கள் பிள்ளைகளின் ஒரு வகுப்பை தவிர்க்க அவர்கள் என்றுமே தயங்கியதில்லை :)

Edited by பண்டிதர்

கண்டதை கேட்டு

கற்று தேர்ந்து

பட்டு தெளிந்து

பக்குவம் கற்று

பகுத்தறிவு காண்.....

அதனை விட்டிட்டு

அசிங்கம் உரைத்தால்

கா..தூ..வென- முகத்தில்

காறியே உமிழ்வார்...

ஏசி மகளுக்கு

ஏனின்று வேண்டும்

ஓய்வில் அவளுக்கு

ஓய்வுதியம் எதுக்கு...???

உடலதை விற்று

உயிர் கொள்ளி காவி

மனிதனை அழிக்கும்

மடமை அவளுக்கு...

குரலென வந்து

குரலது கொடுத்தால்- நீ

பகுத்தறிவாளனென்று

பக்குவமா பெறுவாய்...???

உலகதில் யுத்தம்

வேண்டாமென சொல்லு

பட்டினி பஞ்சத்தை

பாடையில் ஏற்று....

சாதிகள் சண்டைகள்

வேண்டாமென உரை

இளமையில் முதுமையின்

அறிவினை பிடி....

நாஸ்திகம் பார்ப்பனியம்

நாவில அகற்று

சிறியாரை பெரியாரை

சமனாக பேணு.....

குடையது பிடித்து- நீர்

குடையது சாய

மடமையில் நீரினி

மடமையில் வாழ....

பகுத்தறிவென்ற

பக்குவம் கற்று

மடமை மனிதரின்

மடமை தகர்...

கிணத்து தவளையை

கிண்ணயில் எடுத்து

கடலுக்குள் விட்டு- அதை

கடலென உரைத்தால்

அது வென்ன உரைக்கும்...??

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பகுத்தறிவு உள்ளதா?

1. ஒரு விடயத்தை அல்லது பிரச்சினையொன்றை எப்படிக் கையாள்வது?

2. முதலில் நமது சிந்தனைக்கு உட்பட்ட கருதுகோள்களை (hypothesis) முன்வைக்கவேண்டும் அல்லது புதிய கருதுகோள்களைத் தேடவேண்டும்.

3. கருதுகோள்களை சரியென்று நிறுவ தேவையான காரணங்களையும்/காரணிகளையும் கண்டறியவேண்டும். எல்லாத் தரவுகளையும் நன்கு ஆராயவேண்டும்..

4. ஆராய்வின் முடிவில் பிரச்சினைக்குத் தீர்வைக்/கையாளும் முறையை தர்க்கரீதியாக முன்வைக்கவேண்டும்.

இப்படிச் செய்யக் கூடிய மனிதர்கள் அனைவருக்கும் பகுத்தறிவு நிறையவே உள்ளது என்று கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு என்னவென்று பாடம் எடுத்தது நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால், பெரியார் செய்தது பகுத்தறிவா என்பது தானே பிரச்சனை?

சபேசனுக்கு கொஞ்சம் நானும் சொல்கினறேனே!

கோலில் சிலை பற்றிக் கதைச்சவர்கள் தாங்கள், வீதி வீதியாகச் சிலை வைத்தால், அதனால் என்ன பலன் என்பதையும் பகுத்தறிய வேண்டும்.

மேடை போட்டு, ஊரெல்லாம் முழங்கினால் மட்டும், எவருடைய பிரச்சனையும் தீராது என்பதையும் பகுத்தறிய வேண்டும்

காலத்துக்கு காலம் தமிழ் வளர்த்தவர்களை, எழுந்தமானத்துக்குப் பேசுவதால், தமிழ் உலகம் முடங்கி விடும் என்பதையும் பகுத்தறிய வேண்டும்( இப்போது அது தானே நடக்கின்றது)

அடிப்படைக் கல்வியை முடிக்காதவன் உங்களுக்குத் தலைவனாக வந்தால் என்னவாகும், என்பதைமு் பார்த்தறிய வேண்டும்.

உலகத்தில் மற்றவர்களும் ஓரளவு புத்தியுள்ளவர்கள், சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதையும், பகுத்... அடிப்படையறிவு இருந்தாலே போதும்.

ஈழத்தமிழர் ஆதரவுக் குரல் கொடுப்பவர்கள் பற்றிய விமர்சனம் செய்ய வைப்பது சூழ்ச்சிகரமானது என்பதை உணர்வதால், அவர்கள் பற்றிய விமர்சனத்தை தவிர்க்கின்றேன். ஆனால் ஒன்று. மற்றவர்கள் ஏன் பேசவில்லை என்றால், நீங்கள் தானே பேசமுடியாதவாறு ஊரை விட்டு ஒதுக்கி வைச்ச பண்ணையர்கள்.

நீங்கள் சொல்கின்ற பிராமணர்கள் ஏன் பேசவில்லை என்பதற்கு, உங்களின் எழுந்தமான செயற்பாடே காரணம். சொல்லப் போனால், அப்படி அவர்களின் ஆதரவும் கிடைக்க வேண்டிய சூழ்நிலையைத் தடுத்தது நீங்கள். ஆனால் அதை மறைப்பதற்காக இப்போது, அவர்கள் ஏன் வரவில்லை என்று கண்ணீர் வடிக்கின்றீர்கள்.

மற்றும்படி தமிழீழத்துக்கு ஆதரவுக்குரல் கொடுக்கும் அனைத்து நெஞ்சங்களிலும் நிறைய மரியாதை உண்டு. அவர்களின் மனங்களை என்றும் புண்படுத்தும் நோக்கம் இல்லை

ஹந்தி பெரியார் எதிர்த்தது பற்றிச் சொல்வதற்கும், ஆறுமுக நாவலரை ஒப்பீடு செய்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஆறுமுகநாவலரால் திண்ணைப் பாடசாலைகள் ஆரம்பித்த பின்னர், அதாவது இந்து சமயப் பிரச்சாரம் ஆரம்பித்த பின்னர் தான் பைபிளை மொழி பெயர்த்துக் கொடுத்தார். சொல்லப் போனால் ஆங்கிலத்தில் பைபிளை தமிழ்மக்களிடம் உள்வாங்க விடுவது, தமிழ் அழிவுக்கு வழி கோலும் என நாவலர் கருதீயருந்தார். அவரிடம் மத வெறி இருக்கவில்லை.

பகுத்தறிவுவாதி ஏமாற்றுவித்தை எனக் கண்ணதாசன் உணர்ந்து மீண்டும் சைவத்துக்குத் திரும்பி அர்த்தமுள்ள இந்துமதம் எழுதின பிறகு, ஜேசுகாவியம் எழுதினாரே அவ்வாறான செய்கை தான் ஆறுமுகநாவலர் செய்ததது. ஆனால் பெரியார் செய்கை அப்படியல்ல.

என்னிடம் விடுதலைப்புலிகளின் அவசர ஆட்சேர்ப்புப் பற்றி ஒரு மாற்றுக்கருத்தாளர் வினாவினால், நான் அதற்கு நேரடியாக என்னுடைய கருத்தை சொல்வேன். அதை விடுத்து "கருணா குழுவும் ஆட்களை பிடிக்கிறதே" என்று சொன்னால், என்னிடம் சிந்தினை வறுமை உள்ளது என்றுதான் அர்த்தம்.

நான் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் உண்டு என்று சொன்னால், பதிலுக்கு பெரியார் இளவயதுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்பவன் பகுத்தறிவு உள்ளவனா?

இந்தக் கதை நாங்கள் உங்கிடம் கேட்கவேண்டியது! பெரியார் இந்த வயதில் அபலைப் பெண் ஒருத்தியை திருமணம் செய்தது சரியா என்று கேட்டபோது, சிவன் முனிபத்தினிகள் கூடத் தப்பாக நடந்ததாகவும், ராமன் பற்றியும் கதையைத் திசை திருப்பியது தாங்களே! எனவே நீங்கள் பகுத்தறிவாளனா? என்று உங்களை நீங்களே கேட்பது நல்லது. செய்வதும் நீங்களாக இருந்து கொண்டு மற்றவர்களை விளக்கம் கேட்பது சகிக்க முடியவில்லை.

  • தொடங்கியவர்

தூயவனின் கேள்விக்கு என்னுடைய பதில்களை பகுத்தறிவின் துணை கொண்டு சொல்கிறேன்.

தந்தை பெரியாருக்கு சிலைகள் வைப்பது தவறு அல்ல. தந்தை பெரியார் பற்றி தொடர்ந்து சிலருக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறது.

ஆனால் தந்தை பெரியார் சிலைகளை வழிபடுவது தவறு.

மேடை போட்டு ஊரெல்லாம் முழங்குவது பரப்புரையின் ஒரு வடிவம். தீர்வை நோக்கி மக்களை அழைத்துச் செல்வதற்கும் அதுவும் தேவையான ஒன்று

காலத்திற்கு காலம் தமிழ் வளர்த்தவர்கள் யார்? கடந்த 2000 வருடங்களில் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் ஒரு பத்துப் பேர் கூடத் தேற மாட்டார்கள். இப்படி தமிழை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்து கும்மி அடித்துக் கொண்டிருந்தவர்களை கண்டித்ததில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அடிப்படைக் கல்வி பற்றி பேசியிருக்கிறீர்கள். இதைத்தான் பகுத்தறிவு அற்ற பேச்சு என்று சொல்வார்கள். இயற்கை, அனுபவம் போன்றைவைகளை வழிகாட்டியாகவும், ஆசானாகவும் கொண்ட தலைவர்களாலும் மக்களை நல்ல முறையில் வழி நடத்த முடியும்.

இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததை யாரும் தடுக்கவில்லை. பார்ப்பனர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பதை பகுத்தறிவாளர்கள் தடுத்தார்கள் என்பது வடிகட்டிய பொய்.

ஆறுமுக நாவலர் தன்னுடைய 19வது வயதில் பைபிளை மொழி பெயர்த்தார். ஆனால் அவர் 25ஆவது வயதில்தான் முதன் முறையாக சமயப் பிரசங்கம் செய்தார். ஆகவே பெரியார் பற்றி ஒரு மோசடியான கட்டுரையை எழுதியது போன்று நாவலர் பற்றியும் எழுத முடியும்.

ஆனால் நாவலர் பற்றி அப்படிக் கட்டுரை எழுதினாலும், அக் கட்டுரை தவறான கருத்தைக் கொண்டிருக்கிறது என்று பகுத்தறிவோடு சிந்திக்கின்ற எனக்கு தெரியும். அதே போன்ற பெரியாரின் ஹிந்தி பற்றிய கட்டுரையும் மோசடியானது என்று பகுத்தறிவுள்ளவனுக்கு தெரியும்.

பெரியார் அபலைப் பெண்ணை திருமணம் செய்யவில்லை. அவரோடு உதவியாக இருந்த ஒரு பெண்ணை, அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு திருமணம் செய்து கொண்டார். அதே வேளை இந்தக் கேள்விக்கு நான் ஒரு போதும் எந்தப் பதிலையும் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. அப்படிக் கொடுத்திருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

என்னுடைய பார்வையில் பெரியாரின் திருமணம் என்பது அவருடைய தனிப்பட்ட விடயம். அதை விமர்சனம் செய்வது என்பது பகுத்தறிவற்ற முட்டாள்தனமான செயல். அதனால் இந்தக் கேள்விக்கு நான் பொதுவாகவே பதில் அளிப்பதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் இளவயது மணியம்மையை முடித்ததை வைத்து பெரியாரைக் கொச்சப் படுத்தி வருகிறார்கள் ஒரு சில குழப்பவாதிகள். அதற்கான காரணத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1949 ஆம் ஆண்டு தனது கழகக் கூட்டத்தில் பெரியார் பேசும்போது, எனக்கு வயதாகிவிட்டது ஆகையால் எனது இந்த சொத்துக்களையும் கட்சிப் பொறுப்பையும் நான் அண்ணாத்துரையிடம் கொடுக்கப்போகிறேன் என்றார். அறிஞர் அண்ணாவின் மீது பெரியாருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அதே நேரம் பெரியாரின் அண்ணன் மகன் சம்பத்தும் அறிஞர் அண்ணாவும் உடன் பிறவாச் சகோதரர்கள் போல் பழகி வந்தார்கள். அண்ணவின் பெருந்தன்மையான குணம் சம்பத்திற்கு சாதகமாகப் போய்விடக் கூடாதென்பது பெரியாரின் எண்ணம். ஏனெனில் பெரியாரின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் குடும்பத்திற்கு கண் இருந்து வந்தது. தனது சொத்துக்கள் மக்களுக்காகவும் கட்சி வளர்ச்சிக்காகவும்தான் போகவேண்டும் என்பதுதன் பெரியாரின் விருப்பம். எக்காரணம் கொண்டும் தனது சொத்துக்கள் தனிப்பட்ட குடும்பத்திற்கு போய்விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அடுத்தடுத்த நாட்களில் அறிஞர் அண்ணாவிற்கும் பெரியருக்கும் பல கருத்து வேறுபாடுகள் தொடங்குகின்றன. குறிப்பாக அண்ணா அரசியல் பாதையை விரும்பினார். பெரியாரோ அரசியலை அடியோடு மறுத்தார்.

இந்தக் காலகட்டத்தில் மணியம்மை அங்கு உதவியாளராக வேலைபார்த்து வருகிறார். அவரை திருமணம் செய்து கொள்ள அங்கு இருந்த அப்போதைய இளஞர்கள் விரும்பினார்கள். மணியம்மைக்கு திருமணத்தில் சிறிதும் நாட்டமில்லை. தூயவன் குறிப்பிட்டது போல் அவர் ஒன்றும் அபலைப் பெண் இல்லை. மிகப் பெரிய செல்வந்தரின் மகள். தனக்கு திருமணமே வேண்டாம் என்று உறுதியாக இருந்தவர். பெரியார் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு (தன்னையல்ல வேறு ஒரு இளஞரை) வேண்டியும் அவர் மறுத்துவிட்டார்.

இறுதியில் அவரே திருமணம் செய்தார். அவர் அப்படிச் செய்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. தனது சொத்துக்களைப் பாதுகாக்க இதைவிட்டால் வேறு வழியில்லை. அதன்படியே பெரியாரின் மறைவுக்குப் பின் அவரது அனைத்து சொத்துக்களும் மணியம்மைக்கு வருகின்றன. அவரிடம் வேறு எந்த சிற்றின்ப ஆசையும் கிடையாது. சிறுநீர் நோயால் பல காலம் அல்லல் பட்டவர். சிறுநீர்ப் பையைக் காவிக்கொண்டுதான் அனைத்துப் போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்.

தனது முதல் மனைவி நாகம்மை இறந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் பெரியார் இந்த முடிவை எடுத்தார். அவருக்கு திருமண ஆசை இருந்திருந்தால் அந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கிருந்த செல்வாக்கினால் நிச்சயம் ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். இப்படிப் பட்ட திருமணங்கள் பல அந்தக் காலத்தில் நடந்திருக்கின்றன.

தனது சொத்துக்கள் தனது குடும்பத்திற்காக போய்விடாமல் கட்சிக்காகவும் சமூகத்திற்காகவும் போகவேண்டும் என்ற நோக்கம் மிகச் சரியானதே. அதற்காக பெரியார் தேர்ந்தெடுத்த வழி என்னைப் பொறுத்த வரைக்கும் பெரியாரிய கொள்கைகளுக்கு முரணாகத்தான் உள்ளது. ஆனால் அதைவிட வேறு எந்த வழியும் அப்போது இருக்கவில்லை என்பது உண்மை.

இந்தப் பதிவை எனக்கு மிகவும் தெரிந்த திராவிடக் கழக நண்பர்களிடமிருந்து பெற்ற செய்திகள் அடிப்படையிலும், பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய உறவினர்கள் சொன்ன செய்திகள் அடிப்படையிலும் தந்துள்ளேன். இதில் எந்தவிதமான திரிபும் இல்லை.

Edited by இளங்கோ

  • 2 weeks later...

பகுத்தறிவு என்றாலென்ன? இதோ நானறிந்த சிலபதில்கள்.

உள்ளத்தை உழுங்கள். யேசு

எப்பொருள் யார்வாய்ச் சொற்கேட்பினுமப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு -திருக்குறள்-

இது எல்லோராலுமே அறியப்பட்ட பெரிய விடயம்.

இதைவிடவும் திருமந்திரத்தில் பகுத்தறிவு பற்றிய

விடயம் தெளிவாயுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.