Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனத்­தை­யும் நாட்­டை­யும் எதற்காகவும் விட்டுக்கொடார் ராஜபக்ச

Featured Replies

இனத்­தை­யும் நாட்­டை­யும் எதற்காகவும் விட்டுக்கொடார் ராஜபக்ச

 
இனத்­தை­யும்  நாட்­டை­யும் எதற்காகவும் விட்டுக்கொடார்  ராஜபக்ச
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

“இடைக்­கால அறிக்­கை­யில் பௌத்த மதம் தொடர்­பான விதந்­து­ரையை வாசித்­தேன். அதற்கு மேல் அறிக்­கையை வாசிக்க என் மனம் இடம் கொடுக்­க­வில்லை. என்ன கார­ணத்­துக்­கா­க­வும் நாட்­டை­யும் இனத்­தை­யும் நான் விட்­டுக்­கொ­டுக்­க­மாட் டேன்”
இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வி­டம் தெரி­வித்­துள்­ளார்.

சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வர் அமைச்­சர் ரவூப் ஹக்­கீ­மின் தாயார் கால­மா­ன­தை­ய­டுத்து அங்கு அஞ்­சலி செலுத்­தச் சென்­றி­ருந்­த­வேளை மகிந்த ராஜ­பக்­ச­வும் மாவை சேனா­தி­ரா­சா­வும் சந்­தித்­துக்­கொண்­ட­னர்.

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை வெளி­வந்­துள்­ள­தால் அதற்கு மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான தரப்­பி­னர் ஆத­ர­வ­ளிக்­க­வேண்­டும் என­வும், மகிந்­த­வின் ஒத்­து­ழைப்பு இதற்­குத் தேவை என­வும் மாவை சேனா­தி­ராசா கேட்­டுக்­கொண்­டார்.

இதன்­போதே மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்த மகிந்த ராஜ­பக்ச, நாட்­டை­யும் இனத்­தை­யும் எவ­ருக்­கும் தாரை­வார்க்க முடி­யா­தென்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

“இடைக்­கால அறிக்­கை­யில் பௌத்த மதம் தொடர்­பான விதந்­து­ரையை வாசித்­தேன். அதற்கு மேல் அறிக்­கையை வாசிக்க என் மனம் இடம் கொடுக்­க­வில்லை. என்ன கார­ணத்­துக்­கா­க­வும் நாட்­டை­யும் இனத்­தை­யும் நான் விட்­டுக்­கொ­டுக்­க­மாட்­டேன்.

தமிழ், முஸ்­லிம் மக்­க­ளுக்கு நான் எதி­ரா­ன­வன் அல்­லன். அவர்­களை நான் நேசிக்­கி­றேன். ஆனால், எனக்கு இந்த நாடு­தான் முக்­கி­யம். அதில் எந்த சம­ர­சத்­துக்­கும் இட­மில்லை” என்று திட்­ட­வட்­ட­மாக மாவை.சேனா­தி­ரா­சா­வி­டம் மகிந்த கூறி­யுள்­ளார்.

http://newuthayan.com/story/31974.html

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ஸவும் ...ஒரு சோத்துக் கிறிஸ்தவன் எண்டு கேள்விப்பட்ட ஞாபகம்!

உண்மை தான் போல கிடக்குது!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

மகிந்த ராஜ­பக்ச, நாட்­டை­யும் இனத்­தை­யும் எவ­ருக்­கும் தாரை­வார்க்க முடி­யா­தென்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

 எங்கட தமிழ்த் தலைமைகள் இதை சிங்களவனிடமிருந்தாவது கற்றுக் கொள்ளுங்கள். எல்லாத்தந்திரத்தையும் அவனுக்கு கற்றுக் கொடுத்திவிட்டு வருகிற சந்தர்ப்பங்களையும்   நழுவவிட்டிட்டு, ஒருமித்த நாட்டுக்குள் அதிகார பகிர்வு என்று கூடிக் கும்மாளமிட்டிட்டு பிறகு கையறுந்த நிலையில்  அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் பாத்து புலம்பி என்ன பிரயோசனம். அவன் தன்ர தந்திரத்தை பாவிச்சு சர்வதேசத்தையும், உங்களையும் ஏமாத்த நீங்கள் ராஜதந்திரம் எண்டு அவனின்ர காலில விழுந்து கொண்டு உங்களுக்கு வாக்களித்த எங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்திடீன்கள். 

ராஜதந்திரம் எண்டு கதையளக்கிற வேலையை விட்டிட்டு உருப்படியாய் ஏதாவது செய்யுங்கோ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.