Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிக்குகளின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம்

Featured Replies

பிக்குகளின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம்

பிக்குகளின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம்

ஸ்ரீலங்காவுக்கு அடைக்கலம்கோரி வந்த ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடுகடத்துமாறு கோரி கொழும்பில் பௌத்த கடும்போக்குவாத பிக்குகள் செயற்பட்ட விதத்தை ஸ்ரீலங்க அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பிக்குகளின் இந்த செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கும் அவமானம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

புகலிடம்கோரிவந்த 30 ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஐ.நா அகதிகள் காப்பு நிறுவகத்தின் கண்காணிப்பில் கொழும்பு – கல்கிஸை பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த நிலையில் அவர்களை நாடு கடத்துமாறு கோரி சிங்ஹலே தேசிய அமைப்பு என்ற கடும்போக்குவாத பிக்குகள் இணைந்து போராட்டம் நடத்தினர்.

தகாத வார்க்கைகளால் ரோஹிங்கியா முஸ்லிம்களை திட்டிய பிக்குமார்கள், வீதிகளை மறைத்தும், கூச்சலிட்டும் பெரும் பதற்றத்தை தோற்றுவித்தனர்.

குறித்த அகதிகள் மீது தாக்குதல் நடத்தவும் பிக்குகள் முயற்சி செய்த போதிலும் பொலிஸார் தலையீடு செய்து ரோஹிங்கியா அகதிகளை காப்பாற்றி பாதுகாப்பாக பொலிஸ் ஜீவ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன “பிக்குமார்களின் இந்த செயற்பாடு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இவ்வாறான பிக்குகளின் செயற்பாடுகள் காரணமாகவே ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கே பங்கம் ஏற்படுகின்றது. மேலும் அங்கிருந்த பொலிஸார், பிக்குகளின் செயற்பாடுகளை அவதானித்துக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஏன் பொலிஸாரும் அவ்வண்ணமாக நடந்தார்கள் என்பது கேள்வி. அமைச்சரவை இது தொடர்பாக விரைவில் கலந்தாலோசிக்கும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 2008ஆம் ஆண்டிலிருந்து குறித்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஸ்ரீலங்காவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அப்போதெல்லாம் போராட்டம் நடத்தாத பிக்குமார்கள் ஏன் இப்போது மட்டும் போராடுகிறார்கள் என்பது தெரியவில்லை” என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/rajitha-senarathne-comment-on-rohingya-muslims

  • தொடங்கியவர்

ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரம்: பிக்குகளை வன்மையாகக் கண்டிக்கும் அமைச்சர் மங்கள

 

கல்கிஸையில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள் விவகாரத்தில் கடுமையாக நடந்துகொண்ட புத்த பிக்குகள் மற்றும் குழுவினரது செயலை நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கண்டித்துள்ளார்.

6_Mangala.jpg

“உள்நாட்டுப் பிரச்சினையால் புகலிடம் தேடிப் படகுகளில் புறப்பட்ட மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் சிலர் இவ்வருடம் ஏப்ரல் மாதம் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அவர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணைக்குழு (யு.என்.எச்.சி.ஆர்)வால் கல்கிஸையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

“தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த இவர்கள் விரைவில் ஐக்கிய நாடுகளின் பரிந்துரையின்பேரில் வேறு நாடுகளில் குடியமர்த்தப்படவுள்ளனர்.

“இந்நிலையில், நேற்று அங்கு சென்ற புத்த பிக்குகள் உள்ளிட்ட முரடர்களும் காடையர்களும் அகதிகளை அங்கிருந்து வெளியேற்றும் முகமாக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

“அமைச்சராக மட்டுமன்றி, அஹிம்சையைப் போதிக்கும் புத்தரின் பாதையில் செல்லும் பெருமைக்குரிய பௌத்தனாகவும் இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

“இதற்கு முன் 2008ஆம் ஆண்டிலும், 2013ஆம் ஆண்டிலும் ரோஹிங்யா உட்பட அகதிகள் பலரும் இலங்கையில் இடைத்தங்கலாக வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் குடியமர்த்தப்பட்டனர்.

“இதற்கிடையில் பிக்குகளும் முரடர்களும் அவர்களை விரட்டியடித்த செயலை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/24997

  • தொடங்கியவர்

ரோஹிஞ்சா அகதிகளைத் தாக்கியவர்களால் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு: மங்கள சமரவீர

இலங்கையின் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர, சில பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய குழுவொன்றினால் மியன்மார் அகதிகள் தாக்கப்பட்டதைக் கண்டிப்பதாகத் தான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ரோஹிஞ்சா அகதிகள்படத்தின் காப்புரிமைREUTERS

இதன் முலம் அத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டிய அமைச்சர் சமரவீர, அகதிகள் மீது தாக்குதல் மேற்கொன்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, மியன்மார் அகதிகளின் இலங்கை வருகை முதல் முறையாக 2008-ஆம் ஆண்டிலேயே தொடங்கியதாகத் தெரிவித்தார்.

ஆனால் அப்போது ஆட்சியிலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியாளர்கள் மீது இருந்த அச்சம் காரணமாக, ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள எவரும் முன்வரவில்லை என்று குற்றம்சாட்டிய அமைச்சர் சேனாரத்ன, அகதிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார்.

சம்பந்தப்பட்ட அகதிகள், விரைவில் ஐநா வின் அகதிகள் ஆணையம் மூலமாக வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியான்மர் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் மீது அடிப்படையற்ற எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, இலங்கை வழக்கறிஞர் சங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த, அந்த சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் உதய ரோஹான் டி சில்வா, இந்த அகதிகள் விவகாரத்தில், அமைச்சர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இதனால், மக்களிடையே குழப்பம் உள்ளதாகக் கூறிய அவர், எந்த அடிப்படையில் அகதிகள் இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த அறிவிப்பை அரசு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த அகதிகள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இதுவரை இலங்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், இவ்வாறான எதிர்ப்புகள் காரணமாக இலங்கையில் வசிக்கும் சிங்களம் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லினகத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.

எனவே இந்த விடயம் தொடர்பாக தனது சங்கம் விரைவில் ஜனாபதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-41424538

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குமாரிடம் சண்டைக்கு போய் நல்லாட்சி கவிழப்போகுது ....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிங்கள பெளத்த பிக்குகள் தலமையிலான அரசும், ராணுவமும் தமிழருக்கெதிராகச் செய்த அட்டூழியங்களையும், திட்டமிட்ட இனவழிப்பையும் பாடமாகக் கொண்டே இன்று பெளத்த துறவிகள் தலமையில் பர்மிய அரசும் ரொகிங்கியாக்களுக்கெதிராக இனவழிப்பைச் செய்துவருகிறது.

ஆகவே கொழும்பில் ரொகிங்கியா அகதிகளுக்கெதிரான வன்முறையென்பது பர்மாவில் தமது சகபாடிகளான பெளத்த இனவாதிகளின் இனவழிப்பிற்குச் சார்பாக தாமிருக்கிறோம் என்பதைக் காட்டூம் சிங்கள பெளத்தர்களின் நடவடிக்கையே. அரசு செய்வதெல்லாம் வெறும் நாடகம்.

  • தொடங்கியவர்

"ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தேரர்களின் செயற்பாடுகள் மனிதாபிமானமற்றது"

(ஆர்.யசி)

இலங்கையில் அகதிகளாக உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு மனிதாபிமானமில்லா செயற்பாடாகும். அரசியலில் வீழ்ச்சி கண்ட சில அரசியல் வாதிகளும் இந்த இனவாத அமைப்புகளின் பின்னணியில் செயற்பட்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி தமது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

muslim.jpg

ரோஹிங்யா முஸ்லிம்கள்  மீதான பௌத்த தேரர்களின் செயற்பாடுகளை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/25036

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.