Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உச்ச நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்த சரத் என் சில்வா

Featured Replies

உச்ச நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்த சரத் என் சில்வா

 

 

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Local_News.jpg

http://www.virakesari.lk/article/25031

p13-13917caa718ca6e798c4a70b11f1c48d695b

பிரதிவாதிகளாக சபாநாயகர்,சட்டமா அதிபர்,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 
(எம்.எப்.எம்.பஸீர்)

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்­ட­மா­னது, சட்ட மூலம் ஒன்­றினை சட்­ட­மாக்க அர­சி­ய­ல­மைப்பு மற்றும் சட்டம் ஊடாக விதந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள நடை­மு­றை­களை மீறி நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என்.சில்வா உயர் நீதி­மன்றில் நேற்று வழக்குத் தாக்கல் செய்தார். சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, சட்ட மா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய மற்றும் தேர்­தல்கள்  

ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய ஆகி­யோரை பொறுப்புக் கூறத் தக்க தரப்­பாக பெய­ரிட்டே, அடிப்­படை உரிமை மீறல் மனு­வாக குறித்த வழக்கை அவர் தாக்கல் செய்­துள்ளார்.

 இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு ஊடாக, மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்­டத்­துக்கு கடந்த செப்­டம்பர் 20 ஆம் திகதி சேர்க்­கப்­பட்ட திருத்­தங்­களை நடை முறைப்­ப­டுத்த தடை உத்­த­ரவை பிறப்­பிக்­கு­மாறும் தற்­போது நடை முறையில் உள்ள சட்­டத்தின் கீழ் தற்­போது கலைக்­கப்­பட்­டுள்ள, கலைக்­கப்­படும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடாத்த தேர்­தல்கள் ஆணைக் குழுவின் தலை­வ­ருக்கு உத்­த­ர­வி­டு­மாறும் முன்னாள் பிர­தம நீதி­யர்சர் சரத் என். சில்வா உயர் நீதி­மன்றைக் கோரி­யுள்ளார்.

 கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் திகதி பிர­தம நீதி­ய­ரசர் பத­வியில் இருந்து ஓய்­வு­பெற்று செல்லும் போது, இனிமேல் உயர் நீதி­மன்­றுக்கு வர­மாட்டேன் என கூறிச் சென்ற முன்னாள் பிர­தம நீதி­யர்சர் சரத் என்.சில்வா நேற்று காலை 10 .00 மணி­ய­ளவில் புதுக் கடையில் உள்ள உயர் நீதி­மன்ற கட்­டிடத் தொகு­திக்கு வருகை தந்து தனது அடிப்­படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்.

அதன்­பின்னர் ஊட­கங்­க­ளிடம் கருத்து தெரி­வித்த முன்னாள் பிர­தம நீதி­யர்சர் சரத் என். சில்வா,

மாகாண சபை தேர்­தல்­களை பிற்­போ­டு­வ­தற்­காக அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்­துக்கு அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­ததச் சட்ட மூலத்தை கொன்டு வந்­தது. அந்த சட்ட மூலத்தை நிறை­வேற்ற வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்றின் இரண்டில் மூன்று பெரும்­பான்­மை­யுடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்­றி­னையும் நடாத்த வேண்டும் என உயர் நீதி­மன்­ற­மா­னது கடந்த செப்­டம்பர் 19 ஆம் திகதி தீர்ப்­ப­ளித்­தது.

அவ்­வா­றா­ன­தொரு நிலையில் மாகாண சபை தேர்­தல்கள் திருத்தச் சட்ட மூலத்­துக்கு புதிய திருத்­தங்­களை அவ­ச­ர­மாக கொண்டு வந்த அர­சாங்கம் அதனை அவ­சர அவ­ச­ர­மாக செப்­டம்பர் 20 ஆம் திகதி நிறை­வேற்­றிக்­கொண்­டது.

அவ்­வாறு அவ­ச­ர­மாக சேர்க்­கப்­பட்ட திருத்­தங்­களை நீதி­மன்றம் முன் சவா­லுக்கு உட்­ப­டுத்த பொது மக்­க­ளுக்கு அர­சாங்கம் கால அவ­கா­சத்தை வழங்­க­வில்லை. குறித்த மாகாண சபை தேர்­தல்கள் திருத்தச் சட்ட மூலத்தின் முதலாம் வாசிப்பின் போதும், இரண்டாம் வாசிப்பின் போதும் முற்­றிலும் மாறு­பட்ட விட­யங்­களே உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளன.

 இவை மாகாண சபை தேர்­தலை பிற் போடும் நோக்­கத்­துடன் மிகத் திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட சதி என தெரி­வித்தார்.

இதே­வேளை 2009 ஆம் ஆண்டு இனி மேல் உயர் நீதி­மன்­றுக்கு வர மாட்டேன் எனக் கூறிச் சென்ற முன்னாள் பிர­தம நீதி­யர்சர் சரத் என்.சில்வா நேற்று அங்கு வருகை தந்­தமை தொடர்பில் ஊடக்­வி­ய­லா­ளர்கள் சுட்­டிக்­காட்டி .கேள்வி எழுப்­பினர்.

 இதற்கு பதி­ல­ளித்த அவர்,

நான் 1999 ஆம் ஆண்டு முதல் 10 வருடம் பிர­தம நீதி­ய­ர­ச­ராக இருந்து மிக்க மகிழ்ச்­சி­யு­ட­னேயே சென்றேன். அத­னா­லேயே அவ்­வாறு தெரி­வித்து சென்றேன். நான் 42 வருட அரச சேவை அனு­ப­வத்தைக் கொண்­டவன். இந் நிலையில் இந்த அர­சாங்கம் மாகாண சபை தேர்­தல்­களை தாம­தப்­ப­டுத்­து­வ­தாலும், உரிய நடை முறை­களை பின்­பற்­றாமல் சட்ட மூலங்­களை நிறை­வேற்­று­வ­தாலும் பொது மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

இது ஒரு பயங்­கர நிலைமை. உரிய நடைமுறைகளை பின்பற்றாது சட்ட மூலங்களை இந்த அரசு நிறைவேற்றுமாயின் வரும் அரசாங்கம் என்ன செய்யும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. எனவே தான் பொது மக்கள் சார்பாக நான் இன்று ( நேற்று) அந்த திருத்தச் சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளேன். என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-29#page-1

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.